சனி, 15 ஜூன், 2019

தேள் விஷமும் காசநோயும் - ஒருசுவை இருசுவை அறுசுவை...... எழுசுவை



1)  இந்துவில் வந்த இந்த செய்தியைப் படித்த ஒரு வாசகர் முகேஷ் கண்ணாவுக்குத் தேவைப்பட்ட ரூபாய் 46 ஆயிரத்தையும் செலுத்தி இருப்பதுடன், அவரின் மூன்றாண்டுகல்விக் கடனையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.... 




2)  தேளின் விஷத்தில் இருந்து காசநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விஞ்ஞானிகள். இந்த மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவர்கள் தமிழக விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.




===================================================================================================

கடந்த வார பதிவுகளின் விமர்சனம்... 8/6/19 டு 14/6/19  - திருமதி கலா ரின் 

=====================================

அறுசுவை என்ற சொல் வழக்கு உண்டு.. .ஆனால் இது ஏழுசுவை.... 

அனைவருக்கும் வணக்கம். இந்நாள் அனைவருக்கும் இனிய  நாளாக அமைய எனது பிராத்தனைகள். 

ஒரு சிறந்த உணவை உணவின் தரத்தைப் பொறுத்து அறுசுவை உணவென்று கூறுகிறோம். அதே போல் ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும், சுவை நிறைந்த பதிவுகளை பதிந்து, பார்ப்பவர்கள் கண்களையும்,மனதையும், கருத்தையும் உற்சாகப்படுத்தும்  ஏழு சுவைகள் நிரம்பிய ப்ளாக்கென்றால், அது "எங்கள் ப்ளாக்" தான். ஒரு வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பதிவுகளை சுவைபட தொகுத்தளித்து, அதில் திங்கள், செவ்வாய் கிழமைகளில் மற்ற வலைத்தள நண்பர்களையும் பங்கு கொள்ளச் செய்து அவர்களின் திறமைகளையும் வெளி கொணர்ந்து, ( இது என்னை மட்டும் குறிப்பிட்டு கூறுவது. மற்றவர்கள் அனைவருமே இங்கு ஜாம்பவான்கள்.) அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தருகின்ற " எங்கள் ப்ளாக்கிற்கு" என்றும் வந்தனத்துடன், வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறேன். 

இந்த வலைத்தளத்தில்  இணைந்த கைகளாக நட்புறவுடன் கூடிப்பழகும் ஏனைய வலைத்தள வாசக நட்புள்ளங் களுக்கும், பொறுமையுடன் இந்த வலைத்தளம் நடத்தி, தினசரி  தவறாது பணிச்செய்யும்  ஆசிரிய குழுவிற்கும் பணிவுடன் கூடிய பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். . 

வாரத்தின் முதலாவது நாளான திங்கட்கிழமையை "திங்க" கிழமையாக்கி சுவையான விருந்தாக சமையல் ரெசிபிகளை பல அறிமுகபடுத்தி,

2ஆவது நாளான செவ்வாய் கிழமைகளில் மற்ற வலைத் தளத்தின்  எழுத்தாளர்கள் எழுதிய அருமையான கதைகளை இணைத்து, 

3ஆவது நாளாகிய பொன்னான புதனில், சிந்தனை திறன் வளர்க்க கேள்விகளும், பதில்களுமாக வளர்த்து, 

4ஆவது நாளான வியாழனில், சகோதரர் ஸ்ரீராம் அவர்கள்  சென்ற இடங்களின் சிறப்பு, (தற்சமயம் காசிப்பயணம்) அதை பற்றிய விரிவான பார்வை மட்டுமில்லாது, அந்த காலத்து பத்திரிகை செய்திகளுடன் புதிர், கருத்துடன் கூடிய நகைச்சுவை துணுக்குகள், குறிப்பாக கவிதைப்புயலும், எ. பியின் ஆசிரியருமான, சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கவிதைகள் என கதம்பமாய் மணந்து

5ஆவது நானான வெள்ளியின் விடியலில், இனிமை மிகுந்த நல்ல இசையில் தவழ்ந்த  கேட்டிருக்கும், கேட்கவும் தூண்டும் பல திரைப்படப் பாடல்களை பகிர்ந்தளித்து, 

 6 ஆவது  நாளான சனிக்கிழமைகளில் நேர்மறை எண்ணங்களில், பலர் செய்த நல்ல செயல்களை "வலையுலகம்" அறியுமாறு பதிவிட்டு அதை படிக்கும் போது,  நேர்மறை எண்ணங்களைை அனைவரின்  மனதினுள் கடத்த வாய்ப்பளித்து,

 7ஆவது நாளான ஞாயிற்றுக் கிழமைகளில்,  புகைப்படக் கலையில் ஆர்வமுடையவரும், எ. பியின் மற்றொரு ஆசிரியருமான  சகோதரர் திரு. கே. ஜி. எஸ் அவர்கள் அவ்வப்போது குடும்பத்துடன் பயணித்த போது (தற்சமயம் இப்போது  ஷில்லாங்கில்,) எடுத்த புகைப் படங்களையும், அதற்கு பொருத்தமான நறுக்கு தெரித்தாற்போல், அழகான வாக்கியங்களையும்  பொருத்தி எழுதி, படிக்கும் அனைவரையும் இடங்களையும். இயற்கையையும் ரசித்துப்பார்க்க வைப்பது, என ஒவ்வொரு வாரமும் களை கட்டி திருவிழா கோலம் கொண்டபடி உலா வருகின்றது எங்கள் ப்ளாக்.

பொதுவாக சூரிய சந்திரன் நம் கண்களுக்கு தெரிந்து நாம் வழிபடும் இயற்கை தெய்வங்கள். இதை குறிக்கும் விதமாக ஒரு வாரத்தின் "முதல் நாள் " குளிர்ந்த "சந்திரனின்" மற்றொரு பெயரான "திங்களுடன்" ஆரம்பித்து,  "ஏழாவது நாள்" வெப்பம் மிகுந்த "சூரியனின்" இன்னுமொரு பெயரான "ஞாயறன்று " முடிகிறது.  குளிரும், வெம்மையும் சரிசமமான விகிதத்தில் இருந்தால்தான் நம் உடல் ஆரோக்கியம் ஒரே சீராக இருக்குமென்பதால், சூரிய சந்திரன் வழிபாட்டு நாட்களாக வாரத்தின் முதல், இறுதி பெயர்களையும் இவ்விதமாக ஆன்றோர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். 

ஆனால், இதில் வாரத்தின் ஆறாவது நாளான சனிக்கிழமையன்று "நேர்மறை எண்ணங்கள்" கொண்ட செய்திகளை தொகுத்து அனைவரின் பார்வைக்கும் விருந்தாக்கி பல்வேறு பாராட்டை பெற்று கொண்டிருந்த எ. பியின் ஆசிரிய பெருமக்கள், அன்றைய தினத்தன்று நட்புறவுடன் எ. பியில் கூடிப் பழகுபவர்களின் எழுத்து திறமையை அனைவருக்கும்  பறைசாற்றுவதற்காக  அவர்களுக்கு  சனிக்கிழமையிலும் மற்றொரு சந்தர்ப்பம்  அளித்து, சனிக்கிழமையிலிருந்து, வெள்ளி வரை வரும்  ஒருவார பதிவுகளை, பதிவுக்கு வரும் கருத்துக்களை விமர்சித்து (கடந்த  ஏப்ரல் 27 சனிக்கிழமையிலிருந்து) எழுத வைத்து, மற்றுமொரு புது புரட்சியை உண்டாக்கி அதில் வெற்றியும் கண்டு வருகிறார்கள். அவர்களது  புதுமை புகுத்திய இந்த முயற்சிக்கும் பாராட்டுக்கள். 

***-----------***---------***



மேலே கூறியபடி இவ்வார தொடக்கம் "சனிக்கிழமையன்று" தொடங்குகிறது. நேர்மறை எண்ணங்கள் என்பது நம் மனதிற்கு புத்துணர்ச்சி தருபவை. நம் விதிகள் எப்படி பயணித்தாலும், தாம் நேர்மறையாக பேசி,  நேர்மையாகவே நினைத்து வந்ததில்தான் பல நல்லதுகள் நடக்கிறது என நினைப்பவர்கள் நிறைய பேர். நேர்மறையாக  நினைத்து செயலாற்றி வந்தால், எதிர்மறையாக நடப்பதை, அப்படியே  நடந்து விட்டாலும் கூட, அதை எளிதில் ஜீரணிக்க இயலும் என்று நினைப்பவர்களும் நிறைய பேர். எது எப்படியாயினும் எதிலும், எங்குமே  எவருக்குமே நல்லதைதான் மனம் நாடுகிறது. அது மட்டுமல்ல... நல்லதை செய்பவர்களை  நல்ல மனம் கொண்டவர்களை அனைவரின் மனமும் விரும்புகிறது. அதில் எவ்வித மாற்றமுமில்லை. 

இந்த வாரம்,  "எங்கள் ப்ளாக்" அறிமுகப்படுத்திய நல்லுள்ளங்கள்.. . 

பாகிஸ்தானில் வாழும் இந்திய வம்சாவளியும்,  தொழிலதிபருமாகிய ஜோஜிந்தர்சிங் சலாரியா என்பவர்
பாக்.,ன் தென்கிழக்கு பகுதியான தர்பார்கர் மாவட்டத்தில் தண்ணீரின்றி மக்கள் மிகவும் வறுமையில் வாடுவதை அறிந்தார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களின் உதவியுடன், 600 க்கும் மேற்பட்ட அடி பம்பு குழாய்களை அமைத்து கொடுத்துள்ளார். மேலும் அப்பகுதி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

அது போல், சேலம் மாவட்டத்தில் தலைவாசல் கிராம மக்கள், குடிநீர் கிடைக்காமல், மயங்கி விழுந்ததைப் பார்த்த பாபு என்பவர் தான் விவசாயத்துக்காக போட்ட, 'போர்வெல்'லில் இருந்து, மக்களின் தாகம் தீர்க்க, இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறார். 

நீர்நிலைகள் வற்றாதிருக்க, தங்கள் கிராமத்திலிருக்கும் ஏரியை தூர்வாருவதற்காக  தன் வாரிசுகள் அனுப்பிய பணத்திலிருந்து செலவு செய்து அத்தகைய ஏற்பாடுகளை செய்து வருகிறார் அரியலூர் மாவட்டம் விளாங்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற நல்லாசிரியர் ஜானகிராஜன்.
 நல்ல மனதுடைய இவர்களின் நற்செயல்களை கண்டிப்பாக மனதாற பாராட்ட வேண்டும். 

