வியாழன், 14 மே, 2020

என்ன சொல்ல... என்னவோ போங்க...!

சில படங்களின் கதை அமைப்புகள் யோசிக்க வைக்கும்.  படத்தைப் பார்க்கும்போது நாமும் அதனுடன் அதாவது அந்தக் கதை அமைப்பின் ஓட்டத்துடன் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறோம்.  அப்புறம் யோசிக்கும்போது கதையின் லாஜிக்கில் எங்கேயோ ஓட்டை இருக்கிறதோ, இது நியாயமா என்று தோன்றும்.
பல தடைகளைக் கடந்து காதலர்கள் சேரும் இடத்தில சுபம் என்று போடுவார்கள்.  அப்புறம்தான் பிரச்னைகளே ஆரம்பிக்கும் என்பது பார்ப்பவர்களுக்கும் தெரியும்.

இதிலிருந்து எல்லாம் விதிவிலக்கான படங்களும் வந்ததுண்டு, வருவதுண்டுதான்.  ஆனால் எண்ணிக்கையில் ரொம்பக் கம்மி.

உதாரணத்துக்கு ஒன்று இப்போது...

ஒருவனும் ஒருத்தியும்  கிட்டத்தட்ட சிறு வயதிலிருந்து தோழன் /  தோழிகள்.    வயது வந்ததும் அவளுக்கு அவன் மீதான அந்த நட்பு காதலாக மாறுகிறது.  ஆனால் அவனுக்கு வேறொரு பெண்ணின் மேல் காதல்.  வழக்கம் போலதான்....  அவன் பழகும் விதத்தை வைத்து அவன் தன்னைத்தான் காதலிக்கிறான் என்று அவள் எண்ணிக்கொண்டிருக்க, அவன் காதலை தன்னிடம் சொல்லப் போகிறான் என்று காத்திருக்கும்போது அந்தக் காதல் வேறொரு பெண்ணைப் பார்த்து என்ற உடன் உடைந்து போகிறாள் அவள்.  

இங்கேயே ஒரு சந்தேகம் நமக்கு வரவேண்டும்.  இப்படி வயது வந்த ஆணையும் பெண்ணையும் எந்த பொறுப்புள்ள பெற்றோராவது ஒப்புக்கொள்வார்களா?

கொஞ்ச காலம் கழித்து கல்யாணம் செய்துகொண்ட அந்த ஜோடியில் (வழக்கம்போல) அந்தப்பெண் இறந்துவிட, அவன் தனிமரமாகிறான்.  கூட ஒரு குழந்தை.  இப்போது அவளுக்குத் தாய் வேண்டும்!   அதாவது இவனுக்கு ஒரு ஜோடி வேண்டும்.  "யதேச்சையாக" அவளை மறுபடி பார்க்கிறான். 

அவளுக்கு இப்போதுதான் வேறொருவனுடன் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.  இவன் குழந்தை அவளுடன் ஒட்டிக்கொள்கிறது.  இவனுக்கும் அவள் பழைய எண்ணம் 'அப்போதுதான்' தெரிய வருகிறது.  எப்படி என்றால் ஒன்று ஒரு டைரி கிடைக்கும், அல்லது யாராவது தோழியோ, பெண்ணின் அம்மாவோ சொல்வார்.  

இப்போது அவள் புதியவனுடன் சேர வேண்டுமா?  பழையவனுடன் சேர வேண்டுமா?   உலக நியாயம் வேறு ; சினிமா நியாயம் வேறு.  சில நேரங்களில் புதிதாக திருமணம் செய்யப்போகும் அந்த ஆண் கெட்டவனாக இருப்பான்.  சில நேரங்களில் அளவுக்கு மீறி நல்லவனாக இருப்பான்!

அவள் பழையவனுடன் சேர்ந்து விடுவதையே படம் பார்க்கும்போது மனம் விரும்பும் வகையில் காட்சியை அமைப்பது இயக்குனர், கதைஞரின் சாமர்த்தியம்.  ஆனால் அப்புறம் இந்தக் கேள்வி தங்கி விடுகிறது.

பெண் என்றால் அவ்வளவு மட்டமா?!!   தன்னை ஒதுக்கி விட்டுச் சென்றவனிடம் அவனுக்குத் தேவை என்ற உடன் எல்லாவற்றையும் மறந்து அன்பு என்ற பெயரில் மறுபடி ஒட்டிக்கொள்ள வேண்டுமா?

மாற்றிச் சேர்த்தால் படம் ஓடாது!

ஆமாம், மேலே சொல்லி இருக்கும் கதையை வைத்து உங்களுக்கு எத்தனைப் படங்கள் நினைவுக்கு வருகின்றன?  நான் ஒரு ஹிந்திப் படத்தின் கதையை மனதில் வைத்து எழுதி இருக்கிறேன்.

=========================================================================================

எல்லா சேனல்களிலும் அவ்வப்போது இப்படி நடக்குமோ என்னவோ தெரியாது..   நான் அடிக்கடி பார்ப்பது ராஜ் டீவியில்தான்!  அப்படி ஒரு அலப்பறை நடந்தபோது பகிர்ந்ததும், வந்த பதில்களும்!



=============================================================================================


கவிதைக்கு இந்தமுறை என் கவிதை இல்லாமல் வேறு இரண்டு நண்பர்களின் கவிதைகள்.  ஆனால் இதிலும் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன்.  

