Tuesday, July 7, 2015

சும்மான்னா ரெண்டாக் குடு!ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?  பிறர் பொருளுக்கு ஆசைப் படுதல் ஒரு ரகம்.  தகுதிக்கு மீறி ஆசைப் படுதல் ஒரு ரகம்.

நடந்துபோகும் சாலையில் பணமோ பொருளோ கிடந்தால் எத்தனை பேர்கள் உரியவர்களிடம் சேர்ப்பிக்க நினைக்கிறார்கள்?

கைக்குக் கிடைக்கும் எதுவும் போதும் என்கிற மனம்தான் வருகிறதா?  பஸ் ஸ்டாப்பில் நின்றிருப்போம்.  பஸ் நிற்காமல் போனால் கோபம் வரும்.  ஒரு பஸ் நின்று, நாம் அதில் ஏறி விட்டபின் நிலைமை தலைகீழ்.  அடுத்தடுத்த நிறுத்தங்களில் பஸ் நின்று சென்றால், லேட் ஆகிறது, மெதுவாகச் செல்கிறது எனும் கோபம்.  பயணிகள் மேலே மேலே ஏறினால், நமக்கு சௌகர்யத்துக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று முணுமுணுப்போம்.  சுயநலம்.

கணவன் விற்கும் கடை இருந்ததாம்.  'இதைவிட நல்ல கணவன் வேண்டுமென்றால் மாடிப் பகுதிக்குச் செல்லவும்' என்ற போர்ட் இருந்ததாம்.  கடைசியில் 'உங்களைத் திருப்திப் முடியாது என்பதைச் சொல்லவே ஐந்தாவது மாடி' என்று ஒரு கதை வரும். 


இது ஆண்களுக்கும் பொருந்தும்.  ஆறுமாதம் பொறுத்திருந்தால் மொபைலும், மனைவியும் நல்ல மாடல் கிடைப்பார்கள் என்பது ஜோக்!


பேரம் பேசிக் கொண்டே வந்து, கடைக்காரன் வெறுப்பில் "சும்மாவே எடுத்துக்கிட்டுப் போய்யா"என்றால், "அப்போ ரெண்டாக் குடு" என்று கேட்கும் மனித மனம்.

ஒரு விவசாயி இருந்தானாம்.  தோட்டத்தில் ஒருநாள் அன்று பெய்த மழையில் எல்லா கீரைகளும், காய்களும், பூக்களும் வீணாகப் போயிருக்க, இன்றைய சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் போயிற்றே என்று வருந்திய நேரம், ஒரு பாதுகாப்பான அமைப்பின் கீழ் ஒரு தாமரை மலர் மட்டும் பெரிதாக மலர்ந்து கண்ணைக்கவரும் வகையில் அழகாக இருந்ததைக் கண்டான்.

                                                          Image result for large lotus images

சோகமாக அதைப் பறித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். இந்த அடர்மழை பெய்யாமலிருந்திருந்தால் 100 வராகன் முதல் 200 வராகன் வரை இன்று வியாபாரம் நடந்திருக்குமே' என்று எண்ணமிட்டபடி நடந்தான்.


எதிரில் ஒரு மனிதன் வந்தான்.  இவன் கையிலிருந்த தாமரை மலரைப் பார்த்தவன் "50 வராகன் தருகிறேன்.  அந்தப் பூவைக் கொடு" என்றான்.


இரண்டு வராகன் பெறும் மலருக்கு 50 வராகனா?  திகைத்த விவசாயி அவனிடம் காரணம் கேட்டான்.

"இன்று புத்தரின் பிறந்த நாள்.  அதற்குத்தான் கேட்கிறேன்"

அவனிடம் பூவைத் தராமல் தாண்டி நடந்தான்.  எதிரில் குதிரையில் வந்த இன்னொரு மனிதன் "நூறு வராகன் தருகிறேன்.  அந்தப் பூவைக் கொடு.  புத்த பகவானுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்" என்றான்.

ஆச்சர்யப்பட்டுப் போனான் விவசாயி.

