1960 களில் அமுத சுரபியில் வந்த சமையல் குறிப்பு! சொஜ்ஜி என்பதில் வரும் 'சொ' எனும் எழுத்து, 'ஸ'
என்ற எழுத்தைக் கொண்டு வரவேண்டும். ஆனால் எவ்வளவு முயற்சித்தாலும் அந்த
எழுத்தில் நெடில் 'ஸோ' தான் வருகிறது. என் செய்வேன்? என் செய்வேன்?
பிறகு செல்ஃபோனில் டைப் செய்து அந்த எழுத்தைக் காபி செய்து டிராப்டில் போட்டுக் கொண்டு, அதைக் காபி செய்து இங்கு இட்டு நிரப்பியிருக்கிறேன்!
சரி போகட்டும்.. இனி ரெசிப்பி! புத்தகத்தில் இருந்தபடியே...
[பாவம் நீங்க... வெங்கலப்பானைக்கும், ஈயம் பூசின தவலைக்கும் எங்க போவீங்களோ!]
அரிசி ஒரு படி , பயற்றம் பருப்பு ஒரு படி, இவ்விரண்டையும் தனித்தனியே வறுத்து ஒன்றாய்க் கலந்து வைத்துக் கொள்ள வேண்டியது.
அரிசி ஒரு படி , பயற்றம் பருப்பு ஒரு படி, இவ்விரண்டையும் தனித்தனியே வறுத்து ஒன்றாய்க் கலந்து வைத்துக் கொள்ள வேண்டியது.
தேங்காய்த் துருவல் பத்து பலம் அம்மியில் போட்டு கொஞ்சம் ஜலத்தைத் தெளித்துக்கொண்டு, வெண்ணெய் போலரைத்து இரண்டு படி ஜலத்தில் கரைத்து, வடிகட்டிச் சக்கையைப் பிழிந்தெறிந்து விட்டு, தேங்காய்ப் பாலை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நெய் 3 பலம் - இதை 5 படி ஜலம் கொத்திக்கிற வெங்கலப்பானை அல்லது ஈயம் பூசின தவலையில் விட்டுக் காய்ச்சி, அது காய்ந்த உடனே,
மிளகாய் அரை பலம், உளுத்தம் பருப்பு அரை பலம், கடுகு அரை பலம் இவைகளைக் காய்ந்து கொண்டிருக்கும் நெய்யில் தாளிதம் செய்துகொண்டு,
கரிவேப்பிலை அரை பலம் தயாரான தாளிதத்தில் போட்டுத் தயாரான உடனே, அதாவது சடபடவென்ற சப்தம் நின்றவுடனே, மேலே சுத்தப்படுத்தி வைத்திருக்கும் தேங்காய்ப்பாலை அதில் கொட்டி,
மஞ்சள்பொடி அரை ஸ்பூன் தேங்காய்ப்
பாலில் போட்டு கொதிக்கத் தொடங்கிய உடன் தயாராக வைத்திருக்கும் அரிசி -
பருப்பின் கலப்பை செம்மையாய்க் களைந்து ஜலத்தை வடித்து விட்டு, கொதிக்கும்
தேங்காய்ப் பாலில் கொட்டி, கரண்டியினால் கிளறி விட்ட பிறகு, மேலோடு
பாத்திரத்தை மூடி வைக்க வேண்டியது.
அரைப்பலம் உப்பைப் பொடித்து, கொதித்துக் கொண்டிருக்கும் ஸொஜ்ஜியில் போட்டு நன்றாகக் கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி புகையாத தணலில் வைக்க வேண்டும்.
படங்கள் :: இணையம், இணையம், இணையம்தானுங்க!
எங்க வீட்டுல தேங்காப் பால் சேர்க்காம இதை உடைச்ச அரிசில செய்யறத ஸொஜ்ஜினுதான் சொல்லுவாங்க. அதாவது இந்த விரத நாள்ல அரிசு முழுசா சேர்க்காம உடைச்சு செய்யறதுனால....அக்சுவலா இது வெண்பொங்கல்.....இன்னும் வெங்கலப்பானை, ஈயப்பாத்திரம் இருக்கே. தேங்காப்பால் சேர்த்தும் எங்க வீட்டுல செய்யறதுண்டு.....ஒரு வேளை எங்க மாமியார் இந்த அமுதசுரபிலருந்துதான் கத்துக்கிட்டாங்காளோனு கேக்கணும்.. பானை எல்லாம் ஒகே இந்த "பலம்" என்றால் என்ன அளவு? படி என்றால் தெரியும்.
பதிலளிநீக்குஸொஜ்ஜின்னா நானும் கேஸரி என்றே நினைத்திருந்தேன்! நன்றி சகோதரி கீதா!