சுமைத்தூக்கி வேலையிலிருந்தபடியே அந்த வேலை செய்யும் பொழுதில் கூட படிப்பெனும் ஜீவ நதி வற்றாதிருக்க படித்துக் கொண்டே உழைக்கும் ஸ்ரீநாத் என்பவரின் தன்னம்பிக்கையை விவரிக்க வார்த்தைகள் இல்லையாததால் போற்றுவோம். 

மரங்களின் இன்றியமையாமையை புரிந்து கொண்ட சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் பல தொண்டார்வ நிறுவனங்களின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் மரங்களை உயிரோடு காப்பாற்ற  வேரோடு எடுத்துச் சென்று வேறு இடத்தில் நட்டு வளர்க்க சேவை செய்து வருகிறது. மழை காக்கும், மரங்களனைத்தையும்  காக்கும் அவர்களை பாராட்டுவோம். 

நல்ல உள்ளங்கள் வாழ்க.! நல்ல தொகுப்பை தந்த  எ. பி ஆசிரியர்களின்  நேர்மறை எண்ணங்களும் வாழ்க. !

இந்த வாரம், போன வாரப் பதிவுகள் அனைத்தையும் வித்தியாசமாக அலசியவர் சகோதரர். திரு. துரை செல்வராஜ் அவர்கள். இரு பெண்கள் (அறிந்த தெரிந்த உறவுகள்) கண்டு பார்க்கும் போது பேசிக் கொள்ளும் விதத்திலேயே, மிக அருமையாக அவர்களின் உரையாடல்கள் மூலம் வார்த்தைகளை செதுக்கி, வாரம் முழுவதையும் அலசி அற்புதமாக விமர்சித்து விட்ட அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.  (அவரைப் போன்ற திறமை எனக்கில்லையாகையால், படிக்கும் அனைவரும் போதும், போதுமென்று கூறும் இந்த நெடும் பயணம். ) இவரும் ஏழுசுவைகளில் ஒருவராகி சுவையான பாராட்டுகளை பெற்று விட்டார். (அதாவது ஏழாவது விமர்சகர்.) இப்போது "எட்டு குடி குமரன்தான் " இந்த எழுதிக் கொண்டிருக்கும் எட்டாவதை காக்க வேண்டும். 

நேர்மறை எண்ணங்களையும்,  சகோதரரின் விமர்சனத்தையும் அலசி ஆராய்ந்து பதில்களையும், பாராட்டுகளையும் பாரபட்சமின்றி தங்கள் எண்ணங்களின் அடிப்படையில் தந்த வாசக நட்புறவுகளுக்கு நன்றிகள்.

 நானறிந்து கொஞ்ச நாட்களாக  சனிக்கிழமை பதிவுகள் 40ம், அதற்கு சற்று 
மேலாகவும் மதிப்பெண் பெற்று சோர்வு கொண்டிருந்த வேளை இந்த விமர்சன பதிவுகள் நல்ல  மதிப்பெண்களை பெற்று தருகின்றன. (இந்த பதிவு எப்படியோ? அதை பின்வரும் சனி பகவான் நல்லபடியாக தீர்மானிக்கட்டும்.) 
இந்நாள் பெற்ற மதிப்பெண்கள்... 129...
***-----------***---------***



இன்று ஒளி பொருந்திய "ஞாயறின்" பதிவு. அதனால்தான் ஒளியுடன் கூடிய  இயற்கை வனப்பு புகைப்படங்களின் தேர்வு நாளோ? பொதுவாக எந்த ஊருக்குச் சென்றாலும் ஒரு புகைப்படம் எடுப்பது நம் தற்போதைய வாடிக்கை. அந்த காலத்தில் சிறுவயதாய் இருக்கும் போது, அதிலும் அதிசயமாய் எங்காவது செல்லும் போது, இப்படி புகைப்படம் எடுப்பவர்களை கண்களில் வியப்பை விரிப்பாக வைத்துக் கொண்டு நா(ன்)ம் பார்ப்(பேன்)போம். 

குக்கிராமங்களில், கேட்கவே வேண்டாம்..  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அப்பேர்பட்டவர்களை கொஞ்சம் சூழ்ந்து கொண்டு விடுவார்கள். அப்போது அந்த கேமராக்கள் அதிசயம். அதை வைத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பவர்கள் அதிசயத்தின் தலை(வர்) (வி)கள். இப்போதுள்ள காலத்தில்  எங்கு சென்றாலும், ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்பட கருவிகள் அனைவரின் கைகளிலும், தோள்களிலும் தாராளம். போதாகுறைக்கு செல்ஃபோன் ரகங்களும் ஏராளம். அதற்கேற்றபடி பயணங்களும், புகைப்படமெடுக்க வசதியுள்ள இடங்களுமாக  புகைப்பட கலையை  மென்மேலும் வளர்த்து வருகின்றன. 

இந்த இயற்கை மிகுந்த இடங்களை  சுற்றி வளைத்து  எ.பியின் இந்த நாளைய ஆசிரியர் மிக அழகாக எடுத்துள்ளார். அதன் கீழே அதற்கு பொருத்தமான ரசனை வரிகளும். மனதை கவர்கின்றன. எப்படி இவர்களால் (எ. பி ஆசிரியர்கள்) இவ்வளவு சுருக்கமாக வரிகளை தேர்ந்தெடுத்து பொருத்தமாக அமைக்க முடிகிறது என ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.. 

இந்த முறை இரு பிரேமில் அடங்காமல் அடம் பிடித்த "நெடிதான மரத்தை" தன் கேமரா எனும் அங்குசத்தால், அதன் அடம் அடக்கி, நம்மிடம் ரசிக்க ஒப்படைத்துள்ளார் ஆசிரியர். . அழகாக பூத்துக் குலுங்கிய மலர்களும், அதிகப்படியாக அவ்வூரிலுள்ள பள்ளியில் பயிலும் மலர் சிட்டுக்களும், அதிகம் இடம் பெற்றுள்ளனர். அனைத்து குழந்தைகளும் வெகு அழகு. "அங்கிட்டும், இங்கிட்டுமாய்"  மலர் மொட்டுக்களுடன் ஒரு மாதும் இருக்கிறார். (என் கண்களுக்குதான் "மொட்டு," ஓரிடத்தில் "பட்டு" மாமியாய் காட்சியளிக்கிறார் என நினைக்கிறேன்.) 

மாருதி வேனில் "சூப்பர் மார்கெட்டுடன்" உலா வருபவரும் இரண்டு வாரங்களாக இவர்கள் புகைப்படம் எடுப்பதை கவனியாமல் புகைப்படம் எடுக்க ஒத்துழைத்துள்ளார். அங்கு பாத்திரங்களின் சுத்தத்தை வாசக நட்புறவுகள் அனைவரும் பாராட்டி, ஒரு பாத்திரத்தில் அடுக்கி வைத்திருப்பது "இட்லிகள்"தான் என்று ஷல்லாங்கில்  முக்கியமான இடத்திற்கு செல்லும் போது, அன்புடன் வாசலில் இருந்து  கை நீட்டி வரவேற்கும் இயேசுவின் சாட்சியாக கூறியுள்ளார்கள். ( நானும்தான்...) 

ஆனாலும் வடநாடுகளில் அதிகம் பயணம் செய்து வித விதமாக அதிக (அதிகப்படியான அல்ல..) உணவுகளை உண்டு ருசித்துள்ள அல்லது  பார்த்து மட்டுமே ரசித்துளள சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் அதன் பெயர் "மோமோ" என்று கூறியுள்ளார். சகோதரி கீதா ரெங்கன் அவர்களும் அதை ஆமோதித்தது அந்த "உணவுதான்" என உறுதியுடன் கூறியுள்ளார். சகோ வெங்கட் நாகராஜ் அவர்களின் பதிவில் இந்த உணவை பார்த்தது மாதிரி எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆயினும் இது எதில் செய்கிறார்கள் (மைதாவா? ) எனத் ஞாபகமில்லை. 

சூப்பர் மார்க்கெட்டை சொல்ல விடுபட்டு விட்டது எனச் சொல்லிய சகோ துரை செல்வராஜ் அவர்களுக்கு, சகோ ஸ்ரீராம் அவர்கள் "விடுபட்ட" வார்த்தைகளால் வர்ண ஜாலங்கள் தொடுத்தது அழகு. ஒரு வேளை அந்த சூப்பர் மார்கெட் தலைவியும், வர்ணஜாலத்தில் விடுபட்ட மீதியைதான்  தலை குனிந்து மாருதி வேனில், தேடிக் கொண்டுள்ளாரோ.?

இந்த நாளில் ( இந்நாள் மட்டுமல்ல. ! எந்நாளுமே.. ) தலைப்புகள் மிக பிரமாதமாக அமைந்து விடும். இன்றைய தினம் பையை மறந்து வந்த பாப்பா தலைப்புக்கு உதவினார் என அனைவரும் நினைத்திருக்க பின்னூட்டங்களின் இறுதியில் சகோதரி ராமலெஷ்மி அவர்கள் பை அந்த குழந்தையின் தோளில் இருப்பதை சி. ஐ. டி யாய் கண்டு பிடித்து தெரிவுபடுத்தி விட்டார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள். பதிலளித்து புகைப்படங்களை, வாசகங்களை பாராட்டி மதிப்பெண்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள். (இருந்தாலும், இன்றைய மதிப்பெண்கள் சற்று குறைவுதான். ! எதிர்பார்த்த அளவு இல்லை.. ) 
இன்றைய மதிப்பெண்கள்.. 55.
***-----------***---------***



இன்று "திங்கள் கிழமை" அறுசுவை நாளான "திங்க"பதிவு. "செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றும் ஈயப்படும்" என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் சுவை மிகுந்த உணவென்றால், அதுவும் வயிறும், மனமும் ஒத்துழைத்தால், செவிக்குள்ளேயே யார் வந்து பேசினாலும், எதுவும்  எடுபடாது கையும், வாயும் போட்டி போட்டு மெளனமாகவே தத்தம் வேலையை செய்யும். 

அந்த வகையில், "திங்கள்கிழமை" சுருங்கி  (நிஜமான  திங்களும் (சந்திரன்) சுருங்கி வருவதாய் சமீபத்தில் செய்தி படித்தேன்.. .உண்மையா, பொய்யா எனத் தெரியவில்லை. ) எ. பியில் " திங்க"வாகி விட்ட போதும், சுவை மிகுந்த உணவுகள் இங்கு சுடச்சுட படங்களுடன் கண்களுக்கு விருந்தாகும் போது, "செவி உணவு" கட்டுப்பாட்டை மீறி, அல்லது முழுவதுமாக மறந்து, எ. பியில் அனைவரும் கூடி விடுகிறோம். 

