சனி, 4 மே, 2019

கஜா புயலில் வீடிழந்த சஹானா பள்ளியிலேயே தங்கி ....


1)  ".........அதுமட்டுமின்றி, தனிமையில் இருக்கும் வயதானவர்கள், ஆண்கள் உடன் இல்லாது இருக்கக் கூடியவர்கள், கைக் குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களுக்குத் தேவையான மருந்தை, அவர்கள் கேட்கும் மருந்து கடைகளில் இருந்து, வாங்கிக் கொடுக்கிறோம்...."

சென்னை, மேடவாக்கம் அடுத்த விக்னராஜபுரத்தில், சமூக சேவை செய்து வரும், பாரதி.





2)  வறுமையில் வாடும் வயதான முனியதங்கம் 78, தங்கப்பம்மாள் 70, தம்பதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ரூ.1.85 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.






3)  கஜா புயலில் வீடிழந்த சஹானா பள்ளியிலேயே தங்கி மின்சாரம் இல்லாத நிலையிலும் படித்து 600க்கு 524 மதிப்பெண் பெற்றிருந்ததைப் பாராட்டி ட்வீட் செய்திருந்ததை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன்...





============================================================================================


சென்ற வார பதிவுகளின் விமர்சனம் - (27/4/19 - 3/5/19) இந்த வாரம் விமர்சிப்பவர் கீதா சாம்பசிவம் அக்கா.


"ஶ்ரீராம் பொறுப்பைச் சுமத்தி விட்டார். என்னால் முடியுமானு சந்தேகம் தான். சொல்லிப் பார்த்தேன், கேட்கலை!  என் எழுத்தை எல்லோரும் என்ன தான் பாராட்டினாலும் உண்மையான நிலைமை என்ன என்பது எனக்குத் தான் எனக்கு மட்டும் தான் தெரியும். அதோட எனக்குச் சுருக்கமாச் சொல்லவோ, எழுதவோ வராது! துணிந்து நில் மனமே! என மனசுக்குள் சொல்லிக் கொண்டே ஆரம்பிக்கிறேன்.

சனிக்கிழமை பாசிடிவ் செய்திகள்:  ஒரு காலத்தில் ஶ்ரீராம் இதை நிறுத்திடலாமா என யோசித்துக் கொண்டிருந்தார். அந்த அளவுக்குக் காற்றாடிக் கொண்டு இருந்தது. ஆனாலும் நிறுத்தாமல் தொடர்வது அவர் மனோபலத்தைக் காட்டுகிறது. தொடர்ந்து சனிக்கிழமைகளிலும் கருத்துகள் குவிகின்றன.  இந்தச் சனிக்கிழமை 27 ஏப்ரல் செய்திகளில் உயரம் குறைந்த பெண்ணுக்கு உதவிய கைதியைப் பற்றியும் பக்ஷிகளுக்கு உணவளிப்பதைக் குறித்தும் சொல்லி இருக்கார். பலரும் இப்படிப் பறவைகளைப் பராமரிப்பது குறித்தும் உணவு அளிப்பது குறித்தும் முகநூல் மூலமோ பதிவுகள் மூலமோ அறிந்து சந்தோஷமாகவே இருக்கிறது. சிறைக்கைதி ஒருவர் சிறையில் இருந்த வண்ணமே தனக்குக் கிடைத்த சம்பளத்தில் மாற்றுத் திறனாளிக்கு உதவியது பாராட்டத்தக்கது. இத்தகைய செய்திகளை தினசரிகளில் அல்லது இணையத்தில் தேட வேண்டும். தேடித் தேடிப் போடும் ஶ்ரீராமுக்குப் பாராட்டுகள். 

அன்றைய தினத்துடன் முடியும் அந்த வாரத்துக்கான விமரிசனத்தைத் திரு நெ.த. செய்திருக்கார். அவர் எழுத்துத் திறமை குறித்துச் சொல்லவே வேண்டாம். எல்லாக்கிழமைகளையும் வரிசையாக அலசி இருக்கார்.  அன்றைய தினம் நான் போன இடங்களில் எல்லாம் யாருமே வராமல் நானே முதல் ஆளாக இருந்திருக்கேன் என்பதை என்னோட முதல் கருத்து வெளியீட்டில் இருந்து தெரிய வருகிறது. அதோடு அடுத்த வாரத்துக்கான விமரிசன எழுத்தாளர் குறித்த என்னோட யூகம் தப்பாகி விட்டது!  இந்தப் புதிய வாசகர்களால் விமரிசனம் எழுதும் பகுதி எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. எங்கள் ப்ளாகின் ஆசிரியர்களில் ஒருவரான கௌதமன் கூடப் பாராட்டி உள்ளார். என்ன ஆச்சரியம்னா ஶ்ரீராமுக்கு இருக்கிற வேலைத் தொந்திரவில் ஒவ்வொருத்தருக்கும் மெயில் போட்டோ, தொலைபேசியில் பேசியோ அல்லது வாட்சப் மூலமோ அவர்களிடம் இருந்து கதையைக் கேட்டுத் தேவை எனில் அதை எடிட் செய்து சரியான படங்களைப் போட்டுக் கதைத் தலைப்பையும் பல சமயங்களில் தேர்ந்தெடுத்து! ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு உள்ள பணியை ஶ்ரீராம் செவ்வனே செய்து வருகிறார். இது வெறும் புகழ்ச்சி அல்ல. 

அதே சமயம் நம்ம டிடி தான் நெல்லைத் தமிழர் தனியாக வலைப்பூ வைத்துக் கொண்டு ஏன் எழுதவில்லை என்று யோசிக்கிறார். நியாயம் தான். ஆனால் நெல்லைத் தமிழருக்கு அதில் ஏதோ பிரச்னை இருக்கலாம். காரணம் இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறேன். அவர் எல்லோரது வலைப்பக்கமும் வந்து கருத்துச் சொல்வதும் தனியாக வலைப்பதிவு ஆரம்பிப்பதும் வேறு வேறு! இதனால் அவருக்கு என்ன அசௌகரியமோ! நமக்குத் தெரியாது! இது ஒரு பெரிய விஷயமே இல்லை.  அது அவருடைய வசதி! அவருடைய பிரச்னை! .

ஞாயிற்றுக் கிழமை! இந்த வாரமும் கேஜிஎஸ்ஸின் படங்கள். தலைப்புகள் ஶ்ரீராம் கொடுத்த மாதிரியும் இருக்கு. கேஜிஎஸ்ஸே கூடக் கொடுத்திருக்கலாம். சில படங்கள் தெளிவாக இல்லை. நான் எடுத்தாப்போல் இருக்கு. இஃகி,இஃகி,இஃகி. அநேகமாகக் கேஜிஎஸ்ஸின் பேரன்கள் யாரானும் எடுத்திருப்பாங்களோ? இன்னமும் ஷில்லாங்கை விட்டுப் போகலை. ஷில்லாங்கிற்குள் நுழையவே இல்லை. அப்புறம் வேறு படங்களுக்கு எங்கே போவது?

இதில் வந்திருக்கும் கருத்துக்களில் பெரும்பாலோருக்கு இந்தப் பதிவிற்கான கருத்துச் சொல்வதில் ஆர்வம் இல்லை. மாறாக சந்நியாசிகள், பிச்சைக்காரர்கள், தெருவோரங்களில் படுத்திருப்போர் ஆகியோருக்கு வாக்குரிமை இருக்கா/இல்லையா என்னும் கேள்விகளுக்கு பதில் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆரம்பித்து வைத்தது ஶ்ரீராம்,  ஶ்ரீராமின் பாஸ் வாக்களிக்கச் சென்றபோது கேட்டதாகச் சொன்னார். ! :) விடை கிடைக்காத கொடுக்க முடியாத கேள்வி! சிலர் இந்த விமரிசனப் பகுதியைப் பாராட்டிக் கருத்துச் சொல்லி இருக்கின்றனர். பலரும் இதை வரவேற்றிருக்கிறார்கள். ஷில்லாங் தவிர்த்து மற்ற ஊர்களின் படங்கள் அல்லது சமீபத்துக் காசி யாத்திரையின் படங்கள் எனப் பலரின்/என்னுடையதும் கூட எதிர்பார்ப்பு! வரும்நாட்களில் ஶ்ரீராம் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கலாம். ஆனாலும் இந்தப் பக்கத்தில் முன்னால் எல்லாம் கௌதமன் மட்டும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒரே ஒரு படத்தைப் பகிர்ந்திருப்பார். அதுக்குப் போட்டியாக ஒரு படத்தை நானும் கொஞ்ச நாட்கள் போட்டுக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமான பதிவு எனப் பிரித்து வைத்துக் கொண்டு பதிவுகள் போட்டு அதைப் பற்றி அலசுவதும் பலருடைய மாறுபட்ட கருத்துகளைக் கேட்பதும், ஒரு சிலர் தாங்கள் சென்று வந்த நினைவுகளைப் பகிர்வதுமாக இந்தப் பதிவுகளும் களைகட்டுகின்றன. 

திங்கட்கிழமை. "திங்க"ற கிழமை! இதை ஆரம்பிச்சு வைச்ச கௌதமன் எங்கேயோ ஒதுங்கிவிட, முதலில் தான் மட்டும் அனுபவித்துச் சாப்பிட்ட உணவு வகைகளைப் பற்றிய குறிப்புக்களைக் கொடுத்து வந்த ஶ்ரீராம் எப்போது எனச் சொல்ல முடியாத சமயத்தில் இதைப் பொதுவான பதிவாக மாற்றி இருக்கார். ஆலோசனை கொடுத்தது யாராக இருந்தாலும் பாராட்டத்தக்கது.  இது ஜாம் ஜாமென்று வாசகர்கள் பலரும் பகிர்ந்து கொள்ளும் வண்ணம்  சக்கைப் போடு போடுகிறது. பல சமையல் குறிப்புக்களும் தெரிந்தவை என்றாலும் அவரவர் பாணியில் மாறுபாடுகள் உள்ளன. பல்வேறு விதமான மாறுபாடுகளுடன் கருத்துகள் பகிரப்படுகின்றன. உண்மையில் பயனுள்ள பதிவு. சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், மாறுபட்ட சமையல் செய்பவர்களுக்கும் ஏற்றது. இந்த வாரம் யார் சமையல்னு எதிர்பார்க்க வைக்கும். இந்த வாரம் பானுமதியாக இருக்கலாம் என நினைத்தே வந்தேன். எதிர்பார்த்ததே நடந்திருக்கிறது. சமையலும் முற்றிலும் எதிர்பாராதது. வாழைத்தண்டில் புளி சேர்த்துக் கொ.ம.விதை. மி.வற்றல், வெந்தயம் தேங்காய் எல்லாம் அரைச்சு விட்டுப் பண்ணினதே இல்லை! ஒரு முறை பண்ணணும். எங்கே! நம்மவர் தான் ஓட்டமா ஓடறாரே! 

பலரும் இந்தக்குறிப்புத் தெரிஞ்சிருக்குனு சொல்றாங்க. எங்க குடியிருப்புத் திருநெல்வேலி மாமி இது பத்திச் சொல்லலை! இதுக்கு அவ்வளவாக் கருத்துகள் வரலை. தி/கீதா இல்லை. ஏற்கெனவே அதிரடியும், அஞ்சுவும் வரதில்லை. இவங்க 3 பேரும் தான் அதிகம் கருத்துச் சொல்லுவாங்க. அதோடு அதிரடியும், ஏஞ்சலும் மாறி மாறி ஒருத்தரை ஒருத்தர் வாயைக் கிண்டி பதிலை வரவழைப்பாங்க. அது இல்லை! கொஞ்சம் சுவாரசியம் கம்மி தான். ஆனால் அவரவருக்கு அவரவர் வேலையும் முக்கியமே! இந்த வாழைத்தண்டில் பருப்பு உசிலி, வடை, அடை எல்லாம் கூடச் செய்வதாகக் கமலா ஹரிஹரன் சொல்கிறார். உண்மையாகவே ஆச்சரியம் தான் எனக்கு. இந்தச் செய்முறை காமாட்சி அம்மாவோட பிட்லையை ஒத்திருந்தாலும் அதில் மோர் கிடையாது. இம்மாதிரிப் பல்வேறு விதமான பாரம்பரிய சமையல் குறிப்புகள் ஒவ்வொருவரிடமும் இருக்கும். ஆகவே  இதில் ஆர்வமாக இன்னும் பலர் பங்கு கொள்ள வேண்டும். கோமதி அரசு, வல்லி சிம்ஹன், மிகிமா, மனோ சாமிநாதன், ஆகியோர் அதிகம் சமையல் குறிப்பு இதில் எழுதுவதில்லை. காணாமல் போய்த் திரும்ப வந்திருக்கும் அதிரடி எப்போவானும் எழுதுவார். அவர் "செக்"கும்! இவங்க இரண்டு பேரும் வந்தாலே போதும். சபை நிறைஞ்சுடும்! :))))  ஆண்களும் பங்கு பெறலாம். துரைக்கு நிறையத் தெரியும். அவர் பங்கெடுக்கலாம். வெங்கட் மற்றும் அவர் மனைவி போன்றோர் பங்கெடுக்கலாம். டிடி கூடக் கேட்டு எழுதலாம். 