இதேபோல ஒருமுறை பேஸ்புக்கில் "நீருக்குத் தெரியுமா நிலவின் பிம்பம்?" என்று எழுதி, அடுத்தடுத்த வரிகளைத் தொடர முடியுமா என்று கேட்டபோது பெயர் சொல்ல விருப்பமில்லை'' பக்கங்களை நடத்திக்கொண்டிருந்த ஸ்ரீனிவாசகோபாலன் வெங்கடேசன் ஒரு கவிதை எழுதி இருந்தார்.   அது கீழே...




வெண்பா (பெண்)வேங்கை மாலா மாதவன் எழுதிய கவிதை...


=====================================================================================

பொக்கிஷம் : 

ரொம்பப் பழசா இல்லாமல் கொஞ்சம் சமீபத்துப் பொக்கிஷம்!  விகடனில் ரூபி என்றொருவர் படங்கள் வரைந்து ஜோக்ஸ் போட்டுக் கொண்டிருந்தார்.  அவர் படங்களின் பாணியைப் பார்க்கும்போது எனக்கு மதன் ஞாபகம் வரும்.  எல்லோருக்கும் ஒரு டூப் இருப்பது போல இவர் மதனின் டூப் என்று நினைத்துக் கொள்வேன்...

அவர் வரைந்த நகைச்சுவைத் துணுக்குகள் கொஞ்சம் இந்த வாரம் எடுத்துப் போடுகிறேன்.    கடைசியில் ஒரு மதன் ஜோக்கும்!

உங்க மனைவி எப்படி?!  நீங்க ரொம்ப ஒழுங்கோ!


அதானே!


ஐடியா மன்னர் அய்யாசாமி!


கதவுக்குப் பின்னாலிருந்து எட்டிப்பார்ப்பவர் முகபாவம்!


சட்டென வித்தியாசமே தெரியவில்லை இல்லை?  இது மதன் ஜோக்!

112 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் அனைவருக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை... வாங்க.

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      பல திரைப்படங்கள் வந்திருக்கும். நீங்கள் சொன்ன
      இந்திப்படம் எனக்கு நினைவுக்கு வரவில்லை ஸ்ரீராம்.

      பழைய விகடன் கதை நினைவுக்கு வருகிறது. அதில் கதை நாயகியை விட்டு விட்டுப்
      போன கணவன்,
      15 வருடங்கள் கழித்து வருவார்.
      அவரது இரண்டாவது மனைவி ,குழந்தையைப் பிரவசித்துவிட்டு
      இறந்து விடுவாள்.
      இந்த சீதையை தன் வீட்டுக்கு அழைத்துப் போக வந்திருப்பார்.
      வீட்டில் உள்ளவர்கள் அவளைப் போக வேண்டாம் என்று தடுப்பார்கள்.

      அவருடன் வந்திருக்கும் 14 வயதான மகன் அம்மா! என்று
      அழைத்தததும்.சீதை உடனே கூடத்துக்கு வந்து விடுவாள்.

      நான் வந்து உங்களைப் பார்த்துக்கிறேன் என்பாள்.
      அவருக்குத் தான் எத்தனை தைரியம் என்று அந்தப்
      பதின்ம வயதில் கோபம் வந்தது நினைவுக்கு வருகிறது:(

      நீக்கு
    3. காலை வணக்கம் வல்லிம்மா...   வாங்க..

      குறிப்பாய் நான் எடுத்தாண்டிருக்கும் இந்திப்படம் என்ன என்று யாரும் சொல்லா விடில் கடைசியில் சொல்கிறேன்.

      நீங்கள் சொல்லி இருக்கும் விகடன் கதை அந்நாளில் எறும்பான்மையோரால் பாராட்டப்பட்டிருக்கும்...  தாய்மை அது இது என்று கொண்டாடப்பட்டிருக்கும்.

      நீக்கு
  4. அதானே..

    பழசாவா வீடு கட்டுவாங்க!...

    பதிலளிநீக்கு
  5. இன்றைக்கு கதம்பத்தில் என்னை மிகவும் கவர்ந்தது ஶ்ரீநிவாசகோபாலனின் கவிதை. மிக அருமை.

    பாதிப்பாதி படமெல்லாம் போடறாங்களா என்ன? பாதிப் படம் வரை எமோஷன் பத்தலை என்பதால் இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதவன் கவிதை...     அவரும் பார்த்திருப்பாரா?   க்ரூப்பில் கேட்கவேண்டும்!

      ராஜ் டீவியில் ஒரே டேப்பில் அழித்து அழித்து படம் ஏற்றும்  குழப்பம் என்று நான் நினைத்துக்கொள்வேன்!

      நீக்கு
    2. எனக்கென்னவோ, நகைச்சுவை எல்லாம், பாண்டிச்சேரி டிவிடி (25 ரூ) வாங்கிட்டு வந்து அதை ஓட்ட விட்டுடறாங்களோன்னு சந்தேகம். படங்களும் அப்படித்தானோ என்னவோ

      நீக்கு
    3. அந்த டிவிடிக்களே ராஜ் டிவி தயாரிப்பாகத்தான் இருக்கும் நெல்லை!!

