வியாழன், 19 மார்ச், 2020

பாம்பு, குரங்கு, நாய் ... - கசந்து போன வாழ்க்கையும் மசால் தோசையும்!

பாம்பு என்றால் படையும் நடுங்குமாம்.  நான் இவற்றைக்கண்டு பயப்படும் வழக்கத்தை சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே விட்டு விட்டேன்!

அவைகளே அடிக்கடி கண்ணில் பட்டு, இங்குமங்கும் ஓடி என் பயத்தைப் போக்கி விட்டன!

படை பயந்தாலும் உள்ளே நுழைந்த பாம்பை துவம்சம் செய்துவிடும்!

நான் இருந்த குடியிருப்பில் நிறைய பாம்பு பார்த்திருக்கிறேன்.  ஒருமுறை ஒரு சாரைப் பாம்பு குடும்பத்தின்மேல் ஸ்பிரிட் ஊற்றி எரித்தும் இருக்கிறேன். ஏஞ்சல், மன்னிக்கவும்.   அது ரொம்பப் பழைய கதை!   அப்புறம் அப்புறம் அவற்றைக் கண்டால் ஒதுங்கிச் செல்லப் பழகிவிட்டேன்.  கையில் கேமிரா இருக்கும்நேரம், புகைப்படம் விடியோவும் எடுக்கவும் ஆரம்பித்தேன்!

மஞ்சள் நிறத்தில் எல்லாம் பாம்பு பார்த்திருக்கிறேன்.  இரண்டு ஆள் நீளம் இருக்கும்.

கீதா அக்காவும் இவற்றைக்கண்டால் "ஹை...   சுப்புக்குட்டி" என்று உற்சாகமாகி விடுவார்!

முன்பு ஒருமுறை எங்கள் வீட்டு மோட்டார் ரூமில் ஒரு பாம்பு புகுந்துகொண்டு படுத்திய-பயமுறுத்திய கதையையும் எழுதி இருந்தேன்.

இது சமீபத்து பாம்பு சம்பவம்.  உடன் பணிபுரியும் பெண் ஊழியர் போட்ட சத்தத்தில் சென்று பார்த்தபோது இது கண்ணில் பட்டது.  அவரை அமைதிப்படுத்தி விட்டு அதன் பின்னால் அருகே நின்று (தலை உள்ளே மாட்டிக்கொண்டிருக்கும் தைரியம்!) புகைப்படங்கள் எடுத்தேன்.  மெதுவே மெதுவே உடலைச் சுருக்கி, நீட்டி, நெளித்து உள்ளே தன்னை நுழைத்துக்கொண்டிருந்தது.



இதை பேஸ்புக்கில் பகிர்ந்தபோது துரை செல்வராஜூ ஸார் சொன்னது  :  "பொந்துக்குள் தலையை நுழைத்ததுமே முழு உடலையும் திருப்பி நுழைத்துக் கொண்டு தலையை வெளியே நீட்டிக் கண்காணித்துக் கொண்டிருக்கும்... இதில் தாமதம் இருக்காது.. ஏதோ அன்றைக்கு அசந்தர்ப்பம்..."

முழு உடலை உள்ளே நுழைத்ததும்தானே?  இன்னும் கால் பாகம் இருக்கிறதே!

மனித மூளை இதற்கு இருக்குமாயின், வாலை முதலில் உள்ளே நுழைத்து, முகத்தை வெளியில் வைத்து என்ன ஆபத்து வருகிறது என்று பார்த்துக் கொண்டிருந்திருக்கும்!  மெதுவே பின்பக்கமாகவே உள்ளே நுழைந்திருக்கும்.  ஆனால் அது  கஷ்டம் என்று நினைக்கிறேன்.  அதனிடம் ரிவர்ஸ் கியர் கிடையாது என்று நினைக்கிறேன்!!



  பேஸ்புக்கில் B R மஹாதேவன் என்னும் நண்பர் இப்படி பயமுறுத்தி இருந்தார் :  "இப்போதும் தலை (கண்) வெளியில் பார்த்தபடிதான் இருக்கும். நமக்குத்தான் கல் மறைக்கிறது..."  

உள்ளேதான் அதன் வீடு போலும்!  அதன் குட்டிகள் உள்ளே இதற்காகக் காத்திருக்கிறதோ என்னவோ!

அல்லது மனிதர்கள்மேல் அதற்கு இருக்கும் நம்பிக்கை, தைரியமாக மெதுவே உள்ளே தன்னை நுழைத்துக்கொண்டிருக்கிறது! என்னை மாதிரி ஆள் பார்த்ததால் போட்டோ எடுத்துக்கொண்டு விட்டு விட்டேன்.  வேறு யாராவதாயிருந்தால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.

இது என் அலுவலக வாசல்!  ஏற்கெனவே நான் இங்கு இவை போன்றவைகளைச் சந்தித்திருக்கிறேன், படம், வீடியோ எடுத்திருக்கிறேன்!  பகிர்ந்துமிருக்கிறேன்.

என்னுடன் நின்றிருந்த இருவர் என் 'தைரியத்'தை வியந்து பாராட்டினர்!  முகத்தை உள்ளே நுழைத்துக் கொண்டிருக்கும் அது என்னை என்ன செய்து விடப்போகிறது!  

அவர்களுக்குள்  "இது நல்லதுதான்,  இல்லை சாரை...   கட்டுவிரியனோ.." என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.



கீதா அக்கா இது கட்டு விரியனென்று கருத்திட்டிருந்தார்.

==========================================================================================================


நன்றி இணையம்.


சென்ற மாதம் 27 ஆம் தேதி வியாழன் பதிவிலிருந்து நீக்கப்பட்ட பகுதியை இங்கு இப்போது பகிர்கிறேன்!

முன்பு ஒரு விலங்குகளின் அன்பு சம்பந்தப்பட்ட சம்பவம் பகிர்ந்திருந்தேன்.   இதுவும் அப்போது செய்தித்தாளில் வந்ததுதான்...  அனாதையாக நின்ற ஒரு நாய்க்குட்டியை ஒரு குரங்கு தத்தெடுத்துக் கொண்டது.  அதைப் பார்த்த மக்கள்...    செய்தியைப் படியுங்களேன்...    மறுபடியும் சொல்கிறேன்..   வருடங்கள் பழசான சம்பவங்கள்!

என்ன சோகம்! அன்பு வரமா, சாபமா?
நாயை நினைத்து சந்தோஷப்படுவதா?...இல்லை குரங்கை நினைத்து வருத்தப்படுவதா?..
ஒரு Follow up.
=============================================




கடந்த சில நாட்களுக்ககு முன் ஈரோடு முத்துவேலப்பர் வீதியில் பிறந்து சில நாட்களேயான நாய்குட்டி ஓன்று எப்படியோ பிரிந்து தத்தக்கபித்தக்கா நடையோடு வந்தபோது அந்த தெருவில் இருந்த இதர நாய்கள் குட்டியை குலைத்து மிரட்டி விரட்டிக்கொண்டு இருந்தன.

அந்த சமயம் யாரும் எதிர்பாரதவிதமாக ஒரு மரத்தில் இருந்து குதித்த பெரிய ஆண் குரங்கு ஒன்று பெரிய நாய்களை விரட்டிவிட்டு குட்டி நாயை பாதுகாப்பாக துாக்கிக்கொண்டு ஓடியது.

கொஞ்ச நேரத்தில் அல்லது கொஞ்ச துாரத்தில் குரங்கு நாயை விட்டுவிடும் என்று பார்த்தால் பொழுது இருட்டும் வரை விடாமல் வைத்திருந்தது.

இருட்டியபிறகு அந்த பகுதியில் இருந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

பொதுவாக நாய்க்கும் குரங்குக்கும் ஆகவே ஆகாது என்பார்கள் ஆனால் இங்கே நேர்மாறாக இருக்கிறேதே.குரங்கு குட்டி நாயை வைத்துக்கொண்டு என்ன செய்யும் குட்டிநாய்தான் குரங்கோடு எப்படி இருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக குட்டி நாயின் பசி தாகத்திற்கு என்ன தீர்வு என்பதற்கான விடை கிடைக்காமல் அன்றைய இரவை கழித்த அந்த பகுதி மக்கள் விடிந்ததும் தேடியது இந்த இரண்டு ஜீவன்களைத்தான்.

எதிர்பார்த்தது போலவே ஒரு கையில் நாயை துாக்கிக்கொண்டு இன்னோரு கையால் மரத்திற்கு மரம் தாவியபடி வந்த குரங்கு, ஒரு சுவற்றில் உட்கார்ந்து நாயை கிழே இறக்கிவிட்டது.  நாயும் கத்திக்கொண்டே கொஞ்ச துாரம் போனது உடனே குரங்கு ஒடிப்போய் குட்டியை துாக்கிக்கொண்டுவந்து பக்கத்தில் வைத்துக்கொண்டது இப்படியே பொழுது கொஞ்சநேரம் சென்றது.

இதைப்பார்த்த மக்கள் குரங்குக்கு பழம் பிஸ்கட் போன்றவையையும், நாய்குட்டிக்கு பாத்திரத்தில் பாலையும் ஊற்றி வைத்தனர்.

பழம்,பிஸ்கட்,பாலை இரண்டும் பங்கிட்டு சாப்பிடவே நாய் பட்டினியாக கிடக்குமோ என்ற சந்தேகத்திற்கு விடை கிடைத்தது.

இரண்டாம் நாள் பொழுது இப்படியே கழிந்தது.

