புதன், 22 மே, 2019

புதன் 190522 பெண்களுக்கு மீசை இல்லையே! ஏன்?


சென்ற வாரம் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அது என்ன கேள்வி என்று யாராவது (அந்தப் பதிவிற்கு சென்று பார்க்காமல்) நினைவுக்குக் கொண்டு வர முடியுமா? 




ஒருவர் மட்டும்  பங்கேற்று, நான் கேட்ட வகையில் படம் எடுத்து அனுப்பி இருந்தார். அவர் அனுப்பிய படம், இந்தப் பதிவின் கடைசியில் வெளியிட்டுள்ளேன். 

நம் Graphology நிபுணர் திரு ஏகாந்தன் அவர்களை, அந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் தமிழ் எழுத்துகளை ஆய்ந்து, அவரைப் பற்றிய கணிப்புகளைக் கூறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுவே அவருக்கு எங்கள் பரிசு.                  

ஏஞ்சல் :

1. ஆண் சிங்கத்துக்கும் பெண் சிங்கத்துக்கும் , பைரவர் பூனை புலி எல்லாத்துக்கும் whiskers இருக்கு ஆனா மனிதரில் பெண்களுக்கு மீசை இல்லையேன்னு யோசிச்சதுண்டா ??


மக்களுக்கும் மாக்களுக்கும் எழுதும்போது ஒருக்கால்தான் வித்யாசம்.  ஆனால் உண்மையில் 2 இல்லையா?
இன்னும் சில நாள் போனால் அவையும் நம் மாதிரி அல்லது நாமும் அவற்றை மாதிரி மாறக்கூடும்.

# இருந்து பார்த்தில்லையா ?

& //பெண்களுக்கு மீசை இல்லையேன்னு யோசிச்சதுண்டா ??//  ஏனுங்க ! நாங்க எல்லோரும்  ஏற்கெனவே பயந்துபோய் அடங்கிக் கெடக்கோம். இதுல நீங்க ஏன் இப்படி எல்லாம் கற்பனை செய்யச்சொல்லி எங்களை பயத்தின் உச்சிக்குத் தள்ளிவிடுகிறீர்கள்? 




2. முதல் உதவி அவசர உதவி இங்கே வெளிநாட்டில் அனைவருக்கும் கட்டாயம் தெரிஞ்சிருக்கணும் .நம்ம ஊரில் அப்படி இப்போ வசதி வந்திருக்கா ?
( நான் cpr ட்ரெயினிங் போயிட்டு வந்துட்டேனே அதை எல்லாருக்கும் சொல்லியாகணுமில்ல :))))))))))


 $ நம் நாட்டிலும் வரும்.

# வந்ததாகத் தெரியவில்லை. வந்தாலும் தீயணைப்புப் பயிற்சி மாதிரி மறந்து போக வாய்ப்பு உண்டு.

& பெரு நகரங்களில் - யார் அடி பட்டு விழுந்துகிடந்தாலும், 'நமக்கேன் வம்பு ' என்று கண்டும் காணாமல் செல்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு முதல் உதவி எல்லாம் தெரிந்திருந்தாலும் செய்யமாட்டார்கள். 


3. பரீட்சைக்கு போற ஸ்டூடன்சுக்கு , ஸ்கூலுக்கு போற குட்டீஸ் அப்புறம் வேலைக்கு போற எல்லாருக்கும் டிப்ரெஷன் ஸ்ட்ரெஸ் வருது இது மாதிரி அரசியல்வாதிகளுக்கும் வருமா ?? :)


$ இதெல்லாம் தாண்டி தானே தேர்தல் வரை வருகிறார்கள்?

# அரசியல்வாதிகளால் மக்களுக்கு டிப்ரெஷன் வர வாய்ப்பு இங்கு அதிகம்.

& # பதில்தான் என் பதிலும். 


4. சேவல் தானே தினமும் கொக்கரக்கோன்னு கூவுது அப்போ எதுக்கு கோழி கூவும் நேரம்னு சொல்றாங்க ???
அது சரி எதுக்கு சேவல் அதிகாலையில் கூவுகின்றது ?இதன் பின்னணி என்ன ??

எனக்கு ஒரு கதை தெரியும் அதை நீங்களும் சொல்றிங்களானு பாப்போம். 



$ கதையை நீங்கள் சொல்லுங்கள். எங்கள் கதை வேறாக இருப்பின் நாங்களும் சொல்கிறோம். 

 # கதை கேட்பது என்றால் கேட்டுப் பெறுவது என்று எண்ணிவிட்டீர்களே !

& யாருக்கும் தெரியாத ரகசியத்தை உங்களுக்குச் சொல்றேன். உண்மையில், முதலில் கோழிதான் சேவலின் காதருகே பயங்கரமாகக் கூவி, சேவலை தூக்கத்திலிருந்து எழுப்பும். 'என்னங்க விடிஞ்சாச்சு -- சட்டுன்னு எந்திரிச்சு கூவற வேலையப்பாருங்க' என்று. அப்புறம் சேவல் மனைவி திட்டுக்கு பயந்து, 'கொக்கரக்கோ .... கொக்கரக்கோ ...' என்று கூவித் திரியும். 


கோழி சொல்லைத் தட்டாதே - என்று படித்ததனால்தான் சேவல் அதிகாலையில் கூவுகிறது. எங்கள் ஊரில் சில (சோம்பேறிச்) சேவல்கள் மாலையில் கூட கூவக் கேட்டிருக்கிறேன்! 


5,இந்த பாசிட்டிவ் vibe /சாதக அதிர்வு பற்றி கொஞ்சம் விளக்குங்களேன் ?
சிலருடன் பார்த்த உடன் மனசுக்குள் பூக்கள் மலர்ந்து பட்டாம்பூச்சி பறக்கின்றது அதே சிலரை சந்தித்த மாத்திரத்தில் உள் மனம் //கவனம் கவனம் //என்று அலெர்ட் செய்கிறது இதன் காரணமென்ன ? நன்கு பழகியும் சிலரை விட்டு விலகி இருக்கிறேன் :) என்னை பொறுத்தவரை உள்ளுக்குள் வைத்து புழுங்குவதை விட விட்டு விலகிடுவது மேல் இந்த குணம் தவறா ??

$ நான்கூட விட்டு விலகுவதே மேல் என்றெண்ணுவதுண்டு.
Charisma காரணத்தால் அவர்கள் தப்பே செய்பவராக இருந்தாலும் நாம் கவலைப்படுவதில்லை.

 # பாசிடிவ் அதிர்வு என்ன என்பது தெரிகிறது ஏன் என்று தான் தெரியவில்லை என்கிறீர்கள். விடை உங்களுக்குள் இருப்பதால் பிறர் அதை விளக்க இயலாது.

& எண்ண அலைகளைப் புரிந்துகொள்ளும் சக்தி நம் உள் மனதுக்கு உண்டு. மேலும் நம்மோடு பேசுபவர்களின் வார்த்தைகள், செய்கைகளை கூர்ந்து கவனித்தால், அவர்களின் உடல் மொழிகள் நமக்கு அவரைப்  பற்றிக் கூறிவிடும். ஆண்களைவிட, பெண்களுக்கு இந்த புரிந்துகொள்ளும் உணர்வு  + எச்சரிக்கை உணர்வு அதிகம். 

6,பெற்றோர் பிள்ளைகளுக்குள் குறைந்த வயது இடைவெளி புரிதலை ஏற்படுத்துமா ? 

$ நான் அந்தக்காலத்தில்.... என்ற வசனம் எடுபடாது.

 # தலைமுறை இடைவெளி என்பது 12  ஆண்டுகள் ஏற்றத்தாழ்விலேயே தொடங்கி விடுவதாக ஒரு கணிப்பு உண்டு. எனவே இடைவெளி தவிர்க்க இயலாதது.

& பெற்றோர் - பிள்ளைகள் புரிதலுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். 

7,பொதுவா மனுஷங்களுக்கு மென்டல் ஹெல்த் well-being மிக அவசியம்.ஆனா அதுக்கு சம்பந்தமில்லாத வன்முறை தீ -வீரவாத வாதங்கள் :) வன்முறை தூண்டும் நிகழ்ச்சிகள் ,திரைப்படங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற விவாதங்களே பெரும்பாலும் தொலைக்காட்சி பத்திரிகை போன்றவற்றில் பிரதானமாக்கி காட்டுகிறார்கள் .இதற்கு ஒரு தடைச்சட்டம் வருமா ?? 



 $ tv ரிமோட் நம்மிடம் தானே இருக்கு?

# சட்டங்கள் செய்வோரும் மீடியா ஆதரவு அல்லது எக்ஸ்போஷருக்கு ஏங்குபவர்களாக இருப்பதால் இது சாத்தியமில்லை.

8,ஒரு சினிமா கேள்வி 
உங்கள் மனதில் அதிர்வலைகள் ஏற்படுத்திய சமீபத்திய தமிழ்ப்படம் எது ??

எனக்கு// பூ// படம் அப்படி ஒரு உணர்வை உண்டாக்கியது 

# இதற்கு விடை என்னிடமில்லை. படம் அதிகம் பார்ப்பதில்லை. மாரி-2 டி வியில் பார்த்தபோது இப்படிக்கூட ஏறுமாறாக  எடுக்கிறார்களே என்ற எரிச்சல் தான் ஏற்பட்டது.


& அதிர்வலைகள் ? சமீபத்திய தமிழ்ப்படம்? அப்படி எதுவும் இல்லை. சென்ற வாரம் ஏதோ ஒரு சானலில் எதேச்சையாக ஒரு பழைய தமிழ்ப் படத்தின் titles பார்த்தேன். படம் பெயர் தமிழில் ' ரம்பையின் காதல்' என்று போட்டு, அதற்குக் கீழே ஆங்கிலத்தில் ' Ramba's Love' என்று போட்டார்கள். அது என்னுள் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது!  
               

