சனி, 19 செப்டம்பர், 2020

B + செய்திகள்

50 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

‛InvIT' எனப்படும் கட்டமபை்பு முதலீட்டு அறக்கட்டளையின் சார்பாக டில்லியில் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சக செயலர் கிரிதர் அமரனே இத்தகவலை தெரிவித்தார்.

‛இந்த சாலைகள் 4 அல்லது 6 வழிச்சாலைகளாக அமைக்கப்படும். இச்சாலைகளில் பல இடங்களில் சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.' இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

latest tamil news


சாலைகளை அமைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதுடன், தொழில் மையங்களை இணைக்கவும், வாகன உரிமையாளர்களை ஊக்குவிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

====

சென்னை:காற்றாலைகளில் இருந்து மீண்டும் அதிக மின்சாரம் கிடைப்பதால் மின் வாரியம் சிரமமின்றி மின் தேவையை பூர்த்தி செய்கிறது.தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 8502 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.


latest tamil news


மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். நடப்பு சீசனில் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 8 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டது. ஆக. 7ல் 10.75 கோடி யூனிட் கொள்முதல் செய்யப்பட்டது.இதுவே இதுவரை ஒரே நாளில் மின் வாரியம் கொள்முதல் செய்ததில் அதிக காற்றாலை மின்சாரமாகும். இம்மாதம் முதல் ஊரடங்கில் அதிக தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.இதனால் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் இம்மாதம் முதல் வாரத்தில் காற்றாலைகளில் இருந்து ஒரு கோடி யூனிட்டிற்கு குறைவாகவே மின்சாரம் கிடைத்தது. மின் தேவையை பூர்த்தி செய்ய வாரியத்திற்கு சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் சில தினங்களாக காற்றாலைகளில் இருந்து மீண்டும் தினமும் 5 -- 6 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கத் துவங்கியுள்ளது.


====


நீலகிரி மாவட்டத்தில், மொத்தம், 77 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இங்கு தேர்வு மையம் இல்லாததால், கோவை, திருப்பூர் உட்பட பிற மாவட்டங்களில் உள்ள தேர்வுமையங்களுக்கு சென்றுள்ளனர்.

ஊட்டியை சேர்ந்த பயஸ் என்ற மாணவர் கூறுகையில், ஊட்டியில் நீட் கோச்சிங் சென்டர் இல்லை. கொரோனா காரணமாக , கோவை கோச்சிங் சென்டருக்கு செல்லமுடியவில்லை. எனினும் ஆன்லைனில் படித்து தேர்வு எழுதினேன். பிசிக்ஸ் , கெமிஸ்ட்ரியில் கேள்விகள் டிவிஸ்ட் செய்வதாக இருந்தது. சற்று கஷ்டம் தான். பரவாயில்லை. மீண்டும் அடுத்த முறை பயிற்சி எடுத்து எழுதுவேன். இந்த தேர்வுக்காக தற்கொலை செய்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இங்கு வாழ ஆயிரம் வழிகள் உள்ளன என்றார்.

====


கர்நாடக மாநிலம் கோபல் மாவட்டத்திலுள்ள கடர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம்மா லிங்கனகவுடா ஹயர்கவுடர். இவருக்கு 105 வயதாகிறது. இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டதால். மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இவருக்கு வேறு எந்த நோய்த் தொந்தரவும் இல்லை. மேலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க விருப்பம் இல்லாத காரணத்தால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் கமலம்மா. இவருடைய பேரன் ஸ்ரீனிவாஸ் ஹியாதி மருத்துவர் என்பதால் வீட்டிலிருந்தபடிலேய சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதியானது.

===

சென்னை, சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில், 'உழைப்பாளி' என்ற பெயரில், புதிய மருத்துவமனையை, சித்தா டாக்டர் வீரபாபு நேற்று துவக்கினார். 'இங்கு சித்தா, அலோபதியுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படும்; 10ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்' என, அவர் அறிவித்துள்ளார்.

சென்னை மருத்துவ கல்லுாரியின் மூடநீக்கியல் துறை முன்னாள் இயக்குனர் அன்பழகன், பொது மருத்துவ டாக்டர்கள் விஜய், மணிகண்டன் ஆகியோர், அலோபதி சிகிச்சை அளிக்கின்றனர்.மருத்துவமனையில், தினமும் காலை, 9:00 முதல் இரவு, 9:00 மணி வரை சிகிச்சை அளிக்கப்படும். சித்தா, அலோபதி என, இரண்டு சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் ஏழை, எளிய மக்கள் பெறலாம்.