மூன்றாம் நாள் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புடன் மக்கள் விடியலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பொழுதும் விடிந்தது,குரங்கு மற்றும் குட்டிநாயின் தரிசனமும் கிடைத்தது.நாய்குட்டி இப்போது குரங்கோடு சிநேகத்துடன் இருந்தது.

இருந்தாலும் இது இயற்கைக்கு முரணாக இருக்கிறது குரங்கிடம் இருந்து குட்டியை பிரி்த்தால்தான் அதன் உயிருக்கு உத்திரவாதம் என்று முடிவெடுத்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் வருவதற்குள் குரங்கு குட்டியுடன் பல இடங்களுக்கு மாறி மாறி செல்ல மூன்றாம் நாளும் முடிவுற்றது.

நான்காம் நாள் வனத்துறையின் குரங்கு பிடிக்கும் கூண்டை ரெடி செய்து வைத்திருந்தனர். கூண்டினுள் குரங்குக்கு பிடித்த பழங்கள் உணவாக வைக்கப்பட்டிருக்கும் ,பழத்திற்கு ஆசைப்பட்டு கூண்டிற்குள் போனால் திரும்பவரமுடியாது.அப்படி அந்த கூண்டிற்குள் குரங்கு போய்விட்டால் குட்டியை எளிதில் மீண்டுவிடலாம் என்பது வனத்துறையினர் எண்ணம்.ஆனால் குரங்கு கூண்டை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை.

ஆனால் இந்த நான்கு நாட்களில் குரங்குக்கும் நாய்குட்டிக்கும் சிநேகம் அதிகரித்துவிட்டது என்றே கூறவேண்டும்.குட்டியை துாக்கி கொஞ்சுவதும்,அதற்கு பேன் பார்த்துவிட்டு சிரிப்பதும்,யாராவது வந்தால் துாக்கிக்கொண்டு பாதுகாப்பான உயரத்திற்கு செல்வதுமாக இருந்தது.

குரங்கு குட்டியாக இருந்தால் அது தன் தாயின் வயிற்றை இறுகபிடித்துக்கொள்ளும் பழக்கம் இருக்கும், அதனால் தாய் குரங்கு மரத்திற்கு மரம் தாவினாலும் விழுந்துவிடாது இருக்கும், ஆனால் நாய்குட்டிக்கு அந்த பழக்கம் இல்லை அது குரங்குக்கும் தெரியும் என்பதால் ஒரு கையிலேயே மரத்தில் ஏறுவதும் பின் தாவுவதுமாக இருந்தது,நாய் எங்கே தவறி விழுந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ குரங்கு முடிந்தவரை சமதளத்திலேயே சென்றது. இப்படி தான் குட்டி மீது கொண்ட பாசத்திற்காக குரங்கு பல சிரமங்களை ஏற்றுக்கொண்டிருந்தது.

பின்னர் குரங்கின் குணமறிந்து அதற்கு பயிற்சிதரும் ஒருவர் அழைத்துவரப்பட்டார்.அவர் வந்து மிகப்பெரிய கண்ணாடியை அதன் முன் வைத்தார் கண்ணாடியை பார்த்ததும் குரங்கு மற்ற விஷயங்களை மறந்துவிட்டு கண்ணாடியில் மட்டுமே சிறிது நேரம் கவனம் செலுத்தும் என்பது பயிற்சியாளர் காலம் காலமாக கண்டுவந்த குரங்கின் நடத்தை ஆனால் இந்த முறை கண்ணாடியை வைத்ததும் கண்ணாடியை பார்த்துவிட்டு ஈ என்று இளித்துவிட்டு கண்ணாடியை தள்ளிவிட்டு ஒடிவிட நான்காம் நாளும் முடிவுக்கு வந்தது.

ஐந்தாம் நாளான்று குரங்கு பயிற்சியாளர் ஒரு பக்கம்,வனத்துறையினர் இன்னோரு பக்கம், பொதுமக்கள் ஒரு பக்கம்,போலீசார் ஒரு பக்கம் என சூழ்ந்து கொண்டனர்.பயிற்சியாளர் குரங்கின் கழுத்தில் திடீரென சுருக்கு கயிறை போட்டு சுண்டி இழுக்க ஒரு கணம் தடுமாறிய குரங்கு நாயை தவறவிட்டது.

இதுதான் சமயம் என வனத்துறையினர் நாயை பாய்ந்து எடுத்துக்கொண்டனர்.பின்னர் கால்நடை மருத்துவரிடம் கொண்டுபோய் காண்பிக்க அவர் மருத்துவ பரிசோதனைகள் சில செய்துவிட்டு நாய் நன்றாக இருப்பதாக சான்றிதழ் கொடு்த்தார்.  அந்த நாயை தான் வளர்ப்பதாக ஒரு இளைஞர் பாசத்துடன் முன்வர வனத்துறையினர் அவரிடம் நாயை ஓப்படைத்தனர்.

இப்போது சுருக்கு கயிறில் சிக்கிய குரங்கிடம் வருவோம்,அதுதான் நாயை விடுவித்தாகிவிட்டதே இனி எதற்கு குரங்கு என்று அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.  அந்த குரங்கோ தானும் குட்டியும் நடமாடிய இடங்களுக்கு எல்லாம் தாறுமாறாக தாவிக்குதித்து ஒடிஒடி குட்டியை தேடுகிறது...வழியில் மக்களால் வைக்கப்பட்ட பழம்,பிஸ்கட்டை எல்லாம் தள்ளிவி்ட்டபடி குட்டியை கண்டுபிடிக்கும் வேகத்துடன் இன்னும் சொல்லப்போனால் ஒரு வெறியுடன் தேடிக்கொண்டே இருக்கிறது...  ஓடிக்கொண்டே இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள் நாயை நினைத்து சந்தோஷப்படுவதா?  ...இல்லை குரங்கை நினைத்து வருத்தப்படுவதா?..  

தினமலரிலிருந்து....

==============================================================================================================================================



வாழ்க்கைப் புத்தகத்தின்
மறந்துவிட்ட 
எச்சரிக்கைப் பாடங்களை 
தூசிதட்ட வைக்கின்றன 
புதுப்பிக்கப்பட்ட
துரோகங்கள்


=================================================================================================================

பொக்கிஷம்  :

கோல்கேட்டில் எனக்குத் தெரிந்தது டூத்பேஸ்ட் மட்டும்தான்....   ஆனால்...  இதை எல்லாம் அப்புறம் ஏன் நிறுத்தி விட்டார்களோ!





அடப்பாவி...    அப்போ எல்லாம் இப்படியா? என்று கேட்க வேண்டுமா?  அப்பவும் இப்படித்தானா என்று கேட்க வேண்டுமா?  

கசந்து போன வாழ்க்கையும் மசால் தோசையும்!


அரசியல்வியாதிகள் மாறுவதே இல்லை!


பத்தினிக்கோட்டம் படித்தவர்களுக்கு இந்தக் காட்சிக்கான காரணம் தெரிந்திருக்கும்.  மற்றவர்களுக்கு புதிராய் இருக்கும்!  வினுவின் ஓவியம்.



========================================================================================


எனக்கு ஒரு காதலர் இருந்தார் என்று அனுஷ் சொல்லி இருக்கும் செய்தி!  ரொம்ப முக்கியம் என்கிறீர்களா?  சும்மா கொறிக்க கொஞ்சம் சுண்டல் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்...


167 கருத்துகள்:

  1. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. சட்டென ஒன்று இரண்டாகிவிட்டது போல...   ஹா..  ஹா..  ஹா...   வாங்க அதிரா...

      நீக்கு
    2. ஓ...   தானாகவே மாறிவிட்டதா?  அட!

      நீக்கு
    3. அதேதான் ஸ்ரீராம் என்னாலும் நம்ப முடியவில்லை, மொபைலில் போட்டேன் கொமெண்ட்டை...

      நீக்கு
  3. ஆஆஆஆவ்வ்வ்வ் அவசரப்படாமல் வந்தேன் துரை அண்ணன் முந்திட்டார்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ ஸார் முதல் குறள் கொடுத்துட்டார்...   இரண்டாவது குரல் உங்களோடது!!!

      நீக்கு
  4. மேலே ஸ்னேக்க்கூஊஊ கீழே அனுக்கா:).. மீ நாளைக்கு வாறேன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலுள்ளதற்கு மீ பயம்... கீழ் உள்ளவருக்கு ஶ்ரீராம் பயப்படுவார்:).. ஹா ஹா ஹா...

      நீக்கு
    2. ஸ்ரீராம் ஏன் பயப்படவேண்டும்?!!   ரசிப்பேனாக்கும்!

      நீக்கு
  5. ஆகா!..
    அரவத்தில் ஆரம்பித்து
    அனுஷ்காவில் முடித்தாயிற்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவில் குரங்கும் நாயும் உண்டு துரை செல்வராஜூ ஸார்...!

      நீக்கு
    2. இடைப்பட்டது ஏதாயினும் முதலும் முடிவும் தானே பிரசித்தம்...

      நீக்கு
  6. இந்த சுப்புக்குட்டி வகையறாக்களில்
    விரியன் குடும்பத்தார்கள் எல்லாம் அடர் நிறத்தில் இருப்பார்கள் என்று படித்திருக்கிறேன்.. பார்த்தும் இருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறங்களை வைத்து வகை சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை துரை செல்வராஜு ஸார்... நல்ல பாம்பு என்று நான் நினைத்தது சாரைப் பாம்பாக இருந்திருக்கிறது. சாதாரண பாம்பு என்று நினைத்த இளைத்த பாம்பு ஒன்று படமெடுத்து யாரென்று காட்டிச் சென்றது!