9,வாடிய பயிர் பசு வாயில்லா ஜீவராசி (நாலு கால் ஜீவன் :) இதை தெளிவா சொல்லாட்டி நெல்லைத்தமிழன் கணவர்கள் எல்லாம் வாயில்லா ஜீவன்கள்னு சொல்லிடுவார் )
எந்த ஜீவராசியாக இருந்தாலும் கடவுளுக்கு செய்வதாக இருந்தாலும் எதிர்பார்ப்பில்லாம உதவனும் என்பதுதானே சரி ? 

 $ பயிர் வாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விளைவு சமூக நாசம் விளைவிக்கலாம். 
பசு என்பது நீங்களே சொன்ன மாதிரி சகல வாயில்லா ஜீவன்களுக்கு ஒரு பொதுக்குறியீடாக இருக்கலாம். 

 # எப்படி எதற்காக செய்யப் பட்டாலும் உதவிக்கு மதிப்பு மரியாதை உண்டு என்பது என் கருத்து. விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ****  ×××× ரூபாய் உதவி என்பதாக வரும் செய்திகளும் எனக்கும் உங்களுக்கும் எவர்க்கும்  மகிழ்ச்சி தருபவைதான்.

& பிரதிபலன் எதிர்பாராத உதவிகள் உன்னதமானவை என்பது உண்மைதான். 

10, 25 வயது மணமகன் மணமகள் /55 வயது மணமகன் மணமகள் 
இதில் முதலாமவரை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் மனம் இரண்டாமவரை ஏற்க தயங்குவதேன் ??

 $ ஏற்பவர் பரஸ்பரம் புரிந்து கொண்டால் பார்வையாளருக்கு என்ன வேலை?

 # இது குறித்து நானும் எண்ணிப் பார்ப்பதுண்டு.
"இல்லற அனுபவத்தில்" ஈடுபாட்டின் பரிமாணம் காரணமாக இதில் ஒருவகை உறவு முரண்பாடாக  பொதுவாக பலருக்கும் தோன்றுகிறது என்பது பரவலாக சொல்லப்படும் காரணம்.

& இதற்கு ஆண்கள் பதில் சொல்வதைவிட, வாசகிகள் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லலாம். 

11, மனதுக்கு ஒப்பாத ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை யாராவது செய்திருந்தால் எப்படி உங்கள் எதிர்ப்பை காட்டுவீர்கள் ?
எது சிறந்த காரியமாக இருக்கும் ?
* அந்த இடத்தை விட்டு அகலுதல் 
* அந்த செய்தவரை அங்கேயே எதிர்த்து கேள்வி கேட்டல் 
* மொத்தமாக சம்பந்தப்பட்டவரை புறக்கணித்தல் 
இதில் எது சிறந்தது ?

& அப்படிச் செய்தவர் உறவினர் என்றால், சம்பந்தப்பட்டவரை இயன்றவரை புறக்கணிப்பேன். 

ஓரளவுக்கு மட்டும் அறிமுகமான நண்பர் என்றால், அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவேன். 

உயிர் நண்பன், நெருங்கிய நண்பன் என்றால் அங்கேயே எதிர்த்துக் கேள்வி கேட்பேன். 

உறவினரும் இல்லை, நண்பரும் இல்லை என்றால், ' யார் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கு என்ன' என்று வேறு பக்கம் திரும்பிப் பார்த்து நடப்பேன். 


 வாட்ஸ் அப் கேள்விகள் : 


நெல்லைத்தமிழன்: 

பெற்றோரில் சீக்கிரம் மறைந்துவிடுவோரிடம் நமக்கு அன்பு கூடுதலாக இருக்குமோ? இல்லை ஒவ்வொருவரும் அம்மாவோ அப்பாவோ யாரோ ஒருவரிடம் மட்டும் கூடுதல் அன்பு வைத்திருப்பாங்களா? இல்லை, தனக்கு இருவரில்  நாம் உணரும் வண்ணம் யார் அதிகமாக உதவினார்களோ, ஆதரவாக இருந்தார்களோ அவரிடம் மட்டும்தான் அதிக அன்பிருக்குமா?

# மறைந்தவர் இருப்பவர் நல்லவர் இதெல்லாம் நாம் ஒருவரை மதிப்பதன் தீவிரம் (அ) ஆழத்தைத் தீர்மானிப்பதில்லை. அது முற்றிலும் அன்பு அல்லது மதிப்பு வைப்பவரின் மனோபாவம்/கற்பனையைப் பொறுத்தது.

வயது ஆக ஆக, சாப்பிடும் அளவு குறைகிறதா இல்லை வேளைகள் குறைகிறதா? ஆம் என்றால் எதனால்?
உணவின் மீதான ஆர்வம் 40 வயதானதற்குப் பின் குறைந்துவிடுமா? எந்த வயதில், 'போதும் ரசித்துச் சாப்பிட்டது.. ஏதாவது கொஞ்சமா வயிற்றுக்குச் சாப்பிட்டால் போதும்' என்று தோன்றும்?
$ வயதானால் வேலை செய்வது குறைவு. அதனால் உணவும் குறைவு.
ருசிகள் வயதானால் வேறுபடும். நாக்கின் மேல் படிமங்கள், ருசி உணரும் பகுதிகள் தேய்வு இப்படி ரசனை குறைபாடுகள் வந்து ஏதோ சாப்பிட்டு நிரப்பினால் போதும் என்ற மனப்பாங்கு வரும்.

# இதற்கு பதில் கேட்கத் தேவையில்லையே. நம்மை நாமே கவனித்தால் விளங்கும்தானே.  என்வரை, மிகச் சிறிய பிராயத்து ருசிகள் மழுங்கித்தான் போயின. வயதான பின்பு, ருசி மாறவில்லை, அளவு படிப்படியாக அதிகரித்து  75 லிருந்து மிக மெதுவாகத் தேய்ந்து வருகிறது.

யாத்திரைனு போவதில் விருப்பமா இல்லை சுற்றுலா என்ற எண்ணத்திலா?

$ யாத்திரை யை விட உல்லாசப்பயணம் ரசிக்கும்.

# நான் யாத்திரையை சுற்றுலாவாகச் செய்பவன். தீவிர பக்திமான் அல்ல.

& எங்கள் அலுவலகத்தில் Refundable PF loan விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது, Reason for loan என்ற பகுதியில் 'For a pilgrimage trip' (யாத்திரை செல்ல ) என்று எழுதுவோம். அதற்குத்தான் கேள்வி கேட்காமல் சாங்ஷன் செய்வார்கள். பணம் கைக்கு வந்தவுடன், ஊட்டிக்கு உல்லாசப்பயணம் சென்றதுண்டு. 

நம்மை மாதிரியே அச்சு அசலா நம்ம பையன் இருந்தாலோ இல்லை மனைவி மாதிரியே அச்சு அசலா பெண் இருந்தாலோ (குணத்தில்) நாம அதை விரும்புவோமா இல்லையா? ஏன்?

# எப்படி இருந்தாலும் நம் சந்ததியை விரும்பத்தான் செய்வோம். 
அப்பா அல்லது அம்மா உயிருடன் இல்லாமல் இருந்தால் சென்டிமென்ட் அழுத்தமாக இருக்கக் கூடும்.

& என்னை மாதிரி குணத்தில் என் பையன் இருந்தால், 'பாவம் அப்பாவியா இருக்கிறானே' என்று சந்தோஷப்படுவேன். மனைவி மாதிரியே குணத்தில் என் பெண் இருந்தால், ' பாவம் எவன் இவளிடம் மாட்டப் போகிறானோ ' என்ற அச்சம் வரும். நல்லவேளை - என் பையன், பெண் இருவருமே சுயமாக சிந்தித்து,  சரியாக நடந்துகொள்ளும் குணம் கொண்டுள்ளார்கள்! 

 ===================================================




எங்கள் இந்தவாரக் கேள்வி : 

சென்ற வாரக் கேள்விக்கு, உடனடியாக செயலில் இறங்கவிடாமல், உங்களைத் தடுத்தது எது? 

a) Question was not clear.
b) Wanted to participate but no time.
c) Totally forgot after sometime.
d) Fear of failure.
e) Fear of ridicule. 
f) Hesitant to participate.
g) Thought my idea worthless.
h) There could be some leg pulling or hidden trap in this.
i) இவன் கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் அனுப்பினால் என் கௌரவம் என்ன ஆவது? 
j) வேறு ஏதாவது காரணமா (நீங்க சொல்லுங்க ! )

=============================================

மீண்டும் சந்திப்போம்! 

=============================================

151 கருத்துகள்:

  1. அன்பின் KGG, ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. வாங்க துரை செல்வராஜூ ஸார்... உங்களுக்கும் இனி வரப்போகும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு.

      நீக்கு
    2. வரவேற்ற அனைவருக்கும், துரைக்கும் மற்றும் வரவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள், நல்வரவு, வணக்கம்.

      நீக்கு
    3. அனைவருக்கும் நல்வரவு

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா மற்றும் எல்லோருக்கும்

    தலைப்பு பயமுறுத்துதே அதாடு அந்தக் கேள்வி கேட்டது ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாருனு வந்திருக்கணும் அதோடு நு வந்துருச்சு ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      //அதாருனு வந்திருக்கணும்//

      ஆமாம்... ஆமாம்... உஷாரு... அவங்க வேற தமிழ்ல டி யாக்கும்! (அப்போ நான் தமிழ்ல டா வோ!)

      நீக்கு
    3. (அப்போ நான் தமிழ்ல டா வோ!)//

      ஹா ஹ ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடில ஸ்ரீராம். யு மேட் மை டே!!!!

      அப்ப அந்தக் கிளவி கேட்டது அந்த க்ரேட் க்ரான்ட்மா தானா!!!! ஹா ஹா ஹா

      இன்னும் பதிவு முழுக்க பார்க்கலையா...இனிதான் பார்க்கணும்

      கீதா

      நீக்கு
    4. ஆஹா!! க்ரேட் க்ரான்ட்மா இல்லை மீசைக் கேள்வி கேட்டது தேவதை!!

