சனி, 23 மே, 2020

பன் பட்டர் ஆப்பிள் ஜூஸ்


அன்பு ஸ்ரீராம்,


கொரோனா ஒழிப்பு யுத்தத்தில், மாதக்கணக்கில் அயராது இயங்கும் நமது டாக்டர்கள், நர்ஸுகளை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. 
என்னதான் செய்வது! 


ம்... அவர்களுக்கு ஒரு பாக்கெட், நெஸ்லே dark சாக்கலேட், பன் (Bun), பட்டர், ஆப்பிள் ஜூஸ் என்று அனுப்புவோமா? கூடவே, ஒரு personalised message : 

“Thank you for all you are doing to keep the community healthy and safe. 
You are the real Heroes,”  என்று சிறு ’நன்றிக்குறிப்பையும்’ உள்ளே போட்டு 
அனுப்புவோம்... ! 

                 


Home quarantine-ல் இப்போது வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கும் பாலிவுட் 
நடிகை ஆலியா பட் (Alia Bhatt), தன் வித்தியாச செயல்பாட்டினால் 
மும்பையின் டாக்டர்கள், நர்ஸுகளை திடுக்கிடவைத்து அசத்திவிட்டார்!




அன்புடன்,

ஏகாந்தன் 

===========================

துபாய் : கொரோனா பாதிப்புகளால் சிக்கி உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் போராடுபவர்களுக்கு உதவி செய்ய எமிரேட்ஸ் அறக்கட்டளை சில சமூக அமைப்புகளுடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

சுட்டி : 


===========================

இதுவும் கடந்து போகும். 


ரமா ஸ்ரீநிவாசன்


இதையும் தாண்டி ஓர் உலகம்.

யாவரையும் பயமுறுத்தியும், பாடு படுத்தியும், அலைக்கழித்தும்
கொண்டிருக்கும் இந்த கோவிட்-19 என்னும் உயிர்கொல்லி நோயை
நாம் பார்த்து மருண்டு போகும்போதுதான் அது ஒரு உயிர்க்கொல்லி.
நெஞ்சை நிமிர்த்தி நின்று “வாடா ஒரு கை பார்க்கலாம்” என்று
முன்னேறினோமேயானால் அது வெறும் காய்ச்சல், சளி, மற்றும்
இருமல் பரப்பும் வைரஸ்ஸின் விளையாட்டுதான் என்று புரியும்.

நம் யாவருக்கும் “தெரியாததைப்” பற்றிய ஒரு இனம் புரியாத பயமும்
பீதியும்தான் மேலோங்கி நிற்கின்றது. இதுவும் கடந்து போகும் என்ற
நம்பிக்கையுடன் நடந்தோமேயானால், கண்டிப்பாக கடந்து போயே
போய் விடும்.

ஆம். இது நாம் இதுவரைப் பார்த்திராத நோய். கோடிக் கணக்கான
மக்கள் விட்டில் பூச்சிகள் போல் செத்து மடிந்துக் கொண்டிருக்கும்
நிலை உலகெங்கும் வியாபித்திருக்கின்றது. ஏன் வந்தது, எப்படி வந்தது,
எங்கிருந்து வந்தது என்று எதுவுமே அறியாத நிலைக்கு நாம் தள்ளப்
பட்டிருக்கின்றோம். இதையெல்லாம் விட இது எப்போது போகும்
என்னும் கேள்விதான் நம் யாவர் மனதிலும் நினைவிலும் எழுந்து
கொண்டே இருக்கின்றது.


இந்த குழப்பங்கள் யாவையும் ஒரு புறம் இருக்க, இந்நோயை பற்றிய
அறிவியல் நுனுக்கங்களை பற்றி ஆராயவும், எப்படியாவது அதற்கு
ஒரு எதிர் மருந்து கண்டு பிடிக்கவும் உலக விஞ்ஞானிகளும்,
மருத்துவர்களும் இரவும் பகலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
நமக்கு தெரிந்தது கை மண்ணளவுதான். அவர்களோ அதனுடைய எல்லா
பரிமாணங்களையும் ஆராய்ந்து அறிந்தவர்கள்.

