சனி, 29 மே, 2021

தொண்டையில் வைரஸ்களின் வளர்ச்சியை தடுப்பது எப்படி?

 

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து: இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது பனேசியா நிறுவனம். 

புதுடில்லி: ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் செய்து கொண்டபடி, இந்தியாவில் பனேசியா நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக்-வி மருந்து தயாராகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தில் அதன் உற்பத்தி தொடங்கியது.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் பனேசியா பயோடெக் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தில் உற்பத்தி தொடங்கியது. முதல் தொகுப்பு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், மருந்தின் தரத்தை ஆய்வு செய்ய மாஸ்கோவில் உள்ள கமலேயா மையத்திற்கு அனுப்பப்படும். கோடை காலத்தில் முழு அளவிலான தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கப்படஉள்ளது. இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துடன் தற்போது ஸ்புட்னிக்-வி மருந்தும் இணைகிறது.

= = = = = 

15,000 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன்: ரயில்வே வினியோகம். 

புதுடில்லி: 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வினியோகித்த திரவ மருத்துவ ஆக்சிஜன் அளவு 15,000 மெட்ரிக் டன்களை கடந்தது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வே தெரிவித்துள்ளதாவது: பல தடைகளை கடந்து, பல மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே தொடர்ந்து திரவ மருத்துவ ஆக்சிஜனை வினியோகித்து வருகிறது. இதுவரை, பல்வேறு மாநிலங்களுக்கு 936 டேங்கர்களில், 15,284 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை வினியோகிப்பட்டு உள்ளது. இதுவரை 234 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்து, 14 மாநிலங்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளன. தற்போது 9 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 31 டேங்கர்களில் 569 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன.

தற்போது வரை கர்நாடகாவுக்கு, 1,000 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப்பிரதேசத்துக்கு 3,609, மத்தியப் பிரதேசத்துக்கு 566, டில்லிக்கு 4,300, ஹரியாணாவுக்கு 1,759, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 1,063, உத்தரகாண்டுக்கு 320, தமிழகத்துக்கு 857, ஆந்திராவுக்கு 642, பஞ்சாப்புக்கு 153, கேரளாவுக்கு 246, தெலங்கானாவுக்கு 976, அசாமுக்கு 80 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

= = = = = 

5 ரூபாய்க்கு சாப்பாடு ஏழைகளுக்கு உதவும் இளைஞர்!

தஞ்சை, பட்டுக்கோட்டையில் இளைஞர் சிவா ஹோட்டல் நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில், 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்குகிறார். இன்று பவுர்ண மி என்பதால், வடை, பாயாசத்துடன் மதிய உணவு வழங்கப்பட்டது. தினமும் காலையில் இட்லி, இடியாப்பம், தோசை போன்ற டிபன் ஐட்டங்களை இலவசமாக வழங்கி வருகிறார். சிவா ஓட்டல் உரிமையாளர். 


= = = =

புதுக்கோட்டை:கொரோனா சிகிச்சை வார்டுகள், படுக்கைகளில் உள்ள கிருமிகளை அழிக்க புதிய கருவியை, பாலிடெக்னிக் மாணவர் கண்டுபிடித்து உள்ளார்.



புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே, வேம்பங்குடி பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் மகன் சிவசந்தோஷ்


புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில், சக நண்பர்களுடன் சேர்ந்து, 'அல்ட்ரா வயலட் லைட்' மூலம் கொரோனா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் கருவியை செய்து, இணையத்தில் வெளியிட்டார்.

அதைப் பார்த்து, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அந்தக் கருவியை வாங்கிச் சென்றுள்ளது. இப்படி பல கருவிகளை கண்டுபிடித்துள்ள சிவசந்தோஷை பாராட்டிய, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், அங்கு பணிபுரியவும் வாய்ப்புகொடுத்துள்ளது.

சிவசந்தோஷ் கூறியதாவது: கொரோனா வார்டுகளில், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களின் தும்மல், இருமல் மூலம் கிருமிகள் வெளியேறி, மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.இந்த கிருமிகளை காற்றோடு இழுத்து உள்வாங்கி கிருமியை அழித்து, காற்றை மட்டும் வெளியேற்றும் உபகரணத்தை வடிவமைத்து உள்ளேன்.இதை, 'ஏசி' போல ஒவ்வொரு அறையிலும் பொருத்தி விட்டால், அந்த அறைகளில் உள்ள கிருமிகளை அழித்து விடும். அதனால், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.