      நீக்கு
    4. ராஜ் டிவியின் (அதாவது உரிமையாளரின்) விஷன் மிகவும் மெச்சத்தக்கது. மாறன் பூமாலை வீடியோ கேஸட் (பத்திரிகை) வெளியிடுவதற்கு முன்பாகவே ராஜ் டிவி பார்க்கும் தயாரிப்பாளர்களிடமெல்லாம் அவங்க படத்தின் தொலைக்காட்சி உரிமையை 5000, 10000 (அல்லது 2,000) கொடுத்து வாங்கிக்கிட்டாங்க. பிறகுதான் தொலைக்காட்சி உரிமையில் உள்ள காசை மற்றவர்கள் புரிந்துகொண்டு கோடிகளுக்கு வந்து நிற்கிறது.

      நீக்கு
  6. நகைச்சுவைத் துணுக்குகள் அருமை...

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். சகஜநிலைமைக்கு உலகமே திரும்ப அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய ப்ரார்தனைகளுடன் வந்திருக்கும் கீதா அக்காவுக்கு நல்வரவு, வணக்கம், நன்றி.

      நீக்கு
  8. மேலே உள்ள திரைப்படக் கதையில் எனக்கு முதலில் நினைவில் வந்தது கல்யாணப்பரிசு, பின்னர் அந்தப் பெண்ணை மணக்கப் போகிறவன் ரொம்பவே நல்லவன் என்றதும் நினைவில் வந்தது அந்த ஏழு நாட்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாணப்பரிசு, அந்த 7 நாட்கள் இரண்டுமே கிட்டத்தட்ட இந்தப் படத்தின் கதையை நெருங்குகின்றன.   இந்த பொதுவான கதையை ஆங்காங்கே மாற்றி எடுக்கப்பட்டிருக்கும் கதைகளில் அவையும் வரலாம்.

      நீக்கு
  9. இதிலே குழந்தை வேறே இருக்கா? அப்போ "முந்தானை முடிச்சு" கொஞ்சம் சரியாவருமானு யோசிச்சா ம்ஹூம் சரியா வராது, கிராமத்துக்கு வந்தப்புறமாத் தானே அந்தப்பெண்ணுடன் கதாநாயகனுக்குப் பழக்கம் ஆகும் அதிலே! இல்லையோ?

    பதிலளிநீக்கு
  10. சரி, மத்தவங்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கணும். நம்மைவிடக் கில்"லேடி" எல்லாம் இருக்காங்க. அவங்கல்லாம் வந்து பதில் சொல்லட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலா மாதவன் அவர்களின் அழகு வெண்பாவும்,
      திரு மாதவன் ஸ்ரீனிவாச கோபாலன்
      அவர்களின் அருமை வரிகளும் அமிர்தம்.
      மதனின் ஜோக்கும், ரூபியின் படம் மற்றும் வரிகளும்
      உண்மையில் நகைச்சுவை அள்ளித் தெறிக்கின்றன.

      நீக்கு
    2. அன்பு கீதாமா, எனக்கும் அந்த ஏழு நாட்கள் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    3. சொல்லட்டும்...   சொல்லட்டும்..  நன்றி கீதா அக்கா.

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா...   மாலா மாதவன் வெண்பா புலிதான்.  பேஸ்புக்கில் பார்த்திருக்கிறோம்.  ''கேஸவின் ஓவியங்களுக்கு வெண்பா எழுதுவார்.  மாதவனும் சமீப காலங்களில் வெண்பா எழுத ஆரம்பித்திருந்தார்.  எனக்கு அதெல்லாம் வருவதில்லை!  நான் எப்போதுமே மடக்கி மடக்கிப் போட்டு எழுதும் கவிதை''கள்தான்!!

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கமான இனிய ப்ரார்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்காவுக்கு வணக்கம், நல்வரவு, நன்றி,.

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  13. நான் திரைப்படங்கள் எல்லாம் பார்ப்பதில்லை ஜி

    நகைப்புகள் அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் கதையை ஆரம்பித்த விதத்தில் குஷி நினைவுக்கு வந்தது. பின்னர் பிரஷாந்த்,சிம்ரன்,லைலா நடித்திருந்த ஒரு படம்(பார்த்தேன் ரசித்தேன்?), அவளுக்கென்று ஒர் மனம், அமலா,மோகன்(என்று நினைவு) நடித்திருந்த ஒரு படம், ஹிந்தியில் ஹேமமாலினி,ஷம்மி கபூர் நடித்திருந்த படம்(அந்தாஸ்?) எல்லாம் நினைவுக்கு. வந்தன. ஆனால் எதுவுமே முழுமையாக நீங்கள்கொடுத்திருக்கும் க்ளூவோடு பொருந்தவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிட்டிருக்கும். எல்லாப் படங்களிலும் இந்தக் கதையின் சாயல் துளியாவது சேர்ந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.  கீதா அக்கா உங்களைத்தான் கில்லாடி வந்து சொல்லக்கூடும் என்று சொல்லி இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.  பார்ப்போம்.  சரியான படம் எது என்று பின்னர் சொல்கிறேன்.

      நீக்கு
  15. மாலா மாதவனின் கவிதை என்னைக் கவர்ந்தது. ஜோக்குகள் அபாரம்!

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் சொன்ன கதை, பாலச்சந்தர் அவர்களின் பல + பல திரைப்படங்களில் உள்ளன... கூடவே விவேக் ஒரு படத்தில் சொல்லும் நகைச்சுவையும் ஞாபகம் வந்தது... மெகா சீரியல் பற்றிய நகைச்சுவை... படத்தின் பெயர் ஞாபகம் இல்லை...

