ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

பள்ளத்தாக்கைப் பார்க்க பத்து ரூபாய் கட்டணம்!


உணவகத்தின் எதிரில் 8 அடி உயரத்தில் ஒரு மேடை.  அதிலிருந்து பார்த்தால் பள்ளத்தாக்கு தெரிகிறது. மேகமூட்டத்ததுடன் இருந்ததால் புகைப்படம் ஏதும் இல்லை.  அதைப்பார்க்க அவர்கள் வசூலிக்கும் தொகை ரூ. 10

மேடை அருகிலிருந்து நாம் வந்த சாலை ஒரு பார்வை...  அதிகம் ஆட்கள் இல்லை..


உணவுக்கு காத்திருந்த போது சும்மா இராமல் ..

உணவகத்தின் தோட்டத்தில் மெதுவாய்ச் சுற்றினால் அங்கே... 

கருப்பு உடம்பு ...   பச்சைக் கண்கள் !



எதையோ உற்று நோக்கும் தோற்றம்..  சமயங்களில் கண்கள் திறந்த நிலையிலேயே தூக்கமாகவும் இருக்கலாம்!



உஷார்...  அதன் கண்களில் தெரியும் ஏதோ பூச்சி!



இந்தப் பக்கம் பார்த்தால்..
 இப்படி ஒரு திறந்தவெளியா?


என்று வண்டியை நிறுத்தி


 சுற்றுமுற்றும் வேறு ஏதாவது காட்சி க்ளிக் செய்யக்கிடைக்கிறதா என்று பார்த்தபடி 




கொஞ்சம் நடந்து உள்ளே சென்று... 



ம்ஹ்ம்....  ஒன்றுதான்.  ஆயினும் போட்டோ எடுத்த திருப்தி


மலர்களோ


மழலைகளோ

இரண்டுமே

மகிழ்ச்சி அளிப்பவைதான் 



அல்லே...



வந்து சேர்ந்த இடம் ..  மேகாலயாவில் எல்லோரும் தேடித் தேடிச் சென்று பார்க்கும்.....



29 கருத்துகள்:

  1. அழகான படங்கள்.....

    அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. அட... இன்னிக்கு என்ன ஆச்சு.... யாரும் காணோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபீட்லி வழியாக வருகிறவர்கள்தான் முதலில் வருகிறார்கள்.

      நீக்கு
    2. மழை + விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் என்று எல்லோரும் பிசி போலிருக்கு!

      நீக்கு
  3. வழக்கமாக முதலில் வர இருக்கும் போட்டி இல்லாமல் இப்படி டல் அடிக்கிறதே எ.பி. மற்றும் வலையுலகம். 06.00 மணிக்கு வெளியான பதிவுக்கு 07.37 வரை கருத்துரை இல்லை.... என்னே பதிவுகளுக்கு வந்த சோதனை.... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      எனக்கு நேற்று வலைத்தளம் வர இயலவில்லை வருந்துகிறேன்.தவறாது முதலில் வராவிடினும் இறுதியிலாவது நான் வருகை தந்து விடுவேன். நம் வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவரும் முன்பு போல் முதலில் வந்து கருத்துக்கள் இட்டு எ. பி பழைய மாதிரி ஆக நானும் விருப்பப்படுகிறேன். பிராத்திக்கிறேன். ஆனால், முன்பு போல், இன்றும்,ஏன் தினமும்,ஸ்ரீராம் சகோதரர் கை கொடுதது (கமெண்ட்ஸ்களுக்கு) உதவினால், எ.பி கமெண்ட்ஸ் வளர் பிறையாக வளர்ந்து முழு சந்திரனாக பிரகாசிக்கும் என நான் நம்புகிறேன். நான் சொல்வது தவறாக இருப்பின், சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் என்னை மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. கவலை வேண்டாம் சகோதரி. நம் வாசகர்கள் எப்போ வந்தாலும் எப்படி வந்தாலும் வரவேற்கிறோம்.

      நீக்கு
  4. மேகாலயாவில் மேகலாவின் படத்தை மட்டும் காணோமே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டாக்க, கமலாலயாவில் கமலா எங்கே என்று தேடுவார் போலிருக்கு!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      சகோதரர் கில்லர்ஜி அவர்கள் மேகாலயாவில் மேகலாவை தேடினார் எனில், கமலாலயா என்றொரு ஊர் இருக்கிறதா என்ன? அதை எப்படி எங்கு தேட வேண்டும்?? ஹா. ஹா. ஹா.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நேற்று கொஞ்சம் வெளியில் சென்று விட்டதால் என்னால் வர இயலவில்லை மன்னிக்கவும்.

    ஞாயரின் படங்கள் அழகு. கருப்பு பூனை (பூனையா அது?) உற்று நோக்கிய வஸ்து வரை பொறுமையாக படமெடுத்து பகிர்ந்தது அருமை. அதன் கண்களுக்கு அழகுக்காக பச்சை லென்ஸ் பொருத்தமாக அதுவே மாட்டிக் கொண்டு உள்ளதோ? ஹா. ஹா. ஹா.

    மலர்கள் படம், அந்த ஒற்றை மலர், இயற்கையாகவே மாலையாக மலர்ந்திருந்த மலர்கள் எல்லாம் மிக அருமை. கூடவே மழழை என்ற அழகும் சேர்ந்து மிக மிக அருமை.

    காரின் கண்ணாடியில் தெரியும் இந்தப் பக்கம் புரட்ட முடியாத ஒரு புத்தகம்.

