சனி, 18 மே, 2019

முதல்வர்... முதலில் மருத்துவர் - மோனநிலை மோகினி


1)  பூடான் பிரதமர் தான் படித்த கல்வி பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும் என, வாரத்தில் ஒருநாள் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார்.





2)  இன்டர்நேஷனல் ஒய்ஸ்மென் சங்கம்இச்சங்கத்தினர், 'வாரம் ஒரு முறையேனும் ஒரு நேர உணவு' என்ற கொள்கை அடிப்படையில், கடந்த, 2 ஆண்டாக ஏழை, எளியோருக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு நேர உணவை அன்னதானமாக வழங்கி வருகின்றனர்.




3)  அரசு துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இளைஞர்கள் ஒன்றிணைந்து, சொந்த செலவில் அணைக்கட்டு, வரத்து கால்வாய்கள், குளங்களை துார்வாரி, பராமரிக்க முடிவு செய்தனர். 

முதல் கட்டமாக, கொத்தமங்கலத்தில், காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அம்புலி ஆறு அணை, அதன் வரத்து கால்வாய்களை துார்வாரி சீரமைக்கும் பணியை, துவங்கி உள்ளனர்.



4)  அரசாங்கத்தால் செய்ய முடியாத செயலை தனி நபர் நினைத்தால் செய்யமுடியும் என எடுத்துக் காட்டியிருக்கிறார், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்.  கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எடுமலைக்குடி எனும் பழங்குடி கிராமத்தில் நூலகம் நடத்தி வருபவர் பெயர், பி.வி.சின்னதம்பி, வயது 73. சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு இவரது கடைதான் ஒரே ஷாப்பிங் மால். அதனால்தான் என்னவோ, தனது கடையிலேயே நூலகத்தையும் நிறுவிவிட்டார்...   (நன்றி ஏகாந்தன் ஸார்)





5)  'கஜா' புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர், கணேசனுக்கு, 10 லட்சம் ரூபாய் செலவில், நடிகர் ராகவா லாரன்ஸ், வீடு கட்டி கொடுத்துள்ளார்.




6)  மின்சாரத்திற்கு அடிமையாகிவிட்டால் அது தரும் சுகத்திற்கு ஆடம்பரத்திற்கு ஆச்சர்யங்களுக்கு அடிமையாகிவிட நேரிடும் உங்கள் உலகில் மின்சாரம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இருண்டுவிடும் என்னைப் பொறுத்தவரை மின்சாரம் இங்கு வந்தால் என் வாழ்க்கையே சுருண்டுவிடும்.  79 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழும் பெண்ணான ஹேமா சேன்.




================================================================================================================


விமரிசனத்தில் மாட்டிய எபி-யின் அந்த ஏழு நாட்கள் ! - ஏகாந்தன்  11/5 To 17/5



நம்மையும் பேனாவை எடுக்கச் சொல்லிவிட்டார்கள். ஏதோ, எழுதிச் செல்வோம். ஆனாலும், எச்சரிக்கை ! இது நீளமாகப் போகலாம்.  ஆதலின் சிலர், ஓட நினைத்தால்.. ஓடலாம் !

11/5 சனி :   இந்தப் பொல்லாத காலத்திலும், தர்மவழியில் சிந்தித்து செயல்படும் அப்பாவிகள் சிலரை, மெல்ல மனதினால் எபி வருடிச் செல்லும் நாள். இந்த வாரம் முத்தாக மூன்று.  

வெறுமனே ’சபரி’ என்று சொல்லி நிறுத்தியிருந்தால்...  ‘கதவு திறந்திருக்குதானே..  இதோ வந்துட்டேன்!’ என்று முக்காடு போட்டுக்கொண்டோ, முழுசாக மூடிக்கொண்டோ காக்கிகள் புடைசூழ, எந்தப் புரட்சியாயினியாவது பாய்ந்து வரக்கூடும். நல்ல காலம். இது அப்பாவிப் பையன் சபரிநாதன். இந்தத் திருப்பூர் திலகமும் மேலுயர்ந்து வருவான். வீஸாவுக்கு இவன் விண்ணப்பிக்க வருகையில், ’துண்டக் காணோம்.. துணியக் காணோம்..’ என ஓடிவிட்டிருப்பார் ட்ரம்ப் !

மேற்கொண்டு வாசித்தால்.. வஞ்சனையில்லாமல் விமரிசனம் செய்திருக்கிறாரே, திருமதி கோமதி.  அதையுமா விமரிசிப்பது? விமரிசகர்களிடையே ’பரஸ்பர மரியாதை’ வேண்டாம்? So.. No ! விமரிசனம் இல்லை!  ஆனாலும் சும்மா படித்துவிட்டுஓடிவிட்டால்நல்லாவா இருக்கும்?  ம்... அது என்ன படம்.. நோட்புக்கு! ஏகப்பட்டது எழுதிவச்சிருக்கிறாரே. சாப்பாட்டு சங்கதிகளா? இதே மாதிரி மற்றவர்களிடமும் சிறுவயதுப் பழக்கம் இருந்திருக்கும். அவர்களும் எதையாவது எழுதி..எழுதி..  பத்திரமாகக் கட்டி வைத்திருப்பார்களோ?  சோம்பலைப் பார்க்காமல், அதைக் கொஞ்சம் எடுத்து எபி-க்குள் விட்டால், நன்றாக இருக்குமே. கவனிக்கிறீர்களா?

அட, கொஞ்சம் இரு!  நோட்புக்கில் கையெழுத்தைப் பாரு.. லேசா இடதுபுறம் சாய்ந்த எழுத்தால்ல இருக்கு. அப்படீன்னா..  தனியாகத்தான் காரியம் செய்ய விரும்புவாரோ?  ஒருவேளை, புரட்சிகர /வித்தியாச சிந்தனையுமுண்டோ!  அப்பறம்..  அப்பறம்..  எழுத்து கூர்மையா மேலும் கீழும் இழுத்துவராம, கொஞ்சம் ரவுண்டா வந்திருக்கே.. ஓ!  கலைத்திறனும் இருக்கிறதுபோலிருக்கே இவர்கிட்ட?

போதும், எல்லைக்குள்ளேயே இருப்போம்! Graphology-க்குள் (கையெழுத்தியல்!) ஓவராகப் போகவேண்டாம்.

12/5 ஞாயிறு :   ஸ்ரீராம் (அல்லது கேஜிஎஸ் அல்லது ’இருவர் உள்ளம்’?) படம்படமா போட்டு நிரப்பிவிடுகிறார்களே ஞாயிறை. இது என்ன கூத்து? ஒருவேளை ’குழந்தைகளுக்காக’ என்று ஒதுக்கிய நாளோ? ஏரியும் நாணலுமாய் ஆரம்பிக்கும் இந்த ஞாயிறின் படங்கள், யமஹா வேவ்ரன்னரில் முடிகின்றன. 12 லட்ச ரூபாய் Watercraft ! தமிழ்நாடு டூரிஸம் இதை ஊட்டி, கொடைக்கானல் ஏரிகளுக்குக் கொண்டுவந்தாலென்ன? தமிழனும் சுகித்துவிட்டுப்போகட்டுமே!  ம்ஹூம்..

மொத்தம் 22 படங்கள். சில படங்கள் ஷார்ப் எனினும், ஓவர். பயணித்தவரிடமிருந்து ஒரு சிறு டயரிக் குறிப்புகூட இல்லை. "படம் பார்த்துக் கதை சொல்" என்று வாசகர்களைக் கேட்கிறீர்களா?  ஒருபடம் கூட மேகாலய மனிதரைக் காண்பிக்கவில்லையே.  பனியில்லாத மார்கழியா.. என்பதுபோல, மனிதரில்லாத மாநிலமோ !

