ஞாயிறு, 13 அக்டோபர், 2019

குதிரைமேல் கருப்பசாமி



நமது தேசத்தில் அதிக மழை பொழியும் இடமான செர்ரபுஞ்சி பார்க்கும் ஆசையில் குடை polythene பேப்பர் ரெயின் கோட் சகிதம்


கா  ஆ ...லையிலேயே கிளம்பினாலும் இஸ்மாயில் வாய் திறந்து சொல்ல 40 கி மீ போகவேண்டியிருந்தது


போன இடமெல்லாம்..


கையெடுத்துக் கும்பிடத்  தோன்றும் இயற்கை எழில்
நிழலில் யாரோ அம்புவிட முற்சிப்பது போல இல்லை
நம் மாமல்லபுரத்து சிற்பி பார்த்தால் ஒரு உளி கொண்டுவந்து ஒரு பெரிய பிள்ளையார் வடித்திருப்பராக்கும்



ஒரு இடத்தில் ஏனிப்படி மரம் இல்லாத வெறிச் ?



இருபுறமும் மலைகள் நடுவே நீளப்பள்ளத்தாக்கு



இந்த மாதிரி ஆங்காங்கே கட்டடம் கட்ட ஏற்பாடுகள் மலையை யாரோ காயப்படுத்திய மாதிரி ..



ஒவ்வொரு மரமும் ஒரு கோபுரம் போல்



காலை வேளையில் துடைத்து விட்ட மாதிரி சாலை..



மேகங்கள் ஆப்சென்ட் ..


யாருக்கும் காபி நினைவே வரவில்லை


காணி நிலம் வேண்டும் என்று பாடிய பாரதி 10..12 oak  மரம் வேண்டும் என்றிருப்பாரோ?


தாமரை பூத்த தடாகம் போல்  செரி  blossom  பூத்த சாலையும் அழகுதான் 


 டவர்  இரண்டும் இல்லாவிட்டால் நன்றாக இருக்குமே!



குதிரைமேல் கருப்பசாமி


தூசி படாமல் கழுவி விட்ட மாதிரி பச்சை மரங்கள்



ஜனங்கள் எல்லாம் ஒளிந்து கொண்டுள்ளனரோ....



வளையும் பாதை ; அலையும் பார்வை.. ஈ காக்கையைக் கூட காணோம்!


மேகாலயா    தரத்துக்கு இது ஒரு பெரிய ஊராக இருக்கவேண்டும்



ஹாரனை அமுக்கி.... ஆக்சிலேட்டரை அழுத்தணும்...



"யேய்...   என்னப்பா...   ராங் சைட்ல வர்றே?"



ஊரே காலி போல....


ஊர்ப்  பேர் தெரிந்தால் கூட திரும்ப நாம் வரும்வரை நினைவில் இருக்குமா ..



மொத்தமா எல்லோரும் கிளம்பி....



மோடியைப் பார்க்கப் போயிட்டாங்களோ....

50 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் எல்லாருக்கும்

    கருப்பச்சாமி நு தலைப்பு பார்த்ததும் அட! தமிழ்நாட்டுக்கு வந்திருச்சா ஷில்லாங்க்லருந்துனு நினைச்சேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.   வாங்க... வாங்க...

      நீக்கு
  2. கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் இயற்கை எழில்
    நிழலில் யாரோ அம்புவிட முற்சிப்பது போல இல்லை
    நம் மாமல்லபுரத்து சிற்பி பார்த்தால் ஒரு உளி கொண்டுவந்து ஒரு பெரிய பிள்ளையார் வடித்திருப்பராக்கும்//

    ரசித்தேன் இதை.

    கூடவே அப்புறம் ஒரு கேப்ஷன்...மலையைக் காயப்படுத்துவது போலனு// இதுதான் என் மனதில் முதலில் தோன்றியது...ஏன் இப்படி மலையை கொஞ்சம் கொஞ்சமா கொல்றாங்கனு! இயற்கைக்குச் சித்திரவதையோன்னு...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மேகங்களே மேகங்களே
    எங்கே உங்களைக் காணோம்!..

    மரங்களைத் தான் வீழ்த்தியதால்
    வருத்தமுற்றது வானம்..
    சிறு மனிதனுக்குப் பாடம் சொல்ல
    ஒளிந்து கொண்டேன் நானும்!...