    ஒரு காலத்தில் ராஜ் டீவி பார்த்ததுண்டு... காலை 10 மணிக்கு விளம்பரம் ஆரம்பித்தால், முடிப்பதற்கு மதியத்திற்கு மேல் ஆகி விடும்... நடுநடுவே திரைப்படம் பார்க்கலாம்...!

    கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலச்சந்தர் தனது கதாநாயகிகளை சந்தோஷமாக இருக்க விட்டதே இல்லை DD !

      ராஜ் டிவி மட்டுமல்ல நிறைய சேனல்கள் அப்படித்தானே?

      நீக்கு
    2. //பாலச்சந்தர் தனது கதாநாயகிகளை// - பிற்காலத்தில் தனது தயாரிப்பாளர்களையும்..... ஹா ஹா

      நீக்கு
    3. ஹா ஹாஹா ஹா

      நேற்று  துர்வாசர் கேபி பற்றி எழுதி இருந்த ஒரு பழைய துக்ளக் கட்டுரை ஒன்று படித்துக் கொண்டிருந்தேன்.

      நீக்கு
    4. நான் துர்வாசரைப் பற்ரி பக்கம் பக்கமாய் பூவனத்தில் எழுதியிருந்தேன். ஸ்ரீராம் மட்டுமே தெரிந்து கொண்டதாய் நினைவு. துக்ளக் தாண்டிய பெருமை அவரது. அவரது 'எஸ்தர்' ஒன்று போதும்.

      நீக்கு
    5. Link கொடுங்கள் ஜீவி் ஸார்... நினைவில்லை. மறுபடி படித்து விடலாம்.

      நீக்கு
    6. எனது 'மறக்கமுடியாத தமிழ் எழுத்துலகம்' புத்தக வெளியீட்டுக்குப் பின் புத்தக விற்பனைக்கு ஆதரவாக தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகளை சேமிப்பில் (draft) வைத்திருக்கிறேன்.

      எழுத்தாளர் வண்ணநிலவன் தான் துர்வாசர். இயற்பெயர்: இராமச்சந்திரன். வண்ணநிலவன் என்று கூகுளிட்டுப் பாருங்கள். அவரின் படைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

      நீக்கு
    7. ஆம். தான் வண்ணதாசனா, வண்ணநிலவனா என்று குழம்பிய நினைவு. ஆனால் வண்ணதாசனாக அவர் எழுதுவது ஒரு ரகம். அவர் கவிதை முகம் ஒரு ரகம். துர்வாசர் முற்றிலும் வேறு முகம்.

      நீக்கு
    8. ?/????
      வண்ணநிலவன் தான் துர்வாசர். !!!

      நீக்கு
    9. ஆமாம், ஆமாம்.... மறுபடி குழம்பி விட்டேன்!

      நீக்கு
  17. திருமதி மாலா மாதவனுடன் இணைந்து வெண்பா எழுதி இருப்பவர் மாதவனின் அண்ணன் வெங்கடேசன் ஸ்ரீனிவாசகோபாலன்.  பின்னூட்டங்களில் மாற்றி பதில் சொல்லி இருக்கிறேன்.  பெயர் சொல்ல விருப்பமில்லை என்ற பெயரிலேயே தளமும் வைத்திருக்கிறார்.  அதே பெயரில் எழுதுவார். (பெ சொ வி)
    கவனப்படுத்தியதற்கு நன்றி கேஜிஜி.

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் சொன்ன கதையில் சில மாறுதல்களோடு நிறைய திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கு. லிஸ்ட் போட்டால் பதிவை விட நீளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பாதிப்படங்களில் இதன் பாதிப்பு இருக்குமோ என்னவோ...

      நீக்கு
  19. நீங்களும் என்ன நம்ம ...தமர் மாதிரி?.. ஹிந்தி நஹி மாலும் ஹை. படித்துக் கொண்டே வரும் பொழுது எனக்கு கல்யாண(ப்) பரிசு தான் ஞாபகம் வந்தது.. அதைத் தொடர்ந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன் ஸ்ரீதரும். அவரது எட்டெழுத்து தவிர்த்தலும். ஸ்ரீதரைத் தொட்டு சித்ராலயா. சித்ராலயா கோபு.. கோபுவைத் தொடர்ந்து 'கதவு' கமலா சடகோபன். இவர்களைத் தொடர்ந்து காலச்சக்கரம் நரசிம்மா -- என்று எதைத் தொட்டாலும் இப்படி ஏன் ஒரு நீண்ட வரிசை நினைவுகள் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றைத்தொட்டு ஒன்று என்றால் சங்கிலி எங்கோ நீண்டுவிடும் ஜீவி ஸார். திரைப்படங்களுக்கு மொழி அவசியமில்லை. எல்லாம் பொது!

      நீக்கு
    2. கதவு நாவலிலும் இப்படித் தான்! ஹீரோ மாதவனை அவன் மாமா பெண்ணின் நெருங்கிய தோழி காதலிப்பாள். கல்யாணம் செய்து கொள்ளவும் அப்பாவை விட்டுப் பேசச் சொல்லுவாள். ஆனால் மாதவனோ தன் மாமா பெண்ணைத் தான் தான் காதலிப்பதாகவும், கல்யாணமும் செய்து கொள்ளப் போவதாய்ச் சொல்வான். ஆனால் முடிவு இரு தரப்பிலும் சுபம்.

