சனி, 15 மே, 2021

பயம் எதுக்கு; தைரியமா இருங்க! கொரோனா குறித்த அச்சம் தவிர்ப்போம்.

 

மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி திகந்திகா போஸ், கொரோனா வைரசை அழிக்கும் முக கவசத்தை கண்டுபிடித்துள்ளார்.   

இது குறித்து திகந்திகா போஸ் கூறியதாவது:இயற்கையிலேயே துறுதுறுவென ஏதாவது செய்து கொண்டிருப்பேன். அப்படி கண்டுபிடித்தது தான், மூன்றடுக்கு முக கவசம். முதல் அடுக்கில் துாசியை வடிகட்டும் மின்காந்த அணுக்கள் உள்ளன. அதை கடந்து இரண்டாவது அடுக்கின் வழியே காற்று, மூன்றாவது அடுக்கிற்குள் செல்லும். அப்போது அங்குள்ள சோப்பு கரைசல், கொரோனா வைரசை அழித்து, துாய்மையான காற்றை சுவாசிக்க வகை செய்கிறது. இயல்பாகவே சோப்பு கரைசலுக்கு கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளது அனைவருக்கும் தெரியும். கொரோனா பாதித்தவரிடம் இருந்தும், வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் காக்கும் இந்த முக கவசத்திற்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளேன்.  

==================================================================================================

வடசென்னை இளைஞர்கள் இணைந்து, கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திய, ஆட்டோ ஆம்புலன்ஸ்களை செயல்படுத்தி வருகின்றனர்.


சென்னையில், கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ மனைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.எனவே கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில், வட சென்னை இளைஞர்கள் இணைந்து, கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திய, ஆட்டோ ஆம்புலன்சை செயல்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம், மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளை, ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவமனைக்கு, இலவசமாக அழைத்து செல்கின்றனர். மேலும் மருத்துவமனைகளில், படுக்கை வசதிகள் குறித்து, விசாரித்து அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

=======================================================================

நாடு முழுவதும் கபசுரக் குடிநீர்: கொரோனாவை கட்டுப்படுத்த 'ஆயுஷ்' நடவடிக்கை.

புதுடில்லி: கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், நாடு முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ்-64 மற்றும் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீரை வழங்கும் மாபெரும் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் துவக்கியுள்ளது.

அறிகுறியற்ற, லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகள், பொதுவான சிகிச்சையுடன் ஆயுஷ்-64 மற்றும் கபசுரக் குடிநீரை எடுத்துக் கொள்வது சிறந்த பலனை வழங்கியிருக்கிறது. மேலும், இந்த இரண்டு மருந்துகளும் சிறப்பாகச் செயல்படுவதாக பலதரப்பட்ட மருத்துவச் சோதனைகளிலும் தெரியவந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), மத்திய ஆயுஷ் அமைச்சருமான (கூடுதல் பொறுப்பு) கிரண் ரிஜிஜு நாடு முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ்-64 மற்றும் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீரை வழங்கும் மாபெரும் திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

இத்திட்டத்தின் வாயிலாக, வெளிப்படைத் தன்மை வாய்ந்த வகையிலும், தரமான முறையிலும் ஏழை, எளிய மக்களுக்கு மருந்துகள் சென்றடைவதை உறுதி செய்யும். அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏராளமான நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறு கட்டங்களாக இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. சேவாபாரதி, இதன் பிரதான ஒருங்கிணைப்பாளராக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

= = = =

= = = = 


பயம் எதுக்கு; தைரியமா இருங்க! கொரோனா குறித்த அச்சம் தவிர்ப்போம். 

