திங்கள், 6 ஜூலை, 2015

"திங்க"க்கிழமை 150706 : கௌனி அரிசியும், கத்திரிக்காய் முருங்கைக்காய்ப் பொரியலும்!



.அடடா.. 'திங்க'க்கிழமை வந்தாச்சு.  எதுவும் ரெடி செய்து வைக்கலையே...  கீதா மேடம் வேற வந்து 'என்ன இன்னிக்கு ஒன்றும் இல்லையா'ன்னு கேட்டுடுவாங்களே...
 
இந்த கௌதமன் வேற ரெண்டு மூணு வாரம் வலைப்பக்கம் என்னால் சரியா வரமுடியாது, நீ பார்த்துக்கோன்னு சொல்லிட்டாரே...
 
என்ன எழுதலாம்?
 
ம்ம்ம்...
 
"மேடம்..  உங்க வீட்டுல வித்தியாசமா ஏதாவது டிஷ் செய்வீங்களா?  அப்படி எதுவும் இருந்தா சொல்லுங்களேன்"
 
"இல்லீங்க...  நாங்க எல்லோரும் செய்வது போலத்தான் செய்வோம்"

 
"ரெண்டு மூணு ஐட்டம் பேரு சொல்லுங்க..  நான் கேள்விப் படாததா இருந்தா எடுத்துக்கறேன்"
 
"எதுக்கு?  உங்க ப்ளாக்ல போடறத்துக்கா?  உங்களுக்குத் தெரியாதுன்னா படிக்கறவங்களுக்குத் தெரியாம இருக்குமா?"
 
"அட, தெரியாதவங்க ஒண்ணு ரெண்டு பேராவது தேறுவாங்க..  சொல்லுங்க"
 
"அது எல்லா டிஷுக்குமே பொருந்தும் ஸார்.  இப்போ நீங்க சொன்ன மோர்க்கூழ் நான் இதுவரை செய்ததே இல்லை.  அது போலத்தான்.."
 
"சபாஷ்... அப்போ சொல்லுங்க"
 
"ம்ம்ம்...."

 
"......................"
 
".............  கௌனி அரிசி தெரியுமா?"
 

                                              Image result for kowni arisi images
 
"தெரியும். சிகப்பா கேரள அரிசி போல இருக்குமே.."
 
"அதான்.  அதை எடுத்துக் களைஞ்சிகிட்டு தண்ணீர் ஊற்றி 6 மணிநேரம் ஊற வைங்க.  அப்புறம் அதைக் கொஞ்சம் ஜாஸ்தியாவே தண்ணீர் சேர்த்து குக்கர்ல வச்சு, நல்லக் குழைய வச்சு எடுத்துக்கங்க... கீழ இறக்கின பிறகு கொஞ்சம் நெய் விட்டு, சர்க்கரை போட்டுக் கிளறி விட்டு..."
 
"நெய்யும் சர்க்கரையும் எவ்வளவு?  அரிசிக்குத் தண்ணீர் ஒண்ணுக்கு மூணா?  நாலா?'  அவசியம் அடுப்புலேருந்து இறக்கித்தான் செய்யணுமா?  அடுப்புலேயே வச்சுச் செய்யக் கூடாதா?
 
"குழைய வேக வைக்கணும். அவ்வளவுதான்.  அதை நீங்க பார்த்துக்குங்க.  நெய் வாசனைக்குப் போடுங்க போதும்.   சர்க்கரை உங்களுக்குத் தேவையான அளவு..  சாதாரண இனிப்பாவோ, நிறைய இனிப்பாவோ...   அது உங்க இஷ்டம்!  அடுப்புலேயே வச்சுக் கூடச் செய்யலாம்.  தப்பில்லே.  ஆனால் அடுப்பை அணைச்சுடுங்க"
 
"ஐயே... மேடம்..  என்ன இப்படிச் சொல்றீங்க... அளவெல்லாம் சரியாச்..."
 
"அதெல்லாம் அப்படித்தான்.  சர்க்கரை சேர்த்த பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி மூடி வச்சுடுங்க.  அப்புறம் சாப்பிட வேண்டியதுதான்"
 

              Image result for kowni arisi images                    Image result for kowni arisi images
 
 
"சரிதான்.  இதைப் போட்டு ஒப்பேத்தறேன்.  ஆனா ரொம்ப சிம்பிளா இருக்கே.."
 
"சுருக்கச் செய்யறதுதான் ஈஸி!   கத்திரி முருங்கை உருளைப் பொரியல் சொல்லவா?"
 