அதன்படி இன்றைய "திங்க" பதிவாக சகோதரர் நெ. தமிழன் "செள செள" துவையல், உ. ப பொடி போட்டு தயிர் பச்சடி "டாங்கர் "என்று செய்து அமர்க்களப் படுத்தியிருக்கிறார். அதுவும் அவர் மகனுக்காக,  பாசத்துடன்  பார்த்து செய்து, அவரிடமிருந்து பாராட்டு நற்சான்றிதழும் பெற்று விட்டார். இந்த உணவு யாவரும் சுவைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி காய்கள் (காரட், பரங்கிகாய், பீர்க்கங்காய்) எதிலும் துவையலும், அதற்கு பொருத்தமாக த. பச்சடி. இல்லை.. அந்தந்த  காய்களை வைத்தே கூட்டும் செய்யலாம் என கருத்துக்களை எல்லோரும் பதிந்துள்ளனர். 

தாய் பாசம் தந்தை பாசத்தை விட சிறந்தது என்ற ஒரு கருத்தும் நிலவியுள்ளது. ஒரு குறையோ, நிறையோ,  அவரவர்கள் இயல்புபடி தோன்றுகிறதா ? இல்லை ஜீன் மூலமும் டிட்டோவாக தொடருகிறதா? என்பது போன்ற அலசல்கள்... எப்படியோ, நம் குழந்தைகளை நமக்கு தக்கபடி வளர்க்கும் போதே அன்பையும், பண்பையும் உணவுடனே ஊட்டி வளர்த்தால், அவர்களது  குணங்கள்  வளர்ந்த பிற்பாடு பண்பு நிறைந்த பக்குவத்தோடு மலர்ந்து மணம் வீசி  இருக்குமென்ற விதத்தில் அலசியுள்ள இவ்வார" திங்க" பதிவு நன்றாக இருந்தது. 

இடையில் இன்றைய தினத்தில் நல்ல எழுத்துகளுக்கு சான்றாக விளங்கி வந்த திரு. கிரேசி மோகனின் இழப்பு எனக்கும் மிகுந்த வருத்தத்தை தந்தது. அதை பற்றியும் அனைவரும் கடைசியில் கொஞ்சம் அளவளாவி இருக்கிறார்கள். சகோதரி அதிராவும்,  சகோதரர் நெ. தமிழன் அவர்களும் , நியுமராலஜி பற்றி பேசி மதிப்பெண் பெற்று தந்திருக்கின்றார்கள். கருத்தில் சொன்னது போல் ஆசிரியர் சகோ ஸ்ரீராம் அவர்களும் இடையிடையே  பதிவுகளை பரிசீலித்து மதிப்பெண்கள் தந்திருந்தால், "மேலும் ஏற்றுக" விற்கு சென்றிருக்கலாம். போகட்டும்.... இதற்கு அன்புடனே வந்து பக்குவமாய் பல்வேறு சுவைகளுடன் பதிலளித்து மதிப்பெண்கள் தந்த அனைத்து நட்புறவுகளுக்கும் நன்றிகள். 
இந்த நாள் பெற்ற மதிப்பெண்கள்.. 167..

***-----------***---------***



இன்று கற்பனை சாம்ராஜ்யத்தில் மிதப்பவர்களின் பதிவை பெறும் நாள். இனிய  இச்"செவ்வாயில்" வரும் பதிவுகள் விழிக்கு உணவாகி மனதோடு கதை பேசி போவது  வாடிக்கையான ஒன்று. 
கதைகள் பொதுவாக  கற்பனைகளின் அடிப்படை வசதிகளை கொண்டு வளருகிறது. . கற்பனைகள் சிறகடித்து  நம் எண்ணங்களின் இடுக்குகளில் வந்தமரும் போது, சிறகுகளின் மிருதுவான வருடலில் தோன்றும் எழுத்துகளில், சிலவற்றில் நிச்சயமாக ஆரம்பத்திலேயே உண்மை தெறிக்கலாம்.  சில பொய் முகத்திரை தரித்து ஆனால், பிறந்ததிலிருந்தே, ஸ்வாரஸ்யங்களின் ஊடே, தவழ்ந்து விரிந்த பார்வையுடன் படிப்பவர் மனதை ஈர்த்து, கடைசியில் கானல் நீராய் நீர்த்தும் போகலாம்.  கதைகள் தோன்றுவதும், நிலைத்து நிற்பதும், கற்பனைகளின் ஸ்திர தன்மையை, அதன் அதிர்ஷ்டத்தை பொறுத்து அமைகிறது. ("ரொம்ப யோசித்தால் இப்படித்தான்" என்ற மு. முணுப்பு என் மிக அருகில் கேட்கிறது. எனவே நிறுத்தி இன்றைய கதைக்கு வருகிறேன்.) 

இன்றைய கதை ஒரு தாயின் தவிப்பை மனப் போராட்டத்தை விளக்குவது.. தன்னுடைய பேச முடியாத இயலாமை தன் குழந்தைக்கும் வந்து விடுமோ எனத் தவிப்புடன் அந்த தாய் அந்நாளதை கழிக்கும் போது, நாளின் முடிவில், அவரின் கணவர் "உன்னை தவிக்க விட மாட்டேன். நம் குழந்தைக்கு நான்தான் ஆசான்.. நீ பேச நினைத்ததை இனி நம் குழந்தை பேசும்." நான் பேச வைத்து காட்டுகிறேன். "என்ற பிரயத்தனத்தின் ,முடிவில் குழந்தை அம்மா பெயரை உச்சரித்தவுடன் அம்மாவின் கவலைகள் பறந்தோடி விட்டன. நாளெல்லாம் தவித்த தவிப்பும் மெல்ல விலக ஆரம்பித்து விட்டன. நல்ல அழகான விதத்தில் மிகவும் சுருக்கமாக அமைத்து எழுதியுள்ளார் சகோதரி அனு ப்ரேம். (இத்தகைய சுருக்கம் நான் எழுதும் கதைகளில் லாவகமாய் வராது சற்றே சறுக்கிப் போய் எனக்கு இன்னமும் நெடியதாக்கி விடும்.) அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். 

கதையின் கருவிற்கும், கதாசிரியர் சுருக்கமாக அதைச் சொல்லிய பாங்கிற்கும், பாராட்டுரைகளை நம் நட்புறவுகள் அனைவரும் வாரி வழங்கியுள்ளனர். இது கதையல்ல.. க(வி)தை என அனைவரும் மனந்திறந்து உண்மையைச் சொல்லி மதிப்பெண்களை தந்துள்ளனர். அனைவருக்கும் எனது நன்றிகளும். 
இந்நாள் தன் வசம் தக்க வைத்துக் கொண்ட மதிப்பெண்கள்.. 42..

***-----------***---------***



இன்று சிந்தனை "புதனின்" திருநாள். கேள்வியும், பதிலுமாகிய வேள்வித் தீயில் நம் அனைவரின் அறிவுச் சுடர்கள் ( இதில் நிச்சயமாக என்னுடையது மட்டும் மிஸ்ஸிங்)  புடம் போட்டு கொண்டு ஜொலித்துக்காட்டும் பதி(வர்)வுகளை வெளிக்காட்டும் நாள். 

கேள்வி என்று ஒன்று பிறந்து விட்டாலே, அதன் உடன் பிறப்பாக பதிலும், தோன்றி விடுகிறது. "கேள்வி பிறந்தது அன்று... நல்ல பதில் கிடைத்தது இன்று..." என்ற பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதில் "அன்று," "இன்று" என்பவைக்கு நடுவில் எத்தனை நாள் தாமதமோ? ஆனால், இங்கு (எ. பியில்) ஒரு வாரத்திலேயே தாமதமின்றி ஒரு கேள்விக்கு 2, 3 றென சிந்தித்த நல்ல பதில்களாக கிடைத்து வருகிறது. ஒவ்வொன்றும்  கேள்விகளைப் போலவே, ஆற்றல் மிக்க பதில்கள். கேள்வி, கேட்பவர்களுக்கும், அதற்கு தகுந்த மாதிரி பதில் சொல்பவர்களுக்கும் நிச்சயம் திறமைகள் மிக மிக அதிகமாக அமையப் பெற்றிருக்க வேண்டும். 

இந்த வாரத்தில் பெண்ணை ஒரு பெண்ணே (உதாரணமாக தாய்... மகள், மாமியார்... மருமகள்... நாத்தனார்  இப்படியான உறவுகள்.) புரிந்துணர்வு கொண்டு பார்ப்பதில்லை. ! அது ஏன்? என்பதாக சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதிலாக, 

"ஒரு மாமியாரைப் புரிந்துகொள்ளுதல் இன்னொரு மாமியாருக்கு இயலும். மருமகளைப் புரிந்துகொள்ளுதல் இன்னொரு மருமகளுக்கு எளிது. 

மேலும், ஒருபெண் உணர்ச்சி வசப்படுவதும் பாசம் உச்சமாக இருப்பதும் இருப்பதை இழப்போமோ என்ற அச்ச உணர்வு அதிகமாக இருப்பதும் காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் புது உறவாக வரும் நாத்தனார், மாமியார், மருமகள் குறித்த எதிர்மறை எண்ணங்களும் (போதனைகள் முடிவுகள் காரணமானவை) தவறு ஏதோ நடக்கப் போகிறது என்ற "எதிர்பார்ப்பு"க்கு வழிசெய்யலாம். " என்ற பதில்களும் பொருத்தமாக இருந்தன. 

கவலையை மறக்க  5 யோசனை பதில்கள் தரச் சொல்லி கேள்வி  கேட்ட சகோதரி ஏஞ்சலினுக்கு, 

& a) சூடாக காபி அல்லது டீ குடிக்கலாம். 

     b) இப்போதைய கவலைக்குக் காரணம் என்னவோ அதை ஒரு காகிதத்தில் எழுதி, அதை ஒருமுறை படித்துப் பார்த்து, அதன் பிறகு அந்தக் காகிதத்தை துண்டு துண்டாகக் கிழித்துப் பறக்கவிட்டுவிடவேண்டும். 

c) உற்ற நண்பனிடமோ அல்லது நண்பியிடமோ எல்லாவற்றையும் சொல்லி ஆறுதல் கொள்ளலாம்.

d) மனதுக்குப் பிடித்த செயல் ஏதேனும் ஒன்றில் முழுவதுமாக மூழ்கிவிடவேண்டும்.

e) Stop worrying and start living புத்தகம் படிக்கலாம்!  
என்ற பதில்கள் நன்றாக இருக்கின்றன. 

நேர மேலாண்மை பற்றிய விளக்கங்களும், குறித்த நேரத்தில், ரயிலை எப்படி பிடித்து பயணிப்பது என்ற விஸ்தரித்து இருப்பதும் மிக நன்றாக இருக்கிறது. 