13/5 திங்கள் :  விதிவிலக்கேதுமின்றி, அனைவரையும் இழுத்துத் தன்பக்கம் போட்டுக்கொள்ளும் சங்கதி. சாப்பாடு.   செவிக்கிருந்தாலும் அது கிடக்கட்டும்..  வாய்க்குப் போட்டுக்கொள் முதலில்! வடைக்கு முந்து.. படைக்கு பிந்து!

விதவிதமான உணவு வகைகள். பசியைக் கிளறும் பரபர படங்கள். எபி பெண்மணிகள் போட்டிபோட்டுக்கொண்டு வெளுத்துவாங்கும் நாள். பின்னே?  Its their cup of tea! இந்தத் திங்களில் பானுமதி அவர்களின் ‘பர்ப்பிள் ட்ரீட்!’  பீட்ரூட்டை வேறெந்தக் காய்கறியும்
மிஞ்ச முடியுமா என்ன, கலரில்? பீட்ரூட் தயிர்ப்பச்சடி கோடைவயிற்றிற்கு குளுமையானது. கண்டதுபோதும்; உண்டு மகிழ்வீர்!

14/5 செவ்வாய் :  பொதுவாக, எபி குடும்பம் தனது கலைத்திறனைக் காண்பிக்க முயற்சிக்கும் நாள். இந்த வாரம் ஸ்ரீராம், ஜீவி-சாரைக் கதைக்க வைத்திருக்கிறார்.  ஜீவி கொடுத்த ‘நீர்மோர்’, வாசகர்களை சொல்லவைத்துவிட்டது போலிருக்கிறதே, ‘ஒன்ஸ்மோர்’ !

மேலும்: சுஜாதாவின் ’கற்றதும் பெற்றதும்’ பாகம்-3-ஐ சமீபத்தில் மீள்பார்வை செய்கையில், ஒரு பக்கத்தில் 'Snoopy' comic - படம் ஒன்றின் கீழே ‘அண்ணா நகர் ஜீவி’ என்றெழுதியிருந்ததைப் பார்த்தேன். அங்கே, சுஜாதாவை இம்ப்ரெஸ் பண்ணப் பார்த்த
நபர் இவர்தானா !

15/5 புதன் : பிரதானமாக கேஜிஜி சார், வாசகர் கேள்விகளுக்கு ஆசையாக யோசித்து, சாமர்த்தியமாக பதில் சொல்லும் நாள். இன்னும் ஓரிரு மர்ம நபர்களும் ’மர்மர்’ செய்வதுண்டு. கேட்கப்படும் கேள்விகளில் சில கூர்மையானவை, மழுங்காத பதில் வேண்டுபவை.  ஈடுகொடுக்கும் வகையில் அவ்வப்போது கேஜிஜி & கோ -வின் பதில்களில் தகவல்கள், சுவாரஸ்ய மணிகளாய் சிதறுகின்றன.

இந்த புதனில் ’கேள்வித் திலகம்’ ஏஞ்சலினின் அம்பு ஒன்றிற்கு கேஜிஜி-யின் தடுப்பாட்டம் மூலமாக, ’குயுக்தி’-யை அறிந்தேன்! கிட்டத்தட்ட என் நினைவிலிருந்து தவறிப்போன வார்த்தையிது. இன்னொரு விஷயம்: ‘பேய்க்காட்டல்’. அவ்வளவு எளிதானதல்ல, படத்தைப்போட்டு ஓட்டுவதற்கு..

16/5 வியாழன் :

ஸ்ரீராமின் நாளென்போர் பலர்
சிறுகவிதை நாளென்போர் சிலர்
சிக்காது ஓடுவோர் எவரும் இலர்

காசிக்கான ரயில் பயணம் தொடர்கிறது. பிஹாரி ஒருவரின் நேர்காணலோடு, இட்லி, புளியோதரை, காப்பி, டீ, லாசரா-வின் எழுத்து என ரசமான கலவை. லாசராவின் புத்தகமொன்றைப் படித்த அவரது அக்கா உணர்வு மிகுதியில், தொடர முடியாமல் திண்டாடுவதைச் சொன்னதைக் கேட்டு தான் ஆச்சரியப்பட்டதாக சொல்கிறார் ஸ்ரீராம்.  எபி-க்காரர்களில் லாசரா வாசகர்கள், பக்தர்கள் உண்டெனத் தெரிகிறது.  லேசுப்பட்டவரில்லை இந்த லாசரா.

இதற்கு முந்தைய வாரம் குறிப்பிடப்பட்ட, தூங்குவதுபோல் பக்கத்து சீட்டில் பாசாங்கு செய்த பெண் (கல்லூரிமாணவி!), ஸ்ரீராமின் நினைவிலிருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பின்னூட்டக்காரர்களில் சிலரும் அந்தப் பெண்ணை விடாது இன்னும் பேசுவது சிந்திக்கவைக்கிறது. அவள் பத்திரகிரியாரின் சிஷ்யையோ? ‘தூங்காமல் தூங்கி சுகம்பெறுவதெக்காலம்’? என்கிற மோனநிலை மோகினியோ!

17/5 வெள்ளி :  வெள்ளிக்கிழமை.. விடியும் வேளை.. வாசலில் கோலமிட்டுத்தான் ஆரம்பிக்கிறாரோ என்னவோ - பாஸுக்குப் பரிவுகாட்டும் பண்பாளரான ஸ்ரீராம்!

பலருக்கு, சில சமயங்களில் - யாருக்குமே, தெரிந்திராத எண்பதுகளின் படங்கள், பாட்டுக்களைக் கிண்டியெடுத்து, தூசிதட்டிப் போடுவதில், அவரை மிஞ்ச அவனியில் 
ஆளில்லை! தெரிந்த படப்பாடல்களைப் போடுவதேயில்லையா ? போடுகிறார்..  போடுகிறார்...

என்னால் வெள்ளி வீடியோ/ஆடியோக்களில் பலவற்றை ரசிக்கமுடியவில்லை.  சிலதில் இசை நன்றாக இருக்கிறதுதான். குரலும் இனிமை. ஆனால் பெரும்பாலான பாடல் வரிகள்? Double-toned Milk ! ஒன்னுமில்லை அதில். வெறும் டிகாக்‌ஷனே பரவாயில்லை.

இளையராஜாவின் இசை மேதமை ஒருபக்கம் இருக்கட்டும். ஒரு பாடலாசிரியராக, பாடகராக அவரைப் பார்ப்பதெல்லாம் ரொம்ப ஓவர். ஏற்கனவே மேலே உயர்ந்துகொண்டிருக்கும் அல்லது ஒரு பீடத்தில் ஏறி உட்கார்ந்துவிட்ட ஒரு கலைஞனை, ஓவராக மேலும் தூக்கி, எங்கேயாவது உச்சிக்கொம்பில் உட்காரவைத்துப் பல்காட்டுவது சராசரித் தமிழனின் வேலை. 

பின்னூட்டங்கள் :  இவற்றின் பொதுவான இயல்புக்கேற்றபடி, இவற்றில் பல ஓட்டங்கள். வெகுசிலவே, ஊட்டங்கள். முதல்வகை, அரட்டை அரங்க மனநிலையில், எதார்த்தமாக, ஆனால் வேகமாக ஓடுவது, ஓட்டப்படுவது. இரண்டாவது, சங்கதியைக் கொஞ்சம் உள்வாங்கி, அதன் தாக்கத்தில் சற்று விஷயபூர்வமான, ரஸமான ’இன்புட்’-ஐத் தருவது. அதிராவிடமிருந்தென்றால் அது தனி வகைமை.

புதன்கிழமை கேஜிஜி-ஜிக்கு பதில் சொல்கையில் ‘பேசி தீர்த்திடலாம்..’ என்கிறார்.  ’யாரை’ என்று சொல்லாததால் மனதில் ஒரு பதைபதைப்பு !