      நீக்கு
  20. நீங்கள் எவ்வளவு தான் மெனக்கெட்டு எழுதியிருந்தாலும் திரைப்படம் என்று வாய்க்கால் பிரித்து விட்டதினால் யாரும் அந்த 'பெண் என்றால் அவ்வளவு மட்டுமா?' சப்ஜெக்ட்டுக்கு போக மாட்டார்கள். ஆண்கள், பெண்களாய் கூடு விட்டுக் கூடு பாய்ந்தாலும் அதே தான். தம் பெருமை தாம் நினைத்துப் பார்க்காத உணர்வாய் கால இடிபாடுகளில் எல்லாமே நொருங்கிப் போய் விட்டது. 'சொல்லடி, சிவசக்தி' என்று பராசக்திக்குத் தான் கோரிக்கை வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜீவி ஸார்.. வல்லிம்மா பதில் சொல்லி இருக்காங்க. விகடன் கதையைக் குறிப்பிட்டு கோபத்தை வெளிப்படுத்தி இருக்காங்க்

      நீக்கு
    2. நீங்கள் சொன்னதும் இப்பொழுது தான் பார்த்தேன்.

      நீக்கு
  21. திரு. வெங்கடேசனுடன் அறிமுகம் கொள்ள வேண்டும். அவரது 'தெரியுமா' தொடுப்புகள் (Link) அற்புதம்.

    அந்த 'தேருக்குத் தெரியுமா' வரி வந்த பொழுது தான் பொறி தட்டியது. திருவிழா மினுமினுப்புகளில் தேரும் ஒன்றுதானே?.. தேர் ஒரு பகுதி என்றால் திருவிழா முழுமை.

    முழுமையில் அடக்கம் கொண்ட தனித்தனிகள் என்றால் இந்திய ஆன்மிக அலசல்கள் எங்கேயோ இட்டுச் செல்லும்.
    முழுமையில் அடக்கம் கொண்ட துகள்கள் என்றால் விஞ்ஞான ஞானமும் கைகொடுக்கும்.

    வாரத்தின் ஏழு நாட்களும் வெவ்வேறாகத் தோற்றம் கொண்ட பகுதிகள் என்றாலும் எங்கள் பிளாக் முழுமை என்கிற
    மாதிரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ரசனை.

      கடைசி வரி... சொல்ல வரும் கருத்து புரியவில்லை.

      நீக்கு
    2. 'செவ்வாய் கதைப்பகுதிக்குத் தெரியுமா எங்கள் பிளாக் அருமை?' என்கிற மாதிரி.

      நீக்கு
  22. KKHH - Kuch Kuch Hota Hai படம் தான் நீங்கள் சொல்லி இருக்கும் ஹிந்தி படம். சரியா ஸ்ரீராம்?

    இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். நிஜத்தில் நிறைய பிரச்சனைகள் உருவாகக்கூடும்.

    சுவையான கதம்பம். பெசொவி என எழுதிவிட்டு பின்னூட்டங்களில் மாதவன் என எழுதி இருக்கிறீர்களே என நினைத்தேன் - நீங்களே சொல்லி விட்டீர்கள்.

    மதன் போலவே நகைச்சுவை. நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கை தட்டுகிறேன். சரியாகச் சொல்லி விட்டீர்கள் வெங்கட்.

      நிஜத்தில் இப்படி ஒரு சூழ்நிலையே ஏற்படாதோ என்னவோ...

      கேஜிஜி வாட்ஸாப்பில் சொன்னார்!

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  23. 'நீருக்குத் தெரியுமா நிலவின் பிம்பம்' என்று கவிதை ஆரம்பம் கொள்ள வேண்டுமே அன்றி வேறு வித கட்டாயங்களூம் இல்லை என்று நினைக்கிறேன்.

    அப்படியாக இருப்பின், கடைசி வரியையாவது யாராவது தெரியுமே என்று தொடர்ந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்குமே என்று தோன்றியது.

    'கைக்குழந்தைக்கும் தெரியுமே தாயின் முகம்' என்கிற மாதிரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... அந்த வரியின் தொடர்ச்சியாக கேள்விகள்...

      பதிலாகச் சொல்லப்படும் உங்கள் மாதிரி வரி நன்றாய் இருக்கிறது. ஆனால் எவ்வளவு கோர்க்க முடியும்?

      நீக்கு
    2. வெண்பா என்றால் மூன்று வரி தெரியுமா என்றால் நாலாவது வரி தெரியுமே என்று.

      மற்ற கவிதைகளில் கடைசி வரி மட்டும் தெரியுமே என்று.

      பல வரிகள் எதிர்; கடைசி வரி மட்டும் நேர்

      நீக்கு
    3. இது வெண்பாவின் இலக்கணமா? ஹைக்கூவின் இலக்கணமா?

      நீக்கு
    4. இலக்கணமா?...
      நயமாகத் தெரியம் ஒரு முயற்சி. அவ்வளவு தான்.
      கடைசி வரி ஒரு திடுக்.
      இல்லை இல்லை என்று சொல்லிக்கொண்டே வந்து ஒரு இருக்கு!.. அழகா இருக்கும்.

      நீக்கு
  24. ஜோக்குகளில் வசனப் பகுதியை விட எப்போதும் அதற்காகப் போடப்படும் படங்கள் ஜோராக இருக்கும்.

