புதன், 29 மே, 2019

புதன் 190529 :: சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருக்கீங்களா ?


சென்ற வாரக் கேள்விக்கு விடை அளித்த பல்லாயிரக்கணக்கான வாசகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! 

கை எழுத்தைப் பார்த்து, குணாதிசயங்களை சொன்ன ஏகாந்தன் சாருக்கு சிறப்பு நன்றி. 
நெல்லைத் தமிழன் எனக்கு இன்னொரு காரணத்தை தனியே சொல்கிறேன் என்று எழுதியிருந்தார். அவர் எனக்கு அப்படியே தனியாக எழுதிய  காரணத்தை பார்த்து திடுக்கிட்டேன். ஆனாலும் அவர் அந்தப் பதிவரைப் பற்றி அப்படி ஒரு கருத்து எழுதியிருக்கக்கூடாது. சரி சரி போகட்டும். 

இந்தவாரக் கேள்வி பதிலுக்கு வருவோம்! 


பானுமதி வெங்கடேஸ்வரன் :

பேட்டி என்பதும் கேள்வி பதில்தானே பின் ஏன் அதற்கு பேட்டி என்று தனியாக ஒரு பெயர்?


# (B)பேண்ட்(t) என்றால் ஹிந்தியில் "சந்திப்பு" . இதிலிருந்து பே ட்டி வந்திருக்கும்.  இது ஒரு சொல். நேர் காணல் இரண்டு. 

& (இந்தியில் பேட்டி என்றால் மகள் அல்லவோ! ) பேட்டியில் பேட்டி காண்பவரும், காணப்படுபவரும் பிரபலஸ்தர்களாக இருக்க வாய்ப்புகள் உண்டோ? பேட்டி அளிப்பவர் தமன்னா, பேட்டி காண்பவர் நெல்லைத்தமிழன் என்று எல்லாம் விளம்பரப்படுத்தலாம். 
ஆனால் கேள்வி பதில் என்று வந்துவிட்டால் 'காண்பது' எல்லாம் கிடையாது! கேட்பது மட்டுமே! படிப்பது மட்டுமே!  


என்னதான் நமக்கு பிடித்த வேலை என்றாலும், சில சமயம் அதை செய்யக் கூட சலிப்பு வருகிறதே ஏன்?

# பிடித்த வேலையும் சலிப்புத் தட்டுவது  உடல் களைப்பு, மன உளைச்சல் காரணமாகத்தான் இருக்க முடியும்.

& எனக்கு அப்படித் தோன்றவில்லை. பிடித்த வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்தோம் என்றால் நேரம் போவதே தெரியாது. சலிப்பு அலுப்பு எல்லாம் வராது. பாருங்க, எனக்குப் பிடித்த வேலை தூங்குவது. அதை செய்யும்போது எனக்கு நேரம் போவதே தெரியாது. அலுப்பு சலிப்பு எதுவும் வருவது இல்லை! ஏஜிங் க்ரேஸ்ஃபுலி என்கிறார்களே, மற்ற பருவங்களுக்கு அந்த க்ரேஸ் அவசியமில்லையா?


 # பால பருவத்தில் சமர்த்தாகவும், இளமையில் துடிப்பாகவும், நடுவயதில் பொறுப்பாகவும் முதுமையில் நிதானமாகவும் இருப்பதுதான் ஏஜிங் கிரேஸ்ஃபுலி. ஏஜிங் என்றால் எழுபதுக்கு மேல் என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் ?

& எப்படி இருந்தாலும் ஏஜ் ஏறிகிட்டுதான் போகப்போகுது. அதுல என்ன graceful !

I prefer aging Craze fully! 


ஏஞ்சல் : 

1, தவறுகளில் இருந்து திருத்தி க்கொள்ள வேண்டும் என்கிறார்கள் அப்போ தவறு செய்ய பயப்பட வேண்டுமா வேண்டாமா ?
நீங்கள் அப்படி திருத்திக்கொண்ட சம்பவம் உண்டா ?


# தவறு என அறியாமல் செய்து, பின் தெரியும் போது திருத்திக் கொள்வது அறிவுடைமை. தெரிந்தே தவறு செய்வது அல்லது தண்டனைக்கு பயந்து செய்யாமலிருப்பது சிறப்பல்லவே.

& தவறு என்பதைத் தவறி செய்தால் அது தப்பு இல்லை என்று நாம் தவறாக நினைத்துக்கொள்ளக் கூடாது. அதனால் அதைத் திருத்திக் கொள்ளுவதால் தப்பு இல்லை. 
பயந்துகொண்டே தவறு செய்து, அடி வாங்கியவுடன் திருத்திக்கொண்ட சம்பவங்கள் ஏராளம். 


2, இப்படிப்பட்ட நட்பு வேண்டும் என்று நினைத்ததுண்டா ? அப்படிப்பட்ட ஒரு நட்பாக நீங்கள் பிறருக்கு இருந்ததுண்டா ?


# விவரமறிந்த பின், கவனக்குறைவாக சறுக்கியது உண்டு. தெரிந்து செய்ததில்லை எனத் தோன்றுகிறது.

& நட்புகளை முதலில் ஆரம்பிக்கும்பொழுது அது எப்படி வரும் என்று தெரியாது. இப்படிப்பட்ட நட்பு வேண்டும் என்று நினைத்தது எல்லாம் இல்லை. எல்லோரிடமும் திறந்த மனதுடன்தான் பழகுவேன். ஆனால் என்னுடன் பழகுபவர்கள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள் என்று உணர்ந்தால் உடனே விலகி அவர்களை மறந்துவிடுவேன்.      

3, 10 வயது சிறுவன் /சிறுமி /18 வயது ஆண் பெண் 30 வயது ஆண் பெண் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவுரை கொடுக்கணும்னா என்ன அறிவுரை தருவீர்கள் ?


 # வந்த பின் அவமானப் படாமல், வருமுன் எச்சரிக்கையாக இருங்கள்.

& பத்து வயதினருக்கு : நன்றாக, கவனமாகப் படியுங்கள்.

    பதினெட்டு வயதினருக்கு : சந்தோஷமாக இருங்க, சஞ்சலம் இல்லாமல் இருங்க. எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிடுங்க. 

முப்பது வயதினருக்கு : எது உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றதோ, அதைத் தொடந்து செய்யுங்க. ஆனால் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் செயல், மற்றவர்களுக்கு துன்பம் அளிப்பதாக இருக்கக்கூடாது.   

4, வாழ்வின் ஒவ்வொருகட்டத்திலும் ஒரு தீர்மானம் ஏறெடுப்போம் அந்த தீர்மானம் நமக்காகவா அல்லது உலகத்துக்காகவா ?
ஐ மீன் அந்த நாலு பேருக்காகவா ?# தீர்மானம் எடுப்பது நமக்கு வசதி அல்லது புகழ் வேண்டும் 
என்பதற்காக.

& நமக்காகத்தான் பெரும்பாலும். 

5,முன் பின் தெரியா அறிமுகமில்லா ஒருவருடைய நாளை சிறப்பானதாக ஆக்க என்ன செய்வீர்கள் ?


 # அவரைப் பாராட்ட தகுந்த காரணம் இருந்தால் பலமாகப் பாராட்டுவேன்.

& அவரைப் பார்த்துப் புன்னகை புரிவேன். A smile costs nothing but wins many things.    

6, நீங்கள் கற்ற மிக கடினமான வாழ்க்கைப்பாடம் எது ?


 # அடுத்தவரை மாற்ற இயலாது. நாம்தான் மாற முடியும் என்ற உண்மை.

& நெருங்கிய சொந்தங்களை அனுசரித்துப் போவது அல்லது adjust செய்துகொள்வது.        

7, வாழ்கிறோம் என்பதற்கும் இருக்கிறோம் என்பதற்குமான வித்தியாசம் என்ன ?
உண்மை என்றால் என்ன ? எனக்கு உண்மையாகப்படுவது பிறருக்கு பொய்யாக தோன்றுவதேன் ?# உயிர்த்திருப்பது இரத்த ஓட்டம் "இருப்பதற்கு"  அடையாளம். ரசனை ஈடுபாடு கொண்டிருத்தல்  வாழ்வதற்கு இலக்கணம்.

உள்ளது எதுவோ அது உண்மை. ஆசை வெட்கம் சினம் பொறாமை முதலியன மனதை ஆக்கிரமிக்கும்போது உண்மையின் மேல் பொய்ச் சாயம் பூசப் படுகிறது.

& நம்மால் பிறருக்கு உதவி செய்யமுடிகிறது என்னும் நிலை வாழ்கிறோம் என்பது. பிறர் உதவியில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்றால் - ஏதோ இருக்கிறோம். 

உண்மை என்பது எந்தக்காலத்திலும் மாறாமல் இருப்பது. நமக்கு ஒன்றாகவும் மற்றவர்களுக்கு வேறாகவும் படுவது எதுவும் நிரந்தர உண்மையாக இருக்கமுடியாது. தற்காலிக உண்மைகளாக இருக்கும். 


8, தாத்தா குடை என்ற துணியால் தைத்த வளைந்த கைப்பிடி குடைகள் இன்னும் பயன்பாட்டில் இருக்கா ?


 # எனக்கு எப்படித் தெரியும் ?

& இருக்கு, இருக்கு. சமீபத்தில் ஒருவர் வீட்டில் அதைப் பார்த்தேன். 'இதை எதற்கு வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டேன். மழைக் காலங்களில் குடை இரவல் கேட்பவர்களுக்கு அதைத்தான் கொடுப்பாராம். அதைக் கண்டவுடன் இரவல் வாங்க வந்தவர் ஓடிப்போயிடுவாராம். 
'சரி, யாராவது இதை இரவல் வாங்கிப் போய்விட்டுத் திரும்பத் தரவில்லை என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்?' என்று கேட்டேன். 'அது எனக்குத் தெரியாது. நான் யாரிடமிருந்து இதை இரவல் வாங்கி வந்தேனோ அவரிடம் கேளுங்கள்' என்கிறார்! 9,வெற்றி தோல்வி இவை கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன ?# வெற்றி தருகிற எக்களிப்பும் தோல்வி தருகிற சோர்வும் பாடங்களை நம் பார்வையிலிருந்து மறைத்து விடுகின்றன.

