நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 2 ஜூலை, 2021
வெள்ளி வீடியோ : நேயர் விருப்பம் எங்கள் பிளாக் வலைவரிசை!
இன்று மூன்று நேயர் விருப்பப் பாடல்கள்.
முதலில் 1962 ல் வெளியான பாசம் திரைப்படத்திலிருந்து ஜானகி அம்மா பாடிய ஜல்ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி. பாடலை விரும்பிக் கேட்டிருப்பவர் சசிகலா விசுவேஸ்வரன். தினமும் எழுந்ததும் முதல்வேலையாக எங்கள் பிளாக் படிப்பது அவர் வழக்கம்.
பாசம் திரைப்படம் டி ஆர் ராஜகுமாரியின் சொந்தத்தயாரிப்பு. தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் திரும்பி விட்டது என்றும், படம் 93 நாட்கள் ஓடியது என்றும் சொல்கிறார்கள், அது என்ன 93 நாள் கணக்கோ.. கொஞ்சம் பணத்தைக் கொடுத்து வழக்கம்போல 100 நாட்கள் ஓட்டி இருக்க மாட்டார்களோ..! எம் ஜி ஆரின் அம்மா செண்டிமெண்ட் இருக்கும் படம். டி ஆர் ராஜகுமாரிதான் அம்மா. நான் படம் பார்க்கவில்லை! எம் ஜி ஆர் மரணிப்பதாக படம் முடிவதுதான் படத்தின் தோல்விக்கு காரணமாம். இயக்குனர் ராமண்ணாவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டு வந்த கண்டனக் கடிதங்கள் தமிழ்த்திரையில் எம் ஜி ஆரின் இடத்தை புரிய வைத்தன என்கிறார்கள்.
கவியரசரின் பாடல்களுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை.
வானத்தைப்போலே- விக்ரமன் படம். விஜயகாந்த் பிரபுதேவா என்று பலர் நடித்த திரைப்படம்.
2000 ம் வருடத்தில் வெளியான இந்தப் படத்தின் 'எங்கள் வீட்டில் எல்லா நாளும்' பாடலை விரும்பிக் கேட்டிருப்பவர் ஏகாந்தன் ஸார்.
உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்து செல்லுமுன் கடும் பயிற்சி. Fitness regimen. கிரிக்கெட்டர் அஷ்வின் ஒரு தமிழ் சினிமாப் பைத்தியம் என்பது ட்விட்டர் உலவிகளுக்குத் தெரிந்ததே! உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது சினிமாப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே மனசை லேசாக்கிக்கொள்வது வழக்கமாம். சமீபத்தில் அப்படி ஒரு தருணத்தில், ஜிம்மில் நுழைந்திருக்கிறார் சக இந்தியா ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா. அஷ்வினின் ‘பாடல் லிஸ்ட்’-ஐ ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே அவரிடம் சொன்னாராம் : ’எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்!’ மேலும், அந்தப் பாடல் என்னதான் சொல்கிறது, பின்புலம் என்ன போன்றவை குறித்தும் ஜடேஜா, அஷ்வினிடம் ஆசையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டாராம். ஒரு வெள்ளியில், ஜடேஜாவின் விருப்பமான அந்த எஸ்பிபி-யைப் போடலாமே.. காதுகொடுக்க மற்றவர்களுக்கும் விருப்பம் இருக்கும். கேட்கையில், ’அண்ணாத்தே’ மீனா மாதிரி பயமுறுத்தாத, ’வானத்தைப் போல’ ஸ்லிம் மீனாவையும் கொஞ்சம் மீள்பார்வை...!என்று கேட்டிருக்கிறார்.
ஜடேஜாவுக்கு ஏன் பிடித்தது என்பதற்கு இங்கே இருக்கிறது விடை!
பாடலை பாலா விஜய், நா முத்துக்குமார் என்று இருவரும் எழுதி இருந்தாலும் இசை எஸ் ஏ ராஜ்குமார் என்று சொல்லலாம். ஆனால் இந்தப் பாடலுக்கு இசை எஸ் ஏ ராஜ்குமார் என்று சொவ்லதா, ராஜேஷ் ரோஷன் என்று சொல்வதா? ஜடேஜாவுக்கு இந்தப் பாடல் பிடித்துப் போனதில் வியப்பில்லை. அனுராதா பட்வால் அற்புதமான பாடகி. அவர் குரலில் 1999 ல் வெளியான படம் தாக். இதே பெயரில் பழைய ராஜேஷ்கன்னா படம் ஒன்று உண்டு. அதில் ஒரு அதி அற்புதமான கிஷோர் பாடலும், அற்புதமான கிஷோர் டூயட்டும் உண்டு. இப்போது அதுபற்றி பேச வேண்டாம்.
