வெள்ளி, 4 மே, 2018

வெள்ளி வீடியோ 180504 : முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்


1975 இல் வெளிவந்த இந்தப் படத்திலேயே ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்று சொல்லி இருந்தார்களாம்!  

படத்தின் பெயர் "யாருக்கும் வெட்கமில்லை".  சோ எழுதிய நாடகங்கள் அப்போது படமான காலம்.  இன்னொரு படம் 'உண்மையே உன் விலை என்ன?' அப்புறம்  'முகமது பின் துக்ளக்...'  'மிஸ்டர் சம்பத்' கூட சோ எழுதிய கதைதான்...

கதை வசனம் இயக்கம் எல்லாமே சோ.  இந்தப் படம் ரிலீஸானபோது முதல் முறை பார்க்கச் சென்றபோது டிக்கெட் கிடைக்கவில்லை.  ஹவுஸ்ஃபுல்!


இத்திரைப்படத்தில் வரும் இந்தப்பாடலைப் பாடியவர் கே ஜே யேசுதாஸ்.  கண்ணதாசன் பாடலுக்கு இசை ஜி கே வெங்கடேஷ்.


ஊருக்கும் வெட்கமில்லை 
இந்த உலகுக்கும் வெட்கமில்லை 
யாருக்கும் வெட்கமில்லை இதிலே 
அவளுக்கு வெட்கமென்ன...
ஏ சமுதாயமே..
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் 
நீ சொன்னால் காவியம் 
ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா 
குருடர்கள் உலகில் கண்களிலிருந்தால் அதுதான் தொல்லையடா 
அத்தனை பழமும் சொத்தைகள்தானே ஆண்டவன் படைப்பினிலே 
அத்திப்பழத்தைக் குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை 
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள் 
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள் 
சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில் 
மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்நினைக் காட்டுதடா 
எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள் 
இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள் 
அப்பன் தவறு பிள்ளைக்குத் தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை 
அத்தனை போரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை 
இப்போதிந்த உலகம் முழுதும் எவனுக்கும் வெட்கமில்லை 
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் 
எமனுக்கும் 
வெட்கமில்லை...



64 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆஹா நான் ஃபர்ஸ்டு என்று நினைத்தால் அதற்குள் கீதாக்கா வெங்கட்ஜி ஆஜர் வைச்சுட்டாங்களே எல்லோரும் 6 தான் காட்டுது நொடித்துளிகளில் லேட்டு நான்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கீதாக்கா காபி ஆத்தியாச்சா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நல்ல பாடல். கேட்டிருக்கிறேன். கருத்துள்ள பாடல்.

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம் கே ஜே இல்லையோ...ஜி என்று வந்திருக்கே ஏசுதாஸ் இனிசியல்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நாடகம் பார்த்திருக்கேன். நாடக விழா அம்பத்தூரில் எழுபதுகளீல் நடந்தது. அப்போ சோ வாரத்தில் இதையும் முகமது பின் துக்ளக் நாடகமும் போட்டார்கள். நாடகத்தில் சுகுமாரி என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. வாங்க கீதா அக்கா... முதல் ஆள்! குட் மார்னிங்.

    பதிலளிநீக்கு
  8. குட்மார்னிங் வெங்கட். அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான பாடல்.

    பதிலளிநீக்கு
  9. நாலு கருத்தும் ஆறு மணிக்கு காட்டுது. மைக்ரோ செகண்ட் வித்தியாசம் போல! ஹாஹா. 100 மிட்டர் ஓட்டப் பந்தயம் தோத்தது போங்க!

    பதிலளிநீக்கு
  10. குட்மார்னிங் கீதா ரெங்கன். கே ஜே தான். எங்கள் தளம் கே க்கு அடுத்தது ஜே அடித்தால் அது ஜி என்றே அடித்து விட்டது போல!!! திருத்தி விட்டேன்!

