செவ்வாய், 13 ஜனவரி, 2015

செவ்வாய் சிறுகதை. :: நடைராஜன்.

             
அலாரம் அடித்ததும், அரக்கப் பறக்க (சரியான ற வா இல்லையா?) எழுந்திருந்தார் நடராஜ். 
                
(அலுவலகத்தில் வேலை பார்த்த நாட்களில் அக்கம்பக்கத்து வாண்டுகளுக்கு, மற்றும் அண்ணனின் குழந்தைகளுக்கு, கதைகள் சொல்லுவேன். சமீபத்தில் அண்ணனின் பையன் (இப்போ அவனுக்கு ஒரு வாண்டுப்பையன் இருக்கின்றான்) என்னிடம், "சித்தப்பா - நீங்க சொன்ன கதைகளில் ஏன் எப்பவுமே வில்லன் காரெக்டருக்கு நடராஜ் என்று பெயர் வைத்தீர்கள்? " என்று கேட்டான். அப்போ என்ன பெயர் வைத்தேன் என்பது அவன் சொல்லித்தான் எனக்கு இப்போ தெரியும். ஆனாலும் யோசனை செய்து பார்த்தேன். காரணம் என்ன என்று இந்தக் கதையின் கடைசியில் சொல்கிறேன்.) 
     
"வேலா! பாத்ரூமில் துண்டு, சோப்பு, மாற்று உடை எல்லாம் ரெடியா வெச்சிருக்கியா?" 
            
"வெச்சிருக்கேன் எஜமான்!"
               
" முனியம்மா வெந்நீர், நான் குளிக்கும் பதத்தில் இருக்கா?" 
               
"இருக்கு எஜமான்" 
              
" இந்த குடும்ப டாக்டர் ஒருத்தர் எதையாவது சொல்லி வெச்சுடறார். நம்ம படறக் கஷ்டம் அவருக்கு எங்கே தெரியுது. " 
               
முனியம்மாவும் வேலனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ஒன்றும் சொல்லவில்லை. 
           
பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவுடன், நடராஜ், "எங்கே நான் கேட்டிருந்த ஆரஞ்சுப்பழங்கள்? இரண்டு பழங்களை சுளை சுளையாக உரித்து வைக்கச் சொல்லியிருந்தேனே? "
    
  


"எஜமான், சமையல் கட்டில் ஒரு தட்டில் வைத்திருக்கின்றேன்."
               
"சமையல் கட்டில் வைத்துவிட்டு இங்கே என்னம்மா செய்யறே? போ போய் எடுத்து வா " என்று கூறி, டைனிங் டேபிள் நாற்காலி ஒன்றில் உட்கார்ந்துகொண்டார். 
                  
முனியம்மா கொண்டு வந்த பழச் சுளைகளை ஒவ்வொன்றாக சுவைத்துச் சாப்பிட்டுவிட்டு, கொட்டைகளையும், சுளைகளின் தோல்களையும் டேபிளில் கன்னா பின்னா என்று போட்டவர், " முனியம்மா - இதை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் எடுத்து, குப்பைக்கூடையில் போடு" என்றார். 
     

"வேலா - எங்கே நான் நேற்று வாங்கிய ட்ராக் சூட், ட்ராக் ஷூ?" 
                
"செருப்பு வைக்கும் அலமாரியில் இருக்கு எஜமான்." 
         
"நான் இன்றைக்கு போட்டுக்கத்தானே அதை வாங்கி வந்தேன்! நீ இங்கே இருந்துகொண்டு, அங்கே இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்? போ அதையும் வெள்ளை சாக்ஸ் ஜோடியையும் எடுத்துகிட்டு வாப்பா." 
           
வேலன் கொண்டுவந்த எல்லாவற்றையும் அணிந்துகொண்டார். 
              
"டிரைவர் தங்கவேலு வந்தாச்சா?" 
              
"அவரு எட்டு மணிக்குத்தான் எப்பவும் வருவாரு எஜமான்." 
            
"ஏண்டா - நேத்திக்கே ஃபோன் செய்து தங்கவேலுவுக்குச் சொல்லலையா?" 
               
"சொன்னேன் எஜமான். அவரு நான் சொன்னா கேக்கமாட்டாராம். நீங்கதான் சொல்லணுமாம்." 
             
"எடுடா மொபைலை. போடுடா அவன் நம்பரை. " 
                
"ஹலோ தங்கவேலுவா" 
              
"எஸ் பாஸ்." 
          
