சனி, 11 மே, 2019

முத்ரப்பா நீதான் மனிதனப்பா...


1)  திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சபரிநாதன், வருங்கால விஞ்ஞான உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சமீபத்தில் வெளியான ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் 91.29 சதவீதம் மதிப்பெண் பெற்று திருப்பூரில் தேர்ச்சியான ஒரே மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.   அவரிடம் பேசியதிலிருந்து..

2)  முத்ரப்பா ...   நீதான் மனிதனப்பா...   இல்லை, மனிதனுக்கும் மேலே..
(நன்றி ஏகாந்தன் ஸார்)

3)  எந்தத் தொழிலாய் இருந்தால் என்ன?  பாசிட்டிவ் மனிதர்களுக்கு எந்தத் தடையும் பெரிதல்ல...  கண்ணன்பற்றித் தெரிந்துகொள்ள...

==========================================================================================

இந்த வார விமர்சனம் - அதாவது சென்ற வாரம் பற்றிய இந்த வார விமர்சனப்பகுதியை அளிப்பவர் கோமதி அக்கா.


"எங்கள் ப்ளாக்" சனிக்கிழமையில் ஒரு புதிய பகுதியை ஆரம்பித்து இருக்கிறார்கள்.  அந்த வாரம் முழுவதும் வந்த பதிவுகளைப் பற்றி விமர்சனம் செய்வது. 

இரண்டு வாரம் வெற்றிகரமாக நெல்லைத்தமிழன் அவர்களும், கீதா சாம்பசிவம் அவர்களும்  மிக அருமையாக விமர்சனம் செய்து விட்டார்கள். இவர்கள் இருவரும் பன்முக வித்தகர்கள்.

இந்த வாரம் என்னை அழைத்து இருக்கிறார் ஸ்ரீராம் . என் அறிவுக்கு எட்டிய வரை விமர்சனம் செய்து இருக்கிறேன்.

எங்கள் ப்ளாகின் சிறப்பு பகுதி சனிக்கிழமை  பாஸிட்டிவ் செய்திகள்.
பிறரிடம் உள்ள  நல்ல குணங்களை, நல்ல திறமையை  நற் செயல்களைப்
பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும் என்பார்கள். அப்படி கண்ணில் பட்ட இந்தவார பாஸிடிவ் செய்திகள் என்று  பத்திரிக்கைகளில் நல்லதைத் தேடி நமக்குத் தந்து கொண்டு இருக்கிறார்கள். நல்லதைப் பேசவேண்டும், நல்லதைப் பார்க்கவேண்டும், நல்லதைக் கேட்க வேண்டும். அப்போது அன்றைய நாள் நன்றாக இருக்கும்.

அதுவும் காலை வேளையில் நல்ல செய்திகளைப்  படிக்கும் போது  நல்ல செய்திகள் அன்று முழுவதும் மனதில் சுற்றிவரும்.


 //சனிக்கிழமை பொதுவாகவே அவ்வளவு சூடு பிடிக்காது. //
என்று கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னதற்கு ஸ்ரீராம்  சொன்ன பதில்

ஆமாம்... சனிக்கிழமைகள் அவ்வளவாக படிக்கப்படுவதில்லை. அதனால்தானே புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டது! பார்ப்போம்!

அதற்கு நெல்லைத் தமிழன் அவர்கள் கொடுத்த பதில் 

/சனிக்கிழமைகள் அவ்வளவாக படிக்கப்படுவதில்லை.// - அப்போ 'நல்ல செய்திகள்' யாராலுமே படிக்கப்படுவதில்லையா விரும்பப்படுவதில்லையா? கொஞ்சம் ஆச்சர்யமாத்தான் இருக்கு. அதுவும் சரிதான். பொதிகைக்கு எங்க கூட்டம் வருது... எல்லாரும் மோசமான சீரியல்களில்தானே ஐக்கியம் ஆயிடறாங்க...
//
 //முடிந்தவரை லேட்டானாலும் இனிமே சனியன்று பின்னூட்டமிட முயல்கிறேன்//
இப்படி  ஏஞ்சல் சொல்லி இருக்கிறார்கள்.

நம் நட்புகள் என்றும் நல்லவைகளைப் படிக்கக் காத்து இருப்பவர்கள் தான். பொதிகையை ரசிப்பவர்கள் நிறைய பேரிருக்கிறார்கள், நெல்லை. 

பொதிகைச் சாரல் காற்றை யாராவது ரசிக்காமல் இருப்பார்களா?

விடுமுறை என்பதால் தான் கூட்டம் குறைவு.  

சனிக்கிழமை ஏன் கூட்டம் வருவது இல்லை என்பதற்குக் காரணம் அயல் நாட்டில் இருக்கும், அதிரா, ஏஞ்சல்  மற்றும் இங்கு இருப்பவர்களுக்கும் விடுமுறைதினம். வீட்டில் உள்ளோர் காலையில் மெதுவாக எழுந்து கொள்வது, காலைக் குளியல், சாப்பாட்டுக் கடை போன்றவேலைகள் நேரத்திற்கு முடியாது. உறவினர் வருகை, அல்லது  உறவினர் வீட்டுக்கு நாம் செல்வது இப்படி இருக்கும். சினிமா, டிராமா, சிறிய சுற்றுலா என்று போகலாம். நட்புகளுக்கு நேரம் ஒதுக்குவது போல் குடும்பத்திற்கும் ஒதுக்க வேண்டும். இல்லையா? அதுதான்  வருகைப் பதிவு குறைவு.

இந்த வாரம் சனிக்கிழமைச் செய்திகள் மூன்றும் மிக நல்ல செய்திகள்.

மூன்று செய்திகளும் நல்ல செய்திகள்.பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சொல்லவேண்டிய செய்திகள், மக்கள் சேவை, இறை சேவை, கல்விச் சேவை அனைத்தும் மிகவும் சிறப்பானது. இறைச் சேவை செய்த வயதானவருக்கு வேலை இல்லை, அவரே உறவினர் கொடுக்கும் 5000 ரூபாயில் குடும்பம் நடத்திச் சேமித்து பெரிய தொகையை இறைவனுக்குக் கொடுக்கிறார். தன் வீட்டையும் கோவிலுக்குக் கொடுத்து இருக்கிறார். பணம் வைத்து இருப்பவர் கொடுப்பதைவிட இல்லாதவர் கொடுப்பது பெரிய விஷயம் தான். வயதானவர்களைக் கடவுள் காப்பாற்ற வேண்டும்.


கோவிலுக்கு பணத்தை கொடுத்த வயதான தம்பதியினர் அதை அனாதை இல்லங்களுக்கு நேரடியாக செலவு செய்யலாம். அதை இறைவனும் ஆசீர்வதிப்பாரே..//

தேவகோட்டை ஜி  அனாதை இல்லங்களுக்கு உதவி வருபவர். அதனால் அவர் அப்படிச் சொல்கிறார். அவர் சொல்வதும் சரிதான், மக்கள் தொண்டும் மகேசன் தொண்டு தான்.

முன்பு இடது கை கொடுப்பது, வலது கைக்குத் தெரியக் கூடாது என்றார்கள். இப்போது  தெரியவேண்டும். அப்போதுதான் அதைப் படிப்பவர்களுக்கும்  உதவும் எண்ணம் வரும். சிவகார்த்திகேயன் உதவி செய்த சஹானாவைப்பற்றி அவர் படித்த பள்ளித் தலைமை ஆசிரியர் டிவிட்டரில் தன் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். கஜா புயலில் வீட்டை இழந்து பள்ளியில் தங்கி மின்சாரம் இல்லாமல் சிம்னி விளக்கில் படித்து 524 மதிப்பெண் பெற்று இருப்பதைப் பாராட்டி  'சஹானா ஊக்கமது கைவிடேல்' என்று பகிர்ந்தது வைரலாகப் பரவியதாம், அதைப் படித்த சிவகார்த்திகேயன் உதவி இருக்கிறார். நிறைய பேர் பாராட்டியும், பண உதவியும் செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
நல்லவை இப்படிப் பரவலாம். கண்ணில் பட்ட நல்லவைகளைத் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.


ஞாயிறு  படங்கள் நன்றாக இருக்கிறது. படங்களுக்குக் கீழ் கொடுக்கும் வாசகங்கள் நன்றாக இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை பயணத்தில் எடுத்த அழகிய காட்சிகள் வருகிறது, அது தருகிறது மகிழ்ச்சி.

மனம் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்க இயற்கைக்காட்சி, கடல், ஆறு, நதிகள், மலைக்காடுகள், பறவைகள் இவை எல்லாம் உதவும். பயணம் இனிது. பயணத்தில் எடுக்கும் படங்களைப் பகிர்ந்து அவை எந்த இடங்கள் என்று பகிரும்போது மீண்டும் நாமே பார்த்து மகிழ வாய்ப்பு.
இந்த வாரப் பதிவில் சொன்ன கருத்துக்கள் பல;-

 //பழுவேட்டரையரும் கரிகாலனும் போன வழி மாதிரி இல்லை/ என்று சொன்னாலும் சொன்னார்  சேர்ந்து பயணிக்கவில்லை என்று சான்றுகளுடன் கீதா சாம்பசிவம் சொன்னார்கள். 

பொன்னியின் செல்வனைப் பலமுறை ரசித்துப் படித்தவர்களுக்குப் பேசுவதற்கு விஷயம் கிடைத்து விட்டது. நல்லதொரு   கலந்துரையாடல் வாசகர்களுக்கு கிடைத்து விட்டது. அவர் ஷில்லாங் பற்றி அவ்வளவாகச் சொல்லவில்லை ஆனால் அவர் வாசகங்கள் நிறைய பேச வைக்கிறது. பயணம் செய்பவர்களுக்கு அந்த ஊரில் கிடைத்த அனுபவங்களை இடை இடையே படங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பது என் விருப்பம்.