& வெற்றிகள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால், தோல்விகள் நமக்கு இரண்டு பாடங்கள் கற்றுத் தருகின்றன. 

ஒன்று: எது வேலைக்கு ஆகாது என்று தெரிந்துகொள்ளலாம். (We get to know what will not work or yield expected result) 

இரண்டு : வேறு வழிகளை முயன்று பார்க்க சந்தர்ப்பம். (Opportunity to try different process and tools.) 

10, இவர் அப்படி அவர் இப்படி என்று ஒவ்வொருவரையும் மதிப்பிட்டு எடை போடுகிறோம் தீர்மானிக்கிறோம் இது சரியா ?
அல்லது தவறா ?


 # அது சரியா இல்லையா என்பது நம் மதிப்பீடு எத்தகையது என்பதைப் பொறுத்தது. 

& மனிதர்கள் மாறலாம், மாறுவார்கள் என்பதே உண்மை. 
இவர் இப்படி / அவர் அப்படி என்று யாரையும் brand செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் கூறும் வார்த்தைகளையோ அல்லது அவரின் செய்கைகளைக் கொண்டோ யாரையும் எடை போட்டு அப்படியே lock செய்துவிடல் கூடாது. Just find out the intention of the other person. Don't judge anyone by his / her words or deeds.    

11,கடிதம் எழுதி தபாலில் சேர்க்க மறந்து போனதுண்டா ?
அப்படி தபாலில் சேர்த்த கடிதம் உங்களுக்கே வந்த அனுபவம் இருக்கா ?


# இல்லை. இல்லை.

& காரச்சாரமாக கடிதம் எழுதி, பிறகு அதை தபாலில் சேர்க்கவேண்டாம் என்று முடிவெடுத்தது உண்டு. தபாலில் சேர்க்க மறந்தது இல்லை. 

பல வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. என்னுடைய சிறு குறிப்புகள், குறுங்கவிதைகள், அபிமான நடிகை படம், என் ஃபோட்டோ, அலுவலக சம்பந்தப்பட்ட சில தாள்கள் எல்லாம் என் பெயருக்கு ஒரு கவரில் வந்தது. வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் நான் ஏதோ ஏப்ரல் ஃபூல் சமாச்சாரம் செய்திருக்கிறேன் என்று நினைத்து, மாலையில் அலுவலகத்திலிருந்து நான் திரும்பியதும் கேலி செய்தார்கள். முதலில் அதைப் பார்த்து எனக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது ஐந்தாறு மாதங்களுக்கு முன்பாக என்னிடமிருந்து பர்சை பிக் பாக்கெட் செய்த நல்ல மனம் கொண்ட திரு திருடர் ஒருவர், பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதிலிருந்த கடிதங்கள் புகைப்படங்கள், எல்லாவற்றையும் ஒரு தபால் பெட்டியில் போட்டுச் சென்றிருக்கிறார். தபால் அலுவலகத்தில் இருந்த நல்ல மனம் கொண்ட அலுவலகர்கள் பர்சில் இருந்த  விலாசத்தை ஆராய்ந்து பர்சில் இருந்த மீதி எல்லாவற்றையும் எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்! 

அப்படி வந்த அந்த நடிகையின் படம் எது? அடுத்த வாரம் அந்தப் படத்தைப் போடுகிறேன்.


அதிரா :


1. பாடல்-பாட்டு.. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கோ?# பாடல் = எழுதப்பட்ட வரிகள். படித்தும் ரசிக்கலாம். பாடியும் பார்க்கலாம்.

பாட்டு = இசைக்கப்படும் வரிகள். கேட்டு மகிழலாம். பொருளையும் எண்ணி வியக்கலாம்.


2. கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்பதன் சரியான அர்த்தம் என்ன?


 # காணாமல் போன கழுதை குட்டிச் சுவரைத் தாண்டிச் செல்லாது என்பதுதான். தற்காலத்தில் கழுதைகளும் குட்டிச் சுவரும் அரிதாகி விட்டன.

3. கீசாக்கா என் பக்கம் கேட்டதும்தான் இக்கேள்வி உதிச்சது.. கையும் களவுமாகப் பிடித்தல்.. இது எப்படி சரியாகும்? கையைப் பிடித்தல் அல்லது களவைப் பிடித்தல் எனில் ஓகே.. இது என்ன?


# களவாடிய பொருள் கையில் இருக்கும் போதே பிடிக்கப்படுவதுதான்.

& ஒருவேளை கையும் கிளவுசுமாக (Glouse) பிடித்தல் என்பதுதான் மருவி கையும் களவுமாகப் பிடித்தல் என்று ஆகிவிட்டதோ?     

4. சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருப்பீங்கதானே? ஒரே தடவையாக எத்தனை கிலோமீட்டர் அதிகமாக ஓடியிருக்கிறீங்க?.. நான் என் 15 ஆவது வயதில்.. ஒரு 20 கிலோ மீட்டர்வரை மாமாவுடன் ஓடியிருக்கிறேன் என் லேடீஸ் பைக்கில்... காலையில் தொடங்கி முடிக்கும்போது 2,3 மணியானதாக நினைவு.


 # ஒரு ஒப்புதல் வாக்குமூலம். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது.

& //சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருப்பீங்கதானே? // ஆஹா, நிறைய ஓடியிருக்கேன்! 

முதல் பகுதியிலிருந்து ஒரு extract: // 


அந்தப் பழுவேட்டரைய சைக்கிளுக்கு மருத்துவம் பார்த்து, கட்டுப் போட்டு, அதனை சொஸ்தப் படுத்திய மூன்றாவது அண்ணன் டாக்டர் கே ஜி.
   
நான்காவது அண்ணன் ஏற்கெனவே நாகை பஸ் ஸ்டாண்ட், பெருமாள் கோவில், மிஷன் ஹை ஸ்கூல், மாரியம்மன் கோவில் பக்கம் வருகின்ற பயணிகளையும், பக்தர்களையும், ஹவர் (Hour) சைக்கிளால் மோதி, அவர்களுக்குக் கடவுள் பயம் ஏற்படுத்தி, அவர்களிடம் அர்ச்சனை வாங்கி, அதை எல்லாம் ஒரு குலுக்கலில் மறந்து / மறைத்து, ஓரளவுக்கு  பாலன்ஸ் செய்யக் கற்றுக் கொண்டான். அவன் பிராக்டிஸ் செய்யும் பொழுதெல்லாம் கூடவே சைக்கிளைப் பிடித்துக் கொண்டு ஓடிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு. ஒருநாள் நாங்கள் இருவரும் இப்படிப் பயிற்சியில் (ஓட்டும் பயிற்சி, ஓடும் பயிற்சி) ரோலிங் மில் வேலைக்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஐம்பது வயது தொழிலாளி (ரோலிங் மில் தொழிலாளி) ஒருவரின் கால்களுக்கு நடுவே அவரறியாவண்ணம் பின்புறமாக சைக்கிளை விட்டு, சைக்கிளை அவரிடமிருந்து பிரித்தெடுக்கத் தெரியாமல், அதிலிருந்து குதித்து ஓடி வந்தான் அண்ணன்.

&1 முதல் பகுதி.
&2 இரண்டாம் பகுதி 
&3 மூன்றாம் பகுதி 
&4 நான்காம் பகுதி 

என்று நான்கு பகுதிகளாக நான் சைக்கிள் கற்றுக்கொண்ட அனுபவங்களை ஆறு வருடங்களுக்கு முன்பு பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொன்றாக க்ளிக் செய்து படித்து இரசிக்கவும்! 

=====================================================

இந்த வாரக் கேள்வி : 

மேலே எங்கேயோ கேட்டிருக்கேன். யாராவது அதைக் கண்டுபிடித்து பதில் சொல்லுங்க!

மீண்டும் சந்திப்போம்! 

=====================================================230 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்.

  இன்று புதன் என்பதே மறந்தே போச்!! ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா நான் தான் வந்திருக்கேன் போல!! ஹா ஹா ஹா யாரையும் காணும். புதன்னு எல்லாரும் மறந்துட்டாங்களோ....

   கீதா

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   //லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா நான் தான் வந்திருக்கேன் போல!! //

   Yessu....

   நீக்கு
  3. ஆஆஆ மீயும் கெள அண்ணன் எனில் ஏழியாப் போஸ்ட் போடுவார் என்பதை மறந்திட்டேனே:)..

   நீக்கு
  4. ஏழியா - ஹய்யோ ஹய்யோ புரியறதுக்கு நாழியாயிடுச்சு !

   நீக்கு
  5. ஆஆஆஆஆஆ கெள அண்ணனும் இப்போ கம்பி மேலே:)).. கவனமா நில்லுங்கோ கெள அண்ணன்.. நெல்லைத்தமிழனை இன்னும் காணம்:)) வந்து போஸ்ட் படிச்சாரோ தள்ளி விழுத்தினாலும் விழுத்திடுவார்ர்:))

   நீக்கு
 2. அதிரா கையும் களவுமாக என்பதற்கு ஆங்கிலத்தில் caught red-handed அப்படினு...கிட்டத்தட்ட...சொல்லலாம் என்று நினைக்கிறேன்..ஏனென்றால் இந்த ரெட் ஹேண்டட் என்பது முதலில் க்ரைம் கு சொல்லப்பட்டது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எப்பவுமே நேரான பதில் சொல்லமாட்டேன்! நகைச்சுவையாய நமஹா, நாகேஷாய நமஹா!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா அதான் தெரியுமே!!!!! அதுதான் புதனின் ஹைலைட் அண்ட் நாங்க எல்லாருமே மிக மிக ரசிப்பது!!!! உங்க நாகேஷாய நமஹாதான்!!!!!!

   இது கேள்வியா இருந்துச்சா அதான்...கூடவே பூஸாரைக் கலாய்ச்சு எழுதினது காப்பியாகாமா போயிருச்சு....இப்பத்தான் கவனிச்சேன்..ஹிஹிஹி...அது என்னனு இப்ப டக்குனு நினைவுக்கும் வரலை..அது ஃப்ளோல வந்துச்சு...