பொள்ளாச்சி : 'கிடைத்த நேரத்தில், தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் சுய பரிசோதனை செய்து திறமைகளை மேம்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா குறித்து அச்சம் கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,' என, மனநல டாக்டர் மற்றும் ஆலோசகர்கள் தெரிவித்தனர். பொள்ளாச்சி பகுதியில் தினமும், 50 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகிறது. கடந்த சில நாட்களாக, பொள்ளாச்சி நகரம், வடக்கு, தெற்கு, ஆனைமலை, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில், தினமும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம், இந்த எண்ணிக்கை, 230யை கடந்தது. மேலும், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு, சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள், மக்களிடம் மன உளைச்சலையும், தேவையில்லாத அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாகிறது.

வீண் பயத்தை தவிர்த்து, மனசை 'ரிலாக்ஸ்' ஆக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என, மனநல டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மன நல டாக்டர் கிருத்திகா, மனநல ஆலோசகர் சிவா கூறியதாவது: அச்சம் என்பது எந்தவொரு மாற்றங்களுக்கும் சாதாரண எதிர்வினையாகும். அச்சத்தினால் தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால், பயத்தை நமது வாழ்க்கையை கட்டுப்படுத்த அனுமதித்தால், நம்மால் எந்தவொரு ஆக்கப்பூர்வமான செயல்களையும் செய்ய முடியாது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதுடன், தேவையற்ற பதற்றமும் கொள்கின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கை கழுவுதல் போன்றவற்றை கடைபிடித்து சுகாதாரமாக இருப்பதுடன், தேவையற்ற நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.கொரோனா தொற்று குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஆனால், தேவையற்ற எதிர்மறையான தகவல்களை மனதுக்குள் கிரகிப்பதால், மனச்சோர்வு, மனபயம், துாக்கமின்மை போன்றவை ஏற்படும்.

தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி, தேவையான செய்திகளை மட்டும் பார்க்கவும்; நாள் முழுக்க கொரோனா சம்பந்தப்பட்ட செய்திகளை பார்த்து பதற்றப்பட வேண்டாம். தொலைபேசி மற்றும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் துாங்க ஆரம்பிக்கும் நேரமும்; எழும் நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். போதுமான நேரம் துாங்க வேண்டும். தினமும், அரை மணி நேரம் முதல், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளையும், காய்கறி, பழங்களை உண்ண வேண்டும். புகை பிடித்தல் மற்றும் மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

தினமும் குடும்ப உறுப்பினர்களுக்கு நேரத்தை ஒதுக்கவும் மற்றும் நண்பர்கள், உறவினர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசலாம்.தோட்டக்கலை, ஓவியம், சமையல், செல்லப்பிராணிகள் வளர்ப்பது போன்ற, மனதுக்கு பிடித்த ஏதாவது ஒரு பொழுது போக்கில், வாரந்தோறும் சில மணி நேரம் செலவிட வேண்டும். மனதுக்கு ஊக்கமளிக்கும் புத்தங்களை படிக்கலாம்.ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட, ஏதாவது ஒரு செயலை சிறப்பாய் செய்வது நன்று; நம்முடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பற்றி கவலைப்படுவதை காட்டிலும், கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களை பற்றி ஏதாவது செய்ய வேண்டும்.

கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பதை தவிர்த்து, நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். மனம் அலைபாயாமல் இருப்பதற்கு, ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்கான முயற்சியை செய்து வெற்றி காணலாம்.தற்போது கிடைத்துள்ள நேரத்தில், தங்களை சுய பரிசோதனை செய்து தவறான எண்ணங்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தவிர்த்து, நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

= = = = 

டுரோன்களை பயன்படுத்தி தடுப்பூசி வினியோகம்: தெலங்கானாவுக்கு அனுமதி. 

