Wednesday, July 15, 2015

உன் பணம் பணம் என் பணம்.... என் பணம் உன் பணம்பரபரப்பான அந்தச் சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தேன்.  

                                                             Image result for heavy traffic in chennai images


பின்னாலிருந்து ஒரு ஆட்டோக்காரன் மிக இலேஸாக உரசி விட்டுத் தாண்டிச் சென்றதில் ஸ்கூட்டர் ஆட,  சமாளித்து ஓட்டும்போது கால்சராயின் பின்பக்க பாக்கெட்டிலிருந்து பர்ஸ் கீழே விழுந்ததில் அதிலிருந்து நோட்டுகள் சிதறிப் பறந்தன.


   
                                                

வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு, போக்குவரத்தின் குறுக்கே நடந்து நோட்டுகளைப் பொறுக்கத் தொடங்கினேன்.  பறக்கத் துடித்த நோட்டுகளை அழுத்திப் பிடித்துக் கைப்பற்றியவாறு முன்னேறும்போது கொஞ்ச தூரத்தில் எதிரில் ஒரு ஆள் அதே நோட்டுகளைப் பொறுக்கியபடி முன்னேறி வந்து கொண்டிருந்தான்.


                                                      Image result for collecting the scattered money on the road images 


லுங்கியை மடித்துக் கட்டி, வஸ்தாது போல இருந்த அவன் நோட்டுகளைக் கைப்பற்றியபடியே அருகில் வந்தவன், "வாத்யாரே... எவனோ நோட்டுகளைச் சிதறடிச்சுட்டுப் பூட்டான்..  பரவாயில்ல..  நீ எடுத்தவரைக்கும் நீ வச்சுக்கோ..  நான் எடுத்தது எனக்கு" என்றான்!


                                                                                   Image result for rowdy clip art images 

"எவனோ போடலை.. விழுந்தது என் பணம்தான்.  இதோ பார் பர்ஸ்.  ஆட்டோக் காரன் இடிச்சுட்டுப் போயிட்டான்" என்றேன்.

"த பார்.. நா எவ்ளோ நேர்மையா கீறேன்?  பர்ஸக் காமிச்சிட்டீன்னா உன் பணமாயிடுமா?  இப்ப நான் இந்தப் பணம் நான் தாராந்ததுன்னு சொன்னேனா..  படிச்சவனாட்டம் கீறே.....பொய் சொல்றே பாத்தியா?"

"பொய்யா... என் பணம்யா அது.. இங்க நிக்கறவங்களைக் கேளுங்க..."

அங்கு பூக்கட்டிக் கொண்டிருந்த அம்மா "சர்த்தான் போ மாடு.. பணம் ஸார்தான் பறக்க வுட்டாரு.. அவரு பொறுக்கறாரு..விடுவியா" என்றாள்.

மாடு என்கிறாளே... சண்டைதான்..  நம்ம கைல எடுத்த பணமும் சேர்ந்து போகப் போகிறது என்று  நினைத்துக் கொண்டு அவனை பயத்துடன் பார்த்தேன்.

"அப்படியா பூக்காரம்மா?  பயப்படாதே ஸார்.  இந்த மாடசாமி அவ்வளவு கெட்டவன் இல்லே" என்றவன் அவன் எடுத்திருந்த பணத்தையும் என் கையில் கொடுத்து விட்டுத் தாண்டிச் சென்று விட்டான்.


'ஓ... மாடு மாடசாமியின் சுருக்கமா?  ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள்தான் போலும்!'

நிம்மதிப் பெருமூச்சு தானாக வந்தது.43 comments:

Ramani S said...

பதிவுக்கு காணொளி படு பொருத்தம்
பதிவைப் படித்தும் காணொளியைக் கண்டும்
மகிழ்ந்தோம்.வாழ்த்துக்களுடன்...

Ramani S said...

tha.ma 2

Kamatchi said...

பூக்காரம்மாவையும் சேர்த்து திட்டி சண்டைக்கு வரப்போகிறான் என்று பார்த்தால் கொம்பில்லாத மாடுபோல
நோட்டையும் கொடுத்துவிட்டு ஸாதுவான மாடுபோல ஆகிவிட்டதே. என்ன மாடு அது. அன்புடன்

mageswari balachandran said...

வணக்கம்,
பார்க்க கரடு முரடு ஆனாலும் பரம சாது போல,,,,,,,,,
அருமை, வாழ்த்துக்கள்.
நன்றி.

'நெல்லைத் தமிழன் said...

இது நிஜமா நடந்ததா? 'நீங்க எழுதியிருக்கற விதத்தைப் பார்த்தால், நிறையப் பணம் வித்டிரா பண்ணி வரும்போது நடந்தது மாதிரி இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

கெட்டவனே இல்லை... மனிதன்...