செவ்வாய்க்கிழமை:- இன்னிக்கு ரிஷபனோட கதையா இருக்குமோனு நினைச்சேன். ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் கதை! சுருக்கமான கதை தான். இன்றைய அரசியல் நிலவரத்தைப் பிட்டுப் பிட்டு வைக்கும் பத்திரிகையாளரின் கையை வெட்டுவது குறித்து! இதைப் படித்ததும் பக்கத்துக் கேரள மாநிலத்தில் இப்படி ஓர் நிகழ்ச்சி நடந்தது நினைவில் வந்தது. இந்தக் கதையில் வலக்கை வெட்டுண்ட அந்தப் பத்திரிகையாளர் தான் இடக்கைப் பழக்கம் உள்ளவர் என்கிறார். கை வெட்டையும் தாங்கிக் கொண்டு இப்படிச் சொல்கிறார். உயிரைக் கொடுத்தானும் இப்படி எல்லாம் எழுதணுமா எனத் தோன்றுகிறது. என்ன எழுதினாலும் எல்லோரும்/எல்லாமும் மாறவும் போவதில்லை/திருந்தவும் போவதில்லை. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும். (கீதை அல்ல). இதைப் படித்த வாசகர்கள்  எல்லோருமே முடிவைக் கண்டு பயந்து கதை எழுதுபவரைத் தங்கள் சொந்தம் போல் நினைத்து எச்சரிக்கை கொடுத்திருக்காங்க. இதிலே டிடியையும் ஒரு கதை எழுதித் தரச் சொல்லி ஶ்ரீராம் கேட்டிருப்பதாக ஒரு பின்னூட்டத்தில் படிச்சேன். குறள்களை வைத்து விளையாடும் டிடி பொருத்தமானதொரு குறளையும் அதற்கேற்ற கதையையும் அளிப்பார் என நம்புவோம். 

இதற்கும் அதிகக் கருத்துகள் வரவில்லை. இன்றைக்கும் நான் மட்டும் முன்னாடியே வந்திருக்கேன் போல! எல்லோருமே கதை நாயகனை எச்சரித்திருக்கின்றனர் என்பதில் இருந்து அந்த நாயகன் வீட்டு மனிதர்களில் ஒருவர் போல் நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது.

புதன் கிழமை:- கேள்வி, பதில்வாரம். கௌதமனுக்கே ஆன தினம். இவரோட புதிர்கள் மிக நன்றாக இருக்கும். யோசிக்க வைக்கும். அப்படி ஒண்ணும் நான் சிறப்பாகச் சொன்னதில்லை என்றாலும் புதிர்களையும் விடைகளையும் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். ஆனால் விடை அளிக்க மாடரேஷன் வைக்க மாட்டார். மாடரேஷன் வைத்தால் தான் ஆர்வம் கூடும். ஆனால் இந்தப் பக்கம் இப்போது கேள்விகள் பக்கமாக மாறி விட்டது. அரசு கேள்வி பதிலெல்லாம் ஒண்ணுமே இல்லை.  எப்போவும் அதிகக் கேள்விகள் கேட்கும் அஞ்சு இப்போ விடுமுறை. அதனாலும் இன்னும் சில காரணங்களாலும் நான் சென்ற வாரம் கேள்விகள் கேட்டிருந்தேன். அதில் தற்காலத்தில் முதிர்கன்னர்கள் இருப்பதன் காரணம் கேட்டிருந்தேன். இன்னும் நெல்லைத் தமிழர், பானுமதி ஆகியோரும் கேள்விகள் கேட்டிருந்தனர். வல்லியும் கேட்டிருந்தார். பொன்னியின் செல்வன் படம் குறித்த கேள்வி. கில்லர்ஜி கூட அதிசயமாக் கேட்டிருந்தார்னா டிடியும் கேட்டிருக்காரே! பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை எங்கள் ப்ளாக் வாசகர்களில் யார், யார் எந்தக் கதாபாத்திரம் ஏற்கலாம் என!

அநேகமா எல்லாக் கேள்விகளுக்கும் # கேஜிஒய்? பதில் சொல்லி இருக்கார்.  நாத்தனாரைக் கண்டு பயப்பட்ட பெண்ணைப் பற்றிய கேள்விக்கு உளவியல் ரீதியாக ஆராயணும் எனச் # சொல்லி இருக்கார். ஆனால் அந்தப் பெண் அப்படி எல்லாம் பயப்படும் பெண்ணே அல்ல! நாங்க கேட்டதுக்கு அவள் சொன்ன காரணம் நாத்தனார் இருந்தால் அவங்க வேலையையும் நம்ம வேலையையும் ஒப்பிட்டுப் பார்த்துப்  பார்த்து நாம் செய்வது சரியில்லை என்பார்கள்.நாத்தனாரே இல்லைனா இந்தப் பிரச்னையே இல்லை என்பது.  ஆனால் இந்தப் பெண்ணும் இப்போது ஒரு நாத்தனார் தான்! :) மன்னியிடம் எப்படி நடந்துக்கறார்னு தெரியலை!   & இவரும் இந்த வாரம் அநேகமா எல்லாக் கேள்விகளும் அட்டென்ட் பண்ணி இருக்கார். சாய்ஸிலே விடலை! சாய்ஸிலே விட்டிருப்பது & தான். அதாவது நம்ம கேஜிஜி. நாத்தனார் பற்றிய கேள்விக்குப் பதிலே சொல்லலை!  ஒரே குழந்தை போதும் என்னும் நினைப்பு சரியாஎன்னும் கேள்விக்கும் பதில் சொல்லலை! நழுவிட்டார்.

திரைப்படம் பற்றிய கேள்விக்கு கேஜிஎஸ் $ 4,5,6,7 எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து ஒரே பதில் ! சினிமா டிக்கெட் பற்றிக் கேஜிஜி சொன்ன கருத்துக்களோடு நான் முற்றிலும் ஒத்துப் போகிறேன். இன்று திடீரென அதிரடியாக் களத்தில் இறங்கிட்டார் அதிரா! ஆகவே கருத்துகள் 200 ஐத் தாண்டும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடத்துக்கு நகர்கிறேன். கூடவே வந்த அஞ்சுவும் கேள்வியின் நாயகியாக மாறிக் கேள்விகளைக் கேட்டிருக்கார்.  தன்னோட பெண் பிறந்த நினைவையும் கல்யாண நாள் நினைவையும் பகிர்ந்தது அருமை. நீடூழி வாழ்க! தி/கீதா வராதது குறித்த கேள்விகள், பதில்கள்! அநேகமாக ஶ்ரீராம் தி/கீதாவுக்கு அவரைக் காணோம்னு பேப்பரிலோ தொலைக்காட்சியிலோ போடப்போறாங்கனு சொல்லி இருப்பார்.

 நாத்திக வாதம் பற்றிய பானுமதியின் கேள்விக்குக் கேஜிஜியின் பதில் அருமை. அதே போல் பிறரைப் பார்த்து அ/ஆ/அ பட்டீர்களா என்னும் கேள்விக்கான கேஜிஜியின் பதில் உண்மை, முற்றிலும் உண்மை! அன்றைய தினம் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் அது பற்றியே எங்கெங்கு போனாலும் பேச்சு. உண்மையில் உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்/ இருந்தார்கள்/இருக்கிறார்கள். தினம் மட்டும் வருஷா வருஷம் வந்து கொண்டே இருக்கிறது. முதிர்கன்னர்கள் பற்றிய கேள்விக்கு பானுமதி ஜோதிட ரீதியாகக் காரணங்களை அலசி இருக்கிறார். அவர் சொன்னது பலருக்குச் சரியாக இருக்கலாம். ஆபாசப்படங்கள் குறித்த ஆதங்கத்தைக் கில்லர்ஜி வெளிப்படுத்தி இருக்கார்! எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்! அரசாங்கம் தணிக்கைத் துறைனு ஒண்ணு வைச்சிருக்கு! அது என்ன செய்யுது? ஆபாசம்னா அதை வெட்டலாம் அல்லது காட்சியை நீக்கச் சொல்லலாம். ஆனால் செய்வதில்லை. ஒரு புதிய திரைப்படத்துக்குச் செலவிடுவது குறித்த அவரவர் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள். இதில் கௌதமன் சாரின் கருத்து என் கருத்தோடு ஒத்துப் போகிறது. திரைப்படம் பார்க்காமல் இருந்துடலாம். ஆனால் அத்தியாவசியப் பொருட்களுக்குக் காசு இல்லாமல் சாப்பிடாமல் இருக்க முடியுமா? எனக்குத் தெரிந்து ஒரு காலத்தில்  கடன் வாங்கிக் கொண்டு திரைப்படம் போனவர்களைப் பார்த்திருக்கேன். 

வியாழக்கிழமை:- இன்றைய நாள் ஶ்ரீராமுக்கே ஆன சொந்த நாள். முற்றிலும் அவர் படைப்புக்களே இடம் பெறும். காசி யாத்திரை பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். இன்னும் போய்ச் சேரவில்லை. ரயிலிலேயே இருக்கார். சங்கமித்ரா எக்ஸ்ப்ரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்ப வேண்டும் என நினைக்கிறேன். அது ஏன் அங்கே வரலை? அதோட  பினாகினி எக்ஸ்ப்ரஸில் கூடூர் போய் சங்கமித்ராவை அங்கே பிடிச்சவங்க எத்தனை பேர்? ஜெயலக்ஷ்மி யாத்ரா ட்ராவல்ஸ்காரங்க எல்லோரும் இல்லைனு நினைக்கிறேன். அப்போ ஶ்ரீராம் மற்றும் அவர் உறவினர்கள் கொண்ட குழு மட்டும் பினாகினியில் போனாங்களா? ஏன்? மத்தவங்க மட்டும் எப்படி சங்கமித்ராவில் ஏற்கெனவே ஏறினாங்க? மண்டையை உடைச்சுட்டு இருக்கேன். அன்னிக்கே ஶ்ரீராமைக் கேட்கலாம்னா கம்பைத் தூக்குவாரோனு பயம்! 

இத்தகைய நீண்ட யாத்திரைக்குக் கொண்டு போக வேண்டிய பொருட்கள் பட்டியலில் எட்டுமுழம் வேஷ்டி 2 இருந்தால் போதும். அதிகம் சுமந்திருக்கார். அது சரி,பொருட்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்த அப்பாஸ் அலி யாராக்கும்?கேடரரின் சேவையைப் பாராட்டி இருக்கார். ஏன் அவங்களோடயே திரும்பலை?விமானத்தில் வரும்போது கங்கைத் தண்ணீர் கான் (can) கொண்டு வர முடிந்ததா?கஸ்டம்ஸில் ஆட்சேபிக்கவில்லையா? நாங்க மானசரோவர் தண்ணீர் கொண்டு வந்தப்போக் காபினில்வைச்சுப்போம் என்றதுக்கு நேபாள் காத்மாண்டுவில் ஒத்துக் கொண்டார்கள். தில்லியில் கஸ்டம்ஸில் அதைக் கொட்டிடுவாங்கனு கூட வந்த எல்லோரும் சொல்லி எல்லோரும் மானசரோவர் தண்ணீர் கான்களைக் (can) கார்கோவில் போட்டாங்க! ஆனால் என்ன துரதிர்ஷ்டம்!அவங்க (can) கானெல்லாம் உடைஞ்சு தண்ணீர் கொட்டிக் கொண்டு வந்தது. நாங்க கையில் அப்படியே பத்த்த்திரமாக் கொண்டு வந்தோம். இப்போப் போனால் விமானத்தில் கங்கை நீரைக் கொண்டு வர அனுமதிக்கிறாங்களா? 

