வியாழன், 2 மே, 2019

'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்!


சில விவரங்களை சொல்லி விடுகிறேன்.

நாங்கள் கயா யாத்திரை சென்றது ஜெயலட்சுமி யாத்ரா சர்விஸ் என்கிற நிறுவனம் மூலமாக.  திருவொற்றியூரில் அமைந்துள்ளது இது.  

அதற்கான பொறுப்பாளர் பெயர் பாலாஜி.  அவர் உதவியாளர் பெயர் ப்ரஸன்னா.  இருவரும் செம உதவி, செம ஃப்ரெண்ட்லி.  புதிதாக அறிமுகமாகும் ஒரு குழுவை - கூட்டத்தை - அவர்கள் மூட் அறிந்து கோபப்படாமல் சமாளிப்பதுபேரிய கலை.  அது இவர்களுக்கு கைவந்திருக்கிறது.  சட்டெனப் பொறுமை இழக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே வந்தன.  ஒரு இடத்தில் கூட பாலாஜியின் புன்னகை மாறவில்லை.


 பாலாஜியும் ப்ரசன்னாவும் 

பாலாஜி 

முதலில் சென்னை வழியாகச் செல்வதாக இருந்த சங்கமித்ரா ரயில் சில காரணங்களால் சென்னை வரமுடியாத நிலை வர, அதை கூடூரில் சென்று பிடிக்க வேண்டிய நிலை.


எனவே பினாகினியை நாடினோம்.  பினாகினி  விரைவு  வண்டி (சென்னை -விஜயவாடா) பிடித்து கூடூர் சென்று அங்கு சங்கமித்ராவைப் பிடிக்க ஏற்பாடு செய்து கொண்டோம்.  சங்கமித்ரா பெங்களூரு- பாட்னா இடையே சென்னை வழியாக ஓடும் ரயில்.  

சங்கமித்ரா... ஏதோ தமிழ்ப்பட கதாநாயகி பெயர் போல இல்லை?!!  

சங்கமித்ராவைப் பிடித்தால் நேரே பாக்யராஜ்....  ச்சே... ப்ரக்யாராஜ்...  ச்ச்ச்ச்சே.... ப்ரயாக்ராஜ் சென்று இறங்கி விடலாம்.  அலஹாபாத் சமீபகாலத்தில் கும்பமேளா சமயத்தில் ப்ரயாராஜ் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது என்று வெங்கட் சொல்லியிருக்கிறார்.



எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேட்டரர்கள் பினாக்கினியிலேயே வந்து எங்களுக்கு உணவு படைக்கத் தொடங்கினர்.  திறமைசாலிகள்.

காசியிலிருந்து நாங்கள் திரும்புவதாய் இருந்த விமானம் இரண்டு மூன்று முறை நேரம் மாற்றியமைக்கப்பட்டது.  அதைப்பொறுத்து ட்ராவலர்ஸ் மூலம் தங்கவேண்டிய இடத்தில் முன்பதிவு, பார்க்க வேண்டிய இடங்கள் என்று எங்கள் நிகழ்ச்சி நிரலையும் நாங்கள் பார்த்துக்கொண்டோம்.  கடைசித் தகவலின் படி அது பதினைந்தாம் தேதி காலை ஒன்பது மணிக்கு கிளம்புவேன் என்று அறிவித்தது.  அப்புறம் மாற்றவில்லை!

பயணத்துக்கு எடுத்துச் செல்ல முதலிலேயே ஒரு செக்லிஸ்ட் தயார் செய்து வைத்து விட்டேன்.  அதன்படி,

ஒரு எவர்சில்வர் தட்டு, ஒரு எவர்சில்வர் டம்ளர், ஒரு எவர்சில்வர் டபரா, ஒரு ஸ்பூன்! இரண்டு பஞ்ச்சபாத்திரம் இரண்டு உத்திரணி!

6 எட்டுமுழம், 1 நாலு முழம் 5 அங்கவஸ்திரம்...  3+1 பேண்ட்ஸ், 5 ஷர்ட்ஸ், இரண்டு டி ஷர்ட்ஸ்,

5+1 இன்னர்ஸ்,  4+1 கைக்குட்டைகள், 2 பெரிய டவல், 2 மினி டவல், 

ஒரு சிறிய கத்தரிக்கோல், ஐந்து ரூபாய் ப்ளேடு (சிறிய கத்தி) இரண்டு, ஷேவிங் செட், டார்ச்லைட்,  

ஒரு குடை, ஒரு தொப்பி, ஒரு நைலான் துணிக்கட்டும் கயிறு, வாஷிங் சோப், கிளிப் ஒரு பாக்கெட்,  முகம் பார்க்கும் சிறிய கண்ணாடி, டூத்பேஸ்ட், ப்ரஷ், சீப்பு, விபூதி, குங்குமம் (?), பௌடர், குளியல் சோப், 2 பெட் பாட்டில்கள், ஈரத்துணிகள் போட சில பிளாஸ்டிக் கவர்கள், 

பவர் பேங்க், செல்போன் சார்ஜர், செல்போன் (!)

ஆதார், பேன்கார்ட் ஒரிஜினல், சில நகல்களும், படிக்க ஒரு புத்தகம் (!!!!), ஒரு டைரி, இரண்டு பேனாக்கள் (டைரியில் ஒன்று, சட்டைப்பையில் ஒன்று!), ரப்பர்பேண்ட் பாக்கெட்,  ப்ளக் 2, ஒரு யு எஸ் பி விசிறி, மூக்குக்கண்ணாடி கூடு,  அப்புறம் பணம்!

இதில் சென்றுவந்த பின் கிடைத்த அனுபவத்தில் இவ்வளவு வேஷ்டி அங்கவஸ்திரம் தேவை இல்லை என்று தெரிந்தது.  எனக்குச் சொன்னவர்கள் எடுத்துக் கொள்ளச் சொன்னதால் இவ்வளவு எடுத்துக் கொண்டேன்.  நானா, தீபாவளிக்கும், திதிக்கும் மட்டுமே வேஷ்டி கட்டுபவன்!

டபராவும் ஸ்பூனும் கூட தேவையில்லை என்று ஆனது.  உபயோகிக்கவே இலை.  இரண்டு பஞ்சபாத்திரம் எதற்கு என்றால் மாமாவிடம் இல்லை என்பதால் அவருக்கும் சேர்த்து!

கத்தரிக்கோலுக்கு வேலை/ வேளை வரவில்லை!  டார்ச் லைட்டும் உபயோகிக்கும் சந்தர்ப்பமே வரவில்லை.  அந்த ஐந்து ரூபாய்க் கத்தி ஒரே ஒரு தரம் உபயோகமானது - மாமாவுக்கு!

குடையும், தொப்பியும் கடைசிச் சேர்க்கை.  அங்கே பயங்கர வெயிலாய் இருக்கும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதால் எடுத்துக் கொண்டவை.  உபயோகமில்லை!  துணி கட்டும் கயிறும் க்ளிப்பும் அங்ஙனமே!  முகம் பார்க்கும் கண்ணாடி தண்டம்!  செல்லிலேயே கூட பார்த்துக்கொள்ளலாம்.  ஆனால் தங்குமிடம் எல்லா இடங்களிலும் கண்ணாடி இருந்தது! பாஸ் வராத நிலையிலும் ஏன் குங்குமம் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள் என்று தெரியவில்லை.  அப்படியே பத்திரமாய்த் திருப்பி எடுத்து வந்தேன்!

Pan card உபயோகிக்கவில்லை.  ஆதார் உபயோகமானது.  நகல்கள் தேவை இல்லை.  எடுத்துச் சென்ற புத்தகம் வழக்கம்போல படிக்கவே இல்லை.  நேரம் இல்லை!

செல்லும் இடங்களில் செல் சார்ஜ் செய்ய ஒரு ப்ளக் பாயிண்ட் மட்டுமே இருக்கும்.  எனவே அங்கே சொருக ஒன்றுக்கு இரண்டாய் ப்ளக்ஸ் வாங்கி எடுத்துச் செல்வது என் வழக்கம்.  இங்கு அது ஒரே ஒரு முறை உபயோகப்பட்டது - ஆனால் எனக்கல்ல.  யு எஸ் பி விசிறி தண்டம்.  இதை பவர் பாங்கில் இணைத்து எப்போதாவது உபயோகிப்பேன் என்று நினைத்தேன்.  ஆனால் இவை பெரிய சுமையல்ல!  அனால் அதை அப்பாஸ் அலி திருப்பித் திருப்பிப் பார்த்தபோது இதயம் அடித்துக் கொண்டது.  ஒருகணம் நின்று துடித்தது!

கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் இருந்திருந்தால் இவைகளை நான் குறைத்திருக்கக் கூடும்.  ஆனால் முதல் நீண்ட தூரப்பயணம்,  பத்து நாட்கள் செய்யப்போகும் பயணம், அதிலும் ஸ்ராத்தம் போன்றவை செய்யவேண்டிய பயணம் என்பதால் நட்புறவுகள் சொல்லும்போது சரி என்று எடுத்துக்கொண்டவை.

கிளம்பும்போது ரயிலில் சென்றதால் கஷ்டம் தெரியவில்லை.  திரும்பும்போது சிரமத்தை உணர முடிந்தது!  அதைப் பின்னர் சொல்கிறேன்.

அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வுகளை முக்கி முனகி மேலதிகாரி உதவியுடன் முன்னரே முடித்துக் கிளம்பினேன்.  பத்து நாட்கள் அலுவலக இறுக்கம் இருக்கப் போவதில்லை என்பது சந்தோஷமாகவும் இருந்தது...   சற்றே கவலையாகவும் இருந்தது.  அலுவலகத்தில் மூன்று நான்கு பேர்கள் காசியில் கயாவில் விட பணம் கொடுத்து அனுப்பினார்கள்.  தனியாக அவர்கள் பெயரெழுதி ஒரு பேப்பரில் சுற்றி வைத்துக்கொண்டேன்.