டாக்டர்கள் அளிக்கும் பரிந்துரை சீட்டு அடிப்படையில், மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி கொள்ளலாம். சித்தா மருந்துகள், மருத்துவமனை வளாகத்திலேயே கிடைக்கும்.



====

இது பாசிடிவ் செய்தி அல்ல; விழிப்புணர்வு தகவல் :

வீட்டு கடன் போன்ற கடன்களை பெறும்போது, வட்டி வீதம் இரண்டு வகையாக கணக்கிடப்படும். ஒன்று, 'பிக்சட் ரேட்' வட்டி. இது, கடன் வாங்கும்போது எவ்வளவு வட்டி நிர்ணயிக்கப்படுகிறதோ, அதுவே, கடன் தொகை திரும்ப செலுத்தி முடியும் வரைக்கும் வசூலிக்கப்படும். இடையில், ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி வீதங்கள், கூடுதலாக அல்லது குறைவாக இருந்தாலும் 'பிக்சட் ரேட்'டில் மாற்றம் வராது. அதனால், 'பிக்சட் ரேட்'காரர்கள் எந்த பரபரப்புக்கும் ஆளாக வேண்டியதில்லை.

மற்றொரு வகை, 'ப்ளோட்டிங் ரேட்'. இது, அவ்வப்போது ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் வட்டி வீதங்களை அடிப்படையாக கொண்டு வசூலிக்கப்படுகிறது. 'ப்ளோட்டிங் ரேட்'டில் வங்கிகளின் எம்.சி.எல்.ஆர்., என்று சொல்லக்கூடிய, 'மார்ஜினல் காஸ்ட் ஆப் பண்ட் லெண்டிங்க் ரேட்' அல்லது இ.பி.எல்.ஆர்., என்று சொல்லக்கூடிய, 'எக்ஸ்டர்னல் பென்ச் மார்க் லெண்டிங்க் ரேட்' என்கிற முறைப்படி, வட்டி விகிதம் அவ்வப்போது மாறுபடும்.'ப்ளோட்டிங் ரேட்'ல் வட்டி அதிகரிக்கும் போது, வங்கிகள் தாமாகவே கூடுதல் வட்டியை பிடித்து விடுகின்றன. குறையும் போது, வாடிக்கையாளர்களுக்கு வட்டி குறைப்பை தர வேண்டும். ஆனால் தாமாகவே, அதன் பலனை தருவதில், சில வங்கிகளில் சுணக்கம் காணப்படுகிறது.

அரசு வங்கிகளில் இ.எம்.ஐ., கட்டிய அன்றே, அசல் மற்றும் வட்டியில் வரவு வைக்கப்படும். ஆனால், சில தனியார் வங்கிகளில், மாத அல்லது வருட கடைசியில் தான், வட்டி வரவு வைக்கப்படுவதால், அதிக வட்டி செலுத்தும் நிலை ஏற்படுகிறது. பொதுவாக வட்டிக்குறைப்பு அல்லது அதிகரிப்பை, இ.எம்.ஐ., தொகையில் மாற்றம் ஏற்படாமல், கடைசியில் செலுத்தப்படும் தவணை எண்களில், சரி செய்து கொள்கின்றனர்.

மாற்ற முடியுமா?

'பிக்சட் ரேட்'டில் கடன் வாங்கும் போது, 12 சதவீதம் இருந்தால், கடன் கட்டி முடியும் வரை, 12 சதவீதம் தான் கட்ட வேண்டும். 'ப்ளோட்டிங் ரேட்'டில் வாங்கும் போது, 12 சதவீதம் இருந்தால், அது 14க்கு உயரும் போது, கூடுதலாக பிடிக்கப்பட்டு விடும். அதுவே, 9 சதவீதத்துக்கு குறைந்தால், குறைத்து கட்டலாம். பலருக்கு, 'பிக்சட் ரேட்' நிம்மதி. சிலருக்கு 'ப்ளோட்டிங் ரேட்' மீது பிரியம். வாங்கிய கடனை பிக்சட் ரேட்டிலிருந்து, ப்ளோட்டிங் ரேட்டிற்கு மாற்ற வேண்டுமென்றால், அதற்கான குறிப்பிட்ட தொகையை கொடுத்து மாற முடியும்.