வானத்தைப்போல படம். எந்த கேட்டதும் நடக்காத நல்லது மட்டுமே நடக்கும் படம். பாஸிட்டிவ் அலையை பரப்பிய படம்.
எஸ் பி பி யின் குரலில் (கூட அருண்மொழி, சுஜாதா மோகனும் உண்டு.
எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல்
எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்
பாடும் பறவை கூட்டங்களே
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதை பாருங்கள்
சிலுவைகளை நீ சுமந்து
மாலைகள் எமக்கு சூட்டினாய்
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம்
வானத்தை போல மாறினாய்
விழியோடு நீ குடையாவதால்
விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமழை
எங்கள் சொந்தம் பார்த்தாலே
சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே
பூவின் ஆயுள் கூடுமே
இரண்டு கண்கள் என்றாலும்
பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான்
உள்ளம் என்றும் ஒன்றுதான்
ஒரு சேவல் தான் அடைகாத்தது
இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்
எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல்
எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்
எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
மூன்றாவது பாடல் இடம்பெற்ற திரைப்படம் 'சுமதி என் சுந்தரி'. சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நாகேஷ் நடித்திருக்கும் இந்தப் படம் 1971 ல் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். வங்காளத் திரைபபடம் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது. கண்ணதாசன் எல்லாப் பாடல்களையும் எழுதி இருந்தாலும் பானு அக்கா விரும்பிக் கேட்டிருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் வாலி. இசை எம் எஸ் விஸ்வநாதன். சித்ராலயா கோபுவின் வசனங்களால் படம் இன்னும் சுவாரஸ்யமானது. ஓரிரு பி சுசீலா பாடல்களும், எஸ் பி பி பாடிய 'பொட்டு வைத்த முகமோ' பாடலும் இந்தப் படத்தில் உள்ளன.
மிகச் சிறந்த நாளுக்கான வாழ்த்துகளும் வணக்கங்களும். சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கும் அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம். அனைவருக்கும் வரும் காலம் நிறைவான அமைதியும் ஆரோக்கியமும் கிடைக்க இறைவன் அருள வேண்டும்.
முதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல். அருமையான இசையுடன் ஜானகியின் குரலில் கேட்கக் கேட்க இனிமை. அடுத்த இரு பாடல்களும் கேட்டிருப்பதோடு இரண்டு படங்களும் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். ஆனாலும் இந்த "சுமதி என் சுந்தரி" படத்துக்கும் "அஞ்சல் பெட்டி 520" என்னும் படத்துக்கும் எனக்குக் கொஞ்சம் இல்லை. நிறையவே குழப்பம். :)))))
திருமதி சசிகலா விஸ்வேரனின் விருப்பம் எங்கள் காலப் பாடல். மிகப் பிரபலமான பாடல். படம் வெற்றி அடையவில்லைதான். அதுவும் அவரே இறப்பது யாராலும் ஒத்துக் கொள்ள முடியாத நேரம். எம் ஜிஆர் நன்றாக நடித்த படம் என்று சொன்னார்கள்.
சரோஜாதேவியின் தேரேது பாடலில் ,எம் ஜிஆர், இனம் பார்த்து குணம் பார்த்து என்று சந்தோஷமாக முடியும் பாடலும் நன்றாக இருக்கும். ஜானகியின் குரலில் ஜல்ஜல் பாடல் மிக மிக இனிமை. அந்த சின்ன வில்வண்டியும் மிக அழகு:)
//ஆனால் 93 நாட்கள் ஓடியும் படம் வெற்றியில்லை என்று சொல்லப்படுவது கொஞ்சம் ஓவர் இல்லை?!// 93மார்க் வாங்கிய பெண் அழுது கொண்டிருப்பாள், 35 மார்க் வாங்கிய பையன் சந்தோஷமாக இருப்பான். அது மாதிரியோ?:))
ஆம். மஹிமா சௌத்ரி. பர்தேஸ் (Pardes) 1997 படம். ஷாருக் கானோடு ஜோடிபோட்டு ஹிந்தியில் ஆரம்பித்தார் மஹிமா தன் கதையை. Hit film. Some good songs. ஏனோ அதிக நாள் மஹிமா நீடிக்கவில்லை. Personal problems...
எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிடித்த படம் சு.சுந்தரி. அதிலும் இந்தப் பாடல் படமெடுக்கப் பட்ட விதம் அழகு.
இன்றைய வெள்ளி பாடல்கள் நான்குமே அருமை. அடிக்கடி கேட்டு ரசித்தவை. அழகான கதாநாயகிகளின் அருமையான பாடல்கள். முதல் பாடல் இடம் பெற்ற திரைப்படம் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் இரண்டாவது வானத்தைப்போல பல முறை பார்த்து விட்டேன். (தொலைக் காட்சியில்தான்) எந்த சேனலில் ஒளிபரப்பினாலும், பாதியிலிருந்து பார்க்க நேர்ந்தாலும், தொடரும் முழு படத்தையும் பார்த்து விடுவேன்.அன்பு.பாசம், நல்லதை நினைப்பது போன்ற நல்ல கருத்துள்ள படம் அது. அது போல தவசி படமும் கதை நன்றாக இருக்கும். இரண்டிலும் நடிகர் விஜயகாந்த் நன்றாக நடித்திருப்பார்.
ஹிந்தி பாடல் காட்சி அடிக்கடி பார்த்து ரசித்துள்ளேன். படம் முழுவதும் பார்த்திருக்கிறேனா என்பது நினைவில்லை. சுமதி என சுந்தரியும் நல்ல நகைச்சுவை, கதையம்சம் நிறைந்த படம். அதையும் தொலைக் காட்சியில்தான் பார்த்திருக்கிறேன். (நிறைய படங்கள் திரையரங்கை விட இந்த தொ. கா. பெட்டியின் தயவில்தான். ) இன்றைய பாடல்கள் அனைத்தும் வெகு இனிமை. கைப்பேசியிலேயே அனைத்தையும் கேட்டு ரசிக்க வேண்டியிருப்பதால், மறுபடியும் ஒரு முறை நிதானமாக கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
'ஜல் ஜல் என் சலங்கை ஒலி..',எஸ்.ஜானகி பாடியிருக்கும் பாடல்களில் மிகவும் சிறப்பான ஒன்று.இது எம்.ஜி.ஆர் படம் பாடல் என்பதும், அந்த படத்தில் எம்.ஜி.ஆர். இறந்து விடுவார் என்பதும் புதிய செய்திகள். நான் இது 'போலீஸ்காரன் மகள்' படத்தில் இடம் பெற்ற பாடல் என்று நினைத்தேன்
எனக்கும் எம்ஜிஆர் படம்னு தெரியாது தான். ஆனால் போலீஸ்காரன் மகள் என நினைக்கலை. ஏனெனில் போலீஸ்காரன் மகள் மதுரை சிந்தாமணி திரையரங்கில் பார்த்திருக்கோம். படம் பார்த்துட்டு நான் அழுதேன் என்று அம்மா/அண்ணா எல்லோரும் கேலி செய்வார்கள்.
மிகச் சிறந்த நாளுக்கான வாழ்த்துகளும்
பதிலளிநீக்குவணக்கங்களும்.
சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கும் அன்பு ஸ்ரீராம்
இனிய காலை வணக்கம்.
அனைவருக்கும் வரும் காலம் நிறைவான
அமைதியும் ஆரோக்கியமும் கிடைக்க இறைவன் அருள வேண்டும்.
வணக்கம் வல்லிம்மா.. வாங்க... ரசனைக்கு நன்றி.
நீக்குமுதல்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இலங்கை வானொலியில் முன்பு தினமும் ஒலிக்கும்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடலும் ஸூப்பர்தான்.
சுமதி என் சுந்தரி பாம்பன் ஆயிஷா டூரிங் டாக்கீசில் பார்த்தேன்.
ஜானகி அம்மாவின் குரலில் முதல் பாடல் அருமையாக இருக்கும். நன்றி ஜி.
நீக்குஇன்றைய மூன்று தமிழ்ப்பாடல்களும் மிகவும் சிறப்பு. நான் நிறையதடவைகள் கேட்ட பாடல்கள்.
பதிலளிநீக்குஜல்ஜல் பாடல் சூப்பரோ சூப்பர்.
நன்றி நெல்லை... நான்காவதான ஹிந்தி கேட்கவில்லையா?!!