    தலைப்பகுதி, மூக்கு, கண், புருவம், காது, கை எல்லாமுமே நம்பவே முடியாத கோடு தீற்றல்கள் தான். இப்படியும் அப்படியும் இழுக்கும் இரண்டே கோடுகள் பிரம்மனின் படைப்புகள் போலவே தோற்றம் கொள்ளும் அழகுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நீங்க(ளும்)ள் எப்போதுமே துணுக்குகளுக்குப் போடப்படும் படங்களை ரசிப்பீர்கள். சிறு கோடுகளில் பல பாவம் காட்ட வைக்கும் திறமை.

      நீக்கு
    2. மதன், ரூபி, வாணி, கோபுலு - என திறமைமிகு ஜோக் சித்திரக்காரர்கள். இவர்களது படமில்லை என்றால் ஜோக்கே சப்பென்று ஆகிவிடும். படம்தான் முதலில் சிரிப்பையே தூண்டுகிறது! ஆனால் இத்தகைய கலைஞர்களுக்குக் கிடைத்திருக்கவேண்டிய அங்கீகாரத்தை, மரியாதையைத் தமிழுலகம் தரவில்லை .

      நீக்கு
    3. உண்மை ஏகாந்தன் ஸார். அதேபோல நான் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு படம் போட்டு மட்டுமே பார்த் வாணி வரைந்த ஒரு ஓவியம் என்னை அசத்தியது.

      நீக்கு
  25. ஜோக்ஸ் எல்லாமே ரசனை. ஐடியா மன்னர் ஹா....ஹா..

    பதிலளிநீக்கு
  26. வெங்கட் சொல்லிவிட்டார் அந்த இந்திபடத்தை.KKHH - Kuch Kuch Hota Hai முன்பு அடிக்கடி sony டிவியில் அந்த படம் வைத்துக் கொண்டே இருப்பார்கள். இப்போதும் வைப்பார்கள்.
    ஏர்டெல் டிஷ் போட்டதில் sony டிவி பார்க்க முடியவில்லை.

    வல்லி அக்கா சொன்ன கதை நானும் படித்து இருக்கிறேன். அந்த சிறுவனின் கவலைதோய்ந்த முகமும், அதில் தாய் வருவாளா என்ற ஏக்கமும் இருப்பது போல் வரைந்த ஓவியர் திறமையை பாராட்டிய நினைவு இருக்கிறது. வல்லி அக்கா முகநூலில் பகிர்ந்து இருந்தார்கள் இந்த கதையை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...   அந்தக் கதையை நீங்களும் படித்திருக்கிறீர்களா?  நான் படித்ததில்லை.  ஓவியம் உட்பட நினைவில் வைத்திருக்கிறீர்கள்.  ஆமாம் அந்தப் படம் எது என்று வெங்கட் சொல்லி விட்டார்.  ஆனால் எனக்கு அந்தப் படம் கொஞ்சம் பிடிக்கும்.  அந்த டைட்டில் சாங் ரொம்பவே பிடிக்கும்!

      நீக்கு
  27. பதிபக்திபாசமலர் கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது.

    கவிதைகள் நன்றாக இருக்கிறது.ஶ்ரீநிவாசகோபாலன் அவர்களின் கவிதையில் வரும் கடைசி வரிகள் அருமை..
    சிரிப்புகள் சிரிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  28. //பெண் என்றால் அவ்வளவு மட்டமா?!! தன்னை ஒதுக்கி விட்டுச் சென்றவனிடம் அவனுக்குத் தேவை என்ற உடன் எல்லாவற்றையும் மறந்து அன்பு என்ற பெயரில் மறுபடி ஒட்டிக்கொள்ள வேண்டுமா?

    மாற்றிச் சேர்த்தால் படம் ஓடாது!//

    ஹாஹா ஆனா சீரியலா ஓடுமே :) தன்னை நிராகரித்த ஹீரோவை எப்படியாச்சும் கல்யாணம் பண்ண முயல்வங்க ஆன்டி ஹீரோயின்ஸ் .
    சேனல் அலப்பறை அவ்வ்வ் இப்டிலாமா நடக்கும் .இரண்டு கவிதைகளும் அருமை ..டாப்  வெங்கடேச  ஸ்ரீனிவாசகோபாலன்  அவர்கள் எழுதிய கவிதை ஐடியா மன்னார் முன்னும் பின்னும் தானே  குஷன் வச்சிருக்கார் சைடால இடிக்க மாட்டாங்களா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...   சீரியல் நான் பார்ப்பதில்லை.  அபத்தத்தின் உச்சங்கள் சீரியல்கள்  என்று தோன்றும்.
      ஐடியா மன்னர் சைடில் இடித்தால் முழங்கையால்  இடித்து நிறுத்தி விடுவார் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  29. நீங்கள் இங்கு பாட்டுப் போட்டதனால தேடிப் படம் பார்த்தேன், பெயர் நினைவுக்கு வருகுதில்லை.. இருவர் காதலிப்பர், பின்னர் ஆண் ஜெயிலுக்குப் போய் விடுவார், ஆயுள் தண்டனை என முடிவாகும், அதனால பெண்ணுக்கு இன்னொரு இடத்தில் திருமணம் முடிஞ்சுவிடும்.. பின்னர் இவர் நன்னடத்தை என வெளியில் வருவார், இருவரும் மீண்டும் சேர்ந்து ஓட முயற்சிப்பர், அப்போ அந்தப் பெண்ணின் கணவரே பணம் நகை எனக் கொடுப்பார், இதைக் கொண்டுபோய் நல்லா இரு என, அதைப் பார்த்தவுடன் திரும்பவும் மனம் மாறி காதலனை விட்டுவிட்டு கணவரோடு வாழ்வார் அப்பெண்... இக் கதை மட்டுமே நினைவுக்கு வந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... நீங்கள் சொல்லி இருக்கும் கதை என்ன படம் என்று நினைவில்லை.   பாடல் என்ன பகிர்ந்திருக்கிறேன்?  பார்க்க வேண்டும்.

