வெள்ளி, 17 மே, 2019

வெள்ளி வீடியோ : வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலதான் ..

1988 இல் வெளிவந்த படம் ராசாவே உன்ன நம்பி.  ராஜ்கிரண் தயாரிப்பில் ராமராஜன் ரேகா நடித்த படம்.


மோகன், ராமராஜன் ஆகியோர் படங்களின் வெற்றிக்கு பெரும்பாலும் இளையராஜாவே காரணம்.



இது போன்ற பலப்பல மெலடிகளைக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.



இந்தப் பாடலை எழுதியவரே இளையராஜாவாம்.  இந்தப் படத்தில் இருக்கும் இன்னொரு பாடலும் எனக்குப் பிடிக்கும்.  "சீதைக்கொரு ராவணன்தான் தீக்குளிக்க தேதி வைத்தான்" என்கிற அந்தப் பாடல் மனோ மட்டும் பாடியது.  



அதில் ஒரு வரி எனக்கு மிகவும் பிடிக்கும் "கல்லால அடிச்ச அடி வலிக்கவில்லை ராசா...   சொல்லால அடிச்சுப்புட்டே தொடச்சு விடு லேசா...."



இப்போது அந்தப் பாடலைப் பகிரவில்லை.  மனோ - பி சுசீலா பாடியுள்ள டூயட்.  மனோ எஸ் பி பி குரல் போலவே இருப்பதாக ஆரம்ப காலங்களில் அறியபட்டவர்.  ஆனால் நான் கண்டு பிடித்து விடுவேன்.  தமிழில் ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரனில்தான் அறிமுகமானார் மனோ.



இவரின் பல பாடல்கள் இளையராஜா புண்ணியத்தில் ஹிட்.



ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான் 

ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான்
இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான் 
புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது 

ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புதான்
இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புதான் 

முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்துப் போட்டு நீ நடக்கலாகும் 
வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலதான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா 
நெதமும் உன் நினைப்பு வந்து வெரட்டும் வீட்டுல
உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்னை வாட்டும் வெளியில 
இது ஏனோ அடி மானே அதை நானோ அறியேனே 

செந்துருக்க கோலம் வானத்தில பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்துச் சொல்ல போட்டாகளா
ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லித் தந்தாகளா 
வானம் பாடுதுஇந்த பூமி பாடுது
ஊரும் வாழ்த்துது இந்த உலகம் வாழ்த்துது
தடையேதும் கிடையாது அதை நானும் அறிவேனே





**  ஒரு சிறு புதிர்.  ஒருபழைய பாடலில் தேமுதிக தலைவரை அழைத்து  பா ம க தலைவரை கவனிக்கச்சொல்லி நினைவுபடுத்தும் பாடல் என்ன?  புதிர் மொ(க்கை)ட்டையாக இருப்பதால் ஒரு க்ளூ...  பாடல் பி சுசீலா பாடியது.  சிவாஜி கணேசன் நடித்த படத்தில்!

118 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    இந்தப் பாட்டு கேட்டிருக்கேனா தெரியவில்லையே..பார்க்கணும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பதிவு க்ளிக் செய்ததுமே உடனே டக்கென்ற்னு வந்துவிட்டது!!!

      அப்பவே தெரிஞ்சு போச்சு...பூஸாரை பாயலைனு ஹா ஹா ஹா ஹா!!!!

      கீதா

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். இந்தப் பாடல் கேளாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

      நீக்கு
    3. //அப்பவே தெரிஞ்சு போச்சு...பூஸாரை பாயலைனு//

      அவங்க பதிவு போட்டுட்டு ரயர்ட் ஆயிட்டாங்க! ஸோ நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார்கள்!

      நீக்கு
    4. ஓ! பூஸார் பதிவு போட்டுருக்காங்களா பார்க்கறேன்...

      கீதா

      நீக்கு
    5. ஸ்ரீராம் இந்தப் பாட்டும் கேட்டதில்லை படம் பற்றியும் தெரியாதே!

      1987 க்கு முன்னவே பாட்டு கேட்டது கம்மி....1987 க்கு அப்புறம் ஹிஹிஹி...சுத்தம்!! கொஞ்ச வருஷம் ஒன்னுமே தெரியாது...அதுல இதுவும் போயிடுச்சுனு தோனுது....

      கீதா

      நீக்கு
    6. //இன்று பதிவு க்ளிக் செய்ததுமே உடனே டக்கென்ற்னு வந்துவிட்டது!!!

      அப்பவே தெரிஞ்சு போச்சு...பூஸாரை பாயலைனு ஹா ஹா ஹா ஹா!!!!

      கீதா//

      ஹா ஹா ஹா அதுவரை நெஞ்சுக்குள் டிக் டிக் என அடிச்சிருக்குமே.... இடையில முழிச்சால் ஜம்ப் ஆகலாம் என நினைச்சிருந்தேன் ஆனா முழிக்கவில்லை...

      நீக்கு
    7. ///ஸ்ரீராம் இந்தப் பாட்டும் கேட்டதில்லை படம் பற்றியும் தெரியாதே! ///

      என்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆது கீதாஆஆஆஆஆஆஆ இந்தப் பாட்டுக் கேட்டதில்லையோஓஓஒ அட கடவுளே உங்கட வாழ்க்கையில் கால்பங்கு நாட்களை வீணாக்கிட்டீங்க ஹா ஹா ஹா.. இதைக் கேட்காதோர் இருக்க மாட்டினம் என நினைச்சனே.. ஒருவேளை அதிகமாக இலங்கை ரேடியோக் கேட்போருக்கு தெரிஞ்சிருக்கும்.