எப்படியிருப்பினும் கலகலப்பு. இப்படியெல்லாம் கதை ஓடுவதால்தான், 16 நிரம்பாத பிள்ளையை (பெண் பிள்ளையோ?), 16 லட்சத்துக்கும் மேலானவர்கள் நோட்டம் விட்டுப்போயிருக்கிறார்கள்.. விட்டுக்கொண்டிருக்கிறார்கள் !
***

122 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்!

    அட இன்று ஏகாந்தன் அண்ணாவின் விமர்சனமா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம்.... என்ன... இன்று நிறைய பாசிடிவ் செய்திகள்?

    இன்றாவது கீசா மேடம் எட்டிப் பார்ப்பாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்ன... இன்று நிறைய பாசிடிவ் செய்திகள்?//

      காலை வணக்கம் நெல்லை...

      கொஞ்சம் சேமித்து வைத்துக் கொண்டால் செய்தி இல்லாத நாட்களில் உதவுமோ!!

      நீக்கு
  3. ஏகாந்தன் சாரின் விமர்சனம் நன்றாக இருக்கிறது. அவரின் "ஞாயிறு" விமர்சனம் நிதர்சனத்தைச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய டாப் மற்றும் ஆச்சரியமான பிரமிக்க வைத்த, நம் ஊரிலும் இப்படி ஒருவர் கிடைக்கமாட்டாரா என ஏங்க வைத்த பூடான் பிரதமர் ஷெரிங்க் அவர்கள்!

    ராயல் சல்யூட்! அவருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கங்கள் அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  6. தித்திக்கத் தித்திக்க
    திருமிகு ஏகாந்தன் அவர்களின் விமர்சனம்.. அருமை.. அருமை...

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. முத்துக் குவியலாக
    இன்றைய பதிவு..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு. வந்திருக்கும் நண்பர்கள், நண்பிகள், இன்று என்னைத் தனியாக விசாரித்த நெல்லை, விசாரிக்கப் போகும் மற்றவர்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கம்.

    பதிலளிநீக்கு
  10. //இளையராஜாவின் இசை மேதமை ஒருபக்கம் இருக்கட்டும். ஒரு பாடலாசிரியராக, பாடகராக அவரைப் பார்ப்பதெல்லாம் ரொம்ப ஓவர். ஏற்கனவே மேலே உயர்ந்துகொண்டிருக்கும் அல்லது ஒரு பீடத்தில் ஏறி உட்கார்ந்துவிட்ட ஒரு கலைஞனை, ஓவராக மேலும் தூக்கி, எங்கேயாவது உச்சிக்கொம்பில் உட்காரவைத்துப் பல்காட்டுவது சராசரித் தமிழனின் வேலை. // ஏகாந்தன் சாரைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். அதனாலேயே இங்கே இளையராஜா குறித்த புகழ் பாடும்போதெல்லாம் அதிகம் இல்லை, இல்லை, கலந்துக்க மாட்டேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து! என்றாலும் சில விஷயங்களில் என் கருத்தை வெளிப்படையாகச் சொல்லத் தயக்கம்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களே சொல்லி இருப்பது போல அவரவருக்கு அவரவர் கருத்துகள் கீதா அக்கா... இளையராஜா பேச்சை / நடந்துகொள்வதை சகிக்க முடியவில்லை என்றாலும் ​அவர் பாடல்களை ரசிக்காமல் என்னால் இருக்கவே முடியாது கீதா அக்கா.

      நீக்கு
  11. விமரிசனம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை என் போன்றோருக்கு எடுத்துக்காட்டி இருக்கும் ஏகாந்தன் தன் தனித்திறமையை இங்கேயும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொன்றும் முத்துக்கள்! எதிர்பாரா நல்விருந்து.

    பதிலளிநீக்கு
  12. ஹேமே சேனைப் பைத்தியம் என்று சொல்லும் நாம் தான் பைத்தியம். ராகவா லாரன்ஸ் சத்தம் போடாமல் பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார். சின்னத்தம்பி படித்த செய்தி.அணைகளையும் நீர் வளங்களையும் பராமரிக்கும் இளைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள். உணவு வழங்கும் இன்டர்நேஷனம் ஒய்ஸ்மென் சங்கம் செய்யும் செயல் பாராட்டுக்குரியது. தொடர்ந்து 3 நேர உணவையும் வழங்கும் வண்ணம் நிதி ஆதாரம் பெருகப் பிரார்த்தனைகள். பூடான் பிரதமர் தெரிந்த செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமா சேன்! ஹேமே சேன் என வந்திருக்கு. கவனிக்கலை! :)

      நீக்கு
    2. ஹேமே சென்// ஹா ஹா ஹா கீதாக்கா மலையாத்துக் கரையோரம் எட்டிப் பார்த்தீங்களோ!!!!!!

      அங்கு கீதே, உஷே, ஹேமே, லலிதே என்றுதானே சொல்லுவாங்க

      கீதா

      நீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  14. ஹேமா சென் இச்செய்தியும் டாப்!! வாவ்! இவரும் ஆச்சரியப்பட வைக்கிறார். அவர் சொல்லும் வார்த்தைகளை நான் அப்படியே டிட்டோ செய்கிறேன்...அவரைப் போல் வாழ்வது நமக்குக் கடினம் என்றாலும்....

    இயற்கையோடு ஒன்றிப் பின்னிப் பிணைந்து வாழ்கிறார். அவரா பைத்தியம்!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகாந்தனின் "அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்" படித்திருக்கிறீர்களா?

      நீக்கு
    2. ஸ்ரீராம் வாசித்ததில்லை. நெட்டில் கிடைக்குமா பார்க்கிறேன்...

      கீதா

      நீக்கு
    3. @Sriram //ஜெயகாந்தனின் "அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்" படித்திருக்கிறீர்களா?//
      எதற்கு இந்த கேள்வி?


      நீக்கு
  15. ஏகாந்தன் ஜி ! அடேடேடே ! விமரிசனத்தை இவ்வளவு சுவையாக எழுதியிருக்கிறீர்களே ! பாராட்டுகள் + நன்றி! graphology தொடங்கி பத்ரகிரியார் வரை என்ன ஒரு wide spread! அழகு, அழகு!

    பதிலளிநீக்கு
  16. ப்ளஸில் சங்கம் சிறப்பு...

    ஏகாந்தன் ஐயா பாணியில் விமர்சனம் அருமை...

    பதிலளிநீக்கு
  17. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  18. ஹேமா சென் செய்தி வித்தியாசமானது. மொபைல் இல்லை என்று சொன்னாலே நம்மைப் பைத்தியம் என்று முடிவுகட்டி விடுவார்கள். ஃபிரிட்ஜ், தொலைக்காட்சி, அவன் போன்ற பலவும் ஆடம்பரம் மட்டுமல்ல நம் பொன்னான நேரத்தை, உடல்நலத்தை கபளீகரம் செய்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    பூடான் பிரதமர் தான் படித்த கல்விக்கு மரியாதை கொடுத்து பணியாற்றி வருவதிலிருந்து, அன்னதானங்கள் செய்து வரும் இன்டர்நேஷனல் ஒய்ஸ்மென் சங்கத்தின் பணிகள், அணைக்கட்டு பராமரிப்பு, கால்வாய்கள் தூர்வாரி நீர்சேமிப்புக்கு வழிவகுத்தல் என, உழைக்கும் இளைஞர்கள், இலவச நூலகம் வைத்து பழங்குடி மக்களுக்கு கல்வியறிவு பெருக உதவி வரும் பி.வி சின்னத்தம்பி அவர்களின் செயல்கள், தூயமனதுடன் சமூக சேவை செய்து வருபவருக்கு, கஸ்டம் வரும் போது உதவிய நடிகர் ராகவா லாரன்ஸின் செயல், மின்சாரமின்றி இயற்கையோடு வாழ்ந்து வரும் பெண்மணி ஹேமா சேன் வரைக்கும் எல்லா பாசிடிவ் செய்திகளும் மிக அருமையாக இருந்தது. வாழ்க என்றும் நற்செயல்கள். அனைவருக்கும் பாராட்டுகள்.