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுவா ஸொஜ்ஜி? வெண்பொங்கல்! அல்லது அரிசி உப்புமா, அல்லது கிச்சடி என்றெல்லாம் பெயர் உண்டு இதுக்கு. வெண்கலப்பானையில் தான் செய்யணும். இது அந்தக் கால மீனாக்ஷி அம்மாளோட சமையல் குறிப்பா? அதிலே தான் பலம் எல்லாம் வரும்.
பதிலளிநீக்குகீதா மேடம்! நான் என்ன செய்ய? அங்க அப்படித்தான் போட்டிருக்காய்ங்க! கடோசி படத்தப் பாத்தீங்க இல்லே....!
நீக்குஸொஜ்ஜி காரமும் உண்டுனு இன்னிக்குத் தான் தெரியும்.
பதிலளிநீக்குகீதா மேடம்... ஸொஜ்ஜின்னா கேஸரி மட்டுமில்லைன்னு எனக்கு இன்னிக்கிதான் தெரியும்!
நீக்குஆஹா....
பதிலளிநீக்குபொங்கல் செய்வோம்....இதை ஊருக்கு செல்லும் போது மாமியாரிடம் கேட்க வேண்டும் தெரியுமாவென?
பலம்... பலம்,,,தெளிவா சொன்னா நாம் அளந்து போட்டு செய்ய வசதியாக இருக்குமல்லவா சகோ...? :).
தெரிஞ்சுகிட்டா மறைக்கிறேன் சகோதரி உமையாள் காயத்ரி? நமக்கெல்லாம் என்ன தெரியும் சொல்லுங்க! அந்தக் காலத்து மனுஷங்கதானே சொல்லணும்?
நீக்குசொல்லியிருக்காங்க பாருங்க...!!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகணக்கு தப்பாப் போச்சு அதனால நீக்கினேன்.
பதிலளிநீக்கு8 பலம் = ஒரு சேர்
3 சேர் = ஒரு வீசை
ஒரு வீசை = 1 1/2 கிலோ
ஆக ஒரு பலம் என்பது சுமார் 50 கிராம் இருக்கலாம்.
என் நினைவுகள் தவறாக இருக்கலாம்.
நன்றி பழனி கந்தசாமி ஸார்.
நீக்குகீதா அம்மாவை ஏமாத்தமுடியாதாக்கும்... க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ஹிஹி...
பதிலளிநீக்குDD... அவிங்கள நான் ஏன் ஏமாத்தப் போறேன்?
நீக்கு:))))))
2கிராம் என்பது முக்கால் பலம்.45 கிராம் என்பது ஒன்றே கால் பலம் ஒரு பலம் என்பது சுமார் 3 ரூபாய் எடை 35 கிராம் வரும். அந்தக் கால கட்டத்தில் (வெள்ளி ரூபாய் என்பதை நினைவில் கொள்ளவும்.) ஒரு பவுண்டுக்கு அரைக்கிலோவுக்கும் குறைச்சுத் தான் வரும். ஏனெனில் இன்றளவும் யு.எஸ்ஸில் பவுண்டில் தான் அளவை. நம் எடையைக் கூடப் பவுண்டில் தான் குறிப்பிடுகிறார்கள். சுமார் 450 இல் இருந்து 475 கிராம் வரை ஒரு பவுண்டு என்று சொல்லலாம்.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம்.
நீக்குஒரு வீசைக்கு 40 பலம் வரும் இதையே சேர் கணக்கில் ஐந்து சேர் என்பார்கள். என் மாமியார் இந்த சேர் கணக்கை மனக்கணக்காகவே போடுவாங்க. ஒரு சேர் என்பது எட்டுபலம் அதாவது இப்போதைய கணக்கில் சுமார் 280 கிராம் வரும். தலை சுத்த ஆரம்பிச்சாச்சா?
பதிலளிநீக்குசேர்னா நாற்காலி இல்லைதானே..... !!!!! நன்றி கீதா மேடம்.
நீக்குஇந்த அளவைகள் எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட சரியான அளவுக்குறியீடுகள்.
பதிலளிநீக்குஓகே கீதா மேடம்.
நீக்குஇந்தக் குறிப்பு மீனாக்ஷி அம்மாளின் சமைத்துப்பார் 3 ஆம்பாகத்தில் வருதுனு நினைக்கிறேன். ஏனெனில் அது தான் என்னிடம் இல்லை. மத்த இரு பாகங்களிலும் எந்தப் பக்கம் எதுவரும்னு நல்லாவே தெரியும், :)
பதிலளிநீக்குஅந்தப் புத்தகம் என்னிடம் இல்லை கீதா மேடம்!