      இப்பவும், ரேடியோ கேட்போருக்கே நிறைய பழைய பாடல்கள் கேட்கும் வாய்பு அதிகம்... என் வீட்டில் தனியே இருக்கும் நேரமெல்லாம்ம் ரேடியோ முழங்கும் அதுபோல தனியே ட்றைவ் போனாலும் ரேடியோத்தான்...

      நீக்கு
    8. எனக்கும் ஆச்சர்யம்தான் அதிரா! இதைக் கேட்காதோர் இருக்க மாட்டார்கள் என்றே நம்பினேன்!

      நீக்கு
  2. ஞாபகம் வருதா, ஞாபகம் வருதா? அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள். சும்மாவே திரைப்படப் பாடல்களில் சுழி வாங்குவேன். இதிலே சொல்லி இருக்கும் புதிர்ப்பாடலா எனக்குத் தெரியப் போகுது? அதுவும் ஜிவாஜி படப் பாடல்! ரேவதியோ, பானுமதியோ வந்து சொல்லும் வரை காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா..

      வாங்க.. வாங்க...

      இனிய திருமண நாள் வாழ்த்துகள். மாமாவுக்கும் உங்களுக்கும் என் நமஸ்காரங்கள்.

      நேற்று ஆளைக்காணோமே...

      நீக்கு
    2. ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் தம்பதியருக்கு பணிவான வணக்கங்கள்...

      அரங்கனும் அரங்கநாயகியும்
      அருகிருந்து காத்தருளப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்...

      வாழ்க நலம்...

      நீக்கு
    3. கீதாக்கா நேற்று தேடினோமே! எங்கே காணவில்லை என்று

      பிரார்த்தனைகளுடன் இனிய வாழ்த்துகள் கீதா அக்கா உங்களுக்கும் மாமாவிற்கும்.

      கீதா

      நீக்கு
    4. ஆஆஆஆஆஆஆ கீசாக்கா இன்று புது மணமகளோ.. வெய்க்கப்படாதீங்கோ.. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் கீசாக்காவுக்கும் மாமாவுக்கும்.

      நேற்று எங்கள் கொமெண்ட்ஸ் எல்லாம் படிச்சிட்டா கீசாக்கா:))

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம், ஸ்ரீராம், கீதா.
    இந்தப் பாடல் ரொம்பப் பிரபலம் அந்த நாளில்.
    சுசீலாம்மாவுக்குக் கொஞ்சம் வயசான மாதிரி குரல்
    இந்தப் பாட்டில் தெரியும். இருந்தும் இனிமை.

    அதென்ன பாடல் தேமுதிக தலைவரும் பாமக தலைவரும் இணைவது.
    ஸ்ரீராம் யாராவது பதில் சொல்லட்டும் கேட்டுக்கறேன்.

    இங்கயும் கீதா சாம்பசிவம் தம்பதியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.

      இந்தப் பாடல் ரசித்திருக்கிறீர்களா? சுசீலாம்மா குரல்தான் இந்தப் பாடலில் ஸ்பெஷல்.

      அந்த மொக்கைப் புதிருக்கு யாரும் விடை சொல்ல விட்டால் நான்தானே சொல்லவேண்டும்!!!!

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம். நிறைய முறை கேட்ட பாடல். அப்போதய பல பாடல்களில் ராசா, ராசாத்தி, ரோசாப்பூ வார்த்தைகள் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா... முற்றிலும் நலமாகி விட்டீர்களா?

      நீக்கு
    2. No SriraM, It has relapsed, now started anti-biotics. Hopefully get better soon. Thank you.

      நீக்கு
  5. திருமண நாள் வாழ்த்துக்கள் கீதா அக்கா!

    பதிலளிநீக்கு
  6. நெ.த. சொல்வதற்கு முன் என்னால் விடை சொல்ல முடிகிறதா பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ ஸார் அசத்திட்டார் பானு அக்கா. சொல்லியே விட்டார்!

      நீக்கு
    2. பானுக்கா பாடல்கள் பற்றி துரை அண்ணா சூப்பரா சொல்லிடுவார். நிறைய பாடல்கள் அதுவும் அந்தக் காலத்துப் பாடல்கள் ஸ்ரீராமுக்கு நிகராகச் சொல்லுவார். நிறைய தகவல்கள் உட்பட.

      கீதா

      நீக்கு
    3. நல்லவேளை....

      நான் இன்று சீக்கிரம் வந்து விட்டேன்....

      நீக்கு
  7. அனைவருக்கும் அன்பின் வணக்கம்.....

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் அனைவருக்கும்.

    கீதா மேடம் சாம்பசிவம் சாம்பசிவம் சார் ...இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு ஆசி கூற வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை...

      நீக்கு
    2. ///சாம்பசிவம் சாம்பசிவம் சார்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இருதரம் ஜொள்ளக்கூடா நெல்லைத்தமிழன் இருவர் அல்ல ஒருவர்தான் ஹா ஹா ஹா..