புதுடில்லி: வெகு உயரத்தில் செல்லும் டுரோன்களை பயன்படுத்தி தடுப்பூசிகளை வினியோகிக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள தெலுங்கானா அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தடுப்பூசிகளின் வினியோகத்துக்கு, பார்வையில் படக்கூடிய தொலைவிற்கு அப்பால் செல்லும் டுரோன்களைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள தெலுங்கானா அரசுக்கு நிபந்தனையுடன் கூடிய விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் டுரோன்களை பயன்படுத்தும் முயற்சிக்கு, ஆளில்லா விமானங்கள் விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் செல்லும் (VLOS) டுரோன்களை பயன்படுத்தி, கொரோனா தடுப்பூசிகளை வினியோகிக்கும் பரிசோதனையை மேற்கொள்ள தெலங்கானா அரசுக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது. டுரோன் பயன்பாடுகளை அதிகரிப்பதற்காக, கண்ணுக்கு எட்டாத உயரத்தில் (BVLOS) செல்லும் டுரோன்களைப் பரிசோதிப்பதற்கும் இந்த அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் இம்மாத இறுதியில் தொடங்கலாம்.

இந்த விலக்கு, நிலையான செயல்பாட்டு விதிமுறை (எஸ்ஓபி) வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்கு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இதில் எது முன்போ அதுவரை செல்லுபடியாகும்.

இம்மாதத் தொடக்கத்தில், பார்வைக்கு எட்டாத உயரத்தில் செல்லும் டுரோன்களைப் பரிசோதனை செய்ய 20 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் பரிசோதனைகள், டுரோன்கள் மூலமான டெலிவரி மற்றும் இதர முக்கியமான பயன்பாடுகளுக்கான ஒழுங்குமுறையை உருவாக்க உதவும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

= = = = 


= = = = =

பாக்.,கில் சாதித்த ஹிந்து பெண்.

இஸ்லாமாபாத், : பாகிஸ்தானில் கவுரவமிக்க, சி.எஸ்.எஸ்., எனப்படும், சென்ட்ரல் சுபீரியர் சர்வீஸ் தேர்வில், முதல் முறையாக, ஹிந்து பெண் ஒருவர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளார்.


பி.ஏ.எஸ்., எனப்படும், பாகிஸ்தான் ஆட்சிப்பணிக்கான அதிகாரிகள், சி.எஸ்.எஸ்., தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். சி.எஸ்.எஸ்., - 2020 தேர்வை, 18 ஆயிரத்து, 553 பேர் எழுதினர். இதில், 221 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில், சிந்து மாகாணம், ஷிகார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து பெண்ணான சனா ராமாசந்தும் ஒருவர். இதையடுத்து, இவர், பி.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இது பற்றி, சனா கூறுகையில், ''இந்த பெருமை முழுதும், என் பெற்றோரையே சாரும்,'' என்றார். பாகிஸ்தானில், சி.எஸ்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற, முதல் ஹிந்து பெண் என்ற பெருமை, சனாவுக்கு கிடைத்துள்ளது.
= = = = =

குறைந்த விலையில் திறன்மிக்க வென்டிலேட்டர்: இஸ்ரோ சாதனை. 

திருவனந்தபுரம்: மிகக் குறைந்த விலையில் 3 வகையான வென்டிலேட்டர்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.


latest tamil news


கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இஸ்ரோ நிறுவனம் குறைந்த செலவில் 3 வகை வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளது. இதேபோல குறைந்தவிலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் தயாரித்துள்ளது.


latest tamil news


திருவனந்தபுரத்தில் செயல்படும் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனர் சோம்நாத் கூறியதாவது: ஒரு வென்டிலேட்டர் தற்போது ரூ.5 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. நாங்கள் பிராணா, வாயு, ஸ்வாஸ்தா ஆகிய 3 வகையான வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளோம். இவை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த வென்டிலேட்டரை ஒரு லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.


வென்டிலேட்டர் தவிர குறைந்த விலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வடிவமைத்துள்ளோம். அடுத்த ஒரு மாதத்துக்குள் வர்த்தகரீதியாக புதிய வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உற்பத்தி துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

= = = = =


கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ்க்கான இடைவெளியை அதிகரிக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது


புதுடில்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ்க்கான இடைவெளியை 12 - 16 வாரமாக மாற்ற நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது, அந்த இடைவெளி 4-8 வாரமாக உள்ளது.