      நீக்கு
    2. விடுகதை ஒரு தொடர் கதை படமா அதிரா சொல்வது ? நீங்கள் அதிலிருந்து போட்ட பாடலுக்கு சினிமாவை தேடிப் பாத்தேன் என்று அதிரா சொன்ன நினைவு.

      நீக்கு
    3. இல்லை என்றே நினைக்கிறேன்.

      அதே சமயல் அந்தப் படத்தில் கங்கை அமரன் இசையில் இரண்டு அருமையான பாடல்கள் உண்டு. வெள்ளி வீடியோவில் பகிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    4. நான் என் வீடியோக் ஹிஸ்றி எல்லாம் தேடிக்கொண்டிருக்கிறேன், கிடைச்சதும் சொல்கிறேன், பழைய பிளக் அண்ட் வைட் படம்.. நான் நினைக்கிறேன் ஜனவரி பெப்ரவரிக்காலமாக இருக்கும்[இங்கு பாட்டுப் போட்டது]... கோமதி அக்கா, ஸ்ரீராம்..

      இல்லை அந்தப் பெயர் இல்லை கோமதி அக்கா..

      நீக்கு
    5. ஆஆஆஆ கோமதி அக்கா, ஸ்ரீராம், பானு அக்கா... நான் கண்டு பிடிச்சிட்டேன்.. இந்தப் படமோ இதை எப்படி மறந்தோம் என நினைப்பீங்கள் ஹா ஹா ஹா அது கமல் அங்கிள் நடிச்ச சூப்பர்ஹிட் படம்.. “ஒரு ஊதாப்பூக் கண் சிமிட்டுகிறது”..

      நீக்கு
    6. கண்டு பிடித்து விட்டீர்களா அதிரா மகிழ்ச்சி.

      நீக்கு
  30. //பெண் என்றால் அவ்வளவு மட்டமா?!! தன்னை ஒதுக்கி விட்டுச் சென்றவனிடம் அவனுக்குத் தேவை என்ற உடன் எல்லாவற்றையும் மறந்து அன்பு என்ற பெயரில் மறுபடி ஒட்டிக்கொள்ள வேண்டுமா?//

    இப்படி இடங்களில் அப்படி நினைக்கவோ, வெளியே இருக்கும் நாம் தீர்ப்புச் சொல்லவோ முடியாது, அது அந்த இருவரின் மன நிலையையும், அவர்கள் உள்ளிருக்கும் மிக ஆளமான அன்பையும் பொறுத்தே முடிவு அமையும்.

    காதல் என்றால் , கடசி வரை கைவிடக் கூடாது, ஆனால் இருவருக்குள்ளும் கருத்து வேற்றுமை, சண்டை கூடிவிட்டதெனில், பின்னரும் காதல் எனும் பெயரில் சேர்ந்து வாழாமல் பிரிதல் நன்று..

    ஆனா இருவருக்குள்ளும் பயங்கர அன்பு பாசம் இருந்து, கோழைபோல அப்பா அம்மா சொல்லுக்கு மறுப்புச் சொல்ல முடியாமல் இன்னொருவருக்கு கழுத்தை நீட்டினால் அது ஒருவகையில் தப்புத்தான், அப்படித்தைரியம் இல்லாதோர் காதலில் இறங்ககூடாது.. ஆனாலும் சில இடங்களில் கொலை கூடப் பண்ணும் பெற்றோர் இருக்கையில் என்ன பண்ணுவது என, இன்னொரு மணம் முடிச்சால்.. பின்பு இப்படி ஆகிட்டால் மனம் சேரச்சொல்லித்தான் துடிக்கும்..

    அந்நேரம் அப்பெண்ணுக்கு திருமணம் ஆகாமையால இக்கதையில் காதலன் லக்கி.

    இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு இதே கதை நிகழ்ந்திருக்கு ஜேர்மனியில்... ஏதோ காரணத்தால் காதலர்கள் பிரிஞ்சு, ஆண் திருமணமாகி ஒரு குழந்தை, மனைவி இறந்திட்டார்..

    காதலி தனக்கு திருமணமே வேண்டாம் என இருந்தாவாம்.. இருவருக்கும் தொடர்பு அற்றுப்போயிருந்தவேளை.. பின்னர் தற்செயலாக ஒருவரின் திருமண வீட்டில் இருவரும் சந்திக்க நேர்ந்து, கதைத்து, கதையை அறிஞ்சு, மீண்டும் காதலன் காதலி ஒன்று சேர்ந்தார்களாம்..