      நீக்கு
  9. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும், மற்றும் இனி வரப்போகும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  10. அதென்ன பொல்லாத புதிர்!...

    பூந்தோட்டக் காவல்காரா..
    பூப்பறிக்க இத்தனை நாளா?...
    மாந்தோப்புக் காவல்காரா...
    மாம்பழத்தை மறந்து விட்டாயா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற பதில்கள் கொடுக்கும் முன்னர் அசந்துபோய் இதற்கு மட்டும் பதில் சொல்லி விடுகிறேன். துரை செல்வராஜூ ஸார்... ஆடிப்போயிட்டேன்... சரியான ஆன்சர்.

      நீக்கு
    2. சரியான விடை..
      தீர்ந்தது சந்தேகம்!..

      அப்படியானால் பரிசு!?...

      எங்கே அந்தப் பொற்கிழி?..

      அது கிழிந்து போய் பல காலம் ஆயிற்று மகராசா!.. அதுவும் இல்லாமல் இடைத் தேர்தல் காத்திருப்பதால் நன்னடத்தை விதி!...

      ஓ!... நன்னடத்தை!..
      குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கும் ஒன்று!..

      தருமியே.. நீர் போய்விட்டு அப்புறமாக வாரும்!...

      .......!?..

      நீக்கு
    3. பரிசு?

      பக்கத்து டீக்கடைக்குப்போய் என் பெயர் சொல்லி ஒரு ரீ குடிங்க... போகும்போது மறக்காம பே பண்ணிட்டுப் போயிடுங்க!!!​

      எப்படி சட்டெனப் பிடித்தீர்கள்?

      நீக்கு
    4. ரமதான் சமயத்துல மாலை 6 மணிக்குமேல் டீக்கடை திறந்திருந்தால் போய்க் குடிக்க வாய்ப்பிருக்கிறது. காசு அதிகமில்லை... 18 ரூபாய்தான்.

      நீக்கு
    5. துரை அண்ணே பொற்கிழி பத்தி மட்டும் பேசிடவே கூடாதாக்கும் ஏன் தெரியுமோ?!! ஜல்ஜல் இங்கு வந்து ஒரு சதிராட்டாம் போட்டுடுவாய்ங்க!!! ஹா ஹா ஹா அதெப்பூடி நேக்குத் தெரியாமல் புதிருக்கு பொற்கிழி ஆரூ கொடுக்கறதுன்னு!!!! ஹா ஹா ஹாஹ் ஆ

      கீதா

      நீக்கு
    6. நேக்கு எபி நிறைய பொற்கிழி கொடுக்கோணுமாக்கும்னு வேற ஞானி பேசுவார்!! ஆனா அவர் செக் கிற்கு, ஸ்ரீராமுக்கு, மீக்கு எல்லாம் பாக்கி வைச்சுருக்காராக்கும் அதையும் இந்த சமயத்துல் சொல்லிப்புடறேன் ஹா ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
    7. என்னாதூஊஊஉ பொற்கிழியோ? நான் மாஞ்சு மாஞ்சு பதில் சொன்னாலும் ஆரும் தரமாய்ட்டாங்க இன்று எதுக்கோ கர்ர்ர்ர்ர்:) விட மாட்டேன்ன்ன்ன்ன்ன் போராடுவேன்ன்ன்:))

      நீக்கு
    8. நீங்கள் ஸ்விஸ்ல ஒரு ரீ குடிச்சுடுங்க அதிரா...

      நீக்கு
    9. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) உங்கட பாங் கார்ட்டைத்தாங்கோ.. அதைக் காட்டிக் காட்டிக் குடிச்சிடுறென் குடும்பத்தோடு:))

      நீக்கு
    10. அந்தக் ரீ கடையிலேயே கொடுத்திருக்கிறேன் பாருங்கோ.... என் பெயர் சொன்னால் போதும்... அப்படியும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்றால் அனுஷ் அனுஷ் அனுஷ் என்று மூணு வாட்டி சொல்லுங்கோ!

      நீக்கு
    11. துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம் நான் சொன்னேன்ல பூஸார் ஓடி வந்திடுவார்னு!!

      பூஸார் உங்களுக்குத் தெரியாது போல ஆமாம் நீங்க கொஞ்ச நாள் ஜூட் இல்லையா... ஸ்ரீராம் டீ ஸ்டால் ஒண்ணு தொடங்கினது உங்களுக்குத் தெரியலையே ஹெஹெஹெஹெ...!! கில்லர்ஜி கூட போட்டிருந்தார் பாருங்க!! எல்லாரும் இங்கன வந்து ரீ குடிச்சுட்டுப் போங்கோனு!!!!

      பாருங்க ஸ்ரீராமே பாஸ்வேர்ட்/பின் கூடக் கொடுத்துட்டார்!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    12. ///அனுஷ் அனுஷ் அனுஷ் என்று மூணு வாட்டி சொல்லுங்கோ!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு ரீ யே வாணாம்ம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா..

