அதிகமாக ஆள் நடமாட்டமில்லாத அந்தச் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தேன்.
கீழே ஒரு 50 ரூபாய் நோட்டும், அதற்குள் இரண்டு இருபது ரூபாய் நோட்டுகளும் பொதிந்தபடி கிடந்தது.
அதைக்
கையில் எடுத்துப் பார்த்து விட்டு கையில் வைத்துக் கொண்டு நடந்தவன் சற்று
தூரத்தில் ஒரு 5 ரூபாய் நோட்டு கிடந்ததைப் பார்த்தேன். என்னவோ தோன்ற
மேலும் பார்த்துக் கொண்டே நடந்ததில் இரண்டு, இரண்டு ரூபாய் நோட்டுகள்
கிடைக்கவும், என் எண்ணம் சரிதான் என்று புன்னகைத்தபடி மேலும்
சுற்றுமுற்றும் பார்த்தபடி சுற்றி வந்தேன்.
நிச்சயம் 100 ரூபாய் இருக்க வேண்டும். அந்த ஒரு ரூபாய் இங்குதான் எங்கோ கிடக்க வேண்டும்.
புற்களுக்கு நடுவே பார்த்த படி நடந்தேன். ஒரு யு டர்ன் அடித்து அடுத்த லேனில் பார்த்தபடி நடந்தேன்.
இவ்வளவு கிடைத்தது, அது கிடைக்காதா என்ன!
99
ரூபாய் இருக்கிறது என்றால், அந்த ஒரு ரூபாய் எங்கே? இங்கேதான் எங்கோ
கிடக்க வேண்டும்? மற்ற நோட்டுகள் 'சட்சட்'டெனக் கிடைத்தது போல இதுவும்
கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்பில் மீண்டும் மீண்டும் குனிந்து
பார்த்துக் கொண்டே நடந்தேன்.
கீழே கிடந்த சில சிறு குப்பைக் காகிதங்கள் கூட ஒரு ரூபாய் நோட்டோ என்று சந்தேகப் படவைத்து எடுத்துப் பார்க்கச் செய்தன.
அது கிடைக்காமல் திரும்பிச் செல்வதில் விருப்பமும் இல்லை. எனவே தேடிக் கொண்டே மீண்டும் ஒரு சுற்று வந்தபோது அவர் எதிர்ப்பட்டார்.
"என்ன தேடறீங்க?"
"ஒரு ரூபாய்!" சொல்லி விட்டு அவரைப் பார்த்தேன். அவரும் ஏதோ தேடிக் கொண்டிருந்தார்.
"நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?"
"99
ரூபாய் சட்டைப் பையில் வைத்திருந்தேன். பொடிமட்டை எடுத்தபோது
விழுந்திருக்க வேண்டும். அதைத்தான் தேடுகிறேன். ஒரு ரூபாய்க்கு வாங்கிய
பொடிமட்டைதான் சட்டைப்பையில் மிச்சம்" என்றார்.
கையில் வைத்திருந்த 99 ரூபாயை அவரிடம் சேர்த்து விட்டு என் வழி நடந்தேன்!
படங்கள் : இணையத்திலிருந்து.
சட்டென தப்பை உணரும் மனசு...!
பதிலளிநீக்குதொலைத்த(அ)வர் வரவில்லை என்றால்...?
தொலைத்தவர் வரவில்லை என்றால் ஒரு ரூபாய்க்காக அலைபாய்ந்து கொண்டேயிருந்திருப்பார் இவர்!!!
நீக்குநன்றி DD.
சூப்பர்...
பதிலளிநீக்குநன்றி கார்த்திக் சரவணன்.
நீக்குநல்ல வேளை, நீங்கள் ஒரு ரூபாயைத் தேடிக் கொண்டிருந்ததால் அவருக்கு 99 ரூபாய் கிடைத்தது.. :-)
பதிலளிநீக்குநன்றி சகோதரி தே.ம.த. கிரேஸ். அவர் மிக நல்லவர் போலும். அவர் தொலைத்த பணம் அவருக்குப் பத்திரமாகக் கிடைத்திருக்கிறதே....