சென்ட்ரலில் மதியம் பன்னிரண்டரை மணிக்குக் குழுமினோம்.  ரயில் சரியான சமயத்துக்கு வந்தது.  அதாவது இரண்டு மணிக்கு பிளாட்பாரத்துக்கு வந்துவிட்டது.  ஏறி இடம் பார்த்து அமர்ந்தோம்.  ரயில் புறப்பட்ட சற்று நேரத்தில் கேட்டரர் குழு எங்களை கண்டுகொண்டது.  ஒரு பேப்பர் பிளேட்டில் கலந்த சாம்பார் சாதம், சிப்ஸ், தயிர் சாதம் கொடுத்தார்கள்.  வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்டு விட்டுதான் கிளம்பிய காரணத்தால் சும்மா பேருக்குத்தான் சுவைத்தோம்.  தயிர் சாதத்தை புகைப்படம் எடுக்கவில்லை!



சௌகரியமான ரயில் பயணம். ஒரு மணி நேர இலவச இணைய இணைப்பு கிடைத்ததை உபயோகப்படுத்திக் கொண்டோம்.  ரயில் சுத்தமாக பராமரிக்கப் பட்டிருந்தது - கழிவறைகள் உட்பட.

சூலூர்பேட் தாண்டி சுமார் நாலரை மணிக்கு கூடூர் அடைந்தோம்.  அங்கு வேகமாக இறங்கி கொண்டோம்.    ஐந்து ஐம்பத்தைந்து மணிக்கு அங்கு வந்து சேரவேண்டிய  சங்கமித்திரா அரைமணிநேரம் தாமதமாக வந்து கொண்டிருப்பதாக இணையம் சொல்லிக் கொண்டிருந்தாலும் அப்போது அந்த ரயிலை ஒரு அற்புதமான ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருந்தார் போலும்.  


யாரது வருவது?


அதோ வருகிறது சங்கமித்ரா....


நேரம் செல்லச்செல்ல, அதன் தாமத நேரம் குறைந்துகொண்டே வர, சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தது.  எங்களைக் கண்டதும் நின்றது!  "பத்துநிமிடம் டைம்...   ஏறிக்கொள்ளுங்கள்" என்றது! 


=============================================================================================


நான் நினைத்து எழுதியது ஒன்று.  அப்போது அங்கு வந்த பின்னூட்டங்கள் வேறு!  நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுதான்!




=================================================================================================

பரம்பரை பரம்பரையாய்....

என் அப்பா ஃபோன் பேசும்போது கண்களை மூடிக்கொண்டு பேசுவார்.  அதே போல சாப்பிடும்போதும் பெரும்பாலும் கண்களை மூடிக்கொண்டு சாப்பிடுவார்.  இந்தப் பழக்கம் என்னிடம் இருக்கிறது (எப்போதும் அல்ல, அவ்வப்போது) என்று என் மகன்களால் உணரப்பட்டு என்னிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது!  அதே போல மீசை தடவும் பழக்கம், படிக்கும்போது படிப்பதை நிறுத்தி திடீர் யோசனையில் வெட்டவெளியை வெறிப்பது போன்ற பழக்கங்களும், செருமுவது, மற்றும் அவரின் தலைவலி, பைல்ஸ் போன்ற தொந்தரவுகளும் எனக்கு தந்திருக்கிறார் அவர் - ஜீன்களின் வழியாக!

அப்பாவிடம் இன்னொரு பழக்கம் உண்டு.  வெளியில் எங்காவது போய் வந்தால் கிளம்பியது முதல் நடந்தவை யாவற்றையும் தன் சுய விமர்சனங்களுடன் விளக்கமாக சொல்வார்.  நாங்கள் அமர்ந்து கேட்போம்.  கேட்கவேண்டும்.  இல்லா விட்டால் சுர்ரென்று கோபம் வரும்.  இப்போதும் அவர் அலுவலக விஷயமாக டெல்லி சென்று வந்து, இந்திரா காந்தியைச் சந்தித்தது பற்றி சொன்ன விவரங்கள் நினைவில் இருக்கின்றன.  அப்போது டெல்லியிலிருந்து டெல்லி கட்டில் வாங்கி வந்திருந்தார்.  நண்பர்கள் "இதை அங்கிருந்து தூக்கி வரவேண்டுமா?  இங்கேயே கிடைக்குமே..." என்று சிரித்தார்கள்.

என்னிடம் இந்தப் பழக்கம் இல்லை.  ஆனால் என் பெரியவனிடம் இந்தப் பழக்கம் இருப்பது ஆச்சர்யம்!  அவன் அலுவலக விஷங்களை அடிக்கடி விவரமாகச் சொல்வான்.  அவரைப்போலவே இவனுக்கும் நாம் சரியாக கவனிக்கா விட்டால் சுர்ரென்று கோபம் வரும்.  'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்!



இந்த ஜீன் தொடர்ச்சி எனக்கு ஆச்சர்யம் அளிக்கும் பழக்கம்.   

சென்ற ஏப்ரல் 22 அப்பாவின் நினைவு நாள்.

===============================================================================================

ஃபேஸ்புக்கில் திடீரென கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கில் நட்பு அழைப்புகள் வந்து குவிகின்றன.  என்ன காரணம் என்று தெரியவில்லை.  முதலில் ஆராய்ந்து ஆராய்ந்து அழைப்பை ஏற்கத் தொடங்கினேன்.  இப்போது அலுத்துப்போய் நிறுத்தி வைத்திருக்கிறேன்.

=============================================================================================

140 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்.. வணக்கம்..
    தங்களுக்கும் அன்பின் கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு, உங்களுக்கும் மற்றும் இன்று வரப்போகும் அனைத்து நட்புறவுகளுக்கும் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்ற துரை, இனி வரப்போகும் அனைவருக்கும் வரவேற்றுக்கொண்டிருக்கும் ஸ்ரீராமுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி. வணக்கம், வாழ்த்துகள்.

      நீக்கு
  2. கீதா ரெங்கனை இரண்டு நாட்களாய்க் காணோம். நேற்று நானும் நினைத்தேன். பானு அக்காவும் தேடி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வரைக்கும் தான் படிச்சேன். அதுக்குள்ளே வம்பு வளர்க்க ஆரம்பிச்சாச்சு! தி/கீதா லீவு சொல்லிட்டுத்தான் போனார்! போனார்! போனார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      நீக்கு
    2. எதுவரைக்கும்? ஆனாலும் கீதா ரெங்கன் (அதி) காலையில் வருவேன் என்றாரே என்று தேடுகிறேன்.

      நீக்கு
    3. சனிக்கிழமை அல்லது அதுக்கப்புறமாத் தான் வர முடியும் என்றார். இங்கே கமென்ட்ஸில் தான் சொல்லி இருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  3. தங்களின் பயணக் குறிப்புகள் அருமை..
    ரயில் நிலையத்துக்குள் நுழையும் படங்கள் அழகு..

    அதென்ன பசுவின் கொம்பு என்ன சைக்கிள் கேரியரா?..
    உடைந்த புல்லாங்குழலை அங்கு வைத்திருக்கிறான்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் இரண்டு வரிகளுக்கும் நன்றி.

      இரண்டாவது சந்தேகம் : மேய்ப்பனுக்கு எதுவோ நடந்திருக்க வேண்டும், செய்தவை இந்த மாடுகளேவா என்பதும் சந்தேகம்!!!!!

      நீக்கு
    2. /// செய்தவை இந்த மாடுகளோ///

      இருக்கலாம்... அதுகளும் எத்தனை நாட்களுக்குத்தான் பொறுமையாக இருப்பது?..

      ஆனாலும் வீட்டுக்கு பத்திரமாக வந்தனவே!....

      நீக்கு
    3. //இருக்கலாம்... அதுகளும் எத்தனை நாட்களுக்குத்தான் பொறுமையாக இருப்பது?..//

      ஹா... ஹா... ஹா...

      ஹதானே!


      //ஆனாலும் வீட்டுக்கு பத்திரமாக வந்தனவே!.//

      பழகிய கால்கள்!

      நீக்கு
  4. சங்கமித்ரா அசோகனின் பெண் இல்லையோ? இஃகி,இஃகி,இஃகி, நான் சொல்வது சாம்ராட் அசோகன். நேத்திக்கு ஜிவாஜியை நினைச்சாப்போல இங்கேயும் நடிகர் அசோகன்னு நினைச்சுடாதீங்க! :))))))

    பதிலளிநீக்கு
  5. அப்பாடா, இனிமேல் முழுசாப் படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுசாய் படிக்காமலேயே பதிலா? கிர்ர்ர்ர்....

      நீக்கு
  6. உடைந்த புல்லாங்குழலின் துண்டு? ஆஹா, கண்ணன் என்ன ஆனான்? பத்திரமாய் இருக்கான் தானே?

    பதிலளிநீக்கு
  7. அப்பாவின் பழக்கம் பேரனுக்கு வந்திருப்பது ஆச்சரியமில்லை. எங்க வீட்டில் குட்டிக் குஞ்சுலுவுக்கு என் மாமியாரின் பழக்கங்கள் உட்காரும் விதம் உள்பட நிற்கும்போது என வந்திருக்கு! பார்த்தால் ஆச்சரியமாய்த் தான் இருக்கு. கோவிச்சுக்கும்போது என்னை மாதிரியே கோவிச்சுக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்ததுதான். ஆனாலும் பார்க்கும்போது, உணரும்போது ஆச்சர்யம் வருகிறது!

      நீக்கு
    2. //..கோவிச்சுக்கும்போது என்னை மாதிரியே கோவிச்சுக்கிறது!//

      இந்த இடத்தில் சந்தோஷம் பூரணமாக இருந்திருக்குமே!

