ஞாயிறு, 12 ஜூலை, 2015

ஞாயிறு 314 :: யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்?

                                 
                                                      

14 கருத்துகள்:

 1. அந்த நேரம் யாரானும் சாப்பாடு கொடுத்திருப்பாங்க. அதை எதிர்பார்க்குதுங்களோ என்னமோ!

  பதிலளிநீக்கு
 2. எங்கே அவரைக் காணாம்...? ஞாயிறு என்பதால் நடைப்பயிற்சிக்கு விடுமுறையா...?

  பதிலளிநீக்கு
 3. சாப்பாட்டுக்கு ஏங்கிற
  ஆள்களாகத் தெரியவில்லை
  யாரையோ குறிவைத்து
  கடித்துக்குதறக் காத்திருக்கிறார்கள் போலும்

  பதிலளிநீக்கு
 4. படம் மிக அழகு! முகத்தை எடுக்க முடியலையோ...அப்ப தெரிஞ்சுருக்கும் எதுக்காகனு...ஹஹ

  என்ன ஒண்ணு சாப்பாட்டுக்கா இருக்கலாம் ஆனா இது அப்படியும் தெரியலை...கொஞ்ச நேரம் முன்னாடி ஏதாவது அந்த ஏரியா இல்லாத நாய் ஏதாவது வந்திருந்து துரத்திருப்பாங்க....அது திரும்ப இங்க வருதானு பார்த்துட்டுருப்பாங்க....இல்லைனா இவங்க அட்டென்ஷன் ஈர்க்கற ஏதோ ஒண்ணு அந்தப்பக்கம் இருக்கு/நடக்குது....ஆனா அது இன்னும் ரொம்ப ஈர்க்கல...ஒரு எதிர்ப்பார்ப்பு..ஈர்த்திருந்தா எல்லாத்துக்கும் காது நல்ல விறைப்பா நிமிர்ந்து இருக்கும்.....இல்லநா இதுங்க எல்லாம் ஆண் என்றால் அங்க பொண்ணு (நாலுகால் தாங்க...நாய் தான்) ஏதானும் சுத்திக்கிட்டுருக்குமா இருக்கும்....

  பதிலளிநீக்கு
 5. அவங்க நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் விதம் அங்க ஏதோ ஒண்ணு இவங்க அட்டென்ஷன ஈர்க்குது.....சாப்பாடுனா எழுந்து நின்னு வால் உயர்ந்திருக்கும்...

  பதிலளிநீக்கு
 6. அதானே?.. வியூகம் அமைச்சிருக்கிறதைப்பார்த்தா வில்லங்கமாத்தான் இருக்கு :-)

  பதிலளிநீக்கு
 7. அப்பாதுரை சார் எங்க கமெண்டுக்கு பதில் போட வில்லையே என்று
  அழாக்குறையா நிற்கிறதோ !!


  காவியக் கவி பாபா பாடல் வியாழன் அன்று வரவில்லையே என்று ஏங்கி நிற்கிறதோ !!

  உமையாளின் பதிவு சொல்லும் ஓட்ஸ் சப்பாத்தி இன்னும் கிடைக்குமோ என்ற ஏக்கமோ !!

  கீதா சாம்பசிவம் அவர்கள் ரங்கன் கதை சொல்லப்போகிறார் என்று காத்து நிற்கிறதோ !!

  துளசிதரன் வந்தா அடுத்த குரும்படத்துக்காவது எங்களுக்கு சான்ஸ் தரக்கூடாதா என்று கெஞ்சு கிறதோ ?

  ராமலக்ஷ்மி கேமரா வரும் நமது போட்டோ வும் ப்ளிகரில் வரும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறதோ ?

  திண்டுக்கல் திருக்குறளில் அடுத்தது என்ன சொல்லப்போகிறார் ? என்று கலந்துரையாடுகிறதோ ?

  என்னது நம்மைப் பார்த்தா மத்தவங்களைக் கடிப்ப்வங்க என்றே சொல்றாரே , இவர் மட்டும் இன்னிக்கு வரட்டும் என்று அந்த காசிராஜ லிங்கத்துக்காக காத்து நிற்கிறதோ ?

  நாங்க பாட்டுலே நின்னுட்டு இருக்கோம்.
  தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்

  அப்படின்னு நாங்க பாடிட்டு இருக்கோம் அவ்வளவு தான்

  அப்படின்னு அந்த ஸ்ரீராம் அண்ணன் கிட்டே சொல்லி நாளைக்கு திங்க அப்படின்னு எதுனாச்சும் போடுவாரு. அத இன்னிக்கே போடச் சொல்லுங்க.

  சுப்பு தாத்தா.
  தாத்தாவுக்கு நாய் என்றாலே அலர்ஜி. அதுவும் பெடிக்ரீ நாய்கள் மேலே பல மடங்கு அலர்ஜி.

  பதிலளிநீக்கு
 8. எதிரே வருவது நாய் வண்டியா என்னும் சந்தேகத்துடனா....?

  பதிலளிநீக்கு
 9. யாரை எதிர்பார்த்து இந்த காத்திருப்பு.... அவற்றுக்கே வெளிச்சம்!

  த.ம. 5

  பதிலளிநீக்கு
 10. ஆடி மாசம் ஆரம்பிச்சிருச்சு இல்லே இனிமே இப்படித்தான்!

  பதிலளிநீக்கு
 11. நாக்கை தொங்கப் போட்டு நாய்ங்க அலையுதுங்க ,ஏன்னுதான் எல்லோருக்கும் தெரியுமே:)

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  ஐயா

  கற்பனை பன்னி கவி எழுத அருமையான பாடம்.. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. தெரு நாய்களுக்கு யாராகிலும் எதிர்ப்புக் குரல் எழுப்பக் கூடாதா? அவைகளைக் கடந்துசெல்லும்வரை நெஞ்சு 'பட பட'தான்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!