இது தொடர்பாக அந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளதாவது: கோவிஷீல்டு தடுபட்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் இடைவெளியை 12 - 16 வாரங்களாக அதிகரிக்க வேண்டும். இரண்டாவது டோசை 12- 16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால், அதன் பாதுகாப்பு அதிகரிக்கிறது.


கொரோனா தொற்று உறுதியானவர்கள், அதில் இருந்து மீண்ட 6 மாதங்கள் பின்னர் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள், தங்களுக்கான தடுப்பூசியை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பாலூட்டும் பெண்கள், பிரசவத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் எனக்கூறப்பட்டு உள்ளது. தற்போது , கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நிபுணர் குழுவின் பரிந்துரையானது, தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர்கள் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஒப்புதல் அளித்த பின்னரே, மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்


கோவாக்சின் தடுப்பூசிக்கான கால இடைவெளியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 4 வார கால இடைவெளியில் இரண்டாவது டோஸ் செலுத்தப்படுகிறது.

= = = = 

 

இந்தியா - பாக்., வீரர்கள் இனிப்புகள் பரிமாற்றம். 



ஜம்மு : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு - காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், நேற்று இனிப்புகளை பரிமாறினர்.


ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முதல் நாளன்று, ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இனிப்புகளை பரிமாறிக் கொள்வர்.இந்த நடைமுறை, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ள பகுதிகளில், இருநாட்டு ராணுவ வீரர்களும் நேற்று இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.



இது குறித்து ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரம்ஜான், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவவீரர்கள், இனிப்புகளை பரிமாறிக் கொள்ளும் நடைமுறை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, எல்லையோரம் அமைந்துள்ள தங்தர், குப்வாரா, கமன் அமன் சேது, சாக்கன் தாபாக் உள்ளிட்ட இடங்களில், இருநாட்டு ராணுவ வீரர்களும், இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

= = = =  

சர்க்கரை ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் உத்ராகண்ட் மாநிலம். 


ஹரித்வார்: இந்தியாவின் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் திரவநிலை ஆக்சிஜனை நிரப்ப உலோக சிலிண்டர்கள் பல பயன்படுத்தப்படுகின்றன. தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வேறுசில பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படும் உலோக சிலிண்டர்கள் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகின்றன.


இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க அந்த மாநில அமைச்சர் சுவாமி யதீஸ்வரானந்த் உத்தரவிட்டுள்ளார். ஹரித்வாரில் உள்ள கரும்பாலை தயாரிப்பு தொழிற்சாலைகள், ஆக்ஸிஜன் தயாரிக்க ஒப்புக்கொண்டதாக இதுகுறித்து அவர் கூறியுள்ளார். இதனையடுத்து உத்ராகண்ட் மாநிலத்திலும் சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் ஆக்ஸிஜன் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



எத்தனால் தயாரிக்கும் சர்க்கரை ஆலைகளில் செயற்கை ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்துவது எளிதான காரியம் என்று அமைச்சர் சுரேஷ் ராணா தெரிவித்துள்ளார். இதன்மூலமாக இந்த மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


= = = =

இந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது சி.இ.ஓ.,!


டொரன்டோ: பிட்காயினுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய அளவில் புழங்கக்கூடிய கிரிப்டோகரன்சி 'எதிரியம்'. அதன் இணை நிறுவனரும், சி.இ.ஓ.,வுமான 27 வயது இளைஞர் விட்டாலிக் பூட்டரின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,300 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை வழங்கியுள்ளார்.