//சாப்பாடு பற்றி சொன்னாலும் நல்லாருக்கும். பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு சௌகரியமாக இருக்குமே என்றுதான்.//

கீதா ரெங்கன்  இப்படி கேட்கிறார். அடுத்த வாரத்தில் கே ஜி எஸ் சார் கவனத்தில் கொள்ளலாம்.


திங்கக்கிழமை  சமையல் பகிர்வு

இளநீர்பாயசம்  ( அமைதிச்சாரல் )  சாந்தி மாரியப்பன்  கொடுத்த குறிப்பு-அருமை.  நிறைய சமையல் குறிப்புகள் பதிவுகளில் கொடுத்தவர் ;அனுபவம் மிக்கவர் காமாட்சி அம்மா  அவர்களே  புதிகாக ஒன்று கற்றுக் கொண்டேன் என்றார்கள்.  புதிய சமையல் குறிப்பு கொடுத்த சாந்திக்குப் பாராட்டுக்கள்.

பாயசம் செய்முறையுடன் கோடைக்கு ஏற்ற சில பயனுள்ள குறிப்புகளும் கொடுத்தார் சாந்தி. பாயசத்திற்குக்   கொடுக்கப்பட்ட பின்னூட்டங்கள், எல்லாம் அருமை. நம் அன்பர்களால்  இளநீரில்  சுவையான சமையல் குறிப்புகளும் பகிரப்பட்டது.

இது போல புதுமையான  யாரும் செய்யாத குறிப்புகளைச் செய்து பார்க்க ஆவலைத் தூண்டுகிறது. ஒவ்வொருவரும்  சமையல் குறிப்புகளை ரசனையுடன் ,நகைச்சுவையுடன் சொல்கிறார்கள். என்னையும் அழைத்து இருக்கிறார்கள் எல்லோரும்.  எனக்கு அது போல எழுத வராது. சமையலை சுவையாகச் செய்தால் மட்டும் போதாது -சுவையாகப் பதிவு போடவும் தெரியவேண்டுமே!

சமைப்பது ஒரு கலை என்றால் அதை அழகாய்ப் பரிமாறவும் தெரியவேண்டும்.சமைத்த பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து  பரிமாறக் கூடாது என்பார்கள் எங்கள் அம்மா. பாத்திரத்தில் அவ்வளவுதான் இருக்கிறது என்று நினைத்துப் பார்த்துப் பார்த்து சாப்பிடுவார்களாம்.

கிண்ணங்கள் பாத்திரங்களில் எடுத்து மாற்றிக்  கொண்டு வந்து பரிமாற வேண்டும் என்பார்கள். (பரிமாறுவதும் ஒரு கலைதான்)

அது போல இங்கு  சமைப்பவர்கள் அழகாய் சமைத்த உணவை   அழகுபடுத்தி வைத்துப் படம் எடுத்துப் போடுகிறார்கள் பார்க்க அழகாய் இருக்கிறது. செய்முறைப் படங்கள் அழகாய்ப்போடுகிறார்கள் எல்லோரும்.

"சாப்பிடலாம் வாங்க" என்று  வலைத்தளம் வைத்து இருக்கிறார் கீதா சாம்பசிவம்," தேவதையின் சமையல் பக்கம்" என்று ஏஞ்சல், காமாட்சி அம்மா  இவர்கள் எல்லாம் சமையலுக்குத் தனி வலைத்தளம் வைத்து சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பானுமதி வெங்கடேசன் அவர்கள், அதிரா, மற்றும் கமலா ஹரிஹரனும்    இங்கும், அவர்கள் பக்கத்திலும் சமையல் குறிப்புகள் கொடுத்து வருகிறார்கள்.

 இப்போது நம் வலைத்தள சகோதரிகள், எல்லாம் யூடியூப் வழியாக சமையல் குறிப்பு சொல்கிறார்கள். சாந்தியும்  இளநீர் பாயசம் யூடியூப் காணொளி கொடுத்து அசத்தி விட்டார்.

கல்யாணம் ஆகும் முன்பு இருந்து சமையல் குறிப்புகள் எழுதி வைக்க ஆரம்பித்து விட்டேன். அம்மா , மாமியார் கற்றுக் கொடுத்தது,    சமையல் குறிப்புகளைப் பார்த்து சமைப்பது என்று காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தில் நான்கு டையிரிக்குறிப்பு இருக்கிறது. இன்னும் பெண்கள் பத்திரிக்கைகளில் வந்த சமையல் குறிப்புகளை எடுத்துத் தொகுத்து  வைத்து இருக்கிறேன். 


நான் சமைத்தவற்றை டிக் செய்து  வைத்து இருப்பேன்கீதா ரெங்கன் 'மோர் ரசம்' சமையல் பகிர்வு  செய்து இருந்தார். எங்கள் ப்ளாக் தளத்தில் படித்த போது சொன்னேன். நானும் செய்வேன், எழுதி வைத்து இருக்கிறேன் என்று. இதோ மோர் ரசமும் எழுதிய  அந்த டையிரிக்குறிப்பு. சில சமையல் குறிப்புகளும்,   இந்தப் பக்கத்தில் இருக்கிறது.

இப்போது தினம் என்ன செய்வது என்ற அலுப்பும் யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம் என்ற மனநிலையும் உள்ளது, சில நேரங்களில். இப்படி அலுப்புத் தட்டும்போது இதில் ஏதாவது படித்தால் செய்யத் தோன்றும் .அதுதான் இந்தத் திங்கள் கிழமை பதிவுக்குக் கிடைத்த வெற்றி. வலை நட்புகள் இங்கு பகிரப்பட்டதைச்  செய்து பார்த்து   பதிவு போடும் போது அந்த சமையல் குறிப்பைக் கொடுத்தவர்களுக்கு ஆனந்தம் ஏற்படுகிறது. 

நளமகராஜாக்கள் இருக்கிறார்கள்: ஸ்ரீராம், கெளதமன் சார், நெல்லைத் தமிழன், சகோ துரைசெல்வராஜூ  இவர்கள் எல்லாம்  விதவிதமாய் சமைக்கிறார்கள். கெளதமன் சார், விதவித தோசைகள் விதவிதமான வடிவில் வேறு செய்கிறார்.

ஸ்ரீராம் சமையல் பதிவு போட்டு  வருடம் ஆச்சு. நெல்லைத்தமிழன் அழகாய் அடிக்கடி போடுகிறார். மற்ற இருவரும் , இங்கு வரும் மற்ற  மகராஜாக்களும்  பகிரலாம், சமையல் குறிப்புகளை.

இங்கு போடுவதற்குச் செய்யும் போதாவது இல்லத்து அரசிகளுக்கு உதவின மாதிரி இருக்குமே! ஒரு நாள்.


செவ்வாய்க் கிழமை கேட்டு வாங்கி போடும் கதை 

கேட்டு வாங்கிப் போடும் செவ்வாய்க்கிழமையில் நானும்  இரண்டு கதைகள் எழுதி இருக்கிறேன், என்று பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

இந்தவாரம்  பரிவை சே. குமார்  கதை.  குமார் கதை என்றால் அதில், அன்பு, பாசம் இழையோடும். ஊர் மக்களின் மனம், ஊரின் மண்வாசனை அனைத்தும் இருக்கும். கதை படித்து முடித்த போது கண்ணில் கண்ணீர் துளிர்த்துவிட்டது, மனம் பாரம் ஆகி விட்டது.ஏன் இப்படி? கடவுளே என்று இறைவனைக் கேட்க வைத்து விட்டது.

இந்த ஒவ்வொரு வாரமும் சங்கிலித் தொடர் அறுந்து போகாமல் ஓவ்வொருவரிடம் கதை கேட்டு வாங்கிப் போடுவது பாராட்டப்பட வேண்டிய மகத்தான சாதனைதான். திண்டுக்கல் தனபாலன் அவர்கள் "திருக்குறள் கதைகள்" எழுதலாம்.  ஸ்ரீராம் தனபாலனிடம் கதை கேட்டு இருக்கிறார்.  அவர் வேலைப் பளு முடிந்து எழுதுவார் என்று நம்புவோம்.


புதன் கேள்வியும் பதிலும்


'கேள்வி, பதில்' என்றதும் திருவிளையாடல் தருமி, சிவன் உரையாடல்தான் நினைவுக்கு வரும்.கேள்விகளை நீகேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா ?என்ற கேள்வியில் உள்ள மிடுக்கு , என்ன கேள்வி  வேண்டுமென்றாலும் கேள் சொல்கிறேன் என்ற பார்வையும் நினைவுக்கு வரும்.


கேள்வி கேட்பவருக்கும் திறமை இருக்க வேண்டும், பதில் சொல்பவருக்கும் பதில் சொல்லும் திறமை இருக்க வேண்டும்.
கேள்வி ஞானமும் இருக்க வேண்டும் அல்லவா?
இவை அனைத்தும் நிரம்ப இருக்கிறது 'எங்கள் ப்ளாக்' ஆசிரியர் குழுவுக்கு.
கேள்விகளால் பயனுள்ள கருத்து பரிமாற்றங்களும்  நிகழ்கிறது.

இதில் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ஆசிரியர்கள் யார் என்பதை முன்பே சொல்லிவிடலாம், இன்று இந்த ஆசிரியர் என்று.
 இந்த வாரக் கேள்வி பதில்கள் நன்றாக இருந்தன.

"சிரித்து வாழ வேண்டும்"- தலைப்பு அருமை. 

வாழ்க்கை என்பது கொஞ்ச காலம்தான் அதனால் இயன்றவரை சந்தோஷமா இருக்கணும் நாலுபேரையாவது சிரிக்க வைக்கணும் என்ற கொள்கை பற்றி உங்கள் கருத்து என்ன ?//


ஏஞ்சலின்  கேள்விகள்  அருமை,  கேள்விக்குப் பதில்கள் மிக அருமை.

 கொஞ்ச காலம்தான் வாழ்க்கை. இதில் அடுத்தவரை திருப்திப் படுத்துவது கடினம். அடுத்தவர் மனம் நோகடிக்காமலிருப்பது சுலபம்.

