வியாழன், 26 ஜூலை, 2018

டேஸ்ட் பாலன்ஸ் பண்ணியிருக்காங்க...


ரயிலிலோ, பஸ்ஸிலோ தெரியாத பயணிகளிடமிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்பார்கள்.  அருகில் யாராவது ஏதாவது சாப்பிட்டால் கூட நமக்கு டெம்ப்ட் ஆனாலும் கண்டுகொள்ளாதது போலத்தான் இருப்போம். 

ஆனால் என் மகன் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் சொன்ன ஒரு சம்பவம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.

மகன் சிறுதீனிப் பிரியன்.  அலுவலக பஸ்ஸில் ஏறுமுன் அலுவலகத்தில் இருக்கும் கடையிலிருந்து பஜ்ஜி வாங்கி கொண்டு பஸ்ஸில் ஏறியிருக்கிறான்.

நன்றி இணையம்...

சாப்பிடும்போது அருகில் இருந்தவர் (அவரும் இளைஞர்தான்.  ஆனால் திருமணமானவர் என்று பின்னர் அவர் அலைபேசியில் மனைவியுடன் பேசும்போது தெரிந்ததாம்) இவன் சாப்பிடுவதையே குழந்தை போலப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சங்கடப்பட்டு, பின்னர் "வேண்டுமா?" என்று கேட்டிருக்கிறான்.

முதலில் 'வேண்டாம்' என்று சொன்னாலும் அவர் பார்வை மாறாதிருந்திருக்கிறது!  பின்னர் "பயங்கர பசி வேற..  ரொம்ப டெம்ப்ட் ஆகிறது...  நான் ஒன்று எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி ஒன்று எடுத்துச் சாப்பிட்டிருக்கிறார்.  பின்னர் இவன் எடுத்துச் சாப்பிடுவதற்குள் இன்னும் ஒன்று.. "உங்களுக்கு இன்னொன்று இருக்கிறது உள்ளே" என்றாராம்.  'வாங்கி இருப்பது நான்..  எனக்கேவா?'  - மகனின் மைண்ட்வாய்ஸ்!

நன்றி இணையம் 

"நம்ம ஆபீஸ் கடையிலேயேவா இதெல்லாம் கிடைக்கிறது?' என்று கேட்டுக்கொண்டாராம்!

மகனால் சிரிப்பையும் அடக்க முடியவில்லையாம்.  I am a good eater you know..  என்றாராம்.  'சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன' என்று நினைத்துக் கொண்டானாம்.

அப்புறம் மனைவிக்கு அலைபேசி.. "நான் பயங்கர பசியோடு வந்து கொண்டிருக்கேன்..  நல்ல ஏதாவது ப்ரிப்பேர் பண்ணி வை" என்றாராம்.

"அவங்க Housewife ஆ பாஸ்?" என்று கேட்டானாம் மகன்.  "இல்ல பாஸ்..  அவங்களும் வொர்க் பண்றங்க..  முன்னாலேயே வந்துடுவாங்க" என்றாராம் அவர்.

மகனிடம் ஒரு பழக்கம் உண்டு.  அவன் அலுவலகத்தில் நடப்பது, நண்பர்களிடையே பேசுவது எல்லாவற்றையும் எங்கள் எல்லோரிடமும் ஷேர் செய்துகொண்டு விடுவான்.  அதைக் கவனிக்கா விட்டால் முணுக்கென்றும் பொசுக்கென்றும் கோபம் வரும்!

அவன் சொன்ன சம்பவம் கேட்டதும் எனக்கு ஒரு விளம்பரம் நினைவுக்கு வந்தது.  என்ன பொருளுக்கான விளம்பரம் என்று நினைவில்லை.  ஆனால் மறக்க முடியாத விளம்பரம்.

ஒருவர் உட்கார்ந்து நாற்காலியின் கைப்பிடியில் வைத்திருக்கும் பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.  திடீரென திரும்பிப் பார்க்கையில் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருக்கும் முதியவர் (?) ஒருவரும் அதிலிருந்து பிஸ்கட் (என்றுதான் நினைக்கிறேன்) எடுத்துச் சாப்பிடுவார்.  முதலில் இவர் முறைத்தாலும், பின்னர் போனால் போகட்டும் என்பதுபோல விட்டுவிட்டு, தொடர்ந்து பேப்பர் படிப்பார்.

மீண்டும் திரும்பிப் பார்க்கும்போதும் மறுபடி அவர் பிஸ்கட் எடுக்க இவருக்குக் கோபம் வந்துவிடும்.  அவரைக் கடுமையாக முறைப்பார்.  அவரும் திரும்பிப் பார்த்துப் புன்னகைப்பார்.  

அடுத்த முறையும் அவர் எடுக்கும்போது இவர் ஒரு கோபமான பார்வையுடன் சட்டென பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வேறு இருக்கைக்குப் போய்விடுவார்.....  

இதன் முடிவு உங்களுக்கும் தெரிந்திருக்கும்.  எனக்கு மிகவும் பிடித்த விளம்பரங்களில் ஒன்று அது.

கின்லே விளம்பரங்கள் மற்றும் வேறு சில விளம்பரங்கள் சும்மா அவர்கள் பொருட்களை கவர்ச்சியான பெண்கள் மூலமாக விளம்பரப்படுத்தாமல் அல்லது அசட்டு விளம்பரங்கள் மூலம் கடுப்பேற்றாமல் இதுபோல சுவாரஸ்யமான, நெகிழ்வான (ஹாவெல் விளம்பரம் போல) விளம்பரங்கள் மூலம் கவர்வார்கள்.

சமீபத்தில் ஒரு புடைவைக்கடை விளம்பரம் கூட மிகவும் கவர்ந்தது.  எடுத்துச் சேர்த்து வைக்கும் அளவு தகவல் களஞ்சியம்.  சேர்த்தும் வைத்திருக்கிறேன்.

சிரிக்க வைக்கும் விளம்பரம் ஒன்று...

வேதமும் விக்ஞானமும் (கவனிக்கவும் விஞ்ஞானமும் அல்ல, விக்ஞானமும்) கலந்திருக்காம்....  அது மட்டுமில்லை டேஸ்ட் வேற பாலன்ஸ் பண்ணியிருக்காங்களாம்.  விளம்பரங்கள் மக்களை எப்படி சென்று அடைகிறது பாருங்கள்..  ஒரு கடையில் நான் பொருள் வாங்க நிற்கையில் "வேதமும் விக்ஞானமும் கலந்த என்று வருமே...  அதைக் கொடுங்கள்" என்றே கேட்டு வாங்கிப் போனார் ஒருவர்.  இதில் வேதம் எங்கே இருந்து ஐயா வருகிறது?  வேதத்தைக் கேவலப்படுத்துகிறார்கள்!