கொரோனாவின் 2-ம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. கூகுள் நிறுவனம் ரூ.135 கோடியும், டுவிட்டர் ரூ.110 கோடியும் அறிவித்தன. இது போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசிகளுக்கு நன்கொடை வழங்கி வருகின்றன. இந்நிலையில் தான் எதிரியம் கிரிப்டோகரன்சி இணை நிறுவனர் விட்டாலிக் ரூ.7,300 கோடி நன்கொடை அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் பிறந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவரான விட்டாலிக் தனது 19 ஆவது வயதில் எதிரியம் கிரிப்டோகரன்சியை உருவாக்கினார். சிறந்த புரோகிராமரான இவர் பணப்பரிவர்த்தனையில் வங்கிகளிடம் அதிகாரம் செல்லாமல், அவை பணம் புழங்கக் கூடிய மக்களிடமே பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கினார். ஒரு எதிரியத்தின் இன்றைய (மே 13) இந்திய மதிப்பு ரூ.3.1 லட்சம் ஆகும். இவர் 500 எதிரியம் (ரூ.15 கோடி) மற்றும் 50 டிரில்லியன் ஷிபு இனு நாணயங்களை நன்கொடை அளித்துள்ளார்.


latest tamil news



இந்தியா கிரிப்டோகரன்சி நன்கொடைகளை பெறுவதற்காக கோவிட் கிரிப்டோ நிவாரண நிதி என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த நிதிக்கு எதிரியம், பிட்காயின், டோஜ், ட்ரான், காஸ்மாஸ், டெசோஸ் போன்ற பல கிரிப்டோகரன்சிகளை கொண்டு நிதியளித்தால் ஏற்றுக்கொள்வார்கள்.

இதுவரை இந்த நிதியிலிருந்து ஐ.சி.யூ வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்காக ராஜீவ் நினைவு அகாடமிக் நலவாழ்வு அறக்கட்டளைக்கு ரூ.55 லட்சமும், ரவுண்ட் டேபிள் அறக்கட்டளைக்கு ரூ.94 லட்சமும், ஏ.சி.டி. கிராண்ட்ஸ் மற்றும் யுனைடெட் வே ஆப் பெங்களூரு ஆகிய அறக்கட்டளைகளுக்கு ரூ.7 கோடியும் அளிக்கப்பட்டுள்ளன.

= = = =

 காணாமல் போன draft இப்போ திடீரென்று தோன்றியது. இதோ அதை போட்டுவிட்டோம். 

நன்றி. 

======== == 

51 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

    பதிலளிநீக்கு
  2. //எங்கோ மாயமாக மறைந்துவிட்டது. //


    படித்து கொண்டு இருக்கும் போதே செய்திகள் வந்து விட்டதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்தாறு செய்திகள் சேர்த்திருந்தேன்.  நினைவிலிருந்து இரண்டு செய்திகள் மட்டும் இப்போது சேர்த்தேன்.

      நீக்கு
    2. ஆனால் இது வேறு அவசரப் பதிவு.

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க என்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  4. இன்று அதிகாலை மூன்று மணிக்கு வெளியாகும்படிக்கு நேற்று மாலை ஒழுங்கு செய்து வைத்த பதிவு எப்படி மறைந்தது என்று தெரியவில்லை..

    இப்போது மீண்டும் வடிவமைத்து வெளியிட்டுள்ளேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ சனிக் கிழமையாகிய இன்றைய தினம் பெருமாளுக்குப் பாமாலையைச் சூட்டி விட்டேன்...

      நீக்கு
  5. திகந்திகா போஸ் வாழ்க வளமுடன்

    வடசென்னை இளைஞ்ர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.
    சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் சேர்ந்து வீட்டில் தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மதிய உணவு கொடுக்கிறார்களாம், கேள்வி பட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. நல்லவர்களை அடையாளம் காட்டிச் செல்கின்றன - செய்திகள்...