    பதிலளிநீக்கு
  11. ஏசுதாஸின் இளமைக் குரல் ஆஹா போட வைக்கிறது...இன்னும் முழுவதும் கேட்கலை...அருகில் TTD ஓடிக் கொண்டிருக்கு....11.30....12 வரை ஓடும்...ஹா ஹா ஹா எனவே அப்புறம் பாடல் கேட்கிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கீதா அக்கா.. நான் நாடகமாகப் பார்க்கவில்லை. படமாகத்தான்! அதுவும் முதல் முயற்சியில் கிடைக்காமல் இரண்டாவது முயற்சியில்... "என்னடா சிவாஜி, எம் ஜி ஆர் படங்கள் ஹவுஸ்ஃபுல் ஆகும்... இது கூடவா?" என்று அப்போது நினைத்துக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
  13. // 100 மிட்டர் ஓட்டப் பந்தயம் தோத்தது போங்க!//

    ஹா... ஹா... ஹா.. ஆமாம் வெங்கட்... இன்னும் துரை செல்வராஜூ ஸாரை வேற காணோமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...
      நம்மைப் பத்தியும் விசாரிச்சாச்சு!...

      ரெண்டு நாளா தூக்கம் இல்லை..

      அங்கே புடிச்ச ஓட்டம் இங்க வந்து தான் நின்னுருக்கேன்...

      வாழ்க நலம்...

      நீக்கு
  14. குட் மார்னிங் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  15. படத்தின் பெயர் என்ன ஸ்ரீராம்....யாருக்கும் வெட்கமில்லை என்பதா?

    வரிகள் அருமை ஆமாம் முதுகில் இருக்கும் அழுக்கைக் களையாமல் உலகம் ஆயிரம் பேசும்...

    இதில் ஜெயலலிதா என்றால் ஜெயலலிதாவைப் பற்றிய சாயலும் இருப்பது போல் இருக்கே வரிகள் சொல்லுவது...பானுக்கா சொல்லியிருந்த சிவசங்கரியின் கப்பல் பறவையில் ஜெயலலிதாவும் நண்பராக அதில் வரும் கதாபாத்திரம் சோவையும் மறைமுகமாகச் சொல்லுவதாகச் சொல்லப்பட்டது என்று சொல்லியிருந்தார். நானும் அக்கதை வாசித்தேன்...இப்போது அது நினைவுக்கு வந்தது இந்த வரிகளையும் இதில் ஜெஜெ நடித்திருக்கார் என்று நீங்கள் சொல்லியதும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நாலு கருத்தும் ஆறு மணிக்கு காட்டுது. மைக்ரோ செகண்ட் வித்தியாசம் போல! ஹாஹா. 100 மிட்டர் ஓட்டப் பந்தயம் தோத்தது போங்க!//

    அதே அதே வெங்கட்ஜி....இப்படிக் காலையில் கணிணியில் ஓடுவது நல்லாத்தான் இருக்கு...அதுவும் நான் தில்லியிலிருந்து சென்னைக்கு வேக வேகமாக ஏதோ அரசியல் வாதி போல ஓடி வந்து இங்கும் ஆஜர் வைத்துப் பேசிவிட்டு..மூச்சு வாங்குது.....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. படம் பெயர் யாருக்கும் வெட்கமில்லை. அதைச் சொல்ல மறந்து விட்டேனோ? நேற்று நீலத்திரைப்பிழை மிகவும்.... மி..........க........வு......ம் படுத்தி கணினி நிலையாக நிற்கவே நேரம் எடுத்து இந்தப் பதிவைத் தயார் செய்யவே கடும் சோதனையாகி விட்டது கீதா...

    பதிலளிநீக்கு
  18. // சிவசங்கரியின் கப்பல் பறவையில் ஜெயலலிதாவும் நண்பராக அதில் வரும் கதாபாத்திரம் சோவையும் மறைமுகமாகச் சொல்லுவதாகச் சொல்லப்பட்டது//

    நான் படித்ததில்லையே....சிவசங்கரி கதையும் படித்ததில்லை. பானு அக்கா எங்கே இதைச் சொல்லி இருந்தார்கள் என்றும் நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  19. // நான் தில்லியிலிருந்து சென்னைக்கு வேக வேகமாக ஏதோ அரசியல் வாதி போல ஓடி வந்து //

    ஹா... ஹா... ஹா... கீதா... எவ்வளவு சுலபம்!!!!!

    பதிலளிநீக்கு
  20. ஆமாம் ஸ்ரீராம் துரை அண்ணாவைக் காணலையே....எல்லோரும் முட்டி மோதியதில் அவருக்கு நுழைய முடியலையோ ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நித்ரா தேவி!...

      இவங்க எல்லாம் நல்லா தூங்குறதுக்கு அருள் செய்யம்மா!..

