அதை எப்போ, யார் கிளப்பிவிட்டார்கள் என்று தெரியலை.
ஆனா மனசுல பச்சக்குன்னு வந்து ஒக்காந்துகிச்சு.
அதாகப்பட்டது, தொட்டாற்சுணங்கி இலையை, மனதில் ஏதாவது ஒன்றை நினைத்தபடி, (எல்லா நாளும் ஒன்றையே நினைத்தபடி) தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் தொட்டு, அதை சுணங்க வைக்கவேண்டுமாம். நாற்பத்தெட்டு நாட்கள் இப்படி செய்து வந்தால், எண்ணிய எண்ணம், பண்ணிய வேண்டுதல் ஈடேறுமாம்!
பெங்களுரு பார்க்கில், நிறைய தொட்டாற்சுணங்கி செடிகள் உண்டு. வேண்டுதல்கள் இல்லாமலேயே அடிக்கடி அவைகளைத் தொட்டு சுணங்க வைப்பேன். மேற்கண்ட விவரம் தெரியவந்தவுடன், இதைப் பரிட்சித்துப் பார்த்துவிட ஆவல் கொண்டேன்.
மறுநாள், பார்க்கில் சுற்றி வரும்பொழுது, தொட்டாற்சுணங்கி கண்ணில் பட்டவுடனேயே, என்ன வேண்டிக்கொள்ளலாம் என்று யோசனை செய்தேன். ஐந்தாறு நாட்களாக, இடது தோள்பட்டை மூட்டில் கடுமையான வலி இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆஹா கிடைத்துவிட்டது ஒரு வேண்டுதல்!
எல்லாம் வல்ல தொ சு வே என்னுடைய இடது தோள் மூட்டு வலி சரியாக வேண்டும் என்று வேண்டி, தொட்டேன் பல இலைகளை.
மறுநாளும் அப்படியே.
அதற்கடுத்த நாளும் அப்படியே!
ஒவ்வொரு நாளும், இடது கை விரல்களால், தொ சு இலைகளை சுணங்க வைத்து, வேண்டிக்கொண்டு வந்தேன்.
கொஞ்சம் கொஞ்சம் குணமானது போலவும் ஒரு பிரமை இருந்தது.
நாற்பது நாட்கள் கடந்து போயின. தொட்டாற்சுணங்கி செடியும் தினமும் என் கை பட்டு, வாடிக்கொண்டிருந்தது.
நாற்பத்து ஒன்றாவது நாள்!
பார்க் சென்றால் .......
அங்கே அந்த செடிகளைக் காணோம்!
தோட்டச் செடிகளை அழகாக வெட்டிவிடுபவர், முதல் நாள் மாலையே தொ சு செடிகள் எல்லாவற்றையும் சம்ஹாரம் செய்து பார்க் மூலையில் எடுத்துக் குவித்துவிட்டார்!
இடது தோள்பட்டை வலி இன்னமும் அப்படியே இருக்கின்றது.
உங்கள் வீட்டருகே தொட்டாற்சுணங்கி செடி இருக்கா?
நாற்பத்தெட்டு நாட்கள் நான் அங்கே வந்து தங்கிக்கொள்ளலாமா?
எந்த ஒரு வேண்டுதலுக்கும் தட்சணை கொடுக்கவில்லை என்றால், அந்த வேண்டுதல் நிறைவேறாது. எங்கள் வீட்டு தோட்டத்தில் அந்த செடி இருக்கிறது. நீங்கள் தாராளமாக 48 நாட்கள் எங்கள் வீட்டில் தாங்கிக்கொள்ளலாம். தட்சணையாக நீங்கள் திரும்பி போகும்போது எனக்கு இந்தியா வருவதற்கு ஒரே ஒரு விமான டிக்கெட் அதுவும் பிஸினஸ் வகுப்பில் எடுத்துக்கொடுத்து விட்டு போங்கள்.
பதிலளிநீக்குஇது நல்லா இருக்கே! நான் பிஸியோ தெரபிஸ்டுக்கே தட்சிணை கொடுத்துவிடுகிறேன்
நீக்குநண்பரே! சென்னையில் கீதா வீட்டருகிலும், கேரளத்தில் துளசியின் வீட்டிலுமே நிறைய இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
பதிலளிநீக்குஇப்படிக்க் கூட ஒரு வேண்டுதலா! ஹஹ்ஹஹ்....எங்களுக்கு ஒரு பதிவு எழுத உங்களது இந்த இடுகை வழி வகுத்துவிட்டது! மிக்க நன்றி நண்பரெ!
நன்றி
நீக்குஇப்படி ஒரு புரளியா....?