    இந்த வார விமர்சனமாக சகோதரர் திரு. ஏகாந்தன் அவர்களின் விமர்சனம் மிக, மிக அருமை. நல்ல நடையில் மிக அற்புதமாக எழுதியுள்ளார்.

    /ஆனாலும், எச்சரிக்கை ! இது நீளமாகப் போகலாம். ஆதலின் சிலர், ஓட நினைத்தால்.. ஓடலாம் !/

    இந்த எச்சரிக்கை இங்கு தேவையேயில்லை. ஒவ்வொரு நாளையும் நறுக்குத் தெரித்தாற்போல் துல்லியமாக ஆராய்ந்து, அழகாக விவரித்து சகோதரர் எழுதிய பாங்கிற்கு பாராட்ட எனக்கு தகுதியில்லையெனிமும்,அருமையான நடையோட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தலைப்புத் தேர்வும் அமர்க்களம். "முதல்வர்" என முதல் செய்தியில் ஆரம்பித்து, "மோனநிலை மோகினி" என இறுதி விமர்சனத்தில் முடித்த விதம் கண்டு, அதனுள் இருக்கும் அர்த்த செறிவு கண்டு அகம் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான அலைச்சலுக்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. அலசல் அலைச்சல் ஆகி விட்டதே? ரொம்ப அலைச்சலோ?(நாட்டுல தமிழில் டி வாங்கியவர்களின் தொல்லை தாங்க முடியலடா சாமி!)

      நீக்கு
  20. நம் நாட்டில் நிறைய மருத்துவர்கள் தண்டமாக அரசியல்வாதிகளாக இருக்கின்றனர்.

    ஏகாந்தன் சாரின் அலசல் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், உண்மை ஜி. அதேதான் எனக்கும் தோன்றியது. நன்றி ஜி.

      நீக்கு
  21. பூடான் பிரதமர் ஆச்சர்யப்படுத்துகிறார். பி.வி.சின்னத்தம்பி அவர்களை வணங்கத் தோன்றுகிறது. தொண்டருக்கு தொண்டராக விளங்கும் ராகவா லாரன்ஸிற்கு போடுவோம் ஒரு ஜே!ஹேமா சேன் ஒரு!
    ஆலங்குடி இளைஞர்கள் வாழ்க வளமுடன். நாம் செலுத்தும் வரிப்பணம் எங்கே செல்கிறது?

    பதிலளிநீக்கு
  22. கவிதையும் கருத்துமாக ஏகாந்தன் சாரின் விமர்சனம் அருமை. இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  23. இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் ஊர் மக்கள் எல்லோரும் அரசை நம்பாமல் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் தொடங்கியுள்ளனர் அதுவும் சொந்தச் செலவில்!! கிராமத்தவர்கள்.என்ன வருமானம் இருக்கும் பாருங்கள்!? நல்ல விஷயம்! பாராட்ட வேண்டும் ஆலங்குடி இளைஞர்களை.

    ஆனால் அதே சமயம் இப்படியான செய்திகளை அரசு (அதாவது ஆட்சியாளர்கள் கண்ணில் படாமலா இருக்கும்) கண்ணில் படாமலா இருக்கும்? அப்பவேனும் குற்ற உணர்ச்சி வருமோ? அட்லீஸ்ட் இனியேனும் இப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றுமோ? இது தங்களின் கடமை என்ற உணர்வு வருமோ? தாங்கள் கடமை தவறுகிறோம் என்ற எண்ணம் வருமோ அடடா நாம் அல்லவா செய்திருக்க வேண்டும் பாவம் இந்த மக்கள் நமக்கு ஓட்டும் போட்டு தாங்களே தங்கள் தேவைகளைக் கவனிக்கிறார்களே என்ற எண்ணம் வருமோ?! ஹூம்

    ஹப்பா இப்படி மக்கள் தாங்களே செய்து கொண்டுவிடுகிறார்களே நமக்கு வேலை இல்லை இன்னும் கொள்ளைஅடிப்போம் என்று இருந்துவிடுவார்களோ? ஒருவிதத்தில் அவர்களின் பொறுப்பிலிருந்து இன்னும் விலகவே செய்கிறதோ என்றும் தோன்றுகிறது.

    நீர், பொதுச்சுகாதாரம், மருத்துவம், கல்வி இதெல்லாம் மக்களுக்குத் தரமாகக் கிடைக்க வேண்டும் என்பது அரசின் தலையாய பணிகள்! கடமைகள். ஹூம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசாங்கமா?

      சென்னையில் ஒரு நீர் நிலையில் கூட நீர் இல்லை. அதற்கே அரசாங்கம் வெட்கப்படவேண்டும். அட, நீரில்லாதபோது தூர்வாரும் வேலையையாவது செய்கிறார்களா? ஊ....ஹூம்.

      நீக்கு
    2. இப்போது வெளியாகும் திரைப்படங்களில் நாட்டமில்லாத எனக்கு இங்கே மகள் வீட்டில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது...

      அந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்பையாகக் கொண்டது என்றும் கொள்ளையர்களைத் தேடிக்கண்டு பிடித்தவர்களுக்கு எவ்வித விருதும் அளிக்கப்பட வில்லை என்றும் அந்தத் திரைப்படத்தின் முடிவில் சொல்லப்படுகிறது..

      இதற்காக
      யார் வெட்கப்படுவது?..
      யார் குற்ற உணர்ச்சி கொள்வது?..

      நீக்கு
  24. பி வி சின்னத்தம்பி சூப்பர்!! பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. முதலில் இந்த விமர்சன பகுதி ஆரம்பிக்கப்பட்டபொழுது எப்படி இருக்கும் என்று தோன்றியது. ஒவ்வொரு வாரமும் எதிர்பாராதவர்களை விமர்சிக்க வைக்கும் ஶ்ரீராமுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  26. ஏகாந்தன் அண்ணாவின் விமர்சனம் அவர் பாணியில் சூப்பர்! கலக்கல்!

    ஞாயிறு படங்களுடன் சில குறிப்புகளும் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. என்ன இடம்? அந்த ஏரியின் பெயர்? உணவு, தங்குமிடம் என்ன பட்ஜெட்டில் இருக்கிறது ஏரியில் வாட்டர் ஸ்கூட்டரில் செல்ல என்ன சார்ஜ் ஊரைப் பற்றிய தகவல்கள், மக்களைப் பற்றிய தகவல்கள் என்று இருந்தால் நன்றாக இருக்கும். விவரமாக இல்லை எனினும்...சின்ன சின்ன குறிப்புகளுடன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அண்ணா சொல்லியிருப்பது போல் என்று சொல்ல வந்து விடுபட்டது மேலுள்ள கருத்தில்.

      கீதா

      நீக்கு
    2. இன்று ஏகாந்தன் அண்ணாவின் விமர்சனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

      இப்பகுதியும் சூப்பராகப் போகிறது ஸ்ரீராம். பொக்கே உங்களுக்கு!

      கீதா

      நீக்கு
  27. அரசியலையே 'தொழிலாக' கொண்டு பணம் படைத்தவர்களாய் ஆகும் காலத்தில் பூடான் பிரதமரின் தொண்டு வியக்க வைக்கிறது. அவர் வாழ்க என்று மனமார வாழ்த்துவோம். எளியவர்களின் வாழ்த்துக்களுக்கு நிச்சயம் பலன் உண்டு என்று நம்புபவன் நான்.

    பதிலளிநீக்கு
  28. பழங்குடி கிராமத்தில் 73 வயதில் நூலகத்தை அறிமுகப்படுத்தியிருக்கும் திரு. பி.வி. சின்னத்தம்பி! ஐயா நீங்கள் தான் எங்களை வாழ்த்த வேண்டும்! அதற்கான சகல தகுதிகளும் உங்களுக்கு உண்டு என்று மனமார நம்புகிறோம். நமஸ்காரங்கள், ஐயா!