      சாமீ.. எபியேஸ்வரா!...
      எனக்கு மட்டும் சீக்கிரம் கதவு திறக்கணும்!...

      நீக்கு
  21. பானு அக்கா எங்கே இதைச் சொல்லி இருந்தார்கள் என்றும் நினைவில்லை.//

    எபி க்ரூப்பில் அன்று புத்தக வாசிப்பு நாள் என்று....

    கீதா

    பதிலளிநீக்கு
  22. // எபி க்ரூப்பில் அன்று புத்தக வாசிப்பு நாள் என்று....//

    ஓ... படத்தின் பெயரை பதிவினில் இணைத்து இன்னும் சில வரிகள் சேர்த்து விட்டேன்! நன்றி கீதா...

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீராம் கணினி மற்றும் கீ போர்ட் எழுத்துகளை மாற்றி அடிப்பது இங்கும் நடக்கும் ஹா ஹா ஹா அர்த்தமே சில சமயம் மாறிவிடும்...இங்கும் கீ போர்ட் கீஸ் ரொம்ப லூஸாக இருக்கு...இந்த லூஸாக என்பதை எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் கொள்ளலாம் ஹா ஹா ஹா ஹா...

    சோவின் நாடகங்கள் அப்போது வீடியோவாக நாடாவில் வந்ததை என் மைத்துனர் வாங்கி வைத்திருந்தார். நான் அப்போது திருமணமான புதிதில் இங்கு வரும் போது பார்த்திருக்கிறேன். முகமதுபின் துக்ளக் இப்போதும் பொருந்தும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  24. //'மிஸ்டர் சம்பத்' கூட சோ எழுதிய கதைதான்...// ஆங்கில நாவல் ஒன்றின் தழுவல் இல்லையோ?

    பதிலளிநீக்கு
  25. // ஆங்கில நாவல் ஒன்றின் தழுவல் இல்லையோ? //

    என்றுதான் ஞாபகம். ஆனால் சோ கோவாடிஸ் என்று ஒரு ஆங்கில நாடகமும் போட்டார்.

    பதிலளிநீக்கு
  26. எல்லோருக்கும் சாவகாசமா வணக்கம் தெரிவிச்சுக்கறேன். காபி, கஞ்சி எல்லாமும் முடிஞ்சது. இனி அன்றாட வேலையைக் கவனிக்கப் போகணும்.

    கோவாடிஸ் கதை வேறே, மிஸ்டர் சம்பத் கதை வேறே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கோவாடிஸ் கதை வேறே, மிஸ்டர் சம்பத் கதை வேறே //

      ரெண்டும் ஒண்ணுன்னு நான் சொல்லவில்லையேக்கா....!!

      நீக்கு
  27. 1975 லியே பாடல் வந்ததா. இந்த நாடகம் பார்த்திருக்கிறேன். அருமையான எழுத்தாளர் சோ.
    ஜெயலலிதா நடித்திருப்பது தெரியாது.
    பாடலும் இசையும்,குரலும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா... அப்பவே வெளிவந்த படம்தான்.

      நீக்கு
  28. நான் விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று ஜி

    பதிலளிநீக்கு
  29. அருமையான பாடல்
    என் விருப்பத்திற்குரியப் பாடல்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  30. நல்ல பாடல்.
    பாடல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. இன்றைய பாடல் பகிர்வு மிக அருமை. இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். சில சமயம் இந்தப் பாடல் எம்.எஸ்.வி அவர்களே பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்ததுண்டு. உங்கள் தலைப்பிலிருந்து (பாடலின் ஏதோ ஒரு வரியிலிருந்து) பாடலை அனுமானிக்க முடியவில்லை. என்னடா இந்த வாரமும் தெரியாத பாடலா என்றே நினைத்தேன்.

    நல்ல பாடல். பகிர்ந்த ஸ்ரீராமுக்குப் பாராட்டு

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம் - சோ கோவாடிஸ் என்று ஆங்கில நாடகமும் போட்டார் - இல்லை. சோ தமிழ் நாடகங்களை ஆங்கிலத் தலைப்பில் நடத்தினார். ஒரு தடவை அவ்வை சண்முகம் அவர்கள் மேடையில் அதிருப்தி தெரிவித்தபோது, சோ, வீம்புக்காக, அடுத்த நாடகத்துக்கு ஆங்கிலத் தலைப்பில்லை, லத்தீன் தலைப்பு என்று சொல்லி, 'கோவாடீஸ்' என்ற பெயரை மேடையிலேயே வெளியிட்டார். இதனைப் படித்திருக்கிறேன். இன்று கூகுள் செய்து கீழே உள்ளதை வெளியிடுகிறேன்.