   கீதா

   நீக்கு
  3. சே சே சே தமிழ் தெரியாத ஆரோ மொழிபெயர்த்திருக்கினம்போல கீதா:) இதுக்குத்தான் டமில்ல டி எடுத்த அதிரா வேணுமென்கிறது:)..ரெட் எண்டால் களவு எண்டெல்லோ மொழிபெயர்த்திருக்கினம்:)... எப்பூடி என் கிட்னி?:)....

   என்னாது கெள அண்ணன் நமஹாவிலயோ பதில் சொல்லியிருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்:)... ஓ அவர் டமில்ல எf எல்லோ:).. ஹையோ சொன்னத்வர் அவரே:)

   நீக்கு
  4. வந்தாச்சா! வாங்க, வாங்க!

   நீக்கு
 3. நெல்லைத் தமிழன் எனக்கு இன்னொரு காரணத்தை தனியே சொல்கிறேன் என்று எழுதியிருந்தார். அவர் எனக்கு அப்படியே தனியாக எழுதிய காரணத்தை பார்த்து திடுக்கிட்டேன். ஆனாலும் அவர் அந்தப் பதிவரைப் பற்றி அப்படி ஒரு கருத்து எழுதியிருக்கக்கூடாது. சரி சரி போகட்டும்.//

  ஹா ஹா ஹா ஹா இதானே குசும்புன்றது!! குகு வின் குசும்போ!!! ஹா ஹா ஹா

  இன்னிக்கு பலருக்கும் சி பை படத்தின் ஜ ரா மாதிரி தலை வீங்கப் போகுது..எனக்கு இப்பவே தொடங்கிடுச்சு!! !!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பவும் என்னை அது திடுக்கிட வைத்துக்கொண்டிருக்கிறது!

   நீக்கு
  2. ஹையோ மீயும்தான் இப்பவும் திடுக்கிட்டபடியே இருக்கிறேனாக்கும்:)) கீதாட கொம்பியூட்டருக்குக் கட்டின நெ.தமிழனின் தாயத்தை வாங்கி, எனக்குக் கையில ஆராவது கட்டி விடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))

   நீக்கு
  3. அதிரா.. அதான் மந்திரம் சொல்லியிருக்கிறேனல்லோ.... அதுக்கு நேரமில்லைனா, ஒரு மஞ்சள் கயிறை எடுத்துக்குட்டு அந்த பார்க் பெஞ்சுல பூவுக்குப் பக்கத்துல வச்சிட்டு வந்திடுங்கோ. மூணு நாலு நாளைக்கு அப்புறம் ஆவி அதில் இறங்கியிருக்கும். அந்தக் கயிறை கம்ப்யூட்டரில் கட்டினால் போச்சு...

   நீக்கு
  4. ஹா ஹா ஹா கர்ர்ரெர்ர்ர்:) மீ இப்போ வெளில நிக்கிறேனாக்கும்:)

   நீக்கு
 4. பேட்டி அளிப்பவர் தமன்னா, பேட்டி காண்பவர் நெல்லைத்தமிழன் என்று எல்லாம் விளம்பரப்படுத்தலாம். //

  எங்கே எங்கே விளம்பரம்?!! காணலை...காண்பவர்னு போட்டுட்டு படமே இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!! போராட்டம் தொடங்கப்படும்.... போராட்டத்துக்கு எப்பவுமே தலைமை வகிக்கும் தலைவியைக் காணலை ..கூட்டம் சேரட்டும்....ஹா ஹா ஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் நெல்லைத்தமிழன் பார்த்துப்பாரு.

   நீக்கு
  2. பேசாம இனி புதன் கிழமைகளில், கேள்வி, பதில்கள் முழுவதும் கேஜிஜி சார் வேலைனும், இடுகைக்கு படம் சேர்க்கிறது என் வேலைனும் சொல்லப்போறேன். நல்ல வாய்ப்பு அமைந்தும் 'த' படத்தைப் போடாமல் விட்டுவிட்டார் (இது ஸ்ரீராம் ஆர்டரான்னு தெரியலை). அதுனால கேஜிஜி சாருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   உங்களுக்காக ஒரு நியூஸ். 'த' சில நாட்கள் முந்தைய பேட்டியில், இனி தமிழ்ப்படங்களில் மிக தாராளமாக நடிக்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார் (இனிமே பழம் பழுத்தா என்ன பழுக்காட்டா என்ன மொமெண்ட் ஹாஹா)

   நீக்கு
  3. இனிமே தமனாக்கா வயசுக்கு வந்தாலென்ன வராட்டிலென்ன மொமெண்ட்:) ஹா ஹா ஹா

   நீக்கு
 5. சுவாரஸ்யமான கேள்வி பதில்கள்.
  போன வாரம் படிக்காததால் ஏகாந்தன் என்ன எழுதினார் என்று தெரியவில்லை.
  நெல்லைத்தமிழன் சொன்ன பதிவர் யார்.
  மஹா சஸ்பென்ஸ்..
  இன்று அனைவருக்கும் நல்ல நாளாக இருக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிமா குட் ஈவ்னிங்க்..நல்லிரவு வணக்கமும்!!

   கீதா

   நீக்கு
  2. இன்று அனைவருக்கும் நல்ல நாளாக இருக்க வாழ்த்துகள்

   நீக்கு
 6. பிடித்த வேலை தூக்கம்// ஹா ஹா ஹா கௌ அண்ணா..அதுக்கு...பூஸார் தூங்கற ஒரு படம் போட்டிருந்தீங்கனு வையுங்க.....ஹிஹிஹி

  முதல் பதிலும் அசத்தல்...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. பிறகுதான் தெரிந்தது ஐந்தாறு மாதங்களுக்கு முன்பாக என்னிடமிருந்து பர்சை பிக் பாக்கெட் செய்த நல்ல மனம் கொண்ட திரு திருடர் ஒருவர், பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதிலிருந்த கடிதங்கள் புகைப்படங்கள், எல்லாவற்றையும் ஒரு தபால் பெட்டியில் போட்டுச் சென்றிருக்கிறார். தபால் அலுவலகத்தில் இருந்த நல்ல மனம் கொண்ட அலுவலகர்கள் பர்சில் இருந்த விலாசத்தை ஆராய்ந்து பர்சில் இருந்த மீதி எல்லாவற்றையும் எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்!

  அப்படி வந்த அந்த நடிகையின் படம் எது? அடுத்த வாரம் அந்தப் படத்தைப் போடுகிறேன்.//இது ஒரு நல்ல செய்தி. எல்லோரும் சைக்கிளை
  ஓட்டுவார்கள்.
  யார் ஓடுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் என்ன செய்வது? அதிராவின் கேள்வியில் ஒடுவதுதானே இருக்கு!

   நீக்கு
  2. கௌ அண்ணே அப்பூடிச் சொல்லப்டாது.. கேள்வி கேட்டவங்க தமிழ்ல டி ஆக்கும்!!!!!!!!!!!! கம்பபாரதி கவிதாயினியும் கூட!!!!!

   கீதா

   நீக்கு
  3. அத்தோடு இனி நல்லதங்காளும் கூட:)..

   நீக்கு
 8. ஏஞ்சலின் 3 வது கேள்விக்கான பதில்கள் அருமை அதுவும் கடைசி பதில் செம...சந்தோஷம் தரும் செயல் ஆனால் அது மற்றவர்களுக்குப் பாதிப்பு இல்லாமல்...சூப்பர் !!!!

  மிகவும் ரசித்த பதில்.

  கீதா

  பதிலளிநீக்கு
 9. & அவரைப் பார்த்துப் புன்னகை புரிவேன். A smile costs nothing but wins many things. //

  சூப்பர் யெஸ் யெஸ் யெஸ்...

  6, 7 க்கான பதில்களும் அட்டகாசம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 10. & ஒருவேளை கையும் கிளவுசுமாக (Glouse) பிடித்தல் என்பதுதான் மருவி கையும் களவுமாகப் பிடித்தல் என்று ஆகிவிட்டதோ? //

  இந்தக் கேள்விதானோ?!!! நீங்க மேலே எங்கேயோ இல்லை இல்ல அதிராவுக்கான கேள்விக்குக் கொடுத்த பதிலே கேள்வியாக?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கடைசியைப் பார்க்காமலேயே அதுக்கு ஒரு பதில் - பின்னூட்டத்தில் - மேலே எங்கேயோ நான் சொல்லிருக்கேனே ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. கேள்விக்குறிகளைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்! நான் கேள்விப்பட்டவரையிலும் குறியீடு இல்லாத கேள்விகள்தான் சக்தி வாய்ந்தவை!

   நீக்கு
  3. ஓ ஆமாம்ல இருங்க இருங்க தேடிக் கண்டுபிடிக்கிறேன்...கேள்விதான் கேட்கரதில்லை அட்லீஸ்ட் கேள்விய தேடியாவது கண்டு பிடிக்கப் பார்க்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. அன்புடன் அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 13. சைக்கிள் புராணம் அருமை....
  அருமை..

  பதிலளிநீக்கு
 14. சைக்கிள் புராணம் படிச்சுட்டு வரேன் இப்பத்தான் கணினி மிண்டும் தூங்கி எழுந்தது...

  கீதா

  பதிலளிநீக்கு
 15. தாத்தா குடை// முதல் பதில் செம!! தான் தாத்தா இல்லை என்பதை மறைமுகமாக....சிரித்துவிட்டேன்... கௌ அண்ணா பதிலும் அதே சிரிப்பு...

  இப்போதும் தாத்தாக் குடை இருக்கு....காசியாத்திரைக்கு மட்டும்!!! ஹா ஹா ஹா

  ஆனா ஸ்ரீராம் அதைக் கொண்டு போகலை!!!!

  ஆனால் உண்மையிலேயே தாத்தா குடைதான் மழைக்கு மிக மிக உறுதியாக இருக்கிறது. நாம் நனையாமலும் போக முடிகிறது. எங்கள் வீட்டில் இருக்கிறது....ஆனால் அது இரவல் இல்லையாக்கும் கௌ அண்ணா.....

  கீதா

  பதிலளிநீக்கு
 16. எங்க வீட்ல் தான் தாத்தா குடை அப்போதில் இருந்தே இருக்கிறதே!...

