வெள்ளி, 20 ஜூலை, 2018

வெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...



ஊரும் உறவும் -  1982 இல் வெளிவந்த சிவாஜி கணேசன் படம்.  இசை சங்கர் கணேஷ்.  ஏ வி எம் ராஜன் தயாரிப்பில் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம். 


படம் விரைவில் தியேட்டரை விட்டு ஓடிவிட்டது என்று நினைவு.  சத்தியமாக நான் இந்தப் படம் பார்க்கவில்லை.  ஆனால் இந்தப் பாடல் ரசித்து ரசித்து பலமுறை கேட்டிருக்கிறேன்.  கேட்டுக்கொண்டிருக்கிறேன்.



சங்கர் கணேஷ் இசையில் எஸ் பி பி க்கு ஒரு அருமையான பாடல் இந்தப் படத்தில்.  இதைத்தவிர வேறு நல்ல பாடல்கள் இந்தப் படத்தில் உண்டா என்று தெரியவில்லை.



வாணி ஜெயராமுடன் இணைந்து தேன்மழை பொழிந்திருக்கிறார் பாலு.



(இந்தப் பாடல் என்னைக் கவரவில்லை - நெல்லைத்தமிழன் -  கிர்ர்ர்ர்ர்...!)

காட்சியில் நிழல்கள் ரவியும் யாரோ ஒரு நடிகையும்!  பாடல் புலமைப்பித்தன் அல்லது வாலி அல்லது வைரமுத்து.



இந்தப் படத்துக்கு விவரங்கள் அளிக்கக் கூட யாரும் மெனக்கெடவில்லை.

இப்படிப்பட்ட ஒரு படத்திலிருந்து பாட்டா என்று நினைக்காதீர்கள்.  பாடலை ரசிக்கலாம்.  கட்டாயம் ரசிப்பீர்கள்.



முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி தொடங்கும் இடத்தில், இரண்டாவது சரணத்தில் குளு குளு குளு எனும் இடத்தில எல்லாம் மெல்லிய சிரிப்புடனும், பெரும்பாலும் குழைவான குரலுடனும் எஸ் பி பி க்கு இது ஒரு அருமையான பாடல்.




புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என 
பூவை இதழ் முத்துச் சிமிழ் சிமிழ் சிமிழ் என 
வந்தாள் காவடிச் சிந்தாள்..

கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என 
காதல் முகம் மதி  நிழல் நிழல் நிழல் என 
சொன்னான் காவியக் கண்ணான்..


பாவை இளமனம் சுகம் சுகம் சுகம் என 
நாளை ஒருதினம் வரும் வரும் வரும் என 

பார்த்தாள் கண் பூத்தாள் 
பார்த்தாள் பார்த்தகண் பூத்தாள்  

மோகம் எனும் கணை அணை அணை அணை என 
தியாகம் எனும் புனல் மழை மழை மழை என 

பொழிந்தான் தன்னை மறந்தான் 
பொழிந்தான் தியாகத்தில் நனைந்தான் 

வெள்ளை மல்லிகைகள் சிந்தும் புன்னகையில் 
விரகமும் தனிமையும் மறைத்திருந்தாள்  

வெள்ளை மல்லிகைகள் சிந்தும் புன்னகையில்  
இருவரும் உலகினை மறந்திருந்தார் 


தென்றல் நடந்தது சிலு சிலு சிலு என 
தேகம் குளிர்ந்தது குளு குளு குளு என 
மேகம் யாத்திரை போகும் 

கோடை கானலில் சிறு சிறு பனித்துளி 
பன்னீர் தெளித்தது குறு குறு எனும்படி 
கூவும் பஞ்சணை கூவும் 

அந்த வானிலவு இன்று தேனிலவு 
அழகிய ஒளி மழை அமுதங்களே 


அந்த வானிலவு இன்று தேனிலவு 
அழகிய ஒளி மழை அமுதங்களே 



66 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்!
    கீதா

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  5. இப்படி ஒரு படம் பேரு கூடக் கேட்டதில்லையே ஸ்ரீராம்...அதான் சொல்லிட்டீங்களே தியேட்டரை விட்டே ஓடிடிச்சுனு..அது சரி இத்தனை படங்கள் ல நடிக்கறவங்களுக்கு திரைப்படத் துறையிலேயே இருக்கறவங்களுக்கு ஒரு படம் எடுக்கும் போது கதை நல்லாருக்கா,,,இது போகுமா...மக்கள் பார்வையில் இது எப்படி வரும் என்று யோசிக்க மாட்டாங்களோ?