      // ஸ்ரீராம் டீ ஸ்டால் ஒண்ணு தொடங்கினது உங்களுக்குத் தெரியலையே ஹெஹெஹெஹெ...!! ///

      இது எப்ப தொடக்கமாக்கும் கீதா.. அதுதான் கேள்விப்பட்டேன் வர வர த்ம்ம்ஸ்ல தண்ணி குறையுதாம்.. இப்போதான் புரியுது ரீ ஊத்த தண்ணி தேம்ஸ்ல இருந்து களாவு போகுதூஊஊஊஊஊஊ.. எனக்கு இப்போ அதுக்கான பணம் வந்து சேரோணும்.. இல்லை எனில் ரீக்கடையை அதிரா பெயருக்கு மாத்தி எழுதோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன் இது அந்த.. கீதா வளர்க்கும் மேத்தி இலைப்பூவின் மேல்ல் சத்தியம்ம்ம்ம்:))

      நீக்கு
    13. அந்த நாள் சிவாஜி படம் குங்குமம். அடிச்சாருப்பா குறி பார்த்து.
      அன்பு துரை சூப்பர் கணிப்பு.
      பாட்டை விட்டுவிட்டு ராம்தாசையும் வி.காந்தையும் யோசித்தேனே.
      வாழ்த்துகள்.

      நீக்கு
  11. பாடல் அருமை.. இளையராஜா கோலோச்சிய காலமல்லவா?

    பாடல் வரிகளை ஶ்ரீராம்போல் என்றுமே ரசித்ததில்லை, ஒரு சில பக்திப் பாடல்கள் தவிர... இல்லைனா சோகப் பாடல்கள்...

    ஒரு இசையமைப்பாளருக்கு, கதாநாயகனைவிட முக்கியத்துவம் கொடுத்து, ஜால்ரா போட்டுப் போட்டு அவரை ராகதேவன் என்றே உணரவைத்த காலமல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... வரிகளையும், ஹம்மிங்கையும், குரலின் குழைவுகளையும் அதிகமாகவே ரசிப்பேன். இங்கு ஓரளவுக்கே கொடுக்கிறேன்!

      அப்படிப்போட்ட ஜால்றாதான் அவர் தலையில் கனத்தை ஏற்றியதோ... ஆனாலும் அவர் பாடல்கள் இனிமைதான். அவர் பேசுவதைத்தான் கேட்க முடியாது! அடுத்த மாதம் அவர் இசைவிழா சென்னையில் நடக்கிறது. எஸ் பி பி யேசுதாஸ் உள்ளிட்டோர் சண்டை மறந்து கூடுகிறார்கள். அவர் 75 வது பிறந்த நாள் விழா.

      நீக்கு
  12. அருமையான பாடல்..
    அத்துடன் மிகவும் பிடித்த பாடலும் கூட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ பாடிய பாடல் லிஸ்ட் ஒன்று வைத்திருக்கிறேன் துரை ஸார். பெரும்பாலும் இளையராஜா!

      நீக்கு
  13. அருமையான பாடல்.
    இளையராஜைவை புகழவேண்டும் என்பதற்காகவே பாடல் வரிகளும், படத்தின் தலைப்புகளும் வைக்கப்பட்ட காலம் அது. ராசாவே உன்னை நம்பி, ராசாவின் மனசிலே, சின்னத்தாயி (இளைராஜாவின் தாயாரின் பெயர்) இப்படி நிறைய சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். 'பாட்டாலே புத்தி சொன்னார்' என்கிற பாடலில் சுய புகழ்ச்சி பலமாகவே இருக்கும். "ராசா கையை வச்சா அது ராங்கா போனதில்லே... இப்படியும் உண்டு.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    2. ராஜா..
      ராஜாதி ராஜன் இந்த ராஜா..
      கூஜா..
      தூக்காதே வேறு எங்கும் கூஜா..

      இது வேற பெரிய டமாரம்!..

      நீக்கு
    3. இந்த மாதிரி புகழ்ச்சிகளை இளையராஜா முன்னெடுக்கவில்லை என்று நம்புகிறேன். ஆனாலும் தடுத்திருக்கலாம்.

      நீக்கு
    4. திரையுலகம் நிறைய எதிரிகளைத் தன்னிடத்தே அடக்கியது. யார் ஆதரவு யாருக்கு வேணும்னு தெரியாது. திறமை இருந்தாலும் தங்களுக்கு வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும் ஆட்கள் இருக்கவேணும். அதனால் ஒருஒருக்கு ஒருவர் ஐஸ் வைத்துக்கொள்வார்கள்.

      சின்னதாயவள் தந்த ராசாவே, ராஜா கையைவைத்தால் அது ராங்காப் போனதுல்லை போன,ற வாலியின் விசிறிகளும் அப்படித்தான். வாலி எம்ஜியாருக்கும் ஏகப்பட்ட இந்தமாதிரி பாடல்களை இயற்றியிருக்கிறார்

      நீக்கு
    5. பிழைக்கும் வழி!
      கதா நாயகர்களுக்கு அடிக்கும் ஜால்ரா தனி வகை. சமீப காலங்களில் வடிவேலு, சந்தானத்துக்கெல்லாம் ஒருகுழு சேர்ந்து ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தது...

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. பாடல் இனிமையான பாடல்.
    கேட்டு ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  17. இந்தப் பாடலுக்கு
    ராமராஜன் ரேகா ஜோடி பொருத்தம்...

    இதே மாதிரி இன்னொன்னு!..

    ஆசையில பாத்தி கட்டி
    நாத்து ஒன்னு நட்டு வெச்சேன்!..