  கண்டும் காணாத மாதிரி போகும் கடங்காரன்களை கழுத்தில்/ காலரில் போட்டு இழுப்பதற்கு வசதியானது அல்லவோ தாத்தா குடை!...

  பதிலளிநீக்கு
 17. குடையை உருவாக்கிய முதல் மனிதர் நம் நாட்டைச் சேர்ந்தவர் என்பதில் பெருமை தானே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது தாழங்குடை அன்றோ? வாமன அவதாரத்தின் கையில் இருக்கும் குடையைத்தானே சொல்கிறீர்கள்?

   நீக்கு
 18. தாத்தாக்கள் குடை என்று இருக்கும் போது
  பாட்டி குடை என்ற ஒன்று இல்லையே..

  ஏன்?...

  ஏனென்றால்

  பாட்டியே குடை..
  பாட்டியே கொடை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா ! கவிதை, கவிதை.
   ஆனால் பாருங்க - தாத்தாக்கள் குடை எடுத்துக்கொண்டு வெளியில் சுற்றி வீடு திரும்பினால், பாட்டிகள் அவர்களைக் கேள்விகளாகக் கேட்டு குடை, குடை என்று குடைந்துவிடுவார்களே!

   நீக்கு
 19. மேலும் நினைவில் கொள்வதற்கு...

  தாத்தா மூலிகை பறித்து வருவதற்குள்
  பாடி அஞ்சறைப் பெட்டியை ஆராய்ந்து
  தலைவலிக்குத் தலைவலியைக் கொடுத்து விடுவதால்...

  அதனால் தானே
  பாட்டி வைத்தியம் என்று பேரானது...

  பதிலளிநீக்கு
 20. தாத்தா வைத்தியம் என்று பேர் வைப்பதற்கு தாத்தாக்கள் போர்க்கொடி உயர்த்தவில்லையே ஏன்!?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி எல்லாம் உயர்த்தினால், பாட்டிகளுக்குத் தெரியாதா அவர்களை எப்படி மடக்கவேண்டும் என்று!

   நீக்கு
 21. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

  //ஏஜிங் க்ரேஸ்ஃபுலி என்கிறார்களே, மற்ற பருவங்களுக்கு அந்த க்ரேஸ் அவசியமில்லையா?

  # பால பருவத்தில் சமர்த்தாகவும், இளமையில் துடிப்பாகவும், நடுவயதில் பொறுப்பாகவும் முதுமையில் நிதானமாகவும் இருப்பதுதான் ஏஜிங் கிரேஸ்ஃபுலி. ஏஜிங் என்றால் எழுபதுக்கு மேல் என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் ?//
  நல்ல கேள்வி, நல்ல பதில்.


  ஏஞ்சலின் அனைத்து கேள்விகளும் அதற்கு பதில்களும் நன்றாக இருக்கிறது.
  தாத்தா குடை இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது , சில் பெரியவர்கள் அதை கைதடியாகவும் பயன்படுத்திக் கொண்டு போகிறார்கள்.
  அதுவும் கேரளாவில் அதிகம்.

  பதிலளிநீக்கு
 22. அதிராவின் கேள்விகளும் அதற்கு பதில்களும் நன்றாக இருக்கிறது.

  //அந்தப் பழுவேட்டரைய சைக்கிளுக்கு மருத்துவம் பார்த்து, கட்டுப் போட்டு, அதனை சொஸ்தப் படுத்திய மூன்றாவது அண்ணன் டாக்டர் கே ஜி.//
  இந்த பதிலை ரசித்தேன்.
  பழுவேட்டரையரை போல அந்த சைக்கிளை ஓட்டியவருக்கு விழுப்புண்கள் ஏற்படவில்லை போலும் சைக்கிளுக்கு தான் மருத்துவம் பார்க்க வேண்டிய வயது, அடி போலும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒட்டியவர்களுக்கும் ஊமைக்காயங்கள் உண்டு!

   நீக்கு
  2. கோமதிக்கா நீங்க அங்கயும் கருத்து போட்டுருக்கீங்க....
   பழுவேட்டரையர் சைக்கிளுக்கு

   கீதா

   நீக்கு
 23. கேள்வி பதில்களை வாசித்தேன்...
  கேள்வி என்று ஒன்று இருந்தால் பதில் என்ற விடை இருந்துதானே ஆக வேண்டும்...?

  (இவன் பூந்தோட்ட கவிதைக்காரன்)

  பதிலளிநீக்கு
 24. பானுக்காவுக்கு இணையம் வேலை செய்யவில்லை. டேட்டா நெட் வரவில்லை என்பதால் பதிவு வாசிக்க வரமுடியவில்லை என்று தகவல்.

  புதன் இன்று செம இன்ட்ரெஸ்டிங்கா இருக்குமே!! இப்படி வரமுடியாம இருக்கிறதே என்று...அக்காக்கு ஃபீலிங்க்!!

  இங்கும் நெட் காலையில் வர படுத்தியது. இப்போதுதான் ஒழுங்காக வருகிறது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெட்டால் கட்டுண்டோம், பொறுத்திருப்போம்,
   காலம் மாறும், கருத்துரைப்போம்!

   நீக்கு
 25. கௌ அண்ணா உங்க சைக்கிள் கதை செம ஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடில...

  ரெக்கை கட்டி பறக்குதைய்யா இந்த சின்ன சைக்கிளு நு பறந்தே சைக்கிள ஓடியிருக்கீங்க !!!!!!! ஹா ஹா ஹா

  அதிரா கேட்டது சரிதான்னே தோணுது நீங்க எல்லாம் சைக்கிள ஓட்டவே இல்லை ....ஓடிதான் இருக்கீங்க !!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 26. 7 படில மஹாதேவன் ஏறி வரும் போது அதுக்குள்ள உங்க 4 வது அண்ணனுக்கு ஒரு ஸ்கிட் தோணியிருக்குமே....

  காரை பேராம என்ன செய்யும் நீங்க அடிச்ச லூட்டிகள்ல...ஹா ஹா
  உங்க அண்ணா என்ன ஸ்கிட் போட்டார் இதுக்குனு பார்த்துவிட்டு வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 27. அந்தக் குறையை, நான் வேலை பார்க்க ஆரம்பித்த பன்னிரண்டு வருடங்கள் கழித்து, ஒருநாள், மதுரைக்குச் சென்றிருந்த பொழுது, என்னுடைய அக்காவின் பையன்கள் இருவரிடமும் பேச்சு வாக்கில் சொன்னேன்.

  அவ்வளவுதான்! அக்காவின் பையன்கள் இருவரும் எனக்கு சைக்கிள் ஏறு படலம், இறங்கு படலம் இரண்டையும், அன்று மாலையே - சொல்லிக் கொடுத்துவிடுகிறோம் என்று உறுதியளித்தனர்.

  இந்த உறுதிமொழிக்குப் பின்னால் ஒரு பெரிய சதித் திட்டமே அவர்கள் இருவரும் தீட்டியிருக்கின்றார்கள் என்பது எனக்கு அப்போது புரியவில்லை! //

  ஹா ஹா ஹா ஹா ஹா இந்த இருவரும் ஆருனு எங்களுக்குத் தெரியுமே......கௌ அண்ணா பாவம் அவங்க ரொம்பவே நல்லவெங்க!!!!!!ரெண்டு பேரும் உங்களுக்கு சைக்கிள் ஜதி சொல்லித்தர ப்ளானாக்கும் ஆதைப் போயி சதி அதுன்னுகிட்டு.!!!!!!!!!!!!!!!!!!!

  ஸ்ரீராம் அப்படித்தானே!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ! இரகசியம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது!

   நீக்கு
 28. ஸ்ரீராம் பத்தி நிறைய பிட்டு கிடைக்குதே...பொறுக்கி எடுத்து பூஸாருக்கும் ரகசியமா கொடுக்கிறேன்.!!!!!!!!

  //அந்த நாட்களில், ரெண்டு பசங்களும் தனித்தனியா இருந்தா ரத்தினங்கள். ஒண்ணா சேர்ந்தா அராஜகக் கொழுந்துகள். இவர்கள் இருவரிடமும்தான் நான் முப்பது வருடங்களுக்கு முன்பு, வகையாக மாட்டிக் கொண்டேன். //

  ஸ்ரீராம் நீங்க எங்க ஒளிஞ்சாலும் நாங்க கண்டுபிடிச்சுருவோமாக்கும்!!!
  கௌ அண்ணா உங்களால ஸ்ரீராம கூட பேய்க்காட்ட முடியலையா!!!! வெரி வெரி சாட்

  கீதா

  பதிலளிநீக்கு
 29. "என்னடா இது? கேரியர் எங்கேடா?"

  "மாமா அவர் சைக்கிளில் எல்லாம் எந்த மானமுள்ள மடையனும் கேரியர் விட்டு வைக்கமாட்டான்."

  "ஏன்?"

  "அதுவா, கேரியர் இருந்தா பசங்க சிட்டுங்களை ஏத்திகிட்டு குஷாலா ரவுண்டு அடிப்பானுங்க என்று அந்த மா. மடையர்களுக்குத் தெரியும்." //

  ஹையோ சிரிச்சு முடிலைப்பா.....

  கௌ அண்ணா சின்னவர்கிட்ட போய் சைக்கிள் எடுத்து வரச் சொல்லியிருக்கீங்களே!! மாமாவுக்கு கேரியர் உள்ள சைக்கிள் எடுத்து வந்தா எங்கேயாச்சும் மாமா கேரியர்ல உக்காந்துட்டு, சீட்டுல சிட்டுங்க யாரையாவது உக்கார வைச்சு ஓட்டிட்டுப் போய்ட்டா...அதுவும் சைக்கிள் தேவதை வெள்ளை ரெக்கை விரிச்சு பறக்கறமாதிரி.!!!!!!!!!!!!!!!! பாருங்க பொறுப்பான மருமகன் ஸ்ரீராம்!!!! ஹா ஹா ஹா நினைச்சுப் பார்த்து சிரிச்சுட்டுருக்கேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 30. சைக்கிளோட, வீட்டைவிட்டு ஓடியிருக்கீங்களா என்றிருக்கவேண்டுமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா இப்படிப் போட்டுத் தாக்குகிறாரே!