    பதிலளிநீக்கு
  29. ஏகாந்தன் சார்! தங்கள் ஒன்ஸ்மோருக்கு நன்றி. ஸ்ரீராம் கடாட்சத்தில் அடுத்த ஒன்ஸ்மோருக்கு முயற்சிக்கிறேன்.

    //‘அண்ணா நகர் ஜீவி’ என்றெழுதியிருந்ததைப் பார்த்தேன். அங்கே, சுஜாதாவை இம்ப்ரெஸ் பண்ணப் பார்த்த நபர் இவர்தானா !//

    இல்லை, சார்! நானல்ல. ஆனால் கற்றதும் பெற்றதும் தொடரில் இன்னொரு இடத்தில் அவர் என்னைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டிருப்பதாக நான் நினைத்துக் கொள்வதுண்டு!.. உண்மை என்னவென்று யாமறியோம் பராபரமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ற்றதும் பெற்றதும் தொடரில் இன்னொரு இடத்தில் அவர் என்னைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டிருப்பதாக நான் நினைத்துக் கொள்வதுண்டு!..//

      அது எது என்று சொல்லலாமே ஜீவி ஸார்...

      நீக்கு
    2. ஸ்ரீராமை வழி மொழிகிறேன் அது என்ன என்று சொல்லுங்களேன்!

      கீதா

      நீக்கு
    3. சொல்கிறேன். எனது வசந்த கால நினைவலைகளில். அது தான் இதைச் சொல்வதற்கு பொருத்தமான இடம்.

      பொதுவாக எழுத்தாளர்களின் பழக்கம் என்று ஒன்று உண்டு. ஏதாவது காரணங்களினாலோ தொடர்புகளினாலோ மனத்தில் படிந்திருக்கிற சில பெயர்களை எங்காவது உபயோகிப்பது உண்டு.
      அப்படி உபயோகிக்கும் பொழுதும் பட்டவர்த்தனமாகத் தெரியப் படுத்தாமல் லேசாக மறைத்துச் சொல்வதுண்டு. யார் இந்த ஜீவி என்று அவர் யோசிக்கிற மாதிரி சில காரியங்களைச் செய்திருக்கிறேன். அவற்றை தக்க இடத்தில் பதிகிறேன்.

      நீக்கு
  30. பாஸிடிவ் செய்திகளெல்லாம் விசேஷமானது. ஏகாந்தன் அவர்களின் எங்கள் ப்ளாக் விமர்சனமும் புதுமாதிரியாக நன்றாக இருந்தது.அன்புடன்

    பதிலளிநீக்கு
  31. பூடான் பிரதமர் சேவை பாராட்டபட வேண்டிய சேவை.

    இன்டர்நேஷனல் ஒய்ஸ்மென் சங்கம்,100வது வாரத்தை எட்டி பிடித்திருப்பதும், அசாத்திய சாதனை தான் அன்னதானம் செய்து வருவதற்கு வாழ்த்துக்கள்.

    கொத்தமங்கலம் இளைஞர்களை சேவையை மிகவும் பாராட்ட வேண்டும். தூர்வாரி, மரம் நட்டு என்பது மகத்தான சேவை.

    இன்று அழகான விமர்சனம் செய்து பாஸிடிவ் செய்திக்கு அருமையான செய்தியும் கொடுத்து இருக்கிறார்.
    நூலகம் நடத்தும் அன்பர் வாழ்க!

    சமூக சேவகர், கணேசனுக்கு, 10 லட்சம் ரூபாய் செலவில், நடிகர் ராகவா லாரன்ஸ், வீடு கட்டி கொடுத்துள்ளார்.//

    வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ் நல்ல செயல் தொடர வாழ்த்துக்கள்.


    //பறவைகளின் சங்கீத சத்தத்தோடு இவரது பொழுது விடிகிறது.தனக்கும் தனது வளர்ப்பு பிராணிகளுக்கும் உணவு தயாரித்துவிட்டார் என்றால் பிறகு பகல் முழுவதும் மரங்களை பார்ப்பதும்,பறவைகள் விலங்குகளுடன் பேசுவதுமாக வாழ்க்கை இனிமையாக போகிறது பொழுது சாய்ந்ததும் இவரது அன்றைய பொழுதும் முடிகிறது.இங்குள்ள ஒவ்வொரு மரமும் பறவையும் இவருக்கு மிகவும் சிநேகம்.//

    ஹேமாசென் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். அவர் வாழும் வாழ்க்கை அற்புதமானது. வாழ்க ! அவர் இயற்கையோடும் பறவைகளோடும் ஆனந்தமாக வாழட்டும் பல்லாண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமாசென் என்னையும் மிகவே கவர்ந்து விட்டார் கோமதி அக்கா. ஆசைப்பட்டாலும் நம்மால் அப்படியிருக்க முடியாது.

      நீக்கு
    2. நாம் வாழும் முறை மாறிவிட்டது, முடியாதுதான். ஹேமாசென் ஆரம்பத்திலிருந்தே இயறையோடு இணைந்து வாழ பழகி விட்டார்கள். அற்புதமான வாழ்க்கை.

      நீக்கு
  32. //இந்தப் பொல்லாத காலத்திலும், தர்மவழியில் சிந்தித்து செயல்படும் அப்பாவிகள் சிலரை, மெல்ல மனதினால் எபி வருடிச் செல்லும் நாள். இந்த வாரம் முத்தாக மூன்று.//

    ஏகாந்தன் அவர்கள் விமர்சனம் மிக அருமை.

    முதல் கருத்திலேயே முத்திரை பதித்து விட்டார்.

    சமையல் பகுதி என்பதால் நோட்புத்தகத்தில் உள்ள சமையல் பகுதி மட்டும் போட்டு இருக்கிறேன் , எனக்கு பிடித்த ஆன்மீகம், கோலங்கள், கைபின்னல் , வைத்திய குறிப்புகள் என்று பலவிதமான சேகரிப்பு இருக்கிறது.


    //அட, கொஞ்சம் இரு! நோட்புக்கில் கையெழுத்தைப் பாரு.. லேசா இடதுபுறம் சாய்ந்த எழுத்தால்ல இருக்கு. அப்படீன்னா.. தனியாகத்தான் காரியம் செய்ய விரும்புவாரோ? ஒருவேளை, புரட்சிகர /வித்தியாச சிந்தனையுமுண்டோ! அப்பறம்.. அப்பறம்.. எழுத்து கூர்மையா மேலும் கீழும் இழுத்துவராம, கொஞ்சம் ரவுண்டா வந்திருக்கே.. ஓ! கலைத்திறனும் இருக்கிறதுபோலிருக்கே இவர்கிட்ட?//

    என் கையெழுத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா! நன்றி ஏகாந்தன்.

    விமர்சனபகுதியை ரசித்து அருமையாக எழுதியதற்கு ஏகாந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.




    பதிலளிநீக்கு
  33. //வெள்ளிக்கிழமை.. விடியும் வேளை.. வாசலில் கோலமிட்டுத்தான் ஆரம்பிக்கிறாரோ என்னவோ - பாஸுக்குப் பரிவுகாட்டும் பண்பாளரான ஸ்ரீராம்!//

    அவர் தாய்க்கு பரிவு காட்டி வாசலில் கோலமிட்டதை பகிர்ந்து இருக்கிறார் ஸ்ரீராம். தாய்க்கு பரிவு காட்டியவர் மனைவிக்கு காட்டாமல் இருப்பாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பரிவு காட்டி வாசலில் கோலமிட்டதை//

      அம்மாதான் நம் மேல் பரிவு காட்டுவார்கள் அக்கா. நம்மையும் அறியாமல் அந்த அன்புக்கு பதில் அன்பு அது...