      நீக்கு
    3. ஏகாந்தன், ஆமாம், ஆனால் என்னை விட நம்ம ரங்க்ஸுக்கும் எங்க பையருக்கும் தான் அதிக சந்தோஷம்! அப்படியே பாட்டியை உரிச்சு வைச்சிருக்கு என்பார்கள்! :)))))))

      நீக்கு
  8. இரண்டு தரம் படிச்சுட்டேன். இந்த அழகில் போனால் காசிப் பயணக்கட்டுரை எழுதி முடிச்சாப்போல் தான்! இன்னும் கிளம்பவே இல்லையே? இதுக்குள்ளே காசிக்குப் போயிருக்க வேண்டாமோ? :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு தரம் படிச்சுட்டீங்களா? அப்படிப் புரியாமலா எழுதி இருக்கேன்? இல்லை அவ்ளோ நல்லா இருந்ததா?!!!!!

      வீட்டை விட்டு கிளம்பலையா? கிர்ர்ர்ர்ர்ர்ர்..... கூடூர் வந்து சங்கமித்ரா பிடிச்சாச்சு...

      நீக்கு
    2. கீதா அக்கா, நீங்கள் வந்தியத்தேவனாக இருக்கலாம், அதற்காக கந்தமாறனிடம் அந்த வேகத்தை எதிர்பார்ப்பது நியாயம் கிடையாது.
      ஸ்ரீராம், கந்தமாறன் என்று ஒரு பேச்சுக்கு சொன்னேன், தவறாக நினைக்காதீர்கள்.

      நீக்கு
    3. //ஸ்ரீராம், கந்தமாறன் என்று ஒரு பேச்சுக்கு சொன்னேன்//

      கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

      நீக்கு
    4. அது சரி, பானுமதி, கந்தமாறனாகச் சொல்ல ஶ்ரீராம் தான் கிடைச்சாரா? என்ன போங்க! பார்த்திபேந்திரன் கூடப் பொருத்தமில்லை! சேந்தன் அமுதன் என்று வேணாச்சொல்லலாம். :))))))

      நீக்கு
    5. இன்று வேறு யாரும் கிடைக்கவில்லையாக்கும்...

      ஆமாம்... புதன் பதிவில் பூங்குழலி பாத்திரத்துக்கு யாரோ அனுஷ்கா எம்பயர் சொன்னார்கள் இல்லை? சும்மா கேட்டேன்!

      நீக்கு
    6. அனுஷ்காவா அதாரது? விராட் கோஹ்லியின் மனைவியைச் சொல்றீங்களா? இஃகி, இஃகி!

      நீக்கு
    7. //கோஹ்லியின் மனைவியைச் சொல்றீங்களா// - அந்தப் பெண் பெட்டர் கீசா மேடம். தவறாப் புரிஞ்சுக்கிட்டாலும் சரியாச் சொல்லியிருக்கீங்க....ஹாஹா

      நீக்கு
    8. //கந்தமாறன் என்று ஒரு பேச்சுக்கு சொன்னேன்// - மணிமேகலையின் நிறம் தெரிந்துமா இது மாதிரி எழுதுகிறீர்கள்?

      நீக்கு
    9. நான் தவறாப் புரிஞ்சுக்கலை என்பதை ஶ்ரீராம் புரிஞ்சு கொண்டிருப்பார் என்பதைத் தெளிவாச் சொல்லிடறேன். புரிஞ்சுக்குங்க!

      நீக்கு
    10. //அனுஷ்காவா அதாரது? விராட் கோஹ்லியின் மனைவியைச் சொல்றீங்களா? //

      grrrrrrr.....

      //மணிமேகலையின் நிறம் தெரிந்துமா இது மாதிரி எழுதுகிறீர்கள்?/

      நிறத்தில் என்ன இருக்கிறது? இருந்தாலும் அனுஷ்...!

      நீக்கு
  9. நானும் சென்னைக்கு வந்தால் உங்கள் ஜெயலக்ஷ்மி ட்ராவல்ஸ்,யாத்ரா சர்வீஸஸ் உபயோகப் படுத்தலாம் போலிருக்கிறதே.

    அடேங்கப்பா பெரிய தெளிவான லிஸ்ட் தான்.

    சங்கமித்ரா அர்ரைவல் சூப்பர்.

    மேய்ப்பவனின் குழலோசை பிடிக்காமல்
    உடைத்து விட்டதோ பசு. நல்ல கவிதை.

    அப்பாவின் குணங்கள் நம்மிடம் வருகிறதோ இல்லையோ
    பேரன் பேத்திகளிடம் கட்டாயம் வந்துவிடும்.
    கொள்ளுத்தாத்தாவின் கோபம் என் பையனிடம் வந்திருக்கிறது.
    பாட்டியின் கைவண்ணம் என் மகளுக்கு வந்திருக்கிறது.

    இன்னும் நிறைய குறிப்புகளும் ,விவரங்களும்
    வரக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...

      "உங்கள் ஜெயலக்ஷ்மி" டிராவல்ஸ்... ஹா... ஹா... ஹா... வாங்கிடுவோம்! அதையும் வாங்கிடுவோம்!!

      கவிதையை ரசித்ததற்கு நன்றிகள். எல்லோரும் கண்ணனாக முடியுமா என்ன!!!!

      பரம்பரை வழக்கங்கள் கடத்தப்படுவது பார்ப்பது ஒரு சுவாரஸ்யம்தான் வல்லிம்மா...

      நன்றி, தொடருங்கள்.

      நீக்கு
  10. முக நூல் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. நீங்க உங்க அப்பா ஜாடைதான்...... பயணம் ஆரம்பித்துவிட்டது.... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. எடுத்துச்சென்ற பொருள்களில் "டார்ச்லைட்" பற்றி அழுத்தி சொன்னது எனக்கென்னவோ மக்கள் நீதி மய்யத்துக்கு மறைமுக ஆதரவு தருவதுபோல் தோன்றுகிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்தல் முடிந்தபிறகா கில்லர்ஜி.... போனாப்போகுது... உங்க ஊர்க்கார்ருக்கு ஒரு ஓட்டு அதிகமா விழுந்தா என்ன விழாட்டி என்ன....

      நீக்கு
    2. ஹா... ஹா... ஹா... தேர்தல் முடிந்தும் மறைமுக ஆதர்வுதானா?!!!

      நீக்கு
  14. அப்பாஸ் அலி திருப்பித் திருப்பிப் பார்த்தபோது - ரிடர்ன் ஜர்னி ஏர்போர் செக்கிங்கிலா? தெளிவாச் சொல்லலையே

    பதிலளிநீக்கு
  15. பயண விவரங்கள் அருமை
    தொடருங்கள்
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  16. //இரண்டாவது சந்தேகம் : மேய்ப்பனுக்கு எதுவோ நடந்திருக்க வேண்டும், செய்தவை இந்த மாடுகளேவா என்பதும் சந்தேகம்!!!!!//
    சே! சே! மாடுகள் என்ன மனிதர்களா பிடிக்காதவர்களை போட்டுத் தள்ள?
    மாடுகளை விரட்டிவிட்டு அவன் அங்கே கடலை போட்டுக்கொண்டிருப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் வாசித்த அழகைக் கேட்டு அவைகள் புல்லாங்குழலை வாங்கி உடைத்து விட்டனவோ என்னவோ... அவன் என்ன ஆனான் என்பதும் மர்மம்!!!

      நீக்கு
  17. உங்கள் பதிவை இன்று கீழிருந்து படித்தேன். செல்போனில் அப்படி படிப்பது சுலபமாக இருக்கிறது.
    உங்கள் அப்பாவை தாமதமாக நினைகூறுகிறோர்களோ?மறப்பதேயில்லை என்பது வேறு விஷயம் அல்லவா? தாத்தா போல பேரன் இருப்பது சந்தோஷம் அளிக்கக்கூடியது, அதிலும் அவர் இல்லாத போது அதிக சந்தோஷம்.
    என் அம்மா இதை "வம்சத்து மண்ணும், மட்டப்பலகையும் எங்கே போகும்?" என்பார். விளக்கம் கேட்காதீர்கள், நானே சொல்லி விடுகிறேன். பிரும்மா ஒவ்வொரு புது குழந்தையை உருவாகும் பொழுதும் அந்த குழந்தை எந்த குடும்பத்தை சார்ந்ததோ, அந்த வம்சத்து மண்ணை எடுத்து பிசைந்து உருவாக்கி,அதை மட்டப்பலகையால்(மேசன்கள் வைத்திருக்கும் ஒரு உபகரணம்) சமன் செய்வாராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்து உணவகங்களில் சோறு என்று கேட்டால் நம்மைக் கேனையனாகப் பார்க்கிறார்கள்... கொத்தனார் என்ற சொல் கூட மேசன் என்றாகி விட்டது....

      மட்டப் பலகையும் கரணையும் குண்டு நூலும்....

      மட்டப்பலகை மாமரத்தில் செதுக்கி எடுக்கப்படுவது...

      செங்கற்களை அடுக்கி கரணையால் சுண்ணாம்புச் சாந்தினை அள்ளிப் போட்டு பூசி மட்டப்பலகையால் தட்டி ஒழுங்கு செய்தால் எழுப்பும் சுவரின் நேர்மட்டமும் கிடை மட்டமும் சரியாகக் கிடைக்கும்...

      குண்டுநூலும் நேர் செங்குத்து கணிப்பதற்கு உதவும்....

      தளத்த்தின் கிடைமட்டம் சரி பார்ப்பதற்கு ரசமட்டம்...

      கங்கை கொண்ட சோழபுரத்தில் கோயில் கட்டுமான செலவை சரி பார்த்தபோது

      எத்து நூல்(குண்டு நூல்) ஏழு லட்சம் என்றாராம் பிள்ளையார்...

      அப்படியானால் சரி.. என்று அதற்குமேல் கணக்கை சரி பார்க்காமல் விட்டு விட்டானாம் ராஜேந்திரன்...

      மரப்பட்டரைகளில் இழைப்புளி என்று பல்வேறு அளவுகளில் இருக்கும்...

      அதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்..

      சுடு சோறை எடுத்துப் பரிமாறுவதற்கு அன்னகரண்டி...