   நீக்கு
  2. ஆஹா கௌ அண்ணா இப்ப ஏகாந்தன் அண்ணாவோட கருத்தைப் பார்த்ததும் தான் தோணுது ஒரு வேளை தமிழ்ல டி வாங்கினவங்க அந்த அர்த்தத்துலதான் கேட்டிருப்பாய்ங்களோ???!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 31. சுவாரஸ்யமாக இருந்தது நன்றி

  பதிலளிநீக்கு
 32. சின்னவன் என்னிடம், ஒரு கேள்வி கேட்டான்.

  "மாமா உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்?"

  "நாலு."

  "போன மாதம் உங்க தம்பி வந்திருந்தார். அவரிடம், 'உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்?' என்று கேட்டேன். அவர் 'ஐந்து' என்றார் தெரியுமா?"

  "அப்படியா? - என்னுடைய அம்மாவுக்கு எப்பவும் ஓர வஞ்சனைதான். கோகுலாஷ்டமி பட்சணங்கள் கூட, எனக்குக் கொடுப்பதைவிட என் தம்பிக்குத்தான் அதிகம் கொடுப்பா. எனக்கு நாலு அண்ணன்கள் மட்டும் கொடுத்து, தம்பிக்கு ஐந்து அண்ணன்களைக் கொடுத்திருக்கா. அம்மாவிடம் இது பற்றிக் கேட்கிறேன்." //

  ஹையோ சிரிச்சு முடில இதுக்கும்......சின்னவரின் கேள்வி ஹா ஹா ஹா என்றால் உங்கள் பதில் ஹையோ .....செம....

  அண்ணா குடும்பமே மருத்துவப்பல்கலைக்கழகம் தான்...முழங்காலோ மை சின்....முழங்கையோ மைசின்!!! ஹா ஹா ஹா செம...

  நமக்கு நாலு நல்ல மருத்துவர்கள் கிடைக்காமல் போனாங்களே!!!!!!...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயோ நீங்க என்னை ஒரு மருத்துவரிடம் மாட்டிவிட்டுவிடுவீர்கள் போலிருக்கே!

   நீக்கு
 33. // (B)பேண்ட்(t) என்றால் ஹிந்தியில் "சந்திப்பு"// ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 34. //என்னதான் நமக்கு பிடித்த வேலை என்றாலும், சில சமயம் அதை செய்யக் கூட சலிப்பு வருகிறதே ஏன்?

  # பிடித்த வேலையும் சலிப்புத் தட்டுவது உடல் களைப்பு, மன உளைச்சல் காரணமாகத்தான் இருக்க முடியும்.//இப்போ உடல் களைப்பும் மன உளைச்சலுமாத் தான் இருக்கு! கணினியில் உட்கார்ந்து கொண்டு பொழுதைக் கழிப்பது பிடித்த வேலை! ஆனால் அதைச் செய்ய முடியவில்லை இப்போ ஓரிரு வாரங்களாக! வலக்கால் வலி துளைத்தெடுக்கிறது. உடகார்ந்தால் காலை ஊன்ற முடியவில்லை. முழங்காலில் இருந்து கணுவரை வலி துடிக்கிறது. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு வலது கால், எனக்கு இடது கால் வலி. நானும் வலியை விரட்ட நிறைய முயற்சிகள் எடுத்து கொண்டு இருக்கிறேன்.

   நீக்கு
  2. கோமதிக்கா இன்னும் உங்கள் கால் வலி சரியாகலையா..ஆஆஆஆஆஆ..

   கீதாக்கா அண்ட் கோமதிக்கா டேக் கேர். உங்கள் வலி சரியாகப் பிரார்த்தனைகள்..

   கீதா

   நீக்கு
 35. கேஜிஜி சைகிள் ஓட்டிய படலம் எல்லாம் முன்னாடியே படிச்சுச் சிரிப்பாய்ச் சிரிச்சாச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறுபடியும் சிரிச்சுடுங்க. வலி குறையும்.

   நீக்கு
 36. இன்னிக்கு தி/கீதா, கௌதமன், துரை மொத்தக் குத்தகையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மத்தவங்க வரும் வரை எங்கள் கலை நிகழ்ச்சிகள்தான்!

   நீக்கு
 37. //அப்படி வந்த அந்த நடிகையின் படம் எது? அடுத்த வாரம் அந்தப் படத்தைப் போடுகிறேன்.// வசுந்தராவோ, டி.ஆர்.ராஜகுமாரியோ, பி. கண்ணாம்பாவோ இருக்கும். :P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ, கடவுள் படமா? எந்தக் கடவுள்? அல்லது கடவுளாக நடிச்ச ஜிவாஜி?????????

   நீக்கு
 38. //இந்த வாரக் கேள்வி :

  மேலே எங்கேயோ கேட்டிருக்கேன். யாராவது அதைக் கண்டுபிடித்து பதில் சொல்லுங்க!// ஹாஹா, அதான் அந்த நடிகை யார்னு கேட்டிருக்கீங்களே! அதான் இந்த வாரக் கேள்வி! விடை சொல்லிட்டேனே! :))))) இங்கே வந்ததும் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகி இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் தொடர்ந்து இருந்தால் அநேகமாச் சரியாயிடும்! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. yes. I am getting better now. :))) Thank You for inviting me! _/\_

   நீக்கு
  2. ஆஆஆஅ கீதாக்கா நானும் இந்தக் கேள்விய எழுத வந்தேன்..அப்புறம் கௌ அண்ணா ? இது இருந்தா கேள்வியா அப்படினு கொக்கி போட்டு (இதுவும் ஒரு கொக்கி போலத்தானே இருக்கூஊ)!!!!!!!! திருப்பி விட்டுட்டாரு!!! ஹூம் இப்ப மீ தேடுஃபையிங்க்...

   கீதா

   நீக்கு
 39. ஹா ஹா ஹா இன்Tஉ எனக்கு லேசா ஒரு டவுட் வரவே.. செக் பண்ணினேன்:).. இந்தக் கேள்வி ஏற்கனவே நான் கேட்டு, இந்த சைக்கிள் பற்றிய லிங்கும் நீங்க ஓல்ரெடி தந்து:)... மீயும் கொமெண்ட் போட்டிருக்கிறேன் ஹா ஹா ஹா இது ரெண்டாவது ரவுண்ட்டூஊஉ:)...
  காசா பணமா வாற வருடமும் இதே கேள்வி கேக்கிறேன் மறக்காமல்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பவும் லிங்க் தருவேன்!

   நீக்கு
  2. அதிரா ஆமாம் நீங்க கௌ அண்ணாவை முன்னாடியே ஓட விட்டுட்டீங்கல்ல!!! நினைவு வந்துச்சு.. அதூம் சைக்கிளோடு!!!!!! ஆஆ கௌ அண்ணா பாவம் சிக்கிக்கிட்டார்..மூணாவது ஓட்டமா??!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.இந்த சைக்கிள் அவர விடவே விடது போல அன்று மருமகன்களிடம் இன்று பூஸாரிடம்!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 40. //பல்லாயிரக்கணக்கான வாசகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! //

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).

  //நெல்லைத் தமிழன் எனக்கு இன்னொரு காரணத்தை தனியே சொல்கிறேன் என்று எழுதியிருந்தார். அவர் எனக்கு அப்படியே தனியாக எழுதிய காரணத்தை பார்த்து திடுக்கிட்டேன். ஆனாலும் அவர் அந்தப் பதிவரைப் பற்றி அப்படி ஒரு கருத்து எழுதியிருக்கக்கூடாது. சரி சரி போகட்டும்.///

  ஆமா ஆமா அவர் எப்பூடி அப்படி எழுதலாம்?:).. மீயும் பார்த்ததும் வேர்த்து விறுவிறுத்துப் போயிட்டன் தெரியுமோ:))... சரி போகட்டும் நெல்லைத்தமிழந்தானே:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! உங்களுக்கும் அனுப்பிட்டாரா ? ஆனாலும் அந்தப் பதிவர் பாவம் இல்லியா!

   நீக்கு
  2. ரெம்ம்ம்ம்ம்பப் பாவம் கெள அண்ணன்..:)), அதிலும் நம்பால் பதிவர் என்பதால எனக்கு நெஞ்சு நடுங்குது, கை துடிக்குது, கால் பதறுதே:))

   நீக்கு
  3. ஹையோ உங்களுக்கு அனுப்பினதை cc போட்டு எனக்கும் அனுப்பிட்டார் :) அதிராவை எவ்ளோ அடிச்சாலும் நான் வாயே திறக்க மாட்டேன் :)

   நீக்கு
  4. //அதிலும் நம்பால் பதிவர் என்பதால எனக்கு நெஞ்சு நடுங்குது, கை துடிக்குது, கால் பதறுதே:))// you mean from cat family :) ??

   நீக்கு
  5. அட இது நல்லா இருக்கே!

   நீக்கு
  6. ஹையோ நான் இம்புட்டு நேரம் கட்டிக் காத்த ரகசியத்தை ஏம்பா ரெண்டு பேரும் இப்பூடி போட்டு உடைச்சுட்டீங்களே!!!!! இப்ப எனக்கும் நெஞ்சு துடிக்குது.......கை நடுங்குது....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஆஹா ஏஞ்சல் நீங்க வேற!!! கேட் ஃபேமிலியானு ....என்னத்த சொல்வேன் நான்....

   கீதா

   நீக்கு
  7. ஆக, நெல்லைத்தமிழன் 'ரகசியம் ' என்று குறிப்பிட்டு, நம் எல்லோருக்குமே அனுப்பிவிட்டார் போலிருக்கு! அந்தப் பதிவருக்கு மட்டும் அனுப்பியிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்!

   நீக்கு
 41. ///ஆனால் கேள்வி பதில் என்று வந்துவிட்டால் 'காண்பது' எல்லாம் கிடையாது! கேட்பது மட்டுமே! படிப்பது மட்டுமே!
  ///

  சிம்பிளா சொல்லட்டோ.. பேட்டி எனில் மினிமம் இருவர் தேவை... கேள்விபதில் எனில் ஒருவர் போதும் கேள்வி கேட்க...

  எனக்கிப்போ புரிஞ்சுபோச்ச்ச்:))...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு இப்போ புரிஞ்சதும் போச்சு!