"ஆமாம். எஸ்ஸு பாஸு இதிலெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை. கரெக்டா  ஏழு மணிக்கு நீ இங்கே இருக்கணும். இல்லைனா சீட்டைக் கிழிச்சுடுவேன்." 
          
"இதோ வரேன் பாஸ்." என்று சொல்லி, அழைப்பை கட் செய்த தங்கவேல், 'என் சீட்டை நீ கிழிச்சா, கடவுள் உனக்கு (சீட்டு) டிக்கெட் கொடுத்திடுவார்'  என்று சொன்னார். 


ஏழு மணி பத்து நிமிடங்களுக்கு பார்க் வாயிலில் பார்க் செய்யப்பட்ட காரிலிருந்து இறங்கிய நடராஜ், தங்கவேலிடம், "இன்னும் அரைமணி நேரத்தில், பார்க்கில் வாக்கிங் போய் முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அந்த நேரத்தில் வந்து, என்னை பிக்கப் செய்து, வீட்டில் கொண்டுபோய் விடவேண்டும்" என்று சொல்லியவாறு, பார்க்குக்குள் நடந்து சென்றார். 
   
அவ்வளவுதான் கதை. 
     
(ஆமாம் - கடைசியில் என்னவோ சொல்கிறேன் என்று சொன்னேனே என்ன அது? ஹாங் - வில்லனுக்கு நடராஜ் பெயர்க்காரணம். அது ஒன்னுமில்லீங்க - அப்போ எனக்கு ஆபீசில் பாஸ் ஆக இருந்தவர் பெயர் நடராஜ்.) 
          

29 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. யார் முதலில் புரிந்துகொள்கிறார்கள் என்று பார்க்கலாம் .

      நீக்கு
  2. இதிலே நடராஜ் வில்லனாகத் தெரியவில்லையே! எஜமான் என்ற முறையில் அதிகாரம் செய்கிறார். :)

    பதிலளிநீக்கு
  3. பத்து நிமிடக் கார் பயணத்திலிருக்கும் பூங்காவுக்குச் சென்று அரைமணி நடக்க இத்தனை அட்டகாசம்:)! அதற்கு பதில் அரைமணிக்குள் பார்க் வரை நடந்தே போய் வரலாமே என சொல்ல வருகிறீர்கள்(ளோ)!. என்ன செய்ய, பாஸ் வில்லனுக்கு குண்டும் குழியுமான நடைபாதைகளில் நடக்க விருப்பமில்லையோ என்னவோ :)?!

    பதிலளிநீக்கு
  4. கரெக்டா? நன்றி:).

    நடை ராஜன் boss இல்லை. நல்லது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்ல எந்த வேலையையும் செய்யாமல் பார்க்குக்கு காரில் சென்று நடைப் பயிற்சி செய்து காரில் திரும்பி வருகிறார் என்பதுதான் கதை.

      நீக்கு
  5. கௌதம் எனக்குப் புரிந்துவிட்டது!
    யாரிடமும் சொல்ல மாட்டேன் கவலையைவிடுங்கள்!
    ஆனா அவரு நல்லவருதானே? ஒருவேளை இந்த சிகரெட்டுனால அவரு உங்களுக்கு வில்லனாகத் தோன்றினாரோ?

    பதிலளிநீக்கு
  6. கிண்டல் இன்னும் கொஞ்சம் கடுமையா இருக்க வேண்டாமோ .. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பக்கத்துக்குள் இவ்வளவுதான் முடிந்தது!

      நீக்கு
  7. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  8. வீட்டில் குனிய நிமிர ஆள், டாக்டரின் ஆலோசனைப்படி நடை பயிற்சி.

    நட ராஜா நட.

    பதிலளிநீக்கு
  9. கடைசியில வச்சீங்களே ஒரு ட்விஸ்ட் (பெயர் காரணம்) சூப்பர்.

    பதிலளிநீக்கு
  10. ஆபீஸ் ஸ்டெனோவோட பேருதான் உங்க கதையின் ஹீரோயின்(கல்யாணியோ ?) பேரா சார் ?

    பதிலளிநீக்கு
  11. சுஜாதா ஸ்டைலில் முயற்சி பண்ணி இருக்கீங்களோ?! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. கோபத்துக்கு வடிகால்!
    இனிய பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. பாஸ் நா இப்படித்தான் இருக்கணும்! ஹஹஹ் அவர் கீழ இருக்கறவங்க எள்ளுனா எண்ணையா இருக்க வேண்டாமோ?

    எங்கள் ப்ளாக் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. நடை ராஜ் கதை நிதர்சன உண்மை. அரைமணி நேர நடை போதாதே அலட்டிக்காத வில்லன்தான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!