      பழைய சோற்றை அள்ளி வைக்க அன்னையின் கரமே அன்னகரண்டி..

      அதுவே அன்புக்கரண்டி..

      இதற்கெல்லாம் ஆங்கிலத்தில் என்ன சொல்வது!...

      நீக்கு
    2. கொத்தனார் ...! ஆ! இந்தப் பெயர் பின்னூட்டம் எழுதும் பொழுது நினைவில் வரவேயில்லை. நகத்தை கடித்து, மண்டையில் தட்டி, என்ன செய்தாலும் ம்ஹூம்..! கணவருக்கு இரண்டாம் காபி கொடுக்க வேண்டும், என்ன செய்வது ஆங்கிலத்தில் எழுதி விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனாலும் என்ன? எத்தனை அழகான விளக்கம் உங்களிடமிருந்து வந்திருக்கிறது. நன்றி!

      நீக்கு
    3. இல்லையில்லை.. நான் தங்களைக் குறையேதும் சொல்லவில்லை.. மன்னிப்பு என்ற வார்த்தை எல்லாம் எதற்கம்மா?..

      இன்றைய நாட்டு நடப்பு இப்படி ஆகி விட்டது...

      தங்களது எழுத்து நடை சிறப்பானது...

      பழைய விஷயங்களை நினைவு கூர்பவர்களுள் தாங்களும் ஒருவர்...

      வாழ்க நலம்...

      நீக்கு
    4. பானு அக்கா... கொஞ்சம் தாமதமாகத்தான் நினைவுகூர்கிறேன்! ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு இன்றுதான் நினைவுகூர ஸ்லாட் கிடைத்தது!!!!!

      'வம்சத்து மண்ணும் மட்டப்பலகையும்' சொலவடை கேட்டதில்லை.

      நீக்கு
    5. //வம்சத்து மண்ணும் மட்டப்பலகையும்'// என் பெரிய நாத்தனார் சொல்லுவார். ஒருவேளை இது மெலட்டூர்ப் பக்கத்து சொலவடையோ என்னமோ!

      நீக்கு
    6. துரை செல்வராஜு சார் - இந்த மாதிரி எழுதுவதைத் தொடருங்கள். 'சோறு' என்பது தூய தமிழ்ச்சொல். (சாதியைக் குறிக்கிறேன் என்று எண்ணாதீர்கள். ஒரு சொல்லின் உபயோகத்தை இங்கு சொல்கிறேன். பிராமணர்கள் 'சாதம்' என்று சொல்வார்கள். வைணவர்களுக்கு மிக முக்கியமான ஆழ்வார் நம்மாழ்வார்-அவர் கீதா ரங்கன் ஊரான திருப்பதிசாரத்தைச் சார்ந்தவர். பிறகு ஆழ்வார்திருநகரியில் இருந்தார். அவர் திவ்யப்ப்ரபந்தத்தில்
      "உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்று பாடுகிறார். 'சோறு' வார்த்தை உபயோகத்துக்குச் சொன்னேன்)

      இப்போ சோறு என்ற சொல்லை நான் ஹோட்டல்களிலும் பேசக்காணேன். எல்லாம் சாதம் இல்லைனா ரைஸ். நம்ம குழந்தைகளுக்கே சோறு என்ற சொல் அந்நியமாகிவிட்டது.

      நீக்கு
    7. நாங்கள் எப்பவுமே சோறு/ரைஸ் என்றுதான் சொல்லுவோம் நெ.தமிழன், சாதம் என்பது கோயிலில் மட்டுமே பேசும் வார்த்தை எங்களைப்பொறுத்து..

      நீக்கு
    8. அந்தக் கால சொல்வடை.. அவர் மேஸன் என்று குறிப்பிட்டதும் ..ஐயய்யோ! இதுக்கு ஒரு சரியான தமிழ்வார்த்தை இருக்கே..என நினைத்து நினைவில் சிக்காமல் குழம்பினேன். துரைசாரின் பதிலில், கொத்தனாரிலிருந்து தச்சர் வரை வந்துவிட்டனர்! இழைப்புளி தெரியும். சின்ன வயதில் பட்டறைகளுக்குப்போய் அவர்கள் வேலை செய்வதை வேடிக்கை பார்த்ததோடு, அவர்களின் உரையாடல்களை ஆர்வமாய்க் கேட்டதுண்டு. ரஸமட்டம், மட்டப்பலகை, கரணை, குண்டுநூல்.. தமிழ்க் கட்டிடக்கலாச்சார வார்த்தைகள் நமது நினைவிலிருந்து விலகிவிடாதிருக்க இப்படி நினைவுபடுத்திப் பார்த்துக்கொள்ளவேண்டும் அடிக்கடி! இந்தப் பழைய வார்த்தைகளுக்கு ஒரு கையகராதி போட்டு வைத்துக்கொள்ளவேண்டும்.

      நீக்கு
  18. //5+1 இன்னர்ஸ், 4+1 கைக்குட்டைகள், 2 பெரிய டவல், 2 மினி டவல்,//
    இன்னர்ஸ்க்கும், கைகுட்டைக்கும் மட்டும் என்ன +1?அந்த +1உபயோகித்துக் கொண்டிருப்பவைகளை குறிக்கிறதா?

    பதிலளிநீக்கு
  19. பயண முன்னேற்பாடுகள் அருமை...

    படங்கள் பளிச்...!!!

    மகிழ்ச்சியான ஆச்சர்யம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று விமரிசனம் பதிவில் சினிமா நடிகை பானுமதி பற்றிய பதிவில் அவர் ஜோசியம் பார்ப்பார் என்பதைச் சொல்லி இருக்கார். எனக்கு நம்ம பானுமதி நினைவு தான் வந்தது. ஒருவேளை பானுமதினு பெயர் வைச்சாலே ஜோசியம் பார்க்க வருமோ? எனக்குத் தெரிந்த இன்னொரு பானுமதிக்கும் ஜோசியம் தெரியும்.

      நீக்கு
    2. கீசா மேடம்.... பானுமதி என்ற பெயருள்ளவர்களுக்கு ஜோசியம் தெரியுமென்றால், துரியோதனன் ஏன் இவ்வளவு கோபத்துடன் ஆங்காரத்துடன் தன் விதியைத் தான் தேடிப் போகப்போகிறான்?

      நீக்கு
  20. எப்போதுமே பயணங்கள் நம் தினசரி வாழ்க்கையின் யந்திரத்தனத்திற்கு அழகான மாறுதலாய், சுவாரஸ்யமாக இருக்கும். சங்கமித்ராவில் ஏறும் வரை படித்த விபரங்கள் மிகவும் சுவாரஸ்யம்! நானும் உங்களுடன் சேர்ந்து பயணிக்கிறேன்.

    சிலர் தொடர் ரயில் பிரயாணத்தில் வத்தக்குழம்பு, சப்பாத்தி, ஊறுகாய், கலவை சாதங்கள் எல்லாம் எடுத்து செல்வார்கள். நீங்கள் அப்படி ஏதும் எடுத்துச் செல்லவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதன் மேடம்... குழுவினர் கூட சமையல்குழு வந்ததால் அவை எல்லாம் எடுத்துச் செல்லவில்லை.

      நீக்கு
  21. சங்கமித்ரா - பெயர் அழகாக இருக்கிறது. ஆனால் சங்கமித்ரா எக்ஸ்ப்ரெஸை நினைத்தால் எனக்கு பிஹாரிகள் கூட்டம்தான் நினைவுக்கு வரும். பெங்களூரில் அதுகள் ஏறி, இறங்கும் அழகைப் பார்த்திருக்கிறேன். வடநாட்டில் உத்திரப்பிரதேசத்தில் சில முறை ரயில் பிரயாணம் செய்தபோது இதுகளையெல்லாம் பிடித்து ‘காலாபானி’க்கு அனுப்பிவிடுவதே நாட்டுக்கு நல்லது என நினைத்த அனுபவமும் உண்டு. நான் சென்னை செல்கையில் அந்த ட்ரெய்னை தவிர்த்துவிடுகிறேன். லால்பாக் அல்லது டபுள் டெக்கர்தான். கூடுமானவரை ஒரு பயணம் சுமுகமாக இருக்கவேண்டும் என நினைப்பவன் நான்!

    உங்கள் விரிவான செக்-லிஸ்ட்டை ஒரு 'box item' கொடுத்திருக்கலாம். எதிர்காலப் பயணிகளுக்கு ஏதுவாக இருக்கும்.

    வெள்ளைமாட்டொன்றின் கொம்பில் புல்லாங்குழல் துண்டா.. கவிதை தடம் பிசகிவிட்டதென நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்திருக்கலாம். அப்போது தோன்றவில்லை! ஆனால் பாருங்கள் ஏகாந்தன் ஸார்... அதில் பாதி வேஸ்ட்!

      நீக்கு
  22. ஆஆஆஆ என்னாது காசி யாத்திரை முடிஞ்சு பயணக் கட்டுரையும் ஆரம்பிச்சாச்சோ அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஜொள்ளவே இல்லை:).... அதெப்பூடி அதிரா இல்லாமல் காசி பற்றி எழுதலாம்... சத்துப் பொறுங்கோ... கொஞ்சம் ஸ்நானம் பண்ணிட்டு வந்துடறேன்...:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாளைய காசிப்பிரயாணம் இல்லை இது. சங்கமித்ராவின் வருகைப் படம் அழகு. பிரயாணக் கட்டுரையும் அழகாகப் போய்க்கொண்டுள்ளது. தொடர்ந்து எல்லோரின் பின்னூட்டங்களுடன் படிக்க மிகவும் ஸ்வாரஸ்யம்.
      விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? வம்சத்தின் அம்சங்கள் தொடரும். செய்கைகள் அசப்பில் அப்படியே தொடரும். அன்புடன்

      நீக்கு
    2. //அந்த நாளைய காசிப்பிரயாணம் இல்லை இது//


      ஒ காமாட்ஷி அம்மா நலம்தானே. நீங்கள் குறிப்பிடுவது காசி யாத்திரை எனக் கூறி நடையாகப் போவதைப் பற்றித்தானே. எங்கள் நாட்டிலும் முன்பு யாழில் இருந்து கதிர்காமத்துக்கு நடையாகப் போவார்கள்.. போகும் வழியில் அங்கங்கு வீடுகள் நட்புப் பிடித்து வைத்து தங்கிப் போவார்கள். அப்படி எங்கட வீட்டுக்கும் பலர் ரெகுலராக வந்து ஒரு நைட் தங்கி சாப்பிட்டு பின் நாம் உண்டியலுக்குள் போடச் சொல்லிக் குடுக்கும் பணத்தையும் கொண்டு போவினம்.