    இப்படியா படம் எடுத்துக் கையைக் கடித்துக் கொள்வது? ஒரு சில படங்கள் ரொம்பவே நல்லா எடுத்துருப்பாங்க ஆனா ஓடாது என்பது வேறு விஷயம்...ஆனா இப்படியான படங்கள்...நீங்க இங்க கொடுத்துருக்கற ஸ்டில் வைச்சு சொல்லறேன்..ஏன்னா நடிகர் நடிகைகளும் முக்கியமாச்சே...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பாடலில் இயற்கையை மட்டும் பார்க்கிறேன்...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்..
    காலச் சூழலில் மறந்து விட்டது..

    நினைவூட்டியதற்கு மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  8. // திரைப்படத் துறையிலேயே இருக்கறவங்களுக்கு ஒரு படம் எடுக்கும் போது கதை நல்லாருக்கா,,,இது போகுமா...மக்கள் பார்வையில் இது எப்படி வரும் என்று யோசிக்க மாட்டாங்களோ? //

    கீதா... ஒருவேளை வருமானவரிக் கணக்குக்கு படம் எடுத்தாங்களோ என்னவோ...!!!

    // பாடலில் இயற்கையை மட்டும் பார்க்கிறேன்...ஹிஹிஹிஹி//

    அபுரி!

    பதிலளிநீக்கு
  9. //இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்.. காலச் சூழலில் மறந்து விட்டது.. நினைவூட்டியதற்கு மகிழ்ச்சி... //

    நன்றி துரை செல்வராஜூ ஸார்.. நீங்கள் இந்தப் பாடலை அறிந்திருப்பதில்லை மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. இசை நல்லாருக்கு ஸ்ரீராம். மோகன ராகத்தில் ஆரம்பிக்கும் பாடல். இடையில் வேறு இடங்களில் சஞ்சரித்தாலும் மீண்டும் மோகனத்திற்கு வந்துவிடுகிறது...

    வழக்கமான சங்கர் கணேஷ் இசை ஸ்டார்ட்டிங்க் விட இதுல நல்ல மெலடி...

    இசையும் மெலடி....

    எஸ்பிபி வாய்ஸ் செம ...நல்ல மாடுலேஷன்...எஸ் நீங்க சொன்ன வரி செமையா இருக்கு அவரது அந்த ஃபீல்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. // இசை நல்லாருக்கு ஸ்ரீராம். மோகன ராகத்தில் ஆரம்பிக்கும் பாடல். இடையில் வேறு இடங்களில் சஞ்சரித்தாலும் மீண்டும் மோகனத்திற்கு வந்துவிடுகிறது...//

    நன்றி கீதா... அதற்குதான் கீதா வரணும்ங்கறது! இந்த இசைக்கோர்வைக்கு பெரும்பாலும் சங்கர் கணேஷ் இரட்டையர்களின் சங்கர் காரணமாக இருக்கக் கூடும். நான் சொன்ன இடங்களையும் ரசித்ததற்கு நன்றி. மறுபடி காட்சியைப் பார்க்காமல் பாடல் மட்டும் கேட்டுப்பாருங்களேன்...!

    பதிலளிநீக்கு
  12. அபுரி//

    ஸ்ரீராம் பாடல் காட்சினு வந்துருக்கணும்...ஹா ஹா ஹா காட்சியில் பேக் க்ரவுண்ட் அந்த இயற்கை மட்டும் பார்க்கிறேன்னு மத்தபடி ஹிஹிஹிஹி சொல்ல ஒன்னுமில்லை...அதனால அப்புறம் பாடல் மட்டும் கேட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. சங்கர் காரணமாக இருக்கக் கூடும்.//

    ஓஹோ...அவர் தனியா இசை போட்டிருக்காரோ?