   நீக்கு
  2. ஆஆஆஆஆஆஆஆ என் நாரதர் வேலை அப்போ சக்ஸஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா

   நீக்கு
 42. ஆஆஆஆஆஆஆஆ மீ தான்ன் 100 ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ பரிசு எனக்கே:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் கிடையாது. இருநூறுக்குதான் இப்பல்லாம் பரிசு. போயிட்டு அப்புறமா வாங்க!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா உசுப்பேத்தி உசுப்பேத்தியே 200 ஐயும் ஈசியாத் தொடப் பண்ணிடுவீங்க:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அநேகமா அஞ்சு வருவா 200 க்கு:)) ஏனெண்டா அவ ரெம்ம்ம்ம்ப ஸ்லோ:)) பாருங்கோஒ இன்னும் ஓடி வந்து சேரல இங்கின:))

   நீக்கு
  3. கர்ர்ர்ர் :) வெளியே புறப்படமுன்னே நாலு கமெண்ட் போட நின்சிசி பறந்து வந்தேன் தெரியுமோ

   நீக்கு
 43. //என்னதான் நமக்கு பிடித்த வேலை என்றாலும், சில சமயம் அதை செய்யக் கூட சலிப்பு வருகிறதே ஏன்?//

  அப்போ அந்நேரம் அது “பிடித்தவேலை” எனும் லிஸ்ட்டில் இருந்திருக்காது ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
 44. //& எப்படி இருந்தாலும் ஏஜ் ஏறிகிட்டுதான் போகப்போகுது. அதுல என்ன graceful !
  //

  இல்ல கெள அண்ணன்:), அதிராவைபோலவும் என்றென்றும் பதினாறு போல இருப்போரும் உண்டெல்லே?:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கதான் சொல்லிக்கிறீங்க ... நான் நம்பமாட்டேன்.

   நீக்கு
  2. அப்போ ஒருக்கால் தேம்ஸ் கரைக்கு வாங்கோ:))

   நீக்கு
  3. அய்! அப்பிடியே புடிச்சுத் தள்ளிடுவீங்க ! எனக்கா தெரியாது?

   நீக்கு
  4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அஞ்சு எல்லோரையும் அலேட் பண்ணி விட்டிருக்கிறா:)), அதனால எல்லோரும் வலு உஷாராகவே இருக்கினம்:))

   நீக்கு
  5. ஹப்பா அதிராவைப் போல என்றென்றும் 16னு சொன்னீங்க இல்லனா நானும் கீதாக்காவும் அக்காக்கு கால் வலியா இருந்தா கூட போராட்டம் போட்டுருவோம்...நாங்க இன்னும் 16 கூட எட்டலையாக்கும் பூஸார்!!!!!!!!!!!!!!!

   கௌ அண்ணா தேம்ஸ் பக்கம் மட்டும் எட்டிக் கூடப் பார்த்துடாதீங்க.....பூஸார் விருந்தே வைக்கிறேன்னு சொன்னாலும்!!..ஹா ஹா ஹா.

   கீதா

   நீக்கு
  6. ஆமாம், ஆமாம்! அதிராவை - (அப்பாவி என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்பவரை) நம்பக் கூடாது!

   நீக்கு
 45. //1, தவறுகளில் இருந்து திருத்தி க்கொள்ள வேண்டும் என்கிறார்கள் அப்போ தவறு செய்ய பயப்பட வேண்டுமா வேண்டாமா ?///

  கர்ர்ர்ர்ர்:)) அஞ்சுவுக்கு என்னமோ ஆச்சு:))... தவறு என்று தெரிந்துகொண்டே நாம் பண்ணுவோமோ? இல்லைத்தானே.. ஒரு அலுவலை கெட்டித்தனமாக, நல்லவிசயம் பண்றேன் பேர்வழி:) எனப் பண்ணி முடிச்சபின், இன்னொருவர் நம்மிடம் வந்து... இல்லை நீ தப்புப் பண்ணிட்டாய் எனச் சுட்டிக் காட்டியபின்புதானே தெரியுது நாம் செய்தது தவறு என:)).. அப்போ அதை மீண்டும் செய்யக்கூடாதாம்:))..

  அதாவது அஞ்சு, .. அதிரா உங்களைக் காசிக்குக் கூப்பிட்டால்.. நான் வரமாட்டேன் எனச் சொல்றீங்களெல்லோ:)) அது தவறு:).,. நெகடிவ்வாப் பேசக்கூடாதாம்[நெல்லைத்தமிழன் சொல்லியிருகிறார்:)] அதனால இனிமேல் தவறைத் திருத்திக்கொண்டு.., ஓகே அதிரா நான் வருகிறேன் ரிக்கெட் போடுங்கோ எனச் சொல்லோணும் ஓகே?:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவங்களே சொல்லட்டும். நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை!

   நீக்கு
  2. அஞ்சு என்ற திருநாமத்தை உடையவர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் ..அவரை ஓடிஏ வைத்த பெருமை எருமையெல்லாம் அப்பாவியை சாரும்

   நீக்கு
  3. ஆஆஆ அஞ்சூஊஉ இப்போ எதுக்கு ஓடுறீங்க:)... வாங்கோ காசியில போய் கடற்கரையில ஓடிப்பிடிச்சு வெளாடலாம்ம்ம்ம்:)..
   ஶ்ரீராம் காசிக்கடற்படி போட்டோ எடுத்தனீங்களோ? ((பதி ல் பின்பு தந்தால் போதும் இப்போ வேண்டாம்) எனக்கு சத்தியமாக தெரியாது நீங்க காசிக்குத்தான் போறீங்களென, தெரிஞ்சிருந்தா ஒரு படியில சோக் ஆல என் பெயர் எழுதிட்டு வரச் சொல்லியிருப்பேன்ன்...
   எல்லோரும் ஜோக் பண்றீங்க என நினைச்சிருந்தேன்:)..

   நீக்கு
 46. //2, இப்படிப்பட்ட நட்பு வேண்டும் என்று நினைத்ததுண்டா ? அப்படிப்பட்ட ஒரு நட்பாக நீங்கள் பிறருக்கு இருந்ததுண்டா ?///

  இப்படிப்பட்ட கணவர் வேண்டுமென நினைச்சதுண்டு ஹா ஹா ஹா...

  ஆனா நட்பில் எப்பவும் அப்படி நினைச்சதில்லை நான், ஏனெனில் மனதுக்குப் பிடிச்சால் நட்பாகிடுவோம் இல்லை எனில் விலத்திடுவோம்.. அதுபோல, நான் எப்பவும் நானாகவே இருக்க விரும்புவேன்.. என்னைப் பார்த்துப் பிடிச்சுக்கொண்டால் நட்பாக ஏற்றுக் கொள்வார்கள், பிடிக்கவில்லை எனில் ஒதுங்குவார்கள்..

  இன்னொருவர் விரும்புவதற்காக என்னை மாத்தினால்,.. அது நீடிக்காது, ஆனா என்னில் உள்ள ஒரு பழக்கம்.. எனக்கு ஒருவரைப் பிடித்து விட்டதெனில்.. அவரோடு பழகப் பழக நாளடைவில்.. அவரைப்போல நானும் கொஞ்சம் மாறுவேன் என்னை அறியாமல்...:)

  பதிலளிநீக்கு
 47. //7, வாழ்கிறோம் என்பதற்கும் இருக்கிறோம் என்பதற்குமான வித்தியாசம் என்ன ?///

  https://gokisha.blogspot.com/2012/01/blog-post_29.html

  https://gokisha.blogspot.com/2012/06/blog-post_12.html

  //வாழ்கிறோம் என்பதற்கும் இருக்கிறோம் என்பதற்குமான வித்தியாசம் ///
  இதே வசனம் எழுதி ஒரு போஸ்ட் முன்பு போட்டிருக்கிறேன், ஆனா தேடினேன் கிடைக்குதில்லை கர்:))

  பதிலளிநீக்கு
 48. //
  11,கடிதம் எழுதி தபாலில் சேர்க்க மறந்து போனதுண்டா ?//

  சின்ன வயதில் நான் கடிதம் எழுதி எழுதி அப்பாவிடம் கொடுக்க, அவர் அனைத்தையும் வாங்கி வாங்கிக் கொண்டுபோய் தன் ஒபிஸ் ட்ரோயரில் வைத்துவிட்டு மறந்து போயிட்டார், பின்னர் நான் கடிதம் போட்டவர்.. ஏன் அதிரா பதில் போடவில்லை எனக் கேட்க, நான் அப்பாவிடம் விசாரிக்க.. அவர் பதறி அடிச்சு ஓடி அனைத்துக் கடிதத்தையும் ஒரு என்வலப்பில வச்சு போஸ்ட் பண்ணிய சம்பவம் நடந்திருக்குது:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா எனக்கு நினைவு இருக்கு பதிவில் சொன்னிங்க மியாவ்

   நீக்கு
  2. அதிரா நீங்க இதைப் பற்றி பதிவில் சொல்லியிருந்தீங்களே! நன்றாக நினைவிருக்கு!

   ஏஞ்சல் போல எனக்கும் கொஞ்சம் மெமரி வந்துருச்சு!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. அந்த லிங்கையும் இங்கு குடுக்க நினைச்சு பின்பு அப்படி அனைத்துக்கும் லிங் குடுப்பது அழகல்ல என விட்டுவிட்டேன்... மீ ரொம்ப டீசண்ட் டிஉப்பிளினான பொண்ணு:) தெரியுமோ:) ஹா ஹா ஹா:)

   நீக்கு
  4. //பின்னர் நான் கடிதம் போட்டவர்.. ஏன் அதிரா பதில் போடவில்லை எனக் கேட்க,// - அது ஒரு அண்ணன் இல்லையோ.. நீங்கள் ஏற்கனவே அதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கீங்க. நாங்க 'மசாலா' கிடைக்குமான்னு கூர்ந்து படித்தால் 'சப்புனு' ஆயிடுச்சே... அந்த இடுகையைத்தானே சொல்றீங்க? ஹாஹா

   நீக்கு
 49. //# பாடல் = எழுதப்பட்ட வரிகள். படித்தும் ரசிக்கலாம். பாடியும் பார்க்கலாம்.

