1) சிறிய கண்டுபிடிப்புகள் பெரிய கண்டுபிடிப்புகளுக்கு முதல்படி... கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் பன்னீர் செல்வம், முக கவசம், ஸ்டெதஸ்கோப், மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை கிருமி நீக்கம் செய்யும் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்...
2) ( அ ) உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்து, இந்தியாவின், 74வது சுதந்திர தினமான, ஆக., 15ல் அறிமுகமாகிறது. இதன் மூலம், உலகில் முதன் முதலாக கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த பெருமையை, இந்தியா பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது. [ இப்படி அவசரப்படவேண்டாம் என்று ICMR சொல்லி உள்ளது. மனிதர்கள் மீளாத சோதனைக்கு ஆறுமாதம், எட்டு மாதம் தேவைப்படும் எனவும், இது மிகவும் குறுகிய கால சோதனை எனவும் ஆபத்தான பின் விளைவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆயினும் அறிவிப்பில் மாற்றம் எதுவும் இதுவரை இல்லை ]
( ஆ ) ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., மற்றும் புனே தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து 'கோவாக்சின்' என்ற நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் கிருஷ்ண எல்லா அளித்த பேட்டி;
3) இந்த புதிய தொழில்நுட்பம் கொரோனாவின் காற்றில் பரவுவதற்கு எதிரான முதல் வரிசையில் தடுப்பை வழங்குகிறது. மேலும் தற்போதைய தொற்றுநோயையும், உட்புற சூழல்களில் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு காற்றில் பரவும் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பங்களில் முன்னணியில் இருக்கும் என மற்றொரு இணை ஆசிரியரான பைசல் சீமா கூறினார்.
4) சென்னை தி.நகர் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டியை ஐதராபாத்தில் வசிக்கும் மகளின் வீட்டிற்கு செல்வதற்குள் விமான நிலையம் அழைத்துச் சென்று உதவிய பெண் காவலரை ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து வெகுமதி அளித்தார்...
=================================================================================================
பின் ட்ராப் ஸைலென்ஸ்
ரமா ஸ்ரீநிவாசன்
உங்களால் ஒரு குண்டூசி விழும் சத்தத்தைக் காதால்
கேட்க முடியுமா?
இந்த பின் ட்ராப் ஸைலென்ஸ்
என்னும் மூன்று வார்த்தைகளுக்கான
அர்த்தம்தான்
என்ன?
கீழே உள்ள சில நிகழ்வுகளில்
எப்படி அமைதி என்பது வார்த்தைகளை
விட உரக்கவும், அழுத்தமான அர்த்தத்தோடும் திகழ்ந்தது என்பதை நாம்
பார்ப்போம்.
1. ஒரு
முறை ஃபீல்ட் மார்ஷல் சாம்
பஹதூர் மானெக்க்ஷா அவர்கள்
அஹமதாபாத்தில்
ஓர் பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில்
உரையாடத்
துவங்கினார்.
உடனே குழுமியிருந்த கூட்டமானது இவ்வாறு குரல் எழுப்பியது:
“குஜராத்தி
மொழியில் பேசுங்கள். நீங்கள் குஜராத்தி மொழியில்
பேசினால்
மட்டுமே
நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்போம்”
என்று.
ஃபீல்ட்
மார்ஷல் சாம் பஹதூர் மானெக்க்ஷா
தன் உரையை நிறுத்தி விட்டு
கூடியிருந்த
கூட்டத்தை தன் கண்களால் கடுமையான
முக பாவத்துடன்
வெறித்துப்
பார்த்தார். பின்னர் அவர் “நண்பர்களே,
என்னுடைய நீண்ட
வாழ்நாளில்
நான் பல போர்களில் பங்கேற்று
போர் புரிந்திருக்கின்றேன். சீக்கிய ரெஜிமெண்ட்
வீரர்களிடமிருந்து பஞ்சாபி மொழியைக் கற்றேன்.
மராத்தா ரெஜிமெண்ட்டிடமிருந்து
மராத்திய மொழியைப் பயின்றேன்; தமிழ் மொழியை மதராஸ்
ஸாப்பர்ஸ்ஸிடமிருந்து கற்றேன்; வங்காள மொழியை வங்காள ஸாப்பர்ஸ்ஸிடமிருந்தும்
இந்தி மொழியை பீஹார் ரெஜிமெண்ட்டிடமிருந்தும் நேபாளி
மொழியை கூர்கா ரெஜிமெண்ட்டிடமிருந்தும் கற்றுக் கொண்டேன்.
ஆனால் துரதிருஷ்ட வசமாக எந்த ரெஜிமெண்ட்டிலுமே
ஒரு குஜராத்தி போர் வீரர் கூட இல்லாததால்
எனக்கு குஜராத்தி மொழியை கற்றுக் கொள்ளும்
சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. எனவேதான் நான் இன்று ஆங்கிலத்தில்
பேச முற்பட்டேன்" என்றாரே பார்க்க வேண்டும்.