      கீதா

      நீக்கு
    5. தமிழ்ல டா வோ அல்லது டி யோ --- நான் தாடி --- சாரி டாடி.

      நீக்கு
  3. என்னவோ
    மாயா பஜாருக்குள்ளே வந்த மாதிரி இருக்குது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயா யாரு துரை ஸார்? அவங்க ஏன் பஜாருக்குள் வரணும்?

      நீக்கு
    2. அப்படிப் போடுங்க அரிவாளை!...

      நீக்கு
    3. பயங்கர வன்முறையா இருக்கே...

      அரிவாளைப் போட்டா அவங்க பஜார்லேருந்து போயிடுவாங்க போல....!!!

      நீக்கு
    4. ஆஹா!! இது அடுத்தது ஸ்ரீராம் சூப்பரோ சூப்பர் ரசிச்சுட்டு இருகேன்....

      இன்று ஸ்ரீராம் செம ஃபார்ம்ல இருக்கீங்க போல!!!

      கீதா

      நீக்கு
    5. // அரிவாளைப் போட்டா அவங்க பஜார்லேருந்து போயிடுவாங்க // பஜார்லேருந்தா -- அரிவாளைப் போட்டா அவங்க உலகத்தை விட்டே போயிடுவாங்கோ

      நீக்கு
    6. ஒருவேளை அவங்க பஜாரியாயிருந்தா தன்னை நோக்கி வரும் அரிவாளை பிடித்து திருப்பி போட எவ்வளவு நேரமாகும்? சும்மா பஜாரே அதிர்ந்து போகுமில்லையா? சுவாரஷ்யம்...வாழ்க இந்த கால தமிழ் படங்கள்..

      நீக்கு
  4. கண்டிப்பா b, c, d e f i இல்ல மீக்கு...

    முதல்ல அதுக்கு இங்க அதைப் பத்தி கொஞ்சம் பேசிட்டுப் போனேனே....உங்களுக்குப் படம் அனுப்புவது பத்தி அது டக்குனு ஸ்ட்ரைக் ஆகலை அண்ணா...ஹிஹிஹி

    அதிரா சூப்பர்!! இருங்க அவங்க எழுதியதை வாசிக்க முடியலை பார்த்துட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொனொனு இங்கு கருத்துகள் சொன்னா போதும் இல்லைனா படம் எடுத்து அனுப்பணும்னு நினைச்சுட்டேன் அண்ணா ....இங்கு ஏதோ கொஞ்சம் சொல்லிட்டுப் போய்ட்டேன்....அதனால படம் ஸ்ட்ரைக் ஆகலை ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  5. அதிரா அது சரி நீங்க கேக்குறது...இருக்கட்டும் கேட்குறதை விட நீங்க தர வேண்டியது நிறைய பாக்கி இருக்கே!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூசாரே ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியில ஏதோ ஒரு மூட்டை எங்களுக்கு அப்புறம் பிரிச்சு தரேன்னு சொல்லி என்னைப் பாதுக்காக்க சொன்னீங்களே!! (ஏஞ்சல் அதுல பச்சைக்கல் னு ஒண்ணு அதுவும் அடக்கம் தானே!!) நினைவிருக்கா!! அப்புறம் ஸ்ரீராமுக்கும் ஏதோ ஒரு கணக்கு இருக்கே நீங்க கொடுக்க!! அதெல்லாம் எப்போ செட்டில் ஆகும் ஹிஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
  6. அதிராவின் பேப்பரில் இடப்பக்கம் இருக்கும் பேப்பரில் மேல்பகுதிதான் விலை மதிக்க முடியாததாக என் கண்களுக்குத் தெரியுது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. "அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா" என்ற பழமொழி உண்டு.

    பதிவு சுவாரஸ்யம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ!! கில்லர்ஜி அந்தக் கேள்வி கேட்டது ஏஞ்சல்!! இப்படி அவங்க சித்தப்பாவை இழுக்கலாமா!!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  8. அட? அதிரடி செய்திருக்காப்போல் கூடச் செய்திருக்கலாமா? தோணவே இல்லை. அதோடு நேரமும் எங்கே இருந்தது? சுத்தமா இது விஷயம் மறந்தே போச்சு! ஏகாந்தன் என்ன சொல்லப் போகிறார் என அறியக்காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //..என்ன சொல்லப் போகிறார் என அறியக்காத்திருக்கேன்..//

      KGG-Ji புதன்கிழமைத் துப்பாக்கியை என் பக்கம் திருப்பிவைத்திருக்கிறாரே என்று பார்த்தால்.. நீங்களுமா !

      நீக்கு
    2. ஹலோ ஏகாந்தன் அண்ணா நாங்க எல்லாருமே வெயிட்டிங்க்...அப்படிச்சாயும் பூஸார் வாலைப் பிடிச்சு ஓட்டலாமேனுதான் ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. ஆமாம், ஆமாம். பூஸார் வருவதற்குள் சொல்லிடுங்க ஏகாந்தன் ஜி.

      நீக்கு
  9. கேள்வி பதில்கள் எல்லாம் சுவாரசியம். மீசை முளைத்த பெண்ணின் படத்தைப் போட்டுப் பயமுறுத்திட்டார் கௌதமன் அவர்கள். ஆனால் ஹார்மோன்கள் பிரச்னையால் சில பெண்களுக்கு மீசை, என்ன தாடி கூட வந்து பார்த்திருக்கேன். இது 50 வயதுக்கு மேற்பட்ட சில பெண்களுக்கு வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //..இது 50 வயதுக்கு மேற்பட்ட சில பெண்களுக்கு வரும்!..//

      இயற்கை வழங்கும் இலவச இணைப்போ !

      நீக்கு
  10. சென்றவாரக் கேள்விக்கு உடனே பதிலளிக்க முடியாமல் தடுத்தது என்னோட சொந்த வேலைகள். கணினியிலேயே இருந்தும் பதிவுகள் பக்கம் வர முடியலை! இதைப் பற்றி மறந்தும் போச்சு! இல்லைனா வெள்ளைத் தாளில் கேஜிஜி சார் கொடுக்க வேண்டிய பத்து லட்சம் ரூபாயைப் பற்றிக் கேட்டு எழுதி ஸ்கான் பண்ணி அனுப்பி இருக்க மாட்டேனா என்ன? அநியாயமா நினைவில் இல்லையே! :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ கீதாக்கா நீங்க வேற இப்படி பூஸாருக்குப் போட்டுக் கொடுக்கறீங்களே!!! நான் அவங்க பாக்கியை நினைவு படுத்திட்டுருக்கேன்...!!!!!!!!!!!!!! உங்களுக்கும் அதுல பாக்கி இருக்கு தெரியுமோ!!

      கீதா

      நீக்கு
    2. // வெள்ளைத் தாளில் கேஜிஜி சார் கொடுக்க வேண்டிய பத்து லட்சம் ரூபாயைப் பற்றி// கே ஜி ஜி சாருக்குக் கொடுக்க வேண்டிய என்பதைத் தவறாக எழுதியிருக்கிறீர்கள்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா!!!

      கீதா

      நீக்கு
  11. பதில்கள்
    1. அதே நானும் என்னா நெல்லையைக் காணமேனு காலைல போட்ட கமென்ட்ஸோடு மேலே போட்ட கமென்ட் போகலைனு இப்பத்தான் பார்த்தேன்...அது போகலை போல அதுகுள்ள கரன்ட் போயி!!

      கீதா

      நீக்கு
    2. நெல்லை பயணத்தில் இருக்கார் இல்லையோ?!

      கீதா

      நீக்கு
    3. நெல்லை சார் வாங்க .... வாங்க ...சட்டுன்னு வாங்க.

      நீக்கு
    4. நெல்லை பயணத்தில் இருக்கார். மெயிலுக்கோ,வாட்சப்புக்கோ கூட பதில் வரலை!:) அம்புட்டு பிசி! :)

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. . முதல் உதவி அவசர உதவி இங்கே வெளிநாட்டில் அனைவருக்கும் கட்டாயம் தெரிஞ்சிருக்கணும் .நம்ம ஊரில் அப்படி இப்போ வசதி வந்திருக்கா ?
    ( நான் cpr ட்ரெயினிங் போயிட்டு வந்துட்டேனே அதை எல்லாருக்கும் சொல்லியாகணுமில்ல :))))))))))//

    ஏஞ்சலின் , ட்ரெயினிங்க் போய் வந்தது மகிழ்ச்சி. உங்களின் இந்த சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ஏஞ்சலின் இந்த கேள்வியும், சாரின் பதிலும் அருமை.

    நெல்லைத் தமிழன் கேள்வியும் பதிகளும் அருமை.

    வயது ஆக ஆக, சாப்பிடும் அளவு குறைகிறதா இல்லை வேளைகள் குறைகிறதா? ஆம் என்றால் எதனால்?
    உணவின் மீதான ஆர்வம் 40 வயதானதற்குப் பின் குறைந்துவிடுமா? எந்த வயதில், 'போதும் ரசித்துச் சாப்பிட்டது.. ஏதாவது கொஞ்சமா வயிற்றுக்குச் சாப்பிட்டால் போதும்' என்று தோன்றும்?
    $ வயதானால் வேலை செய்வது குறைவு. அதனால் உணவும் குறைவு.
    ருசிகள் வயதானால் வேறுபடும். நாக்கின் மேல் படிமங்கள், ருசி உணரும் பகுதிகள் தேய்வு இப்படி ரசனை குறைபாடுகள் வந்து ஏதோ சாப்பிட்டு நிரப்பினால் போதும் என்ற மனப்பாங்கு வரும்.


    அதிராவின் கையெழுத்துக்கு ஏகாந்தன் அவர்கள் என்ன சொல்ல போகிறார் என்று அறிய ஆவல்.