      நீக்கு
  34. //ஏகாந்தன் சார்! தங்கள் ஒன்ஸ்மோருக்கு நன்றி. ஸ்ரீராம் கடாட்சத்தில் அடுத்த ஒன்ஸ்மோருக்கு முயற்சிக்கிறேன்.//

    ஜீவி சாரை இன்னொரு கதை எங்கள் ப்ளாக்கிற்கு எழுத வைத்து விட்டீர்கள்.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிம்மா! கே.வா.போ---வே, என் சிறுததையுடன் தான் ஆரம்பித்தது. வாசிப்பவர்களுக்கு சலிக்கும் வரை இனி அடிக்கடி எழுதலாம் என்று உத்தேசம். விகடன் கூட பரவாயில்லை; அந்நாட்களில் பிரசுரமாகப் போகிறது என்ற சேதியைச் சொல்லி மூன்று மாதங்களுக்குள் பிரசுரித்து விடுவார்கள். எ.பி.க்கோ இன்னும் முன்னால் அனுப்ப வேண்டியிருக்கிறது. ஸ்லாட் கிடைத்தால் சரி; இல்லேனா, இப்ப அனுப்பறது எப்போவோ தான். :))

      நீக்கு
    2. அடிக்கடி எழுத நினைத்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      எழுதுங்கள் படிக்க காத்து இருக்கிறோம்.

      நீக்கு
  35. ஆஆஆஅ அதுக்குள் விடிஞ்சிடுச்சாஆஆ:)... நான் சனிக்கிழமை பழைய நினைப்பிலேயே இருக்கிறேன்... புதுப்பகுதியை மறந்திட்டேன்ன்ன்.. இதுக்குத்தான் ஒரு செக்:) வேணுமென்பது:)....

    ஏன் ஶ்ரீராம் தலைப்பிலும் இதையும் கொஞ்சம் இணைத்தால் நல்லாயிருக்குமே.... இவ்வாரம் இன்னார்... என்றாவது... ஏனெனில் நான் எல்லாம் தலைப்புப் பார்த்து உள்ளே இறங்கும் பேர்வழி:)... என்னைப்போல பலர் இருக்கலாம்.

    ஊசிக்குறிப்பு:)...
    ஆஆஆ ரிமூட்டைப் பறிச்சுப்போட்டு ஏ அண்ணன் கையில பென் ஐக் குடுத்தாச்சோ:)...
    வாறேன்.. சனிக்கிழமை என்பதால் இடைவெளியில் வாறேன் கொமெண்ட்ஸ் போட..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏன் ஶ்ரீராம் தலைப்பிலும் இதையும் கொஞ்சம் இணைத்தால் நல்லாயிருக்குமே....//

      இந்த வாரம் ஒரு மாதிரி இணைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அந்தந்த நாளின் பதிவுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று நினைத்தேன்.

      நீக்கு
  36. எல்லாருக்கும் சனிக்கிழமை காலை வணக்கம் லண்டனிலிருந்து :)

    பூடான் பிரதமர் ..
    பதவிக்கு வரும்முன் இல்லேன்னா காரியம் சதஹிக்க பலர் இப்படி பேரெடுக்க வேலை செய்வாங்க ஆனா பதவியில் அமர்ந்தபின்னும் பொதுமக்களுக்காக சேவை செய்யும் தான கற்ற கல்வியை பயன்படுத்தும் ஷெரிங் பற்றிய ஷேரிங் சூப்பர் .


    அன்னதானம் செய்யும் ஒய்ஸ்மென் சங்கம் .இதில் முக்கியமாக கவர்ந்தது எவர்சில்வர் தட்டுக்கள் .மனமார்ந்த பாராட்டுக்கள் .சொந்த செலவில் நீர்நலைகள் தூர்வாரும் மக்களுக்கு பாராட்டுக்கள்
    இயற்கை சூழலில் வனத்தின் நடுவே இடுக்கியில் மக்களுக்கு நூலகம் அமைத்த சின்னத்தம்பி பெரியதம்பியாய் மனதில் நிற்கிறார் .
    515 கணேசன் அவர்களை பற்றி ராகவா லாரன்சுக்கு தெரிவித்த நல்லுள்ளங்களையும் பாராட்டணும் .இருவரின் சேவையும் வாழ்க

    ஹேமா சென் ..மனம் பரவசமானது .இப்படியும் வாழலாம் ..இங்கே வெளிநாட்டில் Amish மேனனைட்ஸ் போன்றோர் இப்படித்தான் தனி கிராமங்களில் இருக்காங்க அவர்கள் கூட்டமாக இருப்பதால் கடினம் இல்லை ஆனால் தனி ஒருவராக ஹேமா சென் சாதித்துள்ளார் .எனக்கும் இப்படி வாழ ஆசை .கிராம சூழலில் நினைக்கவே ஜாலியா இருக்கு

    பதிலளிநீக்கு
  37. இன்னிக்கு ஏகாந்தன் சாரின் ரிவ்யூவா :)

    //லேசா இடதுபுறம் சாய்ந்த எழுத்தால்ல இருக்கு. அப்படீன்னா//

    ஆஹா எழுத்துக்களில் இப்படியும் இருக்கா
    உண்மைதான் கோமதி அக்கா கிட்ட கலைத்திறன் அபாரம் ..கோலமெல்லாம் அழகா போடுவார் கிராப்டும் செய்வார் .
    ஞாயிறில் பெரும்பாலும் போனில் பதிவை வாசிப்பேன் :) பிசி டே என்பதால் கருத்துக்கள் எப்பவாச்சும் லேட்டா இடுவதுண்டு .எனக்கும் மேகாலயா மக்களை காண ஆவல் .

    இவ்வாரம் திங்கள்தவிர மற்ற நாட்கள் நான் வந்திருக்கேன் :)
    செவ்வாய் கதை பல உணர்வுகளை வெளிப்படுத்தியது அனைவரிலும் .
    புதன் :)))) அது ஏகாந்தன் சார் எனக்கொரு பழக்கமுண்ண்டு எந்த ஆங்கில தமிழ் வார்த்தைக்கும் antonym synonym
    சொல்லிப்பார்ப்பேன் அதோட phonetics பார்ப்பதும் வழக்கம் அதில் யுக்திக்கு எதிர்பதம் எப்படியோ வந்திருச்சு .
    எனது மொக்கை கேள்விக்கும் பதில் சொல்ல ஆசிரியர்கள் இருக்காங்களே என்ற ஆர்வமே இல்லைல்ல பேரார்வமே வாரம் தவறாம கேள்விகளை கேட்க வைக்குது :)

    தேங்க்ஸ் for தி பட்டம் :) ஹாஹா

    வியாழன் :) அந்த chubby தேவதை ஸ்ரீராம் பதிவில் தவறாம இடம் பெறுகிறார் :))


    //‘பேசி தீர்த்திடலாம்..’ என்கிறார். ’யாரை’ என்று சொல்லாததால் மனதில் ஒரு பதைபதைப்பு !//
    ஹாஹாஆ என் கண்ணில் படாம போச்சே :)
    அழகான விமர்சனம் ..ஹேவ் இந்த பூஸாரால் எனக்கு குழப்பமா வருது விமரி யா இல்லை விமர் ஆ :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "யுக்தி" நல்ல திட்டங்களைப் போட்டு நிறைவேற்றுவது! "குயுக்தி" திட்டங்கள் போட்டாலும் அது சுயநலத்தன்மையுடன் கொஞ்சம் வக்கிரமாகப் பிறரை பாதிக்கும் விதமாக இருக்கும். உதாரணம் சகுனி! குயுக்திக்கு உதாரணம். யுக்திக்கு உதாரணம் கிருஷ்ணன்!

      நீக்கு
    2. என்ன இது?..

      யுக்தி - குயுக்தி என்னும் வார்த்தைகள் தாங்கள் அறியாததா!....