    ராமராஜன் கௌதமி ஜோடி!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஆமாம்... ட்வின் சாங் மாதிரி... நானும் நினைத்தேன்.

      நீக்கு
  18. பலமுறை ரசித்த பாடல்... இப்போதும்...

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம் இப்பத்தான் இந்தப் பாட்டு கேட்கிறேன். ஆனா இதே மெட்டில் வேறொரு பாடல் இருக்குன்னு நினைக்கிறேன். வழக்கம் போல பாட்டு வரிகள் டக்கென்று சிக்கவில்லை.

    பாட்டு ரொம்ப நல்லாருக்கு. மனோவா!!? பேஸ் வாய்ஸ் வித்தியாசமாக இருக்கிறது. அப்புறம் கூடக் குரல் மாத்தி எல்லாம் பாடியிருக்கிறார் இல்லையா?
    ஆமாமி இவர் வாய்ஸ் எஸ்பிபி போல இருக்கும். உங்கள் அளவு நான் கேட்காததால் என்னால் கண்டுப் பிடிக்க முடியறதில்லை ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் கூடக் குரல் மாத்தி எல்லாம் பாடியிருக்கிறார் இல்லையா?//

      இந்தப் பாட்டில் இல்லை அப்புறம் பாடிய பாடல்கள் சிலவற்றில்.

      இந்தப் பாட்டு செம. மெலடி. இசைக்கருவிகள் சிம்பிள்....அதிகம் ஆர்பாட்டம் இல்லாமல் வாய்ஸ் டாமினேட்டிங்க் உள்ள பாடல்.

      ஆரம்பமே அசத்தலா இருக்கு. மனோ ரொம்ப கிமிக்ஸ் கொடுக்காமல் ப்ள்யின் சிங்கிங்க்.
      சுசீலா வாய்ஸ் ரொம்பவே ஆச்சரியமான வித்தியாசத்தில் இருக்கிறது.

      பாட்டு வரிகளும் நல்லாருக்கு. மனதில் பாடல் சிக்கென்று ர்யூன் ஒட்டிக் கொள்கிறது. கேட்ட பின் பாடல் மனதில் ஓடுகிறது...

      இதே மெட்டு பேஸில் பல பாடல்கள் ராஜாவின் இசையிலேயே மெட்லி செய்யலாம் இதோடு வேறு பாடல்களும் வந்தது மனதில் மெட்லியாக ஆனால் வரிகள் சொல்லத் தெரியாததால் சொல்ல முடியலை. யோசித்துப் பார்த்து வரிகளைப் பிடிக்க முயற்சி செய்கிறேன்

      கீதா

      நீக்கு
    2. பாடலை நன்கு ரசித்திருக்கிறீர்கள். நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தது குறைந்த ஸ்ருதியில் பாடப்படும் பாடல்..

      நீக்கு
    3. யெஸ் யெஸ் குறைந்த ஸ்ருதி....அந்த ட்வின் பாடல் (துரை அண்ணா சொல்லி நீங்க சொல்லிருக்கற அந்த ட்வின் பாடல்!!) அதையும் கேட்டேன்...இதோடு சேரும் ஆனால். அது ஸ்ருதி தூக்கல்....அந்தப் பாட்டும் நன்றாக இருக்கிறது...

      கீதா

      நீக்கு
  20. ஸ்ரீராம்! ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏதோவொரு பாடலை, அறியாத அல்லது மறந்து போன தகவல்களை வைத்துப் பதிவெழுதி அசத்தி வருகிறீர்கள்! அதென்ன இளையராஜா மீது அவ்வளவு காண்டு? சரக்கு இருக்கிறது, தலைக்கனம் இருந்தால் என்ன தப்பு சொல்லுங்கள்? அதுவும் இங்கே ஒன்றுமில்லாத வெத்துவேட்டுகளே மானாட மயிலாட என்று ஆடி கண்டிருக்கிற வேளையில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கிருஷ் ஸார்... பாராட்டுக்கு நன்றி.

      நான் இளையராஜாவின் பாடல்களுக்கு பெரிய ரசிகன். ஆனால் சமயங்களில் அவர் ஒரு மாதிரி பேசுவது ஒரு மாதிரியாய் இருக்கும்!

      நீக்கு
    2. உங்களுக்கு ஒரு கேள்வியை வைத்து weapon supply செய்து இப்போதுதான் ஒரு பதிவை முடித்தேன், ஸ்ரீராம்! :))

      நீக்கு
  21. பாடல் இனிமையாக உள்ளது,அருமையான பதிவு!

    (இவன் -பூந்தோட்ட கவிதைக்காரன்)

    பதிலளிநீக்கு
  22. எல்லாருக்கும் க்ளவுடி rainy லண்டனில் இருந்து காலை வணக்கம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இங்கு சூரியன் அங்கிள் வெளியே வந்திட்டார்ர்.. பிக்க்கோஸ் அதிரா இஸ் எ குட் கேள்:)..
      -----------------------------------------------------------------

      அதில் சூனியன் என வந்துவிட்டதால் நீக்கினேன்ன் ஆனாலும் அஞ்சு கேட்பா ஸ்ரீராமை அந்தக் கொமெண்ட் ஐ எடுத்து தாங்கோ என ஜொள்ளிடாதீங்கோ அஞ்சுவுக்கு:))

      நீக்கு
    3. // க்ளவுடி rainy லண்டனில் //

      grrrrr...... க்ளவுட் இருக்கட்டும். மழை வந்ததா?