    இது தினமலரில் வந்தது. நான் படித்தது வேறு புத்தகத்தில் என்று ஞாபகம் (சோவின் குமுதம் கட்டுரையிலா?)

    இஃப் ஐ கெட் இட் - என்கிற ஆங்கிலத் தலைப்பில் ஒரு தமிழ் நாடகத்தை நான் எழுதி அதை அரங்கேற்றினோம். நல்ல வரவேற்பு. அரங்கேறிய சில மாதங்களில் 25 முறை அந்த நாடகம் நிகழ்த்தப்பட்டது அப்போது ஒரு ரிக்கார்டு பிரேக். தொடர்ந்து "ஒய் நாட்?' "வெயிட் அண்ட் சீ', "வாட் ஃபார்' - என்று பல ஆங்கிலத் தலைப்புகளில் நாடகங்களைப் போட்டோம். எங்களுடைய நாடகத்திற்கு ஒருமுறை தலைமை தாங்க வநத மூத்த நாடகக்கலைஞரான டி.கே. சண்முகம் மேடையிலேயே சொன்னார். "இதென்ன தமிழ் நாடகங்களுக்கு ஆங்கிலத் தலைப்பு? இது சரியில்லை. சோ இதை மாற்றிக் கொள்ள வேண்டும்'.
    அவர் சொல்லி முடித்ததும் உடனடியாக அதற்கு ஏதாவது பேச வேண்டும் என்ற வேகத்தில் மைக்குக்கு முன்னால் போனேன்.
    "நான் இனி என்னுடைய நாடகத்திற்கு இங்கிலீஷில் தலைப்பு வைக்க மாட்டேன். எங்களுடைய அடுத்த நாடகத்திற்கு "கோவாடிஸ்'ன்னு லத்தீன் பெயரை வைச்சுடறேன். அப்படி வைத்தால் இவருக்குக் கோபம் இருக்காது'.
    சொல்லி முடித்ததும் ஒரே சிரிப்பு.

    பதிலளிநீக்கு
  33. எனது பதிவுகளில் சிலவற்றில் பகிர்ந்து உள்ளேன்...

    அருமையான பாடல்...

    பதிலளிநீக்கு
  34. அருமையான பாடல் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  35. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  36. எம் எஸ் வி பாடிய பல பாடல்கள் எனக்கும் பிடிக்கும் என்றாலும், இசை அமைப்பாளர்கள் தங்கள் அனுபவங்களை வைத்து இந்தப் பாடலை இவர் பாடினால் நன்றாயிருக்கும் என்று முடிவு செய்கிறார்கள் போலும். நாம் முதலில் இதைக் கேட்கிறோமோ அது பெஸ்ட் ஆகிவிடுகிறது. அது போல இந்தப் பாடலை எம் எஸ் வி பாடி இருந்தால் ரசித்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் நெல்லை!

    பதிலளிநீக்கு
  37. ஆம்.. தலைப்பு மட்டுமே வேறு மொழி. ஒத்துக்கொள்கிறேன் நெல்லை.

    பதிலளிநீக்கு
  38. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  39. ஹையோ ஸ்ரீராம் அருமையான பாடல்...வரிகள் பார்த்து முதலில் இந்தப்பாட்டாகத்தானா இருக்கும் என்று தோன்றியது....ஆம் இப்போது கேட்கும் போது அதே பாட்டு என்று தெரிந்துவிட்டது. நல்ல பாடல்....

    கீதா

    பதிலளிநீக்கு
  40. நல்ல பாடல். அதிகம் கேட்டதுண்டு அந்த நாட்களில். படமும் பார்த்த நினைவிருக்கிறது. படம் வந்த புதிதில் அல்ல. அதன் பின்னர். கல்லூரி படிக்கும் சமயத்தில். மதுரையில் இருந்த போது. ஆனால் இப்போது அத்தனை நினைவில்லை. பல படங்கள் பெயர் மறந்துவிடுகிறது இல்லை என்றால் பார்த்தது அதிகம் நினைவில்லை ஒரு சில படங்களைத் தவிர.