ஶ்ரீராம் பல்லைக் கடிக்கிறார்.இன்னும் போயே சேரலை! அதுக்குள்ளே திரும்ப வரதைப் பத்திக் கேட்கிறாங்களேனு. சங்கமித்ராவில் போய் உட்கார்ந்ததும் , இல்லை, இல்லை  பினாகினியிலேயே சாப்பாடு கொடுத்ததைச் சொல்றார். ஆறிப் போயிருக்காது?  சங்கமித்ராவில் இன்னும் ஏறவே இல்லை. ஹிஹி, அந்தச் சமயம் நாங்க தேஜஸில் போயிட்டு இருந்தோம். புல்லாங்குழல் உடைஞ்ச கவிதை பகிர்ந்திருக்கார். கண்ணன் எங்கேனு சொல்லவே இல்லை. "இங்கிட்டு அங்கிட்டு" திரும்பாமல் அவர் பையர் பேசுவதைக் கேட்கணும்னு சொல்றார். ஹிஹிஹி, அம்மூருத் தமிழ்! 

ஶ்ரீராம் அப்பாவின் படத்தைப் போட்டுட்டு நினைவு கூர்ந்திருக்கார். Better late than never. ஶ்ரீராமின் ஜாடையை அவர் அப்பா மாதிரினு எல்லோரும் சொல்லி இருக்காங்க. எப்படி இருந்தாலும் அடுத்த முறையும் நான் ஶ்ரீராமைப் பார்த்தால் கூடவே அவரோட பாஸ் வந்தால் தான் அடையாளம் காண முடியும்! இஃகி, இஃகி, இஃகி! 

கருத்துகள் குவிஞ்சிருப்பதால் அதை அதிகம் அலசலை. ஆனால் முக்கிய விஷயம் தி/கீதா இன்னும் வரலையே எனத் தேடியது! பரம்பரை பரம்பரையாகத் தாத்தா, பாட்டிகளின் mannerism (சரியான தமிழ்ச் சொல் எது?) பேரக்குழந்தைகளுக்கு வருவது பற்றிய உரையாடல் அருமை!  இதன் மூலம் துரை, அழகுத் தமிழில் உள்ள கட்டுமான வேலைகளுக்குப் பயன்படும் வார்த்தைகளைப் பகிர்ந்திருக்கிறார்.தெரியாதவங்க தெரிஞ்சுக்கலாம். அதை வைத்து நெல்லைத் தமிழர் நம்மாழ்வார் பாசுரத்தை நினைவு கூர்ந்திருக்கார். அதிரடி தம் இலங்கை நினைவுகளை அழகாகச் சொல்லி இருக்கார் இலங்கைத் தமிழில். காமாட்சி அம்மாவும் பரம்பரை பற்றி நினைவு கூர்ந்திருக்கார்.

இந்தப் பதிவின் மூலம் பலரின் பயணங்கள், அவர்கள் உடை உடுத்தும் விதங்கள், தலைக்கு டை தேவையா இல்லையா என்பது முதல் அனைத்தும் விவாதிக்கப் பட்டுள்ளது. சாதாரணமாய் நேரில் பேசுகையிலேயே ஆரம்பிக்கும் தலைப்பை விட்டு விலகி எங்கோ போயிடுவோம். இதில் கேட்கவே வேண்டாம்.

அடுத்து வெள்ளிக்கிழமைப் பதிவு வழக்கமான  திரைப்பாடல் பகிர்வு. சுஹாசினி நடிச்சதாம்! எங்கே நடிச்சார்? அது என்னமோ தெரியலை, யாரோ சொன்னாங்களோ என்னமோ! மூக்கைச் சுருக்கிக் கொண்டு ஒரு சிரிப்பு க்ளோசப்பில் காட்டுவாங்க! பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். சுஹாசினி படங்களை நான் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். இப்படி எல்லாம் படம் வந்திருப்பதே ஶ்ரீராமால் தெரிஞ்சுக்கறோம். அவர் என்னமோ பாடலுக்காகப்பகிர்கிறார். ஆனால் நாம் படத்தைத் தான் நினைக்கிறோம். இந்தப் பாடலுக்கு. தி/கீதா இருந்திருந்தால் ராகத்தைப் பிரித்து மேய்ந்திருப்பார். அவர் இல்லை, ஆனால் ரேவதி ராகம் என ஶ்ரீராமுக்கு மெயில் அனுப்பி இருக்காராம். யாரும் இந்தப் பாடலைக் கேட்டதாகச் சொல்லக் காணோம். 

எங்கெங்கோவெல்லாம் அலைந்து திரிந்து இணையத்தில் தேடித் தேடிப் பாடல்களை வெளியிடும் ஶ்ரீராமுக்குப் பாராட்டுகள். இதுக்கெல்லாம் நேரத்துக்கு என்ன செய்கிறார்? பானுமதி ஒரு பக்கம், தி/கீதா ஒரு பக்கம் கலந்து பேசிக் கதை ஒரே மாதிரி எழுதுகின்றனர். யோசித்து எழுத அரை மணி நேரமாவது வேண்டாமா? கமலா ஹரிஹரன் இரவில் உட்கார்ந்து பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் போடுவேன் என்கிறார். எப்போத் தூங்குவார்? எப்போ எழுந்து வேலைகளைப் பார்ப்பார்?கோமதி அரசோ விருந்தினர்களையும் வரவேற்றுக்கொண்டு அவங்களோட வெளியேயும் போய்க் கொண்டு பறவைகளையும் படம் எடுத்துப் பதிவு போட்டுனு வெளுத்து வாங்குகிறார்.  எல்லோரும் கண் சிமிட்டும் நேரத்தில்  சுறுசுறுப்பாக வேலை செய்ய நான் மட்டும் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறேன்.  இவங்களோட வேலைகளை எல்லாம் பார்க்கையில் எனக்கு நேர மேலாண்மை என்றால் என்ன என்றே புரியலைனு நினைக்கிறேன்.  இங்கே இப்போ ஒருவாரமாக மதிய வேளையில் மின்வெட்டு வந்து விடுகிறது. அப்போ எதுவும் செய்ய முடியறதில்லை. அதோடு இணையம் வேறே அவ்வப்போது போய்ப் போய் வருது! நேத்திக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் இணையம் இல்லாமல் அது வந்தப்போ என்னால் உட்கார முடியலை! வழக்கமான வீட்டு வேலைகள்!   இத்தோடு என் அறுவையை முடிச்சுக்கறேன்.  பதிவுகள் பற்றிய கருத்துக்களை அதிகம் மேயவில்லை. அப்புறமா இன்னும் பெரிசா ஆயிடும். ரொம்ப பயமுறுத்த வேண்டாமே!......" 

142 கருத்துகள்:

  1. அனைவருக்கும் தமிழ் வணக்கம்...

    அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்... உங்களுக்கும் இனி வரப்போகும் நட்புறவுகளுக்கும் நல்வரவு.

      நீக்கு
    2. வரவேற்ற துரை, இனி வரவேற்கப் போகும் அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள்.

      நீக்கு
    3. காலை வணக்கம் துரை செல்வராஜு சார்.. மற்றும் இன்று பார்த்து காணாமல் போய்விட்ட கீதா சாம்பசிவம் மேடத்துக்கும் மற்ற அனைவருக்கும்.

      நீக்கு
    4. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!! கண்ணாடியைக் கழட்டிட்டு ஏன் படிக்கிறீங்க? உங்களுக்கு முன்னாடியே வந்து கருத்துச் சொல்லிட்டேன்.

      நீக்கு
    5. வாங்க கீதா அக்கா... காலை வணக்கம். அழகிய விமர்சனத்துக்கு நன்றி.

      நீக்கு
    6. //கண்ணாடியைக் கழட்டிட்டு ஏன் படிக்கிறீங்க?// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீசா மேடம்... ஒரு மனுஷன் படிச்சுட்டு ஐபேட்ல பின்னூட்டம் எழுதம்போது அதுக்குள்ள நீங்க, அமாவாசை வேலைகளைக் கவனிக்காம குடுகுடுன்னு பின்னூட்டம் போட வருவீங்கன்னு எனக்கு யாரும் ஜோசியம் சொல்லலையே...

      நீக்கு
    7. நன்றி ஶ்ரீராம். நெ.த. நான் காலை அரைமணி நேரம் தினம் உட்காருவேன். அது வேலைகளைப் பொறுத்து ஐந்தரையிலிருந்து ஆறு ஆறரை அல்லது ஆறிலிருந்து ஆறரைனு இருக்கும். இன்னிக்கு தாமதமாக உட்கார்ந்ததால் ஏழு மணி வரை உட்கார்ந்தேன்.

      நீக்கு
    8. ஏன் துரை அண்ணன் இந்த மூவருக்கும் மட்டும்தான் காலை வணக்கம் சொல்லுவாரோ:)... நானும் மாத சந்தா செலுத்தி என் பெயரையும் சேர்க்கச் சொல்லப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)...

      கீசாக்கா கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன் கோச்சுக்காம ஸ்ரோங்கா ஒரு ரீ குடிச்சிட்டு இருங்கோ வாறேன்:)... இன்று வர முடியாது என நினைத்தேன் ஆனா கீசாக்காவுக்காகவே வந்தேன்ன்ன்ன்:)... அந்த ரெண்டு சாறியில ஒண்டு எனக்கு:)...

      நீக்கு
    9. அக்காவ் எனக்கு அந்த கல் சட்டி மட்டும் போதும் :) அது புளி காய்ச்சலோடு பார்த்ததில் இருந்து அதுமேல ஒரு கண்ணா இருக்கு :)

      நீக்கு
    10. ///
      Angel5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 12:28
      அக்காவ் எனக்கு அந்த கல் சட்டி மட்டும் போதும் :///

      ஆஆஆஆஆஆஆ சாறி உடுக்க வராது என ஒத்துக் கொண்டிட்டா:)) ஆனா தனக்கு சமைக்க வருமாம் எனச் சொல்றாவாம்ம்ம்ம்ம் ஹையோ ஹையோ:))

      நீக்கு
  2. இன்றைய மனித நேயத் தகவல்கள் வாசித்தவை தான்..

    ஆனாலும் தளத்தில் படிக்கும்போது தனியொரு மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல செய்திகள் நாலு இடத்தில் பரவி படிக்கக் கிடைக்கின்றன என்பதே மகிழ்ச்சிதான் இல்லையா?!!

      நீக்கு
  3. இன்றைக்கு சகோதரி ஸ்ரீமதி கீதா அவர்களது விமர்சனப்பதிவு...

    முத்துக் குவியலாக இருக்கிறது...

    என்னையும் குறித்தமைக்கு நன்றி.. மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம். கீதா அக்காவின் விமர்சனமா?

    பதிலளிநீக்கு
  5. ஆஹா, வெளி வந்துவிட்டதா? சனிக்கிழமை பொதுவாகவே அவ்வளவு சூடு பிடிக்காது. அதிரடியும், ஏஞ்சலும் இன்னிக்கு வரது சந்தேகம். ஆகவே அதிகம் கருத்துக்களை எதிர்பார்க்க முடியாதுனு நினைக்கிறேன். :) எப்படி ஆனாலும் இன்னிக்கு அமாவாசை என்பதால் என்னால் அதிக நேரம் உட்கார முடியாது! போயிட்டுப் பின்னர் வரேன், மதிய நேரத்தில்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... சனிக்கிழமைகள் அவ்வளவாக படிக்கப்படுவதில்லை. அதனால்தானே புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டது! பார்ப்போம்!