    பதிலளிநீக்கு
  14. இந்த வார கேள்வி பதில் பங்கு கொண்டவர்கள் குறைவாக இருந்ததாலோ என்னவோ, உரையாடல் போல அல்லது பேட்டியைப் போல இருக்கிறது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. என் பின்னூட்டத்திலிருந்தே ஒரு கேள்வி. பேட்டி என்பதும் கேள்வி பதில்தானே பின் ஏன் அதற்கு பேட்டி என்று தனியாக ஒரு பெயர்?

    பதிலளிநீக்கு
  16. சென்று வார கேள்விக்கு நான் கூறிய பதிலை நீங்கள் புறம் தள்ளி விட்டீர்கள். எனவே என் புரிதல் தவறு என்று புரிந்து கொண்டேன்.தவிர (h)உம் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா - நான் யார் கூறிய பதிலையும் புறம் தள்ளவில்லை. நான் சொன்னவாறு செய்து படம் எடுத்து அனுப்பியவர் அதிரா மட்டும்தான். அவரும் வெற்றுத்தாளின் மதிப்பை சரியாகப் பதியவில்லை. வெற்றுத் தாளின் மதிப்பு ஒரு பவுண்ட் என்பது சரியில்லை.

      நீக்கு
  17. ஏஞ்சல் முதல் கேள்வி சூப்பர் நல்ல யோசனை...

    பதில்கள் செம...கௌ அண்ணா ஹா ஹா ஹா ஹா அந்தப் படம் பயமுறுத்துது!!

    ஆனா ஏஞ்சல் சில பெண்களுக்கு மீசை வளருது. என் நட்பு வட்டத்திலும் உறவினர்களிலும் உனுட். பாவம் அவங்களுக்கு நாடில கூட வளருது. அப்புறம் ஏதோ சில ட்ரீட்மென்ட் எல்லாம் செஞ்சுக்கிட்டாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. வந்தவர்கள் வாழ்க. மற்றவர்கள் வருக. கணினி அருகே வந்த பிறகு எல்லோருக்கும் தனித்தனி பதில்கள் அளிக்கின்றேன். அலைபேசி மூலம் இந்த கமெண்ட்.

    பதிலளிநீக்கு
  19. பெண்களுக்கு ஏன் மீசை இல்லை? சரியான ஐங்ஸ்டைன் ஆராய்ச்சியா இருக்கே!

    சில குறிப்பிட்ட ஹார்மோன்களைக் கேட்டால் வேண்டுமானால் நாங்கள் சுரந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம் என்றன... அது மட்டுமல்லை, அப்படிச் சுரப்பதற்கு என்னன்ன செய்ய வேண்டும் விவரக் குறிப்புகளையும் பட்டியலிட்டன. வேண்டி விரும்பி செயல்பட்டால் முடியாத காரியம் எதுவுமில்லை என்று இலவச அட்வைஸ்கள் நிறைய.

    ஆண்--பெண் தரப்பு வித்தியாசம் வேண்டி அவர்கள் தான் என்னைப் புறக்கணித்து விட்டார்கள் என்று குற்றச்சாட்டு வேறு.

    போதும்டா சாமி என்று ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  20. 2. முதல் உதவி அவசர உதவி இங்கே வெளிநாட்டில் அனைவருக்கும் கட்டாயம் தெரிஞ்சிருக்கணும் .நம்ம ஊரில் அப்படி இப்போ வசதி வந்திருக்கா ?//

    மூன்று பதில்களும் நன்றாக இருக்கின்றன.

    ஏஞ்சல் அங்கெல்லாம் உண்டு. பள்ளியிலேயே தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லை . தெரிந்தவர்கள் இருந்தாலும் வெரி ரேர். கௌ அண்ணா சொல்லியிருப்பது போலத்தான் பலரும்.

    நான் சில வருடங்களுக்கு முன் பள்ளிகளில் குறிப்பாக எல்கேஜி, யுகேஜி பள்ளிகள் தொடங்க நினைத்த என் வட்டத்தில் இருப்பவர்களிடம் சொன்னது இதுதா..

    ஏபிசிடி ரைம்ஸ் தொடங்காதீங்க. முதல்ல சிவிக் சென்ஸ்...ரோடை எப்படிக் க்க்ராஸ் செய்யனும் பொது இடத்தில் குப்பை போடக் கூடாது துப்பக் கூடாது போன்றவை, பள்ளியில்வீட்டில் விழும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவது, வீட்டில் சிறிய சிறிய பணிகள் செய்வது போன்றவை இன்னும் நிறைய

    ப்ளஸ் ஒன்றாம் வகுப்பிலிருந்து சிறிய சிறிய முதலுதவிகள்....பெரிய வகுப்பு வரை அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப கற்றுக் கொடுக்கணும் என்றும், மாரல் வகுப்புகக் கதைகளைக் கொண்டே இதை எல்லாம் சொல்லிக் கொடுப்பது நாமாகவே கொஞ்ச்ம இமாஜின் செய்து என்று ஐடியாஸ் கொடுத்தேன்..நான் கதைகள் உருவாக்கித் தருவதாகவும் சொன்னேன். பள்ளி என்பது இன்ட்ரெஸ்டிங்காக இருக்க வேண்டும். சும்மா நோட்புக், ஹோம்வ்வொர்க் ஏ 20 லைன் எழுது, ஏ ஃபார் என்று குழந்தைகளைப் போரடிப்பதை விட அதையும் கதை வடிவத்தில் கொண்டு வரவும் ஐடியாஸ்...

    என் தம்பி மகளுக்கு டைனோசர் ரொம்பப் பிடிக்கும் என்னை டைனோசர் கதைதான் சொல்லச் சொல்வாள் என்பதை அக்க கதை இப்படி 16 வால்யூம் போட்டேன்...வாயில் தான் எழுத்தில் அல்ல...அதில் இவை அனைதும் இடம் பெறும் வகையில்... ஹிஹிஹிஹி அதில் ஒரு கேரக்டர் என் தம்பி மகள்..நான் டைனோசர். நான் டைனோசர் போல தவழ்ந்து கொஞ்சம் சேஷ்டைகள் செய்து...ஹா ஹா ஹா...அப்படி முதலுதவிகள், சிவிக் சென்ஸ் எல்லாம் அந்தக் கதையில் உட்புகுத்தி.....கோல்டன் டேய்ஸ். பட்....ம்ம்ம் இப்போது அவை நினைவில் மட்டுமே...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. என்னதான் நமக்கு பிடித்த வேலை என்றாலும், சில சமயம் அதை செய்யக் கூட சலிப்பு வருகிறதே ஏன?

    ஏஜிங் க்ரேஸ்ஃபுலி என்கிறார்களே, மற்ற பருவங்களுக்கு அந்த க்ரேஸ் அவசியமில்லையா?

    பதிலளிநீக்கு
  22. *என் கேள்வியில் ஏன் வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  23. # அரசியல்வாதிகளால் மக்களுக்கு டிப்ரெஷன் வர வாய்ப்பு இங்கு அதிகம்.//

    இது இது இதை மிகவும் ரசித்தேன்...அதே அதே அவங்களுக்குக் கண்டிப்பா டிப்ரெஷன் வரா மாதிரி இல்லை. ஏன்னா அப்படி வந்திச்சுனா இத்தனை ஊழல் செய்வாங்களா என்ன? பயம் இருந்தாதானே தப்பி செஞ்சா அந்த டிப்ரெஷன் ஸ்ற்றெஸ் எல்லாம் வரும் மனசாட்சியே இல்லாதப்ப....

    இக்கேள்விக்கான பதில்கள் சூப்பர்..

    கீதா

    பதிலளிநீக்கு
  24. என் முதல் கேள்வி ஏன் என்று முடிவதற்கு பதிலாக ஏன என்று வந்து விட்டது. தயவுசெய்து ஏன் என்று திருத்திக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  25. எனக்கு ஒரு கதை தெரியும் அதை நீங்களும் சொல்றிங்களானு பாப்போம்.//

    ஹா ஹா ஹா ஹா....ஸ்ரீராம் இப்ப அலெர்ட் ஆயிடுவார்...எங்கே எங்கே எங்கே உங்கள் கதை கேவாபோக வுக்கு அனுப்பிடுங்கனு!!

    ஏஞ்சல் உங்க கேள்விக்கு பதில் உங்களுக்கே தெரிஞ்சுருக்கும் (கதை இல்ல சயண்டிஃபிக் ரீசன்) சேவல் காலைல கூவுவதற்கு.

    வெட் ஃபிசியாலஜில இன்டெர்னல் க்ளாக் பத்தி மகன் படிச்சப்ப இந்த சர்கேடியன் ரிதம் பத்தி - மனிதருக்கும் பிற ஜீவன்களுக்கும் உள்ள சர்கேடியன் ரிதம் அண்ட் இன்டெர்னல் க்ளாக் பத்தி படிச்சப்ப அறிந்தது. சேவலுக்கு இயற்கையாகவே இந்த க்ளாக் இருக்கறதுனால டேலைட் வெளி சவுன்ட் இல்லாமலேயே விடியறதுக்கு 2 மணினேரம் முன்னயே கூவுவாங்கனு ஜப்பான்ல இந்த சேவல்களை இருட்டு மற்றும் டிம் லைட்ல 24 டேய்ஸ் வைச்சு டெஸ்ட் பண்ணிருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ... ஏஞ்சல் சொல்லட்டும்.