      நீக்கு
  7. குரங்கு நாய் - இந்தப் பாசம் ஓராண்டுக்கு முந்தைய செய்தி தானே...

    எப்படியோ
    நாய்க்குட்டி மரத்தில் ஏற இருந்த வாய்ப்பைத் தட்டி விட்டாயிற்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      இப்போதுதான் பேரனுக்கு இந்தப் பேர் சொல்லாததின் நிகழ்ச்சி ஒன்று சொல்லி முடித்தேன்.
      அனுஷ்கா ப்ரபாஸ் வீடியோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டுமே இங்கே வந்திருக்கிறது.
      குரங்குக் கதையில் குரங்குதான் பாவம்.
      நாய்க்குட்டியின் மேல் எத்தனை பாசம் வைத்திருந்ததோ.:(

      அரவத்துக்கும் நமக்கும் ஒத்துக்காது ஸ்ரீராம்.
      நீங்க வேற விதவிதமாகப் படம் போடுகிறீர்கள்.
      வே ண்டாம் என்று பார்க்கவில்லை.

      பத்தினிக்கோட்டம் கதை மறந்துவிட்டது.
      துறவியான காதலியைப் பார்த்துக் கண்ணீர் விடுகிறாரா
      கதா நாயகன்? மணிமேகலையோ.

      காலங்கள் மாறினாலும் அரசியல் அப்படியேதான் இருக்கிறது/
      ஜோக்கும் அதையே சொல்கிறது.

      நீக்கு
    2. // இப்போதுதான் பேரனுக்கு இந்தப் பேர் சொல்லாததின் நிகழ்ச்சி ஒன்று சொல்லி முடித்தேன்.// எனக்கும், ஸ்ரீராமுக்கும் நெருங்கிய உறவினர் ஒருவர், சிறு வயதில், தன்னுடைய பாடப்புத்தகத்தில் பாடம் படித்துக்கொண்டிருந்தார். " கயறுகள் எத்தனை வகைப்படும்? " பதில் : " கயறுகள் பலவகைப்படும். நல்ல கயறு, சாரைக் கயறு, பச்சைக் கயறு, தண்ணீர்க் கயறு என்பவை முக்கியமான வகைகள் ஆகும். பல கயறுகளுக்கு விஷம் கிடையாது. .... " அந்த உறவினரின் பாட்டி, மாலை நேரத்தில் பாம்பு என்ற சொல்லைக்கூட உச்சரிக்கக்கூடாது, அதற்கு பதிலாக கயிறு அல்லது பேர் சொல்லாதது என்று சொல்லவேண்டும் என்று சொல்லியிருந்ததால் இப்படி பாடம் படிக்கப்பட்டதாம்.

      நீக்கு
    3. ஜெகசிற்பியனின் நாவல்களில் பெரும்பாலும் முக்கோணக்காதல். கதைமுடிவில் நாயகனோ நாயகியோ மரணித்து அந்தக்காதல் அமரக்காதல் ஆகிவிடும்! மனிதர் சொந்த வாழ்க்கையில் love failure இருந்ததோ என்னவோ என்ற சந்தேகம் எனக்கு இன்னமும் இருக்கிறது. பத்தினிக்கோட்டம் படித்திருக்கிறேன், நினைவில் இல்லை!

      நீக்கு
    4. குரங்கு- நாய் செய்தி பழசுதான் துரை செல்வராஜு ஸார்... சொல்லி இருக்கிறேனே...

      நீக்கு
    5. வாங்க வல்லிம்மா... வணக்கம். அரவக் கதையும் அனுஷ்கா கதையும் இன்றுதான் நீங்களும் படித்தீர்கள், சொன்னீர்கள் என்பது ஆச்சர்யம். பாம்புகள் உங்களுக்கு அலர்ஜியா? உண்மையில் பத்தினிக்கோட்டம் நான் படித்ததே இல்லை!

      நீக்கு
    6. ஆமாம் கேஜிஜி... என் அக்காதானே...!

      நீக்கு
    7. கிருஷ் ஸார்.. புது வீட்டில் புத்தகங்களை அடுக்கியதும் பத்தினிக்கோட்டம் எடுத்துப் படிக்க வேண்டும்.

      நீக்கு
    8. " கயறுகள் பலவகைப்படும். நல்ல கயறு, சாரைக் கயறு, பச்சைக் கயறு, தண்ணீர்க் கயறு என்பவை முக்கியமான வகைகள் ஆகும். ப////:))))))
      ஸ்ரீராமோட அக்கா என் வகை போல.
      பேரன் கூட என் பயத்தைப் பார்த்து. கையைக் குவித்து வைத்து ,இது வர கதையைச் சொல்லு
      பாட்டி என்பான் கௌதமன் ஜி:)

      நீக்கு
  8. தற்கொலைக்கு முன் மசால் தோசை. நல்ல சிரிப்பு.

    சர்வர் சுந்தரம் ஜோக்கும் ரசிக்க வைக்கிறது.
    அனுஷ்காவின் பேட்டி ஒன்று பார்த்தேன்.
    ஆன்மீக விஷயங்களில் எல்லாம் அழகாகப் பேசுகிறார்.
    நல்ல ப்ரில்லியண்ட் பெண்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா..்். அனுஷ் கிட்ட பிடிச்சதே அந்த ஸ்மார்ட் முகம்தான!

      நீக்கு
    2. பாஹுபலி 3 எப்போவருமோ தெரியவில்லை. மிகப் பிடித்தது.
      yes Anushka alias Sweety talks very well on different subjects.@Sriram

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

  10. வணக்கம் ஜி
    குரங்கு நாய்க்குட்டியிடம் காட்டிய அன்பு பிரமிக்க வைக்கிறது.

    பாம்பு விசயம் சுவாரஸ்யமாக இருந்தது

    பதிலளிநீக்கு
  11. பாம்பைப் ‘பிடித்து’, பழைய புத்தகத்தை விரித்து என வியாழனை ரொப்பிவிடுகிறீர்கள். அடிஷன்ஸ்களாக அனுஷ்கா, குரங்கு இத்தியாதிகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார்... இதுவே நல்லாத்தான் இருக்கு. எல்லோரும் ரொம்ப கம்ப்ளெயிண்ட் பண்ண ஆரம்பிச்சாங்கன்னா, ஞாயிறு மாதிரி, வியாழனும் ஸ்ரீராம், தன் பயண அனுபவங்களை எழுதறேன் என்று ஆரம்பித்து,

      'ரயில் புறப்பட ஆரம்பித்தது. டக் டக் என்று தண்டவாள ஓசையும், வேகமாகப் போவதால் அதிர்வுகள் இருப்பது போலவும்.... 'என்று பத்து வாரங்களுக்கு இரயில் பயணத்தைப் பற்றியே எழுதி ரொப்பிவிடுவார் (ஞாயிறு மாதிரி ஹா ஹா ஹா)

      நீக்கு
    2. வாங்க ஏகாந்தன் ஸார்... போர் அடிக்கிறதா? மாற்றலாமா?

      நீக்கு
    3. நெல்லை! இனி பொக்கிஷத்தை முதலில் போட்டு, கவிதையை நடுவில் விட்டு, என் எழுத்தை கடைசியாக அமைக்கலாம் என்று நினைக்கிறேன். எப்படி நம்ம மாற்றம்?

      நீக்கு
    4. மாற்றவேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை! கலவை சில சமயம் நன்றாக அமைந்துவிடுகிறது. அந்தக் காலத்து ஜோக்குகளுக்கான படங்களை நான் ரசிப்பது வழக்கம். அரசியல்வாதியின் முன்னால்கூட எப்பேர்ப்பட்ட ‘நம்பும்’ ‘வியக்கும்’ கூட்டம்..!
      ஜோக்குக்கு வரைவது என்பது தனிக்கலை. அப்படி அனாயாசமாக வரையும் கலைஞர்களை நமது சமூகம் மதித்திருக்கிறதா? விருது ஏதாவது தரவேண்டாமா? சும்மா நடிக, நடிகர்களையே ‘கொண்டாடி’க்கொண்டிருந்தால் எப்படி...

      நீக்கு
    5. //ஸ்ரீராம்.19 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 1:09
      நெல்லை! இனி பொக்கிஷத்தை முதலில் போட்டு, கவிதையை நடுவில் விட்டு, என் எழுத்தை கடைசியாக அமைக்கலாம் என்று நினைக்கிறேன். எப்படி நம்ம மாற்றம்?///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதெல்லாம் ஒரு மாற்றமோ.. பழையன கழிதலும் புதியன புகுதலுமே மாற்றம்:)).. அப்படி ஏதும் மாற்றத்தைக் கொண்டு வாங்கோ புதன் வியாழனில்:))

      நீக்கு
    6. ஆமாம்.... ஞானி அதிரா சொல்வதுபோல மாத்திடுங்க. புதன்ல எதுக்கு எப்போப் பாத்தாலும் கேள்வி பதில்? அதை வியாழனுக்குத் தூக்கிடுங்க. வியாழன்ல என்ன எப்போப்பாத்தாலும் கதம்பம்? அதை புதனுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க. ஹா ஹா ஹா

      நீக்கு
  12. பாம்பு தகவல் முகநூலில் வாசித்துள்ளேன்...

    குரங்கின் அன்பு சிறப்பு... முடிவில் தவிப்பு வேதனை...

    சுண்டி இழுக்கும் சுண்டல்...?!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அன்பு வரமா, சாபமா பகுதியை படித்ததும் மனது என்னவோ செய்து விட்டது. குரங்கும், நாயும் பகை என மனிதர்கள் கணித்த பின்னும் அதன் அன்பு வியக்க வைக்கிறது. கடைசியில் குரங்கு மனதை எப்படி தேற்றிக் கொண்டதோ? "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்" என்ற பழமொழிக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்"// உண்மைதான்.