நீக்கு99-Club...... இந்தப் பதிவைத் தான் அன்று சொன்னீர்கள் இல்லையா ஸ்ரீராம்....
பதிலளிநீக்குநல்ல வேளை தொலைத்தவர் வந்தார்.....
த.ம. 4
ஆம், இமைத்தான் உங்கள் பதிவில் சொல்லியிருந்தேன் வெங்கட். நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
நல்ல மனப்பாங்கு.. இப்படி திரும்பி கொடுக்கும் மனப்பாங்கு சிலருக்கு வராது... இயல்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
நீக்குToday morning, i was hearing a story of Lord Vishnu and Goddess Mahalakshmi speaking. Lord Vishnu said you give 1% satisfaction to the devotees and i will give 99% satisfaction.
பதிலளிநீக்குWhen the devotees got the 99% satisfaction, they still longed for something and when they received the 1% satisfaction, they started to cherish the 99%.
Here too the person with 1% and the person with 99% both were longing. When the person with 1rupee got the 99rupee he got fulfilled and the person having 99 rupee gave away the entire 100% he felt satisfied.
DD sir, if the lost person has not come, both will remain unsatisfied. I feel nature makes way for satisfying people.
சரியான விளக்கம். நன்றி நன்மனம்.
நீக்குநன்மனம் அதே நன்மனம் தான்! அருமையான விவரணை! இதிலே என் பதிவு ரொம்ப ஆன்மிகமாம்! சொல்றார்! :) இப்படி எல்லாம் எனக்கு எழுத வரலையேனு இருக்கு! :)
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம்.
நீக்குஎனக்கு நிறையத் தொலைந்தும் போயிருக்கு. கிடைச்சும் இருக்கு. கிடைச்சதை உரிமையானவர் கேட்கும்வரை வைத்திருந்து கொடுக்கலாம். வரவில்லை எனில்? கோயில் உண்டியல்களுக்குப் போயிடும். இங்கே 99 ரூபாய் கிடைச்சவருக்கு அந்த ஒரு ரூபாய் கிடைக்காததினால் ஏற்பட்ட சஞ்சலத்தை விட அதைத் திருப்பிக் கொடுத்ததில் ஏற்பட்டிருக்கும் சந்தோஷமும், மனத் திருப்தியும் ஈடு இணையில்லாமல் இருக்கும். மனமே நிறைவாகவும், அமைதியாகவும் இருக்கும்.
பதிலளிநீக்குநல்ல மனம் வாழ்க. நன்றி கீதா மேடம்.
நீக்கு" நன்மனம் said...
பதிலளிநீக்குToday morning, i was hearing a story of Lord Vishnu and Goddess Mahalakshmi speaking. Lord Vishnu said you give 1% satisfaction to the devotees and i will give 99% satisfaction.
When the devotees got the 99% satisfaction, they still longed for something and when they received the 1% satisfaction, they started to cherish the 99%.
Here too the person with 1% and the person with 99% both were longing. When the person with 1rupee got the 99rupee he got fulfilled and the person having 99 rupee gave away the entire 100% he felt satisfied.
DD sir, if the lost person has not come, both will remain unsatisfied. I feel nature makes way for satisfying people. "
'DD sir, if the lost person has not come, both will remain unsatisfied. I feel nature makes way for satisfying people. "
என்ன ஒரு அற்புதமான விளக்கம். வாழ்வின் உண்மையே இதுதான்.
நல்ல பதிவு.
God Bless You
நன்றி வெட்டிப்பேச்சு ஸார்.
நீக்குதொலைத்தவரிடம் எடுத்தவர் திருப்பிக் கொடுத்தால் ஏற்படும் மகிழ்வே அலாதிதான்!
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.
நீக்குஒரு ரூபாய் தேடிக் கொண்டிருந்தவர் 99 ரூபாயைக் கொடுத்து விடுகிறார் கதைக்கு நன்றாக இருக்கலாம் ஆனால் ......