    இப்பாடலை மீண்டும் இலங்கை வானொலிக்குப் பிறகு இப்போது கேட்டேன். நன்றி ஸ்ரீராம் ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  41. யாருக்கும் வெட்கமில்லை என்னும் நல்ல படத்தில் வந்த நல்ல பாடல். இந்த படத்தில் நடிக்க முதலில் லக்ஷ்மி மியைத்தான் அணுகினார்களாம். அவர் கால்ஷீட் கிடைக்காததால் ஜெயலலிதா நடித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  42. // கோவாடிஸ் கதை வேறே, மிஸ்டர் சம்பத் கதை வேறே //

    ரெண்டும் ஒண்ணுன்னு நான் சொல்லவில்லையேக்கா....!!// கோவாடிஸ் தமிழ்நாடகம் அந்தக் காலக் கல்கியில் வந்ததுனு நினைக்கிறேன். இதைச் சொல்ல வந்துட்டு வேறே எதையோ சொல்லிட்டேன்.

    பதிலளிநீக்கு
  43. மிகவும் பிடித்த -
    இன்றளவும் மறக்காத பாடல்!...

    பதிலளிநீக்கு
  44. கேட்டிருக்கிறேன். கண்ணதாசன செம கடுப்பில் எழுதியிருக்கிறார் போலும். எக்கச்சக்கமான வசன வரிகள்.

    தமிழ் நாடகத்திற்கு சோவின் பங்களிப்புபற்றி புத்தகம் யாராவது எழுதினால் நல்லது. அவ்வளவு செய்திருக்கிறார் மனிதர். சிறந்த பத்திரிக்கையாளரும் கூட. அவருடைய ஆங்கில இதழான -சில மாதங்களே வந்த- Pickwick-ஐயும் அந்த நாட்களில் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் சகோதரரே

    நல்ல அர்த்தம் நிறைந்த பாடல். அடிக்கடி கேட்பதில்லை எனினும் கேட்டிருக்கிறேன் இந்த படம் பார்த்ததாக நினைவில்லை. சோ அவர்களின் திரைப்பட வசனங்கள் நன்றாகவிருக்கும். அனைத்தும் நகைச்சுவை கலந்த அரசியல் சார்ந்த வசனங்கள். அவரது நடிப்பையும் ரசிக்கலாம் முகமது பின் துக்ளக் பார்த்த நினைவு வருகிறது. பொதிகையில் என நினைக்கிறேன். அவரது நாடகங்கள் பிரிசித்தமானவை. அவரைப் பற்றி இன்று அறிவித்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  46. நன்றி துளஸிஜி. நேயர்களுக்கு தமிழ்ப்பாடல்களை நினைவு படுத்தி வழங்குகிறது எபி!

    பதிலளிநீக்கு
  47. பானுக்கா... அந்தத் தகவல் எனக்குப் புதுசு.

    பதிலளிநீக்கு
  48. //அங்கே புடிச்ச ஓட்டம் இங்க வந்து தான் நின்னுருக்கேன்...//

    துரை ஸார்... அக்கட தேசம் போயாச்சா?


    //நித்ரா தேவி!... இவங்க எல்லாம் நல்லா தூங்குறதுக்கு அருள் செய்யம்மா!..//

    ஹா... ஹா... ஹா...

    உங்களுக்கும் பிடித்த பாடல் என்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  49. வாங்க ஏகாந்தன் ஸார்.. வரிகள் சுமார்தான். ஆனாலும் நல்ல பாடல்! தமிழ் நாடகத்துக்கு சோவின் பங்களிப்பு பற்றி எழுதினால் பி ஹெச் டி கட்டுரை போல ஆகிவிடும்!

    பதிலளிநீக்கு
  50. நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். மு பி து நானும் பார்த்திருக்கிறேன். இதுவும், உ உ வி எ வும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  51. யாருக்கும் வெட்கமில்லை திரைப்படம் பார்த்த நினைவு இப்போது வந்து சென்றது. ஓரிடத்தில், எனக்கும் வெட்கமில்லை என்று சோ கூறியிருப்பார்.

    பதிலளிநீக்கு
  52. //நித்ரா தேவி!...

    இவங்க எல்லாம் நல்லா தூங்குறதுக்கு அருள் செய்யம்மா!..// அதான் இன்னிக்கு நாலே முக்காலுக்கேக் காஃபி ஆத்தியாச்சு! ஹெஹெஹெஹெஹெ!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!