நீக்குஅதெல்லாம் சரி, அரிசி ஒரு படியும், பயத்தம்பருப்பு ஒரு படியும் போட்டுச் செய்து கல்யாணச் சமையலுக்கா? ஆழாக்கு அரிசி, ஒரு கைப்பிடிப்பயத்தம்பருப்புப் (அல்லது சரிக்குச் சரி) போட்டுச் செய்தாலே தாராளமாக 3 பேர் சாப்பிடலாம். ஒரு படி பெரிய படியா? தஞ்சாவூர் சின்னப்படியா? எப்படியானாலும் பத்துப் பேருக்கும் மேலே சாப்பிட்டாகணும். இதுவரைக்கும் வந்திருக்கிறவங்களைப் பார்த்தால் அத்தனை பேராத் தெரியலையே! :))))
பதிலளிநீக்குஎன்னைக் கேட்டா நான் என்ன சொல்வேன் கீதா மேடம்? அந்தக் காலத்துல தெருவுக்கே சமைப்பாங்க போல!
நீக்குஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
பதிலளிநீக்குமூன்று தோலா ஒரு பலம்.
எட்டு பலம் ஒரு சேர்
அஞ்சு சேர் ஒரு வீசை.
எட்டு வீசை. ஒரு மணங்கு
இருபது மணங்கு ஒரு பாரம்
ஒரு பலம் = 35 கிராம்
ஒரு வீசை = 1400 கிராம்
நன்றி கே ஜி ஜி!
நீக்கு:)))))
போட்டிக்கு வந்துட்டாங்கப்பா! :) முன்னெல்லாம் வெள்ளி ஒரு ரூபாய் எடைக்குத் தான் விற்றுக் கொண்டிருந்தது. ரூபாய் எடை வெள்ளிஐந்து ரூபாய், பத்து ரூபாய்னு சொல்வாங்க. அப்புறமாத் தான் எழுபதுகளுக்கு அப்புறமா, இந்தக் கிலோ, கிராம் கணக்கில் வந்தது.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம்.
நீக்குஒரு விஷயம் மறந்துட்டேனே! இங்கே தேங்காய்ப் பாலில் வெண்பொங்கல்/ ஸொஜ்ஜி (க்ர்ர்ர்) செய்திருக்கிற மாதிரி நான் பசும்பாலில் இம்மாதிரி அரிசி, பருப்பை வறுத்துக் கொண்டு கரைய விட்டுக் குழைய வேக வைத்துத் தான் இன்றும் பண்ணுகிறேன். :)
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம்.
நீக்குபடிக்கும்போதே சாப்பிடத் தூண்டுகிறது
பதிலளிநீக்குதம +1
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குஎங்க மாமியார்னு முதல் பின்னூட்டம் நான் கீதா...அங்க பேர் போட மறந்துவிட்டேன்...நடுல கரண்ட்ட் வேற போயிடுச்சு ....இப்போதான் பார்த்தேன் ...
பதிலளிநீக்குகீதாசாம்பசிவம் சகோதரி சொந்னது போல பால்ல வேகவைச்சு செய்யறதுண்டு....அளவு ரொம்ப தலை சுத்துது....ஆழாக்குனு இல்ல க்ராம்ல சொன்னாதான் புரியும் எங்க தலை முறைக்கு...என்ன செய்ய..
சொஜ்ஜி என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்துல அரிசியை ரவை போல உடைச்சு செய்வதைச் சொல்லுவதுண்டு...(சொஜ்ஜி அப்பம் வேறு) ஆனா அரிசின்னுதான் சொல்லிருக்காங்க...இது அரிசி உப்புமா, வெண்பொங்கல் கலந்து கட்டினது போல் உள்ளது...இல்லையோ
கீதா
நன்றி சகோதரி கீதா.
நீக்குகார சொஜ்ஜியோ! ஒரு வேளை ஸொஜ்ஜி என்பதற்கு ரவை என்ற பொருள் இருப்பதால் இப்படி எழுதி இருக்கிறார்களோ என்னவோ? என்.எச். எம் ரைட்டர் உபயோகத்து பாருங்கள் டைப் செய்ய எளிதாக இருக்கும்.
பதிலளிநீக்குநன்றி தளிர் சுரேஷ்.
நீக்குகேசரியைத்தானே சொஜ்ஜி என்று சொல்வார்கள்;அந்தக்காலத்தில் பெண்பார்க்கப் போகும்போது சொஜ்ஜி,பஜ்ஜி கண்டிப்பாக உண்டு!ஸொஜ்ஜியையே மைதாமாவுக்குள் வைத்துச் செய்வது ஸொஜ்ஜி அப்பம்..எங்கள் வீட்டில் சிராத்தத்தன்று செய்வது வழக்கம்!
பதிலளிநீக்குnhm writer தானே பயன்படுத்துகிறீர்கள்?(மேசைக் கணினி);
நன்றி சென்னை பித்தன் ஸார்.