      நீக்கு
    4. ஏஞ்சல்!! இங்கும் க்ளவுடி இப்ப. கொஞ்ச நேரம் முன்னால் நல்ல மழை இடி மின்னல் என்று இப்போது அமைதியாக க்ளவுடியாக...வெதர் கூலாக!!! ஸ்ரீராம் அண்ட் அதிரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொல்லிட!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. பிரிக்க முடியாதது எதுவோ சேர்ந்தே இருப்பது எதுவோ அது அதிராவும் எழுத்துப்பிழையும் :) இப்போல்லாம் பாவம் ஸ்ரீராமுக்கும் நிறைய மிஸ்டேக்ஸ் வருது :)

      4 எக்ஸாம்பிள் :)//மதுவா வாங்க // ஹாஹா :)
      சரி சரி நாரோடு சேர்ந்த பூக்கள் :)

      நீக்கு
    6. சென்னைவாசிகளுக்கு மழை அபூர்வம் எங்களுக்கு வெயில் அபூர்வம் ஸ்ரீராம் நாளைலருந்து ஹெவி ரெயினாம் இங்கே

      நீக்கு
    7. //ஸ்ரீராம்.17 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:17
      // க்ளவுடி rainy லண்டனில் //

      grrrrr...... க்ளவுட் இருக்கட்டும். மழை வந்ததா?//

      காசிக்குப் போய் வந்தும் ஸ்ரீராம் அப்பாஆஆஆஆஆஅவியாவே இருக்கிறீங்களே?:)).. நல்லோர் இருக்கும் இடத்தில தானே மலை சே..சே மழை வரும் ஹையோ ஹையோ.. :)

      ஊசிக்குறிப்பு:
      இன்று இரவு ஸ்கொட்லாந்தில் குறிப்பா அதிரா வீட்டுக்கு மேலே மழை கொட்டும் என பிபிசில சொன்னாங்கோ:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    8. அது வந்து அஞ்சு.. காசிக்குப் போனதால ஸ்ரீராம் கால் ஞானி:) ஆகிட்டார்ர் ஹையோ இது வேற கால்:))... அதவது போகும்போது குண்டுத்தேவதையை எல்லாம் ரசிச்சுக்கொண்டே போனார்ர்:)).. ஆனா இனிவரும் தொடரைப் படிச்சீங்களெனில் தெரியும்:) திரும்பி வரும்போது அவருக்கு முன் சீட்டில் இருந்த அழகு தேவதை கூட அவ்வைப்பாட்டிபோல தெரிஞ்சதாமே ஹா ஹா ஹா:))..

      ஞானி ஆகிட்டாலே எழுத்துபிழை வருவது சகஜமய்யா:))

      நீக்கு
    9. அதிரா அந்த குண்டு தேவதை ஜபல்பூரில் இறங்கிட்டா!! திரும்பி வரும் போது ஃப்ளைட்டுல!!! அழகு வான தேவதைகள் தான்!! அதனால் சுப்!! ஸ்ரீராமை குழப்பாதீங்க அவர் இன்னும் ரயில்லருந்து இறங்கவே இல்லை...வான தெவதையைப்ப் பார்த்ததும் கடைசி பார்ட்டுக்கு ஜம்பிடுவார்!!

      கீதா

      நீக்கு
    10. காசிக்குப் போய்ட்டு வரதுனால வான தேவதைகளைப் பார்க்கக் கூடா நு நீங்க ஞானி கண்டிஷன் எல்லாம் போடக் கூடாது!! ஸ்ரீராம் கண்ணை மூடிக் கொண்டு ரசித்ததை கடைசி பார்ட்ல வரும்னு நம்புவோம்!!!

      கீதா

      நீக்கு
    11. @கீதா... பெங்களூரு மழைக்கு ஏற்கெனவே வாட்ஸாப்பில் கிர்ர்ர் சொல்லி விட்டேன்.


      ஏஞ்சல்...

      //பிரிக்க முடியாதது எதுவோ சேர்ந்தே இருப்பது எதுவோ அது அதிராவும் எழுத்துப்பிழையும் :) இப்போல்லாம் பாவம் ஸ்ரீராமுக்கும் நிறைய மிஸ்டேக்ஸ் வருது :) //

      ஆம், எழுத்துப் பிழைகள் மலிகின்றன. குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன். அவசரம்... வேலையை உடனே முடிக்க வேண்டிய அவசியம்...

      வெயிலுக்கு குடை பிடிக்கலாம்... மழை இலைல விட்டால் தண்ணீருக்கு எங்கே போக.. சென்னையில் பலபேர் வீடுகளைக் காலி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

      @அதிரா..

      சென்னையில் மழை இல்லாதாதற்கு நான் இங்கிருப்பபதுவும் ஒரு காரணம்...

      ஞானிகளின் எழுத்துப்பிழையை கண்டுக்கக் கூடாது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்!

      @கீதா... வானதேவதை அநியாய ஒல்லி... அதோடு இறுக்கமான உடை,,, வேண்டாம்... இப்போ வேண்டாம்...