"அது என்ன?  இதற்குத் தொட்டுக் கொள்ளவா?"
 
"சேச்சே... அப்படியெல்லாம் கட்டாயமில்லை.  சிம்பிளா இருக்குன்னீங்களே.. நான் சிம்பிளா செய்யற இன்னொன்று நினைவுக்கு வந்தது.  அதையும் சேர்த்துச் சொல்லலாம்னு பார்த்தேன்!"
 
"சரி சொல்லுங்க"
 
"ரெண்டு உருளை, ரெண்டு மூணு கத்தரிக்காய், ரெண்டு முருங்கைக்காய் எடுத்து சின்னச் சின்னதா நறுக்கிக்கோங்க...கடுகு, உளுந்து தாளிச்சுட்டு இதையெல்லாம் வதக்குங்க... காரப்பொடி. உப்பு, மசாலாப்பொடி போட்டு இறக்கிடுங்க..  அவ்வளவுதான்!  வீட்டில் அசைவம் செய்யற நாளில் இதைச் செஞ்சுடுவேன்..  கொஞ்சம் பொறுமை கூட இருந்தால் தேங்காய் அரைச்சு விடுவேன்"
 

                                                                  Image result for potato, drumstick, brinjal images
 
"அசைவமா...  மேடம்.. சைவமாச் சொல்லுங்க"
 
"ஹல்ல்ல்ல்லோ.... இதுல அசைவம் எங்க வந்தது?  வீட்டில் அசைவம் செய்யற நாளில் நான் சாப்பிட இதை செஞ்சுக்குவேன்னு சொன்னேன்.  உருளை, கத்தரி, முருங்கை அசைவமா? "
 
"இல்லைதான்.  ஆனால் இந்தக் காம்பினேஷனில் நாங்க பொரியல் செய்ததே இல்லை!  கத்தரியும் உருளையுமே சேராத காம்பினேஷன்.  அதுல முருங்கையுமா?    எங்க அக்கா உருளையையும் பீட்ரூட்டையும் சேர்த்துப் போட்டு பயங்கரக் கலர்ல ஒரு கறி செய்வா..  நல்லாத்தான் இருக்கும்னு வச்சுக்கோங்க!  முருங்கை வேகவச்சு, தோலை எடுத்துட்டு உள்ள இருக்கற சதையையும், விதையையும் மட்டும் எடுப்பீங்களோ?"
 
"அதெல்லாம் இல்லை. அப்படியே தோலோட நறுக்கிப் போடலாம்"
 

                                                              Image result for potato, drumstick, brinjal images

"ஓ...  சரிதான்!  நன்றி வருகிறேன்..  மறக்கறத்துக்குள்ள ஓடிப்போய் எழுதணும்!  வரேன்"








படங்கள்  :  இணையம். 

45 கருத்துகள்:

  1. "திங்கக்" கிழமை....ரெசிப்பிஸ்..ரெண்டுமே செய்யறதுண்டு....கவுனி அரிசி இப்படிச் சிம்பிளா அல்லது அதுல கொஞ்சம் கேஷ்யு, பாதாம், முந்திரி வறுத்துப் போட்டும் செய்யறதுண்டு....ஏலப்பொடி போட்டும்...சர்க்கரை சில சமயம் ..இல்லைனா வெல்லம்...(அதிலும் அச்சு வெல்லம் சூப்பரா இருக்கும்...) இப்படிப்பல காம்பினேஷன்ஸ்......

    அந்த கத்தரி, உருளை, முருங்கை நீங்கள் சொல்லி இருப்பது போல செய்வதுண்டு...அதுல வெங்காயம் சேர்த்து (சின்னது ஆர் பெரியது...)....சிலசமயம் பூண்டும்.....இதையே கொஞ்சம் தேங்காய் பாலில் வேக வைத்துச் செய்யலாம் (சின்ன வெங்காயம் சேர்த்து...) செம டேஸ்டா இருக்கும்....