அதேபோல, யு.வி., லைட் மூலமே நோயாளிகளின் படுக்கைகளில் உள்ள கிருமிகளையும், ஆம்புலன்ஸ் படுக்கையில் உள்ள கிருமிகளையும் அழித்து சுத்தம் செய்யும் உபகரணம் ஒன்றும் வடிவமைத்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.மாணவரின் கண்டுபிடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.


 ============================== =========================================


கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர், கர்நாடகத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை நோய் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நோயை குணப்படுத்த, 'லிபோசோமல் ஆம்போடெரிசின் பி' என்ற மருந்து நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.மும்பையில் உள்ள, 'பாரத் சீரம்ஸ் வாக்சின்ஸ் லிமிடெட்' நிறுவனம் இந்த மருந்தை உற்பத்தி செய்கிறது. இதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தவர், உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா கங்கொல்லி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் பை என்பது தெரிய வந்துள்ளது.

இவர் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர், 2012ல் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர். தற்போது கறுப்பு பூஞ்சை நோய் சரிபடுத்தும் சிறப்பு மருந்தாக திகழ்கிறது.வெவ்வேறு தொற்று நோய்களுக்காக மேலும் மூன்று மருந்துகளையும் அவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது கொரோனா குணப்படுத்துவதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.


= = = =

24 மணி நேரம் செயல்படும் மினி ஆம்புலன்ஸ். 


= = = =

கனியும் காலம் விஞ்ஞானி கையில்!

தக்காளி எப்போது பழுக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் வித்தையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தக்காளியின் குறிப்பிட்ட ஒரு மரபணுவை திருத்துவதன் மூலம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினர் இதை சாதித்துள்ளனர்.

தக்காளி காயாக இருப்பது முதல், சதைப் பற்றுடன் மெல்லக் கனிந்து பழமாவது வரை பல தன்மைகளை தருவது, 'பிளாஸ்டிட்' என்றபுரதத்திற்கு பெரும் பங்கு உண்டு.இந்த ஒற்றை புரதத்தை கண்டுபிடித்ததன் மூலம், தக்காளி பழுக்கும் தன்மையை கட்டுப்படுத்தலாம்.

அதாவது, விரைவாக பழுக்கவோ அல்லது மெதுவாக கனியவோ செய்யலாம்.இதனால், நிலத்தில் இருந்து கிளம்பி, பெட்டி களில் அடுக்கப்பட்டு, கிடங்குக்கு போய், பிறகு கடைகளை அடைந்து, அங்கிருந்து வீடுகளிலுள்ள குளிர்சாதன பெட்டிகளை அடைகிறது தக்காளி.இந்த பயணத்தில், எப்போது அது கனிந்து பழமாக வேண்டும் என்பதை விஞ்ஞானிகளால் தீர்மானிக்க முடியும்.

உலகெங்கும் சமையலுக்கு மையமாக இருக்கும் தக்காளி கனியும் காலத்தை கட்டுப்படுத்த முடிந்தால், விளைந்த தக்காளி வீணாவதை தடுக்கலாம்.மேலும், இதே நுட்பத்தை, பிற காய், கனிகளுக்கும் பயன்படுத்த முடியும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் துரை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

= = = =
தண்ணீர் சுரக்கும் செயற்கை 'மரம்!'

குடிக்க சொட்டுத் தண்ணீர் கிடைக்காத இடத்தில்கூட, அசுத்தமடைந்த நீர் கிடைப்பது விந்தை தான். அதேபோல காற்றில், குறிப்பாக இரவு நேரக் காற்றில் ஈரப்பதம் நிறைந்திருக்கிறது. இந்த இரண்டையும் வைத்து, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கலாம் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

பாலைவனத்தில் கள்ளிச் செடிகள் எப்படி காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன என்பதை கவனித்து, அதே போல, நேனோ பரப்புகளை கொண்ட, நுண் மரம் போன்ற அமைப்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஹைட்ரோ ஜெல்லால் ஆன இந்த அமைப்பு, பகலில் சூரிய வெப்பத்தை உள்வாங்கி, அடிப்பகுதியில் உள்ள நீரை ஆவியாக்கி, அந்த ஆவியை ஒரு கலனில் குளிர்வித்து துாய நீராக மாற்றித் தருகிறது.இந்த அமைப்பின் மேற்போர்வையை நீக்கி னால், இரவில், காற்றிலுள்ள நீர் திவலைகளை ஈர்த்து சேகரித்து தருகிறது.