& நல்ல, உயர்ந்த ஜென் கொள்கை. மற்றவர்களின் சந்தோஷத்தில்தான் இருக்கிறது நம் சந்தோஷம்.          
 மற்றவர்களை சந்தோஷப்படுத்தாவிட்டாலும்   நோகடிக்காமல் இருக்கலாம்.

12,நல்ல சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு முக்கியமானவை எவையெவை ??
நான் நினைத்து வைத்திருப்பதை அடுத்த வாரம் சொல்வேன் :)//


(ஏஞ்சலின் பதிலைப் படிக்க ஆவலாக இருக்கிறோம்.)

அன்பு பொறுமை விட்டுக் கொடுக்கும் சுபாவம், அடுத்தவர் தவறைப் பெரிது படுத்தாத பெருந்தன்மை.

& கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, ஒருவர் மற்றவரின் நிறை / குறைகளோடு அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவாக, அன்பாக இருந்தால் அதுவே சந்தோஷமான திருமண வாழ்க்கை. 


ஏஞ்சலின் இந்தக் கேள்விக்கு, சார் சொன்ன பதிலும், நெல்லைத்தமிழனும், கீதாரெங்கனும்  சொன்ன பின்னூட்டங்களும் சிந்திக்க வைக்கும்.

//புரிந்துகொண்ட விட்டுக்கொடுக்கும் திருமண வாழ்க்கை - இந்தியாவில், திருமணம் என்பது ஒரு தடவை நிகழும் நிகழ்வு. இங்க பெரும்பாலும் ஓரளவு புரிதல் உண்டு. சண்டை சச்சரவு இருந்தாலும் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி வாழ்க்கை ஓடிடும். மேற்கத்தைய நாடுகள் மாதிரி அன்சர்டர்னிடி இருக்காது, எப்போ யார் பிச்சிக்கிட்டு போயிடுவாங்கன்னு.

அங்க இந்த காரணத்தால வேலைகளை பகிர்ந்துக்கறாங்க, தவறுகளை திருத்திக்கறாங்க. இங்க அப்படி இல்லையோன்னு நினைக்கறேன்.''//
- நெல்லைத்தமிழன்

சண்டை சச்சரவு இருந்தாலும் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி வாழ்க்கை ஓடிடும்//


//நெல்லை எப்படியோ என்பதில் நிறைய சொல்லலாம். அதன் பின் நிறைய இருக்கு. மனிதன் அடிப்படையில் விரும்புவது மகிழ்ச்சி. ஆனால் அது இந்த எப்படியோவில் பல சமயங்களில் காணாமல் போயிடும் அதுவும் ஒரு லெவலுக்கு மேல் சலிப்பு வந்துவிடும் நெல்லை. மன அழுத்தமும் வந்துவிடும். அதனால் பிரிந்தால் நல்லது என்று தோன்றிவிட்டால் பிரிந்துவிடுவது நல்லது. இல்லை பிரியக் கூடாது ஆனை பூனை என்று சொல்லிக் கொண்டு உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தால் அது உடைந்து உடைந்து கீறிப் பார்க்கும். அப்புறம் சில் சில்லாகிவிடும். ஆனால் அந்த முடிவு எடுக்க முடியாமல்தான் சிலர் தவிப்பது கடைசியில் மன அழுத்தம்.//

- கீதா ரெங்கன்.


கீதா ரெங்கன் சொன்னது போல்  இந்த கதையில் வருகிறது.

பாப்பே சாணக்கியா அவர்கள் நாடகம் பார்த்தேன் , அதில் மனைவியானவள் , கணவன், மாமனார். மாமியார், நாத்தனார், தன் பெண் எல்லோருக்கும் எல்லாம் பார்த்து பார்த்துச் செய்கிறார். அவர்களிடமிருந்து அங்கீகாரம் எதிர்பார்க்கிறார், ஆனால் அதற்குப் பதிலாக அலட்சியம், அவமதிப்பு தான் ஏற்படுகிறது. மாமனார் மருமகளின் நிலை கண்டு வருந்தி மனநிலை சரியில்லாமல் இருப்பது போல் நடிக்கச் சொல்கிறார்.


மகள் பதறி அம்மாவின் இந்த நிலைக்குக் காரணம் அத்தை என்கிறாள்,  ஒருவரை ஒருவர் சாடிக் கொள்கிறார்கள்.மாமனார்(மாமனார் டாக்டர்)தன் மனைவி, மகள், மகன், பேத்தியை மருமகளுக்கு ஆதரவாக இருங்கள்,கொஞ்ச நாளில் சரியாகி விடும் என்கிறார்.


அவர்கள் படும் அவஸ்தை கண்டு, நடிப்பதை விட்டுப் படுக்கையை விட்டு எழுந்து கொள்கிறாள். பழைய குருடி கதவை திறடி என்று ஆகிறது.

மாமா கேட்கிறார். இன்னும் கொஞ்ச நாள் நடிக்கலாம் அல்லவா? ஏன் எழுந்து கொண்டாய் என்று. மாமா அவர்களுக்கு அதிர்ச்சி  வைத்து இருக்கிறேன் என்கிறாள் மருமகள்.  

மறு நாள் காலை எல்லோருக்கும் டிபன் பாக்ஸில் உணவு கொடுத்து விடுகிறாள். எல்லோரும் ஆவலாக திறந்து பார்த்தால் அதில் தான் வீட்டை விட்டுப் போவதாகவும் எப்போது மனம் மாறித் திரும்பி வருவேன் என்று தெரியாது  என்றும் நீண்ட வசனம் பேசிச் சென்று விடுகிறார். இப்படிக் கதை முடிகிறது.


மனைவியை சக மனுஷியாகக் கூட நடத்தாத ஒரு சில ஆண்கள், அவர்களின் குடும்பம்  இப்படி   இருப்பதைக் கேள்விப் படுகிறோம் தானே! வியாழன் கதம்பம் 


ஸ்ரீராம் தனக்கு என்று வைத்து கொண்ட நாள். அதில் தான் படித்த புத்தகம்,  அப்பா சேமிப்பில்   இருந்த பழைய புத்தகங்களில் இருந்து செய்திகள், மற்றும் சினிமா செய்தி, முகநூலில் பகிர்ந்த கவிதைகள், மற்றும் செய்திகள் என்று பகிரும் நாள். இப்போது காசி யாத்திரை போய் வந்த அனுபவப் பகிர்வும் சேர்த்து எழுதுகிறார். கதம்பமாய் இருக்கும் பதிவில்  ஒரு மலராகப் பயண அனுபவம் இடம்பெறுவதால் பயணக்கட்டுரை மெதுவாய்தான் நகரும். வாரா வாரம் என்பதால்  முதல்வாரத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். நினைவாற்றல் இருக்கா என்று சோதித்துப்பார்த்துக் கொள்ளலாம். அதற்கும் உதவும்.

பயணக்கட்டுரை ரொம்ப நல்லாப் போகுது.. வாரம் ஒருமுறை எழுதறீங்க. சில கட்டுரைகளுக்கு அப்புறம் எழுத போரடித்து இல்லை சோம்பேறித்தனத்தினால் விடிவிடுவென சுருக்கமா எழுத ஆரம்பித்துவிடுவீர்களோ என்ற சந்தேகம். பார்க்கலாம்.


உங்கள் பயணக்கட்டுரை முடியும் வரை மற்ற கதம்பச் செய்திகளைக் கொஞ்சம் சின்னதாக்கி , பயண அனுபவத்தை அதிகமாக்கி சீக்கீரம் முடிக்கலாம், அப்புறம் வழக்கம் போல் கதம்பம் இருக்கலாம். உங்களுக்கும் மறக்காமல் இருக்கும்.  நெல்லைத்தமிழன்  சொன்னது போல் ஆகாமலும் இருக்கும். 'திருப்பதி பயணக்கட்டுரை' ஒரு வாரம் விட்டு அடுத்த வாரம் எழுதி முடித்தீர்கள்.பத்திரிக்கைகளில் மக்களைக் கவர தலைப்பு வைப்பது போல் வைக்க ஆரம்பித்து விட்டார் ஸ்ரீராம்.

தொலைக்காட்சியில் ஒரு  காட்சியை அடிக்கடி  காட்டி  அடுத்து வருவது என்று விளம்பரம் செய்து கொண்டு இருப்பார்கள் மக்களின் ஆவலை அதிகப்படுத்த. அது போல் தலைப்பைப் பார்த்து  அந்த செய்தி எங்கே வருகிறது என்று  முதலில் தேடிப் படிக்கலாம் . சினிமாவில்  கதையில் எல்லாம் எங்காவது ஒரு இடத்தில் தலைப்பு வரும் போது ரசிகர்கள், வாசகர்கள் அப்பாடா கதைத் தலைப்பு, சினிமாத்தலைப்பு  வந்து விட்டது என்று சொல்வார்கள்.

ஏன் சமையல் செய்ய வில்லை என்று கணவர் கேட்டதால் மனைவி கணவரை கரண்டியால் அடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டது   என்ற செய்திப்படத்தில் கூடையில் அப்பளக்குழவி இருக்கிறது? வாயில் மட்டும் கட்டு இல்லை அதற்கும் ஆபத்து போலவே ! கூடையில் இருக்கும் அப்பளக்குழவியைப்  பார்த்துவிட்டு அமைதியாகப் போக வேண்டும் கார்த்தி.

அவர் தந்த தண்ணீர் தகவல் பயத்தை உண்டு செய்கிறது. நான் அன்று படித்த செய்திகளும் பார்த்த காட்சிகளையும் பகிர்ந்து இருந்தேன் பின்னூட்டமாக,

இன்று காலைதான் தண்ணீர்ப் பஞ்சத்தைப்பற்றிப் படித்து வருத்தப்பட்டேன். புள்ளி விவரங்களுடன் எல்லாம் சொன்னார்கள். ஆழ ஆழப் பூமியைத் தோண்டிக் கொண்டு போனால் நிலமை என்னவாகும் என்றார்கள். 

தண்ணீர் வீணாகி வழிந்து போவதைப் படம் எடுத்து இருந்தேன் கிருத்திகை அன்று கோவில் போன போது.