      நீக்கு
    2. /சனிக்கிழமைகள் அவ்வளவாக படிக்கப்படுவதில்லை.// - அப்போ 'நல்ல செய்திகள்' யாராலுமே படிக்கப்படுவதில்லையா விரும்பப்படுவதில்லையா? கொஞ்சம் ஆச்சர்யமாத்தான் இருக்கு. அதுவும் சரிதான். பொதிகைக்கு எங்க கூட்டம் வருது... எல்லாரும் மோசமான சீரியல்களில்தானே ஐக்கியம் ஆயிடறாங்க...

      நீக்கு
    3. பொதுவாக அப்படி வருத்தப் படலாம் நெல்லை. ஆனால் இதெல்லாம் சகஜம், எதிர்பார்க்கக் கூடியதே...

      நீக்கு
  6. சிவ.கார்த்திகேயன் தவிர்த்து மற்றவை புதியன.

    பதிலளிநீக்கு
  7. விமர்சனப் பகுதி இன்டெரெஸ்டிங் ஆக இருக்கிறது. ஒரு வாரத்தில் நடந்தவை சுருக்கமாக மனதில் ஓட்டிப்பார்க்க முடிகிறது. கீசா மேடம் நல்லா எழுதியிருக்காங்க. பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. புதிய பகுதி ரசிக்கப்படுவதில் சந்தோஷம்.

      நீக்கு
    2. நான் எழுதியபோது, 'ஒரு வார விமர்சனம்' பகுதி ரசிக்கப்படுமா என்று யோசித்தேன்... ஆனால் எழுதுபவர் நல்லா எழுதினா ரசிக்கப்படும்னு தோணுது. இன்னொன்று.... ஒருவேளை நல்ல ஒரு பகுதி விட்டுப்போயிருந்தாலோ இல்லை பின்னூட்டம் குறித்து எழுதியிருந்தாலோ, திரும்பவும் போய் படிக்கவேண்டும் என்று தோன்ற வைக்கும். நல்ல முயற்சி, ஐடியா... ஸ்ரீராம்.

      நீக்கு
    3. உண்மை... உண்மை. நன்றி நெல்லை.

      நீக்கு
  8. அந்தக் குழந்தை சஹானா நலமாக முன்னேற வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு நன்றி.
    ராமேஸ்வரத்தில் நங்கொடை கொடுத்த முதியவர்களுக்கு நமஸ்காரங்கள்.

    இது போல வாரா வரம் விமர்சனம் உண்டா. மஹா அருமை. கீதாவின் புத்தி வேகம் ஷடாப்தியை விட நூறு மடங்குகள் மேலே.
    என்னமாய் அலசி இருக்கிறார்.

    அன்பு கீதாமா, என்னையும் குறிப்பிட்டதற்கும் மிக நன்றி. நீங்கள் எல்லாம் உத்சாகமாக எழுதுவதே வயிறு நிரம்பிவிடுகிறது.

    எனக்கும் ஏதாவது தோன்றினால் எழுதலாம்.
    அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... கீதா அக்கா எழுத்துக்கு கேட்கணுமா? எனக்கு ஒன்றும் தெரியாது, எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லியே சகல விவரமும் தந்து விடுவார்.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. மூன்று செய்திகளும் நல்ல செய்திகள்.பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சொல்லவேண்டிய செய்திகள், மக்கள் சேவை, மகேஷன் சேவை, கல்வி சேவை அனைத்தும் மிகவும் சிறப்பானது.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், இந்த நல்ல செய்திகள் அதிகமாக வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்....

      நீக்கு
    2. படிச்சுட்டேன்.அப்புறம் வரேன்

      நீக்கு
    3. வாங்க வாங்க காமாட்சி அம்மா...

      உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. மெதுவா வாங்க.

      நீக்கு
    4. மருந்து,மாத்திரைகள் என்று ஒன்றும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. எழுதவும் விடுவதில்லை. முதல்வேலையாகப்,படித்துவிட்டாலே மனது திருப்தியாகி விடுகிறது. எங்கள் ப்ளாகுடன் என்ன பந்தமோ தெரியாது. எல்லாம் மனதிலே உலா வந்துவிடுகிறது. கீதாவின் விமரிசனம் நேரில் தனிப்பட்டு அலசுவதுபோல இருக்கிறது. பன்முக எழுத்தாளினி. காமாட்சி என்ற பெயர்கூட இரண்டு இடத்தில் வந்துவிட்டது. வயதுக்கும் மரியாதை என்று நினைத்துக்கொண்டேன். நன்றி கீதா. மிகவும் விவரமான விமரிசனம். நானும் ஸ்ரீராமை நினைத்து வியப்பதுண்டு. எங்கள் பிளாகில் எழுதுபவர்கள் எல்லோருக்கும் பாராட்டுகள். எனக்கும் நிறைய எழுத ஆசை. வயதான இந்த நாள் அனுபவங்களே எவ்வளவோ கதைகளாக எழுதலாம். எங்கு ஆரம்பித்து எங்கு போகிறேன்? இடையே சுயபுராணம் புகுந்து விடுகிறது. எல்லோருக்கும் பாராட்டுகள். கீதா ஸபாஷ். அன்புடன்

      நீக்கு
    5. //எங்கள் ப்ளாகுடன் என்ன பந்தமோ தெரியாது. //

      நாங்கள் பாக்கியசாலிகள் அம்மா.

      //எனக்கும் நிறைய எழுத ஆசை. வயதான இந்த நாள் அனுபவங்களே எவ்வளவோ கதைகளாக எழுதலாம். //

      அம்மா... உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்கிற ஒரே காரணத்தினாலேயே உங்களைக் கேட்காமல் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்களுக்கு சௌகர்யப்படும்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கூட எழுதி அனுப்பலாமே அம்மா... கதை, சமையல்...

      இதனுடன் கூட உங்கள் அனுபவக்குறிப்புகளை அவ்வப்போது எழுதி அனுப்பினால் எதிலாவது இணைத்து விடுவேன்.

      நீக்கு
    6. நன்றி காமாட்சி அம்மா! உங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்!

      நீக்கு
    7. காமாட்சி அம்மா, உங்களிடமிருந்து ஒரு கதை இங்கே OVERDUE ! ’சீதை ராமனை மன்னித்தாள்’ தொடரில் உங்களது கதை வித்தியாசமாக இருந்ததாக நான் நினைத்தேன். மீண்டும் அதை எபி-யில் தேடிப் படிக்கவேண்டும் என நினைத்ததுண்டு. மிகைப்படுத்தவில்லை. சரியாகவே சொல்கிறேன்.

      நீக்கு
    8. ஆமாம் ஏகாந்தன் சார் . கூடுதலா கிருஷ்ணர் எடு வில்லைன்னு சொன்ன அந்த குட்டி சம்பவமும் காமாட்ஷியம்மா சொன்னது நினைவிருக்கு .நானும் படிக்கணும் மறுபடியும்

      நீக்கு
    9. நன்றி ஸ்ரீராம். சாந்தியைத் தரும் பதில்.மனம் நிறைந்து விட்டது. அன்புடன்

      நீக்கு
    10. தனிப்பட்ட பின்னூட்டமாக இடவில்லை என்று நினைக்க வேண்டாம்.பிரமாதம். அன்புடன்

      நீக்கு
    11. ஏகாந்தன் அவர்களே அந்தக் கதைக்கு அது எப்படி என்று கால நிர்ணயமோடு உங்கள் பின்னூட்டம் முதல்தரமாக இருந்தது. ஓரளவு நிஜமில்லாமல் கதை எழுதினால் உருக்கமிராது. அதுதான் கதையின் அம்சம் அந்தக் கதையில். மிக்க நன்றி. அன்புடன்

      நீக்கு
    12. ஏஞ்சல் இவ்வளவு ஞாபகமா? அன்பிற்கு நன்றி.அன்புடன்

      நீக்கு
  11. பாரதி பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். வருமையில் செம்மை என்பதற்கு உதாரணமாக வாழும் முனியதங்கம்,தங்கப்பம்மாள் தம்பதியரை வணங்குகிறேன்.
    சஹானாவுக்கு உதவ முன்வந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானுமதி! உங்களைப் பார்த்து பல விஷயங்களில் வியந்து கொண்டிருக்கேன்.

      நீக்கு
  12. கீதா, நன்றாக அலசி ஆராய்ந்து விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள்.

    // கோமதி அரசு, வல்லி சிம்ஹன், மிகிமா, மனோ சாமிநாதன், ஆகியோர் அதிகம் சமையல் குறிப்பு இதில் எழுதுவதில்லை.//

    ஒரு காலத்தில் வித விதமாய் சமைக்கும் ஆசை இருந்தது இப்போது இல்லை. சமையல் குறிப்புகள் எழுதி குவித்த நோட்டுப்புத்தகங்கள் நிறைய இருக்கிறது.

    இப்போது பசிக்கு உணவு, விடிந்தால் என்ன செய்வது என்ற அலுப்பு இவைகள் வந்து விட்டன, உரவினர், விருந்தினர், குழந்தைகள் வந்தால்தான் நான் விஷேசமாய் சமையல் செய்கிறேன்.

    வாரசந்தையில் வாங்கி வந்த காய்களை வீணாக்காமல் சமைத்துவிடுகிறேன், அதுவும் வாங்கவில்லையென்றால் , பொடிவகைகள், வத்தல் வடகம் என்று ஓட்டி விடுவேன். குடியிருப்புக்குள் காய்கள் வராது.

    மூன்று நாள் சார் பெங்களூர் பயணம் போய் இருந்தார்கள். எனக்கு என்று சமைக்க அலுப்பு தயிர் சாதம் பருப்புபொடி, வத்தல் அப்பளம் அவ்வளவே.

    உற்சாக மன நிலையில் உணவு சமைத்தபோது படம் எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவேன்.

    இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் படி படியாக எடுத்தால் தான் நன்றாக இருக்கும்.


    //கோமதி அரசோ விருந்தினர்களையும் வரவேற்றுக்கொண்டு அவங்களோட வெளியேயும் போய்க் கொண்டு பறவைகளையும் படம் எடுத்துப் பதிவு போட்டுனு வெளுத்து வாங்குகிறார். //

    நானும் இங்கு இருக்கிறேன் என்று காட்ட பதிவுகள், படங்கள். என்னை உற்சாகபடுத்திக் கொள்ள இந்த பறவைகள் உதவுகிறது.

    வீட்டுவேலை, ஊர்பயணம், நிறைய தளங்கள் கைவசம் அதில் பதிவுகள் போடுதல், எல்லோர் தளங்களும் சென்று விரிவான பின்னூட்டம், பதிவுகள் அதில் நிறைய செய்திகள் விரிவான வரலாறு சேகரிப்பு என்று எவ்வளவு சுறு சுறுப்பாய் வேலை செய்கிறீர்கள்! என்று உங்களைப் பார்த்து நான் வியக்கிறேன்.

    ஓரு வார பதிவையும் அழகாய் விமர்சனம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா...

      நீங்கள் கதை எழுதி அனுப்பலாமே...

      கீதா அக்கா சொல்லி இருப்பது போல உங்களிடமிருந்து கட்டாயம் ஒரு சமையல் குறிப்பு உடனே எதிர்பார்க்கலாமா? பேராசை எனக்கு!

      //உற்சாக மன நிலையில் உணவு சமைத்தபோது படம் எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவேன்.//

      இங்கிருக்கும் குழந்தைகளுக்கும் அனுப்பலாமே....! தயிர் சாதம் கூட வித்தியாசமாக செய்திருந்தால் அதைக்கூட அனுப்பலாம். நீங்களோ புகைப்படங்கள் எடுப்பதிலும் மன்னி!

      நீக்கு
    2. ஸ்ரீராம் உங்கள் அழைப்புக்கு நன்றி.
      கதை எழுத முயற்சிக்கேறேன்.

      //உங்களிடமிருந்து கட்டாயம் ஒரு சமையல் குறிப்பு உடனே எதிர்பார்க்கலாமா? பேராசை எனக்கு!

      இங்கிருக்கும் குழந்தைகளுக்கும் அனுப்பலாமே....! //

      இங்குள்ள குழந்தைகள் சமையல் மன்னிகள் , மன்னர்கள் அல்லவா?

      மனோரமா சொல்வது போல்
      இவர்களுடன் நானுமா?


      கூடியவிரைவில் சமையல் குறிப்பு அனுப்புகிறேன்.