புதுமையான நுண் மரம், 1 சதுர மீட்டருக்கு, ஒரு நாளைக்கு, 34 லிட்டர் துாய தண்ணீரை செலவின்றி சேமித்து தரும். எனவே தான் இதை, 'தண்ணீர் சுரக்கும் மரம்' என, கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

= = = =

கூரையில் ஒட்டும் சூரியத் தகடு!


கடந்த சில ஆண்டுகளாக, சூரிய மின் தகடுகள் தயாரிப்பில் செலவைக் குறைக்க பல கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இது யாரும் அதிகம் எதிர்பாராதது. சிங்கப்பூரைச் சேர்ந்த 'மேக்சியான் சோலார் டெக்னாலஜிஸ்' நிறுவனம், 'மேக்சியான் ஏர்' என்ற சூரிய மின் தகடு களை உருவாக்கியுள்ளது. இந்த தகடுகளுக்கு வழக்கமான அலுமினிய சட்டகங்கள், திருகாணிகள், கண்ணாடி மேற்பரப்பு போன்றவை தேவையில்லை.

மாறாக, எந்தவித கட்டட மேற்கூரையிலும் மேக்சியான் ஏர் தகடுகளை, 'வால்பேப்பர்' போலவே ஒட்டிவிட முடியும்.ஏராளமான உலோகங்களை தவிர்த்திருப்பதால், எடை குறைவாகவும், வளையும் தன்மையுடனும் உள்ள மேக்சியான் ஏர் சூரியப் பலகைகள், சூரிய ஒளியில் 20.9 சதவீதத்தை மின்சாரமாக மாற்றும் திறன் கொண்டது.மேக்சியான் ஏரை கட்டடங்களின் பக்கவாட்டிலும் ஒட்டிவிட முடியும்.

இது போன்ற கவர்ச்சிகரமான வசதிகள் இருப்பதால், நகர்ப்புறங்களில் பெரிய கட்டடங்களில் பயன்படுத்த, மேக்சியான் ஏர் தகடுகளை விரும்பி வாங்குவர் என எதிர்பார்க்கலாம். அதேபோல, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களும் இந்த மெல்லிய சூரியத்தகடுகளை நாடக்கூடும்.

= = = =
தொண்டையில் வைரஸ்களின் வளர்ச்சியை தடுப்பது எப்படி?

மதுரை: வருமுன் காப்போம் என்பதற்கு தடுப்பூசி தவிர கொரோனாவுக்கு அலோபதியும், சித்த மருந்துகளும் கைவசம் இல்லை. ஆனால் நோய் தாக்கம் வந்தவுடன் வைரஸ் கிருமிகளின் தாக்கத்தை துளசி தண்ணீர், துாதுவளை ரசம், மிளகு குழம்பு சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம்.

இதுகுறித்து மதுரை சித்தா டாக்டர் ஜெயவெங்கடேஷ் கூறியதாவது: காய்ச்சல் வந்தால் 48 மணி நேரத்தில் சளி பரிசோதனை செய்வது நல்லது. தனிமைப்படுத்தி கொள்வது அவசியம். சிறிய வீட்டுக்குள் நான்கைந்து பேர் இருந்தால் தனியாக இருக்கமுடியாது. காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். மொட்டை மாடியில் காற்று வாங்கலாம். பாசிடிவ் என வந்தாலே தைரியத்தை இழந்து விடுகின்றனர். இதுதவறு. குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் மற்றவர்கள் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும். அந்த காலத்திலும் இப்போதும் அம்மைநோய் வந்தால் தனிமைப்படுத்தி பாதுகாக்கின்றனர்.
 