அந்த நிமிடம் நீங்கள் அங்கிருந்து
உற்று கேட்டிருந்தீர்களானால் குண்டூசி
விழும் சத்தம் உங்களுக்குக் கேட்டிருக்கும்.
2. நம்
நாடு 1947ல் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து
விடுதலை பெற்ற
பின்னர்,
தற்காலிக பிரதமரான திரு. ஜவஹர்லால் நேரு
அவர்கள் முதல் இந்திய
ராணுவத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து
மூத்த ராணுவ அதிகாரிகளுக்கும்
மீட்டிங்கிற்கு அழைப்பு விடுத்தார்.
நேரு அவர்கள் “நாம் நம் இந்தியப்
படைத் தலைவராக ஓர் ஆங்கிலேய
அதிகாரியை
தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில்
நம்
யாருக்கும் ஒரு பெரும் படைக்கு தலைமையேற்கும்
அனுபவம் இல்லை
என்பதே
காரணம்” என்று முன் மொழிந்தார்.
நாம் ஆங்கிலேயரிடம் பணி புரிந்து கற்று
கொண்ட ஒரே முட்டாள்தனமான
பாடம் மந்தை ஆடுகள் போல்
அவர்களின் ஆணையைப் பின் பற்றி பணி செய்து
கிடப்பதே. தங்கள் சுய நலத்திற்காக
நம்முள்ளிருந்து நாமும்
முன் நின்று வழி காட்டலாம்
என்னும் எண்ணத்தையே வேரோடு பிடுங்கி
எறிந்து விட்டனர் அந்த கயவர்கள். எனவே
சீருடையணிந்த போர் வீர்ர்களும்
மற்றும் அனைத்துப் பொது மக்களும் நேருஜியின்
முன் மொழிதலுக்கு
எதிர் வாதமின்றி தலையாட்டினர்.
ஆயின்,
ஆட்டு மந்தையிலும் ஓர் வெள்ளாடு (அல்லது
கருப்பாடா?) தென்படும்
அல்லவா? அதே போல் நாத்து
சிங்க் ராத்தோர் என்னும் ஓர் அனுபவம்
மிக்க மூத்த அதிகாரி எழுந்து
தன் அபிப்பிராயத்தை சபையில் வைக்க அனுமதி கோரினார்.
அந்த அதிகாரியின் சுதந்திர போக்கைக் கண்டு சிறிது திகைப்பும் ஆச்சரியமும்
மனதில் நேருஜிக்கு எழுந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவரை தாராளமாக தன் எண்ணத்தை வெளியிடுமாறு
பணித்தார்.
அப்பொழுது
ராத்தோர் “நீங்கள் பாருங்கள் சார். நமக்கு ஓர் நாட்டை
ஆளும் திறமையும் இன்று வரை கிடையாது.
ஆகவே, நாம் பிரதமராக நம்
இந்திய
நாட்டையாளவும் ஓர் ஆங்கிலேயரையே நியமிக்கலாமே”
என்று
பதவிசாகக்
கூறி விட்டு தன் இருக்கையில்
அமர்ந்தார்.
ஆடிப் போய் விட்டார் திரு.
நேருஜி அவர்கள்.
அந்த நிமிடம் நீங்கள் அங்கிருந்து
உற்று கேட்டிருந்தீர்களானால் ஒரு குண்டூசி
விழும் சத்தம் உங்களுக்கு கேட்டிருக்கும்.
ஓர் இக்கட்டான இடை நிறுத்தத்திற்கு பிறகு
நேருஜி ராத்தோரைப்
பார்த்துக்
கேட்டார் : "அப்படியானால் நீங்கள் நம் நாட்டின்
முதல் ராணுவ
ஜெனரல்லாக
தலைமை ஏற்கிறீர்களா?”
ராத்தோர்
உடனே மறுத்துக் கூறினார் : “சார், எங்களிடையே எங்கள் யாவரையும்
வீட அனுபவமிக்கவரும், திறமை வாய்ந்தவருமான ஜெனெரல் கரியப்பா
அவர்கள் இருக்கின்றார். அவரே அந்த தலைமை
பொறுப்பை ஏற்க முழுத்
திறமையுடையவர் ஆவார்” என்றார்.
இப்படித்தான்
மஹா புத்திமானான ஜெனெரல் கரியப்பா நம்
இந்திய ராணுவத்தின்
ஜெனெரலாகவும் ராத்தோர் அவர்கள் முதல் லெப்டினன்ட் ஜெனெரலாகவும்
நியமிக்கப் பட்டார்கள் என்பது வரலாறு.
நண்பர்களே,
நல்ல கருத்துக்களை தயக்கமின்றி, தடங்கலின்றி
தைரியமாகத்
தெரிவிக்கும் திறமையை நாம் வளர்த்துக்
கொள்ள வேண்டும்
என்பதற்கு
இது ஓர் அரிய எடுத்துக்காட்டாகும்.
