திங்கள், 18 மே, 2015

'திங்க'க் கிழமை 150518 :: கத்தரிக்காய் ஊறுகாய்ப் போடக் கற்றுத் தருகிறார் திருமதி ரேவதி.


   நன்றி : Revathi Narasimhan 
            
சிநேகிதியின் வீட்டில் போட்ட கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
    

பி டி கத்திரிக்காய் எல்லாவிதத்திலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் போது ஊறுகாய் போடும் யோசனை வந்தது.  
           

கத்திரிக்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்: 

*********************************************************************

கத்திரிக்காய் ....இது ரொம்ப அவசியம்.
  

ஊறுகாய்னு போடறதுனால உப்பு ,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி, மெந்தியப் பொடி,மஞ்சள் பொடி எல்லாம் அளவோடு இருக்கணும். எண்ணெயும் நிறைய வேண்டும்.

இல்லாவிட்டால் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்காது. 
   
இப்ப எங்க வழிக் கத்திரிக்காய் ஊறுகாய் பார்க்கலாமா.

பரிசோதனையாச் செய்யறவங்களுக்குக் குறைந்த அளவு ஊறுகாய்ப் போடும் அளவுகளைச் சொல்கிறேன்.

கத்திரிக்காய். அதுவும் இந்த  பச்சைக் கலரில் 


இருக்குமே அந்த கத்திரிக்காய்.  
   

தேவையான அளவுகள்

***************

1, 6 எண்ணம் பெரிய இளம் பச்சை வண்ண நீளக் கத்திரிக்காய், பிஞ்சா இருக்கிறதாப் பொறுக்கி எடுத்துக்கணும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளணும்.  


2,இந்த அளவுக்குத் தேவையான
உப்பு...................அரைக் கப், 

3. புளிக்கரைசல்.........அரைக் கப் (கெட்டியாக இருக்கணும். கப் இல்லைங்கோ - புளிக்கரைசல்!  )
4. மிளகாய்ப்பொடி......அரைக் கப்
5. மஞ்சள் பொடி.........இரண்டு டீ ஸ்பூன்
6. வெல்லமும் பொடித்துப் போட்டுக் கொள்ளலாம்...சிறிதளவு.
7. நல்லெண்ணெய்..........400 கிராம்
8. கட்டிப் பெருங்காயத்தை வறுத்துப் பொடித்த தூள் மூன்று தேக்கரண்டி,
9. வறுத்துப் பொடித்த வெந்தயம்.............ஒரு தேக்கரண்டி பொடி.
10. வெள்ளைப்பூண்டு நறுக்கினது ஒரு கப்.
11. சின்ன வெங்காயம் நறுக்கினது இரண்டு கப்.(நிறைய இருக்கேன்னு தோணினால் ,கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்) .ஆனால் இந்த வெங்காயம் அவசியம்.

இப்ப செய்முறைக்குப் போகலாமா.  

கொஞ்சம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்க.
smile emoticon
நல்ல சுத்தம் செய்த இரும்பு வாணலில செய்தால் சுவை கூடும். இல்லைன்னால் கனமான வேற வாணலிலயும் செய்யலாம்.

அடுப்பில் வாணலியை ஏற்றிக் காய்ந்ததும் கொஞ்சமாக நல்லெண்ணெயை விட்டுக் கொண்டு, அது காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தையும், பூண்டுத் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

வதங்கி முடியும் நேரம் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,பெருங்காயத்தூள்
மூன்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி எடுக்க வேண்டும்.  

இந்தக் கலவை ஒரு அரைகுறையாக அரைத்த சட்டினி ஸ்வரூபத்தில் வந்துவிடும்.
அப்பொழுது நாம் நறுக்கி வைத்த கத்திரிக்காயை இந்தக் கலைவையில் சேர்க்கணும். அடுப்பை அணைத்து விட்டு, இன்னோரு வாணலியில் மிச்சமிருக்கும் எண்ணெயை விட்டுக் காய்கிற வரை பொறுமை காத்துக் கொஞ்சம் கடுகு போட வேண்டும். வெடித்ததும் (கடுகு அடுத்த வேலை புளிக்கரைசலயும்,உப்பையும் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து, (அடுப்பை சிம்மரில் வைத்துக் கொண்டு பிறகுதான் புளிக்கரைசலை விடணும்)

கொதிக்க வைக்கணும்.  

இது புளி வாசனை போகக் கொதித்ததும் இந்த அடுப்பை அணைத்து , கத்திரிக்காய் இருக்கும் அடுப்பை ஏற்றணும். கத்திரிக்காயும் மற்ற எல்லா உட்பொருள்களும் கலந்து ஒரே கலவையாகத் தெரியும் வரைக் கிளற வேண்டும்.

முக்கால் பதம் வந்ததும் புளிக் கலவையை ஊற்ற வேண்டும். 

அடுப்பு சிறிய அளவில் எரியட்டும்.  

எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது,நன்றாக ஊறுகாயின் மேல் மிதக்கும் அளவில் அடுப்பை அணைத்துவிடலாம்.  

ஆறிய பிறகு நல்ல ஜாடியோ, இல்லை கண்ணாடி பாட்டிலிலோ முக்கால் அளவுக்கு நிரப்பி வைக்க வேண்டும்.  

ஒரு சிறிய சுத்தமான வெள்ளைத்துணியினால் வேடு கட்டி ,நல்ல இறுக்கமான மூடி போட்டு மூடிவைக்கலாம்.

இது எங்க வீட்டில் மிகப் பிடித்த ஊறுகாய்.
                      

18 கருத்துகள்:

  1. சுவாரசியமா இருக்கு படிக்க. செய்து பார்க்கலாம். பச்சை கலரில் கத்தரிக்காய் பார்த்த நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  2. பூண்டு இல்லாமல் செய்து பார்க்கணும். பச்சைக் கத்திரிக்காய் இல்லைனா வயலட் கத்திரிக்காயில் செய்யலாமா?