வீட்டில் வேப்பிலை கட்டி கிருமி வராமல் தடுப்பர். அது போல தான் கொரோனாவும்.ஒரு சிலர் காய்ச்சல் வந்து மறுநாள் சரியானால் கொரோனாவாக இருக்காது என மற்றவர்களோடு கலந்து பழகி பரப்பி விடுகின்றனர். இப்போதெல்லாம் கை கொடுப்பதால் கையை தொடுவதால் மட்டுமே கொரோனா பரவுவதில்லை. பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் எளிதில் பரவுகிறது. எங்கேயும் மாஸ்க் அணியாமல் செல்லக்கூடாது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் எல்லோரும் வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணிய வேண்டும். கதவை பூட்டி வைக்கக் கூடாது. சுத்தமான காற்று அவசியம். இயற்கையான காற்று நோயை குணப்படுத்தும்.

அலோபதி மருந்துகளுடன் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் குடித்தால் கிருமி பரவ விடாமல் தடுக்கும். பசி, தாகம், சுவையின்மை, வாசனையின்மை, நீர்ச்சத்து பிரச்னைகளை குணப் படுத்தும்.நிலவேம்பு குடிநீர் தினமும் ஒரு வேளை வீதம் 120 மில்லி ஒரு வாரம் சாப்பிடலாம். மாதந்தோறும் ஒரு வாரம் சாப்பிடலாம். வியாபாரிகள், வெளியில் மக்களோடு பழகுகிறவர்களாக இருந்தால் இரு வேளை சாப்பிடலாம். சளி இருந்தால் 3 நாட்கள் கபசுர குடிநீர் 60 மில்லி குடித்தால் போதும். நீர்ச்சத்து குறைவதை தடுக்க வெந்நீர் நிறைய குடிக்க வேண்டும். பழச்சாறு குடிக்கலாம். தொண்டை கரகரப்பாக இருந்தால் பழச்சாறுடன் மிளகுத்துாள் கலந்து கொள்ளலாம்.

மூக்கில் வாசனை வராதவர்கள் நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். சிறிது ஓமம், கிராம்பு தனித்தனியாக வறுத்து காட்டன் துணியில் கொட்டை பாக்கு அளவு இரண்டையும் ஒன்றாக கட்டி அவ்வப்போது முகர்ந்து பார்க்க வேண்டும். இதன் மூலம் வாசனை நுகரும் தன்மை சீக்கிரமே திரும்பும். அதிமதுரம், ஆடாதோடை, மஞ்சள், இஞ்சி, சிற்றரத்தை, கிராம்பு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள். இவற்றை ஒன்றிரண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிடலாம். வேப்பம்பூ ரசம், நெல்லிக்காய் துவையல், மிளகு குழம்பும் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கிய பின் அதில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு மூடி வைத்து வெதுவெதுப்பாக குடித்து வரலாம். துாதுவளை இலைகளை பறித்து ரசம், சூப் போல செய்து சாப்பிடலாம். இதனால் தொண்டையில் வைரஸ் கிருமிகளின் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

= = = =

38 கருத்துகள்:

  1. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு...

    வாழ்க தமிழ்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்றுக் குறைவதாகச் சொல்லும் செய்தி உண்மையாக இருந்து முற்றிலும் அழிந்து ஒழியப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. எல்லாச் செய்திகளுக்கும் நன்றி. அனைத்துமே நல்ல செய்திகள். சில தெரிந்தவை/சில தெரியாதவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      அசத்திவரும் தொற்று மன அளவில் ஏற்படுத்தும் பாதிப்பை
      விட்டு வெளியே வர வேண்டும்.
      தொற்று இறைவன் அருளால் விலக வேண்டும்.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. ஐந்து ரூபாய்க்கு உணவு நல்ல உள்ளம் வாழ்க.

    இப்படிப்பட்டவர்கள் தேர்தலில் சுயேட்சையாக நிற்க வேண்டும்.

    ஆனால் மதி கெட்ட மா'க்கள் தோற்கடித்து அனுப்புவார்கள்.

    பதிலளிநீக்கு
  7. அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.

    சிவா ஓட்டல் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்.