பதிலளிநீக்குமுக நூலில் படித்தேன்
நீக்குஆகா
பதிலளிநீக்குதொட்டு தொட்டு செடியே போய்விட்டது
மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு." குளிச்சுக் குளிச்சுக் குஞ்ஞு இல்லாம ஆயி "
நீக்குநீங்களாகத் தொட்டு அது வாடிப்போய் அதன் பழி உங்கள் மீது வருவதை விட அந்த தோட்டக்காரர் மீது வந்திருப்பது ஒரு விதத்தில் நல்லது தான்....
பதிலளிநீக்கு:)
நீக்குசிறுவயதில் தொட்டர்சினுங்கி இலையை அதை சுருங்காமல் எடுக்க போராடுவோம்.அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்
பதிலளிநீக்குஅது எப்படி?
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குசரி... எப்போ வர்றீங்க...?
பதிலளிநீக்குஇன்று, இப்போதுதான் போய் ஒரு பிசியோதெரபிஸ்டைப் பார்த்துவிட்டு வந்திருக்கின்றேன். அடுத்து எக்ஸ் ரே எடுக்கப்போகவேண்டும். Frozen Shoulder என்கிறார் physiotherapist.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவலி வந்த சில நாட்களிலேயே மருத்துவரை நாடி இருக்க வேண்டாமா.?அதை விட்டு ...எதைத்தான் நம்புவது என்றில்லையா?( கதையானாலும் )
உண்மைதான் !
நீக்குபார்த்திருக்கிறேன். தொந்திரவு செய்ததில்லை:).
பதிலளிநீக்குFrozen Shoulder... உடல்நலத்தைக் கவனியுங்கள். எனக்கும் இதே பிரச்சனை இருந்தது சில மாதங்களுக்கு முன்.
treatment started from today. Will continue for a week.
நீக்கு
பதிலளிநீக்குஇருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான் நண்பா,,,,,
ஹா ஹா
நீக்குபாவம் தொட்டால்சுருங்கி. நீங்கள் உண்டாக்கிய சுணக்கம்தான் அனைத்திற்கும் காரணம் போலுள்ளது.
பதிலளிநீக்குஓ இப்படியும் ஒரு கோணம் உள்ளதோ!
நீக்குஅடடா நல்ல வாய்ப்பு பறிபோய்விட்டதே! எங்க ஊர்பக்கமும் இந்த செடிகளை இப்போ காணலை!
பதிலளிநீக்குசமுத்திர மட்ட ஊர்களில் தொ சு காணப்படாது என்று நினைக்கின்றேன் .
நீக்குஅட! நல்ல கற்பனை. மனிதர்களை கதாநாயகர்கள் ஆக்காமல் தொட்டாற்சுருங்கி செடியை மையமாகக் கொண்டு ஒரு வித்தியாசமான கதை. பிள்ளையார் பால் குடித்தது போல இதையும் நம்பிவிடப் போகிறார்கள்!
பதிலளிநீக்குதொ சு வே! போற்றி போற்றி
நீக்குஅச்சச்சோ! இதை படிச்சுட்டு ,இனி எத்தனை பேர் தொட்டாசிணுங்கி மரம் தேடப்போறாங்ளோ:(((
பதிலளிநீக்குமரம் எல்லாம் எவ்வளவு தேடினாலும் கிடைக்காது!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஹா... ஹா...
பதிலளிநீக்குதொட்டாச் சுருங்கியே போச்சோ...
நான் தொடும்போதெல்லாம் அது என்ன நினைத்ததோ!
நீக்குஆஹா, தொட்டாச் சிணுங்கி செடிக்கு பாதுகாப்பு கொடுக்கணுமே... ஆரம்பிச்சிடுவாங்களே எல்லாரும்...
பதிலளிநீக்குஉங்க வீட்ல இருக்கா?
நீக்குகைகளை இரு பக்கமும் நீட்டிக் கொண்டு தோள்பட்டையை மட்டும் சுழற்றவும். கடிகாரச் சுற்றில் ஒரு முறை, கடிகாரச் சுற்றுக்கு எதிராக ஒரு முறை என மாற்றிச் சுற்றவும். கைவலி சரியாகும். யோகாசனப் பயிற்சியில் ஆரம்பிக்கும் முன்னர் செய்ய வேண்டிய சிறு பயிற்சியில் இதுவும் ஒன்று.
பதிலளிநீக்குஆலோசனைக்கு நன்றி!! ஏழு வருடங்கள் கழித்து இதைப் பார்க்கிறேன்!
நீக்குஎன்னடாப்பானு பார்த்தேன். வந்தால் என்னோட ஆலோசனையே தான். சந்தேகத்துடன் தான் வந்தேன். உடனே பார்த்திருக்க வேண்டாமோ? என்ன போங்க! :)
நீக்கு