3. ராபர்ட்
வைட்டிங்க் என்னும் 83 வயது முதிர்ந்த அமெரிக்க
நாட்டவர்
விமானம்
மூலம் பாரிஸிற்கு வந்திறங்கினார்.
அங்கு ஃபிரென்ச் சுங்க பரிசோதனை அறையில்
தன் பாஸ்போர்ட்டை சூட்கேஸிலிருந்து
தேடியெடுக்க சில நிமிடங்கள் எடுத்துக்
கொண்டார்.
அங்கிருந்த
சுங்க அதிகாரி மிக ஏகத்தாளமாக
ராபர்ட் வைட்டிங்கை
நோக்கி
: “நீங்கள் பிரான்ஸ் நாட்டிற்கு இதற்கு முன்னர் வந்ததுண்டோ?” என்று வினவினார்.
தான் முன்னரே ஃபிரான்ஸ் நாட்டிற்கு
வருகை தந்திருப்பதாக திரு. வைட்டிங்க்
கூறினார்.
“அப்படியானால்
உங்கள் பாஸ்போர்ட்டை கையில் தயார் நிலையில்
வைத்திருக்க
வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க
வேண்டுமே”
என்று அந்த சுங்க அதிகாரி
மீண்டும் ஏளனமாக கேள்வி கேட்டார்.
அதற்கு
“நான் போன முறை வந்த
போது என் பாஸ்போர்ட்டை காட்ட
வேண்டிய
அவசியம் ஏற்படவில்லை” என்று அந்த அமெரிக்க
ராபர்ட்
வைடிங்க்
அமைதியாக பதிலளித்தார்.
“அது நிச்சயமாக சாத்தியமற்றது. எந்த ஒரு அமெரிக்கரும் ஃபிரென்ச்
மண்ணில்
காலடி எடுத்து வைக்கும்போது பாஸ்போர்ட்டை
சோதனைக்கு
காட்டியே
ஆக வேண்டும்” என்று ஏளனமாகவும் எகத்தாளமாகவும்
மீண்டும்
உரக்கப்
பேசினார் ஃபிரென்ச் அதிகாரி.
அந்த அமெரிக்க முதியவர் ஒரு நிமிடத்திற்கு அந்த ஃபிரென்ச் நாட்டு அதிகாரியை
நிதானமாகவும் கடுமையாகவும் கண்ணுற்றார்.
பின்னர்,
திரு.ராபர்ட் வைட்டிங்க் தெளிவாக
கீழ் வருமாறு பேச ஆரம்பித்தார்.
"ஆம்
அதிகாரி அவர்களே. நான் 1944ல் முதல் முதலாக
ஓமேஹா
கடற்கரையின்
கரையேறி உங்கள் நாட்டிற்கு விடுதலை
வாங்கித் தர
முற்பட்ட
போது, இங்கு என்னுடைய பாஸ்போர்ட்டை
காண்பிப்பதற்கு ஒரு
ஃபிரென்ச்
நாட்டவரைக் கூட காண முடியவில்லை………”
பின்னர்
என்ன நடந்ததென்று நான் கூறவும் வேண்டுமோ?
அந்த நிமிடம் நீங்கள் அங்கிருந்து
உற்றுக் கேட்டிருந்தீர்களானால் ஒரு குண்டூசி
விழும் சத்தம் உங்களுக்கு கேட்டிருக்கும்.
ஆம். நண்பர்களே, “கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை”
என்னும் பழமொழிக்கேற்ப செய்தவர்கள் சொன்னதில்லை; சொன்னவர்கள்
செய்ததில்லை.
தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் ஒரு சேர கை
கோர்த்துச் சென்றால்தான்
நம் தன்மையானது பிரகாசிக்கும் என்று கூறி விடை பெறுகிறேன்.
இன்னிக்கு நான் தான் முதல் போணியா? இனி வரப்போகும் அனைவருக்கும்/வந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துகள், நல்வரவு, வணக்கம், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... காலை வணக்கம்.
நீக்குமூன்று மாதத்தில் முடியும், ஜூன் தாண்டி ஜூலையில் பிரச்னை குறைந்துவிடும், நவம்பர் வரை வரும்... இந்த மாதிரி ஹேஷ்யங்களை இயற்கை எனும் கடவுள் மட்டுமே நிகழ்த்த முடியும். அதை இறைஞ்சுவோம். டனடியாக இதை செயலிழக்கச் செய்என்று.