சகோதரர் நெ. தமிழனின் கேள்விகளும், அதற்கு வந்த பதில்களும் சுவையாக இருக்கின்றன. அதில் சகோ நெ. தமிழன் பேயைப் பற்றிய ஒரு கேள்வி கேட்டதிலிருந்து ஒரே பேய்கள் சம்பந்தமாக கேள்விகளும், கருத்துக்களும் சுற்றிச்சுற்றி வந்து பேயையே சற்று அரண்டு விட செய்து விட்டன. இதில் எந்த பேயையும் பகைத்துக் கொள்ளாமல், வந்த கேள்விகளுக்கு எப்படி அடுத்த வாரம் பதில் சொல்லப்போகிறோம் என ஆசிரியர்கள் அடுத்தவாரக்கவலை கொண்டு நித்திரை கொள்ளாமல் இருக்கிறார்கள். 
கருத்துக்கள் கூறி "கலகலப்பை" ஏற்படுத்திய அனைவருக்கும் அகில உலக பேய்கள் சார்பில் நன்றிகள். 
எப்போதும் நிறைய மதிப்பெண்கள் பெறும் இந்த நாள் பேய் பற்றிய பய உணர்வில் பெற்ற மதிப்பெண்கள். 86..

***-----------***---------***



இன்று "வியாழன்" என்ற நாரில் பல்வேறு செய்திப் பூக்களை தொடுத்து மாலையாக தருவதால் கதம்பமாய் மணக்கும் நாள். இதற்கு முன் விமர்சித்தவர்களும், இதையேதான் கூறினார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்களை கோர்த்து பதிவாக்கி தருகின்ற போது அது கதம்பந்தானே.! 

இன்று சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கைவண்ணத்தில், பல மலர்களால் (அவரின் பயணக்கட்டுரை, பழைய பத்திரிக்கையில் இடம் பெற்ற சம்பவங்கள், நகைச்சுவைகள், அவர் எழுதிய கவிதை, இன்னும் பல, பல) தொடுக்கப்பட்டு மாலையாக மணம் வீசும் பதிவுகளை கொண்டு இடத்தைப் பெறும் நாள். 

இன்றைய தினத்தில் அவர் பயணப்பட்ட காசிப்பயணத்தைப்பற்றி ஒவ்வொரு வாரமாக கூறிக்கொண்டு வந்துள்ளதில் . 
இன்று திரிவேணி சங்கமத்தில்,( கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் கூடுமிடம்) ஆற்றில் நீராடி, பித்ரு கடன் செலுத்தியது, தம்பதிகளாக வேணிதானம் செய்வதைப் பற்றிய விவரங்களும் இடம் பெற்றிருக்கின்றன. . கங்கையில் படகில் பயணித்தது, கங்கையின் அழகான நீரோட்டங்கள் போன்ற படங்கள், இன்னமும் அங்கு எடுத்த சயனஆஞ்சநேயர் கோவில் படங்கள் அனைத்துமே நன்றாக வந்திருக்கின்றன. அவர் வெளியே செல்லும் போது "வானம் காட்டிய படம்" அருமையாக உள்ளது. அது எந்த இடமென பதிவில் கேட்டிருக்கிறார். நான் கருத்துரை கொடுக்கும் போது, "கோயம்பேடு" வாக இருக்குமோ என ஏனோ என் மனதில்  நினைத்ததை நான் அங்கு சொல்லாமல் வந்து விட்டேன். ஏனென்றால், அந்த அளவிற்கு நான் "அறிவாளி" இல்லையென மெளனித்து இருந்து விட்டேன். ஆனால் அதன்பின் வந்த கருத்துரைகளை பார்க்கும் போது, இதற்கு பேர்தான் "குருட்டு அதிர்ஷ்டம்" என்று புரிந்தது. அதிர்ஷ்டமே கதவை தட்டும் போது திறக்க தவறி விட்டால், வழிமாறி போய் விடும் இதில் இந்த "குருட்டு அதிர்ஷ்டம்" கதவை தட்டத்தெரியாமலேயே போய் விடும். 

பித்ரு கர்மா செய்தவிடத்தில், சிதறிய அரிசியை வந்து உண்டு செல்லும் சிட்டுக்குருவிகளின் படங்களை பார்க்கும் போது, கடவுள் தான் படைத்த எந்த உயிருக்கும் அவை இருக்கும் வரை அந்தந்த விதிப்படி எப்படியோ படியளந்து விடுகிறான் எனத் தோன்றியது.

தன் வீட்டின் அருகே சில நாட்களாக உடல்நல கோளாறுடன் சகோ ஸ்ரீராம் அவர்களின் கண்ணில் பட்ட செண்பக பறவை, "இறைவா அதனை காப்பாற்று" என கருணையுடன் பிரார்த்தித்த அவரின் முன்  பிழைத்து பறக்காமலும், எதுவுமே "சொல்லாமலும் சென்றதை" அவர் சொல்லிய விதம்", எங்கள் ப்ளாக்"நட்புறவுகள் அனைவரையுமே வருந்த வைத்தது. இந்த இடத்தில் விதியின்பால் கொண்ட நம்பிக்கை எனக்கு இன்னமும் வலுவடைகிறது. 

வழக்கை இழுத்தடித்து, எதிராளிக்கு சிரமம் தருவதே ஒரு பெரிய தண்டனை போலும். எங்கோ வேடிக்கையாக படித்ததும், நினைவுக்கு வந்தது. அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் தவறை உண்டாக்கி விடுவதும், தவறான முடிவை தராமல் இருக்க சிந்தித்து தீர்ப்பளிபளிப்பது சிறந்தது எனவும், நீதிபதி திரு மு. இஸ்மாயில் அவர்கள் சொன்னதும், கடவுள் மேல் வைத்த நம்பிக்கை முழுதாக இருந்து விட்டால் நாம் எதிர்பார்ப்பது எல்லாம் தானாக நடக்கும் என்ற  சுகிசிவம் அவர்களின் ஆன்மீக எண்ணங்களும், சுவாரஸ்யம் தந்தது. ஆனால், அது சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமாவதில்லை என்ற ரீதியில் கருத்துக்களும், இன்றைய பதிவுக்கு பலமளித்தன. 

"கடந்த செவ்வாயன்று நடந்த சம்பவம் சகோதரர் ஸ்ரீராமுக்கு இன்னமும் அதிர்ச்சியை தந்து கொண்டே உள்ளது என நினைக்கிறேன். அதன் பாதிப்பில்தான் இந்த வாரம் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை எனவும் எனக்கு தோன்றுகிறது "என்பது போன்ற கருத்துகளும் சென்ற திங்களன்றைய கருத்துக்களில் இடம் பெற்றன. அதன் பிரதிபலிப்பாக அவரும் அந்த சம்பவத்தை இன்றும் நினைவு கூர்ந்துள்ளார். 

இந்த மாதிரி அதிர்ச்சி சம்பவங்கள் நாம் எதிர்பார்க்காமலே இருக்கும் போது நடந்து முடிந்து விடுகிறது. அதன் பின் நடந்ததை மறக்க இயலாமல், அதிலிருந்து மீளவும் முடியாமல் தினமும் நாம் சஞ்சல முறுகிறோம்.  ஏனெனில் இது மனிதர்களின் இயல்பு.. இதில் சக மனிதர்களின், (உறவுகள், நட்புகள்) ஆறுதலும், தேறுதலும் பாதித்தவர்களுக்கு ஒரு வலுப்படுத்தும் மருந்துக்கு சமானமானவை.  இன்றும் கருத்துரைகள் கூறி ஆறுதல்கள் அளித்தவர்களுக்கும், பதிவை பாராட்டியவர்களுக்கும் நன்றிகள். 

இன்றைய மதிப்பெண்களும் கூடவில்லை. (ஒருவேளை என்னுடைய விமர்சன வரவின் காரணமோ?) சகோதரிகள் அதிரா, ஏஞ்சலின் இவர்களை இன்று காண முடியவில்லை. பொதுவாக எப்போதும் இவர்களால்100க்கும் மேலாக தாண்டி ஓடும் மதிப்பெண்கள் இன்று சதமடித்த திருப்தியில் சந்தோஷமடைகிறது. 
இன்றைய மதிப்பெண்கள்... 100 ...

***-----------***---------***



இன்று "வெள்ளியின்" இனிமையான "வெள்ளித்திரை" பாடல்கள் வெளியாகும் நாள். பாடும் குரலின் இனிமையும், இசையின் மகிமையும் ஒன்று சேர்ந்த திரைப்பட பாடல்கள்   "வெள்ளி" முளைக்கும் முன்பே ஆகாய வீதியில் வலம் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்திச் செல்லும்.

திரைப்பட பாடல்கள் மட்டும் பகிர்வது என்றில்லாமல், அந்த பாடல் இடம்பெற்ற படம்,  வந்தஆண்டு, இசையமைத்தவர், இயற்றியவர் என அந்த திரைப்படத்தின் பல செய்திகளையும் தெரிவிப்பது இந்த தினத்தின் ஆசிரியர் சகோ ஸ்ரீராம் அவர்களின் சிறப்பு.  இதன் மூலம் கருத்துரைகள் தந்து  பேசிக் கொள்ளும் நட்புறவுகள் மூலமாக நிறைய பழைய / புதிய திரைப்படங்கள்,  திரைப்பட கலைஞர்களின் திறமைகள், குறைகள், நிறைகள் என அவரவர்கள் அறிந்த தெரிந்த நிறைய விஷயங்களும் இன்று அலசப்படும்.

அவ்வகையான இன்றைய தினத்தில், பழம் பெரும் நடிகரான முத்துராமன் அவர்களின் மகன் கார்த்திக் நடித்த "ஹரிச்சந்திரா" படத்திலிருந்து ஒரு பாடல் (பாடல் வரிகளுடன்) இடம் பெற்றுள்ளது. திரு. எஸ். பி. பியின் இனிமையான குரலுடன் பாடலின் தேர்வு நன்றாக உள்ளது. இசையமைத்தவர்களும் புதிதானவர்கள். இசையும் குறை சொல்ல முடியாதபடி நன்றாகவே வந்துள்ளது.

பாடலை ரசித்த நட்புள்ளங்கள் பாடலின் சிறப்பு பற்றி நிறைய கருத்துரைகள் தந்துள்ளார்கள். இந்த பாடல் வேறு பல பாடல்களை நினைவுபடுத்துவதாக, சகோதரர் தனபாலன் அவர்கள்  சில பாடல்களை வழி மொழிந்துள்ளார். இன்றைய இந்த பதிவுக்கு வந்து சிறப்பான கருத்துரைகள் தந்த நட்புறவுகளுக்கு  என் இதயம் கனிந்த நன்றிகள்.
இன்றைய பதிவு இது வரையிலான பெற்ற மதிப்பெண்கள்...87...
இனி இப்பதிவு நாளைக்குள் மதிப்பெண் கூட்டல்களும் பெறலாம் என்ற நம்பிக்கையில், உங்கள் அனைவரிடமும், அன்புடன் விடை பெற்றுக் கொள்கிறேன்.