      நீக்கு
    3. நன்றி கோமதி அக்கா. சமையல் குறிப்பு என்று ஒற்றையில் சொல்லாதீர்கள் அக்கா... அவ்வப்போது இனி அனுப்பிக் கொண்டே இருக்கிறேன் என்று சொல்லுங்கள்!

      கதையும். தஞ்சையம்பதியில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறேன்!

      நீக்கு
    4. உங்கள் வேண்டுகோளை படித்தேன் ஸ்ரீராம்.
      அது சாத்தியபடுமா தெரியவில்லை முயற்சி செய்கிறேன்.

      சமையல் குறிப்புகள் அவ்வப்போது அனுப்ப வேண்டுமா?
      மற்றவர்களை உற்சாகப்படுத்தி எழுத வைப்பதில் வல்லவர்தான் நீங்கள்.
      சாரிடம் சொன்னபோது நீ செய்வதை நினைவாய் படம் எடுத்து அனுப்ப வேண்டியது தானே! என்கிறார்கள்.
      உங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி.

      நீக்கு
    5. //சமையல் குறிப்புகள் எழுதி குவித்த நோட்டுப்புத்தகங்கள் நிறைய இருக்கிறது.// - கோமதி அரசு மேடம்... அவைகளை ஸ்கான் பண்ணிப்போட்டாலும் (சைவம்) மற்றவர்கள் செய்துபார்க்கலாமே....

      நீக்கு
    6. நெல்லைத் தமிழன் சமையல் குறிப்பு எல்லாமே சைவம் தான்.என் எழுத்து தலை எழுத்தாக இருக்கும், சின்ன வயதில் அவசர கிறுக்கலகாக இருக்கும். கைவேலை, வைத்தியக்குறிப்புகள், பிடித்த ஆன்மீக பகிர்வுகள் என்று கலவையாக இருக்கும்.

      நீக்கு
    7. படங்களுடன் கூடிய குறிப்புகளுக்காகக் காத்திருக்கிறோம் கோமதி அக்கா.

      நீக்கு
    8. //சாரிடம் சொன்னபோது நீ செய்வதை நினைவாய் படம் எடுத்து அனுப்ப வேண்டியது தானே! என்கிறார்கள்.
      உங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி.//

      ஸாருக்கு நன்றி.

      நீக்கு
    9. கட்டாயமாய் அனுப்புங்கள் கோமதி அரசு. நீங்கள் ஒரு முறை பகிர்ந்த கூட்டாஞ்சோறு பதிவு/பின்னூட்டம்? அதன் சுட்டியை இன்னமும் பத்திரமாய் வைத்திருக்கிறேன். செய்யத் தான் நேரம் வரலை. நாலைந்து பேர் இருக்கையில் செய்யணும். இரண்டு பேருக்கு நிறைய ஆயிடும். அதிலும் நீங்கள் நெல்லைச் சிறப்புச் சமையல்கள் நிறையத் தெரிந்து வைத்திருப்பீர்கள். அவற்றைப் பகிரலாம். எனக்கும் படம் எடுப்பது தான் பிரச்னை! சமைக்கும்போது நினைவு வராது. அதிலேயே மனம் குவிந்திருக்கும். நினைவு வரும்போது அன்னிக்கு வேறே ஏதேனும் சமைக்கும்படி இருக்கும்.

      நீக்கு
    10. உங்கள் பாராட்டுக்கு நன்றி கோமதி.

      நீக்கு
    11. நிறைய சமையல் குறிப்புகள் அழகாய் படத்துடன் போட்டு இருக்கிறீர்கள் கீதா.
      சமையல் செய்யும் போது அதிலேயே மனம் குவிந்திருந்தால்தான் அது சுவையாக அமையும்.
      சமையல் குறிப்பு அனுப்புகிறேன்.

      உங்கள் அழைப்புக்கு நன்றி.


      நீக்கு
    12. கோமதி அக்காவின் கைவண்ணத்தை நானும் எங்கும் பார்த்ததில்லை.. ஆவலோடு வெயிட்டிங்.. உடன் வரமுடியாவிடினும் வந்து பார்ப்பேன் என சொல்லிக் கொள்கிறேன்ன்ன் அட்வான்ஸ் ஆக:).

      நீக்கு
  13. கீதா அக்காவின் விமர்சனம் சிறப்பு. கொஞ்சம் நீளம் அதிகமோ?(இது விமர்சனத்தைப் பற்றிய என் விமர்சனம் ஹிஹி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாணி வேறு பானு அக்கா... அவர்கள் பாணி வேறு. அவரவர்கள் பாணியில், அவரவர்கள் பார்வையில் இவற்றைப் படிக்கும்போது சுவாரஸ்யம்தான்.

      நீக்கு
    2. ஐயோ.... பா.வெ. மேடம் ஒரு வார விமர்சனம் எழுதினார்கள் என்றால் எப்படி எழுதுவார்கள் என்று யோசிக்கிறேன்.

      சனி - நல்ல செய்திகள் இன்று, ஞாயிறு-படங்கள் எப்போதும்போல், திங்கள்-நல்ல சமையல் குறிப்பு, செவ்வாய்-கதை நன்றாக இருந்தது புதன் - இன்றைய கேள்வி பதில்களை ரசிக்க முடிந்தது வியாழன் - பயணக் கட்டுரை சூடு பிடிக்கிறது வெள்ளி-பாடலை ரசித்தேன்... மொத்தத்தில் சென்றவாரம் அனைத்தும் அருமை... ஆளை விடுங்கள்.

      இப்படி இருக்குமோ?

      நீக்கு
    3. ஹாஹாஹா, பானுமதி! ஏற்கெனவே ஶ்ரீராமிடம் சொல்லிட்டேன். வளவளனு இருக்கும் என்பதோடு இல்லாமல் எடிட் பண்ணிக்கோங்கனும் சொன்னேன். அவர் தான் கேட்கலை! :))) நெ.த. சொல்லி இருப்பதும் நல்லாத் தான் இருக்கு.

      நீக்கு
  14. விமரிசனத்தை மிகவும் இரசித்துப் படித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க கீ சா மேடம்! நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

    வறுமையிலும், தங்களுக்கென இறைவன் கொடுத்தப்பணத்தை அவருக்கே திருப்பித்தர நல்ல மனது வேண்டும். அத்தகைய நல்ல மனதை பெற்ற அந்த வயதான முதியவர்களை வாழ்த்துவதற்கு பதிலாக வணங்குகிறேன்.

    அனைவருக்கும் சமூக சேவை செய்து வரும் திருமதி பாரதி அவர்களுக்கும், மின்சாரம் இல்லாமல், தங்குமிடம் இல்லாமல் அவதியுற்ற நேரத்திலும் நல்ல மதிப்பெண் பெற்ற சஹானாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.அவருக்கு உதவ வந்த அனைவரும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      பாஸிட்டிவ் செய்திகள் படித்து பாராட்டியதற்கு நன்றிகள்.

      நற்செயல்கள் பெருகட்டும். எனக்கும் அதிக செய்திகள் கிடைக்கட்டும் என வாழ்த்துங்கள்!

      நீக்கு
    2. நன்றி கமலா!விரைவில் உங்கள் கருத்துடன் கூடிய விமரிசனம், சமையல் குறிப்பு ஆகியவற்றை எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  16. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    என் யூகம் தவறாக விட்டது. கீதாரெங்கனை கொஞ்ச நாட்களாக காணவில்லையே என்று நினைத்து அவ்விதம் யூகித்து விட்டேன்.

    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் மிகவும் அழகாக, அருமையாக சென்ற வார பதிவுகளை விமர்சனம் செய்து உள்ளார். அவர் எழுத்துக்கள் என்றுமே சிறப்பானவை. நான் இங்கு படிக்கும் கொஞ்ச நாட்களாகவே இப்போதுதான் அவர் எழுதும் நடை கண்டு மிகவும் கவரப்பட்டு அவர் பதிவுகளை விடாது படித்து வருகிறேன். ஆனால் அவர் நீண்ட காலமாகவே சுவாரஸ்யம் குன்றாது எழுதி வருகிறார். சுவாரஸ்யமாக எழுதும் அவரது இன்றைய விமர்சன எழுத்துக்களைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.

    சகோதரி அவர்கள் எல்லா விஷயங்களிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டு சிறப்பாக எழுதி வருபவர். சிறந்த நினைவாற்றலுடன், பழமையான விஷயமாக இருந்தாலும், புதுமையாக இருந்தாலும் அனைத்தையும் ஒன்று விடாமல் தெரிந்து வைத்துக்கொண்டு சளைக்காமல் எழுதுவதில் மிகச் சிறந்தவர். (அவருக்கு முன் நானெல்லாம் ஸ்ரீராமருக்கு உதவி செய்த அணில்தான்.) அப்படியும் இரண்டு தடவை என்னையும் அவர் குறிப்பிட்டு எழுதியமைக்கு மிகுந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூகங்கள் சுவாரஸ்யமானவை கமலா அக்கா. யூகங்கள் மெய்யானால் ஒரு சந்தோஷம். மாறினால் ஒரு சுவாரஸ்யம்!

      கீதா அக்கா ஒரே சமயத்தில் பல வலைத்தளங்கள் வைத்து எழுதி வந்தவர். இப்போதுமே குறைந்தது மூன்று தளங்களில் எழுதி வருகிறார். தனது பெருமையை நினைக்காமல் அடுத்தவர்களை பாராட்டுவது அக்காவின் வழக்கம்.

      அவர் நினைவாற்றலும் நான் வியக்கும் ஒன்று. குறிப்பாக ஆன்மீக விஷயங்களில்.

      நீக்கு
    2. ஸ்ரீராம்... கீசா மேடத்திடம் நான் வியப்பது 'உங்கள் கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு' என்ற ஆட்டிடியூட். எனக்குலாம் ஆர்க்யூமெண்ட்ல டென்ஷன் ஆயிடும்.

      நீக்கு
    3. நான் அவ்வளவாக டென்ஷன் ஆவதில்லை என்று நினைத்துக் கொள்கிறேன். அதிராவைப் பார்த்து இதில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

      நீக்கு
    4. நன்றி கமலா. உங்கள் சமையல் குறிப்புக்களும் இடம் பெற்றுப் பல நாட்கள் ஆகின்றன. நீங்களும் உங்கள் பாணியில் ஶ்ரீராம் அழைக்கும்போது விமரிசனம் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
    5. நெல்லைத் தமிழரே,நீங்கள் கண்டு வியக்கும் என்னோட ஆட்டிட்யூட் எங்க புக்ககத்தில் வேறு விதமாக விமரிசிக்கப்படும். அவ சொல்வதைத் தான் சரினு சாதிப்பா என்பார்கள்! இஃகி,இஃகி, இஃகி. அதுக்கும் பழகிட்டேன்! மற்றபடி விவாதங்களைத் தவிர்த்தும் அதிலிருந்து ஒதுங்கியும் வருகிறேன். அதிரா டைப்பே வேறே!

      நீக்கு
    6. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

      தங்கள் மறுபதிலுக்கு நன்றி.