வணக்கம் கீசா மேடம். இன்னைக்கு உங்க பின்னூட்டங்கள்ல ஒன்று மிஸ்ஸிங். "கடமை அழைக்கிறது. பின்னர் வருகிறேன்"
நீக்கு:)))
நீக்குநெல்லை, அதை வந்த உடனே சொல்ல மாட்டேனே! ஒரு சில கருத்துக்களைப் போட்டுட்டுச் சொல்வேன். அதோடு நேரமும் கணக்கில் எடுத்துக்கோங்க இனிமே! கிட்டத்தட்ட ஏழு மணி எனில் சொல்லுவேன். இல்லைனா சொல்ல மாட்டேன். சரியாவே கவனிக்கிறதில்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))))
நீக்குஇன்றைய நல்ல செய்திகளும், ரமா ஸ்ரீநிவாசன் பகிர்ந்திருக்கும் செய்திகளும் படித்தவை. ரமா ஸ்ரீநிவாசன் எழுதி இருக்கும் செய்திகள் கொஞ்ச காலமாக வாட்சப்பிலும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. எனினும் அதை அழகாய்த் தொகுத்துக் காரண, காரியங்களோடு சுட்டிக்காட்டி இருக்கும் ரமா ஸ்ரீநிவாசனுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி கீதா.
நீக்குதிரு மானெக்ஷா சொன்னது ஒரு வகையில் சரியே. எனக்குத் தெரிந்தவரை இப்போதும் இந்திய ராணுவத்தில் குஜராத்தியர் அதிகம் இருப்பதாகவோ/அல்லது இருப்பதாகவோ தெரியவில்லை. மற்ற எல்லா மாநிலங்களில் இருந்தும் இருப்பார்கள். தரைப்படையில் மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலைப் பக்கமிருந்து அநேகர் காணக்கிடைப்பார்கள்.வழிபாடுகள் நடத்தும் பண்டிட் எனப்படும் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகளிலும், மருத்துவர்களிலும் தமிழ்நாட்டு பிராமணர்களைப் பார்க்க முடியும். கேரளம், கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் இருப்பார்கள்.
பதிலளிநீக்குஅன்பு கீதாமா, அன்பு ஸ்ரீராம், இன்னும் வரப் போகிறவர்களுக்கும்
நீக்குஇந்த நாள் இனிய நாளாக இருக்க
பிரார்த்தனைகள்.
தடுப்பூசி நல்ல செய்திதான் நல்லதாகவே இருக்கட்டுமே.
இதையும் ஒரு விளம்பரமாகச் செய்து ,அத்தோடு நிற்காமல்
பயனுற உபயோகப்படுத்த வேண்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம். அந்த செய்தியின் சாத்தியமின்மை பற்றிய செய்தியையும் உடன் இணைத்துள்ளேன். எது நடக்குமோ...
நீக்குஆமாம், நானும் நினைச்சேன், துரைக்கு என்ன ஆச்சு? ஏன் இன்னமும் காணோம்?
நீக்குஆமாம் ஸ்ரீராம். இங்கிருக்கும் மருத்துவர் ஃபௌச்சி
நீக்குஎந்தச் செய்தியையும் உறுதிப் படுத்துவார்,
அவர் இதுவரை தொற்றைப் பற்றி நல்ல செய்தியே
சொல்லவில்லை. அதனாலயே தலைக்கு
இவரைப் பிடிக்காது.:(
//துரைக்கு என்ன ஆச்சு? ஏன் இன்னமும் காணோம்?/
நீக்குஆமாம். இன்னும் காணோம். அவருக்கு அனுப்பும் பதில் மின்னஞ்சல்களும், மின்னஞ்சல்களும் கூட அவரை அடைவதில்லை போல...
நீக்கு// இங்கிருக்கும் மருத்துவர் ஃபௌச்சி
எந்தச் செய்தியையும் உறுதிப் படுத்துவார்,
அவர் இதுவரை தொற்றைப் பற்றி நல்ல செய்தியே
சொல்லவில்லை. //
ஓ... ஏதோ இருக்கிறதோ?
கீதா, மற்றதைப் பற்றி தெரியாது. நம் தமிழரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் எங்கும் பரவி இருப்பார்கள்.
நீக்குஅம்பேரிக்காவில் ஆந்திரர்கள் நிறைய இருப்பார்கள் ரமா! அடுத்து குஜராத்தியர்/பஞ்சாபியர்.
நீக்குஆஹா...அற்புதம்...குண்டூசி விழுந்தால் கேட்காத சப்தம் இப்போது எம்முள் கேட்டுக் கொண்டே இருக்கிறது...அற்புதம்...
பதிலளிநீக்குவாங்க ரமணி சார்... நன்றி.
நீக்குமிக்க நன்றி ரமணி சார்.
நீக்குதுரை இன்னும் வரக்காணோமே.
பதிலளிநீக்குஅன்பின் துரைக்கும் இனிய காலை வணக்கம்.
மூதாட்டியை கவனமாக அழைத்துச் சென்ற
பெண்காவலருக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
அன்பும் அக்கறையும் இன்னும் உலகத்தில் வாழ்கிறது.
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... காலை வணக்கம்.
நீக்குரமா ஶ்ரீநிவாசன், மூன்று செய்திகளையும் நன்றாக எழுதியுள்ளார்.
பதிலளிநீக்குநல்லவேளை... நேரு எடவினாதான் இராணுவத்துக்கு தலைமை ஏற்கணும் என்று சொல்லாமல் போனாரே
ஹா.. ஹா.. ஹா...