    -கீதா

    பதிலளிநீக்கு
  2. இது ரொம்ப புதுசாத்தான் இருக்கு... (முதலாவது)

    பதிலளிநீக்கு
  3. கத்தரி முருங்கைக்காய் சேர்த்து செய்வதுண்டு! உருளை சேர்க்க மாட்டோம்! கவுனி அரிசி பொங்கல் புதியது! எப்படியோ மேட்டர் தேத்தி ஒப்பேத்திட்டீங்க! ஆனாலும் அசத்தல்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் கத்தரி, உருளை காம்பினேஷன் செய்வோம் என்கிறார்கள். நீங்கள் கத்தரி, முருங்கை காம்பினேஷன் செய்வேன் என்கிறீர்கள். அட! ஒப்பேத்திட்டேன்னு சும்மா பேச்சுக்குத்தான் சொன்னேன். சேமிப்பில் இன்னும் வைத்திருக்கிறேன். :))

      நீக்கு
  4. கவுனி அரிசி இனிப்புப்பொங்கல் சர்க்கரைப்பொங்கல் போலவே இருக்கும். ஆனால் அரிசியில் செய்யப்படும் சர்க்கரைப்பொங்கல் போலல்லாது அதிக சுவையுடன் இருக்கும். மிக மிக சத்தானது. ஒரு கப் கவுனி அரிசியை நன்கு கழுவி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் ஒரு இஞ்ச் அளவு வரை நீர் ஊற்றி குக்கரில் ஏழு விசில் வரை சமைக்க வேண்டும். வெளியே எடுத்ததும் அதை ஒரு மத்தால் மசித்து சூட்டுடனேயே ஒரு கப் சீனியைப்போட்டு நன்கு கலந்து மறுபடியும் சிறிது மசித்து பின் தேங்காய் துருவல் அரை கப், நெய், நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளற வேண்டும். அவ்வளவு தான். இதை நான் அடிக்கடி சமைப்பது வழக்கம். இதை என் சமையல் வலைத்தளத்தில் எழுதியிருக்கிறேன்.
    இணைப்பு: http://manoskitchen.blogspot.in/2014/04/kavuni-arisi-sweet-pongal.html

    முருங்கை, கத்தை, உருளை, தக்காளி, வெங்காயம் வதக்கி பச்சை மிளகாய், தேங்காய், சோம்பு அரைத்துப்போட்டு செய்யும் கறி சுவையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிப்ஸுக்கு நன்றி மனோ மேடம். நீங்கள் சொல்லியிருப்பது போல ஒருமுறை செய்து பார்க்க வேண்டும்.

      நீக்கு
  5. கவுனி அரிசியில் பாயசம் செய்வேன் ...இனி இதையும் ட்ரை செய்றேன்

    பதிலளிநீக்கு
  6. கத்தரிக்காய் - உருளைக்கிழங்கு Combination நண்பர் ஒருவரின் மிகப் பிடித்த சப்ஜி! வாரத்திற்கு இரு முறையாவது அலுவலகத்திற்கு கொண்டு வந்து விடுவார்! :)

    இதில் கஷ்டமே எனக்கு அது பிடிக்காது என்பது தான்! நான் கொண்டு போகும் சப்ஜியையும், அவர் ரசித்து ருசித்து உண்ண, நான் அவரையே பார்த்துக் கொண்டிருப்பேன். :)

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  7. கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளை இதோடு அவரைக்காயையும் சேர்த்துக்கோங்கோ... சூப்பரா இருக்கும்.

    நல்ல சமையல்.

    God Bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையும் ஒரு முறை முயற்சி செய்துடுவோம் வெட்டிப்பேச்சு ஸார். நன்றி.

      நீக்கு
  8. எனக்கு கவுனியும் தெரியாது ,யானைக் கவுனியும் தெரியாது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ஊர்ல இருக்கற யானைக் கவுனியே தெரியலைன்னா எப்படி பகவான்ஜி! :))))

      நீக்கு
  9. கவுனி( கவண்) அரிசி அடிக்கடி செய்வோம். நானும் தளத்தில் பகிந்து இருக்கிறேன். அருமையான சுவையான இனிப்பு இது. உடலுக்கும் நல்லது. அருமை சகோ நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. பதிவை எழுதும்போது கவுனி அரிசி பற்றி உங்கள் தளத்தில் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட எண்ணியிருந்தேன். விட்டுப்போய் விட்டது.

      நீக்கு
  10. //கத்தரியும் உருளையுமே சேராத காம்பினேஷன்.//
    யார் சொன்னது? இல்லை, யார் சொன்னதுங்கறேன்! எங்க அம்மா நாங்க சின்ன வயசா இருக்கிறச்சேயே கத்திரிக்காய், உ.கி.வெங்காயம் சேர்த்து வதக்கிய கறி செய்து போட்டிருக்காங்க. அருமையா இருக்கும். இப்போவும் சப்பாத்திக்குப் பண்ணுவது உண்டு. எங்க பையர், பொண்ணு எல்லாம் இந்தியாவுக்கு வந்தால் குறிப்பா இந்தக் கறி கேட்பாங்களாக்கும்! ஹூம்! சேராதாமே, சேராது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிச்சுக்குங்க கீதா மேடம். பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டுடும் கதைதான். எனக்குத் தெரியலை என்றதும் இல்லவே இல்லைன்னு நினைச்சுட்டேன்.