      /உங்கள் சமையல் குறிப்புக்களும் இடம் பெற்றுப் பல நாட்கள் ஆகின்றன. நீங்களும் உங்கள் பாணியில் ஶ்ரீராம் அழைக்கும்போது விமரிசனம் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்./

      இந்த சமையல் பதிவு ஒரு வழியாக ஜாலியாக எழுதி விடலாம். (அதுவே இப்போது ஒரு வாரத்தில் மறுசுழற்சியாக மற்றொரு விமர்சனத்திற்கு ஆளாகுமே என நினைக்கும் போது, எச்சரிக்கையாகவே தயாரித்த உண(ர்)வெனினும் கொஞ்சம் கூடுதலாகவே தயக்கம் மனதில் நின்று பரி(றி)மாறியது எப்படியோ.? என தடுமாற்றம் அடைய வைக்கும். ஹா.ஹா.ஹா.) ஆனால் இந்த விமர்சனம் என்னால் முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. (ஒரு காலத்தில் வலைச்சரம் வலம் வரும் போது அதன் தொகுப்பளார்களை பார்த்து அப்போதெல்லாம் எப்படி இவ்வளவு திறமையாக எழுதுகிறார்கள்.. என ஆச்சரியப்பட்டுள்ளேன்.) இங்கும் ஒரு வாரப் பதிவையும், கருத்துக்களையும் நினைவில் வைத்துக்கொண்டு அதற்கேற்றபடி எழுதுவது கொஞ்சம் (கொஞ்சமென்ன நிறையவே) சிரமமான வேலைதான். எழுதுபவர்களில் முன்னோடிகளான நீங்களெல்லாம் எழுதுவதை படித்து படித்து பின் என் எழுத்து நிலையும் நல்லதொரு விமர்சன பக்குவத்திற்கு வசப்படலாம். அதுவரை எட்டி நின்று தங்களைப் போன்றோர் எழுதும் அழகை ஆராதிக்க மட்டுமே ஆசைப்படுகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்த தங்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. //ஸ்ரீராம்.4 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:53
      நான் அவ்வளவாக டென்ஷன் ஆவதில்லை என்று நினைத்துக் கொள்கிறேன். அதிராவைப் பார்த்து இதில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.///

      ஹா ஹா ஹா நன்றி ஸ்ரீராம்ம்ம்...
      எனக்கு விதியில் நம்பிக்கை நிறைய இருக்கு, அதனால டென்ஷன் ஆக வேண்டிய இடங்களில்,, நினைப்பேன்.. இப்போ எனக்கொரு கெட்ட பெயரோ அல்லது நல்ல பெயரோ வரப்போகுதெனில்.. அது விதியில் இருப்பின்.. யாரால தடுக்க முடியும்... அதனால டென்சன் ஆகும் இடங்களில், நடப்பது நடக்கட்டும்.. என அமைதியாகிட்டால் நல்லது:).

      நீக்கு
    8. /// அதிரா டைப்பே வேறே!///
      ஹா ஹா ஹா கீசாக்கா.. இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்:)).. அதிரா என்ன டைப்பூஊஊஊ:))...
      நானும் பின் விளைவுகளையோ.. அல்லது இதனால எனக்கு கெட்ட பெயர் வந்திடுமோ எண்டெல்லாம்,
      சிந்திச்சு, சிலரைப்போல சேஃப் ஆக இருக்க நினைப்பதில்லை.. மனதில வருவதை சொல்லிடுவேன்ன்.. எனக்கு முக்கியம் நீதி நியாயம் கடமை நேர்மை எருமை:)) ஹா ஹா ஹா:))..

      நீக்கு
    9. Gowthaman sir my 16th question is on the wayyyyyyyyy

      நீக்கு
    10. ஹலோ பூஸ் :) safe ஆக இருப்பதில் தவறேதுமில்லை என்பது எனது அனுமானம் .
      நாம் மனதில் பட்டத்தையெல்லாம் சொல்லலாம் ஆனா அது இடம் சூழல் பொறுத்து பல்வேறு பக்க எதிர் சைட் விளைவுகளை உண்டாக்கலாம் .ஆகவே நான் பதில் சொல்லும்போதும் அங்கேயே படிப்பவர் பின்னால் ஒளிந்திருந்து கமெண்ட்டாமல் படிப்பவர் என அனைவரையும் உத்தேசித்தே safe பதில்களை கூறுவேன் .
      நானா safe ஆக தான் இருப்பேன் நான் தான் வந்தபின் காப்போனாச்சே :) அடி பட்டவங்களுக்கே வலி மற்றும் வழி தெரியும்

      நீக்கு
    11. @sriram nooooooooooo ஹையோ நம்பாதீங்க ஸ்ரீராம் நம்பாதீங்க அவ்வளவும் சும்மா ..ஒருதரம் மேடம் பதிவில் ஒன்றை கவனிக்கலை னு எனக்கு 30 மெயில் திட்டி போட்டு :))))))))))))))

      நீக்கு
    12. இப்போ நான் ரென்ஷன் ஆகிறேனோ என செக் பண்ணுறாவாமாம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா ஜாமத்தில வந்து கொமெடி பண்ணிக்கொண்டு:)....

      கெள அண்ணன் அந்த 16 ஆவது கொஸ்ஸன் வரமுன்பு மொடரேசன் போட்டு மறைச்சிடுங்கோ கொஸ்ஸனை... ஜொள்ளிட்டேஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)...

      நீக்கு
    13. haaahaa :) will send later .postponed for next week

      நீக்கு
    14. ஏஞ்சல் சேஃப் பதில் ஹைஃபைவ்! யெஸ் உங்க கருத்து மீக்கும் அப்படியே சொன்னாலும் அதை மனம் நோகாமல் சொல்லிட்டுப் போகலாம் என்றும் நினைப்பதுண்டு....நீங்க இதை வைச்சு ஒரு கேள்வி கூடக் கேட்டிருந்தீங்க இல்லையா...புதன்...

      கீதா

      நீக்கு
  18. கோவிலுக்கு பணத்தை கொடுத்த வயதான தம்பதியினர் அதை அனாதை இல்லங்களுக்கு நேரடியாக செலவு செய்யலாம். அதை இறைவனும் ஆசீர்வதிப்பாரே...

    விமர்சனம் முரடாக இருக்கிறதே... வாழ்த்துகள்.

    நான் மோடியிடமே கேள்வி கேட்டு, அவர் தினறி ஓடும்போது பிடிக்கப்போய் நான் கதவில் முட்டி அலறியபோதுதான் தெரிந்தது கனவு என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி.... உங்க பாயிண்ட் சரியானதுதான். கோவில் அன்னதானத்துக்கோ இல்லை நேரடியாக நாம் காணும் செலவுகளுக்கோ இல்லை அனாதை இல்லங்களிலும் நாம் போய் நேரடியான செலவைப் பார்க்கும்படியாக இருப்பவைகளுக்கோ செலவு செய்வது சிறப்புன்னுதான் தோன்றுது. இங்க, குப்பைக் கூடைகளிலிருந்து ஏதேனும் உபயோகமானதைத் தேடி தினம் தினம் 'குறவர்' குடும்பம் வரும். மனதுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கும். டிரெஸ்லாம் எடுத்துவைக்கிறேன், உங்க போன் நம்பர் கொடுங்கன்னு கேட்டதற்கு போன்லாம் இல்லைன்னு சொன்னாங்க. மனதைப் பாதிக்கும் நிகழ்வு.

      நீக்கு
    2. பாஸிட்டிவ் செய்தியாக வெளியிட்டாலும் எனக்கும் கில்லர்ஜியின் ​கருத்துதான். ஆனாலும் இதை அவர்கள் மன விலாசத்துக்காக வெளியிட்டேன்.

      நீக்கு
    3. கில்லர்ஜி, விமரிசனம் படிக்கலையா? இதைப் போய் முரடுனு சொன்னா எப்பூடி? முன்னால் எல்லாம் கோயில்களில் சாப்பாடு கொடுப்பதே இம்மாதிரி ஆதரவற்றவர்களுக்கும் உணவுக்கு வழியில்லாமல் தவிப்பவர்களுக்கும், வெளி ஊர்களில் இருந்து வரும் யாத்ரிகர்களுக்கும் தான்! கோயில் மண்டபங்களில் கைகளில் பாத்திரங்களோடு வரிசையாக உட்கார்ந்திருப்பதை மீனாக்ஷி கோயில் ஆடி வீதியிலேயே பார்த்திருக்கிறேன். கோயில் பிரசாதங்களின் உண்மையான தாத்பரியமும் இது தான்! ஆனால் இப்போது கோயில் வியாபாரஸ்தலமாக ஆகி விட்டது! என்ன செய்ய முடியும்? அந்த இறைவன் தான் இதை எல்லாம் மாற்றணும்.

      நீக்கு
  19. கீதா சாம்பசிவம் மேடம் விமர்சனத்தை ரசித்தேன். எழுத்து நடை ரசிக்கவைத்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான எழுத்து. #,$,& யார் யார் என்று எழுதியிருக்கீங்க. கேஜிஎஸ் பதில் எழுதுவார் என்று நான் நினைத்துப்பார்க்கவில்லை. குறைகூறாமல் எழுதியிருப்பதை ரசித்தேன்.

    //எல்லோரும் என்ன தான் பாராட்டினாலும்// - பகல் கனவு காணாதீங்க. மொக்கை பதிவுன்னா மொக்கைன்னுதான் சொல்லியிருக்கோம். ஆனா பெரும்பாலும் நீங்க நல்லாவே எழுதறீங்க. சரக்குக்கு ஏற்ற பாராட்டு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைகள் இருந்தால் அதையும் குறிப்பிடுங்கள். அவற்றையே விரும்புகிறோம். விமர்சனம் என்பது வெறும் பாராட்டாகவே சென்றுவிடக் கூடாது.

      நீக்கு
    2. மொக்கையை மொக்கைனு நீங்க சொல்லவே வேண்டாம் நெல்லைத் தமிழரே! நானே மொக்கைனு லேபல் போட்டுடுவேன்! :P :P :P :P

      நீக்கு
  20. முதல் விமர்சனம் எழுதிய நெ.த.பின்னூட்டங்களையும்(பெரும்பாலும் அவைகளைத்தான்) விமர்சித்திருந்தார். அடுத்து வரப்போகிறவர்கள் அதையே முன் மாதிரியாகக் கொண்டு விடுவார்கள் என்று நினைத்தேன். கீதா அக்காவா கொக்கா? தனக்கே உரிய தனிப் பாணியில் விமர்சித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கீதா அக்காவா கொக்கா?//

      அதானே...

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எப்போவுமே என் வழி தனிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ வழினு சொல்லிட்டு இருக்கேனே! இதிலே மட்டும் நெல்லையக் காப்பி அடிப்பேனா என்ன?

      நீக்கு
  21. //ஒரே குழந்தை போதும் என்னும் நினைப்பு சரியாஎன்னும் கேள்விக்கும் பதில் சொல்லலை! நழுவிட்டார்.//
    ஒருவர் சொல்லியிருந்தார். வாசகர்கள் தொடரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான வாசகர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை! ஆனால் இது எவ்வளவு பெரிய தப்பு என்பது போகப் போகத் தெரியும். இப்போப் பெண்கள் இல்லாமல் தவிக்கிறாப்போல் வரும் காலம் ஆண்கள் இல்லாமல் தவிக்கப்போகிறது! :(

      நீக்கு
    2. எனக்கு நினைவிருந்திருக்காது.

      ஒரு குழந்தை என்பது மிகத் தவறான விஷயம். குறைந்தது இரண்டு குழந்தைகளாவது ஒரு குடும்பத்துக்கு இருக்கணும். மூன்றுபேர் இருந்தால் மிகச் சிறப்பு. ஒரு குழந்தை பெறுபவர் பொதுவா இரண்டு மூன்று குழந்தைகள்னா வளர்க்க கஷ்டப்படணும், செலவு, தாங்கள் வாழ்வை எஞ்சாய் பண்ண முடியாதுன்னு நினைக்கறாங்க. விதிவிலக்குகள் உண்டு.

      என் தனிப்பட்ட எண்ணம், 27க்குள் திருமணம். 30, 35க்குள் குழந்தைகள் பெறுவது முடியணும். 60க்குமேல் நம்ம வாழ்க்கையை கவனிக்க அது உதவும்.

      தனியா வளரும் குழந்தை பெரும்பாலும் சரியா வளர்வதில்லை, வளர்க்கப்படுவதில்லை. சரி தவறு போன்றவற்றை கற்றுக்கொள்ளாது, அட்ஜஸ்ட்மென்ட் தெரியாது. விதிவிலக்குகள் உண்டு.

      இன்ன குழந்தை வேண்டாம் என நினைப்பது தவறு. இப்போவும் வரும்காலத்திலும் குழந்தையின் “பால்-ஆண்,பெண்” பெரிய தாக்கம் தராது. இருபாலாரும் படிப்பர், வேலைக்குச் செல்வர்.