ராமநாதபுரத்தில் மக்கள் ஊற்று தோண்டி அதில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் எடுக்கிறார்கள். அவர் அவர் தோண்டும் ஊற்றை முள் வேலி போட்டு துணிகளால் மறைத்து கதவு போட்டு பூட்டி வைத்து இருக்கிறார்கள். நிலமை பயத்தைத் தருது.(தொலைக்காட்சியில் பார்த்தது)

எங்களுக்கு குடி தண்ணீர் விலைக்கு வாங்கித் தான் தருகிறார்கள். மாதா மாதம் தண்ணீருக்கு அதிகக் காசு கொடுக்கிறோம்.

கோடை மழை பெய்தால் தான் விமோசனம். இரண்டு நாள் மழை பெய்து விட்டுப் போனது.

ஸ்ரீராம் கவிதை இருக்கும் வியாழன் பதிவில், இந்த வாரம் புதுமொழி . /எந்தையும் தாயும் அலைபேசி இல்லாமல் இருந்தது இந் நாடே' என்கிறார்.
இப்போது  தாத்தா, பாட்டி,  கொள்ளுப்பாட்டி கொள்ளுத் தாத்தா எள்ளுப் பேரன் பேத்தியுடன் பேச அலைபேசி வேண்டி இருக்கு. குடும்ப உறவுகள் "வாட்ஸ் அப்"பில் இணைந்து இருக்கும் காலம். குடும்பத்தைப் பிரிந்து அயல் நாட்டில் உழைப்பவர்களுக்கு அலைபேசிதான் மகிழ்ச்சியைத் தரும் சாதனம்,
'குடும்பம் ஒரு கதம்பம்' என்ற படத்தில் ஒருவர் தபால் மூலம் குடும்ப உறவை பேணுவதைச் சொல்வார்  ,கணவனும், மனைவியும் ஆளுக்கு ஒரு பக்கம் வேலை பார்ப்பார்கள்.

வெள்ளி வீடியோ

வெள்ளி வீடியோவில் அவருக்குப் பிடித்த பாடல்களைப் பகிர்ந்து வருகிறார் ஸ்ரீராம்.

தொலைக்காட்சி வந்த புதிதில் தூர்தர்ஷனை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்த காலத்தில் ஞாயிற்றுக் கிழமை காலை ஒலிப்பரப்பாகும் 'ஒளியும் ஒலியும்' பல மொழிப் பாடல் நிகழ்ச்சியில் நமக்குப் பிடித்த, தெரிந்த இந்திப் பாடல் ஒளி பரப்பினால் மகிழ்வோம். 

அப்புறம் வெள்ளிக்கிழமை தமிழ் 'ஒளியும், ஒலியும் ' பாடல் வரும். அதற்காக க்காத்து இருந்து ஆவலுடன் பார்ப்போம். 

இனிமையான பாடல்களை  ரேடியோவில், தொலைக்காட்சியில் கேட்டு ரசித்த பாடல்களை இதில்  பகிர்ந்து வருகிறார் ஸ்ரீராம். (இங்கு பகிரப்படும் பாடல்களைப்பார்த்து அதிரா அந்த சினிமாவைத் தேடிப் பார்ப்பதாகச் சொன்னார், ஒரு பதிவில்.)

பழைய காலத்தில் பாட்டுப் புத்தகம் வாங்கிப் பாடல்களை மனப்பாடம் செய்து பாடுவார்கள் சிலர்.  பழைய சினிமாப் பாடல் புத்தகங்களில் முன் கதைச் சுருக்கத்துடன் பாடல்கள் தொகுப்பு (எங்கள் அம்மா வீட்டுத் தொகுப்பு) இருக்கும். இசைத் தட்டுக்களை வாங்கி மகிழுங்கள் என்று சினிமா இடைவேளையில் விளம்பரங்கள் வரும்.

அது போல பாடல் வரிகளையும், பாடல் காட்சிகளையும்  இங்கு பகிர்கிறார்.

சில பாடல்களைக் காட்சி இல்லாமல்  கேட்பது மகிழ்ச்சி தரும்.

இன்றைய தலைப்பும் அருமை. - மனம்தேடும் சுவையோடு  தினந்தோறும் இசைபாடு.

இந்த வாரம் மலேஷியா வாசுதேவன் அவர்கள் பாடிய  இனிமையான பாடல் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் வந்த பாடல்.  படத்தில்  

பள்ளிச் சுற்றுலாவில் ஆசிரியர் பாடும் பாடல் இனிமையான பாடல். இந்தப்பாடலைக் கேட்கும் போது  //அப்படியே இளவயதில் மனசஞ்சாரம் செய்ய முடியும்!// என்று சொல்லி இருந்தார் ஸ்ரீராம். எனக்கும் இளவயதில்  பள்ளியில் சென்ற சுற்றுலாக்கள் நினைவில் வந்து போனது. என் நினைவுகளைப் பகிர்ந்து இருக்கிறேன்.

பள்ளியில் சுற்றுலா போன போது அப்போது பிரபலமான சினிமாப் பாடல்களைப் பாடிப் போய் இருக்கிறோம். நீங்கள் சொன்னது போல்
இளவயதில் மனசஞ்சாரம் செய்ய முடிந்தது.

ஆசிரியர், மாணவிகள் பாடிச் சென்று இருக்கிறோம், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் உண்டு. ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து சேலை முந்தானையின் பயன்களை நாடகமாய் நடத்திக் காட்டியது பசுமையான நினைவுகள். குட்டை முந்தானையால் பயன் இல்லை என்பதைச் சொல்வதே நிறைவுப் பகுதி. சியாமளா டீச்சர், (கணிதம்) "மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன" என்ற பாடலுக்கு அழகாய் ஆடினார்கள்.

இப்படி அவரவர் நினைவுகளை,கருத்துக்களைப்பகிர வாய்ப்பு ஏற்படுகிறது.
பகிரும் சினிமா, அந்தப்படத்தின் கதை, நடிப்பு, படம் வந்த காலம் என்று பேச நிறைய விஷயம்  இருக்கிறது எல்லோருக்கும்.


//மருந்து,மாத்திரைகள் என்று ஒன்றும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. எழுதவும் விடுவதில்லை. முதல்வேலையாகப்,படித்துவிட்டாலே மனது திருப்தியாகி விடுகிறது. எங்கள் ப்ளாகுடன் என்ன பந்தமோ தெரியாது. எல்லாம் மனதிலே உலா வந்துவிடுகிறது//

இப்படிச் சொல்கிறார் நம் காமாட்சி அம்மா.

வலைத்தள  நட்புகள் கூடும் இடமாக இருப்பதால் யாராவது வரவில்லை என்றால் இங்கே கேட்டுக் கொள்கிறோம். தெரிந்தவர்கள் அவர்களைப்பற்றி விவரம் சொல்கிறார்கள். 

இந்த தொகுப்பில் நிறைய சினிமா பாடல்கள் இருக்கிறது
பாசவலை படத்தின் கதை சுருக்கம்

அன்பினாலே உண்டாகும்  இன்பநிலை அதை அணைந்திடாமல் தீபமாக்கும் பாசவலை  பாசவலை பாசவலை

அனைவரையும் இணைக்கும் நட்புப் பாலமாக  'எங்கள் ப்ளாக்' இருக்கிறது.

வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

87 கருத்துகள்:

 1. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கோமதி அக்கா.. வாங்க... வாங்க... நன்றி அழகான விமர்சனத்துக்கு.

   நீக்கு
  2. வணக்கம் ஸ்ரீராம், உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று தாமதமாகத்தான் வருவேன். வேகமாகப் படித்துவிட்டேன். கோமதி அரசு மேடம் விமர்சனம் சிறப்பு.

   நீக்கு
  4. நன்றி நெல்லைத் தமிழன்

   நீக்கு
 3. மிக அழகாகவும் அருமையாகவும் விமரிசனம் செய்திருக்கிறார் கோமதி! ஒன்றையும் விட வில்லை. டிடியைத் திருக்குறள் கதைகள் எழுதச் சொன்ன ஆலோசனை பிரமாதம். யாருக்கும் தோன்றவில்லை. டிடிக்குக் கதைகள் எழுத இதை விடப் பொருத்தமான ஆலோசனை இல்லை எனலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா. காலை நேரத்தில் ஒன்றுவிடாமல் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   இங்கும் மின் வெட்டு இருக்கிறது.

   நீக்கு
 4. இரண்டு நாட்களாக ஒரே மின் தடை/வெட்டு! அதிலும் நேற்று நல்லாப் போட்டுப் பார்த்துவிட்டது. காலை சமையலிலேயே பிரச்னை ஆரம்பிச்சுப் பின்னர் இரவும் இரண்டு முறை மின்சாரம் போய்ப் பதினோரு மணிக்குத் தான் வந்தது. இன்னிக்கு எப்படியோ? ஒரு மாசமாகவே மின்வெட்டுப் பிரச்னை அதிகமாக உள்ளது. ஆகவே முடிந்தவரை வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்வெட்டு சென்னையிலும் இருக்கிறது. எங்கள் (ஸோலார்) இன்வர்ட்டர் வேறு ரிப்பேர். அவஸ்தை.

   நீக்கு
 5. ஐ.ஐ.டி.,யில் நிச்சயம் நுழைந்து இஸ்ரோவில் பணிபுரிவதே லட்சியமாக கொண்டுள்ளார். வாழ்த்துக்கள் சபரிநாதன்..!//
  சபரிநாதன் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.
  முத்ரப்பா மனிதநேயம் மிக்க மனிதர் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
  வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள தன் தொழிலில் மாற்றத்தை கொண்டு தன் உடல் நலத்தையும் பார்த்துக் கொண்டு குடுபத்துக்கு தேவையான பொருள் ஈட்டி வாழும் கண்ணன் வாழ்க!
  வாழ்த்துக்கள்,
  நல்ல செய்திகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அக்கா.