    பதிலளிநீக்கு
  7. இலவசம் என்பது தமிழ் வார்த்தையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலவசம் என்பது தமிழர்களுன் தமிழ் இனத்தின் வார்த்தை மற்றும் எதிர்பார்ப்பு

      நீக்கு
  8. நன்கொடை அளித்துவரும் நல்ல உள்ளங்கள் வாழ்க!
    புனித ரமலான் பண்டிகையின் வாழ்த்தையும், இனிப்பையும் பரிமாறிக் கொண்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. எவ்வித கட்டணமும் இன்றி.. - என்றும் சொல்லலாம் தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்குத்தான் அம்மா, "விலையில்லா" என்ற பதம் உபயோகித்தாரே

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம். மறைந்த செய்திகளை மறக்காமல் வெளியிட்ட உங்கள் நினைவாற்றலுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. திகந்திகா போஸின் திறமை வளரட்டும்.

    ரமதான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட இந்திய,பாக் வீரர்கள் சொல்லும் செய்தி கவனிக்கத் தக்கது.

    பதிலளிநீக்கு
  12. இன்று காலை எங்கள் பிளாக்கை குரோம் மூலமாக திறக்க முயற்சித்த போது danger this site is dubious. என்று மெசேஜ் வந்தது. சரி firefox மூலம் திறந்தபோது வெள்ளிக்கிழமை பதிவு வந்தது. தமிழ்மணம் முடக்கப்பட்டது போன்று யாரோ இதையும் ஹாக் செய்கின்றனர் என்று தோன்றுகிறது. கவனம் தேவை. முடிந்தால் wordpress லும் வெளியிடுங்களேன்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  13. மாயமாக மறைந்துவிட்டதா? சீனாக்காரன் எபி-யையும் ’கவனிக்கிறானா’!

    பதிலளிநீக்கு
  14. blogger-இல் சேமிக்கப்பட்ட, இன்றைக்கு வெளியாகும்படி வைத்திருந்த பல பதிவுகள் (என்னுடைய பதிவு உட்பட) Content Policy Violation என்ற செய்தியுடன் நீக்கப்பட்டு இருக்கிறது. மின்னஞ்சல் வழியே இந்தச் செய்தி வந்திருக்கிறது. உங்களுடைய மின்னஞ்சல்களைப் பாருங்கள்.

    பொதுவாக என்னுடைய எல்லா பதிவுகளையும் docs.Google.com தளத்தில் சேமித்து வைத்திருப்பது வழக்கம். அதனால் மீண்டும் உடனே பதிவிட முடிந்தது. நேரடியாக பிளாக்கர் தளத்தில் தட்டச்சு செய்தால் மீண்டும் வெளியிடுவதில் சிக்கல்கள் உண்டு. அதனால் இப்படி docs.Google.com தளத்திலோ Word file-ஆகவோ சேமித்து வைப்பது நல்லது.

    இன்றைய செய்திகள் அனைத்தும் சிறப்பு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பாவது என் மெயில் டிராப்டில் பேக்கப் வைத்திருந்தேன்.  சமீப காலமாய் அதுவும் இல்லை!  என்ன ஆகுமோ!  JC ஸார் சொல்லி இருபிப்பது வேறு கவலையைத் தருகிறது.

      நீக்கு
    2. ஆமாம் எப்போதுமே நம் பதிவுகளை வேர்ட் ஃபைலில் வைத்திருப்பது நல்லது. நான் எப்போதுமே வேர்ட் ஃபைலில் தான் வைத்திருப்பேன். நேரடியாக ப்ளாகரில் பதிவுகள் அடிப்பதில்லை.

      கீதா

      நீக்கு
    3. பிளாக்கரிடமிருந்து அந்த இரண்டு பதிவுகளும் "has beeb reinstated" என்று இப்போது மெயில் வந்திருக்கிறது!

      நீக்கு
  15. ”நான் ரோபோ இல்லை” என்று சொன்னால் தான் கருத்தை வெளியிடுவேன் என இரண்டு நாட்களாக பலருடைய பதிவுகளில் ஒரே அடம் பிடிக்கிறது! :) இங்கேயும்! ஹாஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இப்போதுதானா?   எங்களுக்கு பலநாட்களாய்...  நடுவில் ஓரிரு நாட்கள் மட்டும் இல்லாதிருக்கும்.  மறுபடி நான் ரோ போ இல்லை என்று டிக் செய்யச்சொல்லும்.  அடுத்த இரண்டு நாள் டிராபிக் லைட்டைக் காட்டு...   காரைக்கட்டு பஸ்ஸைக் காட்டு என்று படுத்தோ படுத்து என்று படுத்தும்.  இதில் என்ன சாதிக்கிறார்களோ...