      நீக்கு
    3. //வியாழன் :) அந்த chubby தேவதை ஸ்ரீராம் பதிவில் தவறாம இடம் பெறுகிறார் :))//

      Noted Angel....!!!

      நீக்கு
    4. அது கேள்வி பகுதியில் கேட்டது துரை அண்ணா .யுக்தியா குயுக்தியான்னு

      நீக்கு
    5. அடுத்த வியாழன் chubby angel பற்றி வரலைன்னாலும் சொல்வோம் :)) @sriram

      நீக்கு
    6. வசமா மாட்டிட்டேன் போல...

      நீக்கு
    7. ஏஞ்சல் கண்டிப்பா வரும் இன்னும் ஜபல்பூர் வரலையே!! ஹா ஹா ஹா ஜபல்பூர்லதானே அந்தக் குண்டு தேவதை இறங்குவார்!!! அதுவரை அவர் செருப்பு எங்காச்சும் போகாம பார்த்துக்க வேண்டியது ஸ்ரீராம் இல்லைனா அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுனு சொன்ன அத்தை!!! !!!!!!!!!!!!!!!!

      இவங்க செருப்பை பார்த்துப்பாங்கனுதான் அந்த நல்ல குண்டுப் பொண்ணு சுகமா தூக்கம் போடுது ஹா ஹா ஹாஅ..

      அப்புறம் ஏஞ்சல் வான தேவதைகளைப் பத்தி என்ன சொல்லப் போறாரோ ஸ்ரீராம்னு வெயிட்டிங்க்!!!

      கீதா

      நீக்கு
  38. //ஆஹா எழுத்துக்களில் இப்படியும் இருக்கா
    உண்மைதான் கோமதி அக்கா கிட்ட கலைத்திறன் அபாரம் ..கோலமெல்லாம் அழகா போடுவார் கிராப்டும் செய்வார் .//

    ஆஹா! ஏஞ்சல் , ஏதோ கொஞ்சம் செய்வேன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்துகளை வைத்து மனிதரை எடைபோடுவது ஏதோ சுஜாதா கதையில் கூட படித்த நினைவு.

      நீக்கு
  39. //எபி-க்காரர்களில் லாசரா வாசகர்கள், பக்தர்கள் உண்டெனத் தெரிகிறது. //
    நானும் ஒரு லா.ச.ரா. பக்தை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலகுமாரன் ஆராதனை செய்தி படித்தீர்களா பானு அக்கா?

      https://www.dinamalar.com/news_detail.asp?id=2278218

      நீக்கு
    2. வாசித்தேன். நரன் ஏன்று ஆனந்த விக்டனில் பெயர் பார்த்திருக்கிறேன். அவரா?..

      நீக்கு
  40. கோமதி அக்காவைப் பற்றி ஏகாந்தன் அண்ணா சொல்லியிருப்பது மிகவும் சரியே. அக்காவுக்குப் பல திறமைகள் இருக்கு. புகைப்படம் எடுத்தல், சமையல் குறிப்பு கூட எபிக்கு அனுப்பறேன்னு சொல்லிருக்காங்க...க்யூட் கோலங்கள், பதிவு எழுதும் திறமை அதுவும் அழகான தமிழ் சொற்கள் பயன்படுத்தி எழுதும் திறமை, பின்னூட்டம் விமர்சனத் திறமை என்று பல வகையிலும் அக்கா அசத்துகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமையல் குறிப்பு கூட எபிக்கு அனுப்பறேன்னு சொல்லிருக்காங்க.//

      இதையும் சேர்த்துக்குங்க கீதா... கதையும் அனுப்பறேன்னு சொல்லியிருக்காங்க... அந்தக் கதைக்கு சார் படம்வரையக் கூடும்!

      நீக்கு
    2. ஆஹா! இது என்ன புதுக்கதை?

      நீக்கு
    3. பின்னே?

      புதுக்கதைதான்..

      பழைய கதையையா அனுப்புவார்கள்?!!!

      ஹா... ஹா... ஹா....

      நீக்கு
    4. ஓ... எழுதியாச்சா? நல்லா வந்திருக்கா?சீக்கிரம் அனுப்புங்க...

      நீக்கு
    5. ஆஹா! ஸ்ரீராம் உங்க தெக்கினிக்கி சூப்பர்!! ஸ்ரீராம் உங்க "போட்டு வாங்குற" தெக்கினிக்க மிகவும் ரசித்தேன் சிரித்தேன்!!!

      கீதா

      நீக்கு
    6. கீதா, கேட்டு வாங்குவது, போட்டு வாங்குறது எல்லாவற்றிலும் சிறந்தவர்தான் ஸ்ரீராம்.
      நீங்கள் வேறு அக்கா விடம் நிறைய திறமை இருப்பதாய் அள்ளி விடுகிறீர்கள்.
      உங்களை போல பன்முக திறமை வாய்ந்தவள் இல்லை இந்த அக்கா.
      உங்களை போன்றவர்கள் அன்பால் பாராட்டு செய்கிறீர்கள்.
      உங்கள் அன்புக்கு நன்றி.
      உங்களிடம் நிறைய கதை இருக்கு கீதா, அதை அனுப்பி கொண்டே இருந்தால் போதுமே வாரா வாரம் கதை பஞ்சமே இருக்காது. முற்று பெறாமல் வைத்து இருக்கும் கதைகளை சீக்கீரம் நிறைவு செய்யுங்கள், காலா காலத்தில் அனுப்பி வையுங்கள்.

      நீக்கு
  41. ஏகாந்தன் அண்ணாவின் தலைப்பு ஹா ஹா ஹா ஹா சூப்பர்!!

    ஸ்ரீராம் இந்தத் தலைப்பையும் டாப்ல சேர்த்திருந்தீங்கனா குறிப்பா அந்த ஏழு நாட்கள் என்பதை....பார்வையாளர்கள் கூடியிருப்பாங்களோனு தோணுது...

    கீதா

    பதிலளிநீக்கு
  42. ஆமாம் ஏகாந்தன் அண்ணா சொல்லிருப்பது போல கௌ அண்ணாவின் டே அன்று அண்ணா ராக்ஸ்!!! (ஆஹா இப்படி ராக்ஸ் நு சொல்லி கௌ அண்ணாவிடம் சிக்கிக் கொண்டுவிட்டேனோ என்ன கலாய்ப்பு வரப் போகிறதோ!!!!!!! ஹிஹிஹி)

    கீதா

    பதிலளிநீக்கு
  43. பாஸிட்டிவ் செய்திகள் அனைத்தும் நல்ல எனர்ஜியை தந்தன. மின்சாரமே இல்லாமல் 79 வருடங்களாக வாழ்ந்துவரும் பெண்மணி அதிசயிக்க வைத்துவிட்டார். ஏகாந்தன் சாரின் விமர்சனம் அருமை! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  44. எழுதி, எழுதி அதனை திரும்பிப் பார்க்கையில், கொழுத்து, நீண்டுகிடப்பதுபோல் ஒவ்வொருமுறையும் தோன்றியது. எடுத்தேன் கத்திரிக்கோலை. ஓரமாக நறுக்கினேன். சில இடங்களை வெட்டித் தூக்கிப்போட்டேன். ஒரேயடியாக நீண்டு, படிப்பவருக்குத் தூக்கத்தைக் கொடுத்துவிடக்கூடாதே என ஒரு அச்சம்.

    ஒருவழியாக அனுப்பிவிட்டு, சனிக்கிழமை வாசல் கதவைத் திறந்தால், இந்த சிறுமுயற்சிக்கு இத்தனைப் பாராட்டா! மென் நெஞ்சங்களே, நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அண்ணா நீங்க வாசக் கதவைத் திறந்தா நாங்க கோலமே போட்டு வைச்சுருப்போமாக்கும்!! அதுவும் கலர்ஃபுல் கோலங்களாக்கும்!!!