விமர்சனம் செய்வதென்பது, எழுதுபவர்களுடைய திறமைகளையும், அத்திறமைகளை ஊக்குவித்து கருத்துரைகள் இட்டு, பாராட்டி வாழ்த்தி செல்பவர்களையும் ஒரு சேர சந்தோஷபட வைப்பதுதான். அவ்வகையில் நான் செயல்பட்டுள்ளேனா என்பது நாளை எனக்கு அனைவரும் தரும் மதிப்பெண்களில் தெரிந்து விடும். என்னுடையது சற்றே நெ(கொ)டும் விமர்சனந்தான்.! பொறுமையுடன் படிக்க வேண்டுகிறேன். அவரவர் பாணி என ஊக்குவித்து எழுத சந்தர்ப்பம் அளித்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும், எ. பியின் மற்ற ஆசிரியர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

இது முதல் முயற்சி என்பதினால் இப்படி.. இனி அனைவரும் தரும் ஊக்கத்தில் 👌👌மறுபடியும் ( மறுபடியுமா.. .. ? அலறல் சத்தம் இப்போது கேட்டு விட்டது..  சும்மா ஜோக்கிற்காக சொன்னேன். ) சந்திக்க காத்திருக்கிறேன். நன்றி. 🙏....  

83 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    இன்று யார்....பார்க்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பதிவை ஓட்டமாகப் பார்த்ததுமே கமலா அக்காவாக இருக்குமோ என்று யூகித்து வந்தால் ஆஹா கமலா அக்காவேதான். வருகிறேன் பின்னர்....எல்லாம் வாசிக்க!..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாச்சு இன்று யாரையும் காணவில்லை..கீதாக்கா பயந்து போய்.... காணலையோ....நேக்கு தனியா இருக்க ஒன்னும் பயமில்லையாக்கும்...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. பெயர் போட்டிருக்கிறேனே தொடக்கத்திலேயே.. கவனிக்கவில்லையா?!

      நீக்கு
    3. பதில்களைப் பார்க்கவில்லை நீங்கள்!

      நீக்கு
    4. ஐந்தரைக்கே வந்துட்டேன். ஆனாலும் உடனடியாகப் பதிவுகள் பக்கம் தலை காட்டலை! வேறு சில சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு வந்தேன். சில மடல்களுக்கு உடனடியாக பதில் போட வேண்டி இருந்ததும் ஒரு காரணம்.

      நீக்கு
    5. வாங்க கீதா அக்கா... வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு வந்தாலும் சீக்கிரம்தான்! :)))

      நீக்கு
    6. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

      விமர்சனம் காண வந்த தங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தந்தது. நிதானமாக வந்து படித்து விட்டு கருத்துக்கள் சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம். மிகவும் தாமதமாக வருவேன்.

    கமலா ஹரிஹரன் மேடம் அவர்களின் விமர்சனம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் நெல்லைத்தமிழன். பயணமா? மெதுவா வாங்க.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      இன்று தாமதமாக வருகையாக இருக்கும் என தங்களின் பயண அவசரத்தில் வந்து சொல்லிச்சென்ற போதும், விமர்சனம் நன்று என்ற கருத்தை பதிந்து விட்டு சென்றது மகிழ்வை தந்தது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    சனிக்கிழமை நற் செய்திகளைப் படித்து விட்டு வருகிறேன்.
    அன்பு கமலா ஹரிஹரனின் அருமை எழுத்துகளை முழுவதும் படிக்க வேண்டும். மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... காலை வணக்கம்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      /அன்பு கமலா ஹரிஹரனின் அருமை எழுத்துகளை முழுவதும் படிக்க வேண்டும். மீண்டும் வருகிறேன்./

      வாருங்கள்.. நிதானமாக வந்து படித்து கருத்துக்களை தாருங்கள். நீங்கள் என் எழுத்துக்களை படிக்க மீண்டும் வருகிறேன் எனச் சொல்லியதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காத்திருக்கிறேன் சகோதரி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. வந்திருக்கும் நண்பர்கள், வரவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. இந்த வாரச் செய்திகள் அனைத்தும் முற்றிலும் புதியவை! நல்லதொரு பகிர்வுக்கு ஸ்ரீராமுக்கு நன்றி. விமரிசனம் செய்திருக்கும் கமலா ஹரிஹரன் அழகாக அலசி இருக்கிறார். ஒவ்வொரு நாளுக்கும் தனிச் சுவை கொடுத்திருக்கும் பாணியும் அலாதியாக உள்ளது. அவரே சொன்னது போல் கொஞ்சம் நீண்ட விமரிசனம் என்றாலும் சுவையான, ரசிக்கும்படியான விமரிசனம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்திகள் புதியவை என்பது ஆச்சர்யம். இப்படி கண்ணில்படாமல் போகும் என்பதால்தானே இங்கு பகிர்வது!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      இவ்வாரத்திற்காக நான் எழுதிய விமர்சன அலசல் நன்றாக உள்ளது என தாங்கள் கூறியதே எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. என் இயல்புபடி கொஞ்சம் பெரிய பதிவாக வந்து விட்டது. ஆயினும் முழுவதும் படித்துப் பாராட்டிய தங்களது பாங்கினுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஶ்ரீராம்.. உங்கள் இடங்களில் பெருமழை பெயகிறதா? வானம் கடும் மேகமூட்டமாக இருக்கிறதா?

      வண்ணுமில்லை. கீதா சாம்பசிவம் மேடம் பின்னூட்டம் படித்தேன். அத்தனையும் புதியவையாமே

      நீக்கு
  7. ஒவ்வொரு நாளின் பதிவின் கருவுக்கு ஏற்பப் படங்களையும் தேர்ந்தெடுத்துப் போட்டுத் தன் ரசனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நன்றாயிருக்கிறது.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      ஒரு வார பதிவுகளுக்கும்,அதற்கு வந்த பாராட்டுகளுக்கும் நன்று,நிறைவு என கூறும்படியான விதத்தில் இந்த விமர்சனம் உருவானது என்றாலும்,அந்த விமர்சனத்தை அவரவர் பார்வையில் விமர்சிக்கும் போதும், எழுதிய எழுத்துக்களுக்கு ஒரு ஊக்கங்களை உண்டாக்கும் பாராட்டுகள் கிடைக்கும் போதும், எழுதியதின் பலன் கிடைத்த ஒரு மகிழ்ச்சி மனதை நிறையச் செய்கிறது. ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்....

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  11. பெயருக்கு ஏற்றார் போல் ராமலிங்கம் அவர்கள் கருணையும், வள்ளல் தன்மையும் கொண்டவராக இருக்கிறார்.
    அவருக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
    தேளின் விஷத்தில் காச நோய் மருந்து கண்டு பிடிப்பில் மெக்ஸிகோ விஞ்ஞானிகளுடன் நம் தமிழக விஞ்ஞானியும் சேர்ந்து கண்டு பிடித்து இருப்பது மகிழ்ச்சி இருநாட்டு விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள்.
    நல்ல செய்திக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சகோதரி கமலா ஹரிஹரன் விமர்சனம் மிக அருமை.
    படங்களும் நல்ல தேர்வு.

    //ஒரு சிறந்த உணவை உணவின் தரத்தைப் பொறுத்து அறுசுவை உணவென்று கூறுகிறோம். அதே போல் ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும், சுவை நிறைந்த பதிவுகளை பதிந்து, பார்ப்பவர்கள் கண்களையும்,மனதையும், கருத்தையும் உற்சாகப்படுத்தும் ஏழு சுவைகள் நிரம்பிய ப்ளாக்கென்றால், அது "எங்கள் ப்ளாக்" தான். //

    ஆரம்பத்திலேயே அசத்தி விட்டார்.

    //விமர்சனம் செய்வதென்பது, எழுதுபவர்களுடைய திறமைகளையும், அத்திறமைகளை ஊக்குவித்து கருத்துரைகள் இட்டு, பாராட்டி வாழ்த்தி செல்பவர்களையும் ஒரு சேர சந்தோஷபட வைப்பதுதான்.//

    நிறைவிலும் அழகாய் சொல்லி விட்டார்.
    எல்லோருக்கும் மகிழ்வு அளிக்கும் விமர்சனம்.
    வாழ்த்துக்கள் கமலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      இந்த வாரம் நான் எழுதிய விமர்சனம் குறித்த தங்களுடைய கருத்துக்கள் மனதை மகிழ்வூட்டுகின்றன.

      சென்ற வாரம பதிவுகள் தந்த அனைவர் மனதினையும், கருத்துரை பதித்த அனைவரது எண்ணங்களையும், துளியேனும் காயப்படுத்தாமல் எவ்விதம் விமர்சனம் எழுதப் போகிறோம் என எழுத துவங்கும் முன் சற்று கலக்கமாக இருந்தது. ஆனால் இப்போதைக்கு தங்கள் அனைவரிடமிருந்தும், நல்ல விதமான பாராட்டுக்களை பெற்றுக் கொண்டிருக்கும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணை இல்லையென்ற சந்தோஷம் அடைந்து கொண்டிருக்கிறேன். ரசித்துப் பார்த்தற்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  13. பாசிட்டிவ் செய்திகள் வித்தியாசமாகவும், கமலா ஹரிஹரன் அவர்களின் விமர்சனம் சிறப்பாகவும் இருக்கிறது. பின்னூட்டம் இடும் பொழுதே இவரும்,கோமதி அக்காவும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து நுணுக்கமாக பின்னூட்டமிடுவார்கள். விமர்சனத்தில் அந்த பாங்கு சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      இவ்வாரம் நான் எழுதிய விமர்சனம் நன்றாக உள்ளதென கூறியது எனக்கு மிகவும் ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது சகோதரி. என் எழுத்தாற்றலை வளர்த்து விடும் தங்களுக்கு எந்நாளும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். வாழ்த்துக்களுக்கும் என்மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
    திரு.ராமலிங்கம் அவர்களின் சேவை மனப்பான்மை மிகவும் பாராட்டுக்குரியது.