அவனுக்கும் தராமல் தாண்டி நடந்தான் விவசாயி. எதிரே அந்நாட்டின் மந்திரி வந்தார்.  அவர் 1000 வராகன் தரத் தயாராக இருந்தார். 

அவருக்கும் மறுப்பாகத் தலையாட்டி விட்டு மேலும் நடந்தான்.

அரசவைக்குச் சென்றால் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தது அவனிடம்.

ஆனால் எதிரே புத்த பகவான் ஆலயம்தான் வந்தது.  உள்ளே நுழைந்தான்.
பிரம்மாண்டமான புத்தர் சிலையைக் கண்டு பிரமித்து நின்றான்.

                                                               Image result for lord buddha images


அருகே சென்றவன் அந்த மலரை புத்தரின் காலடியில் வைத்து வணங்கி நின்றான்.

 
அமைதியாகத் திரும்பி நடந்தான்.

இதுவும் ஒரு மனம்.

37 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

துளியூண்டு அரசவை எண்ணம் இருந்தது கூட, உண்மையான உள்மனம் ஜெயித்து விட்டது...

ஜீவி said...

ஆசையைத் துறந்த புத்தரின் சிலையே பணத்தாசையைத் துறக்க வைத்து விட்டது, பாருங்கள்! :))

// இரண்டு வராகன் பெறும் மலருக்கு 50 ரூபாயா? //

ஒரு சின்ன கணக்கு.
சக்கரம் - ஒரு வெள்ளிக் காசு
பதினாறு சக்கரம் - ஒரு வராகனாம்.
சக்கரம் - பதினாறு காசு (செப்பு)
ஆக, பதினாறு செப்புக் காசுக்கு ஒரு வெள்ளிக்காசு கிடைத்திருக்கிறது, அந்தக் காலத்தில்.

ஒரே காலத்திலான நிகழ்வுக்கு வராகனுக்கும் ரூபாய்க்கும் இணைப்புப் பாலம் போட்டது முரண்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மனம் எப்போதும் இன்னும் இன்னும் என்றே ஏங்கும். சும்மா கொடுத்தல் எதையும் ஏற்கும்.
குட்டிக் கதை அருமை

Bagawanjee KA said...

புத்தர் காலடி நம்மாளுக்கு போதி மரமா போச்சே :)

KILLERGEE Devakottai said...

Arumai.

பரிவை சே.குமார் said...

நல்ல பகிர்வு...
பணத்துக்கு கொடுத்திருந்தால் நிறைவு கிடைத்திருக்காது.

ரூபன் said...

வணக்கம்
ஐயா
நல்ல விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் மன நிறைவு கிட்டியிருக்காதல்லவா
தம +1

Geetha Sambasivam said...

//ஒரே காலத்திலான நிகழ்வுக்கு வராகனுக்கும் ரூபாய்க்கும் இணைப்புப் பாலம் போட்டது முரண்.//

ஶ்ரீராம் படிச்சதை அப்படியே பகிர்ந்திருக்கார். அதைப் போய் இவ்வளவு தீவிரமா எடுத்துட்டு! ஹிஹிஹிஹி! :)))))) மற்றபடி இந்தக் கதை நானும் படிச்சிருக்கேனே!

Sampath Kalyan said...

அருமை. மிகவும் ரசித்தேன். நன்றி.

ஸ்ரீராம். said...

புத்த மகிமை. நன்றி DD.

ஸ்ரீராம். said...

நன்றி ஜீவி ஸார்

திருத்தி விட்டேன்.

:)))))))

ஸ்ரீராம். said...

நன்றி டி என் எம்.

ஸ்ரீராம். said...

நன்றி பகவான் ஜி.

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி.

ஸ்ரீராம். said...

நன்றி குமார்.

ஸ்ரீராம். said...

நன்றி ரூபன்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

ஸ்ரீராம். said...

ஆமாம். நன்றி கீதா மேடம்.

ஸ்ரீராம். said...

நன்றி சம்பத் கல்யாண்.

முதல் வருகைக்கு(ம்) நன்றி.