      நீக்கு
    3. # இவரும் $ இவரும் பதில் சொல்லி இருந்தார்கள். & கௌதமன் சார் தான் சொல்லலை. நெ.த. நீங்க சொல்லுவதெல்லாம் சரி தான். ஆனால் இப்போது திருமணம் செய்துக்கும்போது பெண்களுக்கே 30 வயது ஆகி விடுகிறது. குழந்தைப் பிறப்பையும் தள்ளிப் போடுகிறார்கள். நடு வயதில் குழந்தை பிறந்தால் அதோடு ஓடி ஆடி வளர்க்க முடியுமா? அல்லது 60+வயதான பெற்றோருக்குத் தான் பார்த்துக்க முடியுமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. 35 வயதில் குழந்தை பெற்றெடுக்கும் ஒரு பெண்ணுக்கு மெனோபாஸும் சீக்கிரம் வந்தால் அதனால் ஏற்படும் மனோநிலைகளால் அவள் மட்டுமல்ல அந்தச் சின்னக் குழந்தையும் பாதிக்கப்படும். மருத்துவ ரீதியாகவே 22 வயசுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது என்கின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் பெண்ணுக்கு 20 வயசில் திருமணம் செய்யக் கூடாது என்பதும் பேசுகின்றனர். 20 வயசில் திருமணம் ஆனால் தானே 22 க்குள் குழந்தை பிறக்கும்! இப்போதைய சூழ்நிலையே பாராட்டும்படி இல்லை. இதைச் சொன்னால் கட்டுப்பெட்டி, நாகரிகம் இல்லை, forward thinking இல்லை என்பார்கள். எச்சல், பத்துக்கலந்தால் ஊறுகாய்கள் முதல் சாப்பாடு வரை கெட்டுப் போகும், கலக்க வேண்டாம் என்று சொல்வதாலேயே பலரும் என்னிடம் பரந்த மனப்பான்மை இல்லை என்பதாகச் சொல்லுவார்கள். பாக்டீரியல் இன்ஃபெக்‌ஷன் வரும் என்று சொன்னால் சிரிப்பார்கள்.

      நீக்கு
    4. //22 வயசுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது// - காலம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. 25+க்கு அப்புறம்தான் திருமணத்தைப்பற்றியே யோசிக்கறாங்க பெண்கள். அதுனால இந்த சப்ஜெக்டை தொடாம இருப்பதுதான் நல்லது.

      //மருத்துவ ரீதியா//-இது சந்தேகம்தான். 22 வயசு என்பது ரொம்பச் சின்ன வயசு. பி.எஸ்.ஸி மட்டும் முடிக்கும் வயசு இல்லைனா பி.டெக் முடிக்கும் வயசு. என்ன மெச்சூரிட்டி இருக்கும் குழந்தை வளர்க்க? அந்தக் காலம் மாதிரியா, வகைக்கு ரெண்டு என்பதுபோல ஒவ்வொரு 10 வயசு இடைவெளிக்கும் ரெண்டு பெண்கள்/தாய்க்குலங்கள் இருப்பதுபோல. அப்போ, 19 வயசுப் பெண் குழந்தை பெற்றால், பார்த்துக்கொள்ள ஆட்கள் இருந்தன. இப்போ, 4 சுவர் மட்டும்தானே இருக்கு..

      நீக்கு
    5. @நெல்லைத்தமிழன்
      விதி விலக்குகள் எல்லா இடங்களிலும் விஷயங்களிலும் இருக்கு நெல்லை தமிழன் :)
      எல்லாமே பெற்றோர் வளர்ப்பில் தான் இருக்கு .paralysis வந்த அசைய முடியா நிலையில் இருக்கும் அம்மாவை கவனிக்கும் எத்தனையோ ஒற்றை பிள்ளைகள் இருக்காங்க .வித்யா மேடம் கூட அவங்க பக்கத்து வீட்டு பெண் ஒரு திருமணவயதில் இருப்பவர் தன தாயை அன்போடு கவனிப்பதை பகிர்ந்திருக்காங்க .ரெண்டுமூணு பிள்ளை பெற்றவங்க எந் வீட்டில் தங்குறதுன்னு பிள்ளைங்க பாச :) போர்ராட்டத்தில் ஓல்ட் ஏஜ் ஹோமில் தள்ளப்பட்டவங்களுமுண்டு . அடங்காபிடாரியாய் வளர்க்கப்பட்டு பெற்றோருக்கு மனப்பாரத்தையும் ஒரு பெற்றோருக்கு மரணத்தையும் கொடுத்த ஒற்றை பிள்ளைப்பற்றியும் கூட அறிவேன் ..எல்லாம் பெற்றோர் வளர்ப்பில் தான் இருக்கு .பல தம்பதிகளில் ஒற்றைக்குழந்தை என்பது அவர்கள் முடிவல்ல ..
      தன்னம்பிக்கையுடன் ,அன்பு பாராட்டி அனைவருக்கும் உதவும் அனைவரையும் மதிக்கும் மனப்பாங்குடன் பண்புடன் வளர்க்கப்படும் எந்த குழந்தையும் நல்லதையே வெளிப்படுத்தும் .
      // எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! - பின்
      நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே!
      அன்னை வளர்ப்பதிலே!// என்ற பாடல் வரிகளுடன் என் குட்டி உரையை முடித்துக்கொள்கிறேன்

      இப்படிக்கு ஒற்றை குழந்தை பெற்றோர் சங்கம் சார்பாக

      ஏஞ்சல் :))))))))))))))))

      நீக்கு
  22. //கடன் வாங்கிக் கொண்டு திரைப்படம் போனவர்களைப் பார்த்திருக்கேன்.// எங்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் அவள் கணவன் அரிசி வாங்க கொடுத்த பணத்தில் சினிமா பார்த்து விடுவாள். அவள் கணவன் அவளை தெருவில் போட்டு அடித்தும், எல்லோரும் அறிவுரை கூறியும் அவள் திருந்தவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸிடிவ் செய்திகள் பேப்பரில் படித்து விடுகிறேன். அருமையான செய்திகள். அன்புடன்

      நீக்கு
    2. நன்றி காமாட்சி அம்மா.

      நீக்கு
    3. பானு அக்கா... எனக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

      தஞ்சாவூரில் நான் பள்ளியில் படித்த காலத்தில் பருமனான ஒரு இளைஞன் பத்து பைசா பிச்சை கேட்டு மாணவர்களான எங்களையும் அணுகுவார். 'பசிக்கு இட்லி சாப்பிட' என்பது யாசகத்துக்கான அவர் வேண்டுகோள் வாசகம். ஆனால் பனிரெண்டு மணிக்குமேல் அங்கிருக்கும் திரை அரங்குகளில் நல்ல வசதியான இருக்கையில் அவரைக் கண்டிருக்கிறோம்!

      நீக்கு
    4. வேலை செய்யறவங்க மட்டும் இல்லை பானுமதி, அம்பத்தூரில் எங்க வீட்டுக்குப் பக்கமாக இருந்த ஒருத்தர் அப்படித் தான் ஒரு படம் விட மாட்டார். கணவர் அலுவலகம், குழந்தைகள் பள்ளினு போனதும் மாட்னி ஷோ போயிட்டு வந்துடுவார். கையில் காசு இல்லைனா அக்கம்பக்கம் காசு வாங்கிக் கொண்டு போவார்.

      நீக்கு
  23. ஓஓஓஓ மை கடவுளேஏஏஏஏஏஏ என்ன நடக்குது இங்கே:)...

    ///பதிவுகள் பற்றிய கருத்துக்களை அதிகம் மேயவில்லை. ////
    என்னை விடுங்கோ என்னை விடுங்கோ இதைப் படிச்ச பின்பும் இந்த உசிறு:) இந்த உடம்பில இருக்குமோஓஓஓஓ:) இதோ போகிறேன்ன்ன் தேம்ஸ்க்கு:)... பயர் எஞ்சினுக்கு அடிச்சு என்னைக் காப்பாத்துங்கோஒ:)....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஐந்து மணி நேரத்துக்கு தேம்ஸ் கரையிலேயே காத்திருங்க. தள்ளி விடுவதற்கு வந்துகொண்டே இருக்கிறேன். என்ன ஒரு வருத்தம்னா, டிசம்பர், ஜனவரில தள்ளிவிட்டிருந்தா, ஒரு டிரிப்போட போயிருக்கும். இப்போ சம்மர் என்பதால் திரும்பவும் நீங்க தப்பிச்சுட்டீங்கன்னா, திருப்பி ஒரு தடவை பயணம் மேற்கொள்ளணுமே... என்ன பண்ண?

      நீக்கு
    2. ஹாஹாஹா, அதிரடி, தேம்ஸ் கரையிலேயே நில்லுங்க. நெ.த. வந்துட்டே இருக்கார்.

      நீக்கு
    3. /திருப்பி ஒரு தடவை பயணம் மேற்கொள்ளணுமே... என்ன பண்ண?//

      டோன்ட் worry :) நாநும் புறப்படுறேன் நீங்க அவங்கள மிஸ் பண்ணிட்டா நானே உங்களை தேம்ஸில் தள்ளிடறேன்

      நீக்கு
    4. //நெல்லைத்தமிழன்4 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:52
      ஒரு ஐந்து மணி நேரத்துக்கு தேம்ஸ் கரையிலேயே காத்திருங்க. தள்ளி விடுவதற்கு வந்துகொண்டே இருக்கிறேன்//


      தேம்ஸ் க்குப் போய், ராகுகாலம் முடியும்வரை காத்திருந்து:), முடிஞ்சதும் குதிப்பதற்காக வலது காலை எடுத்தேனா:)).. என் மொபைலில் டொயிங்:) என நோட்டிபிகேசன் வந்துதா.. சரி பார்த்திட்டுக் குதிக்கலாமே எனப் பார்த்தனா:).. நெல்லைத்தமிழனின் மெசேஜ் பார்த்ததும்.... என் ஆச்சிரமத்துக்குக் கூப்பிட்டால் வந்து நன்கொடை தர முடியாதவருக்கு:).. அதிராவைத்தள்ளி விட விசாக் கிடைச்சிடும்போல இருக்கே ஜாமி எனும் நினைவு வந்து:).. என் முடிவை மாத்திட்டேன்ன்:)) பூஸோ கொக்கோ:)).. குதிக்காமல் திரும்பிட்டேன்ன்:))..

      /////Angel
      டோன்ட் worry :) நாநும் புறப்படுறேன் நீங்க அவங்கள மிஸ் பண்ணிட்டா நானே உங்களை தேம்ஸில் தள்ளிடறேன்///

      ஆஆஆஆஆஆஆ இதென்ன இது என் ஐஸ்:) ஐயே:)) என்னால நம்ப முடியல்ல:)).. அஞ்சு,.. நெல்லைத்தமிழனைத் தள்ளப்போறாவாமே.. ஏன் என்னாச்சோ?:)) ஹா ஹா ஹா டேவடை கிச்சின் பற்றிய விமர்சனத்தில கொதிச்சுப்போய்:).. இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பா:)).. நான் தேம்ஸ் சைட்டில நிண்டு கச்சானும் பக்கோடாவும் சாப்பிட்டுச் சாப்பிட்டுப் புதினம் பார்க்கப்போறேன்ன்:)) ஹா ஹா ஹா:))... ஓஓஒ லலலாஆஆஆஆஆஆஆஆஆ:))

      நீக்கு
  24. பாரதியின் சேவை போற்றத்தக்கது

    பதிலளிநீக்கு
  25. பாஸிட்டிவ் செய்திகளும் அருமை! சென்றவார பதிவுகள் குறித்த திருமதி கீதாசாம்பசிவம் அவர்களின் விமர்சனமும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. https://media1.tenor.com/images/a1705a7e2e6ad09f8c6f801b0af080a8/tenor.gif?itemid=7525573

    hAAA HAAA :) NAANE 100 :))))))))))

    பதிலளிநீக்கு
  27. கீதாக்கா சூப்பரா விமரிசிச்சிருக்கீங்க எப்பவும் சனிக்கிழமை பிஸிதான் அதனாலேயே பார்த்துட்டு போய்டுவேன் இன்னிக்கு ஓடி வந்துட்டேன் :)

    பதிலளிநீக்கு
  28. பாசிட்டிவ் செய்திகள் எப்பவும் போல் அருமை இதில் சிவகார்த்திகேயன் உதவி செய்த ஏழை மாணவி சஹானா செய்தி மட்டுமே நான் அறிந்தது மற்றவை புதிய செய்திகள்

    பதிலளிநீக்கு
  29. கீதா சீனியரின் விமரிசனக் கட்டுரை விரிவானது. அவர் ஸ்டைல் அப்படி - அனேகமாகப் பெரும்பாலானோர் இப்படித்தான் எழுதவேண்டிவரும் - பின்னே ஒரு வாரத்தைப் பூரா கவர் பண்ணுன்னா என்ன செய்யறது! நீளமானது எனினும் ரசமானது. இதுதான் முக்கியம். சுருக்கிவிட்ட காரணத்தாலே ஒன்று சுவாரஸ்யமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

    பின்னூட்டங்களில் பொதுவாக ஊட்டம் தென்படுவதால், அதனை அலட்சியம் செய்யமுடியாது என்றே நினைக்கிறேன்.