    தேளின் விஷத்திலிருந்து காச நோய்க்கு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள். அதில் தமிழக விஞ்ஞானியும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

    நம் ஆயுர்வேதத்திலும் நத்தை,ஆமையை கொண்டு மூல நோய்க்கு மருந்துகள் தயாரித்திருப்பதாக நான் முன்பு இங்கு குறிப்பிட்ட ஞாபகம். பாஸிடிவ் செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    நான் எழுதிய விமர்சனத்தை வெளியிட்டு என்னை சிறப்பித்தமைக்கு மிகவும் மகிழ்வடைகிறேன். எனக்கு இதுபோல் எழுத வாய்ப்பளித்தற்கு தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். விமர்சனம் கண்டு ஊக்கப்படுத்திய நம் நட்புறவுகளுக்கும், இனி வந்து ஊக்கப்படுத்தி உற்சாகம் தரும் நட்புறவுகளுக்கும் என்னுடைய மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான விமர்சனம்... விளக்கமான விமர்சனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      எழுதிய இவ்வார விமர்சனம் அருமையாகவும், விளக்கமாகவும் இருப்பதாக கூறியிருப்பதற்கு, மிகவும் சந்தோஷம். தங்களுக்கு என்மனம் நிறைந்த நன்றிகள்.

      நான் வலையுலகம் வந்த ஆரம்பத்திலிருந்தே என் எழுதும் ஆர்வத்தை பாராட்டி ஊக்குவித்து வரும் தங்களுடைய பண்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. நேர்மறைச் செய்திகள் தொகுப்பு அருமை...

    எதற்கும் எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும்...

    தேள் எங்களுக்கே சொந்தம்... என்று காப்புரிமை கேட்டு விடப்போகிறது அமெரிக்கா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேள் எங்களுக்கே சொந்தம்... என்று காப்புரிமை கேட்டு விடப்போகிறது அமெரிக்கா....// உண்மை.

      நீக்கு
  18. தருஞ்சுவையும் வருஞ்சுவையும்
    அருஞ்சுவையாய் அழகு செய்ய
    ஏழு சுவை எனச் சொல்லும்
    கார்மேகத் தமிழ்க் கமலை
    கை வண்ணம் வாழ்கவே....

    ஏழுசுவை = எழு - சுவை...
    (விடியலில்) எழு..
    (இன்தமிழ்) சுவை..
    அருந்தமிழே.. பெருந்தமிழே..
    உன்னால் இருந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      நடுவில் என் பதில்கள் கூற சற்றை தாமதமாகிவிட்டது. வருந்துகிறேன்.

      ஆகா.. நல்ல கவிதையாலேயே கருத்துக்கள் கூறி விட்டீர்கள். தங்கள் அளவுக்கு, என்னிடம் தமிழ் தங்கவில்லை,. ஆகவே இனியதமிழே.. நானும் உங்கள் தமிழ் புலமை கண்டு தலை வணங்குகிறேன். மிக்க நன்றி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  19. தேனில் தோய்ந்த வார்த்தைகளால் இன்றைய விமர்சனப் பதிவு...

    எப்போதுமே விரிவாகக் கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்துபவர் தாங்கள்...

    தங்களிடம் விமர்சனப் பகுதி வந்தால்!...

    அழகிய படங்களுடன் -
    அருமை.. அருமை...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /எப்போதுமே விரிவாகக் கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்துபவர் தாங்கள்...

      தங்களிடம் விமர்சனப் பகுதி வந்தால்/

      விட்டு விடுவேனா? விரிந்து கிடக்கும் வானத்தை துணைக்கொண்டு மனதில் வளைந்து வரும் வார்த்தைகளை வளைத்தெடுத்தால், விரிவுக்கு அவ்வானமும், செவ்வானமும் துணையாக வந்திடுமே ..(இதுக்குத்தான் அந்த காலத்திலே யோசிப்பவர்களை பார்த்து, "ஏன் இப்படி எப்ப பாத்தாலும், மோட்டு வளையை பாத்துகிட்டு உடகாந்திருக்கீங்க"என்ற வசனம் வரும். ஹா ஹா ஹா.)

      விரிவான என் விமர்சனம் கண்டும், அசராமல் படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கும், படங்களை ரசித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  20. உதவி பெற்ற முகேஷ் கண்ணாவுக்கும் வாழ்த்துகள்.

    சகோவின் விமர்சனம் விரிவாக இருந்தது எந்தப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை.

    அழகாக விவரித்து இருக்கிறார் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /சகோவின் விமர்சனம் விரிவாக இருந்தது எந்தப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை/

      ஆமாம் சகோ சற்று (இல்லை நிறையவே) நெடிதான விமர்சனந்தான். எதையும் விட மனதில்லை. அந்த அளவுக்கு சென்ற வார பதிவுகளும், பதில்களும் என்னை ஈர்த்து விட்டன. (அட.. உனக்கு எந்த வாரமும் அப்படித்தான்.! என என் ம. சா இடிக்கிறது. அது வேறு விஷயம்.. ஹா ஹா ஹா.)
      விமர்சனம் அழகாக உள்ளதென கூறி வாழ்த்தியமைக்கும் என்மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  21. அனைவருக்கும் சனிக்கிழமை காலை வணக்கம் :)
    காசநோய்க்கு தேளின் விஷத்தில் இருந்து மருந்து கண்டுபிடிக்க கூட்டாக உழைத்த மெக்சிகோ அமெரிக்க நாட்டு மற்றும் நம் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகளை ( ஞானமலை ஏழுமலை மற்றும் ஷியாம் சத்யமூர்த்தி ) வாழ்த்தி பாராட்டுவோம் .

    ///இந்த மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவர்கள் தமிழக விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.//

    அங்கு முதல் பின்னூட்டத்தில் இந்த மருந்து ஆய்வில் உதவிய மற்றவரும் ஒரு சுட்டி பகிர்ந்துள்ளார் .

    https://news.stanford.edu/2019/06/10/healing-compounds-scorpion-venom/


    ஒருவருக்கு தேவையான நேரத்தில் உதவுவது என்பது மிகவும் அருமையான விஷயம் ..அப்படிப்பட்ட ஒரு thought எல்லாருக்கும் சட்டென வராது சிறுவயதுமுதல் அப்படிப்பட்ட குணங்களை ஊக்கப்படுத்த உற்சாகமூட்டி உருவாக்க வேண்டும் .பெரியோர் ராமலிங்கம் ஐயா அவர்களின் பெற்றோருக்கும் ராமலிங்கம் ஐயா மற்றும் முகேஷ் கன்னாவிற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
  22. எல்லாரும் நலமா :)) கொஞ்சம் பிஸி நிறைய hay fever அதனால்தான் கடந்த சில நாட்கள் வர முடியலை பிஸி அடுத்த வார இறுதி வரை தொடர்கிறது :) இந்த வாரம் கமலா அக்காவின் விமரிசனமா. இருங்க முழுதும் படிச்சிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி

      தங்களுடைய பிஸியான நேரத்திலும் அன்புடன் வந்து பதிவை படித்து கருத்துக்கள் கூறுவது மிகுந்த மகிழ்வை தருகிறது. நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  23. மோமோ //மைதாவில் தான் செய்வார்கள் .கொழுக்கட்டை போல் பூரணம் (சைவம் அல்லது அசைவம் ) இட்டு மோதக வடிவில் எண்ணெய் தடவி ஸ்டீம் செய்வாங்கன்னு படிச்சிருக்கேன் .

    அறுசுவை திங்களுக்கு போட்ட படம் நாவூற வைக்கிறது :)
    //சகோதரிகள் அதிரா, ஏஞ்சலின் இவர்களை இன்று காண முடியவில்லை. பொதுவாக எப்போதும்//

    இங்கு pollen எனும் மகரந்தம் மிக அதிகமாக பறப்பதால் அந்த அலர்ஜி வந்துவிட்டது மேலும் கொஞ்சம் வேலையும் பிசி அடுத்த வராமும் பிசி தொடர்கிறது .அதனால்தான் வர இயலவில்லை .

    மிக அருமையா ஏழுசுவை விருந்து படைத்துவிட்டீர்கள் கமலா அக்கா ..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றே எழுதநினைத்து விட்டுவிட்டேன்..... மோமோ பற்றிய விவாதத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் ஏஞ்சலின்...விரைவில் வருகிறது 'மோமோ-எபி திங்கக்கிழமை பதிவில்'. என் மனைவி இதனைச் செய்து படங்களை அனுப்பிவிட்டாள். ஹாஹா

      நீக்கு
    2. Ohhh really:) I am expecting gluten free version also .

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      இவ்வார விமர்சளத்தை படித்து அன்புடன் நல்லதொரு கருத்துக்கள் தந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

      மோமோ செய்முறையை கூறியமைக்கும் நன்றி. ஏற்கனவே சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்கள் பதிவில் படித்துள்ளேன். எண்ணெய் மோதகம் (தேங்காய் வெல்லம் பூரணம் செய்து உள்ளே வைப்பது) மைதாவில் செய்து எண்ணெய்யில் பொரிப்பது போல் இது ஆவியில் வேக வைப்பது.( உள்ளே நமக்கு பிடித்த வெஜிடபுள் வைத்து)

      தங்களையும் அதிரா சகோதரியையும் கடந்த வாரம் முழுவதும் காண முடியவில்லையே எனதான் பதிவில் குறிப்பிட்டேன். இப்போது தங்களுக்கு உடல்நலம் பரவாயில்லையா? இவ்வளவு வேலைகள் நடுவிலும் வந்து விமர்சன பதிவை படித்து அழகான கருத்துரைகள் தந்து பாராட்டியதற்கும், வாழ்த்துக்கள் தந்தமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  24. இன்றைய விமர்சனம் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கமலா ஹரிஹரன் மேடம். எழுத்தில் வலிமை இல்லாவிட்டால், நெடிய எழுத்து படிக்க சோர்வாக இருக்கும். நீங்கள் ரசித்துப் படிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      பயணம் சிறப்பாக இருந்ததா? இவ்வார விமர்சனம் சிறப்பாக இருப்பதாக கூறியதற்கு மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன். நெடிய பதிவாக இருப்பினும், பொறுமையாக ரசித்துப் படித்து நல்லதொரு கருத்துக்களை தந்தமைக்கும், தங்களுடைய அன்பான பாராட்டுதல்களுக்கும். என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  25. தமிழ் இந்துவும், தினமலரும் தொடர்ந்து நற்சேவைகள் புரிகின்றன.
    முகேஷ் கண்ணாவுக்கு உதவி செய்து அவரது வாழ்வை மலர வைத்த திரு ராமலிங்கம் அவர்களுக்கு,
    தேளின் விஷத்தைக் கொண்டு மருந்து கண்டுபிடிக்கும்
    ஸ்டான்ஃபோர்ட் விஞ்ஞானிகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. கற்பனைகளின் சிறகடிப்பு பற்றி சகோதரி கமலா ஹரிஹரன் அவர்களின் வர்ணிப்பு அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இவ்வார விமர்சளத்தை படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.