இப்போதெல்லாம் குடும்பத்தலைவிகள், நடைபாதையில் அலுவலகம் செல்லும் யுவதிகள், வயதானவர்கள் எல்லாம் ஏதோ மானஸீகமாகப் பேசுவது போல விளம்பரங்கள் நிறையவே வருகின்றன..   ஆரம்பித்தவர்கள் என்னவோ (அதாவது சமீபத்தில்) வேதமும் விக்ஞானமும் காரர்கள்தான்!  வெவ்வேறு வகையில் ஏற்கெனவே நிறைய விளம்பரங்கள் இப்படி விட்டிருக்கிறார்கள்.  (கொஞ்சம் காதைக் கொண்டு வாருங்கள்...  வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம்.  எங்கள் வீட்டிலும் இப்போது அந்த  வேதமும் விக்ஞானமும் கலந்த பொருள் இருக்கிறது.  டேஸ்ட்டில் என்ன பாலன்ஸ் பண்ணி இருக்கிறார்கள் என்று பார்த்தால் காரம் தெரிகிறது.  அது பதஞ்சலியைப் பார்த்து செய்திருக்கிறார்கள் என்று தோன்றியது!)

என்ன விஷயம் என்றால்...  இந்த பாணியும் அப்படி ஒன்றும் புதிதல்ல...  பல வருடங்களுக்கு முன்னரே வந்த பாணிதான்!  ஒரு வயதான பெண்மணி "எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே ------------------- தான் குடிக்கிறேன்..." என்பார்...  கடைசியாக ஒரு குழந்தை "குடிக்க வேண்டாம்...  அப்படியே சாப்பிடுவேன்" என்று சொல்லும்.  இதுவும் என்ன விளம்பரம் என்று நான் சொல்ல வேண்டாம்.  சுசித்ரா சங்கர், ராஜு ரவி சுஜாதா எல்லோருக்கும் தெரியும்!

சரி..  அரட்டை நீண்டு விட்டது..  இதோடு இதை முடித்துக் கொள்கிறேன்!


=======================================================================================================

இப்போது எழுதியது...  சில புகைப்படங்களைப் பார்க்கும்போது தோன்றியது!


கவிதையில் 
அடங்குவதில்லை 
சில காட்சிகள்.
வர்ணனைகளில் சிக்குவதில்லை 
வார்த்தைகள் 
கண்களின் காட்சியை 
கவிதை வரிகளில் 
சொல்ல முடிவதில்லை.



=======================================================================================================

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க...!




==================================================================================================

அது ஒரு அக்னி நட்சத்திரக் காலம்!

        



===================================================================================================


இந்த வாரம் இது போதும்...   அடுத்த வாரம் பார்ப்போம்...  

130 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்💐💐💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே.... இனிய காலை வணக்கம் அனுராதா பிரேம்குமார்...

      நீக்கு
    2. நன்றி...இன்றைக்கு 6 மணிக்கு phone திறக்கும் போதே இங்கயும் காலை வணக்கம் சொல்ல தோணியது...

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  3. ஆகா..
    அத்தி பூத்தாற்போல்
    அனுராதாபிரேம்குமார்!....

    வருக.. வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜ் மற்றும் அனைவருக்கும்.
      அக்னி நட்சத்துக்கு நல்ல தீர்வு பானையில் பழம் சோறு.

      குழந்தைக் கிட்ட இருந்த பஜ்ஜியை எடுத்து சாப்பிட்ட பெரியவர்., கீழே கடையைப் பார்க்கச் சொல்லணும். அடுத்த தடவை ஏமாறாமல் இருக்கலாம்.

      நீக்கு
    2. இனிய மாலை / காலை வணக்கம் வல்லிம்மா...

      // குழந்தைக் கிட்ட இருந்த பஜ்ஜியை எடுத்து சாப்பிட்ட பெரியவர்., கீழே கடையைப் பார்க்கச் சொல்லணும். அடுத்த தடவை ஏமாறாமல் இருக்கலாம். //

      அம்மா இரண்டு விஷயங்களை ஒன்று சேர்த்து விட்டீர்கள்...

      ஹா... ஹா... ஹா...

      நீக்கு
    3. கில்லாடியா இருக்காரே இந்தச் சைனாக்காரர்.
      தமிழ் விளம்பரங்களைப் பார்த்து வெகு நாளாச்சு. ரொம்பப் பழசு ஐஸ்வர்யா ராய் ,ஆமிர்கானின்
      கோககொலா விளம்பரம்..
      அப்புறம் அந்த ப்ரு விளம்பரம்.அப்பா, பெண்,மாப்பிள்ளை என்று ஒன்று வரும்.


      சில விளம்பரங்கள் மனதை விட்டுப் போவதில்லை.

      நீக்கு
    4. வல்லிம்மா... 'ஆ அஹாஹஹா ஆஹா ஹா' என்ற லிரின் விளம்பரமும் (அந்த அழகி இல்லை), 'ஆரோக்ய வாழ்வுதனைக் காப்பது லைப்பாய் லைப்பாய் இருக்குமிடம் ஆரோக்யம் அவ்விடமே' விளம்பரமும் ஞாபகம் இருக்கா?

      அதை நம்பி இப்போ லிரில் சோப் வாங்கிப்பார்த்து ஏமாற்றமடைந்தேன். லைப்பாய் சோப் (அந்த வாசனைல) தேடித் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இப்போது உள்ள லைப்பாய் சோப்புகளெல்லாம் கெமிக்கல் துண்டுகளாயிருக்கு.

      நீக்கு
    5. அன்பு நெ.தமிழன்,
      லைஃப் பாய் வந்த புதிதில் நன்றாகவே இருந்தது. லிரிலு
      ம் அப்படியே. எல்லாம் மாறியாச்சு. ஓல்ட் சிந்தால் சிம்மு உபயோகிப்பார். ஓல்ட்ஸ்பைஸ் லோஷன்
      எல்லாம் ஒரிஜினல் scent இல்லை.
      என் மைசூர் சாண்டல் பரவாயில்லை. மணமாகத்தான் இருக்கு.

      நீக்கு
  4. அனுராதா முதல் வருகையால்
    பிரகாசம் ஆகட்டும் ஜோதி!...

    ஏற்கனவே கடைசி படம்
    ஜகஜ்ஜோதியா இருக்கு!..

    இதுல இன்னொரு ஜோதியா?..

    அது சரி... யாருங்க அந்தப் பிரகாசம்!...

    பிரகாசமா?...
    ஆள உடுங்கப்பா!...
    வேலை கெடக்கு அங்கே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அது சரி... யாருங்க அந்தப் பிரகாசம்!...

      பிரகாசமா?...
      ஆள உடுங்கப்பா!...
      வேலை கெடக்கு அங்கே!.. //

      புதிர்! எனக்கே புதிராக இருக்கிறது!

      நீக்கு
    2. ஆமா யாரந்த பிரகாசம்..

      பிரேம்குமார் தெரியும் என்ற ஊட்டுக்கார் ...வேற யாரையும் தெரியாது பா..

      நீக்கு
  5. விக்யான் என்பதே சரியான உச்சரிப்பு. க்+ஞ சேர்ந்து வரும் வடமொழி, ஹிந்தி உச்சரிப்பு அவ்வாறே வரும். திருமதி எம்.எஸ். அவர்கள் உச்சரிப்பைக் கவனிங்க. தமிழ்லே மாறி வரும் உச்சரிப்பு. சமயங்களில் பொருளும்/அர்த்தம் மாறும். தமிழ் கம்பீரம் கொடுக்கும் அர்த்தம் ஹிந்தி கம்பீர் கொடுக்காது. ஹிந்தியில் கம்பீர் எனில் சீரியஸா என்னும் பொருள். தமிழ் கம்பீரம் என்றாலே எல்லோருக்கும் ஜிவாஜி நடை தான் நினைவுக்கு வரும். இது மாதிரி எத்தனையோ இருக்கு. உச்சரிக்கையில் விக்ஞான் என வரும்படி உச்சரிக்கணும். கம்பீரமாகச் சொன்னான் என்பதைத் தமிழில் அர்த்தப் படுத்திக்கிறாப்போல் ஹிந்தியில் அர்த்தப்படுத்திக்க முடியாது. தீவிர சிந்தனைக்கு கம்பீர் என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி நிறைய இருக்கின்றன. இப்போ சட்டுனு நினைவில் வரலை!