    நான் சொன்ன இடங்களையும் ரசித்ததற்கு நன்றி. மறுபடி காட்சியைப் பார்க்காமல் பாடல் மட்டும் கேட்டுப்பாருங்களேன்...!//

    எஸ் மீண்டும் கேட்பேன் ஸ்ரீராம்...கேட்டுட்டு வரேன்....கடமைகள் முடிச்சுட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கீதா... ஒருவேளை வருமானவரிக் கணக்குக்கு படம் எடுத்தாங்களோ என்னவோ...!!!//

    ஓ! ஆமாம் அப்படி ஒன்னு இருக்குல்ல..!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. // ஸ்ரீராம் பாடல் காட்சினு வந்துருக்கணும்...ஹா ஹா ஹா காட்சியில் பேக் க்ரவுண்ட் அந்த இயற்கை மட்டும் பார்க்கிறேன்னு மத்தபடி ஹிஹிஹிஹி சொல்ல ஒன்னுமில்லை...அதனால அப்புறம் பாடல் மட்டும் கேட்டேன்...//

    ஹா... ஹா... ஹா... அபுரி புரியானது!!!!

    // ஓஹோ...அவர் தனியா இசை போட்டிருக்காரோ?//

    இல்லை கீதா.. சங்கர் கணேஷ் இரட்டையர்கள் அல்லவா? இருவரும் இணைந்துதானே இசை அமைத்திருக்கரியார்கள்!

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
  17. காலை வணக்கம் 🙏

    இந்தப் பாடல் இதுவரை கேட்டதில்லை.

    இப்படி எல்லாம் ஒரு படம் வந்தது தெரியாது......

    உங்கள் மூலம் தான் முதல் முறை பாடல் கேட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம் வெங்கட். முதல் முறை கேட்டீர்கள். பாடல் நன்றாக இருந்ததா என்று சொல்லவில்லையே...!

    பதிலளிநீக்கு
  19. @ Sriram:

    //..யாரோ ஒரு நடிகையும்! //

    க்ளாமர் இண்டஸ்ட்ரியில் நுழைந்தும் யாரோவாகவே இருந்துவிட்ட நடிகை! சினி ஸ்பெஷலிஸ்ட்டுக்கே புரியவில்லை என்றால்.. வேறேதும் சொல்வதற்கில்லை.

    //.. பாடல் புலமைப்பித்தன் அல்லது வாலி அல்லது வைரமுத்து! //

    - அல்லது கண்ணதாசன், அல்லது மருதகாசி அல்லது பாபநாசம் சிவன்..

    பதிலளிநீக்கு
  20. இல்லை கீதா.. சங்கர் கணேஷ் இரட்டையர்கள் அல்லவா? இருவரும் இணைந்துதானே இசை அமைத்திருக்கரியார்கள்!//

    ஆமாம் இரட்டையர்கள் என்பது தெரியும்...ஒரு வேளை சங்கர் மட்டும் போட்டிருப்பாரோனு...ஆனா நீங்க சொல்லிருக்காப்புல இசைக் கோர்வை சங்கர் பண்ணிருப்பாரா இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. படம் பார்த்ததில்லை... பாடல் நல்லாயிருக்கு...!

    பதிலளிநீக்கு
  22. பாடலாசிரியரை பாராட்ட வேண்டும் அழகிய வரிகள் பாடுபவர்களுக்கு நாக்கு சுளுக்கு எடுக்கும்.

    இப்படம் வந்த வேகத்தில் பறந்து விட்டது உண்மை

    பதிலளிநீக்கு
  23. பாடல் ராகத்தில் ஆரம்பித்து, மேல் சென்று தடுமாறி மீண்டும் ராகத்துக்குள் நுழைந்தது. தப்பித்தது.

    பதிலளிநீக்கு
  24. தமிழ் சிமிழ் குழல் நிழல் போன்றவார்த்தை அடுக்குகளே பாடலாகி இருக்கிறது பாடலைக் கேட்டதில்லை சுமார் ரகம்

    பதிலளிநீக்கு
  25. ஏகாந்தன் ஸார்..

    ////.. பாடல் புலமைப்பித்தன் அல்லது வாலி அல்லது வைரமுத்து! // - அல்லது கண்ணதாசன், அல்லது மருதகாசி அல்லது பாபநாசம் சிவன்..//

    ஹா... ஹா... ஹா... அப்படி இல்லை ஸார்... இந்த மூவர் மட்டும்தான் அந்தப் படத்துக்குப் பாடல் எழுதி உள்ளார்கள். அதுதான்...