இவ்விஞ்ஞானிகளுக்கும் மருத்துவருக்கும் உறுதுணையாய் செயல் படும் சுகாதாரத் தொழிலாளர்களும், செவிலியர்களும், பரிசோதனைகள் செய்யும் உதவியாளர்களும், மருந்து வழங்கும் பார்மஸிஸ்டுகளும் ஆற்றும் தொண்டானது மகத்தானது.

நம்மைப் போல் அவர்களுக்கும் இல்லங்கள் உண்டு, தாய் தந்தையர்
உண்டு, சகோதர சகோதரிகள் உண்டு, கணவன், மனைவி, குழந்தைகள்,
உறவினர் என்று ஒரு வட்டம் உண்டு. ஆயினும், நாம் நன்றாக வாழ
வேண்டும் என்பதற்காக தங்கள் சுகங்களையும், குடும்பத்தையும் பின்
தள்ளி தங்கள் கடமையை முன் வைத்துப் பணிபுரிகின்றார்கள்.

இவர்களைப் போலவே அரசாங்க சுகாதார ஊழியர்கள், காவலர்,
ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டுனர்கள், நம் வீடுகளில் நமக்கு உதவும்
உதவிப் பணியாளர்கள் மற்றும் இறுதியாக இறுதிப் பயண வாகனத்தை
ஓட்டுபவர்கள் என்று ஆயிரக் கணக்கானோர் நமக்காக நாம் அறியாமல்
வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.


இவர்கள் யாவர்க்கும் ஒரு வீர வணக்கமாகவும், நன்றி வணக்கமாகவும்,
சொல்ல முடியாதக் கோடிக் கணக்கான ஜனங்களின் நன்றியுணர்ச்சியின் குரலாகவும் நான் இக்கட்டுரையை வரைகின்றேன்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் வெளியே செல்லும்போதும் இதை நினைவு
கூர்ந்தாலே தானாக மாஸ்க்கும் கையுறையும் அத்தியாவசியப்
பொருட்களாக மாறும். நாமும் பிழைப்போம். மற்றவரையும் பிழைக்க
விடுவோம்.

ஒவ்வொரு முறையும் நம் பிரதமர் இந்த கோவிட் வீரர்களுக்கு நன்றி
கூறும்படி நம்மை விண்ணப்பித்த போது நாம் எந்த சிந்தனையும்
இல்லாமல் இயந்திரம் போல் இயங்கி வந்தோம். அவர்களுக்காக கை
தட்டினோம்.





அவர்களுக்காக விளக்கேற்றினோம்.








அவர்களுக்காக வணக்கம் தெரிவித்தோம்.

உலகிலேயே சில மனிதர்கள்தான் கடவுளின் சுயப் பிரதிநிதிகளாக
பிறவியெடுக்கின்றார்கள். அவ்வகை மனிதர்களில் விஞ்ஞானிகளும்,
மருத்துவர்களும் சுகாதாரத் தொழிலாளர்களும், செவிலியர்களும்,
பரிசோதனைகள் செய்யும் உதவியாளர்களும், மருந்து வழங்கும்
பார்மஸிஸ்டுகளும் அரசாங்க சுகாதார ஊழியர்களும், காவலர்களும்,
ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டுனர்களும், இறுதிப் பயண வாகனத்தை
ஓட்டுபவர்களும் முதல் இடத்தில் இருக்கின்றனர்.








இவர்கள் யாவரும் இல்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பாருங்கள்.
புரியும் உங்களுக்கு அவர்களின் அமைதியான ஆனால் அழுத்தமான
சேவை.
       