      நீக்கு
    2. தமிழில் "ஞ" என்னும் உச்சரிப்பைப் பயன்படுத்தும் இடங்கள் எல்லாம் க்+ஞ என்றே வரும்.

      நீக்கு
    3. // உச்சரிக்கையில் விக்ஞான் என வரும்படி உச்சரிக்கணும்.//

      சரி கீதாக்கா.. இங்கே அர்த்தம் மாறி வருகிறதா? அதே அர்த்தம்தானா?

      நீக்கு
    4. பஜ்ஜி காலங்கார்த்தாலே வேண்டாம். பின்னர் வரேன்.

      நீக்கு
    5. They meant Vedic Science. :)))) will come afterwards, if time perimits.

      நீக்கு
    6. மக'ன்' என்று சொல்லி விட்டதால், கீதா அம்மாவிற்கு கோபம் வந்து விட்டது...

      நீக்கு
    7. ஆமாம், டிடி. பையர்னு சொல்லி இருக்கலாம். வலை உலகே இப்போ இந்த வார்த்தையை ராயல்டி கொடுக்காமல் பயன்பாட்டில் வைச்சிருக்காங்க. :)))) அல்லது மகனார் னு சொல்லி இருக்கலாம். :))))

      நீக்கு
  6. அப்போ கம்பீரம்.. தமிழ் வார்த்தையா இல்லையா...

    தமிழ்... ல ஒன்னும்
    ஹிந்தியில ஒன்னும்... ந்னா,
    ஜிவாஜி வீரநடை என்னாகிறது?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஜிவாஜி வீரநடை என்னாகிறது?...//

      கீதாக்காவுக்கே இவர்தான் நினைவு வருகிறார்.. அப்புறம் இன்னா செய்வீங்க துரை அண்ணா!

      நீக்கு
    2. கம்பீரம் தமிழ் வார்த்தையாகி எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகி விட்டன துரை! வட மொழி கம்பீரம் எனில் சீரியஸாப்பேசறது, சிந்திப்பது எனப் பொருள் படும்! கம்பீர் ரூப் ஸே கஹா என வந்தால், தீவிரமான முகபாவத்துடன் கூறினான் எனப் பொருள்.

      நீக்கு
    3. நாம தான் எந்த வார்த்தையைக் கடன் வாங்கினாலும் நமக்கேற்றாற்போல் மாத்திடுவோமே! சென்னையில் அதிகம் பயன்படுத்தும் "கஸ்மாலம்" சம்ஸ்கிருதத்தின் "கஸ்மலம்" என்பதன் திரிபு! இப்படி எத்தனையோ இருக்கு. முன்னால் பிசியில் இவற்றை எல்லாம் வகைப்படுத்திச் சேமித்து வைத்திருந்தேன். இப்போப் பிசி பக்கமே போறதில்லை! இருக்கானு பார்க்கணும்.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
  8. காலையிலேயே பஜ்ஜியை காண்பித்து விட்டீர்கள். இன்றைக்கு யார் வீட்டுக்காவது பெண் பார்க்க போகவேண்டியதுதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ... இதற்காகத்தான் விசிட்டா கில்லர்ஜி? எனக்கு வாழ்க்கையில் அந்தமாதிரி பஜ்ஜி, சொஜ்ஜி சந்தர்ப்பம் வரவேயில்லை.

      நீக்கு
    2. பெண் பார்க்கப்போனால்தான் பஜ்ஜி கிடைக்குமா ஜி?

      நீக்கு
    3. எனக்கும் அந்த சந்தர்ப்பம் வரவில்லை நெல்லை.. அதனால்தான் ஒரு பஜ்ஜிக்கடையை விடுவதில்லை!!!

      நீக்கு
  9. பலரது தளத்திலும் கருத்துப்பெட்டி திறக்க படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /பலரது தளத்திலும் கருத்துப்பெட்டி திறக்க படுத்துகிறது./

      ஆம். திறந்தாலும் கமெண்ட் பப்லிஷ் ஆக படுத்துகிறது. குறிப்பாக வெங்கட் தளத்தில்!

      நீக்கு
    2. ஹை ஹை ஹை இப்ப கில்லர்ஜி மாட்டிக்கிட்டார்!!! நான் இடையில் இப்படித்தான் மாட்டிக் கொண்டேன். இன்று கூட இப்ப டிடி தளம் கருத்துப் பெட்டி ஓபன் ஆகலை. அப்புறம் ஓபன் ஆச்சு ஆனால் விளம்பரங்களாக வருது. கருத்து போட கர்சர் வைத்தால் உடனே அது விளம்பர பேஜுக்குக் கொண்டு போகுது!! ஹா ஹா ஹ

      கீதா

      நீக்கு
    3. அது எந்த தளத்திலும் பிரச்சனை இல்லை... நாம் பயன்படுத்தும் browser...! இங்கேயே முந்தைய பதிவில் சொல்லி இருந்தேன்...

      Install Ad block Plus

      நீக்கு
  10. பஜ்ஜி என்றால் என்ன பஜ்ஜியாக இருக்ககும் ,காலைல வடிவேல் மாதிரி யோசிக்க வச்சிட்டாங்களே😄😄😄

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடிவேல் பஜ்ஜி பற்றி என்ன சொன்னார் என்று யோசுத்துக்கொண்டிருக்கிறேன் அஜய் சுனில்கர்.

      நீக்கு
  11. அரட்டை.... நல்லாவே இருக்கு.

    பஜ்ஜி - நான் ஒண்ணு எடுத்துக்கலாமா! :)

    கடைசி படம் - ஏன் இந்த முறைப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்..
      உங்களுக்கில்லாத பஜ்ஜியா?
      முறைப்பு விஜய்யைப் பார்த்து!

      நீக்கு
  12. டெம்ப்ளேட் மாற்றி இருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  13. என்ன டெம்ப்ளேட்? நானும் மாற்றணும். ரொம்ப மாசமாச்சு தூசி தட்டி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் டிடி அருள் வெங்கட். இங்கு பின்னூட்டப் பெட்டியைச் செப்பனிட்டுக் கொடுத்தார். நம்ம ஏரியாவை மொத்தமாக மாற்றிக் கொடுத்தார்.

      நீக்கு
  14. வேதம்னா ஆயுர்வேதம்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வேதம்னா ஆயுர்வேதம்தானே?//

      இருக்கும் பாலசுப்ரமணியம். முதல் வருகையோ?