பதிலளிநீக்குஅந்த நேரம் அப்படித்தான் கொடுக்கத் தோன்றும் ஜிஎம்பி ஸார். நன்றி.
நீக்கு//ஒரு ரூபாய் தேடிக் கொண்டிருந்தவர் 99 ரூபாயைக் கொடுத்து விடுகிறார் கதைக்கு நன்றாக இருக்கலாம் ஆனால் ..//
பதிலளிநீக்குதேடியவரைப் பார்க்கலைனா வேறு விதமாகப் போயிருக்கலாம். ஆனால் தேடுகிறவர் தான் பணத்துக்கு உரியவர் எனத் தெரிந்தால் கொடுப்பதே முறை! சாதாரணமாக யாரும் அப்படித் தான் செய்வார்கள். :)
ஆமாம் கீதா மேடம். நன்றி .
நீக்குSuper 99
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குIn the last two months, I have lost or misplaced
பதிலளிநீக்கு1. My newly bought cell Windows Lumia 532 model
2. cupboard keys
3. Sundaram Finance FD 50 k.
4. KMBF FD 20 k.
and finally, throughout last year,
I was keeping a list of
all missing items.
That list also I lost.
To post this in Tamil, I had to use my mouse for copy and paste. I lost it just a while ago.
My mother used to tell me:
Sury ! Even you apply castor oil throughout your body and roll on the roads, only that will stick which could stick . Not everything.
Pariyin paakavaam paaka alla, yuththuch choriyinum poka thama. said valluvan.
subbu thatha.
உங்க பக்கத்து வீடு காலியானா சொல்லுங்க சுப்பு தாத்தா... அங்க குடி வந்துடறேன்!!
நீக்குமனித மனம்!
பதிலளிநீக்குநன்றி சென்னை பித்தன் ஸார்.
நீக்குத ம 7
பதிலளிநீக்குதம வாக்குக்கு நன்றியோ நன்றி சென்னை பித்தன் ஸார்.
நீக்குசுக அனுபவம். சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது. ஒரு ரூபாய் தேடப்போகத்தான் விட்டவருக்கு முதல் கிடைத்தது. பொடிமட்டை சூ என்று தும்மியது. அன்புடன்
பதிலளிநீக்குஹா...ஹா....ஹா...
நீக்குநன்றி காமாட்சி அம்மா..
:)
பதிலளிநீக்குநன்றி தேனம்மை.
நீக்குஒரு ரூபாய் கிடைக்காததை விட, உரியவரிடம் பணத்தை சேர்த்தது நிம்மதியாக இருந்திருக்கும், இல்லையா? அப்பாடா!
பதிலளிநீக்குஉண்மைதான். நன்றி ரஞ்சனி மேடம்.
நீக்குஉங்கள் ஒரு ரூபாய் தேடலில் அவருக்கு தவறவிட்ட 99 ரூபாய் கிடைத்தது! அருமை!
பதிலளிநீக்குஆம். நன்றி சுரேஷ்.
நீக்கு' பொடி'வைத்து எழுதியுள்ளீர்கள் :)
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா...
நீக்குநன்றி பகவான் ஜி.
99 பொற்காசு கதை நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஅது என்ன கதை அப்பாஜி?
நீக்குபணத்தை விட்டவனும் தேட, கிடைத்ததை விடாதவனும் தேட....
பதிலளிநீக்குஉரியவர்க்கு கொடுத்தது சரியான மனிதம்,
நல்ல கதை.....
நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.
நீக்குதம 11
பதிலளிநீக்குதம வாக்குக்கு நன்றியோ நன்றி சகோ. உமையாள் காயத்ரி.
நீக்குஅடடா..அவ்வளுவு தங்க மனசா... அதான் தங்க விலை குறஞ்சிருக்கோ....
பதிலளிநீக்குஹா.... ஹா.... ஹா...
நீக்குநன்றி நண்பர் வலிப்போக்கன்.