    பதிலளிநீக்கு
  3. ஹை சூப்பரான ஊறுகாய்! செய்து பார்க்க வேண்டும்.

    இந்தப் பச்சைக் கத்த்ரிக்காயில் இன்னுரு ரிசிப்பி சொல்லட்டுமா?

    இந்தக் கத்த்ரிக்காய் இங்கு நீங்கள் காட்டியிருக்கும் நம்பர் என்றால்....

    அதைச் சிறிய சிறிய துண்டுகளாக்க கட் செய்து கொண்டு நல்லெண்ணை விட்டு வதக்க வேண்டும். தண்ணீர் ஒரு சொட்டு கூடச் சேர்க்கக் கூடாது. மூடி வைத்தும் வதக்கக் கூடாது. நன்றாக வெந்ததும் ஆறட்டும். இதனிடையே மிக்சியில் சிவப்பு மிளகாய் ஒரு 25-20 உங்கள் காரத்திற்கு ஏற்றார் போல...இது ஆந்திரா டிஷ் என்பதால் காரம் தூக்கலாக இருக்கும்....மிளகாய் காம்பு எடுத்துக் கொள்ளவும். புளி பெரிய நெல்லிக்காய் சைஸ், உப்பு கண்ணளவு....எங்கிட்ட இந்த க்ராம், ஸ்பூன் எல்லாம் கேட்டா கொஞ்சம் கஷ்டம்பா....அதனால ..சரி இப்ப இந்த மூன்றையும் மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாகப் பொடி செய்து கொள்ளவும். பின்னர் கத்தரிக்காயைப் போட்டு சுற்றிக் கொள்ளவும். நைசாகி விட்டாலும் பரவாயில்லை...கொஞ்சம் அரைபடாமல் இருந்தாலும் ஓகேதான் சுவை கூடும். பின்னர் வாணலியில் நல்லெண்ணை (இதுவும் அளவு எல்லாம் கேக்க்ப்படாது ஹஹ்ஹ) விட்டுக் காய்ந்ததும், கடுகு கறிவேப்பிலை தாளித்து நோ பெருங்காயம் ....இந்தக் கத்தரிக்காய் அரைத்ததை அதில் போட்டு ஒரு புரட்டு. அடுப்பை ஆஃப் செய்துவிடனும் அந்த சூடு போதும். கிளறிவிடவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், எதற்கும் தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும். ரொம்ப ஈசிங்கோ அதனால நம்ம வீட்டுல இது எப்பவும் இருக்கும்....வேண்டும் என்றால் சொல்லுங்கள் உங்கள் வீடு எங்கள் வீட்டிற்கு அருகில்தான்....பார்சல்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கத்தரிக்காய் ஊறுகாய் இதுவரை கேள்விப்பட்டது இல்லை! சுவையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு

  5. கத்திரிக்காய் ஊறுகாய் அரபு நாடுகளில் இஷ்டப்பட்ட உணவு இதை இங்கு அறிமுகப்படுத்தியவர்கள் எஜிப்தியர்கள்.

    பதிலளிநீக்கு
  6. பார்த்தேன்.ரொம்ப பிடிச்சது. பகிர்க என்றதைப் பார்த்து கிளிக் செய்தவுடன் பகிர்ந்தும் விட்டது. நன்றி அவர்களுக்கும் உங்களுக்கும். நீங்கள் ஏன் சொல்லுகிறேனை மேய்வதில் சேர்த்துக் கொள்வதில்லை. அருமையான செய்முறை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. கத்தரிக்காயே அலெர்ஜி. அதுவும் ஊறுகாயா. ஹூ ஹூம்...!

    பதிலளிநீக்கு
  8. நன்றி துரை. நம்ம ஊரில கிடைக்கும்மா.

    நன்றி கீதாமா.பூண்டு இல்லாமல் செய்தாலும் நன்றாக இருக்கும்.

    நன்றி தளிர். சுவைத்துவிட்டுச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பு தனபாலன் திண்டுக்கல்லில் கிடைக்குமே. குண்டு குண்டாப் பச்சைக் கத்திரிக்காய். even purple brinjaal shd be ok.

    பதிலளிநீக்கு
  10. நன்றி கீதா மதி.செய்து பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. அன்பு திரு துளசிதரன் தில்லைக்காத்து,
    உங்கள் ஊறுகாய் பார்க்கும் போதெ
    ருசி வாசம் வருகிறது. 25 மிளகா என்றால் ஒரு கிலோ கத்திரிக்காயாவது வேண்டும் இல்லையா.
    மிக மிக நன்றி.அவரவர் ருசிக்கு ஏற்ற மாதிரி

    செய்தால் நன்றாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. முதல் முறையாக கத்திரிக்காய் ஊறுகாய் கேள்விப்படுகிறேன். ருசியாக இருக்கும்போல இருக்கிறது. பாராட்டுக்கள், வல்லி வித்தியாசமான ரெசிபி எழுதியதற்கு.
    'திங்க' கிழமையை கெஸ்ட் போஸ்ட் ஆ மாத்திட்டீங்களா?
    மத்தவங்க 'திங்க'றதையும் தெரிஞ்சுக்கலாம், இல்லையா?

    பதிலளிநீக்கு
  13. எங்களுக்கு 'பச்சை' கத்தரிக்காய் கிடைக்காது. ரெஸிபி படிச்சு, படம் பார்த்து திருப்தியாச்சு:-)

    பதிலளிநீக்கு
  14. கத்தரிக்காயில் ஊறுகாயா? இதுவரை கேள்விப்படாத ரெசிபி. நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!