    24 மணி நேரம் செயல்படும் மினி ஆம்புலன்ஸ் அதுவும் இலவசமாக உதவும் வியாசை இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  8. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே, வேம்பங்குடி பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் மகன் சிவசந்தோஷ், ////// மிகப் பெரிய சேவை நல்ல கண்டுபிடிப்பு.

    பதிலளிநீக்கு
  9. ஐந்து ரூபாய்க்கு உணவு நல்ல உள்ளம்,மற்றும் அனைத்து நல்ல செய்திகளுக்கும்
    மிக மிக நன்றி.

    24 மணி நேரம் செயல்படும் மினி ஆம்புலன்ஸ் அதுவும் இலவசமாக உதவும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்குமீ காலை வணக்கம்.🍅 தக்காளி கனிய வைக்கும் காலத்தை மரபணுவில் சிறு மாற்றம் செய்வது மூலம் நாமே முடிவு செய்யலாம் என்னும் செய்தியைத் தவிர மற்ற செய்திகள் நன்று. இயற்கையை மாற்றுவதன் விபரீதங்கள் பின்னால் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விபரீதங்கள் ஒன்றும் நிகழாது என்று நான் நினைக்கிறேன்.

      நீக்கு
  11. தக்காளி எப்போது கனிந்து விழ வேண்டும் என்பது மட்டுமா?..

    அதைத் தின்ற மனிதன் எந்த கட்டிலில் போய் விழுவது என்பதையும் அதைத் தொடர்ந்த இன்ன பிற விஷயங்களையும் விஞ்ஞானியே முடிவு செய்கிறான்!..

    உத்தமம்...

    பதிலளிநீக்கு
  12. நான் இங்கே - தக்காளி பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு விட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதிகம் தக்காளி சேர்த்துக் கொள்வது இல்லை.

      நீக்கு
  13. அனைத்துச் செய்திகளும் பயனுள்ளவை தக்காளிச் செய்தி தவிர என்பது என் தனிப்பட்டக் கருத்து. 5 ரூபாய் சாப்பாடு சிவா மற்றும் இலவசமாக 24 மணி நேர மினி ஆம்புலன்ஸ் வாழ்த்துகள் நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. தக்காளிச் செய்தி மரபணு மாற்றப்பட்டது மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. ஹைப்ரிட்/கலப்பினம் என்பது வேறு மரபணு மாற்றப்பட்டது/ஜெனிட்டிக்கலி மாடிஃபைட் வேறு.

    இப்போது சுழற்றி அடிக்கும் இந்த மாயாவி கூட அப்படி உருவானதுதான் என்றும் சில கட்டுரைகள் சொல்கின்றன. இயற்கை என்றால் இத்தனை தூரம் பரவி அழிக்காது கொஞ்ச காலத்தில் அது வலு இழந்துவிடும் ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்டதால்தான் இத்தனைப் பேரழிவு என்ற வாதமும் இருக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அருமையான செய்திகள்.
    மறபணு மாற்றம் தவிர்க்கமுடியாதது என அணுமானிக்கிறேன்.
    மனிதன் எப்போதும் தன் சுற்றத்தை மேன்படுத்த நினைப்பவன்.
    அது டிரையல் எறர் முறையிலேயே நடைபெறும்.
    இத்தோடு வியாபார நலன்களும் சேர்ந்துவிட்டால் அதை தவிர்க்கவே முடியாது.

    பதிலளிநீக்கு
  16. அனைத்தும் பயனுள்ள‌ செய்திகள்! ஐந்து ரூபாய்க்கு உணவளிக்கும் அந்த நல்ல மனிதரை வாழ்த்துவோம்!
    இங்கும் ஸ்புட்னிக் தடுப்பூசி போடுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
  17. நம்மூரில் ஸ்புடினிக் வந்துவிட்டதா?

    அனைத்துச் செய்திகளும் அருமை. 5 ரூபாய்க்கு உணவளிக்கும் இளைஞர் சிவா மற்றும் ஆக்சிஜன் இலவச சேவை ஆட்டோவில் பொருத்திச் செய்யும் அதுவும் 24 மணி நேரம் அருமை...வாழ்த்துவோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் உள்ளத்தைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  19. அனைத்துமே அருமையான செய்திகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!