    பதிலளிநீக்கு
  4. மோதியைப் பார்க்க போய்ட்டாங்களோ//

    ஹா ஹா ஹா ஹா மோதியைப் பார்க்க மாமல்லபுரம் வந்திருந்தாங்கனா அதைப் பார்த்துட்டு ஆஹா இப்படியும் செய்யலாமோனு நீங்க மேல போட்டிருக்காப்ல (கேப்ஷன் ஸ்ரீராம் நு சொல்லுது!!!!) மாமல்லபுரத்துச் சிற்பி ஆயிடுவாங்க!!!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கேப்ஷன் ஸ்ரீராம் நு சொல்லுது!!!!//

      ஒன்றிரண்டுதான் நான்!

      நீக்கு
  5. காலை வணக்கம்.

    கேப்ஷன்கள் அருமை. மழைதான் வந்தபாடில்லை.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம்/மாலை வணக்கம், நல்வரவு, பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   மாலை வணக்கம்.  நல்வரவும், நன்றிகளும்.

      நீக்கு
  7. இலக்கிய நயத்துடன் படங்களுக்கான தலைப்புகள், விளக்கங்கள், ஆனால் எல்லாமும் ஸ்ரீராம் இல்லைனு நினைக்கிறேன்.

    செரபுஞ்சி இப்போது அதிகம் மழை பொழியும் இடத்தில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதாய் எப்போவோ படிச்சேன். பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  8. அன்பு ஸ்ரீராம், கீதாமா, துரை செல்வராஜு
    இனிய ஞாயிறுக்கான வணக்கங்கள்.
    படங்களின் பசுமையும்,சுத்தமும் மயக்க வைக்கின்றன. காப்பி குடிக்காமலயேபோய்விட்டார்களோ.
    கருப்பசாமி அங்க போய்விட்டாரா. பலே பலே.
    மழை பார்க்கப் போனால் மேகம் ஓடிவிட்டது.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய ஞாயிறு வணக்கம் வல்லிம்மா...  வாங்க... வாங்க....

      மேகம் டீ குடிக்கப் போயிருக்கிறதோ!

      நீக்கு
  9. ஊர்லே யாருமே இல்லாததால் மோதியைப் பார்க்க மஹாபலிபுரம் வந்திருப்பாங்கனு நினைக்கிறேன். தெருக்கள் எல்லாம் பளிச்! சென்னையின் அழுக்கு முகத்திலும் மனதிலும் மோதுகிறது. ஆனாலும் சுத்தம் செய்கிறவர்களைக் கேலி செய்பவர்கள் தான் அதிகம்.

    பதிலளிநீக்கு
  10. இந்த மாதிரி அமைதியான இடத்திலே இருக்கணும்னு ஆசை தான்! ஆனால் கொடுத்து வைச்சது அவ்வளவு தான். ஓகே, காலம்பர வரேன். மடிக்கணினியை சார்ஜ் பண்ண மறந்துட்டேன். சீக்கிரம் தீர்ந்துடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆண்டவா.. என்னைப் போலவே கீசா மேடத்துக்கும் எண்ணம் வருதே... எனக்குத்தான் அமைதியான கிராமச் சூழ்நிலையையோ குளிர் பிரதேசங்களையோ முக்கிய ஆன்மீக இடங்கள் ந்தி பிரதேசங்களைப் பார்த்தால் அங்கேயே செட்டிலாகிடலாமான்னு தோணும்.

      நீக்கு
  11. அது சரி தலைப்பில் உள்ளவரைக் காணவில்லையே!! நானும் தேடி தேடிப் பார்க்கிறேன்...என் கண்ணுக்குத்தான் புலப்படலையோ?!!!!!

    படங்கள் எல்லாம் நல்லாருக்கு. சுத்தமான சாலைகள் இருமருங்கிலும் Oak மரங்கள் என்று அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளேயே வரிகளிலேயே கொடுக்கப் பட்டிருக்கிறதே கீதா...   படிக்கவில்லையா?

      நீக்கு
    2. உள்ளே வரிகள் இருக்கு ஸ்ரீராம் ஆனால் கருப்ப சாமியைக் காணவில்லையே!!