இந்த சூழலில் நாம் கேள்விப் படும் சில நிகழ்ச்சிகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. கோவிட்-19 நோயைக் குணப்படுத்தப் பாடு படும் மருத்துவர்களை அவர்கள் வீடு அமைந்துள்ள காலனிக்குள்ளேயே அனுமதியாமல் குழப்பம் விளைவித்தது மிகவும் துக்ககரமான ஒரு செயல். அந்த மருத்துவர்களுக்கு தெரியாததையா நாம் அறிந்திருக்கின்றோம்? தெரியாததைப் பற்றிய பயத்தில்
தெரிந்தவர்களை ஒதுக்குவது கொடுமை. அதே போல், சுகாதாரத்
தொழிலாளர்களை தரக்குறைவாக பேசுவது, நடத்துவது யாவையும்
கண்டிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். விட்டால் அவர்களும்
தங்கள் குடும்பங்களுடன் நிம்மதியாக பாதுகாப்பாக வீட்டிலேயே
இருக்கத் தயார். அவர்களுடைய பணி நின்று விடும். அவ்வளவுதான்.
           
வீட்டில் வேலை புரியும் பணியாளர்களுக்கும், ஊர்தி ஓட்டுனர்களுக்கும்,
தோட்டக்காரர்களுக்கும் பல முதலாளிகள் இரண்டு மாதமாக ஊதியமே
கொடுக்கவில்லை என்றும் காதுவழி செய்தியாக வருகின்றன. நாம்
மூன்று வேளைகள் வயிறு நிறைய சாப்பிடும் வரம் பெற்றுள்ளோம்.
மகிழ்ச்சி. அதில் சிறு பங்கை அவர்களுடைய ஊதியத்திற்கு
செலவிட்டால், நாம் உயர்வோமேயன்றி தாழ மாட்டோம்.
           
என்று இவ்வுலகம் எப்படி திரும்பும் என்று நாம் அறியோம். இந்த ஒரு
நோயின் தாக்கத்திற்கே இந்த பாடு படுகின்றோம். நாளை என்ன
நடக்கும் என்பதை யார் அறிவார்? கீழே இருந்தவர் மேலே வரலாம்.
மேலே இருந்தவர் கீழே இறங்கலாம். அதுதான் இயற்கையின் சீற்றம்
என்பது. ஆகவே இதை கொண்டு என்றுமே நாம் நல்லது செய்தால்,
நமக்கும் நல்லது வந்து சேரும்.
               
ஏன் இவை யாவையும் கூறுகின்றேன் என்றால் நமக்கு வைத்தியம்
பார்க்கும் தமிழக மருத்துவர்கள் அனைவரும் சேர்ந்து தங்கள்
இடைவிடா பணியின் பளுவின் நடுவில் நாம் சோம்பக் கூடாது,
தளர்ந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் ஒரு அழகான டேன்ஸ்
வீடியோவைத் தயாரித்து வலைத் தளத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள்.
அவர்களின் மேலோங்கிய எண்ணத்தின் சிறப்பை உணருங்கள்.
அந்த டேன்ஸ் வீடியோவிற்கு “Tamil Nadu doctors beat Covid-19 Blues” என்று
பெயரிட்டு கலக்கியுள்ளார்கள். அதை நான் இக்கட்டுரையுடன்
இணைத்திருக்கின்றேன்.




நீங்கள் யாவரும் அதை பார்த்து மகிழ்ந்து விட்டு பின்னர் உங்கள்
நண்பர்களுக்கும் உறவினருக்கும் அனுப்பி மகிழுங்கள். யூட்யூபில் சென்று “like” கொடுத்து அவர்களை உற்சாகப் படுத்துங்கள்.

கோவிட்-19 என்பது ஒரு கொடிய நோய். ஆமோதிக்கின்றேன்.
அதிலிருந்து நம்மை காக்கப் பாடு படும் இம்மருத்துவர்கள் நமக்கு கடவுளின் பிரதிபலிப்பாகத் தெரியட்டும்.

அவ்வீரர்களான இத்தமிழ் நாட்டின் உழைக்கும் மருத்துவர்களுக்கு
உகந்த வீர வணக்கங்களை நான் இக்கட்டுரை வழியே அர்ப்பணிக்க விழைகிறேன்.