    பதிலளிநீக்கு
  26. நன்றி கில்லர்ஜி. ஆமாம். பாடகர்கள் தங்கள் அனுபவத்தில் நன்றாய்ப் பாடி விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  27. ஏகாந்தன் ஸார்..

    //பாடல் ராகத்தில் ஆரம்பித்து, மேல் சென்று தடுமாறி மீண்டும் ராகத்துக்குள் நுழைந்தது. தப்பித்தது.//


    ஹா.. ஹா.. ஹா.. தடுமாறினாற்போல் எனக்குத் தெரியவில்லையே...!

    பதிலளிநீக்கு
  28. வாங்க ஜி எம் பி ஸார்..

    //பாடலைக் கேட்டதில்லை சுமார் ரகம்//

    அச்சச்சோ...!

    பதிலளிநீக்கு
  29. @ Sriram://..இந்த மூவர் மட்டும்தான் அந்தப் படத்துக்குப் பாடல் எழுதி உள்ளார்கள். அதுதான்//

    அப்படீன்னா சரி!

    பதிலளிநீக்கு
  30. இனிய பாடல் கேட்டேன் ரசித்தேன் நன்று

    பதிலளிநீக்கு
  31. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  32. படம் வந்தது தெரியாது, படம் பார்க்கவில்லை.
    பாடல் கேட்டு இருக்கிறேன்.
    பாலசுப்பிரமணியம் குரல் இனிமை.

    பதிலளிநீக்கு
  33. கடைசியிலே அந்த நடிகை யாருனு ஒருத்தருமே சொல்லலை போல் இருக்கே! ஆரம்ப கால சுமலதா ஜாடை! ஆனால் அவர் இல்லை! இந்த மாதிரிப் படமெல்லாம் வந்திருக்குனு சினிமா மன்னருக்குத் தான் தெரியும்! பாட்டும் அப்படியே! எனக்கு இப்படி எல்லாம் ஜிவாஜி நடிச்சிருக்கார்னு தெரியவே தெரியாத்! ஜிவாஜிக்கு ஜோடி யாரு? அம்பிகாவா? கே.ஆர்.விஜயாவா?

    பதிலளிநீக்கு
  34. கீதா அக்கா.. ஜிவாஜிக்கு ஜோடி கே ஆர் விஜயா. திரையில் நிழல்கள் ரவியுடன் தோன்றும் நடிகையின் பெயர் ரஞ்சனி. ஆனால் அவர் பின்னர் பாராவால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஞ்சனி அல்ல. குழப்ப வேண்டாமே என்று சொல்லவில்லை!

    பதிலளிநீக்கு
  35. முன்பு காதில் விழுந்த பாடலாகவும் இருக்கு.. விழாததாகவும் இருக்கு.. ஆனா பாடல் இம்முறை எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு... மியூசிக்கும் சரி, வசனங்களும் சரி அருமை...

    பதிலளிநீக்கு
  36. ஸ்ரீராம் ஒரு ஐடியா ஒண்டு உதிச்சுது ஜொள்ளட்டோ.. மனதில் தோன்றுவதை சொல்லாட்டில் எனக்கு ரீ குடிக்க முடியாதாக்கும்:). சும்மா சொல்கிறேன், மனதில் போட்டு வைத்து யோசிச்சுப் பாருங்கோ.

    என்னவெனில், இந்த வெள்ளிக்கிழமைப் பாடல் விளக்கமாக சொல்லி நீங்க வீடியோ போடுறீங்க, அதன் முடிவிலே “நேயர் விருப்பம்” என ஒவ்வொரு வெள்ளியும் ஒவ்வொருவரின் விருப்பப் பாடலையும் வீடியொ மட்டும் போட்டு விட்டால் இன்னும் நன்றாக இருக்குமே:).. நேயர்விருப்பத்தில் அவர்களைப் பேச விடக்கூடாது:)[ஹா ஹா ஹா இல்லை எனில் கீதா ஒரு பெரிய கதையே எழுதி அனுப்பிடுவா கர்ர்:))} விரும்பினால் பாடலை விரும்புவதற்கான ஓரிரு வரியில், காரணம் சொல்லலாம்:)).. இது இன்னும் இன்றஸ்ட்டாக இருக்கலாமோ?:)

    ஸ்ரீராமின் பதில்:
    லாமே:)..