நீக்குநன்றி நெல்லை சார். எடவினாவைப் பற்றி நான் இத்தளத்தில் பேசப் போவதில்லை. ஏன் என்று உங்கள் யாவருக்கும் தெரியும்.
நீக்குநேருஜி அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர். தன் வாழ்ந்தாட்களின் இளமைப் பருவத்தின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர். இந்தியாவின் முதல் பிரதமர். சுதந்திரமடைந்த ஒரு பெரும் தேசத்தின் நிர்மாணப்பணிகளில் தன்னை அயராது ஈடுபடுத்திக் கொண்டவர். அந்நாட்களில் கென்னடி, குருஷேவ், நேருஜி என்று உலகம் ஏற்றுக்கொண்ட முப்பெரும் ஆளுமைகளில் ஒருவராய் இருந்தவர் அவர். நேருஜி என்று குறிப்பிடும் பொழுது இதெல்லாம் நினைவுக்கு வராது போவது வருத்தமாக இருக்கிறது.
நீக்குநேருஜி மட்டுமில்லை. பல தலைவர்களைப் பற்றிப் பேசும் பொழுதும் அவர்களின் காலத்தில் நடந்த பல அருஞ்செயல்கள் நம் நினைவுக்கு வருவதில்லை. பல இலட்சக்கணக்கான எளிய மக்களின் அன்பை அவர்கள் பெற்றிருந்தார்கள் என்பதை மறந்தே போய் விடுகிறோம். அந்தத் தலைவர்களின்
தகுதி, திறமை, பிரச்னைகளை எப்படிக் கையாண்டார், அவரால் நாட்டுக்கு விளைந்த நன்மை என்ன என்பதெல்லாம் நம் சிந்தனைக்கே வருவதில்லை என்பது வருந்தத்தக்க ஒரு விஷயம். எவ்வளவு காலம் இப்படி 'எங்கோ வாசித்த ஏதோ ஒரு செய்தியின்' பின் தொடரும் நிழலாக நாம் இருப்போம் என்றும் தெரியவில்லை. எந்த விஷயத்தையும் ஒரு ஒட்டுமொத்த பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் பழக்கம் நம்மிடையே வளர வேண்டும். கவைக்குதவாத
செய்திகளையே நினைவில் வைத்துக் கொண்டு, 'இவ்வளவு தான் அவர்' என்பன போன்ற எண்ணங்களைக் களைய வேண்டும்.
ரமாஸ்ரீ அவர்களே! நேருஜி பற்றிய இந்தக் குறிப்புகளை எங்கே வாசித்தீர்கள் என்று சொல்ல முடியுமா? ஏனென்றால்--
நீக்கு".... நேரு அவர்கள் “நாம் நம் இந்தியப் படைத் தலைவராக ஓர் ஆங்கிலேய
அதிகாரியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் நம்
யாருக்கும் ஒரு பெரும் படைக்கு தலைமையேற்கும் அனுபவம் இல்லை
என்பதே காரணம்” என்று முன் மொழிந்தார்."
-- இந்த முன்மொழிதல் மட்டும் எழுதியவரின் கற்பனையாக இருக்கும் பட்சத்தில் இந்த துண்டுச் செய்திக்கு அர்த்தமே இல்லாது போயிருக்கும்.
ஜீவி சார், நள்ளிரவில் விடுதலை புத்தகத்தை நீங்கள் படிக்கணும்னு கேட்டுக்கறேன். காந்திஜி தான் செய்த செயலுக்கு கைம்மாறு பெற்றுக்கொண்டதில்லை. ஏதோ நேரு மட்டும் வெஞ்சிறையில் வாடியதைப் போலவும், மற்ற தலைவர்கள் தங்கத் தாம்பாளத்தில் விருந்துண்டதைப் போலவும் த்வனி வந்துவிடக் கூடாது. நேரு, தான் ஆற்றிய பணிகளுக்கும் அளவுக்கு அதிகமாகவே நம் நாட்டிடமிருந்து பெற்றுக்கொண்டுவிட்டார். தேச பக்தியைவிட சுயநலம் தலை தூக்கியிருந்த தலைவர் அவர் என விமர்சனம் செய்தால் உங்களுக்கு உண்மை புரியும் ஆனால் ஒத்துக்கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கும்.
நீக்குவரலாறு என்று வரும்போது அங்கு உணர்ச்சிவசப் படுதலுக்கு இடமில்லை.
லட்சக்கணக்கான தொண்டர்கள் என்று சொல்லியிருப்பது சரி. கோடிக்கணக்கானவர்கள் காந்தி பக்கம் இருந்தார்களே
காந்தியையும் நேருவையும் எதிரும் புதிருமாக வைப்பதினால் நீங்கள் அந்த இடத்தில் எட்வினாவை நினைவில் கொண்டது சரியாகி விடாது. அந்த எள்ளல் அங்கு தேவைப்படாத விஷயம். அதை உணர்ந்து தான் ராமாஸ்ரீ கூட இந்த இடத்தில் எட்வினாவைப் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்.