      நீக்கு
    2. ஆமாம். ஆச்சர்யமான அன்புப் பிணைப்பு! நன்றி கமலா அக்கா...

      நீக்கு
  14. மசால் தோசை ..ஒருவேளை கடைசி ஆசையாக இருக்கலாமா...குழாய்க்கு ஐந்தாண்டு தண்ணீர் வர ஐந்தாண்டு..மக்கள் பிரதிநிதிக்கு ஒரு சபாஷ்

    பதிலளிநீக்கு
  15. நாய் குரங்கு பாசம் - இதெல்லாம் அபூர்வம்... பூர்வ ஜென்ம பந்தம் என்றுதான் என் மனசுக்குப் படும். இதுபோல வைல்ட் பீஸ்ட் கன்று-சிங்கம், மான் குட்டி/குழந்தை சிறுத்தை என்று நெட் ஜியோவில் நான் கண்டிருக்கிறேன். வெகு அபூர்வமாக நடப்பவை இவை. கொல்லாமல் தன்னுடனேயே சில நாட்கள் வைத்துக்கொண்டிருக்கும்...இல்லை பேசாமல் விட்டுவிட்டுப் போய்விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நானும் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம். நானும் நிறைய பார்த்து வியந்திருக்கிறேன்

      நீக்கு
    3. //நாய் குரங்கு பாசம் - இதெல்லாம் அபூர்வம்..//

      இல்லை நெல்லைத்தமிழன் இப்போதெல்லாம் மாத்தித்தான் யோசிக்கோணும்:)) அதாவது..அவர்களின் ஒற்றுமை பார்த்து நமகுப் பொறாமையாக இருக்கு:))

      நீங்க ஸ்ரீராம் அஞ்சு நான் மற்றும் எல்லோரும் இங்கு இப்படிப் பாசமாக இருப்பதுதான் அபூர்வம்.. இக்காலத்தில் வியப்பான செயல்:)) ஹா ஹா ஹா

      நீக்கு
  16. //எனக்கு ஒரு காதலர் இருந்தார் என்று அனுஷ் சொல்லி இருக்கும் செய்தி! // - இனி வயசுக்கு வந்து என்ன வராமல் என்ன... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  17. /அவைகளே அடிக்கடி கண்ணில் பட்டு, இங்குமங்கும் ஓடி என் பயத்தைப் போக்கி விட்டன!// - பெருங்களத்தூரில் எங்கள் வீட்டின் ஓரத்தில் பெரிய நாகப்பாம்பு நகர்ந்து ஓரத்தில் இருந்த மரப்பொந்தில் நுழைந்ததைப் பார்த்துப் பயந்திருக்கிறேன். 2 1/2 கிரவுண்ட் நிலத்தில் மழைக்காலத்தில் 10-15 பச்சைக் கலர் பாம்புகள் அங்குமிங்கும் நகரும். அதைப் பார்த்துப் பயம் வந்ததில்லை. கேட்டிலிருந்து வீட்டுக்கு வரும் பாதையிலேயே இவைகள் குறுக்கிடும். ஒரு தடவைதான், உணவு உண்டதனால் சோர்வாக வீட்டு வாசல் கோலத்தின் மீதிருந்த கட்டுவிரியனை பதின்ம வயதில் அடித்திருக்கிறேன் (பிறகு வருத்தப்பட்டிருக்கிறேன்).

    பொதுவா எங்கள் குலத்தின் முன்னோர் ஒருவர் தண்ணிப்பாம்புகளை அடித்து, துன்புறுத்தியதால் பாம்பு சாபம் ஏற்பட்டது எனவும் அதனால் சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லாமல் போனது என்றும், எங்கள் தாத்தா காலம் வரை வீட்டில் நெல் குதிருக்குள் நாகர் சிலைகள் வைத்திருந்தார்கள் (அதனால்) என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு குடும்பத்திலும் இது மாதிரி ஒரு பாம்பு கதை இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் பாட்டி (அப்பம்மா) சொல்வார். "உங்கள் பரம்பரையில் யாரைநும் நான் ஒன்றும் செய்ய மாட்டேன்" என்று மூன்று முறை தரையில் அடித்து ( !!) சத்தியம் செய்திருக்கிறதாம் நல்ல பாம்பு! எந்த மொழியில் சொன்னதொ!

      நீக்கு
    2. இப்போதான் நினைவுக்கு வந்தது. அவர் தண்ணீர்ப் பாம்புகளைப் பிடித்து, குடத்தில் தண்ணீர் பிடித்துப் போகும் பெண்களின் குடத்தில் போட்டுவிடுவாராம் - தாமிரவருணி ஆற்றில். நான் எங்கள் பரம்பரை வீட்டின் மேல் பகுதியில் நெல்லுக்குள் வைத்திருந்த நாகர் சிலையைப் பார்த்திருக்கிறேன்.

      பொதுவா குழந்தை பாக்கியம் இல்லைனா அது பாம்பு தோஷம் என்று சொல்வார்கள்.

      நீக்கு
  18. நாகப் பாம்பு, புத்துக்குள் நுழைந்ததும், தலையை மட்டும் பொந்துக்குச் சற்று கீழே வெளியே வரும் வாக்கில் வைத்துக்கொண்டு, உடலை மெதுவாக பொந்துக்குள் இழுத்துக்கொள்ளும் குணம் உடையது.

    நான் தாளவாடி என்ற மலை கிராமத்தில் வசித்தபோது, நிறைய நாகப் பாம்புகளைக் கண்டிருக்கிறேன் (எங்கள் பள்ளி வளாகத்தில் மலைப்பாம்பையும் கண்டிருக்கிறேன்). அவைகள் கோதுமை கலரில் இருக்கும் கோதுமை நாகம். எங்கள் வீட்டுக்குள்ளும் பாம்பு வந்திருக்கிறது. ஒரு தடவை நட்டுவாக்காளி கூரையிலிருந்து வீட்டுக்குள் விழுந்தது. ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயங்கர வீடு ...... திக் திக் நாட்கள்...

      நீக்கு
    2. நான் நாலாவது படிக்கும்போது பொன்னமராவதி பக்கத்தில் பூலாங்குறிச்சி என்ற ஊரில் வாழ்ந்தேன். அங்கு இருந்த வீட்டில், ரொம்ப அடிக்கடி கூரையிலிருந்து தேள்கள் விழும். கிச்சனில் ஏராளமாக வரும். நானும் துணிகளைத் தோய்க்கும்போது (அம்மாவுக்கு உதவிக்கு), சட்டையில் இருந்த தேள்குட்டி என் விரலைக் கொட்டியிருக்கிறது பிளேடு கிழித்ததுபோல உணர்வு. எல்லாம் மஞ்சள் நிறத் தேள்கள். ஹா ஹா

      நீக்கு
    3. அட... நான் மலைப்பாம்பு பார்த்ததில்லை! ச்சே... எங்கள் காம்பௌண்டுக்கு அது வந்ததில்லை!

      தஞ்சாவூரில் நாராயண நாயர் கடையிலிருந்து விறகு வாங்கி வீட்டில் அடுக்கி இருப்போம். அதில் தேள் பார்த்திருக்கிறேன். நட்டுவாக்கிளி வேறு, நண்டு வேறு?

      நீக்கு
    4. கறுப்பு கலர் தேள், கொடுக்கோடு சேர்ந்து 3/4 அடி நீளம் (1/2 அடி நீளமும் இருக்கும். கொடுக்கு நம் சுண்டுவிரல் தண்டிக்கு இருக்கும்) இருந்தால் எப்படி இருக்கும்? அது நட்டுவாக்காளி. ஆனால் அது கடித்தது என்று கேள்விப்பட்டதில்லை.

      மலைப்பாம்பைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. ஆனால் எங்க ஸ்கூலில் (தாளவாடி), கம்பி காம்பவுண்டில் அதை கல்லாலேயே அடித்துக் கொன்றிருந்தார்கள். அந்த ஊர்ல பாம்புகள் ஜகஜம். மலைப்பாம்பு, காடு, மலை சூழ்ந்த பகுதிகளில்தான் இருக்கும். By the by, நான் அடையாரில், நிறைய தடவை கீரிகளைப் பார்த்திருக்கிறேன். முன்னொரு காலத்தில் அந்த இடம் மரங்கள் அடர்த்தியான காடுகளாக இருந்திருக்கணும்.

      ஒரு வருடத்துக்கு முன்னால், உப்பிலியப்பன் கோவிலிலிருந்து திருச்சேறை கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது, திருச்சேறை அருகே, பக்கத்து நெல் வயலிலிருந்து ரோடிற்கு ரொம்ப நீளமான (10 அடிக்கும் மேல் இருக்கலாம்) கோதுமை நாகம் வந்தது. ஆட்டோவிற்கு 30 அடி தூரத்தில் வந்து சடாரென்று திரும்பி பிறகு வயலுக்குள் இறங்கிவிட்டது. ரொம்ப அலர்ட் ஆன நான், அப்போ உடனே சுதாரித்து போட்டோ எடுப்பதற்குள் ஆட்டோ அந்த இடத்தைத் தாண்டிவிட்டது. திருச்சேறையில் பாம்புகள் அதிகம் ஆனால் யாரையும் கடிக்காது (சாரநாதன் என்பது பெருமாள் பெயர்) என்று சொன்னார்கள்.