   நற்செயல்கள் நிறைய நடந்தால்தான் எனக்கும் செய்திகள் நிறையாக கிடைக்கும். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வேளச்சேரி ரயில் நிலைய வாசலில் சாலையில் கிடந்த ஐநூறு ரூபாய் பணக்கட்டை எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் சேர்த்த இரு நண்பர்கள் பற்றி செய்தி வாசித்தார்கள்.

   சென்ற வார ஆரம்பம் அது.

   செய்தித்தாளில் அப்படி ஒரு செய்தியைத் தேடுகிறேன்... பார்க்கவே முடியவில்லை.

   நீக்கு
  2. நற்செயல்கள் நிறைய நடக்கிறது ஸ்ரீராம். நீங்கள் சொல்வது போல் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாசித்த இரு நல்ல நண்பர்களைப் பற்றி பத்திரிக்கையில் வரவில்லை என்பது வருத்தமான விஷயம் தான்.
   நீங்கள் கேட்ட செய்தியையும் எழுதலாம் ஸ்ரீராம்.
   செய்தி தாளில் வேண்டாத விஷயம் தலைப்பு செய்தியாய், நல்ல செய்தி பெட்டி செய்தி அல்லது ஒரு மூலையில் இருக்கும்.

   நீக்கு
 6. அன்பு கோமதியின் பங்களிப்பு மிக அழகு. விவரமாக ஒவ்வொரு நாளையும் விளக்கி
  தன் எண்ணங்களை அளித்திருக்கிறார். வாழ்த்துகள் கோமதி.
  அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  சனிக்கிழமை செய்திகளை விளக்கமாகப் படிக்க வேண்டும். கோவில் வேலை இருப்பதால்
  கொஞ்சம் தாமதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... ஆமாம்.. கோமதி அக்கா அழகாய், பொறுமையாய் விமர்சித்திருக்கிறார்.

   கோவில் வேலையா? என்னம்மா அது?

   நீக்கு
  2. ஆமாம் மா. ஜகார்தாவிலிருந்து ,தாயார் உத்சவம் லைவ் ரிலே.
   திருமஞ்சனம். விட முடியுமா.அதைத்தான் வேலை என்றேன்.

   நீக்கு
  3. ஜகார்த்தா, இந்தோனேஷியாவில், இந்துக் கோவில்களில் தாயாருக்கு உத்சவம் லைவ்-ஸ்ட்ரீமிங் என ஏகப்பட்ட சாமி காரியங்கள் அவ்வப்போது நடக்கிறதுபோலும். இந்துமதக் கலாச்சாரம் இன்னும் விரவிக்கிடக்கும் பாலி போன்ற தீவுகள் உள்ள தேசம். அங்கே மக்கள் தொகையில் 1.7%-தான் இந்துக்கள்.

   நமது பாரதப் பெருநாட்டில் 79% இந்துக்கள். (இப்படிச் சொல்வதேகூட, சிலருடைய சித்தாந்தப்படி கொலைக்குற்றம் இங்கே!) தொன்மையாகவே, உலகில் பிரதானமாக இந்துக்கள் வசிக்கும் பிரதேசம். இங்கேயிருந்துதான் ஞானக்குரல்கள் தற்போது ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன: ‘இந்தியாவில் உள்ள இந்துக் கோவில்களை எல்லாம் இடித்துத் தகர்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்!’ இப்படி ஏதோ ஆதாயத்திற்காக அபஸ்வரமாகக் கிறீச்சிடுபவர்கள் பிற சமயத்தினர் அல்ல. எல்லாம் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்புகள்தாம்.

   நீக்கு
 7. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
  முதலில் இந்த அன்பு தங்கையின் விமர்சன பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம். கோமதி அரசுவின் பின்னூட்டங்களே சிறப்பாகத்தான் இருக்கும், அவர் விமர்சனமும் நன்றாகத்தான் இருக்கும், நிதானமாக படித்து விட்டு சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் பானு அக்கா.

   நீக்கு
  2. நிதானமாக படித்து கருத்து சொல்லுங்கள் பானு, நன்றி.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  இன்று சனிக்கிழமை யாருடைய விமர்சன தொகுப்பாக இருக்குமென நினைத்துக் கொண்டிருந்தேன். சகோதரி கோமதி அரசு அவர்கள் தன்னுடைய இயல்பான நடையில் மிகவும் அழகாக விமர்சித்து அசத்தி இருக்கிறார்.அத்தனையும் படித்தேன்.மிகவும் நன்றாக எழுதி உள்ளார். ஒரு வார பதிவையும், பதில்களையும் நன்றாக கவனித்து அழகாக தொகுத்திட நல்லதொரு எழுத்தாற்றல் திறமை பெற்றிருக்க வேண்டும். அவ்விதம் இந்த வாரம் தொகுத்து விமர்சித்த சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றிகள்.

  நல்லதொரு செயல்களாக பார்த்து சனிதோறும் வெளியிட்டு வரும் எங்கள் பிளாக் இந்த அற்புதமான விமர்சன பகுதியையும் இன்று (சனியன்று) அறிமுகப்படுத்தி படிக்கும் அனைவரையும் உற்சாகப்படுத்தி வருவதற்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. நன்றிகள்.

  காலை நேரக் குறைவினால், இன்றைய பாஸிடிவ் செய்திகளை அப்புறம் கொஞ்சம் நிதானமாக படித்தப் பின் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...

   பாராட்டுகளுக்கு நன்றி.

   மெதுவா வந்து படித்துக் கருத்துக் சொல்லுங்க.

   நீக்கு
  2. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
   எனக்கு தெரிந்த மாதிரி விமர்சித்து இருக்கிறேன். அத்தனையும் படித்து
   மனமார பாராட்டியதற்கு நன்றி.
   இன்றைய பாஸிடிவ் செய்தியை படித்து கருத்து சொல்லி விட்டு பின் வரும் என் விமர்சனத்தை படித்து கருத்து சொல்லி இருக்கலாம் கமலா.

   நேரம் கிடைக்கும் போது வந்து பாஸிடிவ் செய்திகளை படித்து கருத்து சொல்லுங்கள் மகிழ்வேன்.

   நீக்கு
 10. சபரிநாதனுக்கு வாழ்த்துகள்.

  அருமையாக அலசிய விமர்சனம் வாழ்த்துகள் சகோ

  "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற சித்தாந்தத்தை ஆத்மார்த்தமாக நம்புபவன் நான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியும். நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
  2. வணக்கம். அழகாகவும் அருமை யாகவும் இருக்கு. அன்புடன் காமாட்சி

   நீக்கு
  3. வணக்கம் காமாட்சி அம்மா.

   நன்றி.

   நீக்கு
  4. //ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற சித்தாந்தத்தை ஆத்மார்த்தமாக நம்புபவன் நான்.//


   உண்மைதான்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 11. வணக்கம் காமாட்சி அம்மா நன்றி.

  பதிலளிநீக்கு
 12. திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சபரிநாதன்

  தன்னம்பிக்க மிகுந்த சகோதரன் வாழ்த்துகள்
  சாதனைகள் புரியட்டும் தன்னம்பிக்கையுடன்...

  இது ஒன்றுதான் படித்தேன் மீதத்தை பின்னர் படிக்கிறேன்.

  (இவன் -பூந்தோட்ட கவிதைக்காரன்)

  பதிலளிநீக்கு
 13. சபரிநாதனுக்கு மனமார்ந்த பாராட்டுகளும். அவர் இலட்சியம் நிறைவேற இறையருள் துணை நிற்கட்டும்.

  முத்தரப்பாவின் சேவை கண்களில் நீரை வரவழைத்துவிட்டது. வாழ்க நீ எம்மான்!

  எந்த தொழிலாய் இருந்தால் என்ன! காலத்திற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொண்டிருக்கும் கண்ணன் வியப்பூட்டுகிறார்.

  பதிலளிநீக்கு
 14. சபரிக்கு வாழ்த்துக்கள்,,,/

  பதிலளிநீக்கு
 15. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 16. Muddrappa அவர்களின் நல்ல மனதிற்கு வாழ்த்துகள் பல...

  அசால்டாக அடித்த முத்துவிற்கு பாராட்டுகள்...

  தொழிற்நுட்ப கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 17. அழகான அருமையான விமர்சனம்...

  எதையும் விடவில்லை... ஒவ்வோர் நாளை பற்றியும் விளக்கம் அருமை...

  முத்தாய்ப்பாக முடிவில் பாசவலை... வாழ்த்துகள் அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   நீக்கு
 18. கோமதி அரசு அவர்களின் விமர்சனம் அட்டகாசம். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக அலசியிருக்கிறார். சென்ற வாரம் போலவே இந்த வாரமும் கொஞ்சம் நீளமோ என்று தோன்றியது. ஓ.கே. ஸ்ரீராம், அவரவர் பாணி அவரவருக்கு. நெ.த. சென்ற வாரமே என்னை கலாய்த்து விட்டீர்கள், இந்த வாரம் விட்டு விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் பபானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
  கொஞ்ச்ம் நீளம் அதிகம் தான். சுருக்கமாய், அழகாய் சொல்ல தெரியவில்லை என்பது உண்மைதான்.
  படிக்க சிரமமாக இருக்கிறதா?
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகாய்த்தான் சொல்லியிருக்கிறீர்கள். பள்ளியில் பிக்கினிக் சென்ற அனுபவத்தை நேற்றே சொல்லி விட்டீர்கள், அதை தவிர்த்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம். அதே போல சமையல் குறிப்பை மட்டும் விமர்சனம் செய்து விட்டு, உங்கள் அனுபவங்களை தவிர்த்திருக்கலாம் என்றும் தோன்றியது. மற்றபடி விமர்சனம் நன்றாகத்தான் இருக்கிறது.

   குறை சொல்ல வேண்டும் என்பது நோக்கமல்ல, தவறாக நினைக்காதீர்கள்.

   எனக்கு படிக்க சிரமமாக இல்லை, பதிவின் நீளத்தை பார்த்து படிப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இவ்வளவு பெரிய பதிவா என்று தோன்றலாம்.