    அதிராவின் பதில்:
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*67859402-:) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  37. எங்கே நெல்லைத்தமிழன் அண்ணாவை:))க் [ஹா ஹா ஹா] காணவில்லை?:) சுற்றுலா அல்லது குலதெய்வக் கோயிலுக்குப் போயிட்டாரோ.. ஜொள்ளவே இல்ல:))

    பதிலளிநீக்கு
  38. காலைல டாஷ்போர்டில் ஜிவாஜின்னு பேரை பார்த்திட்டு கொஞ்சம் லேட்டாதா போவோம்னு நினைச்சேன் :) ஹாஹாஹா நலல்வேலை அங்கிள் இல்லை பாட்டில்.
    இதுவரை கேட்டிராத பாடல் படமும்கூட :)

    உண்மையில் குழைந்து தேனாய் செல்கிறது எஸ்பிபி வாணிஜெயராம் குரல்களும்

    பதிலளிநீக்கு
  39. ஆவ் ஸ்பெல்லிங் மிஸ்டேக் //நல்ல வேளை //

    பதிலளிநீக்கு
  40. ஸ்ரீராம் கடைசியில் முடிக்கும் போது ஹம்மிங்க் முடிவுக்கு முன்னர் பாடல் வரிகள் முடியும் இடத்தில் முதல் வரியை செம சங்கதி கொடுத்திருக்கார்...அப்புறம் 4.06 என்று நினைக்கிறேன்..அந்த இடத்தில் எஸ்பிபி காவடி சிந்தாள்....இந்தச் சிந்தாள் செம சங்கதி...கொடுத்திருப்பார். அதே போல முதலில் பல்லவி பாடி முடித்து கடைசி லைனை இரண்டவது முறை பாடும் போதும் சிந்தாள் கமகம் அண்ட் சங்கதி.....அது போல பூத்தாள் ரெண்டாவது முறை சொல்லும் போதுஅழகு....இப்படி எண்டிங்க் வார்த்தைகளை செமையா..இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  41. ஹலோ அனுஸ்:)[ச் றீராமின் முறையில:)] பற்றிப் பேச வேண்டிய இடத்தில ஆரது “சங்கவி” அக்கா பற்றிப் பேசுறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவரின் மனம் நோகிடாது வெள்ளிக்கிழமையும் அதுவுமா?:)

    https://i.imgflip.com/u6gqs.jpg

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் சகோதரரே

    இந்தப் பாடல் படம் எதுவுமே கேள்விப்பட்டதில்லை. ஆனால் இப்போது கேட்டேன். எஸ். பியின் குரலுக்காக.. மிகவும் நன்றாக இருந்தது. பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  43. ஏஞ்சல் இன்னும் பூசாருக்கு வால்ல மணி கட்டலியா...இன்னா ஸவுன்ட் விட்டுப் போயிருககர்...அதென்ன பேசகூடாதது கீதா பெரிய கதையே எழுதிடுவார்னு...இப்ப பாருங்க உங்க கதையை கொஞ்சம் கீழ பாருங்க...பூஸாரே... ஹா ஹா ஹா ஹா https://i.ytimg.com/vi/NpGtEgqZDfY/hqdefault.jpg

    ஆரது “சங்கவி” அக்கா// பூஸார் பாட்டியேதான் கண்ணாடி போட்டு பாருங்கோ..https://i.pinimg.com/originals/57/5b/72/575b72b8a14f6a1c030f83a431645982.jpg..சங்கதி நாட் வி.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..சரி சங்கவினு தெரிஞ்சுச்சு ஆனா பல்லவி (பல்லவினு ஒரு ஆக்ட்ரஸ் இருந்தாங்க.) தெரியலை போல...ஹா ஹா ஹா ஹா ஹா...