நீக்குநேருவின் அரசியல் தவறுகளைச் சொல்லுங்கள். வரவேற்கலாம். அதை விட்டு விட்டு...
வரலாறுகளை வரலாற்று ரீதியாகவே அணுக வேண்டும். அப்படி நீங்கள் அணுகாததே அந்த இடத்தில் விளைந்த தவறு.
அரசியல் தவறுகள் என்பது பெரிய விஷயம் அல்ல ஜீவி சார். இடது பக்கமா வலது பக்கமா என்ற முடிவு தலைவரிடம் வரும்போது அவருக்குத் தெரிந்தவரையில் ஆராய்ந்து இடது பக்கம் என முடிவெடுக்கலாம். 10-20 வருடங்கள் கழித்து, நாம் , அவர் மட்டும் வலது பக்கம் என்று முடிவெடுத்திருந்தால் என்ன என்னவோ நல்லது நடந்திருக்குமே, வரலாற்றுப் பிழை செய்துவிட்டார் என வெறும்ன பேசிக்கொள்ளலாம்.
நீக்குசுயநலம் சார்ந்து தனக்கு பட்டா போட்டுக்கொண்டதைவிட தன் பெண்ணுக்கு கட்சியை பட்டா போட்டுக் கொண்டாரே.. அது ஒன்று போதாதா? இந்திரா கான் எனபதை வி, இந்திரா காண்டி என மாற்ற வைத்தாரே. இதிலெல்லாம் சுயநலம் இல்லையா? 45-50 ஆண்டுகள் குடும்பத்திலேயே பதவி இருக்குமாறு வைத்துக்கொண்டாரே
வரலாற்று ரீதியாகவே நாம் அணுகும்போது, மோ பே, நேரு, எட்வினா, இந்தக் கூட்டால் விளைந்த சாதக பாதகங்கள் என்பதும் வரத்தான் செய்யும்
ஓகோ. வலது - இடது இதான் விஷயமா?..
நீக்குதொற்று மருந்து - பார்ப்போம்... எப்படி பயனளிக்கிறது என்று.
பதிலளிநீக்குஆனாலும் வருடத்தின் பாதி நாட்களுக்கு மேல் வேலை தினங்களை வீண்டித்துவிட்டதே
வேலை தினங்களை பாழடித்தது ஒருபுறம், மனா இறுக்கம் அதிகரிக்கிறதே...
நீக்குமுக்கியமானது மன இறுக்கம்தான் ஸ்ரீராம். என்ன நடக்குமோ என்ற புரியாத பயம் பெரும்பாலும் மக்களை வதைக்கின்றது.
நீக்குஉறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
பதிலளிநீக்குவெறுக்கையுள் எல்லாம் தலை
அரசனது செல்வத்தில் தலையாய செல்வம் எல்லா உறுப்புகளும் (எல்லாவி படையணிகளைம்) அமையப்பெற்ற படைச் செல்வம்தான்.
இனிய காலை வணக்கம். முரளிமா.
பதிலளிநீக்குநல்லதை நினைப்போம். முனைந்து செயல் பட்டால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.
ரமாஸ்றியின் பின் ட்ராப் சைலன்ஸ் சுவாரஸ்யமாக இருக்கிறது.
சாம் மானெக்ஷா மிகவும்பிடிக்கும். அவர் சொன்னதில்
தவறில்லையே.
மிக அருமை . வாழ்த்துகள் ரமா.
நன்றி வல்லி மாமி.
நீக்குஇன்று வீட்டில் பித்ரு விசேஷம் நடந்தது.
பதிலளிநீக்குஉடலில் மிக அலுப்பு. எல்லோரும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.
ஓய்வெடுங்கள் அம்மா. "உடம்பு சொல்றதைக் கேளுங்க"
நீக்கு:)))
//..பித்ரு விசேஷம் நடந்தது. உடலில் மிக அலுப்பு.//
நீக்குஉடல் அலுப்படைய ’பித்ரு விசேஷம்’ காரணமல்ல! உடம்பு தனக்கு தோன்றிய சமயத்தில் ‘அலுப்படைந்துவிடும்’ இயல்புடையது.
பித்ரு விசேஷத்தில் மனம் நிறைந்திருக்கவேண்டுமே. இது மனம் சம்பந்தப்பட்டதாயிற்றே..
கரெக்டாக சொன்னீர்கள் ஏகாந்தன் சார்.
நீக்குஏகாந்தன் சார் .மனம் அலுப்பு என்று சொல்லவில்லை. உடல் அலுப்பு. சாதாரண நாட்களில் செய்வதற்கும் கொரோரோனா நாட்களில் கடைப்பிடிப்பதற்கும் ஏக வித்தியாசம். நான்கு நாடகள் உழைப்பில் ஒரு நாள் யக்ஞ்ம்.