   நீக்கு
  2. நான் மஸ்கட்டில் பணியாற்றிய பொழுது, புதிதாக ஒரு ஹெல்த் மினிஸ்டர் வந்தார். அவருக்கு A4 சைசில் ஒரு பக்கத்திற்கு மேல் ரிப்போர்ட்கள் அனுப்பினால், படிக்க பிடிக்காதாம். அதனால் என் மேலதிகாரி என்னை, "ஒரு பக்கத்திற்கு மேல் போகாமல் இதை டைப் செய்து கொடு" என்பார். நான் ஃபாண்ட் சைஸை குறைத்து, இடைவெளியை குறைத்து, மார்ஜினை குறைத்து அடித்துக் கொடுப்பேன்.

   நீக்கு
  3. நீங்கள் சொல்வது சரிதான். படிப்பவர்களுக்கு பெரிதாக தெரியும் தான்.
   பள்ளியில் பிக்னிக் நினைத்தேன், தவிர்த்து இருக்கலாம்.
   குறை என்று இல்லை. கருத்ததை சொன்னது சரிதான்.
   நீங்கள் சமையல் குறிப்பு , மற்றும் பதிவுகள் காணொளி எல்லாம் அழகாய் சுருக்கமாய் சொல்ல வந்த கருத்தை சொல்லி விடுவீர்கள்.

   நீக்கு
  4. @பானுமதி வெங்கடேச்வரன் மேடம் - //அதை தவிர்த்திருக்கலாம்// .../உங்கள் அனுபவங்களை தவிர்த்திருக்கலாம் // - அட... இது என்ன புதுசா? 'இடுகைக்கு விமர்சனம்' ஓகே. விமர்சனத்துக்கு 'விமர்சனமா'?... நீங்க எங்கயோ போயிட்டீங்க பா.வெ. மேடம்...

   நீக்கு
  5. @ பா.வெ. மேடம் - //நான் ஃபாண்ட் சைஸை குறைத்து, இடைவெளியை குறைத்து, மார்ஜினை குறைத்து// - நான் ஒரு ப்ராஜக்ட் ஆரம்பிக்கு முன்பாக, நெடிய ரிப்போர்ட் மேனேஜ்மெண்டுக்கு அனுப்புவேன். சமயத்தில் அது 70-120 பக்கங்களெல்லாம் போகும். முதல் பக்கத்தில், மேனேஜ்மெண்ட் கமிட்டி எல்லாருடைய பெயரும் போட்டிருப்பேன். அதன் மேல் அவங்க ரிப்போர்ட்டை ஏற்றுக்கொண்டதற்கு கையொப்பம் இடணும். இரண்டாவது பக்கம், Summary. அந்தப் பக்கத்தில் ப்ராஜக்ட் எவ்வளவு செலவு, எப்போ முடியும், என் கமிட்மெண்ட் என்ன, யாரை ரெகமெண்ட் செய்கிறேன், ஏன் செய்கிறேன் போன்றவை இருக்கும். ஆனால் மொத்த ரிப்போர்ட் பக்கங்களின் கூட்டுத்தொகை 1ஆக இருக்கணும் எனக்கு. அதாவது 91 பக்கங்கள், 28 பககங்கள் என்பதுபோன்று. அதனால், சில சமயம் ஃபாண்ட், இல்லைனா, கொஞ்சம் எக்ஸ்டிரா இடைவெளிலாம் கொடுத்து ரிப்போர்ட் தயாரிப்பேன். அது நினைவுக்கு வந்துவிட்டது.

   நீக்கு
  6. //ஓகே. விமர்சனத்துக்கு 'விமர்சனமா'?... நீங்க எங்கயோ போயிட்டீங்க பா.வெ. மேடம்...// மாற்று கருத்துக்கள் இருந்தால் பகிரலாம் என்று ஸ்ரீராமே சொல்லி விட்டார், இடையில் நீங்கள் யார்? ;)

   நீக்கு
 20. ஏஞ்சல் அவர்களின் கேள்வி பதில்களில் தோன்றிய கருத்து... (எப்போதோ எழுதியிருந்த எனது blogger draft-லில் இருந்து...)

  இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஆறு குழந்தைகள் பெற்ற பின்பும், கணவன் மனைவி இருவர்கிடையே சின்ன சின்ன சண்டைகளில் சில :-

  முடியும்... முடியாது...
  போகணும்... போகக்கூடாது...
  நடக்கும்... நடக்காது...
  தருவேன்... தரக்கூடாது...
  வேண்டும்... வேண்டாம்...

  ஆனால் இருவர்கிடையே அன்பு மட்டும் ரயில் தண்டவாளம் போல...!

  புலத்தலின் புத்தேணாடு உண்டோ நிலத்தொடு
  நீரியைந் தன்னார் அகத்து


  நேரம் கிடைப்பின் பிறகு வருகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யார் நம் நன்மைக்காவே பாடு படுகிறார்களோ அவர்களிடம் தான் கோபம் வரும் தனபாலன்.
   கணவன் மனைவியிடம், மனைவி கண்வனிடம் தான் தங்கள் கோபத்தை காட்டிக் கொள்ள முடியும்.
   அந்த செல்ல சண்டைகள் வாழ்க்கையின் சுவரஸ்யம்.
   அவர்களை இணைப்பது மெல்லிய அன்பென்ற இழை.

   நீங்கள் சொன்னது மிக அருமை.
   அன்பு தண்டவாளம் வாழ்க!

   நீக்கு
  2. மிக அருமையா சொன்னிங்க சகோ டிடி .அழகான திருக்குறள் ..விளக்கத்தை தேடி படித்தேன்
   சீக்கிரம் அந்த ட்ராப்ட்டை பதிவாக்குங்க .

   //ஆனால் இருவர்கிடையே அன்பு மட்டும் ரயில் தண்டவாளம் போல...!//
   இதே இதே இதுதான் அன்பு மட்டுமே பிரதானமா அமையும்போது மற்றதெல்லாம் மறைஞ்சிடும்

   நீக்கு
 21. அழகான இது போன்ற திருக்குறளுடன் கதை எழுத கேட்டு இருக்கிறேன் தன்பாலன் பார்த்தீர்களா?

  பதிலளிநீக்கு
 22. சபரிநாதனுக்கு வாழ்த்துகள் அவர் கனவு நனவாகவும்!

  முத்ரப்பா நீங்கள் ஒரு பெருமதிப்புடைய முத்து அப்பா!!! ஆமாம்!! உங்கள் நல்ல மனதிற்கு ராயல் சல்யூட்! உங்கள் குடும்பம் தழைத்திட மகிழ்வுடன் வாழ்ந்திட வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 23. சென்ற வார இடுகைகளின் விமர்சனம், நன்றாக வந்திருக்கிறது. கோமதி அரசு மேடம் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். பாராட்டுகள்.

  செய்முறைக் குறிப்புகள் நல்ல அழகான கையெழுத்தில் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   உங்கள் பாராட்டுக்கு நன்றி.
   என் கையெழுத்தை அழகான கையெழுத்து என்று பாராட்டியதற்கும் நன்றி.

   நீக்கு
 24. பாசிடிவ் செய்திகள் எப்போதும்போல் அருமை. அட... இப்படியெல்லாம் நல்லது செய்கின்றவர்கள் இருக்கின்றார்களே என்று தோன்றச் செய்கிறது.

  பதிலளிநீக்கு
 25. ஆகா... சண்பகப் பூவைப் போல இன்றைய பதிவு...

  ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது அழகான விமர்சனத்துடன் நல்லன செய்யும் நல்லிதயங்களைப் பற்றிய செய்திகளுமாக பதிவு மணக்கிறது....

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி

   நீக்கு
  2. ஹையோ துரை அண்ணன்.. அது ச அல்ல செ:).. ஆண்டவா ஆபத் பாந்தவா.. டமில்ல டி எடுத்தது என் டப்போ?:)) மிசுரேக்கு எல்லாம் எனக்கு டெலிவா:) தெரியுதே:)).. சரி சரி இத்தோடு ஓடிடுறேன்ன்.. மீண்டும்..

   எந்த ஊரில்.. எந்த நாட்டில்.. என்று காண்போமோ:)).. ஹா ஹா ஹா....

   நீக்கு
 26. வழக்கம்போல போற்றத்தக்கவர்களைப் பற்றிய அரிய செய்திகள். விமர்சனப்பகுதியை அலசிய விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
   விமர்சனப் பகுதிக்கு கருத்து சொன்னதற்கு நன்றி

   நீக்கு
 27. அத்தனை பணிகளுக்கிடையேயும் இப்படிப் பொறுமையாக எழுதுவது எப்படி கைவந்ததோ தெரியவில்லை.
  கோமதிம்மாவிற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

   நீக்கு
 28. கண்ணன் அவர்களின் பஞ்சர் ஒட்டும் முறை வித்தியாசமான தொழில்நுட்ப முயற்சி மற்றும் அவர் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. நேரடியாகச் சென்றே சரி பார்ப்பது என்பது மகிழ்ச்சியான விஷயம். வாழ்த்துகள் கண்ணன் அவர்களுக்க்ம்

  கீதா

  பதிலளிநீக்கு
 29. கோமதி அக்கா செமையா விமர்சனம் செஞ்சுருக்கீங்க. நுணுக்கமாகவும். என்னைப் பல இடங்களில் சொல்லிருக்கீங்க மிக்க நன்றி.

  என்னுடைய ஒரு கருத்திற்கு ஒரு கதையே சொல்லிட்டீங்களே கோமதிக்கா...

  அந்தக் கதை உண்மையாகவே என் கருத்தைப் பிரதிபலிக்கிறது. அது உண்மையும் கூட. அட்லீஸ்ட் கதையில் மாமனாராவது புரிந்து கொள்கிறாரே!