      இப்போ எல்லாமே மாறி விட்டது.. அப்படிப் பயணமெதுவும் இப்போ இல்லை.. மலை ஏறுவதுகூட வாகனத்தில்தானே.

      நீக்கு
    3. வாங்க அதிரா.... இதுதான் இரண்டாவது வாரம். முத வாரம் சென்ற வியாழன். ஆனால் கிறா நீங்கள் மிஸ் செய்த சில பதிவுகள் உண்டு. அப்படிச் சொவதைவிட உங்களை நாங்கள் மிஸ் செய்த பதிவுகள் என்று சொல்லலாம்!

      நீக்கு
    4. //சாப்பிட்டு பின் நாம் உண்டியலுக்குள் போடச் சொல்லிக் குடுக்கும் பணத்தையும் கொண்டு போவினம்// - முதல்ல நான் சரியாப் படிக்கலை. அப்போ, சாப்பிட்ட்டுட்டு, சாப்பிட்டதற்கு உண்டியல் வைத்து பணம் கலக்ட் பண்ணறமாதிரி படித்தேன். அப்புறம்தான் இருக்காதே... என்று இரண்டாவது முறை படித்தேன் (ஸ்ரீராமுக்கு மட்டும்தான் டங்க் ஸ்லிப் ஆகணுமா?)

      நீக்கு
    5. வாங்க காமாட்சி அம்மா.. அந்த நாளைய கதையே தனி.. அலஹாபாதே சமீபத்தில் சென்று வந்ததற்கும் இப்போதைக்கு மாறுதல் தெரிவதாய் வெங்கட் குறிப்பிட்டிருந்தார்.

      விதை ஒன்று போட்டால் - உண்மையான வார்த்தை அம்மா.

      தங்கள் வருகைக்கும் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
    6. சாப்பிட்டுவிட்டு அவர்கள் காசு கொடுப்பதற்கு பதிலாக உண்டியலில் போட என்று நீங்கள் காசு கொடுப்பீர்கள் போல... சரிதானே அதிரா? நெல்லை.. சரியாய்ப் புரிந்து கொண்டேன். டங் ஸ்லிப்பாளர் புரிந்து கொள்வார் டங் ஸ்லிப்பாளர் ஸ்லிப்புவதை!!!

      நீக்கு
    7. பின்னூட்டத்தில் நிறைய பிழைகள்.... பொறுத்துக்க கொள்ளவும்.

      நீக்கு
    8. //விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?// இது அப்பா, அம்மாவெல்லாம் சொல்லுவாங்க! :))))

      நீக்கு
    9. ஹா ஹா ஹா சாப்பாட்டுக்கும் காசுகும் சம்பந்தமில்லை.. நாங்களும் கதிர்காம யாத்திரிகரிடம் கொடுக்கவென உண்டியலில் பணம் சேர்போம்.. அதனை அவர்களிடம் கொடுத்து கோயிலில் ஒப்படைக்கச் சொல்லுவோம்.

      நான் குட்டியாக இருந்தபோது ஒருவர் வருவார்ர்.. அவரைப் பார்த்தால் நாரதர்போல தோற்றம்.. பழனி என்று பெயர்.. அவரைக் கண்டால் நான் ஒளிச்சு விடுவேன்:).

      வீட்டுக்குள் வந்து படுக்க மாட்டார்கள், மாமர நிழலில் கட்டில் போட்டு விடுவோம் அதில்தான் படுப்பார்.

      நீக்கு
    10. //ஆனால் கிறா நீங்கள் மிஸ் செய்த சில பதிவுகள் உண்டு. அப்படிச் சொவதைவிட உங்களை நாங்கள் மிஸ் செய்த பதிவுகள் என்று சொல்லலாம்!//

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.. போய்ப் படிக்கிறேன் ..

      திரும்படியும்:) யூலையில் மிஸ் ஆகப்போகிறேன்ன்:))

      நீக்கு
  23. நல்ல தொகுப்பு. பயண அனுபவங்கள் சுவாரஸ்யம். பொறுப்பாளரும் உதவியாளரும் பாராட்டுக்குரியவர்கள். தொடரவும்.

    ‘ஜீன்’ வழியாகத் தொடரும் வழக்கங்கள் ஆச்சரியம் அளிப்பவையே.

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராமலக்ஷ்மி.

      நன்றி பகவை ரசித்ததற்கும், "கவிதை"யை ரசித்ததற்கும்.

      நீக்கு
  24. இது எத்தனையாவது தொடர் ஸ்ரீராம்? தேட வேண்டும் ஆரம்பத்தை.

    // சட்டெனப் பொறுமை இழக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே வந்தன//
    ஹா ஹா ஹா ஸ்ரீராமை நினைச்சேன் சிரிச்சேன்:).

    பதிலளிநீக்கு
  25. //சங்கமித்ரா... ஏதோ தமிழ்ப்பட கதாநாயகி பெயர் போல இல்லை?!! //

    மிகவும் அழகிய பெயர்.. அப்போ ஸ்ரீராம் லேடி ரெயினில் பயணம் போயிருக்கிறார்ர் அவ்வ்வ்வ்வ்வ்:) ருளம்பிலும் லேடி ருளம்பு தேடிக் கடிக்குது.. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).

    //சங்கமித்ராவைப் பிடித்தால் நேரே பாக்யராஜ்.... ச்சே... ப்ரக்யாராஜ்... ச்ச்ச்ச்சே.... ப்ரயாக்ராஜ் சென்று இறங்கி விடலாம்.///

    எதுக்கு இந்த வெயிலிலும்.. ஓவரா டங்கு ஸ்லிப் ஆகுது ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நு எப்பூடி ரு ஆச்சோ... அது நுளம்பாக்கும்.

      நீக்கு
    2. நானும் என் நினைவினில் நுளம்பு என்று படிந்திருந்ததால் சற்றே குழம்பினேன். விளக்கத்துக்கு நன்றி!

      நீக்கு
  26. ///பயணத்துக்கு எடுத்துச் செல்ல முதலிலேயே ஒரு செக்லிஸ்ட் தயார் செய்து வைத்து விட்டேன்//

    ஆனா அங்கு அனைத்தும் கிடைக்கும் தானே? வாங்குவது கஸ்டமோ?.

    //கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் இருந்திருந்தால் இவைகளை நான் குறைத்திருக்கக் கூடும்.//
    ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு கிடைக்கலாம். ஆனால் அப்போது அதற்கு மெனக் கெட்டுக் கொண்டிருக்க முடியாதே.... அதே சமயம் எல்லாம் அங்கே கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. கிடைத்தாலும் ஆனை விலை, குதிரை விலை விற்கலாம்!!!!!

      நீக்கு
    2. அதிரா..... நீங்களாவே கண்டுபிடிப்பீங்களான்னு பார்த்தேன். எது முக்கியமோ அதைத் தவிர மற்றதை எல்லாம் பார்த்திருக்கீங்க..... என்னத்தச் சொல்ல. போனாப் போகுதுன்னு ஒரு குளூ கொடுக்கறேன்.

      படத்துல உள்ளவரை விட ஒரு 4 வயசு கம்மியாக்கிக்கோங்க. முடிந்தால் கறுப்பு டை அடிச்சுக்கோங்க. இப்போ வரும் உருவம் யாருன்னு நீங்களே புரிஞ்சுக்கோங்க...... (4ஆ எழுதினேன்.... 40 எழுதினேன் என்று நினைத்தேன். பரவாயில்லை... அது முக்கியமில்லை ஹாஹா)

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன்.. “பூஜை ஆகுமுன்னம் சந்னதம் கொள்ளலாமோ?”.. ஹா ஹா ஹா இன்னும் நான் மற்றருக்கு வரவே இல்லையே:).. தொடர்ந்து இருந்து கொமெண்ட்ஸ் போட முடியவில்லை:)).. ஓடி ஓடித்தான் போடுகிறேன்ன்.. பின்ன ஒரு சுவீட் 16[என்னைச் சொன்னேன்:))] எப்பவும் கொம்பியூட்டரில் இருந்தால் அம்மாவுக்கு கோபம் வராது?:) ஹா ஹா ஹா.

      //(4ஆ எழுதினேன்.... 40 எழுதினேன் என்று நினைத்தேன். பரவாயில்லை... அது முக்கியமில்லை ஹாஹா)//

      நெல்லைத்தமிழன் நீங்க சிரிராமை:) மீட் பண்ணியதுண்டோ? இல்லை எல்லோ?:)) ஹா ஹா ஹா.. இல்ல 4 தான் கரெக்ட்டா இருக்கும்:))... இக்காலத்தில பெரும்பாலும் எல்லோரும் டைக்:) குழந்தைகள்தானே:)). அதனால தலைமயிரை வச்சு வயசை எடைபோடுவதை நிறுத்திட்டேன்:)).. தோல் சுருக்கம் பார்த்தே முடிவுக்கு வரோணுமாக்கும்:)) ஹா ஹா ஹா ஹையோ ஏன் எல்லோரும் ஓடீனம்:))

      நீக்கு
    4. //டைக்:) குழந்தைகள்தானே:))// - அராபியர்கள் (அல்லது இஸ்லாமியர்கள்) பெரும்பாலும் 'DYE' அடிப்பார்கள். நான் அங்கு வேலைபார்த்தபோது, என்னை கறுப்படித்துக்கொள்ளவில்லையா என்று கேட்டார்கள். நான், 'வயதை எதற்கு மறைக்கணும்' என்று சொல்லிட்டேன்........ எனக்கும் ஸ்வீட் 16 என்று சொல்ல ஆசை... ஆனால் நான் பொய் சொல்வதை நிறுத்தி பலப் பல விநாடிகள் ஆகிவிட்டன.