      நீக்கு
    2. வேதம்வேறே! ஆயுர்வேதம் வேறே! தனுர் வேதமும் இருக்கு! அதையும் வேதம்னு சொல்ல முடியுமா? வேதம் என்பது வாய்மொழியாக குருவிடமிருந்து சீடர்களுக்கு வந்தது. இந்த ஆயுர்வேதம், தனுர்வேதம், பதஞ்சலி யோக சூத்திரம், பரத சாஸ்திரம் இவை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் தொகுக்கப்பட்டவை! இவை தனி! வேதம் தனி! ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் அதர்வண வேதத்தவர் குஜராத்தில் மட்டுமே இருக்கின்றனர். காஞ்சி பீடத்திலிருந்து சீடர்களை அனுப்பி அங்கே அதர்வண வேதம் கற்று வரச் செய்தனர், பரமாசாரியாள் காலத்தில். அதே சமயம் அதர்வண வேதம் கற்க ஏற்கெனவே உபநயனம் ஆகி இருந்தாலும் மீண்டும் முறைப்படி உபநயனம் செய்து கொண்டு அதர்வண காயத்ரி மந்திரத்தை குரு மூலம் பிரம்மோபதேசத்தில் உபதேசம் செய்ய வைத்துப் பின்னரே அதர்வ்ண வேதத்தை முறைப்படி கற்கலாம்.

      நீக்கு
    3. கீசா மேடம் - வேதங்கள் முறைப்படி தெரிந்தவர்களில், காஷ்மீரத்துப் பண்டிட்டுகளுக்கு உயர்ந்த இடம் உண்டு. எப்படி அவங்களை விட்டுவிட்டு, குஜராத்தைப் பிடித்துக்கொண்டீர்கள்?

      நீக்கு

    4. //காஷ்மீரத்துப் பண்டிட்டுகளுக்கு உயர்ந்த இடம் உண்டு.// இருக்கலாம், நான் சொல்வது அதர்வ வேதத்துக்கு மட்டுமே! காஷ்மிரப் பண்டிட்டிடம் ஜோசியம் கூடப்பார்த்திருக்கோம். காசி ராஜாவின் மாமனாரிடமும் ஜோசியம் பார்த்திருக்கோம். காசி ராஜா பிராமணர்.

      அதர்வண வேதங்களில் அதர்வண வேதத்தவர் குஜராத்தில் மட்டுமே இருக்கின்றனர். இது பற்றிப் பெரியவர் சொல்லி ரா.கணபதி தொகுத்தவற்றில் கூட வந்திருக்கு. ஆனால் "தெய்வத்தின் குரல்" புத்தகங்களில் இல்லைனு நினைக்கிறேன். நான் உபநயனம் குறித்த தொடர் எழுதுகையில் விபரங்கள், குறிப்புகளைத் தேடியபோது இவை கிடைத்தன.

      நீக்கு
  15. //அதைக் கவனிக்கா விட்டால் முணுக்கென்றும் பொசுக்கென்றும் கோபம் வரும்!//

    என் மகனுக்கும் அவன் பேசுவதை கேட்காவிட்டால் கோபம் வந்து விடும் நாம் வேறு வேலையாக அவன் பேசுவதை கேட்கவில்லை என்றால். திரும்ப கேட்டால் சொல்லமாட்டான். ஆமாம், பேசும் போது கவனிக்கவில்லை இப்ப ஏன் கேட்கிறீர்கள்? என்பான்.

    விளம்பரங்கள் நிறைய ரசிக்கவும் வைக்கிறது, முகம்சுளிக்கவும் வைக்கிறது.

    (கொஞ்சம் காதைக் கொண்டு வாருங்கள்... வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம். எங்கள் வீட்டிலும் இப்போது அந்த வேதமும் விக்ஞானமும் கலந்த பொருள் இருக்கிறது. டேஸ்ட்டில் என்ன பாலன்ஸ் பண்ணி இருக்கிறார்கள் என்று பார்த்தால் காரம் தெரிகிறது. அது பதஞ்சலியைப் பார்த்து செய்திருக்கிறார்கள் என்று தோன்றியது!)

    விளம்பரம் வாங்க வைத்து விட்டதா?



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவு நான் தூங்க ஆரம்பித்த பிறகுதான் வருவான் என் மகன். அவன் அப்போது சொல்லும் கதைகளை நான் தூங்காமல் கவனமாகக் கேட்கவேண்டும். இல்லாவிட்டால் அவனுக்கு வருத்தமும் கோபமும் வந்து விடும். சுருக்கமாகவும் சொல்ல மாட்டான். பாசமான இம்சை!

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. கோமதிக்கா என் மகனும் அப்படியே....அப்புறம் கேட்டா சொல்லுவான்...இதே தான்..நான் சொன்னப்ப கேட்க மாட்ட இப்ப அந்த ஸ்வாரஸ்யம் போயிருச்சு போம்மா....என்று அவன் வருத்தப்பட்ட தினத்திலிருந்து நான் ரொம்பவே கவனமாக அவன் பேசுவதை மட்டுமே கேட்பேன். அப்ப கூட அம்மா நீ கேட்கலை உன் கண்ணு சொல்லுது உன் மனசுல வேற ஏதோ ஓடுது...என்பான் ஹா ஹா ஹா அப்புறம் சொல்லுவேன் இல்லடா....நீ சொல்லறத லயிச்சு கேக்கறேன் அது விஷுவலா போகுது இன்னொரு பக்கம் அப்படிம்பேன் ஹா ஹா ஹா..

      ஸ்ரீராம் அதே வருத்தம் கோபம் எலலம் வந்துரும்...அதே சுருக்கமாவும் சொல்ல மட்டான் என் பையனும்தான்..பாசமான இம்சை....ஹா ஹா ஹா ஆனா ஒன்னு ஸ்ரீராம் இதெல்லாம் தான் நம் வாழ்வின் பொக்கிஷம். அனைத்தையும் அப்படியே பொதிந்து வைச்சுக்கோங்க. பின்னாளில் உதவும். க்ரீன் மெமரிஸா..நம்மை உயிர்ப்பிக்கும்...மகிழ்வான தருணங்கள் இல்லையா ஸ்ரீராம். ஸ்ரீராம் நாம் இதை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டு இறைவனுக்கு நன்றி சொல்லணும். ஏன்னா நிறைய பெற்றோருக்குக் கிடைக்காத பொக்கிஷங்கள்.

      கீதா

      நீக்கு
    3. வாங்க கீதா.. ஹா.. ஹா... ஹா... உங்க மகனும் அப்படிதானா? சூப்பர்!

      நீக்கு
    4. அநேகமா எல்லாக் குழந்தைகள் அப்படித் தான்!

      நீக்கு
  16. புகைப்பட கவிதை நன்றாக இருக்கிறது.
    அக்னி நட்சத்திர காலம் சொல்லும் குறிப்பு அருமை.
    எப்படி எல்லாம் யோசிக்கறாங்க...! இந்த செய்தியை படிக்கும் போது எனக்கும் இப்படிதான் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் என்னை வாங்க வைக்கவில்லை. என் பாஸை!!