நீக்குரமா,
நீக்குஎங்களுக்கெல்லாம் மன நிறைவுக்குக் குறைவே இல்லை. உடல் முன்போல் ஒத்துழைக்க மறுக்கிறது. தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.
1) //..ஆடிப் போய் விட்டார் திரு. நேருஜி அவர்கள். அந்த நிமிடம் நீங்கள் அங்கிருந்து உற்று கேட்டிருந்தீர்களானால் ஒரு குண்டூசி விழும் சத்தம் உங்களுக்கு கேட்டிருக்கும்.//
பதிலளிநீக்கு2) //..என்னுடைய பாஸ்போர்ட்டை காண்பிப்பதற்கு ஒரு ஃபிரென்ச் நாட்டவரைக் கூட காண முடியவில்லை………”
பின்னர் என்ன நடந்ததென்று நான் கூறவும் வேண்டுமோ? அந்த நிமிடம் நீங்கள் அங்கிருந்து உற்றுக் கேட்டிருந்தீர்களானால் ஒரு குண்டூசி விழும் சத்தம் உங்களுக்கு கேட்டிருக்கும்.//
ரமா அவர்களே! உங்கள் கட்டுரையைப் படிக்கும்போது ’குண்டூசி விழும் சத்தம்தான்’ தெளிவாகக் கேட்கிறது - என்று நான் சொன்னால் கோபம் வருமோ!
அப்படி என்றால் ஏகாந்தன் சார், நான் எழுதிய கட்டுரை யாவரையும் சென்றடைந்து விட்டது என்று தெரிகிறது. நன்றி சார்.
நீக்கு@ கீதா சாம்பசிவம்: //..இன்னிக்கு நான் தான் முதல் போணியா? //
பதிலளிநீக்குஏன், பயமாயிருக்கா !
ஹாஹாஹாஹா, அதெல்லாம் இல்லை. முன்னெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு நான், தி/கீதா, துரை, அதிரடினு முதலிடம் பிடிக்க வருவோம். இப்போப் போட்டிக்கு ஆளே இல்லாமல் போனதில் சுவாரசியம் இல்லை. அதான்!
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்கு// துரைக்கு என்ன ஆச்சு?..//
நேற்று நள்ளிரவை நெருங்கும் நேரத்திலும் மின்னஞ்சலைக் குடைந்து கொண்டிருந்தேன்..
ஸ்ரீராம் அவர்களிடமிருந்து எதாவது பதில் வந்திருக்கிறதா... என்று..
நிம்மதியான உற்க்கமும் இல்லை...
விடியலில் முன்னதாக வர இயலவில்லை..
காலையில் தாமதமாக எழுந்தபின்
நேற்றைய பதிவில் ஸ்ரீராம் அவர்களது பதிலைக் கண்டதும் மிகவும் வருத்தத்துக்கு உள்ளானேன்..
மின்னஞ்சலுக்கு என்ன ஆயிற்று?...
மனம் எதிலும் செல்லவில்லை...
:(
நீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
நண்பர்களே, பண்ணீர்செல்வமும் முதிய பிராட்டிக்கு உதவிய காவலரும் போற்ற தக்கவர்கள். இன்னும் நாட்டில் நல்லது நிகழும் என்னும் நம்பிக்கை வலுப் படுத்துகிறார்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் அவர்களது
பதிலளிநீக்குகனிவான கவனத்துக்கு...
தங்களுக்கு நேரம் இருக்கும் போது
நலமா!.. என்றொரு வார்த்தையை அனுப்புங்களேன்...
அது என்னை வந்து சேர்கிறதா?.. என்று பார்க்கிறேன்...
( ஹலோ.. மைக் டெஸ்டிங் என்கிற மாதிரி.)
வேறு ஏதும் மின்னஞ்சல் உண்டா..
தங்களைத் தொடர்பு கொள்வதற்கு!...
இதோ... இப்போது அனுப்பியிருக்கிறேன்.
நீக்கும்ஹூம்...
நீக்குஒன்றையும் காணோம்...
கதைகளை அனுப்புவதற்கு ஏதுவாக வேறொரு மின்னஞ்சலைத் தருக..
அல்லது நான் வேறொரு மின்னஞ்சலின் வழியாக வருகிறேன்...
ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...
எனக்கு உங்கள் மெயில் வந்து விடுகிறது. உங்களுக்குதான் எனது மெயில்கள் கிடைப்பதில்லை. ஏனென்று தெரியவில்லை. ஸ்பாமில் பாருங்களேன்.
நீக்குஸ்பாம் இடத்தில் கேட்டால் ஒன்றும் இருப்பு இல்லை என்கிறது...
நீக்குஎன்ன நடக்கிறது என்றே புரியவில்லை! மற்றவர்களின் மெயில்கள் எனக்கு வருகின்றன. இதோ... ரமாஸ்ரீ அனுப்பிய மெயில் கூட வந்து பதிலனுப்பி விட்டேன். அவரும் பார்த்திருப்பார். நேற்று கீதா ரெங்கனுக்கு பதில் அனுப்பி அவரும் அக்நாலட்ஜ் பண்ணிவிட்டார்.