  பாட்டு = இசைக்கப்படும் வரிகள். கேட்டு மகிழலாம். பொருளையும் எண்ணி வியக்கலாம்.//

  ஏன் இதுக்கு ஒரு பதில்தான் வந்திருக்குது:)).. கெள அண்ணனுக்குப் பதில் ஏதும் வரவில்லை? ஹா ஹா ஹா:)).

  இப்போதான் புரிந்தது வித்தியாசம், ஏனெனில் இலங்கையில் நாங்கள் பாட்டு எனத்தான் சொல்லுவோம்ம், அதைத்தான் நானும் இங்கு பாட்டு என எழுதுவேன், ஆனா இங்கு எல்லொரும் பாடல்.. மனதுக்கு பிடித்த பாடல், இனிமையான பாடல் என்பதைப்பார்த்து, நான் பாட்டு என்பது தப்போ அல்லது இரண்டும் ஒன்றோ எனக் குழம்பிட்டேன்ன்.. இப்ப்போதான் புரியுது அதிராவின் டமில்தான் கரீட்டூஊஊஊஊஊஉ:))..

  நெல்லைத்தமிழன் புரொபிஷர் மேடைக்கு வரவும் பிளீஸ்ஸ்ஸ்:))

  பதிலளிநீக்கு
 50. //காணாமல் போன கழுதை குட்டிச் சுவரைத் தாண்டிச் செல்லாது என்பதுதான்.//

  ஓஓ ஆஆஆஆஆ இதுதான் புறுணமோ:).. ஹா ஹா ஹா நன்றி நன்றி...

  பதிலளிநீக்கு
 51. //சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருப்பீங்கதானே? // ஆஹா, நிறைய ஓடியிருக்கேன்! ///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  அனுபவங்கள் அருமை.

  கடவுள் புண்ணியத்தில் நம்ப மாட்டீங்கள், நான் சின்ன வயசிலிருந்தே சைக்கிள் பழகினேன்ன்.. ஒரு நாள் கூட விழுந்ததில்லை, ஒரு காயம் இல்ல்லை, அதேபோல் ஸ்கூட்டரும்.. ஒருநாளும் விழுந்ததில்லை...:)_()_

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெய்வப்பிறவி நீங்க!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா இல்லையே மீ பூ[லூ]ஸுப் பிறவி:)) ஹா ஹா ஹா

   நீக்கு
  3. //அதேபோல் ஸ்கூட்டரும்.. ஒருநாளும் விழுந்ததில்லை...:// - பின்ன அதிராவின் திறமையைக் கேட்கவா வேணும்... அதிரா... நீங்க சைக்கிள் ஓட்டி, ஸ்கூட்டர் ஓட்டி, எதிர்லவந்த எத்தனை பேரைச் சாய்ச்சீங்கன்னு அப்புறமா எனக்குச் சொல்லுங்க. நீங்க கீழ விழலைனு சொல்லிட்டீங்க. ஆனா எதுக்க வந்தவங்கதான் பாவம்...

   நீக்கு
  4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) நான் ஒரு எறுப்பில கூட சில்லு ஏறிடாமல் வெட்டி வெட்டி ஓட்டுவேனாக்கும்:)

   நீக்கு
  5. எறும்புகளை வெட்டி வெட்டி ஓட்டுவீங்களா! பாவம் எறும்புகள்!

   நீக்கு
  6. நெல்லை அதிராவின் அந்த ரகசியத்தை இப்பூடி பப்ளிக்கா கேட்டா? எல்லாம் தனியா சொல்லுவாங்க!! இப்ப கூட ஓட்டச் சொல்லி ஒழுங்கா எதிர்க்க வரவங்க மேல இடிக்காம ஓட்டறாங்களானு பார்க்க நாம அவங்க எதிர்ல கூட நிக்க வேண்டாம் சைட்ல நின்னாலே போதும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 52. கடசிப் படத்தில் சிரிப்பவர்.. ஆளைத்தெரியவிலை.. ஆனா அவர் சிரிக்கும் சத்தம்..., ஸ்ரீராம் சிரிப்பதைப்போலவே இருக்கூஊஊஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ப என்ன வம்பு இழுத்தாலும் ஸ்ரீராம் இங்கே வரமாட்டார் போலிருக்கு! வியாழன் பதிவு தயார் செய்வதில் பிசியாக இருக்கார் போலிருக்கு!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா புதன் கிழமைகளில் அவர் எங்கட டெய்ஸிப்பிளைபோல இருப்பார்ர்:)... அதாவது ஹைட் பண்ணி இருந்துகொண்டே ஒழுங்கா வோச்சிங்:)... ஹா ஹா ஹா...
   இன்றாவது அவருக்கு ஓவ் குடுக்காட்டில், வேறு எப்போதான் அவர் ஓய்வெடுப்பது:)..

   நீக்கு
  3. //வியாழன் பதிவு தயார் செய்வதில் பிசியாக இருக்கார் // ஸ்ரீராம் போன டிராவல்ஸ் காரங்களே அடுத்த மூணு நாளுக்கு தேவையான உணவை இன்றே தயார் செய்துடறாங்க. ஸ்ரீராமும் நேரம் கிடைக்கும்போது (அதாவது அ. படம் பார்க்காமல்) கட கடவென மூன்று நாலு வாரங்களுக்கு முன்னமேயே எழுதிடலாமே....

   நீக்கு
  4. என்னது வியாழன் பதிவுல பிஸியா ஸ்ரீராம்/....அதான் அந்தக் குண்டு தேவதை வேற ஜபல்பூர்ல இறங்கியாச்சே...அப்புறம்? இனி பதியை ஓட்டிடலாமே!!!!!!!!!!!!!!!!!!!!

   அதிரா உங்க டெய்சிப் பிள்ளை மாதிரிதான் இந்த என் கண்ணழகியும். எங்கேனும் நமக்குத் தெரியாமல் கட்டிலுக்கடியில் படுத்துக் கொண்டு அரைக் கண் போட்டு அம்மா எங்கு போறா வரானு பார்த்துக் கொண்டே இருப்பாள்.

   இன்று கௌ அண்ணன் டேனு, நாளை அவர் டே அல்லஓ அப்ப எனர்ஜி ஃபில்லிங்கா இருக்கும்!!!!

   கீதா

   நீக்கு
  5. //அதான் அந்தக் குண்டு தேவதை வேற ஜபல்பூர்ல இறங்கியாச்சே..// கீதா ரங்கன் - நான் எப்போதும் முக்கியமான விஷயங்களை படமெடுத்துவிடுவேன். (என் நினைவுக்காக). ஸ்ரீராம் எப்படி படமெடுக்க மறந்தார்( தாரா?) என்று யோசிக்கிறேன். பொதுவா நான் படம் எடுத்தால் யாரும் 'கூடாது' என்று சொன்னதில்லை (ஒரு எக்செப்ஷன். பாரிஸ் ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது-ஆர்க் டி டிரையம்ப் என்று ஞாபகம்.. படம் இருக்கு...அங்கு டெம்பொரரி கடை வைத்து பழங்கள் விற்றுக்கொண்டிருந்தனர் இருவர். நான் படமெடுத்ததும், அதில் ஒருவர் கன்னா பின்னா என்று கத்த ஆரம்பித்துவிட்டார். நான் விடுவிடுவென அந்த இடத்தைக் கடந்துவிட்டேன்). ரசனையான விஷயம்னா, கொஞ்சம் தள்ளி நின்று அவங்களுக்குத் தெரியாம படமெடுத்துவிடுவேன் (லண்டன் ஏர்போர்ட்டில் ஒரு ஆண் இன்னொருவனுக்கு கிஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்...அனேகமா திருமணமான இளைஞர்கள் என நினைக்கிறேன். என் நினைவுக்காக அவர்கள் இருவரையும் படம் பிடித்தேன். இதுபோல பல என் நினைவுக்கு வருது. )

   நீக்கு
 53. //இந்த வாரக் கேள்வி :

  மேலே எங்கேயோ கேட்டிருக்கேன். யாராவது அதைக் கண்டுபிடித்து பதில் சொல்லுங்க!
  //

  ஆவ்வ்வ்வ்வ் மீ கண்டு பிடிச்சிட்டேன் ஆனா கேள்வி என்ன என்பதை ஜொள்ள மாட்டேன்ன்:)) பிறகு எல்லோரும் நோகாமல் நொக்கெடுக்கப் பர்ப்பினம் ஹா ஹா ஹா:)).. பதிலுக்குப் பின்பு வாறேன்ன் பூஸோ கொகோ:))

  பதிலளிநீக்கு
 54. திரு திருடர் ரொம்ப பொறுப்பானவர் போல!!! பணம் மட்டும் எடுத்துக் கொண்டுவிட்டு மற்றதெல்லாம் அதுவும் கரெக்ட்டாகப் போஸ்ட் செய்திருக்கிறாரே! வித்தியாசமான திருடர்!! ஆச்சரியம்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக திருடுபவராக இருக்குமோ:)... திருடரிலும் நல்ல திருடர்கள் இருக்கிறார்களே ஹா ஹா ஹா:)..

   இதேபோல் ஒரு சம்பவம் எங்கள் அப்பாவுக்கும் நடந்துது ... பொஸ்ட்டில் வொலட் வந்துது பத்திரமாக:)

   நீக்கு
 55. ஆஆஆஆஆ கெள அண்ணன் ..... உங்கள் கொசு மெயிலுக்கு மயில் ஒன்று வந்ததாமே... அது எங்கேஏஏஏ:)... முட்டை போட்டுக் குஞ்சு பொரித்துவிட்டதோ?:)...
  சே சே ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஉ:)... வர வர என் செக் தப்பிக்கொண்டே வாறா கர்ர்ர்ர்ர்ர்:)..