      ரசித்துப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. இந்த விளம்பரங்களைப்பார்த்துப் பொருட்கள் வாங்குவதில் நம்ம ரங்க்ஸை மிஞ்ச ஆளில்லை! அந்த மல்டி பர்பஸ் டேபிள் ஒண்ணு காட்டறாங்களே அதை வாங்கணும்னு தலைகீழா நின்னார். உனக்குத் தான் கணினியை வைச்சுப் பயன்படுத்திக்கலாம்னு ஆசை காட்டினார்! நான் அதுக்கெல்லாம் மசியவில்லை! வீட்டிலே இருக்கும் அடைசல் போதும்னு சொல்லிட்டேன். ஸ்டூலே நான்கு, ஐந்து வகை! நாற்காலிகள் ப்ளாஸ்டிக், மரம் என! பெரிய சோஃபா செட் வாங்கலை 50,000 கொடுத்துனு ரொம்பக் குறை! அது வீட்டுக்குள்ளே வந்ததும் நான் வெளியே போறேன். எனக்கு இந்தப்பிரம்பு சோஃபா செட்டே போதும். தினம்பெருக்கித் துடைக்க இதான் வசதினு சொல்லிட்டேன்! எனக்குப் பொருட்களை வாங்கிக் குவிப்பது பிடிக்காது! :( அப்படியும் வேண்டாதவை ஏதானும் வந்துடும். இப்போக் கொஞ்ச நாட்களா ப்ளாஸ்டிக் டப் வாங்கணும்னு ஆசை வந்திருக்கு! ரெண்டு முறை தடுத்துட்டேன்! பார்க்கலாம்!

      நீக்கு
  17. //இந்த வாரம் இது போதும்... அடுத்த வாரம் பார்ப்போம்... //

    அதற்கேன் இந்த பார்வை ! கொஞ்சம் சிரித்துக்கிட்டே சொல்லகூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோவுக்கு அந்தப் படத்தில் கோபமாம் கோமதி அக்கா. அதுதான் அந்த ஓரப்பார்வை!

      :)))

      நீக்கு
  18. ரொம்பப் பிடிச்சிருக்கு!! :))

    பதிலளிநீக்கு
  19. //நான் ஒன்று எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி // - இது அபூர்வமாக இருக்கு. அடுத்தவங்கள்டேர்ந்து வாங்கிக்கொள்வது எனக்குப் பிடிக்காது, அவரே தந்தாலும். ஹா ஹா. ரொம்ப முன்னால (40-50 வருடங்களுக்கு முன்பு) வெளியில் பிறர் பார்க்க சாப்பிடும் பழக்கம் இல்லை என்றே நினைக்கிறேன். இப்போ எல்லாரும் செல்ஃபிஷாப் போய் அவரவர் உணவை, மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் சாப்பிடும் வழக்கம் இருக்கு இது எல்லோருக்குமே, நான் உள்பட இருக்கு.

    இந்த கோல்கேட் விளம்பரத்தை நினைத்தால் எரிச்சலாக இருக்கும். பதஞ்சலிக்கு அப்புறம் அவங்க சேல்ஸ்ல 7%க்கு மேல் குறைந்துவிட்டதாம் (இந்தியாவில்). அதனால் 'உங்க பேஸ்டில் உப்பு காரம் மசாலப் பொருட்கள் இருக்கா' என்ற விளம்பரத்துக்கு அப்புறம், செண்டிமெண்டை வைத்து, வேதம் விக்ஞானம் என்று உளறல் விளம்பரம் வந்துக்கிட்டிருக்கு.

    ஒன்று தெரியுமா? பேஸ்ட் இருக்கும் குழாயின் கீழ்ப்பகுதியில் பச்சைக் கோடு இருந்தால்தான் அது இயற்கையான பேஸ்ட் என்று அர்த்தம். அப்படிப் போட்டுள்ள பேஸ்ட் மட்டும்தான் நான் வாங்குவேன். பெரும்பாலும் கறுப்பு மற்றும் வேறு கலர் கோடுகள் இருக்கும். (நீலம்-இயற்கை மற்றும் மருந்துப் பொருள் சேர்ந்தது, பச்சை - இயற்கை, சிவப்பு-இயற்கை மட்டும் கெமிக்கல், கறுப்பு - முழு கெமிக்கல், உடலுக்கு நல்லதில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்களில் அல்லது பொதுவாகவே புதிய நபர்களிடமிருந்து யாருமே வாங்கிக்கொள்ள மாட்டார்கள் நெல்லை. இவர்களுக்குள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிகிறோம் என்கிற உணர்வு காரணமாயிருந்திருக்கலாம்!

      பச்சைக்கோடு இயற்கை பேஸ்ட் பற்றி நானும் முன்பு படித்த நினைவு இருக்கிறது. நான் கொஞ்ச நாட்கள் என் பல் மருத்துவர் சொன்ன பேஸ்ட் உபயோகித்துக் கொண்டிருந்தேன். அது எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. அப்புறம் எது கிடைக்கிறதோ அது!

      நீக்கு
    2. ஸ்ரீராம் பல்மருத்துவர் சொன்னது செண்டோடென்ட் கே அல்லது சென்சொடைன்?

      ஏன்னா எனக்குத் தெரிந்து பெரும்பாலான பல் மருத்துவர்கள் சொல்வது இதுதான். எங்க வீட்டுலயும் ஒருவருக்குச் சொல்லப்பட்டு இப்ப அதுவே எல்லோருக்கும் ஆகிப் போனது ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. விக்கோ வஜ்ரதந்தியை விட்டுட்டீங்களே இயற்கை டூத்பேஸ்ட் ஹா ஹா ஹா ஆனா அதில் அடியில் பச்சைக் கோடு உள்ளதா தெரியலை....இப்ப பார்த்ததில்லை...

      கீதா

      நீக்கு
    4. சென்சோடைன் இல்லை கீதா.. யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்.. அதன் பெயர் மறந்து விட்டது.


      வஜ்ரதந்தி சரி, இன்னொன்று கூட இருக்கிறதே... டாபர் ரெட்!

      நீக்கு
    5. அந்த டூத்பேஸ்ட் பெயரை நான் மருத்துவக்குறிப்பைப் பார்த்து எடுத்து விட்டேன். Vantej.

      நீக்கு
    6. மெஸ்வாக் எனப்படும் ஹெர்பல் பற்பசையும் இருக்கு. அநேகமாய் ஓட்டல்கள் இதைத் தான் வாங்கறாங்க. சில விமான சேவைகள் உட்பட!

      நீக்கு
  20. இந்த ஜோதிகா படத்தைப் பார்த்தால், 'இல்லை நீ பார்த்ததை நான் பார்த்தேன்' வசனம்தான் (குஷி) ஞாபகத்துக்கு வருது.

    பதிலளிநீக்கு
  21. போன வாரம் ஒரு பட்சி சொன்னது,"அடுத்த வாரம் 'ஜோ'தான் என்று, உண்மையாகி விட்டதே!!!
    என்ன இன்னும் கொஞ்சம் அழகான படம் போட்டிருக்கலாம்.
    முறைத்தாலும் முட்டைக்கண்ணழகி அழகுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோவைப்பார்த்தால் எங்கள் உறவினர் பெண் ஒருத்தி நினைவுக்கு வருவார் பானு அக்கா. எனக்கு ஒன்றுவிட்ட தங்கை முறை. அவள் அப்பாவுக்கு - என் சித்தப்பாவுக்குதான் புதன் கிழமை சதாபிஷேகம் நடந்தது.

      நீக்கு
    2. தாட்ட இலையில் சாப்பிட்டீர்களா இல்லையா? சாப்பிடும்போதே, இலையில் எங்கெங்கு என்ன என்ன பதார்த்தம் வைக்கிறார்கள் என்பதில் மனம் போனதா இல்லையா? ஹா ஹா ஹா

      நீக்கு
    3. நெல்லை... தாட்ட இலையில் சாப்பிடவில்லை என்றாலும் ஓட்டை இலையில் சாப்பிட்டேன்! சென்னையில்தான் நடந்தது!