திருவள்ளுவரின் குறள்படி,

“நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று”.

நாம் நல்லதையும் நன்றி கூற வேண்டியதையும் கொண்டாடுவோம்.
நன்றல்லாதவைகளை எட்டத் தள்ளி விடுவோம்.

===============================


( கணினியில் பதிவைப் படிப்பவர்களுக்கு வேகமாக பதிவு வருவதற்காகவும், கருத்துரை இடுபவர்களும் வேகமாக தங்கள்  கருத்துரைகளைப் பதிந்து, அதை உடனே கணினி திரையில் காணும்படி, சில மாற்றங்களை செய்துள்ளோம். இதில் எந்த அளவுக்கு எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது என்று கணினி வழியாக எங்கள் ப்ளாக் படிக்கின்ற வாசகர்கள், கருத்துகளைக் கூறவும். ) 
நன்றி 
            =============  &&& ==================

93 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை...  வாங்க..

      நீக்கு
    2. அன்பான காலை வணக்கம். வாங்கோ, வாங்கோ! காபி குடிச்சாச்சா?

      நீக்கு
    3. ஹா ஹா. கேஜிஜி சார்... எங்கள் வீட்டில் காபி தேநீர் பால் குடிக்கும் வழக்கம் இல்லை. நேரா காலைச் சாப்பாடுதான்

      நீக்கு
  2. தள மாறுதல்களைப்பற்றி நேற்று நள்ளிரவில் பின்னூட்டத்தில் தெரிவித்தேன்.

    துணிக்கான நீலக் கலரும், பச்சையும், அதிலும் நீலம் கண்ணிற்கு இரிடேடிங் ஆக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தளம் திறக்க நேரமாவதால், சரி செய்ய டிடி உதவியுடன் கேஜிஜி நேற்று மாலை முழுவதும் போராடி இருக்கிறார்.  பழகிப்போகுமோ என்னவோ...   டிடிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

      நீக்கு
    2. ஆம், உண்மை. DD அவர்களின் மார்ச் 22 ஆம் தேதி பதிவின் அடிப்படையில், அவர் கூறிய வழிமுறைகளில் மாற்றங்களைச் செய்துள்ளேன். இன்னமும் சில மாற்றங்கள் அவர் நேற்று கூறிய ஆலோசனையின் அடிப்படையில் செய்ய உள்ளேன்.

      நீக்கு
    3. முன்பு தளம் திறக்க, ஒவ்வொரு பின்னேட்டத்துக்கும் திரும்ப வெளியிட்டு தளம் திறக்க என்று ரொம்பவே படுத்தியது. இப்போ ரொம்ப ஸ்மூத். நன்றி விரைவில் சரி செய்தமைக்கு.

      நான் நீலம் என்று சொன்னது எழுத்துகள் அல்ல. தளம் திறக்கும்போதான பேக்ரவுன்ட் சொட்டு நீலம் கலர்

      நீக்கு
  3. இன்றைய செய்திகளும், கட்டுரையும் நமக்காகப் பாடுபடும் மருத்துவ, களப் பணியாளர்களைப் பாராட்டும் விதமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி.

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்உண்டீம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகர்க்கு

    என்பது இன்றைக்கன பொருத்தமான குறளாக இருக்கும்.

    வாழ்க அவர்கள் அனைவரும். தினம் நாம் உண்ணும்போது நினைக்கவேண்டிய விவசாயி போல, கஷ்டமான தருணங்களில் கட்டுரையில் குறிப்பிட்டவர்களின் பணி அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். லோகோ சமஸ்தோ சுகினோ பவந்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா..     வணக்கம்.  அனைவரும் இனிதாக வாழ சேர்ந்து பிரார்திப்போம். 

      உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
    2. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

      உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்று போல் எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீதாசாம்பசிவம் , வாழ்க வளமுடன்

      நீக்கு
  5. நேற்றுப் பார்த்த வடிவத்தை விட இன்றைய வடிவம் படிக்க இன்னமும் எளிதாக இருக்கிறது. நேற்றுப் பச்சை நிறம் அதிகமாக இருந்தது. இன்று எல்லாருடைய எழுத்துக்களுமே அழுத்தமாக விழுகின்றன. படிக்கவும் முடிகிறது. விரைவிலும் திறக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  கேஜிஜிக்கு நன்றி.  டிடிக்கு நன்றி.

      ஆனாலும் பழைய வடிவத்தை மனம் நினைக்கிறது!!

      நீக்கு
    2. ஆமாம், அது தான் மனதுக்கு நெருக்கமாக இருந்தது.

      நீக்கு
  6. நெல்லைத் தமிழரின் ஹஸ்பண்டுக்கு (மனைவி) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஆரோக்கியமாகவும் மன மகிழ்ச்சியுடனும் நீண்ட காலம் வாழவும் வாழ்த்துகள். நெல்லைத்தமிழர் எக்கச்சக்கமாகச் சமைத்துப் போட்டுக் கொடுமைப்படுத்துவது (இஃகி, இஃகி) நிற்கவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...     இன்று அவர் மனைவிக்கும் பிறந்த நாளா?   


      அவருடைய பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகளையும் சொல்லுங்கள் நெல்லை.

      இன்று எங்கள் மாமாவுக்கும் (என் அக்கா கணவர், கேஜிஜிக்கு அண்ணன்) பிறந்த நாள்.

      நீக்கு
    2. உங்கள் மாமாவுக்கும் எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்ரீராம்.முகநூலிலும் சொல்லணும்.

      நீக்கு
    3. கௌதமன் சார், இந்த கொரோனா பாதிப்பின் துக்கத்திலிருக்கும் யாவர்க்கும் வித்தியாசமாக பளிச்சென்று பச்சையும் நீலமும் பிரகாசமாகத் தெரிகிறது. எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிரது.
      நெல்லைத் தமிழன் சார் மனைவிக்கும் ஸ்ரீராமின் மாமாவிற்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

      நீக்கு
    4. நன்றி கீசா மேடம் மற்றும் அனைவருக்கும்

      நீக்கு
    5. நெல்லைத்தமிழன் அவர்கள் மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
      ஸ்ரீராம் மாமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  7. திருமதி ரமா ஸ்ரீநிவாசனின் கட்டுரையில் அவர் கேட்டுள்ளபடி அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் நம் வணக்கமும், பிரார்த்தனைகளும். அனைவரும் இந்த வேலைப்பளுவிலிருந்து விரைவில் விடுபடுவதற்காகவேனும் இந்தக் கொரோனா தொற்று விரைவில் மறைய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், கீதா சாம்பசிவம் மேடம்.

    பதிலளிநீக்கு
  9. பதிவை லெஃப்ட் சைடிலும் மற்றவைகளை ரைட் சைடிலும் வைத்தது மிக சிறப்பு . வடிவமைப்பு கலர் நன்றாக இருக்கிறது. ஸ்ரீராம் அவரின் புது விடு போல இந்த தளமும் புது பொலிவோட இருக்கிறது.. உங்கள் தளம் எப்பவுமே வேகமாக லோட் ஆகிவிடும் அதிராவின் தளம்தான் லோட் ஆக டைம் எடுக்கும் பல சமயங்களில் அவர் தளம் லோடாகும் போதே இண்டி தளத்திற்கு போய் எரர் மெஜேஜ் வரும்

    திருமதி ரமா ஸ்ரீநிவாசனின் கட்டுரை நன்றாக வந்திருக்கிறது

    , கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கு பிற்ந்த நாள் என்று அறிந்தேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் God Bless you all and Be safe

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீராம் அவரின் புது விடு போல இந்த தளமும் புது பொலிவோட இருக்கிறது.//

      எனக்கும் அப்படித் தோன்றியது மதுரை!!  நீ மட்டும் புது வீட்டுக்குப் போகலாமா என்று கேட்பது போல!