'நெல்லைத் தமிழன் said...

அவருக்கும் மறுப்பாகத் தலையாட்டி விட்டு மேலும் நடந்தான்.

அரசவைக்குச் சென்றால் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தது அவனிடம். அரண்மனைக்கு அருகில் மந்திரி அரண்மனையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தவர் பூவைக் கையில் வைத்திருந்த விவசாயியைப் பார்த்தார். அரசருக்கு இதைக் கொடுக்கலாமே என்று நினைத்த அவர் 1000 வராகனுக்கு பூவைக் கேட்டார். விவசாயிக்குக் கொடுக்க மனமில்லை.........

அரண்மனையை அடைந்த விவசாயி, உள்ளே நுழைய முயன்றான். காவல்காரர்கள் தடுத்தனர். தள்ளுமுள்ளுவில் பூ சேதமாகிவிட்டது. பேராசை பெரு நஷ்டமாகிவிட்டது.

காசு அதிகம் எதிர்பார்ப்பவன், எப்படி கோவிலில் புத்தர் சிலையில் கொண்டுபோய்ப் பூவை வைப்பான்?

Kamatchi said...

உண்மையாகக் காசிற்கு தேவை இருந்திருந்தால் வந்த அளவிற்கு கொடுத்திருப்பான். அவனுக்கும் ஒரு படிப்பினையைக் கொடுக்க ஸமயம் ஸரியாக அமைந்து விட்டது. புல்லுக்கும் ஆங்கே புசியுமாம். அவ்வளவுதாந். நல்ல கருத்தான கதை. அன்புடன்

சென்னை பித்தன் said...

அதற்கு ஒரு பக்குவம் தேவை!

புலவர் இராமாநுசம் said...

மனித மனம் பற்றிய அலசல்! நன்று!

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையான நீதிக்கதை! ஆசைய புத்தர் வென்றதுடன் அவன் மனதையும் வென்றுவிட்டாரே!

Thulasidharan V Thillaiakathu said...

கதை அருமை...போதும் என்ற மனமே பொன் செய்யும்....புத்தரைப் பார்த்ததும் போதனை வந்துவிட்டதோ...மனம் அமைதியாகிவிட்டது போலும்...

நண்பரே! ரூபாய்? வராகன்? வேறு வேறு காலகட்டம் அல்லவா?

mageswari balachandran said...

வணக்கம்,
புத்தரின் கூற்று மெய்யானது,
நல்ல மனம்.
நன்றி.

R.Umayal Gayathri said...

அருமையான கதை...மனம் அலையும்..கடவுளைக் கண்டால் குவியும் தன்னாலே..!!
தம +1

ஸ்ரீராம். said...

வாருங்கள் நெல்லைத் தமிழன். இந்தக் கற்பனையும் நல்லாத்தான் இருக்கு!

ஸ்ரீராம். said...

நன்றாகச் சொன்னீர்கள் நன்றி காமாட்சி அம்மா.

ஸ்ரீராம். said...

நன்றி சென்னை பித்தன் ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி புலவர் ஐயா.

ஸ்ரீராம். said...

நன்றி 'தளிர்' சுரேஷ்.

ஸ்ரீராம். said...

நன்றி துளசிஜி. ஆம், மாற்றி சரி செய்து விட்டேன்.

ஸ்ரீராம். said...

நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன்.

ஸ்ரீராம். said...

நன்றி உமையாள் காயத்ரி.

Kalayarassy G said...

அதிக பணத்துக்கு ஆசைப்பட்டவன் புத்தர் காலடியில் கொண்டு போய்ப் பூவை வைப்பானா என்று சந்தேகம் எழுவது இயற்கை தான். ஆனால் மனித மனம் விசித்திரமானது. எந்த நேரம் எப்படி மாறும் என்று கணிக்க முடியாது. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று போதித்த புத்தர் சிலையைப் பார்த்தவுடன் அவனுடைய பேராசை அடங்கிப்போய் ஞானம் வந்துவிடுகிறது என்பதாகத் தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கதை போதிக்கும் நீதி இது தான்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!