      நான் சிரிராமை பார்த்ததில்லை. எப்போதும் புன்னகைக்காத 'ஸ்ரீராமை'த்தான் பார்த்த ஞாபகம்..

      நீக்கு
    5. ///நான் பொய் சொல்வதை நிறுத்தி பலப் பல விநாடிகள் ஆகிவிட்டன.///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      ///எப்போதும் புன்னகைக்காத 'ஸ்ரீராமை'த்தான் பார்த்த ஞாபகம்..//

      ஹா ஹா ஹா ஓ அப்போ மீட் பண்ணியிருக்கிறீங்க ஜொள்ளவே இல்ல:)).. அப்போ உங்கள் இருவரில் ஒருவரின் ஃபோனைக் களாவெடுத்தால் போதும் ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்போல இருவரின் செல்பியும் ஒரு இடத்தில் கிடைக்குமே:)) ஹா ஹா ஹா:)..

      ஸ்ரீராம்.. சிரிக்காமல் சிரிப்பூட்டும் நகைச்சுவையாளர் என்பதைப் புரிஞ்சு கொண்டேன்..
      அதேநேரம் கொஞ்சம் டக்குப் பக்கென.. ஐ மீன் சுர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக் கோபம் வந்து புஸ்ஸ்ஸ் என அடங்கிடும் என்பதுபோலவும் ஊகித்து வைத்திருக்கிறேன்ன் அவரை:)... இது சரியா தப்பா தெரியவில்லை...

      நீக்கு
    6. ///என்னை கறுப்படித்துக்கொள்ளவில்லையா என்று கேட்டார்கள். நான், 'வயதை எதற்கு மறைக்கணும்' என்று சொல்லிட்டேன்..//

      என்னைப் பொறுத்து இது வயசை மறைப்பதற்காக அல்ல.. கொஞ்சம் நம்மை நாமே அழகுபடுத்தி இருக்கும்போது பார்க்க நல்லாயிருக்கும்.. பெண்களுக்கும் இதையே தான் நான் சொல்வதுண்டு.. 40 ஆகிட்டாலே தனக்கு வயசாகிட்டுது என எந்த அலங்காரமும் செய்யாமல் தம்மைத்தாமே வயதானவர்போல ஆக்கிக் கொள்வோர் பலருண்டு... எனக்கது பிடிப்பதில்லை... வயதானால் என்ன, ஓவராக இல்லாமல்.. கொஞ்சம் பார்க்க லட்சணமாக மேக்கப் பண்ணுவது நல்லதே.. மனதுக்கும் புத்துணர்ச்சியாகவும் மனம் இளமையாகவும் இருக்கும்.

      நாம் நல்ல உடுப்பு போட்டு அழகாக வெளிக்கிட்டு கண்ணாடியில் பார்க்கும்போது நமக்கே நம்மைப் பிடிச்சு விட்டால்ல்.. அந்த நாள் முழுவதும் உற்சாகமாகக் கழியும்.. இதை நீங்கள் எல்லோரும் உணர்ந்திருப்பீங்கள்.

      சில வயதான ஆண்களைப் பார்க்க .. ஒரு மாதிரி இருக்கும்.. காதிலெல்லாம் மயிர் வளர்ந்திருக்கும்.. மீசை அழகாக வெட்டாமல் வாய்க்குள் போகும்.. கண் புருவம் கண்டபடி நீண்டு வளர்ந்திருக்கும்.. இவற்றை எல்லாம் கொஞ்சம் கவனிச்சு சீர் திருத்தினால் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.. மற்றும்படி பெரிய அலங்கரிப்பு தேவை என நான் எதிர்பார்ப்பதில்லை.. அசிங்கமிலாமல் இருக்கோணும்.

      நீக்கு
    7. //சில வயதான ஆண்களைப் பார்க்க .. ஒரு மாதிரி இருக்கும்.. காதிலெல்லாம் மயிர் வளர்ந்திருக்கும்..//

      இந்த வர்ணனையில் நான் பல வயதானவர்களைப் பார்த்திருக்கிறேன். தெளிவாக வர்ணித்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  27. பயண அனுபவம் ஆரம்பித்து விட்டீர்கள்.
    இன்று காலை உறவினர் திருமணம் அதனால் இப்போது தான் படிக்க முடிந்தது.
    அசோகர் மன்னர் மகள் பேர் சங்கமித்ரா.
    அலகாபாத்துக்கு பழைய பேர் ப்ராயக்



    திரும்பும்போது சிரமத்தை உணர முடிந்தது! அதைப் பின்னர் சொல்கிறேன்.//

    திரும்பும் போது விமானபயணம் என்றால் நீங்கள் எடுத்து போன சில் பொருட்கள் விமானத்தில் அனுமதி இல்லை. அது தானே?

    பயண அனுபவங்கள் நினைத்து கொண்டே இருப்பதற்காக சிலது நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...

      ஆம், திரும்பும்போது ஆவி அனுபவம்தான்!

      நீக்கு
  28. //அதற்கான பொறுப்பாளர் பெயர் பாலாஜி. அவர் உதவியாளர் பெயர் ப்ரஸன்னா. இருவரும் செம உதவி, செம ஃப்ரெண்ட்லி. புதிதாக அறிமுகமாகும் ஒரு குழுவை - கூட்டத்தை - அவர்கள் மூட் அறிந்து கோபப்படாமல் சமாளிப்பதுபேரிய கலை. அது இவர்களுக்கு கைவந்திருக்கிறது. சட்டெனப் பொறுமை இழக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே வந்தன. ஒரு இடத்தில் கூட பாலாஜியின் புன்னகை மாறவில்லை.//

    இருவரும் புன்னகை நிறைந்த முகத்தினர் தான், பொறுமை, நிதானம், சகிப்பு தன்மை இருப்பவர்கள்தான் இது போன்ற யாத்திரைகளுக்கு அழைத்து செல்லமுடியும்.
    அவர்களைப் பற்றி நீங்கள் நல்லதாக நாலு வார்த்தை சொல்வதுதான் அவர்களுக்கு வெற்றி, இன்பம், தொடர்ந்து நடத்தி செல்ல உறுதுணையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களைப்பற்றி நான் நல்லதாகவே நினைத்து, நல்லதாகவே சொல்லும் வண்ணம் அவர்கள் இனிமையாக இருந்ததே காரணம். நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. @ஸ்ரீராம் - //நல்லதாகவே சொல்லும் வண்ணம் அவர்கள் இனிமையாக இருந்ததே காரணம். // இவ்வளவு பேர் டூரில் வரும்போது, நேரத்துக்கு கிளம்பணும், நேரத்துக்கு அந்த அந்த இடத்தைவிட்டுப் புறப்படணும், இடையில் பக்கத்துக் கடையை வேடிக்கை பார்க்கிறேன் என்று போகக்கூடாது, சாப்பிட இத்தனை மணிக்கு என்றால் கரெக்டா அந்த இடத்துக்கு வரணும்... இப்படி நிறைய 'ணும்' இருக்கே... அப்புறம் எப்படி அவங்க கண்டிப்பா இல்லாம இருந்தாங்க?

      நீக்கு
    3. ஆமாம் நெல்லை. அதனால் சில சங்கடங்களும் நேர்ந்தன. ஆனாலும் அவர் வீட்டுக் கொடுக்கவில்லை. புன்னகையும் மாறவில்லை.

      நீக்கு
  29. புல்லாங்குழல் உடைந்த தூண்டு மாட்டின் கொம்பில் மாட்டி இருக்கிறது என்றால் மேய்ப்பான் கோபத்தில் மாட்டை புல்லாங்குழல் கொண்டு அடித்தாரா? அதில் உடைந்து விட்டதா? அல்லது வேறு யாரும் புல்லாங்குழல் சரியாக வாசிக்கவில்லை என்று வாங்கி உடைத்து தூக்கி வீசும் போது ஒரு தூண்டு கொம்பில் மாட்டிக் கொண்டதோ?

    மேய்ப்பான் எங்கு சென்றார் வீட்டுக்கு சென்று இருப்பார் தனக்கு நடந்ததை தன் சொந்தங்களிடம் கூற பழகிய மாடுகள் வீட்டுக்கு வந்து இருக்கும்..

    மாட்டு வண்டியை இரவில் ஓட்டி வ்ருபவர் தூங்கிவிட்டாலும் பழ்கிய மாடு தன் எஜமானை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு விடும் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  30. நான் நினைத்தேன் நெல்லைத் தமிழன் சொல்லி விட்டார். ஸ்ரீராமுக்கு வயதானால் அவர் அப்பா போலவே இருப்பார்.

    அப்பாவை போல பிள்ளை, தாத்தாவை போல குணம் கொண்ட பேரன் எல்லாம் ஆச்சரியமே இல்லை .

    இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்!//

    மதுரை பேச்சு வந்து விட்டது.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///கோமதி அரசு2 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:47
      நான் நினைத்தேன் நெல்லைத் தமிழன் சொல்லி விட்டார். ஸ்ரீராமுக்கு வயதானால் அவர் அப்பா போலவே இருப்பார்.///

      என்ன கோமதி அக்கா?:) அப்போ ஸ்ரீராம் இன்னும் வயசுக்கு வரவில்லையோ ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதேஎ:)) ஸ்ரீராமுக்கு இன்னும் வயசாகவில்லையோ:)) ஹா ஹா ஹா எனக்கு இண்டைக்கும் என்னமோ ஆச்சூஉ.. இனி இங்கின நிக்காமல் ஓடுவதே நல்லது:))

      நீக்கு
    2. //மதுரை பேச்சு வந்து விட்டது.//

      ஹா... ஹா... ஹா... கோமதி அக்கா... நான் தஞ்சாவூர்க்காரனும் கூட!!

