சனி, 11 ஜூலை, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.





1) நம்பிக்கையுடன் அடுத்தவர்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் தனியார் கல்லூரில் தமிழ்ப் பேராசிரியை யாகப் பணியாற்றும் ஏ.கீதா (35).




2)  அரசை எதிர்பாராமல் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து பாலம் கட்டிக்கொண்ட ஹரியானா கிராமத்து மக்கள்.





4)  இலஞ்சியில் ஒரு இதமான சேவை.  இப்படியும் ஒரு மனிதர்.




5)  எதிரி அல்ல!  மனிதாபிமானம்.




6)  முன் உதாரணமாகக் கருதி ஓட வேண்டாம்.  ஆனாலும் அமீன் ஷேக்கின் அனுபவங்கள் படிக்கப் பட வேண்டியவை.  தவறான பாதைக்குச் செல்லவில்லை அவர்.




 


7) 8ம் வகுப்பு படிக்கும்போது, அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டர் உதயசந்திரன், ஒரு விழாவிற்கு வந்து பேசினார். அப்போதே, நான் கலெக்டராகி, இந்த பள்ளிக்கு வரவேண்டும் என முடிவு செய்தேன்.


பிளஸ் 2 முடித்து சென்றவுடன், இந்த பள்ளிக்கு இதுவரை வந்ததில்லை. பள்ளிக்கு, நான் மீண்டும் வரும்போது, என்னால் இந்த பள்ளி பெருமை கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், பிளஸ் 2 முடித்து விட்டு, வெளியே சென்றேன். இன்று, அந்த லட்சியத்தை அடைந்து விட்டேன், மகிழ்ச்சி அளிக்கிறது. 





8)  தான் பட்ட கஷ்டம் இந்தப் பிள்ளைகளும் படக் கூடாது என்று அவர்களைக் காப்பாற்றிய "மனிதன்"






13 கருத்துகள்:

  1. பாராட்டுக்கு உரியவர்கள்
    பாராட்டுவோம்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  2. வான்மதி அவர்கள் பெயருக்கேற்றார் போல்... வாழ்க...

    துணைவியார் சண்முகவடிவு நாச்சியார் அவர்களுக்கும் வாழ்த்துகள்...

    மற்ற அனைத்து + செய்திகளுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  3. மனதிற்கு தெம்பளிக்கும் இதமான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

    த.ம. 3

    பதிலளிநீக்கு
  4. வழக்கம் போல் தகவல் களஞ்சியம் ! அறிந்தேன் பல

    பதிலளிநீக்கு
  5. பேராசிரியை ஏ.கீதா தனது குறைபாட்டுடனும் தன்னை மேம்படுத்திக் கொண்டு பிறருக்கும் தன்னம்பிக்கை அளித்து வருவது பாராட்டிற்குரியது...

    கிராம மக்கள் அரசை எதிர்பார்க்காமல் தங்கள் தேவையான பாலத்தைக் கட்டி முடித்ததற்கு நாம் வாழ்த்துவோம்...பெரிய பணி...

    தண்ணீர் வங்கி மிகவும் தேவையான ஒன்று....நிலத்தடித் தண்ணீர் இணைக்கப்பட வேண்டும் முதலில் நிலத்தடித் தண்ணீர் பெருகினால்...இந்த தண்ணீர் வங்கி எதிர்காலத்தில் மிகவும் உதவும்....அது சரி இங்கு அது பாசிபிளா...எல்லாரும் ஆழ் துளை போட்டு கருப்பு மண்ணுதான் வருது அதனால்தான்....அந்த மக்களைப் பாராட்டியே ஆக வேண்டும்...

    இலஞ்சியில் தம்புராஜ் அவர்கள் செய்வது மகத்தான் சேவை...அதுவும் வயதான காலத்தில்...பிரமிப்புதான் பெரியவர் பல்லாண்டு வாழ்க! அவரது சேவை தொடரவும்!

    நமது சிப்பாய்கள் சமீரை இனிப்புடனும், புது உடையும் வாங்கிக் கொடுத்து அனுப்பியது வாசித்த போது உடல் புல்லரித்துவிட்டது.....நம் நாட்டில் மனிதம் இன்னும் சாகவில்லை....

    அமின் ஷேக்கின் கதையைப் படித்ததும், மனம் நெகிழ்ந்து கண்ணில் நீர் வந்ததை ஏனோ தவிர்க்க முடியவில்லை...

    வான்மதியும், குழந்தைத் தொழிலாளிகளைக் காப்பாற்றிய மனிதரும் போற்றப்பட வேண்டியவர்...அந்த மனிதரும் அமின் ஷேக்கிற்கு நிகராக ...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்,
    அனைவரும் பாராட்டிற்குரியவர்கள்,
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. எல்லோரையும் பாராட்டத்தான் முடிகிறது. எமுலேட் செய்ய முடியுமா..?

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் சிறப்பான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. கிணறுகளை இணைத்தல் புதிய கான்செப்ட்டாக இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  10. அனைவரையும் பாராட்டுவோம் அண்ணா....

    பதிலளிநீக்கு
  11. வான் மதியின் வழிகாட்டி உதய சந்திரன் ,நல்ல பொருத்தம்தான் :)

    பதிலளிநீக்கு
  12. இந்த பாசிடிவ் பக்கங்கள் எப்போதுமே எனக்கு மிகப்பயனுள்ளதாய் இருக்கிறது சகா! வகுப்பறையில் பகிர்ந்துகொள்ள எத்தனை அருமையான தொகுப்பு! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  13. ஒரு கோடி ரூபாய் வசூலித்து அரசை எதிர்பாராமல் பாலம் கட்டிக்கொண்ட ஹரியானா மக்கள், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுப் படித்த பள்ளிக்குச் சென்ற வான்மதி, கிணறுகளை இணைத்துப் பாசனத்துக்கு ஏற்பாடு செய்தது, என எல்லாமே மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய பாசிட்டிவ் செய்திகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!