      நீக்கு
    5. //கோதுமை நாகம்//

      ஹா ஹா ஹா இப்படியும் ஒரு பெயரோ.. இனி எனக்குக் கோதுமையைப் பார்க்கும்போதெல்லாம் இதுதான் நினைவுக்கு வரப்போகுது:)

      நீக்கு
    6. அது கோதுமை நிறத்தில் இருக்கும். (வட நாட்டில் கோதுமை வயல்களில் இருக்கும்னு நினைக்கிறேன்). கருநாகம், கருப்பு நிறத்தில் இருக்கும். இன்னொன்று கோதுமையில் கொஞ்சம் கருப்பு நிறம் கொண்டு இருக்கும். இந்த மூன்று வகையான நாகப்பாம்புகளைத்தான் நான் பார்த்திருக்கிறேன். வட நாட்டில், குறிப்பா காசியில், கோவிலுக்குப் போகும் வழியில் பாம்புப் பெட்டிக்குள் கருநாகத்தை அடைத்து வைத்துக்கொண்டு, அதைக் காட்டி பிச்சை எடுப்பார்கள் (எனக்கு கொஞ்சம் அருவருப்பா இருக்கும்).

      நீக்கு
  19. அனைவருக்கும் காலை வணக்கம். கொஞ்சம் தாமதமாக. சமையல் முடித்து வந்தேன். //அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்"/ கிடையவே கிடையாது. இங்கு ஒரு சுவாரஸ்யத்தை நான் பகிர்ந்து கொள்கின்றேன். என் பெண்கள் இருவரும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சென்னையில் நடத்தி வந்த "The School" அடையாரில் பயின்றவர்கள். அது அவ்வை இல்லம் எதிரில் அமிந்திருந்தது. அங்கு குழந்தைகள் சேர்ந்த உடனே, பெற்றோர் எழுதிக் கொடுக்க வேண்டிய முதல் கடிதம் : "நான் என் குழந்தையை மரம் ஏர அனுமதிக்கின்றேன்" என்பது. ஆசிரியை பெற்றோர் மீட்டிங்க் செல்லும்போதெல்லாம், இரு புறம் இருக்கும் மரங்கள் அத்தனையிலும் குழந்தைகள் ஏறி உட்கார்ந்து கொண்டு குஷியாக படம் வரைந்து கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ இருப்பார்கள். அந்த பள்ளி 16 கிரௌண்டில் இருந்ததால், நிறைய மரங்கள், ஒரு நீரோடை, செடி கொடிகள் என மண்டி கிடக்கும். எங்கு பார்த்தாலும் குரங்குகளும், அணில்களும் தாவிய வண்ணம் இருக்கும். நாங்கள் நடந்து செல்லும்போதே பல பாம்புகளை கண்டிருக்கின்றோம். முதலில் பயம். பின்னர், யாவருக்கும் பழகி விட்டது. நாம் அவையை சீண்டாத மட்டும் அவை நம் பக்கம் வராது என்படு புரிந்தது. அந்த பள்ளியின் பிரின்சிபல் அங்கேயே ஒரு வீட்டில் தங்கி இருந்தார். வீட்டின் பின்னால், ஒரு பெரிய ஆள் உயர புற்றில் நல்ல பாம்பு வசித்து வந்தது. அதற்கு அங்கு வேலை செய்யும் ஆட்கள் தவறாமல் பால், முட்டை ஆகியவற்றை அளிப்பார்கள். இப்போது பள்ளி கீழப்பாக்கம் சென்று விட்டது. என் பெண்களும் வளர்ந்து விட்டார்கள். ஆனால், அன்றே அந்த பள்ளி இவர்களுக்கு கூடி வாழும் குணத்தை கற்று கொடுத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கவே பயமா இருக்கு.

      நீக்கு
    2. @ ரமா ஸ்ரீனிவாசன்:
      உங்கள் குழந்தைகள் ஜேகே-யின் பள்ளியில் படிக்க நேர்ந்ததைக் கேட்டதில் சந்தோஷம். அவர் ஆரம்பித்த பள்ளிக்கூடங்கள்பற்றிப் படித்திருக்கிறேன். அப்படி ஒன்று அடையாறில் இருந்தது தெரியாது. இப்போது கீழ்ப்பாக்கத்திற்கு சென்றுவிட்டதா? பழைய பள்ளியின் இடத்தை அரசியல்வாதிகள் கூறுபோட்டு சாப்பிட்டுவிட்டார்களா?! பாம்புகள், குரங்குகள், அணில்களின் கதி ?

      நீக்கு
    3. வாங்க ரமா ஸ்ரீ... இந்த பள்ளி அனுபவம் பற்றி ஸ்ரீநிவாசன் ஸார் அன்று என்னிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று ஞாபகம்.

      நீக்கு
    4. கௌதமன் சார், பயமெல்லாம் சிறிது சிறிதாக போய்விடும். நாம் அவையை சீண்டாத மட்டும் அவை நம் பக்கம் வரா. ஏகாந்தன் சார், அது பள்ளி இல்லை சார். சொர்கபுரி என்பதே உண்மை. எந்த வித மிரட்டல், உருட்டல் எதுவும் கிடையாது. பாதி நேரம் வேப்ப ம்ரத்த்டியில்தான் படிப்பு. சுவையான சூடான காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை டிபன். இப்போது கீழ்பாக்கம் இல்லை கீளப்பாக்கம் சென்று விட்டது. 100 வருட லீஸ் முடிந்ததும் தியோசாபிகல் சொஸைடி த்ரும்ப பெற்று கொண்டு விட்டது. இப்போது TVS அங்கு ஒரு புதிய பள்ளி தொடங்குகின்றது. அந்த 12 plus 12 வருடங்கள் எங்களுக்கும் எங்கள் மகள்களுக்கும் மறக்க முடியாத வருடங்கள். நன்றாக நெறியான வாழ்க்கைக்கு இப்பள்ளி அவர்கள் தயார் செய்து விட்டது.

      நீக்கு
    5. உங்கள் பெண்கள் கொடுத்துவைத்தவர்கள். சந்தேகமில்லை.

      நீக்கு
  20. பாம்பை கண்டு படை நடுங்கினாலும் நான் நடுங்குவது இல்லை. பொட்டுன்னு தலையில் ஒரே அடிதான். அதுக்கு மோட்சம் கிட்டிடும்...

    கோல்கேட் பவுடர், எண்ணெய்லாம் வந்துச்சா?!

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. நேற்று சாரின் அண்ணாவீட்டு தோட்டத்தில் வந்த கண்ணாடி விரியன் பாம்பை பாம்பு பிடாரனை வரவழைத்து பிடித்த படத்தை அனுப்பி இருந்தார்கள்.

    மஞ்சள் பாம்பு ஒன்று நடமாடுகிறது என்று பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதாக சொன்னார்கள். நீங்கள் பார்த்து இருப்பதாய் சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்த மஞ்சள் பாம்பு என்ன நீளம் தெரியுமா? கண்ணாடி விலியனும் கட்டு விரியனும் ஒன்று விட்ட சகோதரர்களா?!!

      நீக்கு
    2. நீங்கள் பார்த்தது மஞ்சள் சாரையாக இருக்கலாம் ஸ்ரீராம்! அதுதான் கொஞ்சம் நீளமாக இருக்கும்! விஷமில்லாதது/ ஆனால் மாடுகளுக்கு ஆபத்தானது. இது புல்வெளியில் மறைந்து கிடக்கும்போது மாடு தவறிப்போய் மிதித்து விட்டதானால் வாளை சுழற்றி ஒரே அடி! மாடு க்ளோஸ் என்று சொல்வார்கள்.

      நீக்கு
  23. இந்த பாம்பு தகவல் முகநூலில் வாசித்து இருக்கிறேன்.
    அப்புறம் சாரபாம்பு குடும்பத்தை எரித்துக் கொன்றப் பற்றி இப்போது தான் படிக்கிறேன்.யாரும் தோஷம் அது இது என்று சொல்லவில்லையா?
    உங்கள் வீட்டு முருங்கை மரத்தில் ஒரு பாம்பு வந்த படம் முன்பு போட்டு இருந்தீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. அங்கு பகிர.ந்திருந்தேன். தோஷம் பற்றி சொல்லவில்லை. ஆனால் ஒன்றை அடித்தால் ஏழுநாள் தொடர்ந்து வரும் என்பதுபோல ஏதோ சொன்னார்கள் என்று நினைவு.

      செங்கல் நடுவே இருந்து, எழுந்து ஓடிய பாம்பு வீடியோ போட்டிருந்தேன்.

      நீக்கு
  24. கிராமத்தில் வாழ்ந்த காலத்தில் பாம்புகளோடு பரிச்சயம் நிறையவே இருந்தது. பச்சைப்பாம்பு, ஓலைப்பாம்புகளோடு, சில சமயங்களில் கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் கிராமத்துச் சாலையை சடாரெனக் குறுக்கே பாய்ந்து கடக்கும் இளமஞ்சள் நிற சாரைப் பாம்புகள். கிராமத்து வயல் கிணறுகளில் குளிக்கையில் ஏகப்பட்ட தண்ணீர்ப்பாம்புகள் என்று ஆனந்தமாய் ரசித்ததுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓலைப்பாம்பு பார்த்த ஞாபகம் இல்லை. பச்சை, தண்ணீர், சாரைப் பாம்புகள் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  25. பதிவுகள் பிரமாதமாக இருந்தாலும் பதிவுக்கு தலைப்பிடுவதில் மட்டும் கோட்டை விட்டு விடுகிறீர்கள். ;)
    ஆனால் நீங்கள் விஷயம் தெரிந்தவர்கள்! எதற்காக அப்படிச் செய்கிறீர்கள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்பது என் ஊகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு எப்படி வைத்திருக்கலாம் என்பதில் உங்கள் தலைப்பு யோசனை என்ன ஜீவி ஸார்?