நீக்குஉங்கள் புதிய ஐடிக்கான என் பதில் கிடைத்ததா துரை செல்வராஜூ ஸார்?
நீக்குகிடைத்தது..கிடைத்தது..
நீக்குவொர்க் ஃபிரம் ஹோமின் விளைவு கிழமைகள் தெரிவதில்லை. இன்று ஞாயிறு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னர்தான் இன்று சனிக்கிழமைதான் என்று மண்டைக்குள் பல்ப் எரிய, பாசிட்டிவ் செய்திகள் மற்றும் ரமா ஸ்ரீயின் கட்டுரை வெளிவரும் நாளாயிற்றே என்று கணினியைத் திறந்தேன். அப்படா கொரோனா பற்றி முதன் முறையாக ஒரு நல்ல செய்தி!(பாசிட்டிவ் என்று எழுத தயக்கம்). இந்த சமயத்தில் காவலர்களுக்குள் இருக்கும் மனிதம் வெளி வரைவது சிறப்பு.
பதிலளிநீக்குபன்னீர் செல்வத்தின் முயற்சிக்கு பாராட்டு! செல்போன், ரிமோட் போன்றவைகளுக்கு தனியாக சானிடைசர் வந்திருக்கிறது போலிருக்கிறதே?
ஆஹா... ரமாவின் கட்டுரைகள் அனைவரையும் ஈர்க்கிறதே...
நீக்குரமாவின் கட்டுரை சிறப்பு.
பதிலளிநீக்குதேங்க் யூ பானு.
நீக்குதீநுண்மி செய்திகள் - நல்லதே நடக்கட்டும்...
பதிலளிநீக்குமூன்று கட்டுரைகளுக்கும் பல குண்டூசிகள் விழுந்து சத்தத்தை கிளப்பியும் உள்ளன...!
டி.டி. சார். தேங்க் யூ.
நீக்குநன்றி DD.
நீக்குஇன்றைய செய்திகள் சிறப்பு. படித்த செய்திகளே.
பதிலளிநீக்குகுணடூசி விழும் சப்தம் - நல்ல கட்டுரை.
நன்றி வெங்கட்.
நீக்குகுண்டூசியின் கட்டுரை குண்டு போட்டதை போன்று உணர வைத்தது.
பதிலளிநீக்குநேருவுக்கு சரியான கேள்வி கேட்டவருக்கு எனது தாமதமான, மானசீகமான சல்யூட்.
பொது இடத்தில் மனதில் பட்டதை கேட்பது எனக்கு பிடித்தமானது.
என்னவொன்று சிலரை இருட்டுக்குள் பகைக்க வேண்டியது வரும்.
எனக்கும் வந்து இருக்கிறதே...
கில்லர்ஜீ சார், என் அலுவலகத்திலேயே என் கமிஷனர் நேர் பாதையைத் தாண்டி வேறு விதமாக இயங்கச் சொன்னால், தைரியமாக "அதற்கு வேறு ஆளை பாருங்க சார்" என்று கூறியவள் நான். என்ன..... வாய் ஜாஸ்தீ என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. ஆயின் யாரும் தப்பான செயலுக்கு என்னிடம் வர மாட்டார்கள், அதே போல் யாவருக்கும் என்னைக் கண்டாலே பயம் கலந்த மரியாதை வந்து விட்டது.
நீக்குதுரை என்றதும் ஒரே கன்ஃப்யூஷன் அப்பாதுரையா துரை செல்வராஜுவா என்று அப்பாதுரையைத்தான் காண்பதில்லை
பதிலளிநீக்குஅப்பாதுரை 'எபி வாட்ஸாப் குருப்பில் பிஸியாக இருக்கிறார், ஸார். நீங்கள் தான் அந்தப் பக்கமே வருவதில்லை.. வாருங்களேன்..
நீக்குஅப்பாதுரை சமீப காலங்களில் msuzhi என்கிற பெயரில் வருகிறார்.
நீக்குஜிஎம்பீ சார்! எனக்கும் இந்த சந்தேகம் அடிக்கடி ஏற்படும். அதனால் அப்பாதுரையை துரை என்று அழைக்காமல் அப்பாதுரை என்றே அழைப்போமா?..
பதிலளிநீக்குபாஸிடிவ் செய்திகள் எல்லாம் நம்பிக்கை தருவது போல் இருக்கிறது .
பதிலளிநீக்குதனியாக இருக்கும் வயதானஅம்மாவிற்கு உதவிய பெண் காவலர் வாழ்க!
நன்றி கோமதி அக்கா.
நீக்குரமா ஸ்ரீநிவாசன் அவர்கள் கட்டுரை நிறைய விஷயங்களை சொன்னது, அருமை.
பதிலளிநீக்கு