  நானும் ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன். இப்படித்தான் சொல்லுவேன். ஆனால் முடித்து/எடிட் செய்து கேவாபோவுக்கு அனுப்பாமல் ஹிஹிஹிஹி....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
   உங்கள் கதையை சீக்கீரம் அனுப்புங்கள் படிக்க காத்து இருக்கிறோம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி

   நீக்கு
 30. அக்கா நீங்க எழுதி வைத்திருக்கிற குறிப்புகளைக் கூட அழகா எடுத்துப் போட்டுட்டீங்களே...சூப்பர்!

  //வலைத்தள நட்புகள் கூடும் இடமாக இருப்பதால் யாராவது வரவில்லை என்றால் இங்கே கேட்டுக் கொள்கிறோம். தெரிந்தவர்கள் அவர்களைப்பற்றி விவரம் சொல்கிறார்கள். //

  காமாட்சி அம்மா சொல்லியிருப்பது மிகவும் சரியே...அடுத்து உங்கள் வரிகள்....//அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாமல் தீபமாக்கும் பாசவலை பாசவலை பாசவலை

  அனைவரையும் இணைக்கும் நட்புப் பாலமாக 'எங்கள் ப்ளாக்' இருக்கிறது.//

  டிட்டோ டிட்டோ!!!! ஆமாம் கோமதிக்கா...

  கீதா

  பதிலளிநீக்கு
 31. உங்கள் மோர் ரசம் குறிப்பு இருக்கிறது பார்த்தீர்களா கீதா?
  தினம் பதிவு போடும் இடம் இது தான். தினம் கூடும் இடம். நான் நினைத்தால் பதிவு அல்லது மாதம் ஒரு பதிவு
  இங்குதான் எல்லோரையும் தினம் பார்ப்பது போல் இருக்கிறது.
  காலை வர நேரமானல் கூட கேட்க ஆள் இருக்கிறார்கள். என்னாச்சு! இன்னும் காணோம் என்று.
  காமாட்சி அம்மா வயது காரணமாய் எல்லா வலைத்தளங்களுக்கும் வர முடியவில்லை என்றாலும் இங்கு அவர்களை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி.

  நான் எழுதியதை ஆமோதித்து வழி மொழிந்தற்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதிக்கா ஆமாம் மோர் ரசம் பார்த்தேன். ஒரே ஒரு வித்தியாசம் மாமியார் வெந்தயமும் கொஞ்சம் சேர்ப்பார். இன்னும் நிறைய குறிப்புகள் உள்ளது போல!!!

   என்னிடமும் நிறைய இருக்கு. ஆனால் பேப்பர் பொடியும் தருவாயில், அப்போது இங்க் பேனா என்பதால் பல கொஞ்சம் அழிந்து இருக்கு. 20 வருடம் முன்னால் கட்டிக் கொடுத்த ரெடிமேட் இட்லி, தோசைப்பொடி, ரவா இட்லி என்று பலதும் சும்மா எழுதி வைத்திருக்கிறேன். மகன் எல்லாவற்றையும் டாக்குமென்ட் செய் என்கிறான். அவனுக்குப் பின்னாளில் பயன்படுத்திக் கொள்ள. முயற்சி செய்ய வேண்டும்.

   கோமதிக்கா நீங்களும் முடிந்தால் குறிப்புகளிய உங்கள் வலையிலோ அல்லது திங்க விலோ கூடப் போட்டு வைக்கலாம். பின்னாளில் யாருக்கேனும் உதவும் இல்லையா. கீதாக்கா இப்போ போட்டு வைக்கிறாங்க (நீங்களும் சொல்லிருக்கீங்க) அது போல....வேர்ட் ஃபைலாகவும் போட்டுத் தரச் சொல்லியிருக்கிறான் மகன். அவன் க்ளவுடில்/கூகுள் ட்ரைவில் போட்டு வைத்துக் கொள்வானாம்.

   கீதா

   நீக்கு
 32. நிறைய குறிப்புகள் இருக்கிறது கீதா. நீங்கள் சொல்வது போல் 40 வருடங்களுக்கு முன்பு எழுதிய குறிப்புகள் கீதா.

  இப்போது வித விதமாய் அவர்களுக்கு நெட்டில் கிடைக்கிறது. நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான் முயற்சிக்கிறேன்.

  மகன் ஆசையை நிறைவேற்றுங்கள். என் சேமிப்புகள் சமையல் குறிப்பு மட்டும் இல்லை கீதா, மருத்துவக் குறிப்புகள், ஆன்மீக செய்திகள் படிப்பதை எல்லாம் பிடித்து இருந்தால் எழுதி வைக்கும் பழக்கம் இருந்தது அப்போது.

  கண்மேட்டி டிசைன்கள் , எம்பிராயிட் பின்னல் வேலைக்கு வரைந்த டிசைன்கள் என்று. ஏஞ்சல், பிரியசகி எல்லாம் அதை வலைத்தளத்தில் போடுங்கள் என்றார்கள். போட வேண்டும்.
  மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதிக்கா நானும் நிறைய எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்திருக்கிறேன் ஆனால் எதுவும் ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. ரிப்பன் எம்ப்ராய்டரி, ஹனிகோம்ப் எம்ப்ராயிடரி-ஸ்மாக்கிங்க் பாஷ்மினோ (காஷ்மீரி எம்ப்ராய்டரி), மிரர் வொர்க், சிக்கன்காரி, என்று நிறைய, க்வில்லிங்க், செராமிக் பெயின்டிங்க், க்ளாஸ் பெயின்டிங்க், எம் சீல் வைச்சு செயது, நாகர்கோவிலில் இருந்தவரை கன்னியாகுமரி சென்ற போதெல்லாம் பொறுக்கி வைத்திருந்த சிப்பிகளில் பறவைஅள் பல விதங்கள், செடிகள் என்று செய்து வைத்திருந்தேன்...ஊர் ஊராக மாறியதில் எல்லாமே போய்விட்டது. கொஞ்சம் மட்டும் இருந்தது அவை சென்னையில் இப்போது ஒரு ரூமில் போட்டு வைத்திருக்கிறேன். இங்கு எடுத்து வரவில்லை. அதற்கான இடம் இங்கு வீட்டில் இல்லாததால்.

   நானும் மருத்துவக் குறிப்புகள், ஆங்கில சேயிங்க்ஸ், தமிழ் சேயிங்க்ஸ், நல்ல வாழ்த்து வரிகள் என்று சேர்த்திருந்தேன். அந்த டயரி காணாமல் போய்விட்டது. ஆன்மீகம் மட்டும் எடுத்ததில்லை. நிறைய கட்டிங்க்ஸ் கூட சேர்த்து வைத்திருக்கிறேன் அதெல்லாம் சென்னையில் இருக்கிறது. அப்புறம் பார்த்தேன் னெட்டில் தான் எல்லாமே கிடைக்கிறதே என்று விட்டுவிட்டேன். பராமரிப்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

   நானே எழுதிய தமிழ்ப் பாட்டுகள் கூட இருந்தது. அந்த நோட்புக்கும் காணாமல் போய்விட்டது. அதில் நான் போட்ட ராகம், தாளம், கமகங்கள் எங்கு கொடுக்க வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்திருந்தேன்...கூடவே ஸ்வரங்கள் என்று...அதுவும் காணாமல் போனது. பாட்டுகள் ஸ்வரங்கள் எழுதியது பற்றி சொன்னதில்லை. இப்பதான் இங்குதான் சொல்கிறேன் அக்கா. ஏனென்றால் எல்லாம் பழைய கதை...பல வருடங்களுக்கு முன்னானவை என்பதால் அதற்கான ஆதாரமும் இல்லை என்பதால் சொன்னதில்லை...ஹிஹிஹி நினைவில் இருந்த நான் எழுதிய ஒரிரு நாட்டுபுறப்பாடலின் சில வரிகளை மட்டும் நினைவில் மீட்டெடுத்துப் பாடி பதிந்து வைத்திருக்கிறேன்..

   உங்கள் கைவண்ணங்களைப் போடுங்கள் கோமதிக்கா...

   கீதா

   நீக்கு
 33. கீதா எப்போதும் உங்கள் திறமைகள் வியக்க வைக்கும். எம்பிராய்டரி பின்னியது கொலு பெட்டியில் இருக்கிறது.
  கண்மேட்டி போட்டது எல்லாம் கிழிந்து காணாமல் போய் விட்டது.
  நீங்கள் சொன்னது போல இப்போது நினைவுகளில் மட்டும் தான்.

  //ராகம், தாளம், கமகங்கள் எங்கு கொடுக்க வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்திருந்தேன்...கூடவே ஸ்வரங்கள் என்று...அதுவும் காணாமல் போனது//

  அடடா! ஆதாரம் இல்லை என்றால் என்ன உங்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியுமே!

  நாட்டுபுறப்பாடல் பதிந்து இருப்பது கேட்க ஆவலாக இருக்கிறது.
  சேமிப்பு எல்லாம் ஒரு காலத்தில் இப்போது படங்கள் எடுத்து கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்கிறேன்.
  சில நேரங்கள் இவை எல்லாம் அர்த்தமில்லா சேமிப்போ! என்ற அலுப்பு வருகிறது எனக்கு.
  உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 34. ஆஆஆஆஆஆஆ இன்று கோமதி அக்காவின் கை வண்ணமோ.. இப்பூடி இவ்ளோ பொறுமையாக நிறைய எழுதுவா கோமதி அக்கா என நான் நினைத்திருக்கவில்லை. ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு போஸ்ட் போல எழுதியிருக்கிறீங்க... அருமை, நல்ல அலசல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   ஒவ்வொரு நாளையும் ஒரு போஸ்ட் போல!
   நன்றி அதிரா