குறைந்து வரும் வட்டிக்காலங்களில் இது பயனுள்ளதாக இருக்கும்.பொதுவாக, வாடிக்கையாளர்கள் வங்கி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிப்பது கிடையாது. வங்கியில் டிபாசிட் போட்டு விட்டால், அது சரியாகத்தான் இருக்கும் என நினைக்கிறார்கள். அதேபோல, வங்கி சொல்லும் கடன் வசூலிப்பு கணக்குகளும் சரியாகத்தான் இருக்கும் என நினைக்கிறார்கள். இதைத்தான், 'Buyer beware' என்கிறார்கள்.வங்கியின் நடவடிக்கைகள், வட்டி ஏற்றம், இறக்கங்களை வாடிக்கையாளர்கள் தான் சரிபார்க்க வேண்டும். அதில் விழிப்புணர்வு வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல, வட்டி குறைப்புக்கான சலுகைகள் அறிவிக்கப்படும்போது, வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏற்பு கடிதம் வரட்டும் என காத்திருக்காமல், தாங்களாகவே முன்வந்து, வட்டியை குறைக்க வாய்ப்புள்ளதை அறிவித்து, வாடிக்கையாளருக்கு உதவும் மனப்பான்மை வங்கிகளுக்கு வரவேண்டும். வட்டி வசூலிக்கும் வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் தார்மீக பொறுப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.தவிர, ரிசர்வ் வங்கியும், தனது அதிகாரத்துக்கு கீழே இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும், வாடிக்கையாளர் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.

வங்கிகளும், தனது கிளை மேலாளர்கள், மாறி வரும் வட்டி விகிதங்கள் அதன் தாக்கங்கள் குறித்த விபரங்களை முழு அளவில் தெரிந்து வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.எல்லா வணிக நிறுவனங்களும், மகாத்மா காந்தி, 1890ல் தென்னாப்பிரிக்காவில் கூறிய ஒரு பொன்மொழியைதான் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அது, 'எங்கள் நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர் மிக முக்கியமானவர். அவர், நம்மை நம்பி இல்லை. நாம் தான் அவரை நம்பி இருக்கிறோம்' என்பதே. ஆகவே, வாடிக்கையாளரே தெய்வம்!


ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்- karthi@gkmtax.com


=====

 செய்திகள் : நன்றி தினமலர் telegram வழி தகவல்கள். 


====

மாமனிதர் டாக்டர் அப்துல் கலாம் :: ரமா ஸ்ரீநிவாசன் 



நான் இந்த நிகழ்ச்சியை ஒரு யூ டியூப் போஸ்ட்டில் கண்டபோது அது என்னை மிகவும் ஆழமாக பாதித்ததால், இதை ஒரு பாஸிடிவ் செய்தியாக நம் பிளாக்கில் பகிர்ந்து கொள்கின்றேன்.

மேதகு மாமனிதரான ஜனாதிபதி அப்தும் கலாம் அவர்கள், கலியமூர்த்தி ஐ.பி.எஸ்ஸிற்கு ஒரு நாள் மதியம் 2.30 மணி அளவில் தொலைபேசி வழியாக அழைப்பு விடுத்து பேசினார். திரு. கலியமூர்த்தி அவர்கள் ஜனாதிபதி விருது பெற்றவர்.  

எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்யாத +2 முடித்த ஒரு பெண் மேற்கொண்டு படிக்க விரும்பினாலும் வீட்டில் அவளுடைய பெற்றோர் அவளது திருமணத்தை முடிவு செய்து அடுத்த நாள் நட்த்த இருந்தார்கள்.  அந்தப் பெண்ணிற்கு வயது 16. அவளை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொள்ளப் போகும் அவளது மாமாவிற்கு வயது 47.

முன்னால் ஜனாதிபதி அவர்கள் கலியமூர்த்தி, ஐ.பி.எஸ்ஸை அழைத்து அந்த பெண்ணின் சிக்கலைத் தவிர்த்து மேற்கொண்டு படிக்க வழி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.  