    இதுதான் விதியோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காதல் என்றால் , கடசி வரை கைவிடக் கூடாது, ஆனால் இருவருக்குள்ளும் கருத்து வேற்றுமை, சண்டை கூடிவிட்டதெனில், பின்னரும் காதல் எனும் பெயரில் சேர்ந்து வாழாமல் பிரிதல் நன்று..//
      well said pinju

      நீக்கு
    2. நீங்கள் சொல்லி இருப்பது ஒரு விதத்தில் சரி.  அவரவரின் மனா விருப்பம் இது.  எனினும் பெண் என்பவளை அன்பைக்காட்டி சுலபமாக ஏமாற்ற முடிகிறதோ என்று தோன்றுகிறது!
      அந்த இலங்கைக்கு காதலர்கள் கதையில் அந்தப்பெண் ஏன் மீண்டும் காதலனை மன்னித்து இணைந்தாள்?  மனதை அறுக்கும் கேள்வி!

      நீக்கு
    3. /அந்நேரம் அப்பெண்ணுக்கு திருமணம் ஆகாமையால இக்கதையில் காதலன் லக்கி. //
      அதைச் சொல்லுங்க...

      நீக்கு
    4. அப்படித்தைரியம் இல்லாதோர் காதலில் இறங்ககூடாது..//

      காதலில் யார் ’இறங்கு’கிறார்கள்! அது ஒரு கண்ணுக்குத் தெரியா பள்ளம். . தொபுக்கடீர் என்று உள்ளே விழுந்துவிடுகிறார்கள்.
      இப்படி விளக்கத் தெரியாமல்தான் ’falling in love' என்கிறார்கள் ஆங்கிலத்தில்!

      நீக்கு
    5. // அந்தப்பெண் ஏன் மீண்டும் காதலனை மன்னித்து இணைந்தாள்? மனதை அறுக்கும் கேள்வி!//

      எனக்கு யாரோ மூலமாக வந்த கதை இது ஸ்ரீராம், அதனால சொல்லத்தெரியவில்லை, ஆனால் அவ காதலனை மறக்க முடியாமல்தான், திருமணம் வேண்டாம் என இருந்தாவாம்.. அவ்ளோ அன்பென்பதால மணம் முடிச்சிருப்பா, இவரை இந்நிலையில் விட்டுவிட்டு இன்னொருவரை முடிக்க மனம் வருமோ? வராதெல்லோ.. இன்னொன்று நாம் நிஜமாக ஒன்றை மனதின் ஆளத்தில் வைத்து விரும்பினால், அது நமக்குக் கிடைக்கும் என்கின்றனர்... அது பொருளாயினும்..
      ==================

      ஹா ஹா ஹா ஏ அண்ணன் .. நல்லா மொழிபெயர்க்கிறீங்க...:), ......breathing in love எனவும் சொல்கின்றனரே:))

      https://www.youtube.com/watch?time_continue=96&v=Vzo-EL_62fQ&feature=emb_logo

      நீக்கு
  31. இரண்டு கவிதைகளும் மிக அழகு...

    பொக்கிசம் ஓகே.. கடசி சிரிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. ஏனோ தெரியவில்லை படிக்கும்போது நெஞ்சில்ஓர் ஆலயம் படம் நினைவுக்கு வந்தது ஆனால்கதை நிகழ்வுகள் வேறு மாதிரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெஞ்சில் ஓர் ஆலயம்...    இதற்கு  ஒத்தே வராதே ஜி எம் பி ஸார்?!

      நீக்கு
  33. //பெண் என்றால் அவ்வளவு மட்டமா?!! தன்னை ஒதுக்கி விட்டுச் சென்றவனிடம் அவனுக்குத் தேவை என்ற உடன் எல்லாவற்றையும் மறந்து அன்பு என்ற பெயரில் மறுபடி ஒட்டிக்கொள்ள வேண்டுமா?

    மாற்றிச் சேர்த்தால் படம் ஓடாது!//

    முதலில் சொன்னது சீரியல்ஸ் effect :)
    ஏன் ஓடாது ..அந்த குழந்தையை கவனிக்கத்தானே 2 அம திருமணம் .இப்படி செய்யலாம் காதலில் அந்த குழந்தையை எடுத்துட்டு போய் வளர்ப்பதுபோல் end வைக்கணும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையை வைத்து பிளாக்மெயில் செய்வது போல இருக்கிறது.   அந்தக் குழந்தைதான் பாவம்!!

      நீக்கு
  34. அதிரா சொல்லியிருக்கும் படம் கார்த்திக், ரேவதி நடித்த இதயத்தாமரையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை. அது வந்த புதிதில் நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் நினைவில்லை! ஆனால்.. சங்கர் கணேஷ் இசை என்று ஞாபகம். சில பாடல்கள் நன்றாய் இருக்கும்.

      நீக்கு
    2. இல்லை பானு அக்கா, பழைய பிளக் அண்ட் வைட் படம் என்பது மட்டும் நினைவில இருக்குது... எப்படியும் ஹிஸ்றியில் தேடிச் சொல்கிறேன்.

      நீக்கு
  35. இந்த மாதிரி கதைக் களன் நுணுக்கங்கள் அறிந்த்தில்லை..

    கல்யாணப்பரிசு பார்த்திருக்கிறேன்..
    குச் குச் ஹோகயா - பார்த்ததில்லை...

    ஆனாலும்
    ஓரளவுக்கு இப்படியான பின்னணியில் எனது கதை ஒன்று நம்ம ஏரியாவில் வந்திருக்கிறது..

    மண்டபத்தில் யாரும் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டு எழுதியதில்லை அது...

    நான் ... நானே தான் எழுதியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.... ஹா... துரை செல்வராஜு ஸார்.. அப்படி யாரும் சொல்வார்களா?!! கவலைப்படேல்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!