      குறிப்பாக கற்பனைகளின் சிறகடிப்பு பற்றி தாங்கள் ரசித்தது மிகவும் சந்தோஷத்தை தந்தது. தங்களைப்போன்ற சிறந்த படைப்பாளிகளிடமிருந்து பாராட்டை பெறுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பதிவை ரசித்து பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  27. மிகுந்த அக்கறையுடனும் , அழகுத் தமிழிலும்
    ஏழு நாட்களுக்கான விமர்சனம், அதிலும் பின்னூட்டங்களையும்
    கவனித்து மதிப்பு கொடுத்து சிறப்பாக எழுதி இருக்கும்
    அன்பு கமலா ஹரிஹரனுக்கு மிக நல்ல மனம்.
    இல்லாவிட்டால் இத்தனை பரிவு எழுத்தில் வருமா.

    எழுத்தில் கசப்பு என்பதே இல்லாமல்
    அத்தனை சுவைகளையும் கூட்டி பெரு விருந்தே வைத்து விட்டார்.

    மனம் நிறை வாழ்த்துகள் கமலா.நேர்மறை எண்ணங்கள்
    எப்பொழுதும் உங்களிடமிருந்தும் //எங்கள்// இடமிருந்தும் அனைவரையும் நிரப்பட்டும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோதரி

    தங்களது அன்பான வருகை கண்டு என் மனம் பூரிக்கிறது. இவ்வார விமர்சளத்தை ரசித்துப்படித்து மிகவும் அன்பாக கருத்துக்கள் தந்ததை கண்டு என மனம் மிகவும் சந்தோஷம் அடைகிறது. தங்களைப் போன்ற சிறந்த பதிவர்கள் வந்து இவ்வார விமர்சன எழுத்துக்கள் நன்றாக உள்ளதென கூறி பாராட்டுகளை தந்ததற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எப்போதும் நாம் நேர்மறையாகவே சிந்திப்போம் சகோதரி. விதிகளின் மேல் எனக்கு நம்பிக்கை அதிகம். இறைவன் நமக்கென்று உள்ளதை கண்டிப்பாக தருவான். அவன் நல்லதையே அனைவருக்கும் தரட்டும். தங்களது பாராட்டிற்கு மிக்க நன்றிகள் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. முதலில் என்னை மன்னிக்கவும். இங்கு கால நிலை சரியில்லாமையாலோ என்னமோ, மாறி மாறி ஒவ்வொருவராக உடல்நலம் சரியில்லை, எனக்கும் முடியவில்லை, அதனால எங்கும் பார்க்காமல் ஓய்வில் இருந்தென்.
    இன்று யாராக இருக்கும் ரிவியூ எழுதுபவர் என யோசிக்கையில், என் செக் தூது அனுப்பினா, கமலாக்காவின் ரிவியூ இன்று.. உங்களால் போக முடியுமா அதிரா, இல்லை எனில் சொல்லி விடவோ என.. கமலாக்கா என்றதும்.. எபடியும் ஒரு கொமென்ட்டாவது போட வேண்டும் என வந்தேன்.

    அனைத்தும் படித்தேன் கமலாக்கா அழகாக எழுதியிருக்கிறீங்க.. கொஞ்சம் உங்கள் வழமையான நகைச்சுவை குறைந்ததுபோல இருக்கே:)).. எங்கள்புளொக் என்பதல அடக்கிட்டீங்களோ?:)).. ஹா ஹா ஹா வாழ்த்துக்கள்.

    என்னால் இனி எங்கும் வரமுடியாமலிருக்கும்.. ஹொலிடே எல்லாம் முடிச்சு. அந்தாட்டிக்கா போய் மோடி அங்கிள் ட்ரம்ப் அங்கிளை எல்லாம் பார்த்துப் பேசி:), பிரச்சனைகளைக் கொஞ்சம் நேராக்கிக்கொண்டு ஓகஸ்ட்டில் வருகிறேன்[அப்படித்தான் நினைக்கிறேன்:)].. இடையில வரமுடியாமலிருக்கும் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா சகோதரி

      நலமா சகோதரி? தங்களைத்தான் காணவில்லையே என எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன்.இந்த என் விமர்சனத்துக்கு மட்டுமல்ல.. போன வாரத்திலிருந்தே உங்கள் இருவரையும் எ. பியில் பார்ப்பதே அதிசயமாகி விட்டது. அதனால்தான் அதிரா, ஏஞ்சலின் வந்தால், கமெண்ட்ஸ் கூடியிருக்கும் என பதிவிட்டேன். இன்று ஏஞ்சலினும் வந்து உடம்புக்கு முடியவில்லை எனக் கூறினார். தாங்களும் அவ்வாறே கூறியுள்ளீர்கள். என்ன செய்கிறது? இருவருமே உடல் நலம் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

      இத்தனை உடல் நலமில்லை என்ற போதிலும், இன்று நான் எழுதிய விமர்சனம் என்று தெரிந்தவுடன் வந்து படித்து கருத்திட்ட தங்களின் அன்பு என நெஞ்சை நெகிழ்த்தி விட்டது சகோதரி. மேலும் விமர்சனம் நன்றாக உள்ளதென கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. தாங்களும், ரசித்துப் படித்து கருத்துக்கள் தநததற்கு மிக்க நன்றிகள்.

      தங்களுக்கு இப்போது பள்ளி விடுமுறையா? உடல் நலம் முன்பு மாதிரி ஆனதும் விடுமுறை பொழுதை ஜாலியாக கழித்து விட்டு வாருங்கள். தங்களை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பேன். உடல் நலம் பேணவும். வருகைக்கு மிகவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  30. நெல்லைத்தமிழனின், கீதாவை விட யங்கூஊஊஊ:)) எனும் திங்கள் கிழமையில் வந்த பதில்கள் முடிக்க படிச்சேன்ன்.. பதில் போட முடியவிலை மன்னிக்கவும்.

    Sriram மின் என் பக்கத்திற்கான மிகுதிக் கொமென்ட்ஸ்க்கு இன்னும் பதில் போடவில்லை.. மன்னிக்கவும் எப்படியும் போட்டு விடுவேன்.. மற்றும்படி, ஹொலிடே எல்லாம் முடிச்சு வருகிறேன்ன்..

    அதுவரை ஆரும் அடிராவை சே..சே.. அதிராவை மறந்திடாதீங்கோ:)).. அஞ்சுவை வேணுமெண்டால் மறவுங்கோ:) நா ஒண்ணும் வாணாம் ஜொல்ல மாட்டேன்ன் அதற்கு:))).. ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா உடல் நலத்தியப் பார்த்துக்கோங்க மெதுவா வாங்க உங்கள் உடல் நலம் உங்கள் குடும்பத்தினரின் நலம் முக்கியம் எல்லோருவ்ம் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்கிடையிலும் நெ அண்ட் கீ யை இழுக்கணுமா ஆர்ச்சியின் ஆச்சி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. விடுமுறையை நன்கு என்ஞாய் செய்துவிட்டு வரவும். எல்லோரும் விடுமுறைக்குப் போறீங்களா இல்லை பசங்கள்லாம் வரலையா?

      வாழ்த்துகள் (& பாராட்டுகள் .. என்னை கீதா ரங்கன்க்காவின் தம்பி என்று சொன்னதுக்கு ஹா ஹா)

      நீக்கு
  31. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் கமலா அக்கா..

    வெரி வெரி ஸாரி. நேற்று முழுவதும் பயங்கர டைட் டே யாகிவிட்டது. காலையில் இருந்து வேலைகள் 3.30க்கு வீடு வந்ததும் இங்கு கமென்ட் போட வந்ததும் அடுத்த ஞாயிறு கல்யாணம் மைத்துனர் பெண்ணின் மாமனார் மாமியார் வீட்டிற்குப் போகணும் என்றதும் போய் விட்டு வர ராத்திரி 11 மணி...

    ஸோ இப்பத்தான் பார்த்து கமென்ட் போட்டுருவோம் என்று வ்ந்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      வாங்க..வாங்க நீங்க நேத்து காலை வணக்கம் சொன்னதுக்கு பதிலாக நான் இன்று மதிய வணக்கம் சொல்கிறேன். (ரொம்ப சீக்கிரம்.. ஹா ஹா ஹா) உண்மையிலேயே நான் நேற்று காலை பதினொறு மணி வாக்கில் தங்களுடைய கருத்துக்களைப் பார்த்து விட்டேன். ஆனால் உடனடியாக பதில் தர முடியாமல் போய் விட்டது. நேற்று முழுவதும் சன்டே பிஸியில் மாட்டி இப்போதுதான் என் உலகத்துக்கு வந்துள்ளேன். தாமதமாக பதில் தருவதற்கு முதலில் என்னை மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  32. தேளின் விஷத்திலிருந்து காச நோய்க்கு மருந்து டாப்! செய்தி அதுவும் அதில் நம் தமிழ்நாட்டு விஞ்ஞானி ஞானமணி அவர்களும் உள்ளது என்பது பெருமை சேர்க்கிறது. வாழ்த்துகள் ஞானமணி அவர்களுக்கு. பெயருக்கு ஏற்றது போல் !! பணியும்!!

    முகேஷ் கண்ணாவுக்கு உதவ முன்வந்த திரு இராமலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள்! நல்ல சேவைகள் தொடரட்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  33. கமலா அக்கா ரொம்ப அழகா சொல்லிருக்கிங்க. அறுசுவையை ஏழு சுவையாக்கி!! வாவ்!

    ( இது என்னை மட்டும் குறிப்பிட்டு கூறுவது. மற்றவர்கள் அனைவருமே இங்கு ஜாம்பவான்கள்.)//

    உங்கள் தன்னடக்கத்திற்கு அளவே இல்லையா!!!! ஹா ஹா ஹா ஹா ஹா...நீங்களும் ஜாம்பவி யேதான்!!!!! (ஜாம்பவான் ஆண் ஜாம்பவி பெண்!!! ஹிஹிஹிஹி)

    அட@ திங்கள் ஞாயிறு!!! சூப்பர் விளக்கம் கமலா அக்கா! அதாவது உடல்வெப்பம் என்று சொல்லியது...
    ஞாயிறு இப்போ சென்னையில் தகிக்கிறாராம் கொஞ்சம் திங்களைச் சென்று கவனிக்கச் சொல்லுங்க்ள் கமலா அக்கா...நான் இந்த வாரம் பயணம் செய்யணுமே 5 நாட்கள் அங்குதான்!!!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களுடைய வருகை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

      இவ்வார விமர்சளத்தை படித்து ரசித்து ஒவ்வொரு இடத்திற்கும் பதில் விமர்சளமாக நல்லதொரு கருத்தை அழகாக தந்த தங்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகள் கண்டு மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது.