      நீக்கு
  22. உங்கள் மகனுக்கு நேர்ந்ததைப் போல எனக்கும் ஒரு முறை நடந்தது. எங்களின் குடும்ப நண்பர் ஒரு முறை தன் குடும்பத்தோடு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர்களுக்காக தோசை வார்க்க நான் உள்ளே சென்ற பொழுது, அவரின் மனைவியும் என்னோடு வந்து நான் வார்த்த தோசைகளை தன கணவருக்கும், குழந்தைகளுக்கும் பரிமாறினார். அவருக்கும் வார்த்து கொடுத்து விட்டு, நான் எனக்காக தோசை வார்க்க ஆரம்பித்தேன். நண்பரின் மனைவி," என்ன வார்த்துண்டே இருக்க? சாப்பிட வா" என்று அழைத்தார். "எனக்கு" என்று நான் கூறியதும்,"அதுதான் மூணு இருக்கே, போறும், வா" என்று அடுப்பை நிறுத்தி விட்டார். என் வீட்டிற்கு வந்து எனக்கு மூணு தோசை போதும் என்று முடிவெடுத்த அவரின் அதி சாமர்த்தியம் என்னை இப்போதும் வியக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் வீட்டுக்கு வந்து நமக்கே எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு! சில நேரங்களில் சில உறவினர்கள்!!! ஹா... ஹா... ஹா... அப்புறம் அவர்கள் கிளம்பிப் போனதும் மிச்ச 12 தோசை வார்த்துச் சாப்பிட்டீர்களா பானு அக்கா?!!!!

      :))))

      நீக்கு
    2. பானு மா, ஒரு சமயம் குடும்பத்தோடு டேரா போட்டிருந்த நண்பர்,மனைவி,அவள் அம்மா
      குழந்தைகள் எல்லோரும் நான் அரைத்த அருமை தோசை மாவில்
      முழுசும் சாப்பிட்டுவிட்டு,
      என் கணவரிடம், பவானி ?ஓட்டல் தோசை நன்னா இருக்கும்.
      வாங்கிண்டு வாங்களேன் அண்ணா என்றாரே பார்க்கணும்.
      இரண்டே நாட்களில் அவர்களுக்குப் புது வீடு அமர்த்திக் கொடுத்துவிட்டார் சிங்கம்.

      ரேவதி கைக்குத் தாராளம் போறாது. இது அந்த மாமியார் சொன்ன வார்த்தை.

      நீக்கு
    3. ஆமாம், இதை நான் இப்போதும் அனுபவித்து வரேன். :))))) அவங்க வீட்டுக்குப் போனால் குடிக்க நீர் கூடக் கேட்டு வாங்கும்படி இருக்கும். :)))))

      நீக்கு
  23. ஹமாம் சோப் விளம்பரங்கள், காட்பாரிஸ்,லிப்டன் த்ரீ ரோசெஸ் போன்ற விளம்பரங்கள் பிடிக்கும். பிடிக்கவே பிடிக்காத விளம்பரங்கள் என்றல் சிகப்பழகு க்ரீம் விளம்பரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லி இருக்கும் பிஸ்கட் விளம்பரத்தின் முடிவு தெரியும்தானே பானு அக்கா?

      நீக்கு
    2. எனக்கு ரொம்பப் பிடிச்சது ப்ரூவின் "ஸ,ஸ, ஷுகர் பாய்" முன்ன்ன்னாடி வந்துட்டு இருந்தது. இப்போ வரும் இளம்பெண் தனக்குக் குழந்தை பிறக்கப்போவதைக் கணவனிடம் தெரிவிப்பது. குட்டிக் கப்பில் கொஞ்சம் போல் காஃபி ஊத்தி! இருவரின் பார்வையும் கலக்கும்போது கவிதை! ரசித்துப் பார்ப்பேன். முன்னால் எல்லாம் அந்தக் குட்டிப்பையர் கோவித்துக் கொண்டு வீட்டை விட்டுப் போவது ரொம்பப் பிடிக்கும். ராமு காகா! என அழைத்துப் பேசுவதே அழகு!

      நீக்கு
  24. எனக்கும்அந்த வேதமும் விஞ்ஞானமும் டவுட் இருந்திச்சு சரியாக பதிவிட்டிர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சொக்கன் குப்புசாமி ஸார். இப்போ உங்கள் சந்தேகம் தீர்ந்து விட்டதா?

      நீக்கு
    2. "அசோகன்"குப்புசாமியா இல்லாட்டி "சொக்கன் குப்புசாமியா"

      நீக்கு
    3. ஹா... ஹா... ஹா... அசோகன் குப்புசாமிதான்... கூகுள் புண்ணியத்தில் சொக்கன் ஆகிவிட்டது. அ கு ஸார் மன்னிக்கட்டும்!

      நீக்கு
  25. மக்களின் புத்திசாலித்தனத்தில் அவ்வளவு நம்பிக்கை வேதம் விஞ்ஞானம் என்றெல்லாம் சொல்லி எப்படியெல்லாம் ஏமாற்றுகிறர்கள்/ இருந்தாலும் விளம்பரத்தில் அந்தப்பெண் சொல்லும் டேஸ்ட் பாலன்ஸ் கேட்கவும் பார்க்கவும் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்... என்ன சொல்ல? விளம்பர யுகம்!

      நீக்கு
  26. டாகடர் சொல்வதை கேளுங்கள் /பார்த்ததில்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய விளம்பரங்கள் ஒருமுறை பார்த்தாயிற்று என்றால் ம்யூட் எய்து விடுவோம் அல்லது சேனல் மாற்றிவிடுவோம்!

      நீக்கு
  27. பஜ்ஜி மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் போலும். பசிகூட வெட்கமறியாதுபோலுள்ளது. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஜ்ஜி பசி ரொம்பவே வெட்கமறியாது போல காமாட்சியம்மா... ஹா... ஹா... ஹா...

      நீக்கு
  28. /



    சுசித்ரா சங்கர், ராஜு ரவி சுஜாதா எல்லோருக்கும் தெரியும்!//
    ஆமா இவங்கல்லாம் யாரு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னால் எல்லாம் சென்னை வானொலியில் சுசித்ராவின் குடும்பம்னு ஒரு தொடர் வரும். பார்க்கப் போனால் அது ஹார்லிக்ஸ்க்கு ஆன விளம்பரம். அதிலே வரவங்க தான் இவங்க எல்லாம்.

      நீக்கு
    2. ஓஹோ !! எனக்கு நம்ம விசுவநாதன் ஆனந்த் வர அட்வெர்டைஸ்மென்ட் நினைவிருக்கு மற்றது பிறகு வந்ததோ !! 2000 கும் மேலே !

      நீக்கு
    3. விவித் பாரதியில் வந்ததுனு நினைக்கிறேன்.