      நீக்கு
  16. ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக்-V, Dr.Reddy's Laboratories -னால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் ஊசியை நேற்று ஹைதராபாதில் போட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஊசிகள் கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படவிருக்கும் ஸ்புட்னிக் ஜூன் இறுதியில்தான் கிடைக்குமாம்.

    பதிலளிநீக்கு
  17. நல்ல செய்திகள்...

    தீநுண்மி ஒழிந்தால் அனைத்தும் நலமே...

    இங்கு வலைப்பூ பற்றிய செய்திகள் வியப்பை தருகிறது...

    பதிலளிநீக்கு
  18. போற்றுதலுக்கு உரியோர்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  19. மனம் நிறைவுதரும் செய்திகள்..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  20. செய்திகள் எல்லாம் போட்டிருக்கிறீர்களே! வட சென்னை இளைஞர்களின் பணி மிக மிகச் சிறப்பானது.

    மாஸ்க் நல்ல விஷயம். திகந்திகாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. வித்தியாசமான மாஸ்க்! திகந்தி வாழ்க. பாராட்டுகள்! விலை எவ்வளவுஇருக்குமோ?

    வட சென்னை இளைஞர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள். நல்ல சேவை!

    பூஞ்ச் எல்லை நோட் செய்து கொள்ளச் சொல்கிறது. நல்ல விஷயம்.

    என்ன படித்தாலும் இந்த க்ரிப்டோ கரன்சி பற்றி மட்டும் சுத்தமாக மண்டையில் ஏற மாட்டேங்குது. புரிவது கடினமாக இருக்கிறது.

    எப்படியோ மாயமாய் மறைந்த செய்திகளுக்குப் பதில் ஒப்பேற்றிய செய்திகள் அனைத்தும் நல்ல செய்திகள்!

    கீதா



    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்ன படித்தாலும் இந்த க்ரிப்டோ கரன்சி பற்றி மட்டும் சுத்தமாக மண்டையில் ஏற மாட்டேங்குது. புரிவது கடினமாக இருக்கிறது.//அப்போ பிட் காயின் புரிஞ்சுடுத்தா? ஹிஹிஹி, நான் அவ்வளவெல்லாம் சமத்து இல்லை. :)

      நீக்கு
  22. திகந்திகாவின் மாஸ்க் போட்டுக்க/கழட்டக் கஷ்டமாய் இருக்கும் போலே! இந்தச் செய்தியைத் தவிர்த்த மற்ற செய்திகள் பார்த்தேன்/படித்தேன்.

    பதிலளிநீக்கு
  23. சாதாரணமாக எனக்குத் தான் இந்த மாதிரி மாஜிக்கெல்லாம் நடக்கும். இன்னிக்கு கௌதமன், ஶ்ரீராம், வெங்கட் ஆகியோர் மாட்டிக்கொண்டிருக்காங்க. என்னிக்கு நானோ?

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களைச் சில தினங்களாகக் காணவில்லையே...

    அவர்களது கணினியில் என்ன பிரச்னையோ!?...

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    என் அண்ணா (ஒரே அண்ணா, திருநெல்வேலியில் வசித்து வந்தவர்.) கடந்த திங்களன்று (மே.10 தேதி) காலை 9 மணிக்கு இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற துயரச் செய்தி வந்தது. இன்று வரை அதிலிருந்து மீண்டு வர இயலாமல் தவிக்கிறேன். இந்த காலகட்டத்தில் இங்கிருந்து உடனே அங்கு செல்ல முடியாமலும், என் மன்னிக்கும், அருகிலிருந்து ஆறுதல் கூற முடியாமலும் நான் படும் வேதனை ஆண்டவனுக்கு கண்டிப்பாக புரியும். "அவன்" தரும் சோதனைகளை தாங்கும் மன வலிமைகளையும் அவன்தான் தர வேண்டும். வேறு வழி..? உங்கள் அனைவரிடமும் கூறுவது சற்று ஆறுதலை தருமென தகவல் தருகிறேன்.