நீக்குஇன்னும் சிவாஜி ரசிகர் கீசா மேடத்தைக் காணவில்லையே...
பதிலளிநீக்குஅவர் அனேகமாக மூன்று பாடல்களையும் கேட்டிருப்பார்.
வருவார்... வந்துகொண்டே இருக்கிறார்...
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் @நெல்லை.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா.. வாங்க...
நீக்குமுதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல். அருமையான இசையுடன் ஜானகியின் குரலில் கேட்கக் கேட்க இனிமை. அடுத்த இரு பாடல்களும் கேட்டிருப்பதோடு இரண்டு படங்களும் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். ஆனாலும் இந்த "சுமதி என் சுந்தரி" படத்துக்கும் "அஞ்சல் பெட்டி 520" என்னும் படத்துக்கும் எனக்குக் கொஞ்சம் இல்லை. நிறையவே குழப்பம். :)))))
பதிலளிநீக்குகீதாமா,
நீக்குஇந்தப் படம் ஜெயலலிதா,
அஞ்சல்பெட்டி சரோஜாதேவி:)
ஹிஹிஹி, வல்லி, சில சமயம் இப்படித்தான் சொதப்புவேன். ஆனால் இரண்டு படங்களும் பார்த்திருக்கேனோ? சுமதி என் சுந்தரி நிச்சயமாய்ப் பார்த்தேன். :)))))
நீக்குஇப்போதான் மு மு தான் அழகோ அழகுன்னீங்க.. அதற்குள் அவர் நடித்த படத்தை மறந்து விட்டீர்களே!
நீக்குஅதை மறந்துட்டேன்னா சொன்னேன்! இரண்டுக்கும் கதாநாயகியை மாத்தி யோசிச்சுக்குழம்பிப்பேன். சு.எ.சு. நிச்சயமாய்ப் பார்த்தேன்/பார்த்தேன்/பார்த்தேன். ஜிவாஜி தானே ஈரோ?
நீக்குதிருமதி சசிகலா விஸ்வேரனின் விருப்பம்
பதிலளிநீக்குஎங்கள் காலப் பாடல்.
மிகப் பிரபலமான பாடல்.
படம் வெற்றி அடையவில்லைதான்.
அதுவும் அவரே இறப்பது யாராலும் ஒத்துக் கொள்ள முடியாத
நேரம். எம் ஜிஆர் நன்றாக நடித்த படம் என்று சொன்னார்கள்.
சரோஜாதேவியின் தேரேது பாடலில் ,எம் ஜிஆர்,
இனம் பார்த்து குணம் பார்த்து என்று சந்தோஷமாக
முடியும்
பாடலும் நன்றாக இருக்கும்.
ஜானகியின் குரலில் ஜல்ஜல் பாடல் மிக மிக இனிமை.
அந்த சின்ன வில்வண்டியும் மிக அழகு:)
ஆமாம் வல்லிம்மா.. ஆனால் 93 நாட்கள் ஓடியும் படம் வெற்றியில்லை என்று சொல்லப்படுவது கொஞ்சம் ஓவர் இல்லை?!
நீக்கு//ஆனால் 93 நாட்கள் ஓடியும் படம் வெற்றியில்லை என்று சொல்லப்படுவது கொஞ்சம் ஓவர் இல்லை?!// 93மார்க் வாங்கிய பெண் அழுது கொண்டிருப்பாள், 35 மார்க் வாங்கிய பையன் சந்தோஷமாக இருப்பான். அது மாதிரியோ?:))
நீக்குஸ்ரீராம், அப்போதெல்லாம் 150 நாள் ஓடினால் வெற்றி. 25 வாரங்கள் ஓடும்.
நீக்குஅந்த ரீதியில் சொன்னேன் மா.:)
எங்கள் வீட்டில் என்னாளும் கார்த்திகை மிக
பதிலளிநீக்குபாசிடிவ் பாட்டு.
குடும்பம் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று
படம் முழுதும் பாடல் முழுவதும் தோன்றும்.
நல்ல பாடலைத் தேர்ந்தெடுத்த
ஏகாந்தன் ஜிக்கு நன்றி.
மிகவும் பாசிட்டிவான ஒரு படம்.
நீக்கு..நல்ல பாடலைத் தேர்ந்தெடுத்த
நீக்குஏகாந்தன் ஜிக்கு..//
நான் எங்கே தேர்ந்தெடுத்தேன். எல்லாம் ஜடேஜாவின் ரசனைதான் ! தோனிக்குப் பிடித்த பாட்டு எதுன்னு இன்னும் தெரியல!