      ஆனா நீங்க பெஞ்சு மேல நிற்கணும். ஏன் லேட்?

      :))))

      நீக்கு
  11. மத்தபடி கவுனி அரிசியும் சமைச்சதில்லை. கத்திரி, உருளையோடு முருங்கை சேர்த்தும் பண்ணினதில்லை. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி....ஹி... நானும் இந்த ரெஸிப்பி பண்ணினதில்லை கீதா மேடம். இனிதான் ட்ரை பண்ணணும்.

      நீக்கு
  12. கவுனி அரிசி என்ற பெயர் நான் அறியாதது! கத்திரி முருங்கை பொரியல்! உருளை சேர்ப்பதில்லை!

    பதிலளிநீக்கு
  13. தெரியாமக் கேக்கிறேன் . மேடம் யார்.?இன்றைய ரெசிபி எல்லாம் செய்வதுண்டு. ஆனால் கவுனி அரிசி என்னும் பெயர் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி எம் பி ஸார். கீதா மேடம் சொல்லியிருப்பது சரிதான். சும்மா வேற மாதிரி சொல்லும் உத்தி. அவ்வளவுதான்.

      நீக்கு
  14. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜிஎம்பி சாருக்குச் சொன்ன பதில் எங்கே? எங்கே? எங்கே?

    ஜிஎம்பி சார், சும்மாவானும் "மேடம்" என அழைத்துப் பதிவைச் சுவையூட்டுவதற்காக ஒரு சம்பாஷணையைப் போல் எழுதி இருக்கார். அவ்வளவு தான். மேடம் என்பதற்குத் தனிச் சிறப்பு இருப்பதாகத் தெரியவில்லை. :)))

    பதிலளிநீக்கு
  15. வணக்கம், எனக்கு ஏதாவது அவசரமா செய்யனும் என்றால் காய்,
    உடன் இது தான் கத்திரி, உருளை சேர்த்து செய்வேன்,
    முருங்கை இருந்தால் அதையும் போட்டு நானா செய்தது,,,,,,,,,,,, ஆனா இப்படியும் செய்லாம் பேர்ல் இருக்கே,
    பொங்கல் சூப்பர்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. இரண்டு குறிப்பும் அருமை. அதை அளித்த விதம் இன்னும் அருமை:).

    முருங்கை, கத்திரி கூட்டு செய்வதுண்டு. மற்றபடி மூன்றும் சேர்வது அவியலில். இது புதுசு. செய்து பார்க்கிறேன். நன்றி:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அவியலில் நாங்களும் சேர்ப்போம்.

      நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  17. கவுனி அரிசி பேர் கேட்டதுண்டு. பார்த்ததில்லை. இனிஞாபகமாக கேட்டுண்டே இருப்பேன். ருசியும் பார்க்கணும். வயதானவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் குழைவுப்பதம்.. முருங்கைக்காயிற்கு தோல் சீவுபவர்கள் கூட இருக்கிரார்கள்.. எல்லா காயும் சேர்ந்தால் அதுவும் ஒரு புது ருசிதான்.கத்தரி நீர் விட்டுக்கொள்வதில் முருங்கையும்,உருளையும் பதமாக வெந்து ருசி கொடுக்கும் போலும். உலகத்தில்பல ருசிகள். இதுவும் அதில் ஒன்று. அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. ரெண்டுமே சுமாராத்தான் இருக்கு. கீதா மேடம் கோவித்துக்கொள்வதால் சொல்கிறேன். முருங்கைக்காயை கறியில் போட்டால், குத்தாதோ!. என்னைக்கேனும் பதிவர்களைப் பார்க்க நேர்ந்தால், அவர்கள் செய்துதருவதைச் சாப்பிட்டுப்பார்த்துச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. சிகப்பு அரிசிக்குக் கெளனி அரிசி என்ற பெயர் தெரியாது. அதை வாங்கிச் சமைத்ததும் இல்லை. நீங்கள் சொல்லியிருக்கும் இனிப்புப் பொங்கல் வாங்கிச் செய்து பார்ப்பேன்.இரண்டாவது ஏற்கெனவே செய்வது தான். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!