      நீக்கு
    2. 'ஆனால் நீங்கள் விஷயம் தெரிந்தவர்கள்! எதற்காக அப்படிச் செய்கிறீர்கள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்பது என் ஊகம்!'

      -- இதான் விஷயம்!.. பின்னூட்டங்களில் புதுமைகள் செய்வது கவனிக்கப்படாமலே போய் விடுகிறது தான்!..

      நீக்கு
  26. கால்கேட்டா?.. கோல்கேட்டா?..
    புதன் பதிவுக்கு எழுதிக் கேட்பானேன்?.. இங்கேயே சொல்லி விடுங்களேன்!
    கெள-வாக இருந்தால் என்ன.. ஸ்ரீ-யாக இருந்தால் தான் என்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Below is the UK transcription for 'colgate':
      Modern IPA: kə́wlgɛjt
      Traditional IPA: ˈkəʊlgeɪt
      2 syllables: "KOHL" + "gayt"

      நீக்கு
    2. ஆவ்வ்வ்வ்வ் கூப்பிடுங்கோ எங்கட டமில்ப் புரொபிஸர் நெல்லைத்தமிழன் அவர்களை ஹா ஹா ஹா.. நான் கோல்கேட் எனத்தான் சொல்லுவேன், ஆனா எல்லோரும் கால்கேட் என்பினம் கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    3. கோல்கேட் தான் சரியான உச்சரிப்பு... அது இருக்கட்டும்... பதஞ்சலி மார்க்கெட் சூடு பிடித்த பிறகு, கோல்கேட் விற்பனையில் 10 சதவிகிதம் சரிவாம். பிறகு கோல்கேட்டும், இயற்கை பேஸ்ட், அப்புறம் பேஸ்டில் உப்பு என்றெல்லாம் ஆட ஆரம்பித்துவிட்டது. அதுவும் சரிப்படாமல் பதஞ்சலிக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் கொடுத்து பதஞ்சலி பிஸினெஸ் படுத்துக்கொண்டது என்று கேள்விப்பட்டேனே... எவ்வளவு தூரம் உண்மை?

      நீக்கு
    4. கோல்கேட் என்றே சொல்லி பழக்கப்பட்டிருக்கிறேன் நானும்.

      நீக்கு
  27. //வாழ்க்கைப் புத்தகத்தின்
    மறந்துவிட்ட
    எச்சரிக்கைப் பாடங்களை
    தூசிதட்ட வைக்கின்றன
    புதுப்பிக்கப்பட்ட
    துரோகங்கள்.. //

    புதுப்பிக்கப்பட்ட
    துரோகங்கள்
    தூசி படியாத
    வாழ்க்கை புத்தகத்தின்
    மறந்தது விட்ட
    எச்சரிக்கை பாடங்கள் தாம்.

    -- இது தான் தோசையைத் திருப்பிப் போடுவது என்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோசையை நன்றாகத் தான் திருப்பிப் போட்டிருக்கின்றீர்கள்...

      அருமை...

      கூட ஏதாவது சட்னி வைத்திருக்கலாம்..

      நீக்கு
    2. ஸ்ரீராம் சட்னி வைச்சிருந்தா நான் வடகரியே வைச்சிருப்பேன், சார். :}

      நீக்கு
    3. திருப்பி போட்ட தோசை நன்றாய்தான் இருக்கிறது.  அதே தோசைதானே!  சட்னியோ, வடகறியோ... ஏதாவது இருந்துதானே ஆகவேண்டும்!

      நீக்கு
  28. பத்தினிக் கோட்டம் 2
    ஆசிரியர்: நாக. ஜெக சிற்பியன்

    Category சரித்திரநாவல்கள்
    Publication வானதி பதிப்பகம்
    Pages N/A

    -- நாக. ஜெக சிற்பியன் -- ஆரானும் அது?.. :))

    பதிலளிநீக்கு
  29. நமக்குத் தெரிந்த ஜெகசிற்பியனின் இயற் பெயர்: ஜெர்வாஸ்
    இவரது புனைப்பெயர்கள்:
    தஞ்சை ஜெர்வாஸ்
    மாயவரம் ஜெர்வாஸ்
    ஜெர்வாஸ்
    பாலையா
    சென்னை ஓவியக் கல்லூரியில் இவர் பயின்ற பொழுது ஓவியர் மணியம் இவரது உற்ற நண்பராய் இருந்தார்.
    எனக்கு மிகவும் பிடித்தது எனது புனைப்பெயர் ஜெகசிற்பியன் தான் என்று இவர் சொன்னதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெகசிற்பியன் இயற்பெயரை இன்றே அறிகிறேன்.  அவர் என்னவாக இருந்தார் ஜீவி ஸார்?

      நீக்கு
    2. Freelance Writer.
      He managed to run his family with that income only in those days.

      நீக்கு
    3. பாலையா என்பது அவரது குடும்பப் பெயர், ஸ்ரீராம்.

      நீக்கு
  30. //ஒருமுறை ஒரு சாரைப் பாம்பு குடும்பத்தின்மேல் ஸ்பிரிட் ஊற்றி எரித்தும் இருக்கிறேன். //

    ஆஆஆஆஆ என்ன கொடுமை இது, விசப்பாம்பைக் கொல்வதைப் பார்த்திருக்கிறேன் ஆனால் சாரப்பாம்பை ஆரும் அடிப்பதே இல்லை, சூஉ..சூ என விரட்டி விடுவார்கள், ஏனெனில் அது ஒரு அப்பாவிப்பாம்பாம் ஒண்ணும் பண்ணாதாம், பண்ணினாலும் விசமில்லையாம் என்பார்கள்.. அதைப்போய்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒரு விரியன் புடையனை அடிச்சுப்போட்டு வந்து சொல்லியிருந்தால்கூடப் பறவாயில்லை ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிச்சுக்குங்க...    அது ஆரம்ப காலம்.  அப்புறம் திருந்தி விட்டேன்!

      நீக்கு
  31. இதேபோலத்தான் குரங்குப்பிள்ளை ஒரு பூனைக்குட்டிய.. கொஞ்சம் வளர்ந்த குட்டியைக் காவிக்கொண்டு மரமெல்லாம் சுற்ரும் வீடியோவைப் பார்த்தேன், அது பாசமோ அல்லது விளையாட்டோ எனத் தெரியவில்லை, ஆனா பார்க்கும்போது எனக்கு நெஞ்சு அடைப்பதுபோல வந்து பாதியில் வீடியோவை நிறுத்தி விட்டேன், ஏனெனில் அது பூஸ் குட்டியின் ஒரு காலைப் பிடித்தபடி மரத்தில் ஏறிப்போகிறது, பூஸோ.. வீர் வீர் எனக் கத்துகிறது..

    பாவம் நல்லது செய்வதாக குரங்குப்பிள்ளை நினைக்கலாம், ஆனா ஆரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தானே எல்லாம் சவுக்கியமாகும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரங்கு சேட்டைக்காக செய்கிறதா, பாசத்தில் செய்கிறதா என்றும் தெரிவதில்லை!

      நீக்கு
  32. //வாழ்க்கைப் புத்தகத்தின்
    மறந்துவிட்ட
    எச்சரிக்கைப் பாடங்களை
    தூசிதட்ட வைக்கின்றன
    புதுப்பிக்கப்பட்ட
    துரோகங்கள்//

    அழகு.. 100 வீதம் உண்மை, இதனாலதான் நமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மன்னிக்கலாம் ஆனால் மறந்திடக்கூடாது.. அது நமக்கு கடவுள் ஏற்படுத்திய அனுபவம்.. முன்னெச்சரிக்கை என்று கூட எடுத்துக் கொள்ளலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  மன்னிக்கலாம், ஆனால் மறந்துவிட முடியாதுதான்!

      நீக்கு
  33. பாவம் குரங்கு, எத்தனை பாசம் நாயிடம்! பழைய விளம்பரங்களும், துணுக்குகளும் ஜோர். அழகான அனுஷ்கா படத்திற்கு நன்றி.  

    பதிலளிநீக்கு
  34. கோல்கேட் ஒயில் கேள்விப்பட்டதே இல்லை.... கி.மு காலமாக இருக்குமோ ஹா ஹா ஹா.. ஆனா கோல்கேட் பவுடர் சில வருடங்கள் முன் ஆருடைய வீட்டிலோ பார்த்ததுபோல இருக்குது அல்லது பிரமையோ தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும்தான்!  கோல்கேட்டில் பற்பசை மட்டுமே கேள்விப்பட்டிருந்தேன்.

      நீக்கு
  35. ஹா ஹா ஹா சாகும்போது மகிழ்ச்சியாக நிறைவாகச் சாகோணும் என நினைச்சிட்டார் போலும்:)).. பசியுடன் இறந்தால், அவரது ஆன்மா பசிக்குது பசிக்குது என அலையும் என்பதில் நம்பிக்கை இருப்பவர்போல இருக்கே ஹா ஹா ஹா...