      //அதிராவின் தளம்தான் லோட் ஆக டைம் எடுக்கும் பல சமயங்களில் அவர் தளம் லோடாகும்//

      அப்படித்தான் கீதா ரெங்கனும் சொன்னார்!

      நீக்கு
    2. நன்றி மதுரைத்தமிழரே.

      நீக்கு
  10. பதிவுகளை இடும் போது Left align னை செலக்ட் செய்யாமல் justify யை செலக்ட் செய்து போடுங்கள் தளம் இன்னும் சிறப்பாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லியுள்ள ஆலோசனைக்கு நன்றி. நான் மட்டும் எழுதுகின்ற பதிவுகளை justify வடிவில்தான் அமைப்பேன். எங்களுக்கு எழுதி அனுப்புபவர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு format ல் அனுப்புவதால், அவற்றை copy / paste செய்வது, justify அமைப்பு எல்லாம் மிகவும் கடினமாக உள்ளது. பார்ப்போம். விரைவில் அவைகளையும் convert செய்யும் வித்தையைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். நன்றி.

      நீக்கு
    2. புதிய தளம் பள பள.
      பழைய எங்கள் ப்ளாகையும் பார்க்க ஆசை.
      உடனே லோட் ஆகிறது.
      கௌதமன் ஜிக்கு அன்பு வாழ்த்துகளும்
      பாராட்டுகளும்.

      நீக்கு
    3. அன்பு கீதாமாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
      என்றும் சீரும் சிறப்புடனும் இருக்க வேண்டும்.

      நீக்கு
  11. நல்லதொரு கட்டுரை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.

    மருத்துவர்களுக்கான காணொளி கண்டேன் சிறப்பு.

    முடிவில் இதற்கும்கூட திரைப்படக் கூத்தாடிகளை வைத்துதான் மக்களை பார்க்க வைக்க இயலும் என்ற இழிவான நிலையில்தான் இருக்கிறோம் என்பது வேதனைதான்.

    அலைபேசியில் பார்த்தேன் தளம் அழகாக இருக்கிறது ஜி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கு நன்றி. குப்பனும் சுப்பனும் நடித்தால், அது சாதாரணர்களை சென்று அடையாது. பிரபலமானவர்கள் நடித்தால், பாமர ஜனங்களையும் அந்த செய்தி சென்று அடையும். நடிகர்களும் சமுதாயத்தின் ஓர் அங்கம்தானே? அவர்களை ஏன் கூத்தாடிகள் என்று சொல்லி ஒதுக்கவேண்டும்?

      நீக்கு
    2. கௌதமன் சார், அழகான பதில். இப்படியும் யோசிக்க தோன்றுகிறதே உங்களுக்கு.

      நீக்கு
    3. கேஜிஜி சார்... நடிக நடிகையர் சமுதாயத்தின் அங்கம்தான். பிரச்சனை என்னன்னா, சமுதாயத்தின் தூண்களான கல்வியிற் சிறந்தவர்கள், பொதுநலனுக்கு உழைப்பவர்கள், இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள், technically knowledgeable persons - இவர்களை மதிக்க வேண்டிய சமுதாயம், நாலு படத்துல நடிச்சாச்சுன்னா தன்னை சமுதாயத் தலைவனாக நினைத்துக்கொள்பவனின் பின்னால் பெரும்பாலானவர்கள் செல்கிறார்களே என்ற ஆதங்கம்தான்.

      நீக்கு
    4. //அவர்களை ஏன் கூத்தாடிகள் என்று சொல்லி ஒதுக்கவேண்டும் ?//
      நான் அவர்களை ஒதுக்கச் சொல்லவில்லை தலையில் வைத்துக் கொண்டாடுதல் அறியாமை என்கிறேன்.

      நீக்கு
  12. சிறப்பான தகவல்கள்.

    கோவிட்-19 பற்றிய திருமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களின் கட்டுரை மிகவும் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    புதிய வடிவமைப்பு - நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. காணொளி பிறகு தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும்போது பார்க்கவும். நன்றி.