      இந்தக் கண்ணியில் பதில் சொல்வது சற்றே கடினமாக இருந்தது என்பதைச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்!

      நீக்கு
  23. கீதாக்காசாம்பசிவம் சாருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  24. இந்த பாடல் சூப்பர் பாட்டாச்சே படம் பார்த்த நினைவும் இருக்கு ஒரு சீசனில் நிறைய படம் ராமு அங்கிள் படங்கள் வந்தது எல்லாத்திலும் பாடல்கள் இனிமை .

    புதிர் சினிமா புதிற்கு நான் எஸ்கேஎப் :)

    ஒரே ஒரு டவுட் ராமு அங்கிளும் நளினி ஆண்டியும் எப்படி திருமணம் செஞ்சாங்க ஏதாச்சும் படத்தில் சேர்ந்து நடித்தாங்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ராமு அங்கிள் படத்தில் பாடல்களின் இனிமைக்கு இளையராஜா உத்திரவாதம்! பாடல் புதிர் விடை வந்தாச்சு பார்க்கலையா ஏஞ்சல்?

      நீக்கு
    2. @Angel: நளினிக்கும், ராமராஜனுக்கும் திருமணமாகி, விவகாரத்தாகி அவர்களுடைய பெண்ணுக்கூட திருமணமாகி விட்டது இப்போது போய் அவர்கள் எப்படி திருமணம் செய்து கொண்டார்கள் என்று கேள்வி?கர்ர்ர்...
      நளினி நடித்த படங்களில் ராமராஜன் உதவி இயக்குனராக பணியாற்றிய பொழுது பூத்த காதல்.

      நீக்கு
    3. ஹீஹீ பானுக்கா தேங்க்ஸ் :) அது இவங்க காம்பினேஷனில் படம் ஒன்னும் வந்த நினைவில்லை அதான் எப்பிடி கல்யாணம் ஆச்சுன்னு டவுட் வந்தது :) ஸ்ரீராமை கேட்டதற்கு உங்கள தான் கேட்டிருக்கணும் :))))))

      நீக்கு
    4. ஸ்ரீராம் துரை அண்ணாவின் கமெண்டை பார்த்தேன் புதிருக்கு :) நான் தான் சினிமா புதிரை அட்டெம்ப்ட் கூட செய்யேனே

      நீக்கு
    5. //ராமு அங்கிளும் நளினி ஆண்டியும் எப்படி திருமணம் செஞ்சாங்க ஏதாச்சும் படத்தில் சேர்ந்து நடித்தாங்களா ?//

      சேர்ந்து நடித்ததில்லை என்று நினைக்கிறேன் ஏஞ்சல். இவர்கள் காதல் முறிவு போலவே நினைவில் நிற்கும் இன்னொரு முறிவு பார்த்திபன்-சீதா.

      பானுக்கா... தகவல் உதவிக்கு நன்றி.

      நீக்கு
  25. ராசாத்தி மனசிலே....சொற்களை உச்சரிக்கும்போதே ரசனையாக இருக்கும். அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான பாடலை ரசித்ததற்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

      நீக்கு
  26. ///வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலதான்///

    ///ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லித் தந்தாகளா///

    இப்பாட்டில் இவ்விரண்டு வரிகளும் எனக்கும் மிக மிகப் பிடிக்கும்... அழகிய பாட்டு... கேட்கக் கேட்க இனிமை.. படம் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன்... பார்த்த மாதிரியும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்த வரிகள் பிடிக்கும் அதிரா... இந்த இரண்டு வரிகளில் எதைத் தலைப்பாக்கலாம் என்று யோசித்து முதலாவதைத் தலைப்பாக்கினேன். அதற்கு அந்த வரி வரும் டியூனின் குழைவும் காரணம்.

      நீக்கு
    2. முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா /

      இந்த வரியும் கூடவே எனக்குப் பிடித்தது.

      கீதா

      நீக்கு
    3. எழுதியது கண்ணதாசன் அங்கிளா இருக்குமோ என நினைச்சேன் இளையராஜா மாமா எனச் சொல்லிட்டார் ஸ்ரீராம்:).

      நீக்கு
    4. grrrrr :) this movie was released in 1988 miyaw

      wiki nan says your uncle eyedasan passed away in 1981

      நீக்கு
    5. ஓ தங்கூஊஊஊ ஆராட்சி அம்புஜமே:)

      நீக்கு
    6. //முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா ///

      எனக்கும்... எனக்கும்... நேற்று மாலை கூட மொட்டை மாடியில் அந்த வரியைப் பாடிப்பார்த்துக் கொண்டிருந்தேன்! (அங்கேதான் யாரும் இருக்க மாட்டார்கள்!)

      ஆராய்ச்சி அம்புஜம் கிட்ட உங்க விளையாட்டு பலிக்குமா அதிரா? கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் இளையராஜா இசையில் கண்ணே கலைமானே...

      இதே படத்தில் வரும் இன்னொரு பாடலைச் சொல்லி இருந்தேனே... பார்த்தீர்களா? அதில் ஒரு வரியையும் குறிப்பிட்டிருந்தேன்.