   நீக்கு
 35. ///ஆமாம்... சனிக்கிழமைகள் அவ்வளவாக படிக்கப்படுவதில்லை///

  ஆஆஆஆஆஆஅ சனிக்கிழமை போஸ்ட் ஐ திறந்தே பார்ப்பதில்லை நான்:).. என் செக் சொல்லித்தான் இப்படி ஒன்று ஆரம்பமானதை அறிஞ்சேன் ஹா ஹா ஹா ஆனா சனிக்கிழமை போஸ்ட்டும் பின்னூட்டங்களும் எப்பவும் குட்டியாகவும் இருக்கும். ஸ்ரீராம் கூட அன்று போஸ்ட் போடுவதோடு.. கடமையை முடிச்சிடுவாரே:)).. பெரிசா பதிலும் குடுப்பதில்லையே:).. ஆனா அதுபற்றியே கோமதி அக்கா பென்னாம் பெரிய போஸ்ட் எழுதிட்டா ஹா ஹா ஹா.. மினக்கெட்டு பின்னூட்டங்களெல்லாம் திரட்டி எழுதியிருக்கிறீங்க.. நான் நினைக்கிறேன்ன் மாமாவுக்கு 2 நாட்களாவது வெளிச்சாப்பாடுதான் ஓடர் எடுத்திருப்பீங்க ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆமாம்... சனிக்கிழமைகள் அவ்வளவாக படிக்கப்படுவதில்லை///
   அது தானே உங்களை இங்கே கொண்டுவர முயற்சியாக சனிக்கிழமை பதிவில் மாற்றம் கொண்டு வந்து இருக்கிறார் ஸ்ரீராம்.
   //மாமாவுக்கு 2 நாட்களாவது வெளிச்சாப்பாடுதான் ஓடர் எடுத்திருப்பீங்க ஹா ஹா ஹா:)//

   ஆஹா! இப்படி ஒரு நினைப்பா? உங்கள் மாமாவுக்கு அத்தனையும் செய்து வைத்து விட்டுதான் எழுதவே அமர்வேன்

   நீக்கு
 36. சமையல் ரெசிப்பி எழுதி எடுத்திருக்கும் விதம் அழகு. முன்பெல்லாம் எழுதினால்தானே சேர்த்து வைக்க முடியும். அதுசரி எழுதியிருப்பவற்றில் பலது செய்தும் பார்த்ததுண்டோ கோமதி அக்கா?.

  //ஏஞ்சலின் கேள்விகள் அருமை, ///
  ஹா ஹா ஹா இப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அஞ்சுவைக் கூடையில கொண்டு வந்து கொட்ட வச்சிடுறீங்க எல்லோரும்:).. ஆனாலும் உண்மைதான் கேட்பதற்கும் கிளவிகள் சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே:))... கேள்விகள் வேண்டுமே... எனக்கு ச்சும்மா ச்சும்மா எல்லாம் கேள்வி வரும்... :) ஆனா ஏதாவது கேட்பமே என ஒசிச்சால்ல் வந்த கேள்விகூட நின்று போயிடுது:))...

  இன்றுகூட எனக்குத் தகவல் சொல்லிப்போட்டு அஞ்சுவை இன்னும் காணமே இங்கின.

  என்ன செய்ய கோமதி அக்கா, முடியவே முடியாமல் இருக்கு.. புளொக் திறந்து பார்க்க கூட மனமும் இல்லை ஆர்வமும் வரமாட்டேன் என்கிறது.. ஏதோ செய்வினைக் கிளவியை ஆரோ அனுப்பிப்போட்டினம் ஹா ஹா ஹா.. அதனால அதிரா வாறா இல்லையே என ஆரும் கோபிச்சிடாதீங்க... பார்ப்போம் என்ன நடக்கிறது என:)..

  வாழ்த்துக்கள் கோமதி அக்கா.. மிக அழகாக தொகுத்து வழங்கியிருப்பதற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. heloooo :))))))) cat naan ingethan irukken

   நீக்கு
  2. //இன்றுகூட எனக்குத் தகவல் சொல்லிப்போட்டு அஞ்சுவை இன்னும் காணமே இங்கின.//

   அதையேன் கேக்கறீங்க ..இன்னிக்கும் உறவினர் வருகை திடீர் விசிட் வந்துட்டாங்க 9 மணிக்குத்தான் புறப்பட்டாங்க

   நீக்கு
  3. ஹலோ மியாவ் சகோ டிடி யவே ட்ராப்ட்டில் இருந்த அழகான பதிவின் ஒரு பகுதியை கொண்டார வச்சிடுச்சி என் கேள்விகள் :))

   நீக்கு
 37. சொன்ன மாதிரி லேட்டானாலும் வந்துட்டனே :)
  அனைத்தும் அருமையான செய்திபகிர்வு ஆனால் முத்ரப்பா பற்றி செய்தி மிக மிக சிறப்பு வாசித்ததும் மனம் நெகிழ்ந்தது .இப்படியும் ஒரு நல்லவரா ! உதவி செய்தவரை பிறந்த குறை மாத குழந்தையை மறந்து ஓடிய அந்த பெண் :(

  முத்ரபா போன்றோர் வாழும் இதே பூமியில் இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்களே :(

  பாசிட்டிவ் மனிதர் கண்ணன் மற்றும் சபரி இருவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் சபரியின் கனவு மெய்ப்பட மேலும் சிறப்புகள் அடைய வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 38. கோமதி அக்கா மிக அழகா விமரிசனம் செஞ்சிருக்கீங்க .இப்போல்லாம் சனிக்கிழமை பதிவுகள் மிக அருமையாக இருக்கு இந்த ரிவ்யூ பகுதி .உங்க குறிப்பு டைரி பார்க்கா ஆசையா இருக்கு .நான் ஒரு பெரிய பாக் முழுக்க பழைய குறிப்புகள் வச்சிருக்கேன் எல்லாம் அம்மா அனுப்பின அவள் விகடன் இணைப்புக்கள் அப்புறம் women's era பழைய கட்டிங்ஸ் :)
  உங்க சமையல் குறிப்புகளும் பகிருங்க .என்னுடைய தேவதையின் சமையல் பக்கத்தை குறிப்பிட்டதுக்கு மிக்க நன்றி :)

  அந்த திருமணம் சந்தோஷமான வாழ்க்கை குறித்த பதில்கள் ஆசிரியர்கள் மற்றும் சகோ டிடி இவர்கள் சொன்னதேதான் எனது கருத்தும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன். டைரி குறிப்புகள் போல் அம்மா போஸ்டில் அனுப்பும், கோலங்கள், சமையல் குறிப்பு வேறு இருக்கும் அதை பத்திரப்படுத்தி வைக்கவில்லை. ஆனால் என் கோல நோட்டில் அம்மா வரைந்து தந்த கோலங்கள், அவர்கள் எழுதிய கடிதங்கள் இருக்கிறது. என் பெண்ணின் பிரசவ சமயம் டைரியில் பிரசவ மருத்து செய்வது எழுதி தந்தவை இருக்கிறது. நிறைய சேமிப்புகள் உங்களிடமும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

   முடிந்த போது சமையல் குறிப்பு பகிர முயற்சிக்கிறேன். உங்கள் பக்கத்திற்கு வர முடியவில்லையே ஏஞ்சல்? ஈஸ்டர் வாழ்த்து சொல்ல வந்தேன் முடியவில்லை. பிரியசகியிடம் சொன்னேன் உங்களிடம் சொல்ல சொல்லி.
   இத் தளத்திலும் உங்களுக்கு வாழ்த்து சொன்னேன்.
   உங்கள் புதிய வேலை எப்படி இருக்கிறது?

   திண்டுக்கல் தனபாலன் சொன்னது போல்தான் எங்கள் கருத்தும்.உங்களுக்கும் அந்த கருத்து பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

   விட்டுக் கொடுத்தல், சகிப்புதன்மை, தியாகம் மூன்றும் வேண்டும், குடும்ப படகு நல்லபடியாக போவதற்கு, ஆனால் ஒவ்வொருவர் மனநிலை ஒரே மாதிரி இல்லாத காரணத்தால் மாற்றங்கள் ஏற்படுகிறது.

   லேட்டானாலும் சொன்னது போல் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
  2. கோமதி அக்கா மிக அழகா விமரிசனம் செஞ்சிருக்கீங்க//
   நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 39. முத்துப் போல மூன்று செய்திகள். முந்தி நிற்பது, முன் பின் தெரியாத பெண்ணுக்கு உதவி செய்த
  முத்ரப்பா தான். செய்தி கொடுத்த ஏகாந்தன் சாருக்கு மிக மிக நன்றி. ஸோலார்
  கருவியுடன் உதவிடும் கண்ணான் அவர்களுக்கும், நீட் எழுதித் தேர்ந்தெடுக்கப்பட்ட
  மாணவருக்கும் மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 40. அன்பின் வணக்கம்...

  இன்றைக்கு ஏனிந்த தாமதமோ!...

  பதிலளிநீக்கு
 41. //முன்பெல்லாம் எழுதினால்தானே சேர்த்து வைக்க முடியும். அதுசரி எழுதியிருப்பவற்றில் பலது செய்தும் பார்த்ததுண்டோ கோமதி அக்கா?.//
  ஆமாம் , எழுதிதான் சேர்த்து வைக்க முடியும்.

  நான் செய்து பார்த்தவைகள் எல்லாம் டிக் செய்து வைத்து இருக்கிறேன்.

  ஏஞ்சல் கேள்விகள் எத்தனை பேரை பேச வைக்கிறது அவருக்கு கிடைத்த வெற்றிதான்.

  //கேள்விகள் வேண்டுமே... எனக்கு ச்சும்மா ச்சும்மா எல்லாம் கேள்வி வரும்... :) ஆனா ஏதாவது கேட்பமே என ஒசிச்சால்ல் வந்த கேள்விகூட நின்று போயிடுது:))...//
  அப்படி நீங்கள் கேட்ட கேள்விக்கும் விடை அளிக்கவில்லை என்று ஏஞ்சல் கேட்டு இருக்கிறார் கெளதமன் சாரிடம் புதன் வரும் உங்கள் கேள்விக்கு பதில்.

  அம்மாவுடன் மகிழ்ந்து இருங்கள். கோபம் எல்லாம் வராது அதிரா மேல் . நீங்கள் வந்தால் சந்தோஷம் அதிகமாய் வரும்.
  ஏஞ்சல் தகவல் சொன்னதற்கு நன்றி. நீங்கள் வந்து விரிவாக கருத்து சொல்லியதற்கு நன்றி நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!