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. மருத்துவ துறை, சுகாதார துறை, காவல்துறை உட்பட, இன்றைய தீநுண்மி பரவாமல் தடுக்கும் அனைவருக்கும் நன்றிகள்... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    நண்பன், மாஸ்டர் படப்பாடல்களுடன் காணொளி அருமையாக உள்ளது...

    பதிலளிநீக்கு
  16. புது வண்ணம், வடிவமைப்பு புத்துணர்வு சேர்க்கிறது. டிடி/கேஜிஜி டீமிற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    எங்கள் ப்ளாக் தளம் புதிதாகக்பட்டதற்கு வாழ்த்துக்கள்.நேற்று இரவே கூறி விட்டேன். பாடுபட்ட சகோதரர்கள் கெளதமன், திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் பாராட்டுடன் கூடிய நன்றிகள்.

    சகோதரர் நெல்லை தமிழர் அவர்களின் மனைவிக்கு எனது அன்பார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் வாழ்வில் அவருக்கு சிறப்புகள் அனைத்தும் சேர்ந்து என்றும் நலமுடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  19. தளம் அழகாக இருக்கிறது. ஆனால் பழைய வலைத்தளத்தின் கம்பீரம் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீதா சாம்பசிவம்!

    பதிலளிநீக்கு
  21. நெல்லைத்தமிழன் அவர்களின் இல்லத்தரசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. அவசர காலகட்டத்தில் பணியாற்றி வரும் அனைத்து பணியாளர்களையும் சிறப்பித்தது கட்டுரை.
    மனதார அனைவரையும் வாழ்த்துவோம். எங்கள் வீட்டிலும் அப்பாவும்,மகளும் அவசர பிரிவில் இருப்பதால் அவர்கள் முக்கியம் எமக்குத் தெரியும்.
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் கீதா சாம்பசிவம் நெல்லை தமிழன் துணைவியார் இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. எங்கள் கீதா சாம்பசிவம் மேடத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். கீதா மேடம், சாம்பசிவம் மாமா இருவரின் ஆசிகளைக் கோருகிறோம்.

    பட்டியைத் திறந்துவிட்டால்போல் ஊரடங்கு மகாத்மியம் முடிந்துவிடும். இனித்தான் கூடுதல் கவனமுடன் இருக்கணும். இருப்பீர்கள் என நினைக்கிறேன் (கண் பிரச்சனைக்கு தனி நேரத்தில் செல்லவும். நிறைய கூட்டம் இருக்கும்போது செல்லவேண்டாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லையாரே! எங்கள் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு.

      நீக்கு
  24. நெல்லைத்தமிழன் அவர்களின்மனைவிக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. திருமதி கீதா சாம்பசிவம், திருமதி நெல்லைத்தமிழன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நலமே மிளிரட்டும்!

    பதிலளிநீக்கு
  26. கீதா சாம்பசிவம் அம்மாவிற்கும், நெல்லைத்தமிழன் அவர்களின் துணைவியாருக்கும், வாழ்த்துகள் பல...

    பதிலளிநீக்கு
  27. நேற்று மதியத்திலிருந்து என்னுடைய கணினிக்கு என்னவோ ஆகி முதலில் இணையம் இணையவில்லை. இன்று காலை இணையம் இரங்கி வந்தாலும் க்ரோம் முறுக்கிக் கொண்டு நின்றது. இப்போதுதான் எல்லாம் சரியாகி இருக்கிறது(டச் உட்). எங்கள் பிளாகின் புதிய தோற்றம் ஓ.கே.! பழகிக் கொள்ளலாம். இதுவரை இடதுசாரியாக இருந்த எ.பி. இப்போது வலதுசாரியாகிவிட்டது. 