    அன்புடன்.
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கேட்க நினைச்சேன். ஆனால் அவங்க வேலைகள் அதிகம்னு சொல்வாங்களேனு நினைச்சேன். இது ரொம்பவே அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. இப்படி உறவுகளைப் பிரித்து வைத்து ரொம்ப முக்கியமான காலங்களிலும் ஒருவருக்கொருவர் சந்திக்கவோ ஆறுதல் வார்த்தைகளைக் கூறவோ முடியாமல் மக்கள் படும் துயரம்! ஆண்டவன் ஏன் இப்படி எல்லாம் சோதனைகளைக் கொடுக்கிறான்? என்ன தான் நாம் ஆறுதல் வார்த்தைகள் கூறினாலும் இதெல்லாம் ஈடு செய்ய முடியா இழப்பல்லவா? தாங்கிக் கொள்ளும் மனோ வலிமையைத் தரப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. இதை எல்லாம் பார்க்கும்போதும்/கேட்கும்போதும் ஏன் இணையத்துக்கு வந்தோம் என ஆகி விடுகிறது. ஆனாலும் இப்போதைய நாட்களைப் போன்ற கடினமான நாட்கள் இது வரை பார்த்ததே இல்லை. :(

      நீக்கு
    3. அடடா... எவ்வளவு துயரம்... கடைசி வழியனுப்பிற்குக்கூடப் போக முடியாமல் இந்த கொரோனா படுத்தும் பாடு....

      கமலா ஹரிஹரம் மேடத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள். உங்களுக்கு இந்தத் துயரத்தைத் தாங்கிக் கடக்கும் வலிமையைத் தரப் ப்ரார்த்தனைகள்.

      நீக்கு
    4. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களது அண்ணன் மறைவுச் செய்தியறிந்து வருத்தம் மேலிடுகின்றது.. எத்தனை எத்தனை துயரங்கள்.. எதைத் தான் தாங்குவது..

      ஆறுதல் ஏதும் சொல்ல முடியாமல் -
      உற்ற உதவி ஏதும் செய்ய முடியாமல் -
      எப்பேர்ப்பட்ட வேதனை...

      எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே ஆறுதலையும் தேறுதலையும் அளிக்க வல்லவன்...

      அவனையே சரணடைவோம்..

      அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்...

      ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி..

      நீக்கு
  26. இஸ்ரோ என்று விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யம் புகைப்படம் கண்டேன். படத்தில் இடது பக்கம் வெள்ளை தூணின் முதல் மாடியில் எனது அலுவலக அறை. 12 வருடங்களுக்கு முன்பு. நினைவுகைளை தூண்டியமைக்கு நன்றி. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  27. நல்ல செய்திகளுக்கு நன்றி.
    எனக்கும் நேற்று ஒரு அதிசங்கடமான நாள். எல்லாமபாயகரம் என்று அறிவிப்பு. ஈமெயில் மட்டும் வந்தது.

    இதோ இன்று அந்த செய்தி வரவில்லை.
    ஏன் இந்த ப்ளாகர் சொதப்பல் என்று புரியவில்லை.
    அனைவரும் நலமுடன் இருக்க
    பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ - திடீரென்று தணிக்கை செய்கிறது கூகிள் தளம்.

      நீக்கு
  28. அன்பின் கமலா ஹரிஹரனுக்கு என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியவில்லை.
    இறைவன் மனம் நிறை
    தைரியத்தைத் தரவேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!