      நீக்கு
    2. @கீதா :) நான் Circadian clock/பையலோஜிக்கல் ரிதம்ஸ் எல்லாம் சொல்லலை :) அதெல்லாம் சயன்ஸ் :)
      நான் சொல்றது ரஷ்யன் ஸ்டோரிசில் படிச்சது :)

      முந்தி முந்தி காலத்தில் நம்ம சேவலாருக்குத்தான் அழகான வண்ணமயமான மயில் தோகை போன்ற தோகை இருந்ததாம் அந்த தோகை டிடச்சபிள் :) யாரும் இதுக்கெல்லாம் லாஜிக் கண்டுபிடிக்க கூடாது சொல்லிட்டேன் :) நைட் தூங்கும்போது கழட்டி வசித்து காலையில் விடிய முன் எடுத்து மாட்டிகிட்டு வாக் போகுமாம்
      அந்த ஊர் மயிலுக்கு பெண் மயில் போல் சாதா தோகை தான் :) ஒரு நாள் மயில் என்ன பண்ணுச்சாம் சேவல் கிட்ட வந்து நான் என் மாமனார் வீட்டு ஒரு பங்க்ஷனுக்கு போறேன் உன் தொகையை இரவல் தரியா ? என்று கேட்டதாம் சேவலும் மனமிரங்கி //மயிலே மயிலே நைட் போட்டுபோய்ட்டு அதிகாலையே நான் மலை மேலே காத்திருப்பேன் அங்கே விடியுமுன் என் தோகையை கொடுக்கணும் இல்லேன்னா அவ்ளோதான் நானா நடமாட முடியாதது னு சொல்லிச்ச்சாம் :)
      இந்த மயிலுக்கு அந்த தோகை மேலே கண்ணாச்சே :) அது அப்படியே தோகையோடு வேறே ஊருக்கு போய்டுச்சாம் .அதிகாலை மலை உச்சி வந்து சேவல் மயிலே மயிலே சீக்கிரம் வா மேலே இருக்கேன் என் தோகை கொடு னு கொக்கரக்கோ கொக்கரக்கோன்னு தினமும் அதிகாலை எழும்பி கூவுதாம் :) எப்புடி இந்த ரஷ்ய நாட்டு கதை :) அண்ணாநகர் என்ற இடம் உருவாகுமுன் அங்கே ஒரு புக் எக்சிபிஷனில் வணங்கிய புத்தகத்தை எனக்கு பரிசைக்கொடுத்தாங்க அதில் இந்த கதை படிச்சேன் :)) எல்லாம் fables வகை ஸ்டோரீஸ்

      நீக்கு
    3. //வணங்கிய//

      SSS SPELLING MISTAKE ITS வாங்கிய

      நீக்கு
    4. ரஷ்ய கதை தமிழ் ஆக்கம் படித்த நினைவு. குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தோம். நிறைய ரஷ்ய நாடோடி கதைகள் என்று வாங்கி கொடுத்தோம். ஜார் மன்னர் கதைகள், மீன் கதை, குதிரை கதை எல்லாம்.
      அருமையான பகிர்வு ஏஞ்சல்.

      நீக்கு
    5. ஆமாம் கோமதி அக்கா :) தவளை இளவரசன் /எது பெரியது ?/கோடாலியும் கேழ்வரகு களியும் /பாபாயா கவும் சூனியக்காரியும் இப்படி நிறைய ஆசையா இருந்தது அந்த பெரிய புத்தகத்தை படிக்க .இனமும் நினைவில் வச்சிருக்கேன்

      நீக்கு
    6. தவளை இளவரசன் கதை, சூனியக்காரி கதை படித்த நினைவு இருக்கு.
      தவளை இளவரசன் கதையை ராணி பத்திரிக்கையில் தவளை இளவரசி கதையாக போட்டார்கள்.

      நீக்கு
    7. ஆமாங்கா தவளை இளவரசி தான் ..இளவரசன் அம்பை திறந்த வெளியில் இருந்து ஏவனும் அது யார் கையில் கிடைக்குதோ அவர்களை கல்யாணம் செய்யணும்னு மஹாராஜா சொல்வார் மூன்று மகன்களுக்கும் அதில் கடைசி மகன் ivan எறிந்த அம்பை க்ரவுண் அணிந்த தவளை பிடித்திருக்க அவர் அதை திருமணம் புரியும் கட்டாயம் ஏற்படும்

      நீக்கு
    8. சுவையான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    9. https://fairytalez.com/region/russian/

      இந்த லிங்கிலும் இருக்கு

      நீக்கு
  26. சேவல் கூவலுக்கு கௌ அண்ணாவின் பதில் ஹையோ சிரிச்சு முடில!! ஹா ஹா ஹாஹ் ஆ ஹ...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ஏஞ்சல் நானும் கூட ரொம்ப சமாளிக்க முடியவில்லை என்றால் எட்ட இருப்பதே நல்லது என்று நினைப்பேன். அதிகம் பேச்சு வைத்துக் கொள்ளாமல் ஹைபை என்ற நிலையில்...சிலரிடம் அப்படி எட்ட இருப்பது மேல் என்றே தோன்றும். அதுவும் மிகவும் நெகட்டிவாகப் பேசுபவர்களிடம் இருந்து...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. பெற்றோர் பிள்ளை புரிதலுக்கு கௌ அண்ணாவின் பதிலே என் கருத்தும்..

    55 வயது மணமகன், மணமகள் தவறில்லையே. இது அவரவர் சொந்த தனிப்பட்ட விருப்பம் முடிவு இல்லையா? அவர்கள்தானே வாழப் போகிறார்கள் அவர்களுக்கு அது சந்தோஷம் தருகிறது என்றால் அதை ஏன் தடுக்க வேண்டும். ஒருமாதிரியாகப் பார்க்க வேண்டும்?

    நாம் இச்சமூகத்தில் சொல்லபப்டும் பல நோ க்களுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டதால் ஏற்க முடியாமல் விமர்சிக்கிறோம்.

    சமூகம் விமர்சிக்கலாமாக இருக்கும்..அது அப்படித்தான் என்ன செய்தாலும் விமர்சிக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தான் கீதா சிலர் அதை மன உறவு என நினைக்காம வேற மாதிரி நினைப்பதை பார்த்ததால் கேட்டேன்

      நீக்கு
  30. வெள்ளைக் காகிதத்தைப் பார்த்ததுமே பேனாவைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்துவிட்டாரோ அதிரா ?
    எழுதுவதையெல்லாம் எழுதிவிட்டு எல்லாவற்றுக்கும் மேலே போய் கையெழுத்திடும் மேதை இவர் ஒருவரே தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா பலன் சொல்லுங்க சார். எவ்வளவு பேருங்க ஆவலோடு காத்திருக்கிறோம்!

      நீக்கு
    2. ஆமா ஆமா சொல்லுங்கய்யா சொல்லுங்கோ பரிசைச் சொல்லுங்கோ:) சே சே பலனைச் சொல்லுங்கோ:)... ஹா ஹா ஹா கெள அண்ணனுக்கு வயசாகிட்டதால:).. கேள்வியையே மறந்திட்டார்ர்ர் கர்ர்ர்ர்ர்:)....
      ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:)..

      நீக்கு
    3. நான் ஞாபகம் வைத்திருந்ததுனாலதான மத்தவங்களைக் கேட்டிருக்கேன் அ(ட)ப்பாவி அதிரா!

      நீக்கு
  31. ஆஆஆஆஆஆஆ மீ லாண்டிங்:)).. காத்து ஐஸ்லாண்டில கொஞ்சம் ஓவரா அடிச்சுதா:)) பிளேன் கொஞ்சம் லேட்டூஊ:)).. என் பரிசு எங்கே? கெள அண்ணன் வெளில வாங்கோ.. பரிசு பாரமெனில் சொல்லுங்கோ கீதா ஜெல்ப் பண்ணுவா..

    //சென்ற வாரம் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அது என்ன கேள்வி என்று யாராவது (அந்தப் பதிவிற்கு சென்று பார்க்காமல்) நினைவுக்குக் கொண்டு வர முடியுமா?///

    இதென்ன இது தெரிஞ்சுகொண்டே தெரியாதமாஆஆஆஆஆஆஆறியேஏஏஏஏஏஎ கொஸ்ஸன் கேட்டுக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்:)).. கெள அண்ணன் இங்கின அதிராவைவிட எல்லோருமே வயசானவங்க:)) எல்லோருக்கும் ஞாஆஆஆஆஆஆபக சக்தி குறைஞ்சுபோச்சு:)).. இன்குளூடிங் அஞ்சு:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ!! அதென்ன கீதா ஜெல்ப் நு!! அதான் அல்ரெடி ஒரு பெரிய மூட்டைய பாதுகாத்துக் கொண்டு இருக்கேனே..அதை முதல்ல டிஸ்ட்ரிப்யூட் பண்ணுங்க அப்புரம் தான் புதுசா வரதை பாத்துக்க முடியும்....சென்னைல கஜா வராம போயிருச்சு. இல்லைனா கஜாகிட்ட கொடுத்து பத்திரமா ஒளிச்சு வைச்சிருக்கச் சொல்லிருக்கலாம்...

      கீதா

      நீக்கு
    2. கௌ அண்ணா பெரிய பரிசெல்லாம் கொடுத்துடாதீங்க..ஏற்கனவே இருக்கறதை இங்க ஒளிச்சு வைச்சு நம்ம ஊர் டாக்ஸ் கூடக் கட்டாம ஹா ஹா ஹா ஹா..

      அதை எல்லாம் எங்க எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்தாத்தான் பரிசு கொடுப்பேன்னு ஸ்ட்ராங்க கண்டிஷன் போடுங்க அண்ணா...

      எனக்கு ஏஞ்சல் வருவாங்க ஆதரவுக்கு பயப்படாதீங்க இந்த பூஸார் விடற சவுண்டுக்கு!!