நீக்குஸா வுக்கு இந்த சிரமம் ,சொஜ்ஜி செய்ய இன்னும் அதிகம் இருக்குமோ :)
பதிலளிநீக்குஆமாம், கஷ்டமான ரெஸிப்பிதான் இது பகவான் ஜி.
நீக்குபஜ்ஜி சொஜ்ஜி சூப்பர்ஜி
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும் சேர்த்தே நன்றி ரஹ்மான் ஜி.
நீக்குஸொஜ்ஜி சூப்பர் :) பட் ரிச் ஸொஜ்ஜியா இருக்கும்போல. :)
பதிலளிநீக்குஆமாம், நெய்யும் முந்திரியும் ரிச்சுக்கு பலம் சேர்க்குதே தேனம்மை!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
செய்முறை விளக்கத்துடன்அசத்தியுள்ளீர்கள்வாழ்த்துக்கள் ஐயா த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
நீக்குஉப்புமாவைப் போய் ஸொஜ்ஜின்னுட்டு.. என்னங்க நீங்க..
பதிலளிநீக்குஅதுவும் இத்தனை 'பலமா'ன உப்புமாவை ..
நானா ஸொஜ்ஜின்னு சொல்லியிருக்கேன்? சாட்சியாக கீழே படம் வேற போட்டிருக்கேன். இது நியாயமே இல்லை அப்பாஜி.
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஅருமையான விளக்கம்! இதுவரை செய்ததில்லை.
'பலம்' விளக்கம் கண்டதால் செய்வது சுலபமாயிற்று.
பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!
நன்றி சகோதரி இளமதி. உங்கள் பின்னூட்டம் பலமளிக்கிறது. செஞ்சே பாத்துட்டீங்களா? அட!
நீக்குகார சொஜ்ஜி எனக்கு எனக்கு சேருமா..? அதாவது ஒத்துக் கொள்ளுமா என்பது தெரியவில்லை..
பதிலளிநீக்குகார சொஜ்ஜி எனக்கு எனக்கு சேருமா..? அதாவது ஒத்துக் கொள்ளுமா என்பது தெரியவில்லை..
பதிலளிநீக்குநான் ரொம்ப லேட்டா வரேன் இந்த எல்லா கணக்கிலும் ஒரு ரூபா எடை எதுக்கு ஸமானம். கேட்கவில்லையே! பதினாறு குந்துமணி எடை ஒரு ரூபாய்க்குச் ஸமானம். குன்றுமணியாயஹிந்தியில் ரத்தி என்பார்கள். ஒரு தோலா என்பது 11.5 கிராம். எனக்கு எப்படி தெரியுமா பவுனை தோலா கணக்கில் நேபாலில் சொல்லுவார்கள்.. ஒருதோலா சுத்த தங்கம் இதே மாதிரி கணக்குதான். பட்டினம்படி என்பது பெரியபடி. இரண்டு பலம் கிண்ணம் காச்சேர் கிண்ணம் என்று அளவு வைத்துக் கொண்டு அளப்பது வழக்கம். இது என்ன ஒரு தூக்கு என்பது ஒண்ணேகால் வீசை. இந்த நிறுத்தலளவு ஏன் ஒருவரும் குறிக்கவில்லை. அங்குலம் அடி,முழம்,கெஜம்,பர்லாங்,மைல் என்று நீட்டலளவை இருந்தது. பாட்டில்,காலன்,டின் என்று கிரஸினை அளந்தோம். தம்படி காலணா,அரையணா, ஒரு அணா சொன்னோம். அந்தகால கணக்கும் போட்டோம். ிந்தகால கணக்கும் போடுகிறோம். படி அளவு கொடுத்தாலென்ன பிடியளவு, சொட்டுஎ ண்ணெய் என்று மாற்றினால்ப் போகிறது. எதுவுமே கஷ்டமில்லை. நாங்களெல்லாம் எல்லாம் பார்த்தவர்கள். ஸ்டேட்டுக்கு ஸ்டேட் முகத்தளவுகூட மாறுபடும். போகட்டும். கிச்சடி தேங்கா்ப்பால் கிச்சடி தனி ருசிதான். அன்புடன்
பதிலளிநீக்குஇனிக்கிறது! எனக்கு ஆகாது!
பதிலளிநீக்குஆகக்கூடி ,சொஜ்ஜி,உப்புமா,பொங்கல்,கிச்சிடை எல்லாம் சாப்பிட்டாச்சு.
பதிலளிநீக்குதோலா பலம் எல்லாம் மீனாக்ஷி அம்மாள் லதான் வரும்.
அதுலசமையல் கற்றவர்கள் எங்கல் தலைமுறைகளில்
அதிகம். நன்றீ. ஸ்ரீராம்.