    //அரசியல்வியாதிகள் மாறுவதே இல்லை!//
    அவர்களும் மாறுவதில்லை, அவர்களைக் கிண்டல் பண்ணுவோரும் மாறுவதில்லை:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் இன்னொன்று சொல்லவேண்டும் அதிரா...   தற்கொலை செய்துகொள்பவர்கள் அக்கடைசி ஆசையாக வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு மருந்து குடிப்பார்கள்.  அதுவே அவர்களைக் காப்பாற்ற ஒரு வாய்ப்பாகவும் அமையும்.  அதையே அவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டிருந்தால் அவர்களைக் காப்பாற்ற முடியாது போய்விடும்!

      நீக்கு
  36. //பத்தினிக்கோட்டம் படித்தவர்களுக்கு //

    ஆஆஆ மீ படிக்கவில்லையே... ஆனா இந்தப் புத்தகம் வெளிவந்தபோது நெல்லைத்தமிழனுக்கு ஒரு வயசு:)) அதனால அவரும் படிச்சிருக்க மாட்டார்ர் என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்ன்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  37. //ஒருமுறை ஒரு சாரைப் பாம்பு குடும்பத்தின்மேல் ஸ்பிரிட் ஊற்றி எரித்தும் இருக்கிறேன். //  கடவுளே! என்ன கொடுமை! இனிமையான ஸ்ரீராமுக்குள் இப்படி ஒரு இரக்கமற்ற ஸ்ரீராமா? 
    பாம்பை அடிப்பது பற்றி சுஜாதாவின் சிறுகதை ஒன்று உண்டு. கதையின் தலைப்பு மறந்து விட்டது(என்னிடம் இது ஒரு சங்கடம். கதை நினைவிருக்கும், தலைப்பு மறந்து விடும்). அந்த சிறுகதையில் கதாநாயகன் ஒரு கல்லூரி மாணவன், அவனுக்கு ஒரு தங்கை, அவளை சைட் அடிக்கவே அவர்கள் வீட்டுக்கு வந்து அலட்டும் அவன் தோழன். தோழனைப்பற்றி அண்ணனுக்கும், தங்கைக்கும் தெரியும். ஒரு நாள் அவன் வந்திருக்கும் பொழுது ஒரு பாம்பும் வந்து விடும். அதை துரத்த முயற்சி செய்யப் போக அது குதிரடியில் புகுந்து கொண்டு விடும். தோழனுக்கு தான் விரும்பும் பெண் எதிரே தன வீரத்தை காட்டியே தீர வேண்டும் என்று தோன்றி விடுவதால் அதை பிடித்து, அடித்து, கொன்று விடுவார்கள். அதை பார்த்த கதா நாயகனின் தங்கை, "அதை ஏன் கொன்கிறீர்கள்? அது உங்களை என்ன செய்தது?" என்று விசித்து,விசித்து அழ ஆரம்பிப்பாள். நான் என் தங்கையை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன் என்று கதையை முடித்திருப்பார்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் பாதி..  மிருகம் பாதி...  எல்லோருக்குள்ளும் ஏதாவது ஒரு மைனஸ், மிருகம் இருக்கும் இல்லையா?   இனிமையான ஸ்ரீராம்...   ஹிஹிஹி வெட்கமா இருக்கு...   இனிமேல் பாம்பை எரிக்க மாட்டேன், என்ன?

      நீங்கள் சொல்லி இருக்கும் சுஜாதா கதை நானும் படித்த நினைவு இருக்கிறது.

      நீக்கு
  38. தினமலரில் நானும் படித்தேன், குரங்கின் பாசத்தை என்னவென்று சொல்வது! நாயும் குரங்கை தேடிக் கொண்டு இருக்கும்.

    பொக்கிஷ பகிர்வு, சிரிப்பு துணுக்குகள் அனைத்தும் அருமை.

    வினுவின் ஓவியம் கதை சொல்கிறது.
    அனுஷ் சொல்லிய செய்தி ஒருவரை நினைவு படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.   கடைசி வரியில் ஒரு கிசுகிசு வைத்திருக்கிறீர்கள்!  விடை எப்போது சொல்வீர்கள்?

      நீக்கு
  39. எனக்கொரு டவுட்டூஊஊஊ ஸ்ரீராம், அனுக்காவை இப்போ கைவிட்டு விட்டேன் எனச் சொல்லிக்கொண்டே.. திடீரென இன்று களம் இறக்கியதன் பின்னணிக் காரணம் என்ன?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க முடியவில்லை அதிரா...   மறக்க முடியவில்லை!!!!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) இது ரொம்ப ஓவரூஊஊஊஊஊ சொல்லிட்டேன்:))

      நீக்கு
  40. ஆஆஆஆஆஆ இங்கின மீதான் 100 ஊஊஊஊஊஉ:)) 101,103 எல்லாமே:)).. பரிசு எனக்குத்தான்.. இன்னும் எழும்பாமல் நித்திரை கொள்வோருக்கு ஒண்ணும் கொடுக்கப்பிடாது ஜொள்ளிட்டேன்ன் கர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  41. பழைய விளம்பரங்களை தேடித் தேடி போடுகிறீர்கள். முன்பெல்லாம் கரோனா காலணிகள் என்று ஒன்று உண்டு. 'கரோனா காலணிகள் மற்றும் சாண்டல்' என்று விளம்பர பாடல் கூட வரும். தற்போதைய பெயர் சொல்ல விரும்பாத கிருமி பற்றி கேள்விப்படும் பொழுதெல்லாம் அந்த விளம்பரம் நினைவுக்கு வருகிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பெல்லாம் என்ன, இப்போதும் கரோனா காலணிகள் விற்கிறார்கள் போலிருக்கிறதே...

      நீக்கு
  42. துரோகத்தை ஏன் புதுபிக்க வேண்டும்?
    மறபபதே உடல் நலத்திற்கு நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா, அது புதுப்பிப்பதில்லை, மறக்காமல் இருந்தால் மீண்டும் அது ந்மக்கு நடந்திடவிடாமல் எச்சரிக்கையாக இருக்கலாமெல்லோ.. இல்லை எனில் பட்ட காலிலேயே படும் என்பதைப்போலாகிடும்...

      சிலர் கேட்பினமெல்லோ.. அடி வாங்கியும் நீ திருந்தாமல் மீண்டும் அடி வாங்குகிறாயே என ஹா ஹா ஹா

      நீக்கு
    2. நீங்கள் சொல்வதும் சரிதான். எச்சரிக்கையாக இருப்பதும் நல்லதே.
      மனகுகையில் ஆழமாய் கிடக்கும் நினைவுகளை ஏன் புதுபிக்க வேண்டும் என்றேன்.
      தூசி படித்து இருக்கு என்றால் அதை நினைக்கவில்லை என்று தானே அர்த்தம்.
      அதை ஏன் துசு தட்டி புதுபிக்க வேண்டும் என்று கேட்டேன்.

      நீக்கு
    3. சில துரோகங்கள் மறக்க முடியாதவை!

      நீக்கு
  43. எங்கள் அண்ணன், உயர்படிப்பை அம்மம்மா வீட்டில் இருந்துதான் படிச்சார், அதனால அம்மம்மா ஆட்களோடு சேர்ந்து ஊர் விரதமெல்லாம் பிடிச்சுப் பழகியிருந்தார்.. விடுமுறைகளில் எங்களிடம் வருவார்.

    அப்போ வீட்டுக்கு வந்து நிற்கும்போது ஸ்பெஷல் கவனிப்பு நடக்கும் அவருக்கு:). ஒருமுறை டிசம்பர் மாதம் வந்திருந்தார்... அந்நேரம் பிள்ளையார்கதை விரதம் போய்க்கொண்டிருந்தது, ஊரில் அண்ணன் பிடிச்சுப் பழகிவிட்டார், மற்றும்படி வீட்டில் அம்மா மட்டும் விரதமிருப்பா.

    அப்போ அண்ணனிடம் அப்பா அம்மா சொன்னார்கள், பறவாயில்லை விடுமுறை என்பதனால பிள்ளையார் கதை விரதம் 21 நாட்கள் எல்லோ.. அதனுடனேயே விடுமுறையும் முடிஞ்சிடும் என்பதனால... விடுமுறையில் சாப்பிடலாம் சாப்பிடு அசைவம் என்று... அவரும் அரைமனதாக ஒத்துக் கொண்டார்...

    ஆனா அண்ணனும் இப்படியான விசயங்களில், கடவுள் சம்பந்தப்பட்ட விசயம் எனில் நிறையவே பயப்பிடுவார்.. அன்று, எனக்கு இப்பவும் நினைவிருக்குது, அசைவம் சாப்பிட்டு விட்டு பின்னேரம், நம் வீட்டு சன்செட்டில்.. படிபோல இருக்கும், படிகளில் எல்லோரும் இருந்து பேசிக்கொண்டிருப்போம். மாமர நிழலில்.

    திடீரென அண்ணனின் காலுக்குள் ஒரு குட்டி வெள்ளைப்பாம்பு வந்துவிட்டது.. அப்படிப் பாம்பு அங்கு வருவதே இல்லை... அண்ண்ணனுக்கோ அப்பாவைப்போல பாம்பென்றால் பயம் ஹா ஹா ஹா..

    அந்தப் பயத்திலேயே பாய்ந்து எழும்பி கையில் கிடைச்ச கட்டையால அடிச்சுப் போட்டார்ர்.. ஒரு குட்டிப் பாம்பு.. வெள்ளாளன்குட்டி என்றார்கள் அதை..

    அடிச்சு சிறிது நேரத்தில் அதேபோல இன்னொரு குட்டி வந்துவிட்டது... உடனே நம் வீட்டு வேலையாளைக் கூப்பிட்டு அடி அடி என 2 வதையும் அடிச்சாச்சு... உடனே அண்ணன் அம்மாவிடம் சொன்னார்.. அம்மா இதெல்லாம் பிள்ளையாரின் விளையாட்டு இனி நான் அசைவம் உண்ண மாட்டேன் என.. அன்றிலிருந்து பிள்ளையார்கதையின்போது விரதம் இருப்பார் இன்றுவரை அதுவும் ஒருநேர உணவு மட்டுமே...