      கீதா

      நீக்கு
    3. கீதா மூட்ட பத்திரம்:)... விரைவில புறப்படுறோம் ஶ்ரீராமின் அந்த மரத்தைப் பார்க்க:)

      நீக்கு
  32. //ஒருவர் மட்டும் பங்கேற்று, நான் கேட்ட வகையில் படம் எடுத்து அனுப்பி இருந்தார். அவர் அனுப்பிய படம், இந்தப் பதிவின் கடைசியில் வெளியிட்டுள்ளேன். ///

    ஹா ஹா ஹா ஏனையோருகுத் தெரியாதாக்கும் ஹா ஹா ஹா... பரிசைப் பற்றி அறிவிக்கவே இல்ல:)).. ஓ லாஸ்ட்டா அறிவிப்பார் போல:) எதுகும் பொறுமையாப் படிப்போம்ம்:) ஆரம்பமே பொயிங்கக்கூடா:)) பிறகு வைர அட்டியல் மிஸ்ஸாகிடப்போகுதேஎ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ பூஸார் கொஞ்சம் மேல போய்ப் பாருங்க!! வைர அட்டியல் யார்கிட்ட இருக்குன்னு!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. எனக்கு ஏஞ்சலுக்கு அப்புறம் எல்லா அக்காஸுக்கும் அது நினைவு இருந்துச்சு என்ன டக்குனு ஸ்ட்ரைக் ஆகல அம்புட்டுத்தான்...ஸோ நோ சவுன்ட் எங்களுக்கு வயசாகிப் போச்சுன்னு சொல்லிப்போட்டேன் ஆச்சியின் க்ரேட் க்ரான்மா!!

      கீதா

      நீக்கு
    3. ///ஸோ நோ சவுன்ட் எங்களுக்கு வயசாகிப் போச்சுன்னு சொல்லிப்போட்டேன் ஆச்சியின் க்ரேட் க்ரான்மா!////

      ஆச்டிக்குட்டி:)... ஆச்சி டார்லிங்:)... இதுவும் மறந்து போகுதே:)

      நீக்கு
  33. //நம் Graphology நிபுணர் திரு ஏகாந்தன் அவர்களை, அந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் தமிழ் எழுத்துகளை ஆய்ந்து, அவரைப் பற்றிய கணிப்புகளைக் கூறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுவே அவருக்கு எங்கள் பரிசு. ///

    இதென்ன இது புயுக் கதையாக் கிடக்கூஊஊஊஊ:)) இப்பூடியும் ஒரு சம்பவம் இடம்பெறும் எனச் சொல்லியிருந்தால் நான் ஹிந்தியில அதுவும் ரைப்பண்ணி அனுப்பியிருப்பேனெல்லோ சே..சே..

    போனகிழமையே ஏ அண்ணந்தான் நடுவர் என அறிவிச்சிருந்தால்:).. இந்தக் கிழமை முழுக்க அவருக்குப் பிடிச்ச கீரை வடையை அனுப்பியே பட்டர் பண்ணியிருக்கலாம்ம் அதுவும் ஜஸ்ட்டூ மிஸ்ட்டூஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கெள அண்ணன்:))

    சரி சரி ஏ அண்ணன்.. இப்போ கை எழுத்து மேல போடோணுமோ கீழ போடோணுமோ எனும் ஆராட்சியை எல்லாம் விட்டுப்போட்டு டக்குப் பக்கென அதிராவுக்கு வைர அட்டியல் தராட்டிலும் ஒரு வைர மூக்குத்தி... ஒரு வைர வேல்.. நான் என்ன எனக்காகவோ கேட்கிறேன்ன் எல்லாம் என் நேர்த்திக்கடன்களை நிறைவேத்திடோணும் எனும் நல்லெண்ணம்தான்....:))

    ஆஆண்டவா பழனிப்படித்துறை முருகா.. வள்ளிக்க்கு பிளாட்டினம் ஒட்டியாணம் போடுவேன்.. கெள அண்ணனை நல்ல மூட்டில வச்சிரப்பா எனக்குப் பரிசு கிடைக்கும்வரை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அண்ணா பாவம் இப்ப அவர் மைன்ட் வாய்ஸ்...தெரியாம இங்கிட்டு க்ராஃபாலஜினு சொல்லிட்ட்புட்டேன் அதுக்கு இப்பூடி ஒரு தண்டனையா....பாயின்டு...அதிரா வள்ளிக்கு மட்டும் தான் வேண்டுதல்...பாவம் தெய்வயானை கோச்சுக்கு மாட்டாரா அதுவும் முருகனை அல்லவா பிடிப்பார்..முருகர் அதிராவைக் கைகாட்டுவார் ஹை ஜாலி!! நாம தப்பிச்சுரலாம்னு....

      கீதா

      நீக்கு
  34. 11 ற்கான பதில் சூப்பர்..

    நெல்லையின், யாத்திறை பற்றிய கேள்விக்குப் பதில்கள் டாப் டக்கர்!!

    அதுவும் & பதில் ஹா ஹா ஹா ..அண்ணா நீங்க பேய்க்காட்டிட்டீங்க...உங்க அல்லேக் அனுபவத்துல இதைப் பத்தி எழுதவே இல்லை..!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  35. ///ஏஞ்சல் :

    1. ஆண் சிங்கத்துக்கும் பெண் சிங்கத்துக்கும் , பைரவர் பூனை புலி எல்லாத்துக்கும் whiskers இருக்கு ஆனா மனிதரில் பெண்களுக்கு மீசை இல்லையேன்னு யோசிச்சதுண்டா ??///

    ஹையோ முதல்ல அஞ்சுவைக் கொஞ்ச நாளைக்கு கூட்டில பிடிச்சு வைக்கோணும்:)).. பாருங்கோ அனுக்கா, தமனாக்கா படம் போடும் இடத்தில ஒரு பெண்பயங்கரவாதிப்படம் போட்டிட்டார் கெள அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் இப்பவே தேம்ஸ் கரையில உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்போறேன்ன்ன்:)... ஒரு பப்புளிக்குப் பிளேசில பெண்ணுக்கு மீசை வச்சு மானபங்கப் படுத்தியாச்சூஊஊஊ இதைப்பற்றி ஓசிக்காமல் கர்ர்ர்ர்ர்:)) நான் மட்டும்தான் இங்கின பெண்களுக்காக போராடுறேன்ன் கீசாக்கா கூட இல்லை:).. ஹையோ முதல்ல மட்டின் பிர்ராணியைச் சாப்பிட்டுட்டுப் புறப்படுவோம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பப்புளிக்குப் பிளேசில பெண்ணுக்கு மீசை வச்சு மானபங்கப் படுத்தியாச்சூஊஊஊ இதைப்பற்றி ஓசிக்காமல் கர்ர்ர்ர்ர்:))//

      அதனாலதான்...... கௌ அண்ணா அனுஷ் தமனாக்கா படம் போட்டு (மீசையோடு) நெல்லைட்டயும், ஸ்ரீராம் அரம கிட்ட மாட்டிக்குவாரா என்ன?!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. கீதா ஓடிவாங்கோ:) நல்ல ஶ்ரீரொங் பிரியாணியாச் சாப்பிட்டிட்டு ஓடியாங்கோ உண்ணாவிரதத்துக்கு:)

      நீக்கு
  36. ///4. சேவல் தானே தினமும் கொக்கரக்கோன்னு கூவுது அப்போ எதுக்கு கோழி கூவும் நேரம்னு சொல்றாங்க ???//

    இதை நான் என் 4 வயசிலேயே அம்மம்மாவைக் கேட்டேன் அதுக்கு அவ சொன்னா.. அதுகு பசிக்கிறதாம் பசியில கூவுமாம் ஹா ஹா ஹா...

    //,பெற்றோர் பிள்ளைகளுக்குள் குறைந்த வயது இடைவெளி புரிதலை ஏற்படுத்துமா ?
    ///

    அஞ்சுவின் இந்தக் கேள்வியைத்தவறாகப் புரிஞ்சதுபோல இருக்கு பதில்... என் கிட்னிக்கு எட்டிய வகையில்.. கேள்வி எப்படித்தோணுதெனில்... சின்ன வயசில குழந்தை பெற்றால்.. பெற்றோருக்கும் பிள்ளைக்குமான வயசு இடைவெளி குறைவாக இருக்குமெல்லோ.. அதுபற்றிக் கேட்டிருக்கிறா என நினைக்கிறேன்ன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகப் புரிஞ்சுருக்காங்க அதிரா...முதல் பதிலைப் பாருங்க அவர்தான் மிகவும் சீனியர்..அவர் சொல்ல வந்தது அதுதான்...என்று எனக்குத் தோன்றியது.

      கீதா

      நீக்கு
    2. ஏன் இப்போ ஶ்ரீராம் பதில் சொல்ல வருவதில்லையாக்கும்?:)...

      நீக்கு
    3. எங்க தலைவி சரியா பாயிண்டுக்கு வந்திட்டாங்க :) கீதாக்கா கூட அதைத்தான் சொன்னாங்க .
      50 வயது அம்மாவுக்கு 15 வயது மகள் மகன் இருந்தா அவர்களுக்கிடையில் என்னவிதமான புரிதல் இருக்கும் என்ற மாதிரிதான் கேட்டேன்

      நீக்கு
  37. //நெல்லைத்தமிழன்:

    பெற்றோரில் சீக்கிரம் மறைந்துவிடுவோரிடம் நமக்கு அன்பு கூடுதலாக இருக்குமோ?///

    அவர் மறைந்ததனால் அன்பு அதிகம் .. என்றில்லை நெல்லைத்தமிழன்... நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.. அதுதான் காரணம்... இப்பொ இருப்பவரின் அருமை இப்போ தெரியாது:)).. மறைஞ்சபின்புதான் கடுமையாக ஃபீல் பண்ணுவோம்.. இருக்கிறார்தானே எனும் அலட்சியம்:)).. மறைந்தபின்.. இனி வரவே மாட்டாரே எனும் கவலை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ஹைஃபைவ். நெல்லையின் இந்தக் கேள்விக்குப் பதில் அடிச்சு கொடுக்க வந்தப்ப கரன்ட் போயிடுச்சு...அதேதான் நீங்க சொன்ன காரணம் தான் சொல்ல வந்தது. நான் என் அம்மாவை, அத்தையை (அப்பாவின் சகோதரி) ரொம்பவே மிஸ் செய்யுறேன். அப்ப கவனிக்காம விட்டதெல்லாம் தோணுது. எப்பவுமே முற்றத்து முல்லையின் அருமை தெரியாதுனு ஒரு வசனம் போலத்தான். இருக்கும் போது தோன்றாதது இல்லாதப்ப தோணும். இனி நான் என்ன நினைத்தாலும் அவங்களுக்கு எதுவுமே செய்ய முடியாதே என்று தோன்றும்.