      நீக்கு
    4. சுசித்ரா சங்கர், ராஜு ரவி சுஜாதா எல்லோரும் ஹார்லிக்ஸ் குடும்பம் ஏஞ்சல்! ஞாயிறு மதியங்களில் ஒலிபரப்பாகும் ஒரு வி.தொ

      நீக்கு
    5. //2000 கும் மேலே !?// அதுக்கும் முன்னால் எண்பதுகள் வரை! தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கலை. ஏனெனில் 88க்கு அப்புறமா வட நாட்டு வாசம். அங்கெல்லாம் எல்லா ரேடியோ நிலையங்கள், தொலைக்காட்சி சானல்கள் வராது. பிபிசி நல்லாக் கேட்கும். எமர்ஜென்சி காலத்தில் பிபிசி மூலமே பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.

      நீக்கு
  29. btw எனக்கு ட்ராவல் பண்ணும்போது சாப்பாடு வாசம் பக்கத்தில் இருந்து வருவது பிடிக்காது

    However, உங்க //

    awww somethings wrong with my mail ..what ever i typed in tamil is auto translated in english

    enakku mattum ippadi en nadakkuthu

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஏஞ்சல் ஏதோ ஒரு பிரச்சினை ஒவ்வொருவருக்கும் வந்துக்கிட்டே இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி எனக்குக் கருத்துப் பெட்டி ஓபன் பண்ணவே முடியாம இருந்துச்சு. இப்ப கில்லர்ஜி மாட்டிக்கிட்டார். எனக்குக் கருத்துப் பெட்டி ஓபன் பண்ணினால் ஒரே விளம்பரமா வரும்....இன்னிக்கு டிடி பதிவு கூட கருத்து போட முடியாம ஒரே விளம்பரமா வருது...

      ஆனா பாருங்க இங்க எபில இன்னிக்கு விளம்பரம் பதிவு போட்டும் கூட விளம்பரமே வரலையே ஹா ஹா ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
    2. எனக்கு அடிக்கடி வரும் பிரச்னை டைப் செய்து கொஞ்சநேரம் கழித்துதான் எழுத்துகள் வரும்!

      நீக்கு
  30. பாவம் உங்க மகன் :) ஆசைப்பட்டு வாங்கின பஜ்ஜிகூட நிம்மதியா சாப்பிட முடில :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் அதை வேறு மாதிரி காம்பன்சேட் செய்துவிடுவான் ஏஞ்சல்...! ஸ்விக்கி போன்ற இடங்களில் அடிக்கடி ஆர்டர் கொடுத்து விடுவான்! சாப்பாட்டு ரசிகன்.

      நீக்கு
  31. எதோ ஸ்க்ரிப்ட் எர்ரர்ர்னு சொல்லுச்சு இப்போ ஓகே :)

    நெக்ஸ்ட் டைம் உங்க மகன்கிட்ட அதே நபர் வந்தா சொல்ல சொல்லுங்க லண்டனில் ஒரு பஜ்ஜி ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க அவங்க கிட்ட வாங்கி சாப்பிட்டா டைரக்ட்டா ஹெவன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா என்ன ஏஞ்சல் தேம்ஸ்ல ஒரு செஃப் இருக்காங்க அவங்களை மாட்டிவிடாம இப்படி நீங்களா மாட்டிக்கறது..ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. //அதே நபர் வந்தா சொல்ல சொல்லுங்க லண்டனில் ஒரு பஜ்ஜி ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க அவங்க கிட்ட வாங்கி சாப்பிட்டா டைரக்ட்டா ஹெவன் //

      ஹா... ஹா... ஹா... எனக்கு நான் கேட்டேன்.. சிலபேருக்குத் தரவேண்டியிருக்கிறது என்று!

      நீக்கு
  32. ஒருவேளை சென்னையில் இருந்திருந்தா இந்த விளம்பரங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கும் :) அதான் எனக்கு ஒன்னும் புரியலை .
    fb யில் பார்த்தது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் :)))

    பதிலளிநீக்கு
  33. என்ன விஷயம் திடீர்னு ஜோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்ன விஷயம் திடீர்னு ஜோ :)/

      ஏன், வரக்கூடாதா?!!!

      நீக்கு
    2. அப்போ அனுஷ்க்கா கோச்சிக்க மாட்டாங்களா :)

      நீக்கு
  34. ஸ்ரீராம் பஜ்ஜி கதை செம..சிரிச்சுட்டேன். பாவம் உங்க பையன்....பஜ்ஜி போச்சே!!!

    உங்க பையன் எல்லோரிடமும் ஆபீஸ் விஷயங்களை ஷேர் செய்வது ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம். அதுவும் நீங்கள் கேட்கலைனா கோபம் வருவது....ஹா அஹா ஹா ஹா என் மகனுக்கும் கோபம் வந்துரும். என் மகனும் முன்னர் இங்கு இருந்த வரை எல்லா நிகழ்வுகளும் சொல்லுவான். இப்போ கூப்பிடும் நேரம் அவனுக்கு ஃப்ரீயா இருந்தா மட்டும் சொல்லுவான் இல்லைனா அவன் சொல்லும் போது நான் இருடா ஒரு சின்ன வேலை முடிச்சுட்டு வந்துரவா என்றால் அவ்வளவுதான் கோபம் வந்துடும்...எனக்கே ஃப்ரீ டைம் கிடைக்கறதில்லை உங்கிட்ட பேச...நான் பேசும் போதுதான் உனக்கு வேலையா...போமா என்று கோபித்துக் கொள்வான்...அதனாலேயே அவன் வாட்சப்பில் கூப்பிடுவான் என்றால் அந்த சமயத்தில் எந்தக் காலும் அட்டென்ட் பண்ண மாட்டேன். கட் பண்ணிடுவேன்...ஹா ஹா ஹா

    அதனாலேயே அந்த லைனை ரொம்ப ரசித்து ரசித்து உங்க நாலு பேரையும் விஷுவலைஸ் பண்ணி ரசித்தேன் ஸ்ரீராம்...ஏனென்றால் இதெல்லாம் மிக மிக பொக்கிஷமான தருணங்கள் வாழ்வில். பல இளைஞர்கள் வீட்டில் அம்மா அப்பாவுடன் பேசுவதே குறைவு...இல்லை என்றே சொல்லலாம். அதான்...மகிழ்ச்சியாக இருக்கு ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்க நாலு பேரையும் விஷுவலைஸ் பண்ணி ரசித்தேன் ஸ்ரீராம்...ஏனென்றால் இதெல்லாம் மிக மிக பொக்கிஷமான தருணங்கள் /

      உண்மைதான் கீதா.. பின்னர் இது மாதிரி தருணங்கள் கிடைக்குமா, தெரியாது!

      நீக்கு
  35. புகைப்படக் கவிதையும் சரி அக்னி நட்சத்திரக் கவிதையும் சரி செம செம செம....மிக மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம். மீண்டும் வாசித்தேன்...

    புகைப்படக் கவிதை அதே அதே..ஸ்ரீராம்...கவிதையாகவும் வடிக்க முடியாது அது வார்த்தைகளில் அடங்கினால்தானே!! பல காட்சிகளை விவரிக்கக் கூட முடியாதபடி மனம் ஒரு ஜென் நிலைக்குப் போயிருக்கும்...அப்படியே பிரமித்து...இயற்கையின் பிரம்மாண்டத்தை வியந்து அந்த மாபெரும் சக்தியை நினைத்து எப்படி எப்படி என்று வியந்து ஸ்பெல் பௌன்ட் என்று சொல்லுவோமோ அப்படி...!!!