    அப்போ சொன்னார்கள், இது வெள்ளாளன் பாம்பு இதில் ஒரேயடியாக 7 பேர் சுற்றித்திரிவார்கள், அடிச்சிட்டமையால் மிகுதிப் பேரும் வருவார்கள் தேடி என..

    நைட் அண்ணன் நம்மோடு நம் றூமில் வந்து படுத்தார்.. ஏனைய பாம்பும் வந்திடுமோ எனும் பயத்தில ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணன் பிள்ளையாரின் விளையாட்டு என்றது சரிதான். பிள்ளையார் நோன்பை எப்போதும் போல் கடைபிடிக்க வைத்து விட்டார்.

      நீக்கு
    2. ஆமாம், சில பேருக்கு இப்படியான சம்பவங்கள் சில நம்பிக்கைகளைத் தோற்றுவித்து விடும்.   சின்ன வயதில் - அதாவது நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைவு - ஏதோ ஒரு வேண்டுதலின் தொடங்கி இன்றுவரை தினமும் காலை க ச கவசம் சொல்லி வருகிறேன்!

      நீக்கு
  44. பாம்புடனான தங்களது முந்தைய அனுபவப் பகிர்வுகள் நினைவில் உள்ளன. தற்போதிருக்கும் வீட்டுக்குக் குடி வந்த புதிதில் தோட்டத்தில் பல முறைகள் பாம்புகளைப் பார்த்துள்ளேன், கோப்ரா, ரஸல்ஸ் வைப்பர் உட்பட. படங்களும் எடுத்துள்ளேன், அவசரத்திற்கு மொபைல் கை கொடுக்கும். நேரம் கிடைத்தால் அந்த அனுபவங்களைப் பதிவிடப் பார்க்கிறேன்.

    குரங்கின் நிலைமை வருத்தம் அளிக்கிறது என்றாலும் நாய்க்குட்டி மீட்கப்பட்டது சரியானதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி கண்ணில் பாம்பு, தேள், பூரான் போன்றவை படக்கூடாது என்று வேண்டிக் கொள்வார்கள் கோமதி அம்மனுக்கு.
      சங்கரன் கோவிலுக்கு.

      நீக்கு
    2. அன்பு கோமதி சொல்வது போலவே எங்கள் வீட்டிலும்.
      ஏதாவது விஷ ஜந்து கண்ணில் பட்டால்
      உடனே மணி ஆர்டர் சங்கரன் கோவில்லுப்
      பறக்கும். அங்கிருந்து புற்று மண் வரும். இப்போதெல்லாம்
      இருக்கோ என்னவோ.

      நீக்கு
    3. வாங்க ராமலக்ஷ்மி...   உங்கள் தோட்டத்தில் அனைத்து வகைப் பாம்புகளும் இருக்கும் போலவே...   பதிவிடுங்கள்.

      நீக்கு
    4. கோமதி அக்கா, வல்லிம்மா சொல்லி இருக்கும் விஷயங்கள் புதிது எனக்கு.

      நீக்கு
  45. வணக்கம் சகோதரரே

    "பாம்பென்றால் படையும் நடுங்கும்."
    இந்த பழமொழியை படிக்கும் போதெல்லாம் எனக்கு அந்த காலத்தில் (மன்னர்கள் காலத்தில்) காலாட்படை போரிடுவதற்காக வரிசையில் செல்லும் போது ஒரு பாம்பை கண்டால் வரிசை கலைந்து படை சிதறி ஓடுவதையே அப்படி கூறினார்களோ எனத் தோன்றும்.(சும்மா கற்பனைதான்)

    பாம்பு படங்கள் அத்தனையும் அழகாக உள்ளது. பொறுமையாக அதன் முடிவு ஊர்தல் வரை படமெடுத்து இருக்கிறீர்கள். நீங்கள் பாம்பை பயமின்றி படமெடுத்து பகிர்ந்ததற்கு வாழ்த்துகள். அதுவும் நம்மை பார்த்து சமயத்தில நல்ல பாம்பாயிருந்தால், பயமின்றி படம் எடுக்கும் என கேள்வி. பாம்பு முன்பு அம்மா வீட்டில் இருக்கும் போது கொல்லையில் வரும். போகும். அப்போது அதற்கும் சரி.. எங்களுக்கும் சரி.. படமெடுக்க வாய்ப்புகள் கிடைத்ததில்லை. ஹா. ஹா. ஹா.. ஆததால் நானும் அந்த காட்சியை இதுவரை நேரில் பார்த்ததில்லை.

    இன்று கருத்திலும் ஏகமான பாம்புகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். நாங்கள் சிறு வயதாக இருக்கும் போது இரவு விளக்கேற்றி விட்டால், பாம்பு என்ற வார்த்தையையே சொல்லக் கூடாது என பாட்டி சொல்வார்கள். "கயிறு என்று சொல்" என திருத்துவார்கள். இந்தக் கால குழந்தைகள் பாம்பு என்று நாம் சொன்னால் கூட, "அது பாம்பு இல்லை பாட்டி. ஸ்னேக் என்று சொல்லு" என மிரட்டுகிறார்கள்.

    எப்படியோ இன்றைக்கு பாம்புகளை பற்றி அதிகம் படித்து,சொல்லி விட்டோம். இரவு நாம் அனைவரும் "நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா" என்று பாடாமல் இருந்தால் சரிதான். ஹா. ஹா. ஹா.

    இந்த பாட்டில் எஸ்.பி.பியின் குரல் அப்படி இழையும். பாடலை மட்டும் அப்போதெல்லாம் மிக ரசித்திருக்கிறேன். என் அறுவையில் உங்களுக்கும் நாளைய வெள்ளி பாடல்கள் நினைவுக்கு வந்து விடப் போகிறது. ஹா.ஹா.ஹா. பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   படை என்றதும் நமக்கு மன்னர் காலத்துப் படைகள்தான் நினைவுக்கு வருகின்றன இல்லை?!!

      படம் எடுக்கும் பாம்பு படம் எடுக்கும் நிலையில் இல்லாததால், தனது கேமிராவை பொந்துக்குள் விட்டிருந்ததால், நான் படம் எடுத்து விட்டேன்...   ஹிஹிஹி...

      நீயா படத்தில் வரும் அந்தப் பாடல் மிக இனிமையாக இருக்கும்.

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  46. கசந்துபோன வாழ்க்கை...அதிகமாக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  47. குரங்கின் பாசம் என்னவென்று சொல்வது.
    கோல்கேட் ஒயில் கேள்விபடவில்லை.
    மசாலாதோசை எவ்வாறு ருசி அவர் சாவதற்கு முன் சாப்பிட நினைத்ததில் தவறில்லை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி.  ஆனால் மசால் தோசை எனக்குப் பிடிபப்தில்லை.  அதைப் பெரிய சுவையாக நான் நினைப்பதில்லை!!!

      நீக்கு
  48. வணக்கம் சகோதரரே

    கவிதை அருமை.

    புதுப்பிக்கப்பட்ட துரோகங்கள்.. உண்மைதான்.. துரோகங்களை அப்போதைக்கு மன்னித்து சமரசமாகி விட்டாலும், ஒரு சிலருக்கு என்றைக்குமே "நீறு பூத்த நெருப்பாக" உள்ளுக்குள் கனன்று கொண்டேயிருக்கும். அவர்களிடம் ஒன்றாகவிருந்து வாழ்க்கைப் பாடம் பயிலும் மற்றவர்களும் எச்சரிக்கையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

    கோல்கேட் விளம்பரங்கள் பார்த்தேன். ரசித்தேன். இப்போதைக்கு நம் கைவசம் உள்ளது பற்பசை மட்டுந்தான்.

    பொக்கிஷம் ஜோக் அருமை. அனைத்தையும் ரசித்தேன். குறிப்பாக வாழ்க்கை முடிவதற்குள் மசால் தோசை சாப்பிடும் ஆசை. ஹா.ஹா.ஹா. இவர் முழு தோசை முடிவதற்குள் எந்த நிமிடத்திலும் தண்டவாளத்தை விட்டு இறங்கி விடலாம்.:)

    வினுவின் ஓவியம் அழகு. அதே மாதிரி ஓவியப் பெண்ணாக அனுவின் அழகும் அழகு. காதலர் பக்கம் போய் பார்த்தேன். யாரென கண்ணுக்கு தென்படவில்லை எனக்கு மட்டுமில்லை,அவருக்குந்தானாம்:) அனைத்தும் (மொத்த கதம்பமும்) இன்று ஸ்வாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  49. குரங்கை நினைத்து வருத்தப்படுகிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  50. நாய்க் குட்டியும் குரங்கும் - வேதனை.

    பதிவின் பகுதிகள் அனைத்தும் சிறப்பு.

    அனுஷ் - :))) கொறிக்க! ஹாஹா.

    பதிலளிநீக்கு
  51. இது என்ன பாம்பாக இருக்கும் என்கிற சர்ச்சை பலமாக எழுவதால் புகைப்படம் எடுப்பதற்கு முன்னாடியே பாம்பிடமே கேட்டு தெரிந்திருந்தால் வீணான சர்ச்சையை தவிர்த்திருக்கலாம் .. என்றாலும் இனி இம்மாதிரியான தவறுகளை தவிர்க்கவும்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!