      கீதா

      நீக்கு
    2. அப்பூடித்தான் இப்போ அதிராவுக்கும் தாற பரிசை எல்லாம் தந்திடுங்கோ:)... ஹா ஹா ஹா

      நீக்கு
  38. ///எங்கள் இந்தவாரக் கேள்வி :

    சென்ற வாரக் கேள்விக்கு, உடனடியாக செயலில் இறங்கவிடாமல், உங்களைத் தடுத்தது எது? ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது என்ன தெரியாத மாத்ரியே ஒரு கொஸ்ஸன்ன்ன்:)).. எப்பூடிக் கஸ்டப்பட்டு நேரமொதுக்கி.. நைட் 12 மணிக்கு முழிச்சிருந்து படமெடுத்து அட்டாச் பண்ணி அனுப்பினாலும் நீங்க அதைப் பாராட்டவும் போறதில்லை:)) பரிசு தரவும் போறதில்லை:)) பின்பு எதுக்காக ரைமை வேஸ்ட் பண்ணோனும் என நினைக்கினமாக்கும்:)) ஹா ஹா ஹா.

    கெள அண்ணன் எதுவும் சொல்லாட்டில் எப்படி? அக் கேள்விக்கு என்ன பதில் எனச் சொல்லுங்கோ..

    வெற்றுத்தாள் வன் பவுண்ட் என்பது தப்பு என நீங்களே ஒரு முடிவுக்கு வரக்கூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க ரூபாயில மாத்திக் கணக்குப் பார்க்கிறீங்க[ஆஆஆஆஆஅ எனக்குப் பரிசு கிடைக்கவிடாமல், கெள அண்ணனே பண்ணிடுவார் போல இருக்கே:))]... சரி சரி மீக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. போயிட்டு வாறேன்ன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ ஒரு பேப்பர் ஒரே ஒரு பேப்பர் ரூபாய் 88.18 வருமா :) இது ஓவரா இல்லை :)

      நீக்கு
  39. சென்ற வாரக் கேள்விக்கு பதில் சொல்லாததன் காரணம் முதல் மூன்றும். அதோடு சுத்தமா மறந்தும் போச்சு!

    பெற்றோர்,பிள்ளைகளுக்கு இடையே சுமார் 20 வயது வித்தியாசம் (முக்கியமாய்த் தாய்க்கும், குழந்தைக்கும்) இருந்தால் போதும்னு நினைக்கிறேன்.நீங்க கேட்ட கேள்வியின் பொருள் இதுவானால் என்னோட பதில் இது தான். சுமார் 25 வயதுக்குள்ளே குழந்தை பெற்றுக்கொள்வதும் நல்லது. இல்லை எனில் நடு வயதுத்தாய்க்கு அவ்வளவு ஓடி ஆட முடியாமல் போகலாம். இப்போதெல்லாம் 35 வயதுக்கு முதல் குழந்தை பெற்றுக்கொண்டு திண்டாடும் பெற்றோர்களைப் பார்க்க முடிகிறது. பெற்றோரால் முடியாமல் போவதோடு அவங்க குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யும்போது இவங்களுக்கும் வயது ஆகி இருக்கும்! ஆகவே இவங்களால் தங்களோட சொந்தப் பேரன், பேத்திகளைப் பார்த்துக்கொள்வதில் பிரச்னை வரலாம்.இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா ..அதுவும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் 40 -50 இல் வரும் அப்போ வீட்டில் பதின்ம வயது பிள்ளைகள் குறிப்பா பெண் பிள்ளைகள் என்றால் இன்னமும் புரிதல் உணர்வோடு இருக்கலாம்

      நீக்கு
  40. பெற்றோர் இருவருமே நமக்குத் தேவை தான்! இரண்டு கண்ணும் தேவை தானே! சிறு வயதில் பெற்றோரை இழப்பதை விடக் கொடுமை வேறே எதுவும் இல்லை.

    போன வாரம் நீங்க கேள்வி எதுவும் கேட்டதாய்த் தெரியலை. நினைவில் வரவில்லை. வெள்ளைத் தாளின் மதிப்பைத் தான் கூட்டச் சொல்லி இருந்தீர்கள். பேசாமல் ஒரு கூட்டல் கணக்குப் போட்டு ஸ்கான் பண்ணி அனுப்பி இருக்கலாமோ! நம்மவர் நாலு ஸ்தானம், ஐந்து ஸ்தானம் கூட்டல்களெல்லாம் அநாயாசமாய் மனக்கணக்காய்ப் போடுவார். இங்கே யாருக்கானும் தெரியுமானு பார்த்திருக்கலாம். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை நீங்க எதுவும் அனுப்பவில்லை! அனுப்பியிருந்தால் நமக்கு ஏன் பால் கணக்கு எல்லாம் வருதுன்னு நினைத்து தலை சுற்றி விழுந்திருப்பேன்!

      நீக்கு
  41. நெல்லை நம் குழந்தைகள் நம்மைப் போல இருந்தால் சந்தோஷம் இருக்கும் தான். ஆனால் எனக்கு கூடவே ஹையோ என் மகனுக்கு என் நெகட்டிவும் வந்தா அது நல்லதில்லையே என்று அதைச் சொல்லவும் செய்திருக்கேன். மகனிடம். அதே போல அவனிடம் சொல்லுவேன் நான் செஞ்சது ஏதாவது சரியில்லைனு தோணினா என்கிட்ட நீ ஃப்ரீயா சொல்லலாம்...என்று ரொம்ப சின்ன வயசிலேயே சொல்லி நான் சொல்றது எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போடக் கூடாதுனும்..தப்பு இருந்தா சுட்டிக் காட்டணும். இப்பவும் நான் சொல்றது உடன்பாடில்லைனா உடனே சொல்லிடுவான்.

    கௌ அண்ணா சொல்லிருப்பது போல என் மகனும் சுயமாகச் சிந்திக்க கூடியவன். அதுக்காக ஓவராவும் போக மாட்டான்.. ரொம்பவே ஒரு நட்பு ரீதியாத்தான்..அவன் எனக்கு சொல்றதுதான் இப்ப கூடுதல் ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமையாக உள்ளது. கேள்வி திலகத்தின் ஒவ்வொரு கேள்வியும், தன்னுள் ஆழமான பொருளை கொண்டுள்ளது போல், பதில்கள் மூன்றும், முத்துக்கள் மூன்றாக முன்னின்று பிரகாசிக்கிறது. வாட்சப் கேள்வி பதில்களும் மிக அருமை. இந்த கேள்வி பதில்களை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் படிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  43. //எங்கள் இந்தவாரக் கேள்வி :

    சென்ற வாரக் கேள்விக்கு, உடனடியாக செயலில் இறங்கவிடாமல், உங்களைத் தடுத்தது எது?//
    இதோ வந்திட்டேன் : )
    போன வாரமே ஒரு தாளில் என் பெயரை எழுதி மறுத்தாளில் ஒரு காய்ந்த குச்சி செங்குத்தா செட் செஞ்சி தோட்டத்துக்கு போய் நாலு வண்ண மலர்கள் ஆரஞ்சு POPPY வெள்ளை நைஜெல்லா அப்புறம் இலையில் ஒரு துண்டு பிறகு Purple ப்ளூ லின்சீட் மலர் எல்லாத்தையும் எடுத்து தேசியக்கொடி செட்டப் செய்ய நினைச்சேன் :) ஆனா நைஜெல்லா பாப்பி லின்சீட் மலர்கள் செடியில் இருந்ததன அவற்றை கொய்ய மனம் வரலை :)
    இன்னொரு ஐடியா உதிர்ந்த பெட்டல்ஸ் கலெக்ட் செஞ்சு வெள்ளை தாளில் பரப்பி இன்னொரு மேலே தாளை வைத்து பூஉரிக்கட்டையால் உருட்டினாலும் கலர்புல் பேப்பர் கிடைக்கும் .விலை அதிகம் தான் இங்கே அப்படிப்பட்ட தாள்களுக்கு .இதையும் செய்ய மனம் வரல்ல :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாடா நிறைய ஐடியாக்கள் வந்தும் செயல் வடிவம் கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே!

      நீக்கு
    2. திங்கள் கிழமையில் இருந்து பிஸியாவே இருக்கேன் இன்னிக்கும் கொஞ்சம் நேரமே கிடைச்சது அதனாலேயே எதையும் செய்ய முடியலை .ஜப்பனீஸ் பேப்பர் பேட்டி ஓரிகாமி பேப்பர் பாக்ஸ் ஒன்று செய்ய நினைச்சி அதுக்கும் டைம் இல்லாம போச்சு

      நீக்கு
  44. ஸ்ஸ் ஹப்பா :) வெரி பிஸி டே :) இப்போதான் நேரம் கிடைச்சது ..எனது கேள்விகளுக்கு பதிலளித்த அனைத்து ஆசிரியர்களுக்குஜ் நன்றீஸ் :)

    பதிலளிநீக்கு
  45. இதை FBI எங்கள் பிளாக் நோக்கி வராங்க ட்ரம்ப் அங்கிளின் கையெழுத்து இங்கெப்படி வந்ததுன்னு :) அதிவும் இது கிம் அங்கிள எதிர்த்து எழுதின கடிதத்தின் சிக்னேச்சர் :) ஹையோ ஹையோ எல்லாரும் ஒடுங்க :)இந்த ஸ்கொட்லாந்து பூனையால் அமெரிக்காவும் வடை :) வட கொரியாவும் சேர்ந்து வராங்க அடிக்க

    பதிலளிநீக்கு
  46. திருவாளர்கள் கேஜிஜி, அதிரா, கீதா -

    தாமதமாகித்தான் விட்டது. என்ன செய்ய, தூங்கப்போய்விட்டீர்கள்! சரி, கொஞ்சம் குழப்புகிறேன். ஆனால் அதிராவைப் பேய்க்காட்டமுடியாதே.. அப்படித்தான் Graphology-யும் சொல்கிறது!