      நீக்கு
  27. எங்கள் குடும்ப நண்பர்களில் ஒரு லேடி டொக்டர் இலங்கையை சேர்ந்தவ அவ படிச்சது இந்தியாவில்.. அப்போ தாங்கள் தங்கியிருந்த ஹொஸ்டலுக்கு அருகாமையிலோ எங்கோ ஒரு சேரிக் குடும்பத்தில் இருந்து படம் நடிக்க ஆரம்பிச்சவவாம் ரேகா எனச் சொன்னா.. சரியான தகவலோ தெரியவில்லை.

    எனக்கு மனோ அங்கிளின் சில பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ அங்கிள் பாடல்கள் பிடிக்க இளையராஜாதான் காரணம்!

      நீக்கு
  28. பாடலைக் கேட்டு இருக்கிறேன் ஆனால் ஏனோ மனதில் பதியவில்லை

    பதிலளிநீக்கு
  29. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது தொண்ணூத்து நைன்ன்ன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  30. ஆங்ங்ங்ங் 100 ஊஊஊஊஊஊஊஊஊஉ பொற்கிழி எனக்கேஏஏஏஏஏ அஞ்சுவுக்கும் இல்ல கீதாவுக்கும் இல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ மியாவ்!! இங்க பாருங்க நாங்கல்லாம் 100 நு கொடுக்க மாட்டோம் பெறவும் மாட்டோம் 101, 201, ஒன் சேர்த்துத்தான் கொடுப்பாங்க!! சோ மீ 101

      பொற்கீழ் எனக்கே!!! ஓ இல்லை இல்லை துரை அண்ணாவுக்கே!! அதுல எனக்கும் பங்கு போட்டுக்குவேன் ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. ஆகா.. இங்கு பொற்கிழிகள் வேறு கிடைக்கிறதா? இரண்டு மூன்று கருத்துக்கு முன்பாக வந்திருந்தால் அதைப் பெற்றிருக்கலாம்.! சரி போனால் போகட்டும்...! ஆசை.. ஆசை.. இப்போதும் நாகேஷ்தான் (தருமியல்ல) நினைவுக்கு வருகிறார்.

      நீக்கு
    3. //101, 201, ஒன் சேர்த்துத்தான் கொடுப்பாங்க!! சோ மீ 101///

      கீதா அது வயதானால் உப்பூடி எல்லாம் சரியா முறையாத்தான் கணக்குப் பார்ப்பாங்க:)) ஹா ஹா ஹா ஹையோ இருங்கோ சிரிச்சுப்போட்டுத் தொடர்றேன்:).. மீ சுவீட் 16 எல்லோ:)) எனக்கு 101..1008 முறை எல்லாம் தெரியாதாக்கும்:)) ஹா ஹா ஹா... கமலாக்கா இப்ப உங்களுக்கு என்ன பொற்கிழி வேணும் அவ்வளவுதானே?:) படமெடுத்து அனுப்புங்கோ வரும் புதன் டே:) கெள அண்ணன் தருவார்ர்.. நான் வேணுமெண்டால் விட்டுக் குடுக்கிறேன்ன்ன்... ஆஆஆஆஆ அதிராவுக்கு எவ்ளோ பெரிய மனசெனச் சொல்வது கேய்க்குதூஊஊஊஉ நன்னி நன்னி..:))

      நீக்கு
    4. //ஆங்ங்ங்ங் 100 ஊஊஊஊஊஊஊஊஊஉ //

      இது 115....

      நீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    இந்த வார பாட்டு கேட்டிருக்கிறேன்.எனக்கு மனோ குரலும், எஸ்.பி.பியின் குரலும் சமயத்தில் ஒத்துப் போவது போலவே தோன்றும். ஆரம்பத்தில் மனோ பாடியதை எஸ்.பி.பி என்றே நினைத்து வந்தேன். இந்த பாட்டு, மெட்டு எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கும். இப்போது மீண்டும் கேட்டு ரசித்தேன். படமும் தொலைக்காட்சியில்தான், பார்த்திருப்பேன். திரையரங்கத்திற்கு சென்று படங்கள் பார்த்தது குறைவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... நிறைய பேர்கள் அப்போது மனோ குரலை எஸ் பிபியுடன் குழப்பிக் கொள்வார்கள். நான் இந்தப் படம் இதுவரையிலும் பார்த்ததே இல்லை! ஆனால் இந்தப் படத்தின் இந்த இரண்டு பாடல்களையும் பலமுறை கேட்டு வருகிறேன்.

      நீக்கு
  32. ஸ்ரீராம் இந்தப் பாட்டோடு மெட்லி வருதுனு சொன்னேன்ல அந்தப் பாட்டு முத்து மணி மாலை பாட்டு ஆனா ஸ்ருதி கூட...

    இந்தப் பாட்டு ரொம்பவே மனசுல ஓடிட்டிருந்துச்சா அப்படி பாடினதுல மெட்லி கிடைக்க டக்குனு ராகம் சிந்துபைரவி பேஸ்னு தெரிஞ்சுச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிந்துபைரவி பே ஸ்... ஓ...

      முத்துமணிமாலை பாடலும் பிடித்த பாடல்தான்.

      நீக்கு
  33. இந்தப் படம் நான் கேரளத்திற்குப் போன பிறகு வந்த படம் என்று தெரிகிறது. அதனால் பார்த்தத்தில்லை. பாடலும் கேட்டதில்லை. இப்போதுதான் கேட்டேன் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி. ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!