      நீக்கு
    3. //ஸ்ரீராமுக்கு இன்னும் வயசாகவில்லையோ:)) //

      ஆகவில்லை அதிரா... உங்களுக்கே தெரியும்!

      நீக்கு
  31. ///கிளம்பும்போது ரயிலில் சென்றதால் கஷ்டம் தெரியவில்லை. திரும்பும்போது சிரமத்தை உணர முடிந்தது! அதைப் பின்னர் சொல்கிறேன்.//

    அப்படி இருக்காது, போகும்போது பயங்கர எக்ஸ்சைட்டெட் ஆக இருந்திருந்திருப்பிங்க அதனால சிரமம் தெரிஞ்சிருக்காது.. திரும்பும்போது உடம்பும் களைத்திருக்கும்.. எப்படா வீடு போய்ச் சேருவோம் எனும் நினைப்பு வந்துவிடும்.

    அது ரெயினோ? வீடுபோல படங்கள் கொழுவியிருக்கே...

    //அதோ வருகிறது சங்கமித்ரா....//

    ஓ அது ரெயினின் முன் பக்கமோ.. பின் பக்கம் போல தெரிகிறது எனக்கு..

    //எங்களைக் கண்டதும் நின்றது! //
    கர்ர்ர்ர்ர்:) அவ்ளோ குண்டாகவா குறுக்க நின்றீங்க ஹா ஹா ஹா சரி விடுங்கோ.. அதிரா இப்பூடித்தான்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பவும் நீங்க முழுமையா படிக்கலை... //வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்டு விட்டுதான் கிளம்பிய காரணத்தால்// - அப்போ... ஸ்ரீராம்தான் சமைத்து சாப்பிடுகிறார்னு சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்...ஹாஹா

      நீக்கு
    2. ஹா ஹா ஹா மீ பலதைப் பேசாமல் அமைதியாகப் போனாலும்:)) நெல்லைத்தமிழன் என் வாயைக் கிளறாமல் விட மாட்டார் போலிருக்கே:) அதனால இனி நான் எழுதப் போவதற்குப் பொறுப்பு நான் அல்ல நெல்லைத்தமிழனே என்பதனை.. சிறீராம் பயணம் செய்த அந்த ரெயின் எஞ்சின்மேல் அடிச்சுச் சத்தியம் பண்ணுகிறேன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

      ஸ்ரீராம் சமைச்சிருப்பார் எனும் சந்தேகம் எனக்கு எழவில்லை, ஆனா லிஸ்ட் போட்டு எடுத்து வைத்தேன் எனும்போதுதான் சந்தேகம் வந்தது.. பயணத்தின் போது தன் உடைகளைத் தானேதான் எடுத்து வைப்பாரோ என:))

      நீக்கு
    3. //அப்படி இருக்காது, போகும்போது பயங்கர எக்ஸ்சைட்டெட் ஆக இருந்திருந்திருப்பிங்க அதனால சிரமம் தெரிஞ்சிருக்காது.. திரும்பும்போது உடம்பும் களைத்திருக்கும்.. எப்படா வீடு போய்ச் சேருவோம் எனும் நினைப்பு வந்துவிடும்.//

      நீங்கள் சொல்லி இருக்கும் விஷயம் கூட யோசித்துப்பார்த்தால் சரிதான் அதிரா...

      //வீடுபோல படங்கள் கொழுவியிருக்கே...//

      கொழுவியிருக்கேன்னா?

      நீக்கு
    4. உங்கட பாசையில்... மாட்டி விடுதல்... ஹங் பண்ணுதல்:)...

      நீக்கு
  32. //நான் நினைத்து எழுதியது ஒன்று. அப்போது அங்கு வந்த பின்னூட்டங்கள் வேறு! நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுதான்!//

    ஏன் இதுக்கு என்ன விதமான பின்னூட்டங்கள் வந்தன.. கவிதை நல்ல விளக்கமாகத்தானே இருக்கு..

    மாட்டுடன் போன மேய்ப்பன் திரும்பி வரவில்லை, அவர் வாசித்த புல்லாங்குழல் மட்டும் ஒரு துண்டு கொம்பில் இருந்தது எனும்போது, மேய்ப்பனுக்கு ஏதோ ஆகியிருக்கிறது.... வளர்க்கும் மாடு முட்டியிருக்காது, வேறேதோ காரணமாக இருக்கும்... அழகிய கற்பனை...

    படம் பார்த்ததும் கற்பனை பண்ணி எழுதுவீங்களோ கவிதை? இல்லை கற்பனை பண்ணி எழுதிபோட்டுப் படம் தேடிப் போடுவீங்களோ ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ நான் என்ன நினைத்தேன் என்று எனக்கே நினைவில்லை. இப்போதும் கைக்கு வந்ததை எழுதிடறோம்.... ஆளாளுக்கு வர்ற அர்த்தம்தான்!! என்ன சொல்றீங்க!

      அழகிய கற்பனை என்கிற பாராட்டுக்கு நன்றி.

      படம் பார்த்தும் எழுதுவதுண்டு.. ஸ்விஸ் ஹேமா சில படங்கள் கொடுத்து எழுதச்சொன்னபோது பழகியது! எழுதியதும் படங்கள் பொருத்தமாகத் தேடியதும் உண்டு!

      நீக்கு
  33. துரைசெல்வராஜு சொன்ன சொற்கள் சொந்த வீடு கட்டியவர்களுக்கு தெரிந்திருகக வேண்டுமே

    பதிலளிநீக்கு
  34. //என் அப்பா .... அதே போல சாப்பிடும்போதும் பெரும்பாலும் கண்களை மூடிக்கொண்டு சாப்பிடுவார்.//

    ஹா ஹா ஹா பொயிண்டுக்கு வந்திட்டேன்ன்ன்ன்:).. இதே பழக்கம் எங்கள் அப்பாவிலும் உண்டு.. சாப்பிடும்போது கண்களை மூடியபடி சாப்பிடுவார்ர்... முன்னால் இருக்கும் அம்மாவுக்கு கெட்ட கோபம் வரும் இதைப் பார்க்க ஹா ஹா ஹா அதனால அடிக்கடி திட்டும் வாங்குவார்ர்:) “எதுக்கு கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுறீங்க?” என... எனக்கும் இப்படி எனில் பிடிக்காது. தனியே யாருமில்லாமல் இருந்து சாப்பிடுவதாயின் ஓகே, மற்றும்படி, முன்னால் அம்மா இருக்கும்போது இப்படிச் சாப்பிட்டால் அவமதிப்பதுபோல இருக்காது? ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடும்போது மட்டுமல்ல, போன் பேசும்போதும் அப்பா கண்களை மூடிக்கொண்டு விடுவார் - பெரும்பாலும். ரசித்துச் சாப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்ளலாமே... எதிரில் ஆள் இருந்தால் என்ன?

      நீக்கு
  35. //அப்பாவிடம் இன்னொரு பழக்கம் உண்டு. வெளியில் எங்காவது போய் வந்தால் கிளம்பியது முதல் நடந்தவை யாவற்றையும் தன் சுய விமர்சனங்களுடன் விளக்கமாக சொல்வார்.//

    இது எனக்கு மிகமிகப் பிடிச்ச பழக்கம்... நான் திருமணத்துக்கு முன் அந்தமான் காதலி படம் பார்த்தேன்.. அப்போ தொடங்கி எனக்க்கும் விருப்பம், அதில் காலை முதல் மாலை வரை நடந்ததை அபடியே எழுதிவைப்பார் சிவாஜி அங்கிள்.. அவ நேரில் இல்லாததால்.. அப்பவே நானும் முடிவு கட்டிட்டேன்.. என் கணவரும் இப்படித்தான் இருக்கோணும் என ஹா ஹா ஹா.. அவரும் அப்படித்தான்... அ முதல் அக்கன்னா வரை எல்லாம் சொல்லுவார்ர்.. இடையில் ஜம்ப் பண்ணி அடுத்த கட்டத்துக்குப் போனாலும் மீ விடமாட்டேன்ன்.. இல்ல இடையில கொஞ்சம் விட்டிட்டீங்க எனக் கேட்டு முழுவதையும் சொல்ல வைப்பேன்ன் ஹா ஹா ஹா எங்கிட்டயேவா:)).. அவருக்கும் என்னைப்போல அலட்டுவது ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும் என்னோடு ஹா ஹா ஹா:)).

    //நாங்கள் அமர்ந்து கேட்போம். கேட்கவேண்டும். இல்லா விட்டால் சுர்ரென்று கோபம் வரும்.///
    ஹா ஹா ஹா அப்பாவின் கதை கேட்பது பிள்ளைகளுக்கு கொஞ்சம் போறிங்காக இருக்கலாம் ஆனால் மனைவிமாருக்கு கணவர் இப்படிக் கதை சொல்வது பிடிக்காமல் போகாது:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவின் பழக்கங்கள் இவர்களிடம் நான் காணும் அளவு என் அம்மாவின் பழக்கங்களை இவர்களிடம் காண முடியவில்லை. ஏனென்று சொல்ல முடியவில்லை.

      அந்தமான் காதலிக்கு முன்னாலேயே என்அப்பா அப்படிதான்!

      நீக்கு
  36. எங்கள் மூத்த மகனிலும் எங்கள் அப்பாவின் குணம் பாதி என் கணவரின் குணம் மீதி அப்படியே வந்திருக்கிறது. எங்கள் மூத்தவரை 3 வயசுவரை அப்பாதான் வளர்த்தார். எங்களை ரெஸ்ட் எடுக்கச் சொல்லிப்போட்டு அவரே தூக்கி வைத்திருப்பார்.. இரவு நித்திரை கொள்ளும் நேரம் தவிர மற்றும்படி அவரே பார்த்துக் கொள்வார்ர்... அதனால்கூட மகனுக்கு அப்பாவின் குணம் வந்திருக்கலாம்.