    அப்பாவியின் எழுத்துக்கள் இடது வலதென சாயாமல், செங்குத்தாக, தெளிவாக.:

    உணர்ச்சிகளைக் கட்டிக்காக்க முனைபவர். ஆனால்... எப்போதுமா அது நடக்கும்? சமயத்தில், உணர்ச்சிவேகத்தில் (அதீத கோபம்) -அப்பாவி அதிரக்கூடும். பக்கத்தில் ஏதாவது உடையலாம். ஜாக்ரதை!

    அம்மணியின் எழுதுவரியைக் கவனிக்கையில் (நல்லகாலம், கோடில்லாக் காகிதம்!), வரி கோணல் மாணலாக அலையாமல், சமநிலையில் செல்கிறது:

    இது ஸ்ட்ராங் ப்ளஸ். ஒரேயடியாக optimistic ஆகிக் குதிக்காமலும்,அல்லது pessimism-த்தில் கீழே விழுந்துகிடக்காமலும், தன்னை balanced -ஆக வைத்துக்கொள்வதில் வல்லவர். Simply clever எனச் சொல்லலாமோ!

    ஆ! இன்னொரு விஷயம் கண்ணில் படுகிறதே. வார்த்தைகளுக்கிடையே 'சீரான இடைவெளி'..:

    புத்திசாலிப்பெண் ! நட்பு பாராட்டி மகிழும் குணமுண்டு. எங்கள் ப்ளாகில் ஆட்டம்போடுவதன் காரணம் புரிகிறது!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் ஐயா, சூப்பர். புள்ளி வைக்கும் எழுத்துகளுக்கு அவர் சிறிய வட்டங்களை புள்ளிகளாக வரைந்துள்ளதால், எந்த விஷயத்திலும் அவரை convince செய்வது மிகவும் சிரமம். சகோதர சகோதரிகளிடம் மிகவும் அன்பாக இருப்பார்.

      நீக்கு
  47. ஆஆஆஆஆ ஏ அண்ணன்..இவ்ளோ விசயமிருக்கோ கை எழுத்தில்... .. புகழ்ச்சியை விரும்பாதோர் உண்டோ இவ்வுலகில்:)).. ஹா ஹா ஹா கடுமையாக கோபம் வருமென்பது மட்டும் பொருந்தாது.. பொதுவா கோபம் வருவதில்லை, ஆனா எப்பவாவது வந்தாலும் .. பொருட்கள் எறிஞ்சு, உடைச்சு அப்படி எல்லாம் இல்லவே இல்லை...:)... புஸ்ஸ் என அடங்கிடும்:)).[[அஞ்சூஊஊஉ உங்களோட கை எழுத்து எனக்கிப்போ வேணும்ம்ம்:)]

    இந்தாங்கோ ஏ அண்ணனுக்கு மட்டும்...:)

    https://images-na.ssl-images-amazon.com/images/I/41C18rFtVsL._SL500_AC_SS350_.jpg

    பதிலளிநீக்கு
  48. கௌதமன் சார் graphology எக்ஸ்பெர்ட்க்கு எனது கையெழுத்து அனுப்பி வைக்கப்படும்:) விரைவில்

    பதிலளிநீக்கு
  49. 1, தவறுகளில் இருந்து திருத்தி க்கொள்ள வேண்டும் என்கிறார்கள் அப்போ தவறு செய்ய பயப்பட வேண்டுமா வேண்டாமா ?
    நீங்கள் அப்படி திருத்திக்கொண்ட சம்பவம் உண்டா ?

    2, இப்படிப்பட்ட நட்பு வேண்டும் என்று நினைத்ததுண்டா ? அப்படிப்பட்ட ஒரு நட்பாக நீங்கள் பிறருக்கு இருந்ததுண்டா ?

    3, 10 வயது சிறுவன் /சிறுமி /18 வயது ஆண் பெண் 30 வயது ஆண் பெண் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவுரை கொடுக்கணும்னா என்ன அறிவுரை தருவீர்கள் ?

    4, வாழ்வின் ஒவ்வொருகட்டத்திலும் ஒரு தீர்மானம் ஏறெடுப்போம் அந்த தீர்மானம் நமக்காகவா அல்லது உலகத்துக்காகவா ?
    ஐ மீன் அந்த நாலு பேருக்காகவா ?

    5,முன் பின் தெரியா அறிமுகமில்லா ஒருவருடைய நாளை சிறப்பானதாக ஆக்க என்ன செய்வீர்கள் ?

    6, நீங்கள் கற்ற மிக கடினமான வாழ்க்கைப்பாடம் எது ?

    7, வாழ்கிறோம் என்பதற்கும் இருக்கிறோம் என்பதற்குமான வித்தியாசம் என்ன ?
    உண்மை என்றால் என்ன ? எனக்கு உண்மையாகப்படுவது பிறருக்கு பொய்யாக தோன்றுவதேன் ?

    8, தாத்தா குடை என்ற துணியால் தைத்த வளைந்த கைப்பிடி குடைகள் இன்னும் பயன்பாட்டில் இருக்கா ?

    9,வெற்றி தோல்வி இவை கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன ?

    10, இவர் அப்படி அவர் இப்படி என்று ஒவ்வொருவரையும் மதிப்பிட்டு எடை போடுகிறோம் தீர்மானிக்கிறோம் இது சரியா ?
    அல்லது தவறா ?

    11,கடிதம் எழுதி தபாலில் சேர்க்க மறந்து போனதுண்டா ?
    அப்படி தபாலில் சேர்த்த கடிதம் உங்களுக்கே வந்த அனுபவம் இருக்கா ?





    பதிலளிநீக்கு
  50. //நமக்கேன் வம்பு ' என்று கண்டும் காணாமல் செல்பவர்கள்தான் அதிகம்.// - உண்மையான வார்த்தை. இங்க உதவி செய்வது நம்மை பெரும் தொந்தரவில் கொண்டுபோய் விட்டுவிடும். அவங்க அவங்க பாடு அவங்க அவங்களுக்குன்னு போனாத்தான் நாம தப்பிப்போம் என்று நினைப்பவன் நான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எதுவும் அவசரமான வேலையில் இல்லை என்றால், அடிபட்டுக் கிடப்பவருக்கு நம்மால் ஆன சிறு உதவி ஏதாவது செய்யலாமே!

      நீக்கு
  51. //For a pilgrimage trip' (யாத்திரை செல்ல ) என்று எழுதுவோம். // - நான் மேட்டூரில் வேலை பார்த்த புதிதில், மெடிகல் அலவன்ஸை உபயோகப்படுத்தி உருப்படியா ஏதாவது செய்வோம் என்று நினைத்து சித்தா வைத்தியரைத் தேடிப்போனேன் (அவர் ஒரு கிளினிக் வைத்திருந்தார்). அவர் கிட்ட, உடலை செக்கப் பண்ணி என்னமாதிரியான உணவுகள், மூலிகைகள் சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன் என்றதும் அவர், நீங்க என்ன வேணும்னாலும் வாங்கிக்கிங்க, நான் பில் கொடுத்துடறேன், நீங்க ஆபீஸ்ல கிளெய்ம் பண்ணிக்கலாம், நான் அப்படித்தான் நிறையபேருக்குச் செய்கிறேன் என்றார். (அவருக்கு அங்கு வாங்கும் பொருட்களினால் கிடைக்கும் லாபம், கன்சல்டிங் பீஸ் 200 ரூபாய்). அதுலேர்ந்து அங்க போவதை நிறுத்திட்டேன். அலுவலகத்தில் இது மாதிரி சில தவறுகள் செய்யும்போது பிறகு மனது வருத்தப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலுவலகத்தில் ஏதோ ஒரு சாக்கில் நமக்கு பண உதவி செய்ய நினைக்கிறார்கள் என்றால், அதைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. நாம் யாரையும் ஏமாற்றவில்லை. ஒரு சலுகையைப் பயன்படுத்திக்கொள்கிறோம் அவ்வளவுதான். அதுவே நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் வேறு யாருக்காவது பயன்படும் என்றால் ஓ கே.

      நீக்கு
  52. //உடனடியாக செயலில் இறங்கவிடாமல் தடுத்தது // - Question was not clear. நான் அங்கேயே எழுதிய பதில்களிலும் உங்கள் எதிர்பார்ப்பு கிளியராக இல்லை. இன்னொரு காரணம் பிறகு தனியாக சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  53. எனக்கும் இம்முறை கேள்வி ஞானம் உதிச்சிருக்கே...

    1. பாடல்-பாட்டு.. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கோ?

    2. கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்பதன் சரியான அர்த்தம் என்ன?

    3. கீசாக்கா என் பக்கம் கேட்டதும்தான் இக்கேள்வி உதிச்சது.. கையும் களவுமாகப் பிடித்தல்.. இது எப்படி சரியாகும்? கையைப் பிடித்தல் அல்லது களவைப் பிடித்தல் எனில் ஓகே.. இது என்ன?

    4. சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருப்பீங்கதானே? ஒரே தடவையாக எத்தனை கிலோமீட்டர் அதிகமாக ஓடியிருக்கிறீங்க?.. நான் என் 15 ஆவது வயதில்.. ஒரு 20 கிலோ மீட்டர்வரை மாமாவுடன் ஓடியிருக்கிறேன் என் லேடீஸ் பைக்கில்... காலையில் தொடங்கி முடிக்கும்போது 2,3 மணியானதாக நினைவு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!