    அருமையா சொல்லிருக்கீங்க ஸ்ரீராம். மீண்டும் நீங்க கவிதை எழுதத் தொடங்கியது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஸ்ரீராம்...

    பழைய சோறு சி வெ ப மி அடிச்சுக்க முடியுமா...அதானே..அதுவும் பானைல வைச்சு செம செம...ரசித்தேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புகைப்படக் கவிதையும் சரி அக்னி நட்சத்திரக் கவிதையும் சரி செம செம செம....மிக மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம். மீண்டும் வாசித்தேன்...//

      நன்றி கீதா.

      //இயற்கையின் பிரம்மாண்டத்தை வியந்து அந்த மாபெரும் சக்தியை /

      கண்கள் வழியே மனம் உணர்ந்ததை சாதாரண வார்த்தைகளில் கொண்டுவரமுடியுமா?

      நீக்கு
  36. நேற்று நிறைய நம்ம அனுஷ் படம் போட்டதால இன்று மாறுதலுக்கு ஜோ!! அனுஷ், தமனாக்கா, கீ சு வோட ஜோ வும் லிஸ்டில்!! ஹா ஹா ஹா ஹா...

    விளம்பரங்கள் பற்றி அதிகம் ஐடியா இல்லை ஸ்ரீராம்...

    சீனாக்காரர்....இப்படியுமா இருப்பாங்கனு தோனிச்சு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்று மாறுதலுக்கு ஜோ!//

      ஹா... ஹா.. ஹா... ஜோ முன்னாள் க க! கல்யாணமானதும் மாத்தியாச்சு!

      நீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    சுவையான பதிவு. அரட்டை நன்றாக இருந்தது.அந்த காலத்தில் ஒருவர் பார்க்க சுவையான பண்டங்களை சாப்பிட கூடாது என்பார்கள். எதிரில் இருப்பவருக்கு நாம் சாப்பிட முடியவில்லையே என்ற எண்ணம் வரும் போது சாப்பிட்டவருக்கு வயிற்று வலி வரலாம் என்பார்கள். ஆனால் இப்போது முக்கால்வாசி சாப்பாடு டிபன் என்பது, ஒரிடத்தில் என்றில்லை. நின்று கொண்டே, நடந்து கொண்டே என்றாகி விட்டது. எல்லாவிடங்களிலும், எல்லாமும் கிடைக்கிறது.

    தங்கள் மகன் அவருக்கு பஜ்ஜியை கொடுத்து சாப்பிட்ட பெருந்தன்மையை, நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன். அவரும் ஆசையை அடக்க மாட்டாது "எடுத்து" சாப்பிட்டது வேடிக்கையாக இருந்தாலும், உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியது சிறப்பு.

    விளம்பரங்கள் சிரிக்க வைத்தன. விளம்பரமில்லாத எந்த ஒரு பொருளும் விலை போவதில்லையே...

    கவிதை அருமை.

    அக்னி வெய்யிலின் சூட்டை பானையின் நீராகாரம் தணிக்காவிடினும், கண்டிப்பாக தங்கள் கவிதை தணிக்கும். அருமை.

    ஓசி சாப்பாட்டின் அருமை உணர்ந்தவரை எந்நாளும் மறக்க இயலாது.

    இவ்வார ஜோதி, ஜோதிகாவா?
    கதம்பம் இனித்தது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா சகோதரி..

      முதலில் உங்கள் உறவின் இழப்புக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

      ரசித்தமைக்கும், பாராட்டுரைகளுக்கும் நன்றி.

      நீக்கு
    2. உறவின் இழப்போ? என்ன சொல்றீங்க ஸ்ரீராம்? எதுவும் புரியல்ல... இருந்தாலும் என் அனுதாபங்களையும் சொல்லிக்கொள்கிறேன்.

      நீக்கு
    3. // உறவின் இழப்போ? என்ன சொல்றீங்க ஸ்ரீராம்? எதுவும் புரியல்ல... இருந்தாலும் என் அனுதாபங்களையும் சொல்லிக்கொள்கிறேன். //

      அவங்க தளத்துக்குதான் போய்ப் பார்க்கறது...!

      நீக்கு
  38. பகிர்ந்துண்ண ஆரம்பித்த பஜ்ஜி பறிமுதலில் போய் நின்ற அனுபவம் சுவாரஸ்யம்:). விளம்பரங்கள் குறித்த பார்வை நன்று.

    வழக்கம் போல நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  39. ஆவ்வ்வ் முழுக்கப் படிச்சேன்ன்.., மகனை அடுத்த தடவை இவரைக் கண்டால்[பஜ்ஜி எடுத்தவரை] ஓடி ஒளிக்கச் சொல்லுங்கோ:)) கேட்டே வாங்கிடப்போறார் ஹா ஹா ஹா:))..

    அக்கினிக் கவிதையில்.. படிச்சதும் நினைவுக்கு வந்த நாட்டுப்புறப்பாடல்...

    வெள்ளெனத் தின்ன
    வெள்ளாட்டி மூடுவாள்
    விடிய எழுந்து பார்த்து
    விக்கித்துப் போவாள்..

    இது சுண்டெலிகளின் கொடுமை பற்றிய பாடல்..

    என்னதிது இப்போ புதுசு புதுசா கதா நாயகிகளை இறக்குறீங்க?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மகனை அடுத்த தடவை இவரைக் கண்டால்[பஜ்ஜி எடுத்தவரை] ஓடி ஒளிக்கச் சொல்லுங்கோ:)) கேட்டே வாங்கிடப்போறார் ஹா ஹா ஹா:)/

      அவனுக்கே இது புதிய அனுபவம்!

      நாட்டுப்புறப்பாடல் ஸூப்பர்.

      புது கதா நாயகிகள்? யார்? ஜோ புது கதா நாயகியா?!!

      நீக்கு
  40. விளம்பரம் பற்றிய பதிவும், உங்கள் மகனின் அனுபவமும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. விளம்பரங்கள் மிகவும் மக்களின் மூளையைச் சலவை செய்யத்தான் செய்கின்றன.

    உங்கள் கவிதைகள் வழக்கம் போல் அருமை. ரசித்தேன்.

    சீனாக்காரர் சீனா ஏர்லைன்ஸ் செய்தது போல் இங்கு ஏதேனும் ஏர்லைன்ஸ் செய்திருந்தால் அந்த சீனாக்காரரின் ஐடியா இங்கு எத்தனை பேருக்கு வந்திருக்குமோ என்று தோன்றியது.

    அடுத்த வாரம் பார்க்கலாம் என்பதற்கு ஏன் ஜோதிகா இப்படி முறைக்கிறார்!!!! (கீதா: ஒரு வேளை டாட்டா பைபை சொல்லப் பிடிக்கலையோ இங்க எபி நட்புகளைப் பார்த்ததும்...சந்தேகம் கூட வந்திருக்கலாம் ஜோவுக்கு...ஹையோ அடுத்த வாரம் நம்மள ஸ்ரீராம் கூப்பிடுவாரா இல்லை அனுஷையானு அதுக்குத்தான் அந்த முறைப்போ?!! ஹா ஹா ஹா)

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நன்றி துளஸிஜி...

      கீதா... அனுஷ்ஷைக் கூப்பிடுவதால் ஜோவுக்குக் கடுப்போ! ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!