    ///அவரைப்போலவே இவனுக்கும் நாம் சரியாக கவனிக்கா விட்டால் சுர்ரென்று கோபம் வரும். 'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்!///
    ஹா ஹா ஹா இதுதான் தலைப்புக்குக் காரணமோ.. அவரின் இப்பழக்கம்[தாத்தாவின் குணம்] நல்லதே ஊக்கம் குடுங்கோ.. அவரின் குடும்பத்தில் ஹப்பியாக இருப்பார். ஆனா கோபத்தைக் குறைக்கச் சொல்லுங்கோ.. இது அப்பாவின்[ஸ்ரீராம்] குணமோ ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் எனக்குதான் கோபம் குறைவு. என் மூத்தவனுக்கு என்னைவிட அதிக கோபம் வருகிறது! என்னென்று சொல்ல!

      நீக்கு
  37. ஸ்ரீராமின் அப்பா, தோற்றத்தில் கவிஞர் வாலிபோல இருக்கிறார்ர்.. இவரும் கவிஞர்தானே?

    நெல்லைத்தமிழன் சொன்னதைப்போல டை.. இது வேற டை:) அடிச்சுப் பார்த்தேன் ஸ்ரீராமை:))... ஹா ஹா ஹா.. சே..சே.. இன்று பார்த்து கீதாவைக் காணமே கர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் சகோதரரே

    அருமையாக காசி பயண கட்டுரையை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். தங்களது ஒவ்வொரு செயலையும், விவரமாக விஸ்தரித்து அழகான பெயர் கொண்ட சங்கமித்ராவை விட அருமையான சொற்களைக் கொண்டு மிக அழகாக நகர்கிறது காசிப்பயணம்.

    வந்து கொண்டிருந்த, வந்து நின்ற ரயிலின் படங்களும், பேச்சும் சுவையாக இருந்தது.

    பிரயாணத்திற்கு எடுத்துச் சென்ற பொருட்கள் பட்டியலும், அவை எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன என்று விவரித்த இடங்களும் தங்கள் பொறுமையை விளக்கியது. அதனால்தான் அவ்வளவு அழகாக ஒவ்வொரு வார்த்தைகளையும், செதுக்கி விவரமாக இப்படி ஒரு பதிவை எழுத முடிகிறது.மிகவும் ரசித்தேன்.

    அந்த காலத்தில், ஆண்கள் நெற்றியில் வீபூதி தரித்துக் கொண்டாலும். சிலர் அதற்கு நடுவில் குங்குமமும் வைத்துக் கொள்வார்கள்.

    தங்கள் கவிதை நன்றாக உள்ளது. கடைசி இரு வரிகளில் நம் மனசு கனக்கிறது. அன்றைய நாளின் முடிவில் மேய்பவனின் நிலை தெரியாது அந்த மாடுகளும் வரும் வழியெங்கும் தவித்திருக்குமோ?

    தாத்தாவின் செய்கைகள் பேரன்களுக்கும், பாட்டியின் செய்கைகள் பேத்திகளுக்கும் வருவது இயல்புதான். ஆனால் சில சமயத்தில் நமக்கு ஆச்சரியமாகத்தான் (உள்ளுக்குள் சந்தோஷமாக) இருக்கும். வாழையடி வாழையாக என்று சொல் வழக்கு உண்டே.! பயணத்தில் தொடர்கிறேன். என் வருகை தாமதமாகி விட்டதென வருந்தினாலும் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அழகான பெயர் கொண்ட சங்கமித்ராவை விட அருமையான சொற்களைக் கொண்டு//

      ஹா... ஹா... ஹா... கமலா அக்கா... ஸூப்பர்!

      //அதனால்தான் அவ்வளவு அழகாக ஒவ்வொரு வார்த்தைகளையும், செதுக்கி விவரமாக இப்படி ஒரு பதிவை எழுத முடிகிறது.மிகவும் ரசித்தேன்//

      நன்றி. நன்றி அக்கா.

      //தங்கள் கவிதை நன்றாக உள்ளது. //

      மீண்டும் நன்றி.

      தாமதம் எல்லாம் இல்லை. நேரம் கிடைக்கும்போது வாருங்கள் அக்கா.

      நீக்கு
  39. காசி யாத்திரை இதுதான் முதல் பதிவா? இல்லை இரண்டாவது பதிவா? நன்றாக ஆரம்பித்து இருக்கிறீர்கள் checklist நிறைய பேருக்கு பயன்படும். உங்கள் பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் மிக மிக சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரஞ்சனி அக்கா... சென்ற வாரமே ஆரம்பித்து விட்டேன். நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  40. சங்கமித்திரை பேரரசர் அசோகனின் மகள். சங்கமித்திரை அவரது இளமைப் பருவத்திலேயே புத்தமதக் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்டவர். பதினாலு வயதிலேயே திருமணம். ஆண்குழந்தை. பெயர்: சுமணன். பின்னாட்களில் இவர் இலங்கை சென்று அங்கு புத்தமதத்தைப் பரப்பினர். தன் மகனுடன் இலங்கை பயணப்பட்டார் எனப்து தான் விசேஷம்.

    பதிலளிநீக்கு
  41. //"உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்று பாடுகிறார்.//

    பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
    பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்ணும் சோறு எனறு தொடங்கும் பாசுரம் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதில் சாப்பிட வேண்டிய சோற்றுக்கு உண்ணும் என்றும், குடிக்க வேண்டிய தண்ணீருக்கு பருகும் என்றும், வெற்றிலைக்கு தின்னும் என்றும் .பொருத்தமான வார்த்தைகளை போட்டிருக்கும் அழகை கவனியுங்கள்.

      நீக்கு
  42. அருமையான தொகுப்பு
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  43. ஸ்ரீராம்ஜி உங்களுக்கும் நண்பர்கள் அழைப்பு அத்தனை வந்ததா. எனக்கும் இரு நாட்கள் 200க்கும் மேலாக வந்து குவிந்தது வந்து கொண்டே இருந்தது. அலுப்பாகிவிட்டது. ஒரு வேளை படம் மாற்றியதாலோ எனக்கு மட்டும் என்று நினைத்து என் ப்ரொஃபைல் படம் மாற்றினேன். உங்களுக்கும் வந்ததா. இப்போது வருவதில்லை அவ்வளவு.

    உங்கள் அப்பா பற்றி சொன்னது மிக அருமை. நல்ல அப்பா. இப்போது உங்கள் மகனும் அப்படியே இருப்பது உங்களுக்கும் உங்கள் அப்பாவின் சில பழக்கங்கள் வந்திருப்பது ஜீன் தான்.

    உங்கள் காசிப் பயணம் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது. நீண்ட பயணத்திற்கான லக்கேஜ் விவரங்கள்.

    கவிதை அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீராம் தலைப்பு ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்....என் மகனும் இங்க பாரு நான் சொல்லும் போது கேக்கனும் கேக்காம திரும்ப சொல்லுனு கேட்டா நான் சொல்லமாட்டேன் என்று கோபம் வரும்...ஹா ஹா

    உங்கள் மகன் பெரியவரைப் பற்றி முன்னமே சொல்லிருக்கீங்களே. ஆஃபீஸ் விஷயங்களை ராத்திரி லேட்டானாலும் உங்களை எழுப்பி உட்கார்த்தி வைத்துச் சொல்லுவார் என்று. கேக்கலைனா கோபம் வரும்னு...தாத்தாவின் ஜீன்! ஆமாம் பல சமயங்களின் இந்த ஜீன் விவகாரம் ஆச்சரியப்படுத்தும்.

    அப்பா சூப்பர் ஸ்ரீராம். இப்படி நிகழ்வுகளை சொல்லும் அப்பாக்கள் எத்தனைப் பேர்?!! யு ஆர் ப்ளெஸ்ட்.

    நான் இப்ப்டித்தான் விவரமாகச் சொல்லும் வழக்கம் உண்டு மகன் இல்லை எனவே கப்சிப்.

    கவிதை செம...அந்தப் புல்லாங்குழல் துண்டில் தூது விடப்பட்டிருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  45. காசிப்பயணத்தின் ஆர்கனைஸர்கள் சூப்பர் ஹீரோஸ்! ஆமாம் ஆர்கனைஸர்களுக்கு கோபம் வரக் கூடாது.

    உங்கள் சாமான் கொஞ்சம் கூடிதல் போலத் தோன்றியதை நீங்களுமே சொல்லிருக்கீங்க. ஸ்வாரஸ்யமா சொல்றீங்க ஸ்ரீராம். ரயில் அழகா இருக்கு ஸ்ரீராம். இன்ட்ரெஸ்டிங்கா எழுத்றீங்க...முடிச்சுடுங்க. நடுல ட்ரெயின் சிக்னலுக்காக மணிக்கணக்க நின்னுறக் கூடாது சொல்லிப்புட்டென்....ஹா ஹா ஹா

    சங்கமித்ரா பெயர் சூப்பர்ல ஸ்ரீராம் இங்கிருந்துதான் கிளம்புகிறது அந்த ரயில். அப்புறம் ஆவி எழுதிய ஒரு கதையில் சங்கமித்ரா என்ற பெயர் ஹீரோயின் பெயர் என்று நினைவு.

    கவிதையில் மேய்ப்பான் காதலியுடன் சென்றுவிட்டாரோ?!!!!! ஆனால் உடைந்த புல்லாங்குழல் என்பது கொஞ்சம் யோசிக்க வைக்குதே! அந்த உடைந்த புல்லாங்குழலில் கதையே இருக்கோ??!!!!!

    நல்ல கற்பனை. கும்மி அடிக்க முடியலை இன்னும் நிறைய பதிவுகள் இருக்கிறதே வாசிக்க

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!