    பதிலளிநீக்கு
  28. சாக்லேட் பெண் ஆலியாவின் ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு நான் எனக்குத் தெரிந்த மருத்துவருக்கு சாக்லேட் அனுப்பலாம் என்றால் அவர் என்னை "அடி அல்பமே!" என்று திட்டி விட்டால்?  
    இந்த சமயத்தில் நம் ஸ்ரீராம் உள்பட மருத்துத்துறை ஊழியர்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறோம். 

    பதிலளிநீக்கு
  29. பிறந்தநாள் கொண்டாடும் லதா,சீதா, கீதா அக்காவுக்கும், நெல்லைத்தமிழரின் மனைவி,துணைவிக்கும், ஸ்ரீராமின் மாமன், மச்சானுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.(வேறொன்றுமில்லை சிலோன் ரேடியோ பாணியில் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல முயன்றேன்(ஹி ஹி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்காலத்தில் இலங்கை வானொலி பிறந்தநாள் வாழ்த்துகள் நிகழ்ச்சி மூலமாகத்தான் அம்மம்மா, அப்பப்பா போன்ற சில வினோத உறவுமுறைப் பெயர்கள் எனக்குத் தெரியவந்தன !

      நீக்கு
  30. நன்றியுணர்ச்சியை வலியுறுத்தியிருக்கும் ரமா ஸ்ரீனிவாசனின் கட்டுரை சிறப்பு. அந்த காணொலி வாட்ஸாப்பில் வந்தது. 

    பதிலளிநீக்கு
  31. தளத்தின் புதிய தோற்றம் நன்றாக இருக்கிறது.
    எழுத்துக்கள் படிக்கும் படி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. பாஸிடிவ் செய்திகள் மனித நேயத்தை சொல்கிறது.
    ரமாஸ்ரீனிவாசன் கட்டுரை அருமை.
    காணொளி பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  33. தளத்தின் லே அவுட் மாறியிருக்கிறதே. நன்றாக இருக்கிறது.

    பாசிட்டிவ் செய்திகள் லிங்க் இரண்டுமே நல்ல விஷயங்கள். நாம் எல்லோருமே இந்த சூழலில் அயராது உழைக்கும் கோவிட் வாரியர்ஸ் எல்லோரையும் பாராட்டி வாழ்த்து சொல்லி அவர்களுக்காகவும் பிரார்த்திப்போம். சகோதரி ரமா ஸ்ரீநிவாசன் அவர்களின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது.

    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் எப்போதும் இருந்திட பிரார்த்தனைகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  34. ஆலியாபட் செய்தியும் எமிரெட்ஸ் அறக்கட்டளை செய்தியும் நல்ல பாசிட்டிவ் செயல்கள்.

    ரமா உங்க கட்டுரை மிக நன்றாக வந்திருக்கிறது. அந்த வீடியோ வாட்சப்பிலும் வந்தது இல்லையா..

    //“Thank you for all you are doing to keep the community healthy and safe.
    You are the real Heroes,” என்று சிறு ’நன்றிக்குறிப்பையும்’ உள்ளே போட்டு
    அனுப்புவோம்... ! //

    எபி ஆசிரியர்களுடன் வாசகர்கள் நாங்கள் அனைவரும் சேர்ந்து கொள்கிறோம்!! மருத்துவத்துறை சுகாதாரத் துறை ஊழியர்கள் பொதுநல் ஊழியர்கள் அனைவருக்கும் நம் நன்றியையும் பிரார்த்தனைகளையும் சொல்லிக் கொள்வோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  35. என் பெயரும், கோமதி அரசு அவர்களின் பெயரும் மட்டும் கிரே நிறத்தில் இருக்கிறதே ஏன்? 

    பதிலளிநீக்கு
  36. 'பாஸிடிவ் செய்திகளின்' முன்னோடியே நம் "எங்கள் ப்ளாக்"தானே...??
    நாம் பிறருக்கு நம்மாலியன்ற நல்லதை பிரதிபலன் எதிர்பாராமல் செய்வது நம் சந்ததிகளுக்கு நாம் சேமித்துவைக்கும் டெபாஸிட்தானே...??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் பாரதி! வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!