    உங்கள மிரட்டி மரத்து மேல உக்கார வைச்சாச்சு நாங்க கன் நுக்கு எல்லாம் பயிப்பட மாட்டோமாக்கும் நாங்க யாரு https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ1R2Rf_IYcqlGISn2xRSJhWFBeFLR0yF604aJ3CkLZPTlWLnO0


    கீதா

    பதிலளிநீக்கு
  44. இந்தப் படம் பார்த்ததில்லை. படம் பற்றிக் கேள்விப்பட்டதுமில்லை. பாட்டு நன்றாக இருக்கிறது வரிகளும் அருமையாக எழுதபப்ட்டிருக்கிறது. ரசித்தேன் ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  45. //பாடல் ராகத்தில் ஆரம்பித்து, மேல் சென்று தடுமாறி மீண்டும் ராகத்துக்குள் நுழைந்தது. தப்பித்தது.//

    ஏகாந்தன் அண்ணா தடுமாற வில்லையே. நன்றாக இருக்கிறதே. மோஹனத்திலிருந்து கொஞ்சம் ஷிஃப்ட் ஆகுது. ஷிஃப்ட் ஆவது என்ன ராகம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...மீண்டும் மோகனம் ஸ்டார்ட்டிங்க் பல்லவிக்கு வந்துருது. இப்படி நிறைய பாடல்கள் ஒரு ராகத்தில் ஆரம்பித்து இடையில் வேறு ராகங்கள் ஷிஃப்ட் ஆகி வரும் (கர்நாடக சங்கீதத்தில் இது ஸ்வரபேதம்/ஸ்ருதி பேதம் என்ற இலகக்ணம்) கச்சேரிகளில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் இதை அருமையா செய்திருக்கார்...

    சினிமா பாடல்களில் ராகங்கள் மிக்ஸ் ஆவது வெகு சகஜம்...ராக இலக்கணம் எல்லாம் இல்லாததால்...ஃப்ரீ ஸ்டைல் எனலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  46. பாடல் மிக அழகு. நன்றி ஸ்ரீராம். எனக்கு சிவாஜி கே ஆர் விஜயா.
    நடிப்பு பிடிக்கும். மற்றதெல்லாம் ஒட்டவைத்தமாதிரி.
    இந்தப் பாடல் கேட்டதில்லை. வீடியோ பார்க்காமல் பாட்டுக் கேட்கலாம். வாணி ஸ்ரீ
    குரலும் , எஸ்பீ பீ குரலும் வெகு இசைவோடு இணைகின்றன.

    பதிலளிநீக்கு
  47. @கீதா: //..ராக இலக்கணம் எல்லாம் இல்லாததால்...ஃப்ரீ ஸ்டைல் எனலாம்...//

    ஃப்ரீஸ்டைல் ரெஸ்ட்லிங் போல் ஃப்ரீஸ்டைல் மியூஸிக்கா! தப்பில்லை. ராகஞானம் எனக்கில்லை. ராகங்கள் கலப்பதைப்பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறேன். யார் இதையெல்லாம் பார்க்கப்போகிறார்கள் என்கிற துணிச்சலில் மியூஸிக் டைரக்டர்கள் இஷ்டத்துக்கும் போட்டுவிட்டு, பிரபல பாடகரைவிட்டுப் பாடச் சொல்லிவிட்டால் போச்சு என்றிருப்பார்கள். பாடலும் ஹிட் ஆகிவிடும். தமிழ்நாட்டில் எல்லாமே ஹிட்டுதானே..

    எனினும், பாடல் ஒரு ரிதம் எடுத்து, இழந்து, மீண்டும் திரும்பியதாகத் தோன்றியது எனக்கு.

    மேலே பாருங்கள். வாணிஸ்ரீ குரலைப் புகழ்கிறார் வல்லிசிம்ஹன். இது ஃப்ரீஸ்டைல் கமெண்ட்டிங்!


    பதிலளிநீக்கு
  48. வாங்க அதிரா...

    உங்களுக்குப் பிடிச்சிருக்கா? வெரிகுட்!

    // “நேயர் விருப்பம்” என ஒவ்வொரு வெள்ளியும் ஒவ்வொருவரின் விருப்பப் பாடலையும் வீடியொ மட்டும் போட்டு விட்டால் இன்னும் நன்றாக இருக்குமே:). .//

    குமே...!

    யோ......... சிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  49. நெல்லைத்தமிழன் அண்ணா வருவார்... கவலைப்படாதீங்க அதிரா......

    பதிலளிநீக்கு
  50. வாங்க ஏஞ்சல்.. சிவாஜி படங்களில் எவ்வளவு நல்ல பாடல்கள் இருக்கின்றன... என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்!

    பாடலை நன்றாய் ரசித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க கீதா..