      அபுரி போங்க!! ஹா ஹா ஹா ஹா ஹ

      கீதா

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன். இந்த நாள் இனிதாக மலரவும், மகத்தான வளங்களை கொண்டு வரவும் பிராத்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம்.   பிரார்த்தனைகளுக்கு நன்றியும், நல்வரவும்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அழகான இயற்கை சூழ்ந்த படங்கள். படங்களுக்கேற்ற விளக்கங்களும் மிகப் பொருத்தமாக உள்ளது.

    மலைகளின் அழகு மலைக்க வைக்கிறது. உளி கொண்டு சிலைகள் செதுக்க மாமல்லபுரத்து சிற்பி யாரும் இல்லாததால், தன்னைத்தானே செதுக்கி கொள்ள முயற்சிக்கிறதோ? எனினும் அதன் காயங்கள் உண்மையிலேயே நமக்கு வருத்தம் தரக்கூடியதுதான்.

    அந்த பதினைந்தாவது படத்தில் உயரமான மரம் தங்கள் தலைப்பை உள்வாங்கி பிரதிபலிக்கிறதே! நல்ல ரசனையான தலைப்பு.மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

    எல்லா படங்களும் மிக அழகு. எதை குறிப்பிட்டுச் சொல்வது? தாங்கள் சொல்வது போல் "வளையும் பாதையில், அலையும் பார்வை" கொண்டு வீசியும் எவரையும் காணாதது ஆச்சரியமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. நமது நகரங்களில் பெரும்பாலும் -
    கால் வைக்கக்கூட முடியாதபடி சாலைகள்
    சில இப்படிக் காகம்கூட பறக்காத சாலைகள்..

    பதிலளிநீக்கு
  15. அழகிய காட்சிகள். படங்களோடு வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  16. படங்கள் நல்லா இருக்கு.
    தலைப்பைக்கண்டு குலதெய்வக் கோவில் சமாச்சாரம் போல என்று நினைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி.  இரண்டு தலைப்பு யோசித்து இதை தேர்ந்தெடுத்தேன்!

      நீக்கு
  17. நகர நெரிசலை பார்த்து பார்த்து நொந்து போயிருக்கும் என்னை போன்றோர்க்கு ஆட்களே இல்லாத சாலைகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜோஸப் ஸார்.   என்னையும் சேர்த்துக்குங்க....   எனக்கும் அப்படிதான்!

      நீக்கு
  18. மலைப் பிரதேசங்களில் டவரின் அருமை மொபைல்களுக்கேத் தெரியும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னவோ உண்மைதான் ஜீவி ஸார்.  எல்லாம் ஒரு அனுபவம்தான்.

      நீக்கு
  19. இயற்கையின் அழகு கொட்டிக்கிடக்கிறது .

    மரச்சோலைகளின் சாலை கவர்கிறது.

    பதிலளிநீக்கு
  20. காய்ந்து கிடக்கும் இடங்களில் இருந்து போவோருக்கு இம்மாதிரி மலை மரங்கள் முதலில் இதம் தரலாம் ஆனால் அதுவே நிரந்தர நிலை என்றால் ரசிப்போமா தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எம் பி சார்... இக்கரைக்கு அக்கரை பச்சை போன்றுதான்.

      நீக்கு
    2. எனக்கும் அப்படித் தோன்றும் ஜி எம் பி ஸார்.    நன்றி.

      நீக்கு
  21. "கையெடுத்துக்கும்புடத்தோணுகிற அழகு"
    நல்ல வார்த்தைப்பதம்!

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்


    //வளையும் பாதை ; அலையும் பார்வை.. ஈ காக்கையைக் கூட காணோம்!//

    நன்றாக இருக்கிறது படங்களுக்கு கீழ் கொடுத்து இருக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  23. மிக அழகான படங்கள். தலைப்புகம் மிக மிக அருமை.

    நான் இருக்கும் ஊரிலும் மலைகள் அருகில். ரோடுகளிலும் குப்பைகள் இருக்காது. மலைப்பாங்கான ஊர். மலைகள் இன்னும் இது போல் ஆகவில்லை. மரங்கள் வெட்டப்பட்டாலும் இன்னும் கொஞ்சம் பசுமை இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. அழகான படங்கள்.... நான் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் மனதில்.....

    தொடரட்டும் பயணம்.... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!