திரு.கலியமூர்த்தி, ஐ.பி.எஸ். அவர்கள் அண்டைய ஊரான முசிரியிலிருந்து டி.எஸ்.பி. மற்றும் போலீஸ் யாவரையும் துறையூருக்குப் போகுமாறு கூறிவிட்டு தானும் புறப்பட்டு செல்கின்றார்.  அவர்கள் யாவரும் போய் சேரும்போது இரவாகி விட்டது.  விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அப்பெண் தன் விதியை நொந்து அழுது அழுது முகமே வீங்கிக் கிடந்தது. அவளைப் பார்த்து கலியமூர்த்தி “என்ன செய்யலாமென்றிருக்கின்றாய்?” என்று வினவ, அப்பெண் “எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை சார்.  நான் மேற்கொண்டு படிக்க வேண்டும். எனக்கு வயது 16தான் சார்” என்று பதிலளித்தாள்.  

உடனே அவளது பெற்றோர்களை அணுகி, “சட்டப்படி நீங்கள் செய்வது தவறு.  உங்கள் மீதி வழக்கு தொடர்ந்தால், நீங்கள் சிறைசாலை செல்ல வேண்டி வரும்” என்று கலியமூர்த்தி விளக்கியவுடன் அவர்கள் மறுத்துப் பேசாமல் தங்கள் மகளின் முடிவிற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்பெண்ணின் மேற்படிப்பிற்கு வேண்டிய பொருள் மற்றும் பணவுதவி யாவையும் திரு.கலியமூர்த்தியால் ஏற்பாடு செய்யப் பட்டன.

அப்பொழுது கலியமூர்த்தி அப்பெண்ணைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார் : “உனக்காக ஜனாதிபதி பேசினாரே, உனக்கு அவரை எப்படித் தெரியும்?” என்று. அதற்கு அந்த பெண் இவ்வாறு விடையளித்தாள்.  “நான்கு வருடங்களுக்கு முன்னால் நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு சென்றிருந்தேன்.  அங்கு திரு.அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாவதற்கு முன் உரையாற்ற வந்திருந்தார். அவரது உரை முடிந்து கேள்வி பதில் நேரத்தின் போது நான்கு பேர்களை கேள்வி கேட்க அனுமதித்தார்.  நான் எழுந்து பெண்களுடைய முன்னேற்றத்திற்கு அடிப்படை தேவை என்ன என்று ஒரு கேள்வி கேட்டேன்.  அவரோ ஒரே வார்த்தையில் ‘கல்வி’ என்று கூறினார். கேள்விகள் கேட்ட நான்கு பேருக்கும் ஒரு கார்டை வழங்கினார்.  அதில் திரு.அப்துல் கலாம் அவர்களின் இ மெயில் ஐ.டியும் அவரது தொலைபேசி எண்ணும் இருந்தன.  

அந்த கார்டை நான் பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டிருந்தேன்.  நான் மேற்கொண்டு படிக்க விழைந்தபோது அதற்கு தடையாக இருந்த என் பெற்றோர்களை எதிர்க்க முடியாமல் குழம்பி போனேன்.  எனக்கு வேறு வழி தெரியாமல் நான்தான் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்களிடம் தொலைபேசி வழியாகப் பேசினேன்”. என்றாள்.

நான் வியப்பின் உச்சிக்கே போய் விட்டேன்.  துறையூர் என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கல்வி மேம்பாட்டிற்காக தைரியமாக ஒரு ஜனாதிபதியுடன் பேச முடிகின்றது என்றால் அது இந்தியாவில் மட்டும்தான் அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த மாண்புமிகு திரு.அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்ததால் மட்டுமே சாத்தியமான ஒன்று.

இந்நிகழ்ச்சி நடந்து ஐந்து வருடங்கள் உருண்டோடின.  திரு.கலியமூர்த்து அவர்கள் அமெரிக்காவிலுள்ள அட்லாண்டா என்ற இடத்தில் உரையாற்ற சென்றிருந்தார்.  அவரது உரை நிறைவு பெற்றதும், ஒரு பெண் மேடையேறி வந்து அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் திரு.கலியமூர்த்தியுடன் இரண்டு நிமிடங்கள் பேச வேண்டுமென்று மன்றாடியும் இரைந்தும்  வாதாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் அப்பெண்ணை மேடைக்கு அழைத்தார்.  