    நன்.....றாக ரசித்திருக்கிறீர்கள்.. அவர் ஒவ்வொரு முறை "புல்லாங்குழல்" சொல்லும்போதும் பாருங்கள். ச்சே.. கேளுங்கள். ஒருமுறை கூட குச்சி மாதிரி நீளமாய் சொல்லி இருக்க மாட்டார். அதிலேயே ஒரு கமக்கம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  52. அதிரா...

    // ஆரது “சங்கவி” அக்கா பற்றிப் பேசுறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

    சங்கவியா? அவர் எங்கு வந்தார் இங்கு?

    பதிலளிநீக்கு
  53. வாங்க கமலா சிஸ்டர்.. பாடலை ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  54. கீதா... நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க்கில் சங்கவி கண்ணில் படவில்லை. நலலவேளை!!!

    பதிலளிநீக்கு
  55. பாடலையும், வரிகளையும் ரசித்தமைக்கு நன்றி துளஸிஜி.

    பதிலளிநீக்கு
  56. வாங்க வல்லிம்மா... வாணிஸ்ரீ என்று சொல்வதை விட வாணி ஜி என்று சொல்லலாமோ!

    பதிலளிநீக்கு
  57. ஏகாந்தன் ஸார்..

    இசை அமைப்பாளர்கள் தெரிந்தேதான் ராகங்களை சுருதி பேதமோ, ராகபேதமோ செய்கிறார்கள். சில சமயங்களில் ஒரிஜினல் ராகத்திலிருந்து வேறு ராகம் போட்ட சம்பவமும் உண்டே... சிந்து பைரவியில் "மரிமரி நின்னே" பாடலின் ஒரிஜினல் ராகத்திலிருந்து மாற்றி சாரமதி ராகத்தில் இளையராஜா ப்ரமாதப்படுத்தி இருப்பாரே...

    // மேலே பாருங்கள். வாணிஸ்ரீ குரலைப் புகழ்கிறார் வல்லிசிம்ஹன். இது ஃப்ரீஸ்டைல் கமெண்ட்டிங்! //

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  58. @கீதா//

    ஹா ஹா ஹா அந்த கண்ணாடி போட்ட பூஸாரைப்பார்க்க *** ப்பாட்டி போலவே இருக்கே எதுக்கும் நெ.தமிழன் அண்ணா[ஹா ஹா ஹா ஆள் இல்லைத்தானே ஆசைக்கு கூப்பிட்டிடுவோம்ம்:)] வந்தால் கொன்ஃபோம் பண்ணுவார்ர்:)).

    கடசியில நிக்கிற பைரவருக்கு எதுக்கு நப்கின் கட்டிக் கிடகூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா கீதா.. இழுத்து பெல்ட்டும் போட்டு விட்டுக்கிடக்கே அது ஆராக இருக்குமெ அதிரா திங்கிங் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  59. //ஸ்ரீராம். said...
    வாங்க கமலா சிஸ்டர்.. பாடலை ரசித்தமைக்கு நன்றி.///

    ஆவ்வ்வ்வ்வ் ச் ரீராம்.. சே..சே.. ஸ்ரீராம் என் கட்சியில் சேர்ந்திட்டார்ர்... ஹா ஹா ஹா சிச்டர் எனும்போதும் ஒரு சந்தோசம் வருதெல்லோ?:)

    பதிலளிநீக்கு
  60. ஆவ்வ்வ்வ் நெல்லைத்தமிழன் அண்ணா:)) இப்போ ரெயினைப் பிடிக்க 50 மைல் வேகத்தில ஓடிக்கொண்டிருக்கிறார் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  61. 82இல் வந்த சிவாஜி படம் என்றவுடன் திறக்க பயமாக இருந்தது. அப்போதெல்லாம் சிவாஜி படம் என்றால் ரிவர்ஸில் ஓடுவேன்.
    பாடல் கேட்ட ஞாபகம் இருக்கிறது.
    சங்கர் கணேஷ் இசையா? இதே மெட்டில் ஹிந்தி பாடல் ஏதாவது வந்திருக்கும்,தேடித் பாருங்கள்.
    நடிகை கே.பாலசந்தரின் 'கல்கி'யில் நடித்த நடிகை போல இல்லை?

    பதிலளிநீக்கு
  62. நண்பரே பாடல் அருமையாக இருக்கிறது...!
    அழகு வரிகள்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!