Thulasidharan V Thillaiakathu said...

கற்பனயோ, நிஜ அனுபவமோ....ஒரு பக்கக் கதை சூப்பர்....பலாப்பழ மனிதன்!!! .. நிஜம் என்றால் முரட்டு மனிதர்களிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள்! நேர்மையாக உழைத்த காசு பறிபோகாது!

Thulasidharan V Thillaiakathu said...

சொல்ல மறந்துட்டோம்...அந்தக் காணொளி செம...பொருத்தம்!! பிரபு தேவா டான்ஸ் பார்த்து ரொம்ப நாளாச்சு..என்னமா ஆடறாரு..இதுவும் கோரியோக்ராஃபி செம...காசு மேல காசு வந்து அதுவும் அருமையான கோரியோக்ராஃபி...

ஊமைக்கனவுகள். said...

பதிவும் படமும் ரசனை.

‘தளிர்’ சுரேஷ் said...

உண்மையில் இது போன்றவர்கள் நேர்மையாக நடந்து கொள்வார்கள்! என் அனுபவத்திலும் பார்த்திருக்கிறேன்! நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... அனுபவமா....

நல்ல வேளை திரும்ப கிடைத்ததே...

கல்லுக்குள் ஈரம்....

R.Umayal Gayathri said...

சிலர் இப்படியும் இருக்கிறார்கள் தான். கதையா..? உண்மையா...?
தம 10

Geetha Sambasivam said...

பசுமாடு போலிருக்கு, அதுவும் கொம்பில்லாத மாடு. ஆனால் ஒருமுறை கொம்பில்லாத பசுமாடே என்னை முட்டி இருக்கு! :) நல்லவேளை தப்பிச்சுட்டீங்க. எனக்குப் போனது போனது தான். 300 ரூபாய் 81 ஆம் வருஷம். அப்போ அது பெரிய தொகை! :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சில நேரங்களில் சில்லறைகளை சிதற விட்ட அனுபவம் உண்டு
மாடு கொஞ்சம் மனிதனாகவும் இருந்திருக்கிறான்

சென்னை பித்தன் said...

மாடு முட்டாமல் போனது மகிழ்ச்சியே!
அருமை

புலவர் இராமாநுசம் said...

மறக்க முடியாத அனுபவம்!

Kalayarassy G said...

பணத்தை அவனிடம் இழந்துவிட்டுத் தான் வருவீர்கள் என நினைத்தால், முடிவு ஆச்சரியமாயிருக்கிறதே! அவனுள்ளும் மனிதம் இருக்கின்றது! மறக்கமுடியாத அனுபவம் தான்.

கார்த்திக் சரவணன் said...

என்னன்னவோ நடக்கப்போகுதுன்னு நினைச்சிட்டேன்....

Ranjani Narayanan said...

அது உண்மையில் உங்கள் பணம். அதுதான் திரும்பி வந்திருக்கிறது. சின்னக் கதையில் நெஞ்சைத் துடிக்க வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்!

Bagawanjee KA said...

உழைச்ச காசு ,அதான் வந்துட்டது :)

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பரவாயில்லையே, கொடுத்துட்டாரே..நல்ல மனுஷன் தான்

ஸ்ரீராம். said...

நன்றி ரமணி ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி காமாட்சி அம்மா..

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.

ஸ்ரீராம். said...

மிக இலேஸாக கற்பனை கலந்தது. நன்றி நெல்லைத் தமிழன்.

ஸ்ரீராம். said...

நன்றி DD.

ஸ்ரீராம். said...

நன்றி துளசிஜி.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி கீதா.

ஸ்ரீராம். said...

நன்றி ஊமைக்கனவுகள்.

ஸ்ரீராம். said...

நன்றி 'தளிர்' சுரேஷ்.

ஸ்ரீராம். said...

மிக இலேஸாகக் கற்பனை கலந்த அனுபவம். நன்றி வெங்கட்.

ஸ்ரீராம். said...

கொஞ்சம் கற்பனை, நிறைய உண்மை. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

ஸ்ரீராம். said...

நன்றி கீதா மேடம்.

ஸ்ரீராம். said...

பார்க்கக் கரடுமுரடாக இருக்கும் நிறைய பேர்கன் மென்மையான குணமுடையவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நன்றி டி என் எம்.

ஸ்ரீராம். said...

நன்றி சென்னை பித்தன் ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி புலவர் ஐயா.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி கலையரசி.

ஸ்ரீராம். said...

:))))

நன்றி கார்த்திக் சரவணன்.

ஸ்ரீராம். said...

நன்றி ரஞ்சனி மேடம்.

ஸ்ரீராம். said...

நன்றி பகவான்ஜி.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ்.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!