அப்போது அப்பெண் “கலியமூர்த்தி ஐயா அவர்களே, எனக்கு உங்களை நன்றாகத் தெரியும்.  ஆனால், உங்களுக்கு என்னை நினைவிருக்க வாய்ப்பில்லை. நான் இங்கு ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன். என்னுடைய மாதாந்திர சம்பளம் ரூ.3 1/2 லட்சங்கள், எனது கணவரது சம்பளம் ரூ.4 லட்சங்கள்.  நான் ஏன் இந்த மேடையில் உங்களைச் சந்தித்துப் பேச வாதாடினேன் என்றால், உங்களுக்கு என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கத்தான். நான்தான் ஐயா துறையூர் சரஸ்வதி” என்று படபடவென்று பேசி முடித்தார்.

தமிழகத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து அமெரிக்க அட்லாண்டாவிற்கு பயணித்து அங்கு யாவரும் நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு ஒரு பெண் பணி புரியும் சூழலை உருவாக்கித் தந்தவர் மேதகு திரு.அப்துல் கலாம் அவர்கள்.  “வானமே எல்லை” என்பதை உண்மையாக்கி காட்டியவர்.  

அன்று திரு.கலியமூர்த்தி, ஐ.பி.எஸ். அவர்கள் முதல் முறையாக பேச்சிழந்து நின்றார் என்றால் அது உண்மை.  

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் பிறந்த அப்தும் கலாம் அவர்கள் மாண்புமிகு ஜனாதிபதியான பின்னும் தன் மக்களுக்கு வருந்தி வருந்தி உதவியிருக்கின்றார். ஏனெனில் அவர் தன்னை என்றுமே ஜனாதிபதியாக நினைத்ததில்லை. ஒரு குக்கிராமத்துப் பெண் கூட ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசி உதவி பெற முடியும் என்பதை உணர்த்தியவர் மேன்மை மிகு திரு.அப்துல் கலாம் அவர்கள்.

தான் மண்ணில் உயிரற்று விழும் வரை இந்நாட்டிற்காக உழைத்த மாமனிதர் திரு.அப்துல் கலாம்.  

வாழ்க அவர் புகழ்.  வளர்க இத்தகைய மாமனிதர்கள். 


கட்டுரையாளர் : திருமதி ரமா ஸ்ரீநிவாசன். 

===

 

38 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்னிக்கு நான் தான் போணியா? அப்பனே, பிள்ளையாரப்பா! நல்ல வரவு வைக்க அருள் புரிவாய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நற்காலை வணக்கம் கீதாமா.நல் வரவுதான்.
      சந்தேகம் இல்லை.

      நீக்கு
    2. ஹிஹிஹி, நான் சொன்னது பின்னூட்ட/கருத்துகள் வரவு. :)))) பாருங்க, இன்னிக்குனு யாரையும் காணோம்! :)))))

      நீக்கு
  2. நல்ல செய்திகளை அளிக்கும் சனிக்கிழமை காலை வணக்கம்.

    கௌதமன் ஜிக்கு மனம் நிறை நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. திருமதி ரமா ஸ்ரீநிவாசன் கட்டுரையாக எழுதி இருக்கும் செய்தி கடந்த 2 வருடங்களாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே பகிர்ந்தால் இன்னும் அதிகமாகப் போய்ச் சேரும். நேர்த்தியான நடையில் எழுதி இருக்கும் திருமதி ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான். எங்கள் ப்ளாக் வாசகர்கள்
    உயர் செய்திகளை எப்போதும் வரவேற்கிறோம்.
    நன்றி ரமா.