    அடுத்த திருவாளர் அல்லது திருமதி என்ன செய்யப்போகிறார் என்பது நீடிக்கும் சஸ்பென்ஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கீதா சீனியரின்//

      என்னாதூஊஊஊஊஊஊஊ கீசாக்கா இப்போ சீனியர் சிட்டிசென் ஓ?.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊ அஞ்சுவை விட:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு, அந்த வோக் போற பாதையில இருக்கும் பெஞ் இன் கீழே எறிஞ்சிடுங்கோ ஏ அண்ணன்:)).

      நீக்கு
  30. செய்திகள் அனைத்தும் அருமை...

    கீதா அம்மாவின் விளக்கமான விமர்சனம் மிகவும் பிடித்தது...

    வேலைப்பளு அதிகம் என்பதால் சுருக்கமாக...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  31. இதை கண்டிப்பா சொல்லியாகணும் ..ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் எனக்கு சாட்டர்டே ஸ்பெஷல் விமரிசனப்பகுது ரொம்ப பிடிச்சிருக்கு .முடிந்தவரை லேட்டானாலும் இனிமே சனியன்று பின்னூட்டமிட முயல்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமரிசனப்பகுதி //

      நீக்கு
    2. அல்லோ மிஸ்டர் அது விமரிசனம் அல்ல விமர்சனம்.. எங்க டொல்லிங்கோ எகயின்:)).. நேக்கு டமில்ல ஆரும் பிழை விட்டால் பிடிக்காது பாருங்கோ:)..

      நீக்கு
    3. Nooooo :) /பொருள்
      தொகு
      விமரிசனம், பெயர்ச்சொல்.
      திறனாய்வு , ஆராய்ச்சி\\\\

      நீக்கு
    4. //
      Angel
      எனக்கு சாட்டர்டே ஸ்பெஷல் விமரிசனப்பகுது ரொம்ப பிடிச்சிருக்கு//

      ஆஆஆஆஆஆஆ ஸ்ரீராம்.. எலி மாட்டிடித்தூஊஊஉஊஊஊஊஊ விடாதீங்கோ பிடியுங்கோ.. அடுத்த விமர்சனத்துக்கு நான் அஞ்சுவை ரெடி பண்ணிட்டேன் பிடியுங்கோ:).. எனக்கு கொமிசன் ஏதும் வாணாம்.. ஒரு வைரக்காப்புத் தந்தால் போதும் திருச்செந்தூர் வள்ளியின் நேர்த்தியை நிறைவு பண்ணிடுவேன்ன்:))..

      பூஸோ கொக்கோ எங்கிட்டயேவா:)).. பிசி பிசி எனச் சொல்லித் தப்பப்பார்க்கிறா அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

      ///Angel
      விமரிசனம், பெயர்ச்சொல்.///

      நெல்லைத்தமிழன் புரொபிஸர் மேடைக்கு வரவும்ம்ம்.. எனக்கு நீடி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).

      நீக்கு
    5. noooooooooooo :)

      not me

      https://image.shutterstock.com/image-vector/little-mouse-involved-running-races-450w-132723635.jpg

      நீக்கு
  32. //சென்ற வார பதிவுகளின் விமர்சனம் - //
    நாங்க இல்லாத போது ஸ்ரீராமுக்கு கிட்னி நல்லா வேர்க் பண்ணி புதுசு புதுசா ஆரம்பிச்சிருக்கிறார் போல இருக்கு... மாற்றங்கள்தான் மனதுக்கு இதமானவை.. நெடுகவும் ஒரேமாதிரி இருந்தால் போறிங்காக இருக்கும். பகலில் வருவது மிகமிகக் கஸ்டமாக இருக்குது, அதனால எங்கட நைட் இல் ஆவது வந்திட முயற்சிக்கிறேன்ன்.. முடிஞ்சவரை.

    பதிலளிநீக்கு
  33. //என் எழுத்தை எல்லோரும் என்ன தான் பாராட்டினாலும் உண்மையான நிலைமை என்ன என்பது எனக்குத் தான் எனக்கு மட்டும் தான் தெரியும். //

    மீக்கும் தெரியுமே கீசாக்கா:))..

    //அந்த வாரத்துக்கான விமரிசனத்தைத் திரு நெ.த. செய்திருக்கார்//
    ஓ இந்த ஸ்பெல்லிங் மிசுரேக்குக்கூஊஊச் சொந்தக்காரர் கீசாக்காவோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் ஜொன்னனே:) மீக்கும் தெரியுமென:))..

    ஆஆஆஆஆ இப்போ புரியுது, டெய்லி போஸ்ட்க்கு வருவோரால் மட்டுமே இதை எழுத முடியும்... ஹா ஹா ஹா:)) மீ சேவ்வ்வ்வ்வ்வ்:)).

    பதிலளிநீக்கு
  34. //அதே சமயம் நம்ம டிடி தான் நெல்லைத் தமிழர் தனியாக வலைப்பூ வைத்துக் கொண்டு ஏன் எழுதவில்லை என்று யோசிக்கிறார்.//

    டமில் வசனத்தில் பொருட்பிழை உள்ளது கீசாக்கா:))...

    வலைப்பூ வைத்துக் கொண்டு என்றால்.. வலைப்பூ இருந்தும் ஏன் எழுதாமல் இருக்கிறார் என அர்த்தமாகும்:)) .. சே..சே.. இதுக்குத்தான் அம்மம்மா அடிக்கடி ஜொன்னவ டமில்ல டி எடுத்திடாத பிள்ள பிறகு கண்ணை மூடிக்கொண்டு பிழை பிடிப்பாய் என:))... ஹா ஹா ஹா நல்லவேளை கீசாக்காவுக்கு ஜாமம்:).. இப்போ கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா அந்த அங்காயப்பொடி ஒரு அரைகிலோ ஸ்கொட்லாந்துக்கு அனுப்ப முடியுமோ :))

      நீக்கு
    2. நோஒ நோஒ கீசாக்கா பாவம் அவவுக்கு கஸ்டம் குடுக்கக்குடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      நீக்கு
    3. இல்லை இல்லை நான் போஸ்டேஜ் செலவை அவங்களுக்கு அனுப்புவேன் ஒரு கஷ்டமில்லை இப்போலாம்வீட்டில் வந்து பார்சல் கலெக்ட் பண்றங்களாம் :) அந்த அங்காயத்தை நீங்க சாப்பிட்டே தீரணும் .கீதாக்கா ஸ்பெஷலா எல்லாத்தையும் டபிள் குவான்டிட்டி போட்டு அனுப்புங்க பூனைக்கு

      நீக்கு
  35. //இதனால் அவருக்கு என்ன அசௌகரியமோ! நமக்குத் தெரியாது! இது ஒரு பெரிய விஷயமே இல்லை. அது அவருடைய வசதி! அவருடைய பிரச்னை! .
    //
    இப்போ எதுக்கு கீசாக்காவுக்கு நெல்லைத்தமிழனின் பிரச்சனை?:) ஹா ஹா ஹா ஹையோ முடியல்ல ஜாமி:) கொஞ்ச நாள் காணாமல் போனதும் என்னமோ எல்லாம் நடந்திருக்கே இங்கு:)).

    // இன்னமும் ஷில்லாங்கை விட்டுப் போகலை. ஷில்லாங்கிற்குள் நுழையவே இல்லை. அப்புறம் வேறு படங்களுக்கு எங்கே போவது?///

    அவர் எங்காவது ரூர் போகப்போகிறார் எனக் கேள்விப்பட்டாலே இப்பெல்லாம் நடுங்குது:)) ஹா ஹா ஹா படம் போட்டே கொன்றிடுவார்ர்:))

    பதிலளிநீக்கு
  36. // காணாமல் போய்த் திரும்ப வந்திருக்கும் அதிரடி எப்போவானும் எழுதுவார்//

    கீசாக்கா, எனக்கு திங்கள் செவ்வாய் வேர்க்கிங் டேய்ஸ் ஆக இருப்பதால், இப்போ வரவொ கும்மி அடிக்கவோ முடிவதில்லை, அதனால முக்கிய இரு நாட்களும் தவறிப் போகுது.

    அடுத்து நான் சமையல் குறிப்பு அனுப்பாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.. என்னால் இங்கு வந்து பதில் கொடுக்க முடியாமல் இருக்கும். என் கொள்கை “செய் அல்லது செத்து மடி”/.. ஒரு குறிப்பு அனுப்பினாலோ இல்லை போஸ்ட் போட்டாலோ.. வீட்டு வேலைகளைக்கூட விட்டுவிட்டு.. முதலைல் கொமெண்ட்ஸ் போடுவோரைக் கவனிக்கோணும் என்பதே என் கொள்கை, நமக்காக கஸ்டப்பட்டு வந்து கொமெண்ட்ஸ் போடுவோருக்கு பதில் கொடுக்காமல் ஆறுதலாக இருப்பின் மனதுக்கு கஸ்டமாக இருக்கும்.. அதனாலேயே இப்போ என்னால அப்படி பதில் கொடுக்க முடியாது திங்கள் செவ்வாயில்.. என்பதாலேயே எதுவும் அனுப்ப முடிவதில்லை..

    இனி சமர் ஆரம்பமாகிறது.. செப்டெம்பரோடு பழைய நிலைமைக்கு திரும்பலாம் என நினைக்கிறேன்ன்.. அதுவரை கொஞ்சம் கஸ்டம்தான் பார்ப்போம்.

    பறவாயிலையே.. அமைதியாக நேரம் ஒதுக்கு மினக்கெட்டு அனைவரையும் இணைச்சு.. ஒருவாரப் பதிவை அலசியிருக்கிறீங்க கீசாக்கா.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. இரு பாசிட்டிவ் செய்திகளும் அருமை.

    சகோதரி கீதா சாம்பசிவத்தின் விமர்சனம் இன்று மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

    மகனின் நீட் தேர்வு நாளை கடைசி நிமிடத்தில் சில மாற்றங்கள் மீண்டும் டவுன்லோட் செய்யவேண்டும் ஹால்டிக்கெட் எடுத்து பிரின்ட் செய்யும் வேலை என்று கொஞ்சம் டென்ஷனுடன் ஆன நாள் அதிகம் கருத்து எழுத இயலவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  38. பாசிட்டிவ் செய்திகள் நன்று. கோயிலுக்கு அளிப்பதை விட வேறு நல்ல விஷயங்களுக்கு நேரடியாகவே செய்யலாம். கல்வி உதவி, ஆதரவற்றப் பிள்ளைகள் முதியோர் என்று. கோயில்கள் இப்போதெல்லாம் கமர்ஷியல் என்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  39. கீதாக்கா செம நிறைய என் மனம் போல பிரதிபலிப்பு குறிப்பாக பெரிதாக எழுதுதல், எட்செஸ்ற்றா பத்தி சொல்லியிருப்பது.

    என்னையும் தேடியிருக்க்காங்களாஆஆஆஆஆஆஆஅ அட! வியப்புதான்.

    ஆனா நான் சொல்லிட்டுத்தானே காணாமப் போனேன் ஹிஹிஹிஹி....

    ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க கீதாக்கா. என்னை ஸ்ரீராம் கேட்டார்னா நான் எப்படிஎழுதப் போறேன்னு இப்பவே பிரமிப்பா இருக்கு. தனி தனியா கோட் பண்ணி கும்மி அடிக்க முடியலை. பெண்டிங்க் தளங்கள் நிறைய இருக்கு. மீயையும் சொன்னமைக்கு மிக்க நன்றி.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!