      தங்களுக்கும் இவ்வாரம் சென்னை பயணமா? நல்லபடியாக சென்று மைத்துனர் பெண்ணின் திருமணத்தில் மகிழ்வுடன் கலந்து கொண்டு வாருங்கள். தங்கள் பெண்ணிற்கு (மைத்துனர் பெண்ணென்றால் தங்களுக்கு பெண் முறைதானே) என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வாரம் வரும் முழு நிலவிடம் சூரியனின் வெப்பத்தை கொஞ்சம் குளிர வைக்க நானும் வேண்டிக் கொள்கிறேன்.

      இவ்வளவு பிஸியான நேரத்திலும் தாங்கள் அன்பு வருகை தந்து சுவையான பல பதில் கருத்துக்களை தந்தமைக்கு என மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  34. இப்போது "எட்டு குடி குமரன்தான் " இந்த எழுதிக் கொண்டிருக்கும் எட்டாவதை காக்க வேண்டும். //

    டொட்டடைங்க்!!! வந்திருக்காரா பாருங்க கமலா அக்கா!! ஒளி வெள்ள்ம் வந்திருக்குமே!!! ஆசி புரிந்துவிட்டார்!!! எப்போதும் உங்களுக்குத் துணை இருப்பார் கமலா அக்கா...

    ஒளி பொருந்திய "ஞாயறின்" பதிவு. அதனால்தான் ஒளியுடன் கூடிய இயற்கை வனப்பு புகைப்படங்களின் தேர்வு நாளோ? //

    சூப்பர் அக்கா. சரி சரி இதுக்கு நான் ரொம்ப விஸ்தரிக்கவில்லை....

    //சூப்பர் மார்கெட் தலைவியும், வர்ணஜாலத்தில் விடுபட்ட மீதியைதான் தலை குனிந்து மாருதி வேனில், தேடிக் கொண்டுள்ளாரோ.?//

    சூப்பர் கமலா அக்கா !!! என்ன அழகா சொல்லறீங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      விமர்சனத்தின் நடுவே வர்ணனைகளை தாங்கள் ரசித்த விதம் மிகவும் நன்றாக இருக்கிறது.. ரசித்ததோடு மட்டுமில்லாமல், அதற்கு தாங்கள் அளித்த வர்ணனைகளை மனதை ஈர்க்கின்றன. அருமையான கருத்துரைகள் சகோதரி.
      எட்டாத உயரத்திலிருக்கும், எட்டுக்குடி குமரன் எல்லோருக்குமே அருள் புரியட்டும். தங்கள் பாராட்டுக்களுக்கு நான் தகுதி பெற்றவளா எனத் தெரியவில்லை. ஆனாலும் பாராட்டுகள் மகிழ்வைத்தருகின்றன. ரொம்ப நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  35. இன்றைய தினம் பையை மறந்து வந்த பாப்பா தலைப்புக்கு உதவினார் என அனைவரும் நினைத்திருக்க பின்னூட்டங்களின் இறுதியில் சகோதரி ராமலெஷ்மி அவர்கள் பை அந்த குழந்தையின் தோளில் இருப்பதை சி. ஐ. டி யாய் கண்டு பிடித்து தெரிவுபடுத்தி விட்டார். //

    ஆஹா கமலா அக்கா செம...பாருங்க நானும் போன வாரம் எல்லாம் சரியாக ப்ளாக் பக்கம் வர முடியாததால் பலதையும் மிஸ் பண்ணியிருக்கிறேன்...இப்ப உங்க விமர்சனம் பார்த்து தெரியுது...

    // "திங்கள்கிழமை" சுருங்கி (நிஜமான திங்களும் (சந்திரன்) சுருங்கி வருவதாய் சமீபத்தில் செய்தி படித்தேன்.. .உண்மையா, பொய்யா எனத் தெரியவில்லை. ) எ. பியில் " திங்க"வாகி விட்ட போதும், //

    ஹா ஹா நல்ல கம்பேரிசன்!!!!! அக்கா உங்கள் கிட்னியில் ச்சே ச்சே இந்த அதிராவின் நினைவு!! எவ்வளவு கற்பனைகள் ஓடுது!! சூப்பர் கமலா அக்கா

    நிறைய மிஸ் செய்திருக்கிறேன் கமலா அக்கா...ஜீன் கதைகள், அப்புறம், கிரேசி யைப் பற்றி நெத் ஆண்ட் அதிராவின் நியுமராலஜி கருத்து டிஸ்கஷன் எல்லாம் விட்டிருக்கிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களுக்கு பிடித்த வரிகளை எ. காட்டி நல்லதொரு விமர்சனம் தந்ததில் சற்று நாணி மகிழ்வடைந்தேன். ஆனால் ஒன்று நீங்கள் அன்றைய தினங்களில் எ. பிக்கு வந்து படிக்காததை இங்கேயே படித்து தெரிந்த கொள்ள உதவிய நீ..... ண்... ட விமர்சனம். படிப்பதற்குள் பொறுமை சிதைந்து விடும். சுருக்கி கி. மோகன் மாதிரி நறுக்.. சுருக் என்று என்னால் எழுத முடியவில்லையே.! இதைப்பற்றியும் சகோ ஸ்ரீராம் அவர்கள் திங்கள் பதிவில் ( கி.மோகனின் நறுக்.. சுருக் பற்றி) தலைகீழாக குறிப்பிட்டிருந்தார். அதை எழுத தவற விட்டு விட்டேன். ஹா ஹா ஹா.
      கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  36. ஆஹா ஏஞ்சலுக்குக் கவலையை மறக்க காபி குடிக்கலாம் என்று சொல்லியிருந்த பதிலையே இப்பத்தான் பார்க்கிறேன் அன்றும் எனக்கு நெட் படுத்தல் என்று வர முடியாமல் ஆனது. இப்ப காபி என்பதைப் பார்த்ததும் தான் ஆஹா நான் இன்னும் காபி குடிக்கவே இல்லையே....என்று நினைவுக்கு வந்துவிட்டது காபி குடிச்சுட்டு வருகிறேன்..

    அக்கா உங்க விமர்சனம் அருமை. முதல் முயற்சி என்று நீங்க சொல்ல்றீங்க ஆனா நல்லாருக்கு கமலா அக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      /ஆஹா ஏஞ்சலுக்குக் கவலையை மறக்க காபி குடிக்கலாம் என்று சொல்லியிருந்த பதிலையே இப்பத்தான் பார்க்கிறேன் /

      ஆகா.. நான் அதை பார்க்கவில்லையே.! பார்த்திருந்தால் அதையும் ஒரு வரி சேர்த்திருப்பேனே.! ஹா ஹா.

      முதல் முயற்சியே இப்படி நீண்ட பதிவு.. அடுத்தாக வந்தால், எப்படியோ? தாங்க முடியுமா? தங்கள் அன்பான ஊக்கப்படுத்திய கருத்துக்களுக்கு மிகவு‌ம் நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  37. மொபைலில் அடிச்சீங்களா அக்கா. எப்படி இவ்வளவு அந்த இமோஜிஸ் வந்துருக்கு? கம்ப்யூட்டரிலும் தளத்திலும் இருக்கு என்று தெரிகிறது. வேறொரு தளத்தில் அவர் தன் தளத்தில் இந்த இமோஜிஸ் கொடுத்திருக்கார் வாட்சப் போல நாம் அதை ப்ரெஸ் செய்து நம் எண்ணத்தை தெரிவிக்கலாம்..என்பது போல்...

    இப்ப நீங்களும் கடைசியில் கொடுத்துருக்கீங்க...இங்கும் வந்திருக்கே...பார்க்கணும் எப்படி என்று

    அனைத்தும் சூப்பர் கமலா அக்கா ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      /மொபைலில் அடிச்சீங்களா அக்கா. எப்படி இவ்வளவு அந்த இமோஜிஸ் வந்துருக்கு? /

      ஆம் சகோதரி. மொபைலில்தான் பதிவுகள், கருத்துரைகள் என தட்டச்சு செய்கிறேன். என் மகன் சொல்வது மாதிரி, நீ மொபைலை மொபைலாகவே பயன்படுத்தாமல். கனிணி மாதிரி உபயோகிக்கிறாய்.. என்ற கமெண்ட்ஸ் எங்கள் வீட்டிலேயே எனக்கு கிடைக்கிறது. மொபைலில் இமோஜிஸ் எடுக்க கொஞ்சம் கஸ்டமாகத்தான் உள்ளது. தட்டச்சு செய்வதும் கொஞ்சம் சிரமம்தான். மிகவும் பொடி எழுத்துகளை உற்று நோக்குவதால் கண்களுக்கு அயர்ச்சியாக இருக்கிறது. வலைதளத்தில் தங்கள் அனைவரது ஊக்கங்களும் என் களைப்பை போக்குகின்றன. கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  38. மன்னிக்கவும் ஸ்ரீராம்ஜி.

    உடனுக்குடன் வாசிக்க இயலவில்லை இப்போதெல்லாம். பாலக்காட்டிலிருந்து ஊருக்கு வந்த பிறகு பணிகள் நிறைய ஆகிப் போய்விட்டது.

    பாசிட்டிவ் செய்திகள் இரண்டுமே அருமை. இரண்டாவது தமிழரின் பங்கும் இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

    சகோதரி கமலா ஹரிஹரன் அவர்களின் விமர்சனம் அருமையாக இருக்கிறது.

    நீங்கள் மொபைலில் அடிக்கின்றீர்கள் என்று தெரிய வந்தது. பிரமித்துப் போனேன். எனக்கு மொபைலில் கருத்து பதியவே கடினமாக இருக்கிறது என்பதால் தங்கிலிஷில் அனுப்பிட அது தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு இங்கு வந்துவிடுகிறது. பாராட்டுகள் சகோதரி.

    மிக நன்றாக இத்தனை கருத்துக்களியயும் பொறுமையாக மொபைலில் தட்டச்சு செய்திருக்கீங்கள்! அதற்கே சல்யூட் அடிக்க வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் விமர்சனத்தை படித்து சிறந்த கருத்துரை வழங்கியதற்கும் என் மனமார்ந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள். கடந்த ஒரு வருடமாகத்தான் இப்படி மொபைலில் பதிவுகள், கருத்து பதிய என கற்றுக் கொண்டு இயங்கி வருகிறேன். தற்சமயம் பழகிவிட்டது. தங்களுடைய பாராட்டுகளுக்கு மிகுந்த சந்தோஷம் அடைகிறேன். தங்களைப் போன்ற சிறந்த பதிவர்கள் வந்து என் எழுத்தை பாராட்ட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!