    பதிலளிநீக்கு
  5. வங்கிகள் பற்றிய விழிப்புணர்வுச் செய்தி அவசியமான ஒன்று. உண்மையில் பலருக்கும் வங்கிகளின் வேலை செய்யும் முறைகள் தெரியவில்லை/புரியவில்லை. அடித்தட்டு மக்களுக்கும் இது போய்ச் சேர வேண்டும். அதான் கொஞ்சம் கஷ்டமானது. உழைப்பாளி மருத்துவமனை குறித்து விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நல்ல முயற்சி! வெற்றியடைய வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  6. கமலம்மா, ஊட்டியில் நீட் தேர்வு எழுதியவர்கள் பற்றிய செய்திகள் புதியவை. காற்றாலை மின்சாரம் குறித்த செய்தி தினசரிகளிலும் வந்தன. ஆனாலும் எங்களுக்கு அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சாலைகள் பற்றிய செய்திகளும் அறிந்தவையே! பகிர்வுக்கு நன்றி. தொகுத்து அளித்த கௌதமன் அவர்களுக்குப் பாராட்டுகள். ஸ்ரீராம் இன்னும் எழுந்துக்கலையா? கௌதமன் ஏழு வரை பிசி என்றார். ஆகவே நான் கிளம்பியதும் வருவார். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு ரொம்ப பிஸியாக, காலையில் வழக்கத்துக்கு மாறாக, ஆறே முக்கால் மணி வரை தூங்கிவிட்டேன்!! அதனால் இங்கே வர இரண்டு மணி நேரங்கள் தாமதம்!

      நீக்கு
    2. இப்படி என்னிக்கானும் தூங்கி விட்ட தூக்கத்தை சமன் செய்யணுமே! அதனால் என்ன?

      நீக்கு
  7. வீட்டு கடன் போன்ற கடன்களை பெறும்போது, வட்டி வீதம் இரண்டு வகையாக கணக்கிடப்படும். ஒன்று, 'பிக்சட் ரேட்' வட்டி. இது, கடன் வாங்கும்போது எவ்வளவு வட்டி நிர்ணயிக்கப்படுகிறதோ, அதுவே, கடன் தொகை திரும்ப செலுத்தி முடியும் வரைக்கும் வசூலிக்கப்படும். இடையில், ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி வீதங்கள், கூடுதலாக அல்லது குறைவாக இருந்தாலும் 'பிக்சட் ரேட்'டில் மாற்றம் வராது. அதனால், 'பிக்சட் ரேட்'காரர்கள் எந்த பரபரப்புக்கும் ஆளாக வேண்டியதில்லை.////////நல்ல செய்தி.

    பதிலளிநீக்கு
  8. புதிய சாலைகள் விவசாயத்துக்குப்
    பங்கம் இல்லாமல் வரட்டும்.
    ஸ்ன்ற வருடம் திருனெல்வேலி சென்ற போது இரு பக்கமும் காற்றாலைகள் மைல்கள்
    கணக்கில் தொடர்ந்து வந்தன.

    இவற்றை நிறுவிய இளைஞர்கள் பற்றிய செய்தியும் கிடைத்தது.
    நம் தமிழ் நாடு இன்னும் முன்னேறும். செய்திக்கு நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  9. சாலிக்கிராமம் மருத்துவமனை மிக ஊக்கம்
    அளிக்கிறது. வாழ்க அவர்கள் பணி.

    பதிலளிநீக்கு
  10. துறையூர் பெண்ணின் விடயம் அறிந்த விடயமே எனினும் விரிவாக தந்தமைக்கு நன்றி மேடம்.

    இதெல்லாம் தமிழ்த்திரைப்படத்தில்தான் சாத்தியம். திரு.கலாம் அவர்கள் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர் சார், சரியாக சொன்னீர்கள். பேசாமல் வேலையில் காட்டும் நபர் என்று நிரூபித்த மாமனிதர் கலாம் அவர்கள்.

      நீக்கு
    2. //கில்லர் சார்..//

      இதற்கு தான் நான் தேவகோட்டையாரே என்று மனம் நிறைந்து அழைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்..

      நீக்கு
  11. பலவற்றை ஏற்கனவே படித்திருந்தாலும் காலையில் பாசிடிவ் செய்திகள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. ரஶ்ரீ அவர்களின் கலாம் பற்றிய செய்தி சமீபத்தில்தான் எந்தத் தளத்திலோ வெளியாகி அதற்குக் கருத்திட்ட நினைவு

    பதிலளிநீக்கு
  13. மாமனிதர் அப்துல்கலாம் போற்றுதலுக்கு உரியவர்
    வாராது வந்த மாமணி

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான தகவல்கள் மற்றும் கட்டுரைகள். தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  15. B + செய்திகள் , விழிப்புணர்வு செய்திகள் நன்றாக இருக்கிறது.
    ரமா அவர்கள் எழுதிய கலாம் பற்றிய ஒரு கட்டுரை சிறப்பு

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!