      கீதா

      நீக்கு
    2. ஆஹா! அன்பு மழை பொழிகிறது..!

      நீக்கு
  45. சே சே... இடையில் வந்திடலாம் என எதிர்பார்த்தேன் முடியவே இல்லை...

    //ஆனாலும், எச்சரிக்கை ! இது நீளமாகப் போகலாம்.///
    இதைப் படிச்சு நானும் உண்மையில பதறிப்போய் பாதியிலேயே ஓட நினைச்சேன்ன்ன்.. கீசாக்காவின் நீண்ட எழுத்து ரெக்கோர்ட்டைக் கோமதி அக்கா உடைச்சா:)).. அதை இன்று ஏ அண்ணன் உடைச்சிடப் போறாரே என நினைச்சேன்.. ஹா ஹா ஹா இல்ல நீங்க உடைக்கல்ல:)..

    மாத்தி சோட் அண்ட் சுவீட்டா முடிச்சிட்டீங்க.. அப்போ அடுத்த வார ரிவியூவின் எங்கள் புளொக்கின் “ஒருநாள் ஆசிரியர்” அநேகமாக பானுமதி அக்கா தேன்ன்ன் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  46. ///எபி பெண்மணிகள் போட்டிபோட்டுக்கொண்டு வெளுத்துவாங்கும் நாள்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதை யாரும் கண்டு இன்னும் ஏன் பொயிங்காமல் இருக்கினம்:)).. பெண்மணிகள் கண்மணிகளை விட ஆண்மணிகள்தான் இங்கு திங்கட் கிழமைகளில் அதிகமாக சமையலை ரசிப்பது அதுபற்றி ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்துவது:)) இதற்குள் ஏ அண்ணனும் அடக்கமாக்கும்:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ஆண்கள் யாரு இங்க அப்படி மிஞ்சி மிஞ்சிப் போனா நெல்லைதான் நிறைய கொடுப்பார், அடுத்து ஸ்ரீராம் வந்தால்...ஸ்ரீராம்... அப்ப நெல்லை ஒருவரே 100 பேருக்குச் சமம்னு சொல்லறீங்களோ..ஹா ஹா நேற்று நிறைய வர முடியாமல் போயிடுச்சு ராத்திரி கரன்டும் போச்சு உங்க கமென்ட் பார்க்காமல் போயிட்டேன்...இல்லேனா கும்மி அடிச்சிருப்பேன்...

      கீதா

      நீக்கு
  47. ///’கேள்வித் திலகம்’ ஏஞ்சலினின்///

    ஹா ஹா ஹா இப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே:)) அஞ்சு ஊரில இல்ல்லாத கிளவிகளை எல்லாம் தூக்கி வாறா:) ஹையொ டங்கு ஸ்லிப்பாகுதே:)) கேள்விகளை எல்லாம் எடுத்து வாறா:)).. இதே ரேஞ்சில போனால் கேட்கக் கேள்வி இல்லாமல் ஆட்டைக் கடிச்சூஊஊஊஊஊஊஊ மாட்டைக் கடிச்சூஊஊஊஊஊஊஊ பின்பு அதிராவில தான் கேள்வி வந்து நிக்கப்போகுது:)).. அதிராவைப்பற்றி என்ன நினைக்கிறீங்க? ஏன் அதிரா இன்னும் காசிக்குப் போகேல்ல? இப்பூடி:)))., கெள அண்ணனின் நித்திரை கலையப்போகுதூஊஊஊஊ.. அதுக்கு மீ பொறுப்பில்லயாகும்:)).

    இண்டைக்கும் கேள்விகள் பறந்துதே.. மீ பார்த்தேன்ன்:)) ஹா ஹா ஹா.. நானும் ஒரே ஒரு கேள்வி கஸ்டப்பட்டு ரைப்பண்ணி வச்சிருக்கிறேன்.., ஆனா அனுப்ப வெய்க்கமா இருக்கு:)).. ஒண்டை மட்டும் எப்பூடி என:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவால்ல :) வெட்கப்படாம கூச்சப்படாம அந்த ஒண்ணே ஒண்ணு கருவேப்பிலை கண்ணை (கன்றை ) கேளுங்க மியாவ் :)
      போகப்போக கேள்விதிலகம் பட்டத்தை என்கிட்டேருந்து எடுக்கிற அளவுக்கு கேப்பீங்க

      நீக்கு
    2. //அஞ்சு ஊரில இல்ல்லாத கிளவிகளை எல்லாம் தூக்கி வாறா:)/

      ஸ்ஸ்ஸ் ஒரு சீக்ரெட் சொல்றேன் :) இப்போல்லாம் தூக்கத்தில் கூட கேள்வி கேட்கிற மாதிரி வருது :)
      வாரநாளில் புதன் மட்டும் தான் கண் முன்னே வருது

      நீக்கு
  48. ///என்கிற மோனநிலை மோகினியோ!//

    ஹா ஹா ஹா ஹையோ அவ மோகினி அல்ல டேவதை:)) ஸ்ரீராமின் டேவடை ஹா ஹா ஹா.. எல்லோருக்கும் கனவு கண்டபின்னர்தான் அது எப்பவாவது பலிக்கும்:)).. ஆனா ஸ்ரீராமுக்கு மட்டும் நேரில பலிச்சு.. வாழ்நாள் முழுக்க கனவு காணும் நிலைமையாப் போச்சே:)).. ஆனா ஒண்டு ஏ அண்ணன்.. அனுக்கா இதைக் கேள்விப்பட்டாவோ.. நேரே டெல்லிக் கோர்ட்டில ஆஜராக வேண்டி வரலாம் ஸ்ரீராம்:)).. பின்ன ஒண்டிருக்க ஒனொன்றைப்பற்றிப் பேசலாமோ:))..ஹா ஹா ஹா...

    சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ஸ்ரீராம் இப்ப ஒரு தேவதை பத்தித்தான் சொல்லிருக்கார் அதுக்கே அனுஷ் கோர்ட்டுக்க்ப் போனாங்கனா ...ஹிஹிஹி இன்னும் ரயிலில் இருந்து இறங்கவே இல்லையே.....அனுஷ் கணக்கெடுத்துட்டுப் போட்டும்...

      கீதா

      நீக்கு
  49. //அதிராவிடமிருந்தென்றால் அது தனி வகைமை.//

    ஹா ஹா ஹா அது என்ன “மை” எனச் சொல்லவே இல்லையே:)) சரி சரி இப்போ கேட்டுத்தெரிஞ்சு என்ன பண்ணப்போறேன்ன்ன்ன்.. என் வழீஈஈஈஈஈஈ தனீஈஈஈஈஈஈ வழீஈஈஈஈஈஈஈஈஈ ஹா ஹா ஹா.. ஓகே அருமையாக எழுதி முடிச்சிட்டீங்க ஏ அண்ணன்... உங்களுக்கு ஸ்ரீராமின் ரீ கஃபே யில நாளைக்கு மோனிங் ஒரு கப் ரீ ஃபிறீ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஃபேயில் காஃபி தானே கிடைக்கோணும்? ஸ்ரீராமின் கஃபே-யில் ரீயா ! ஃப்றீயா !

      நீக்கு
  50. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை. இதில் வித்தியாசமான செய்திகள் என்றால் புட்டான் பிரத்தமர் ஷெங்க் அவர்களும், பூனே அருகில் இயற்கையுடன் வாழும் ஹேமா சென் அவர்களும் தான். வியப்பும் ஆச்சரியமும். வாழ்த்துகள்! பாராட்டுகள்! மற்ற பாசிட்டிவ் செய்தி ஹீரோக்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்!

    இன்று ஏகாந்தன் ஸாரின் விமர்சனம் மிகவும் நன்றாக இருக்கிறது. மெல்லிய நகைச்சுவை கலந்து நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள் சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  51. வார விமரிசனத்துக்கு நல்ல முயறசி ஏகாந்தன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!