    பனி நிரம்பிய மலைப்பாங்கான பகுதிகளும், ஒடும் ஓடையாய் நதியும் கண்ணுக்கு விருந்து.

    இன்னமும் தேடித் தேடிச் சென்று பார்க்கும் அடுத்த ஞாயரின் பகுதிக்கும் காத்திருக்கிறேன்.

    ஒரேயொரு சந்தேகம். "அல்லே" என்றால் என்ன? ஸ்டைலோ? புதன் கேள்விக்கு எனக்கு இப்படியெல்லாம் கேட்க வரமாட்டேன் என்கிறது.. ஹா. ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. நெட் படுத்துது. அதனால் வருவது, படிப்பது, கமெண்ட் இடுவது எல்லாமே கொஞ்சம் ஸ்லோ எல்லோருக்குமே இப்படி இருக்கா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. ரூ.10 கதை கேட்டேன். பல இடங்களில் இதுபோன்று வியாபாரம் சிறப்பாக நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  9. குழந்தைகளை பார்ப்பதும், மலர்களை பார்ப்பதும் மகிழ்ச்சியே!

    சுற்றும், முற்றும் பார்த்து எடுத்த படங்களும், உணவுக்கு காத்து இருக்கும் போது எடுத்த மலர்கள், பூனை படமும் அழகு.

    பதிலளிநீக்கு
  10. \
    வந்து சேர்ந்த இடம் .. மேகாலயாவில் எல்லோரும் தேடித் தேடிச் சென்று பார்க்கும்....\ காய்ந்த புல்வெளியா

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
    அன்பின் கௌதமன் ஜி, வெங்கட்,அன்பு கமலா, தேவகோட்டைஜி,ஜோசஃப் ஜி,
    இன்னும் வரப்போகிறவர்களுக்கும்,பயணத்தில் இருப்பவர்களுக்கும்,

    இன்னாளும் வரப் போகும் நாட்களும் இனிதாக அமைய வாழ்த்துகள்.

    இங்கேயும் எப்போதும் இல்லாத இணையப் படுத்தல்.Good evening G M.B sir.

    பதிலளிநீக்கு
  12. பத்து ரூபாய் மேடை, மலர்கள்,பள்ளத்தாக்கு, குழந்தைகள்
    எல்லாமே அழகு.
    பெஸ்ட் கறுப்புப்பூனை, சப்ரீனாவின் பூனையோ.
    இல்லை நம் துளசி கோபாலின் செல்லம் கப்புவின்
    மறு பிறவியோ.
    அச்சு அசல் அப்படியே இருக்கிறது.
    கொடுத்திருக்கும் தலைப்புகள் எல்லாமே இனிமை.

    பதிலளிநீக்கு
  13. பள்ளத்தாக்கைப் பார்க்க பத்து ரூபாய் என்று இப்படி சலிச்சுக்கலாமா?

    அமெரிக்காவில் பத்து டாலர், இருபது டாலர் என்று வசூலிக்காமல் எதுவுமில்லை.

    அமெரிக்காவில் அரிசானா மாநிலத்தில் உள்ள மிக ஆழ்ந்த செங்குத்துப் பள்ளத்தாக்கு கிராண்ட் கேன்யன். பழங்குடியினர் வாழ்ந்த இடம் என்ற பெருமை அவர்களுக்கு./ கொலராடோ ஆறு வெள்ளிக் கம்பி மாதிரி அடி ஆழத்தில் ஓடுவதைப் பார்க்கலாம். தினம் தினம் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இந்தப் பள்ளத்தாக்கைப் பார்க்க அம்முகிறது.

    பதிலளிநீக்கு
  14. காலையிலேயே பதிவுக்குள் வந்தாயிற்று..

    கருத்துரை செய்வதற்கெல்லாம் வழியில்லை..
    இப்போது வந்து சமையல் முடித்து சாப்பிட்டுவிட்டு...

    அழகான படங்கள்... பத்து ரூபாய் கொடுத்தாலும் பள்ளத்தாக்கு ஆயிற்றே!..

    பதிலளிநீக்கு
  15. பள்ளத் தாக்கு ஆனாலும்
    உள்ளந் தாக்கும் அழகல்லோ!...

    வெள்ளந் தாக்கும் வயல்வெளி அழகா..
    பள்ளத் தாக்கின் பனிமுகில் அழகா!..

    எங்கும் அழகு.. எல்லாம் அழகு..
    தங்கும் அழகு.. தமிழே அழகு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கு ஆரம்பித்தாலும் அது தமிழில் வந்து முடிந்து விடுகிறது, பாருங்கள்!..

      நீக்கு
    2. >>> எங்கு ஆரம்பித்தாலும் அது தமிழில் வந்து முடிந்து விடுகிறது.. <<<

      நன்றி ஐயா!..

      நீக்கு
  16. மழலைகள் சேர்ந்து களிப்பது காண்பதற்கு இனிமை.

    பதிலளிநீக்கு
  17. கொடைக்கானலில் பசுமைப்பள்ளத்தாக்கைப் பார்த்த நினைவு வருது. எங்கே! முழுக்கப் பார்க்க முடியாமல் மேகங்கள்! கூட்டம் கூட்டமாக! அதற்கு வெளியே இருந்த கடைகளில் காஃபிப் பொடி, தேயிலைத் தூள் என வாங்கிட்டுத் தூரக் கொட்டினோம். வெறும் மரச்சக்கை! :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!