  பதிலளிநீக்கு
 56. //தவறு என அறியாமல் செய்து, பின் தெரியும் // - பா.வெ மேடத்தின் கடைசிக் கேள்விக்கான பதில், ஏஞ்சலின் முதல் கேள்விக்கு பதிலாக தவறாக கொடுத்த மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஆஆஅ ஏன் புளொக் இப்பூடி ஆடுது என ஓசிச்சேன்ன்ன்ன் நெல்லைத்தமிழன் லாண்டிங்ங்:)... ஹா ஹா ஹா கெள அண்ணன் விழுந்திடப்போறீங்க மேசைக் காலை இருக்கிப் பிடிச்சுக்கொண்டு நில்லுங்கோ:).. இறுக்கி

   நீக்கு
  2. ஹலோ அதாரு சவுண்ட் விடுவது!!! எங்க நெல்லை அண்ணே வந்தா ஆடுதுனு சொல்லுறது....அது நீங்க வரும் போதே ஆடிச்சே!!! அப்பவே கௌ அண்ணான் இறுக்கமா பிடிச்சுட்டுத்தான் இங்கு பதில் கொடுக்கிறார்!!!!

   கீதா

   நீக்கு
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) நாம் வரும்போது கெள அண்ணன் கம்பி மேல எல்லோ கீதா நிண்டவர்:) அங்கின எங்கின பிடிக்கிறதாம்:)

   நீக்கு
  4. எல்லோரும் ஒன்றாக சேர்ந்துவிட்டீர்கள். நான் கட்டிலைத் தேடி ஓடவேண்டியதுதான், ஒளிந்துகொள்ள !

   நீக்கு
  5. உங்கள் டமிலில் கருத்துப்பிழை உள்ளது கெள அண்ணன் அது கட்டில் அடியைத்தேடி என வந்திருக்கோணும் ஹையோ மீயும் ரன்னிங்ங்ங் ஹா ஹா ஹா:)

   நீக்கு
  6. ஹா ஹா ஹா அதிரா கௌ அண்ணன் பாவம் சைக்கிளே கூட கேரியர்ல உக்காந்துதான் ஓட்டிருக்கார் அவரைப் போயி கம்பி மேல நடக்கவிட்டு சர்க்கஸ் வித்தையை செய்யச் சொல்லி....பாருங்க அதான் அவர் ஓடிப் போயிட்டார்...

   கீதா

   கீதா

   நீக்கு
 57. //அந்தப் பதிவரைப் பற்றி அப்படி ஒரு கருத்து எழுதியிருக்கக்கூடாது.// - ஸ்ரீராமைப்பற்றிக் குறிப்பிட்டதையா? அவர் எபி ஆசிரியர் அல்லோ... அவரை 'பதிவர்'னு சொல்லி கன்ப்யூஸ் பண்ணிட்டீங்க. ஹாஹா.... நீங்க தடுக்குல பாஞ்சா நான் கோலத்துல பாயணுமல்லே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம ஆரு:) மீ ரெண்டுக்கும் குறுக்கால பாய்வேனாக்கும்... லோங் ஜம்பில மீ தேர்ட்ட்ட்ட்ட் ஹா ஹா ஹா:)

   நீக்கு
  2. நான் எனக்கு வரும் மெயில் எல்லாவற்றையும் ஸ்ரீராம் க்கு ஃபார்வர்ட் செய்துடுவேன். அதனால் அவருக்கும் தெரியும் நெ த எந்தப் பதிவரைக் குறிப்பிட்டிருந்தார் என்று!

   நீக்கு
  3. அடடா... குறுக்க பாம்பு படமெடுக்குதுன்னு இமேஜின் செய்திருந்தீங்கன்னா லோங் ஜம்பில யூ பர்ஸ்ட்ட்டூ வந்திருக்கலாமே ஹாஹாஹா

   நீக்கு
  4. இப்பத்தான் மேல பார்த்துட்டு கேட்க வந்தேன் அப்ப ஸ்ரீராமுக்குத் தெரிஞ்சுருக்குமேனு....தெரிஞ்சுருச்சா....கௌ அண்ணா அப்ப அது ரகசியமே இல்லை!!!!!!! போங்க!!

   கீதா

   நீக்கு
 58. இப்படித்தான் நட்பு வேண்டும் என்று நினைத்ததில்லை...ஆனால் ஒரு சிலர் நல்ல நட்போடு இருப்பார்கள். நெகட்டிவ் நட்புகளை எட்ட வைத்துவிடுவேன். ஹை பையோடு. ஆனால் கீதாவை கீதாவுக்காக ஏற்கும் நட்புகளையே விரும்புவேன். நட்புகளிடம் நல்லது கற்றால் அது என்னிடம் இல்லாதது என்றால் என்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வதுண்டு. பொதுவாக நகைச்சுவையுடன், டேக் இட் ஈசியாகப் பேசும் நட்புகளை மிகவும் பிடிக்கும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ கீதாவுக்கு ஜி எம் பி ஐயாவைப் பிடிக்காதோ;)... ஹையோ படிச்சதும் கிழிச்சு கெள அண்ணனின் மேசைக்குக் கீழ போட்டிடுங்கோ கீதா:) ஜி எம் பி ஐயா வரமுன் ஹா ஹா ஹா:)

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அதிரா சிரித்துவிட்டேன்....இதுக்குப் பேர் என்ன தெரியுமோ!!! சரி சரி விடுங்க...

   கீதா

   நீக்கு
  3. சும்ம இருக்கும் சங்கை ஊதிக்கெடுப்பது?:)
   அல்லது கோர்த்து விடுவது? ஹா ஹா ஹா

   நீக்கு
  4. ஹையோ அதிரா ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ச் அதெல்லாம் ரசியம் இப்பூடி பப்ளிக்கா ஸ்பீக்கர் போட்டுப் பேசக் கூடா!!!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 59. //ஒரு 20 கிலோ மீட்டர்வரை மாமாவுடன் ஓடியிருக்கிறேன்// - நானெல்லாம் 5 கிலோ மீட்டருக்குமேல் சைக்கிள் ஓட்டிய ஞாபகம் இல்லை. இங்க என் மனைவியின் உறவினர்கள், உடல்நலனுக்காக சைக்கிள் ஓட்டறாங்க... ஒரு சமயத்துல 60-75 கிலோமீட்டர். இதுமாதிரி வாரத்துக்கு ரெண்டு நாள். நான் ஜிம் சைக்கிள்ளயே அதிகபட்சம் 7 கிலோமீட்டர்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ஹூம்ம்ம் இதெல்லாம் ஜொள்ளித்தான் எங்களுக்கு தெரியோணுமாக்கும்:)...
   ஆனா பாருங்கோ கீதாவும் அஞ்சுவும் இதுபற்றி வாயே திறக்கல்ல:) ஏன் தெரியுமோ... இருவருக்கும் சைக்கிள் ஓடத் தெரியாதூஊஊஉ ஹா ஹா ஹா இதுக்கு மேலயும் இங்கின நிண்டால் ஆபத்தூஊஊஊ:)

   நீக்கு
  2. ஹலோ பூசார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஓடாதீங்க பிடிச்சுட்டேன்...என்னாது சைக்கிள் ஓட்டத் தெரியாதா...நான் சைக்கிள் கற்ற கதை பெரிய கதை அக்கருத்தை போடாம போயிருக்கிறேன் போல.....

   சைக்கிள் கற்ற போது அது கொஞ்சம் பெரிய சைக்கிள்...எதிரில் பஸ் வர நம் வீட்டருகில் (வீட்டருகில் என்றால் வெகு வெகு வெகு அருகில்..) பெரிய வாய்க்கால் பாலம் ஆனால் அதில் ஒரு பஸ் மட்டுமெ செல்ல முடியும். நான் இறங்க நினைத்து கால் தரையில் எட்டாமல் பேலன்ஸ் தவறி சைக்கிள் ஓவராகச் சரிய நல்ல காலம் நான் பாலத்தின் மதில் தாண்டி தண்ணீருக்குள் விழவில்லை...ஹா ஹா விழுந்தாலும் நீச்சல் தெரியும் அதுவும் பிரச்சனை இல்லை ஆனால் கல்லில் மோதியிருந்தால்!!! அப்படிக் கற்றது...அப்புறம் பைக் ஆங்கள் ஓட்டும் புல்லட்-பைக்..அதுவும் ஓட்டக் கற்றேன் ஆனால் கால் ஊன்றும் போது தரையில் எட்டாதே எனக்கு அப்போ பைக் வெயிட் பாலன்ஸ் செய்ய முடியல அதனால விட்டேன்.

   கீதா

   நீக்கு
 60. //தாத்தா குடை என்ற துணியால் தைத்த வளைந்த கைப்பிடி குடைகள்// - நான் ஸ்கூல்ல படிக்கறப்ப, மழைக்கு இந்தக் குடையைக் கொடுப்பாங்க. எனக்கு வெக்கமா இருக்கும் கொண்டுபோக. அப்பதான் இந்த மான்மார்க் குடைக்குப் பதில் குட்டை சைஸுல குடைகள் வந்திருந்தன (கடைகளில்... மற்றவர்கள் மாடர்னா அதைத்தான் உபயோகிப்பாங்க). அப்போ இருந்த நிலையை நினைத்தான் எனக்கு மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஏழ்மை இல்லை.. எளிமையைக் கடைபிடிக்கும் குடும்பம்.

  பதிலளிநீக்கு
 61. அனைவருக்கும் காலை, மதிய, மாலை வணக்கங்கள். நேற்று மாலையிலிருந்து கணினி ஒரே படுத்தல். டேட்டாவும் கனெக்ட் ஆகவில்லை. இன்று மதியம்தான் இணையம் இணைந்தது. அதற்குள் எனக்கு தூக்கம் வந்து விட்டது.
  கௌதமன் சாருக்கு பிடித்த வேலை. ஆனால் இதில் கூட பாருங்கள் எனக்கு ஒரு தொந்திரவு உண்டு, அளவிற்கு அதிகமாக தூங்கினால் தலைவலி வந்துவிடும் :((( ஸோ மனதிற்கு பிடித்திருந்தாலும் செய்ய முடியாது. ஆனால் உங்கள் பதிலை ரசித்தேன் கௌதமன் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பானுக்கா ஹை உங்க டேட்டா கனெக்ட் ஆகிடுச்சா சூப்பர்!!!!

   கீதா

   நீக்கு
 62. எப்போதும் கேள்விகளை வாட்ஸாப்பில் அனுப்புவதால் மாப்பிள்ளை பெஞ்சில் அமரும் என் கேள்விகள், இன்று கீதா அக்கா பெஞ்சுக்கு வந்து விட்டன. மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!