ஜடேஜாவுக்குப் பிடித்த பாடலும் நன்றாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குஅந்த நடிகை மஹிமா தானே.
எனக்குத் தெரியாது அம்மா.. எனக்கு ஹேமமாலினி தெரியும், மும்தாஜ் தெரியும், மாதுரி தீக்ஷித் தெரியும்... அப்புறம் கஜோல், ஜூஹி தெரியும்.
நீக்குஊங்கள் வயசு எங்களுக்குத் தெரிந்து விட்டது.
நீக்கு..அந்த நடிகை மஹிமா தானே.//
நீக்குஆம். மஹிமா சௌத்ரி. பர்தேஸ் (Pardes) 1997 படம். ஷாருக் கானோடு ஜோடிபோட்டு ஹிந்தியில் ஆரம்பித்தார் மஹிமா தன் கதையை. Hit film. Some good songs. ஏனோ அதிக நாள் மஹிமா நீடிக்கவில்லை. Personal problems...
ஆமாம், மும்பையில் பார்த்தோம்.
நீக்குஅமெரிக்கா வந்து போகும் படம்.
எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிடித்த படம் சு.சுந்தரி.
பதிலளிநீக்குஅதிலும் இந்தப் பாடல்
படமெடுக்கப் பட்ட விதம் அழகு.
நல்ல வண்ணம், நல்ல குரல்கள், நல்ல நடிப்பு.
தேர்ந்தெடுத்த பானும்மாவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
படம் மிகவும் சுவாரஸ்யமான படம். அதுவும் முதல் முறை பார்த்தபோது இருந்த சந்தோஷம் இருக்கிறதே...
நீக்குநன்றி அக்கா. ஸ்ரீராமுக்கு ரெண்டு வாரம் கழித்து நன்றி சொல்கிறேன்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா.. வாங்க...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க..
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வணக்கம் துரை செல்வராஜூ சார்.. வாங்க...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் நான்குமே அருமை. அடிக்கடி கேட்டு ரசித்தவை. அழகான கதாநாயகிகளின் அருமையான பாடல்கள். முதல் பாடல் இடம் பெற்ற திரைப்படம் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் இரண்டாவது வானத்தைப்போல பல முறை பார்த்து விட்டேன். (தொலைக் காட்சியில்தான்) எந்த சேனலில் ஒளிபரப்பினாலும், பாதியிலிருந்து பார்க்க நேர்ந்தாலும், தொடரும் முழு படத்தையும் பார்த்து விடுவேன்.அன்பு.பாசம், நல்லதை நினைப்பது போன்ற நல்ல கருத்துள்ள படம் அது. அது போல தவசி படமும் கதை நன்றாக இருக்கும். இரண்டிலும் நடிகர் விஜயகாந்த் நன்றாக நடித்திருப்பார்.
ஹிந்தி பாடல் காட்சி அடிக்கடி பார்த்து ரசித்துள்ளேன். படம் முழுவதும் பார்த்திருக்கிறேனா என்பது நினைவில்லை. சுமதி என சுந்தரியும் நல்ல நகைச்சுவை, கதையம்சம் நிறைந்த படம். அதையும் தொலைக் காட்சியில்தான் பார்த்திருக்கிறேன். (நிறைய படங்கள் திரையரங்கை விட இந்த தொ. கா. பெட்டியின் தயவில்தான். ) இன்றைய பாடல்கள் அனைத்தும் வெகு இனிமை. கைப்பேசியிலேயே அனைத்தையும் கேட்டு ரசிக்க வேண்டியிருப்பதால், மறுபடியும் ஒரு முறை நிதானமாக கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹிந்திப் பாடலும் நீங்கள் கேட்டு ரசித்துள்ளீர்கள் என்பது ஆச்சர்யம் கமலா அக்கா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. அவங்க...
நீக்குஇன்றைய நேயர் விருப்ப பாடல்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குமுதல் பாடல் மிகவும் பிடித்த பாடல் .
எல்லா பாடல்களையும் கேட்டேன்.
நன்றி.
ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.
நீக்கு'ஜல் ஜல் என் சலங்கை ஒலி..',எஸ்.ஜானகி பாடியிருக்கும் பாடல்களில் மிகவும் சிறப்பான ஒன்று.இது எம்.ஜி.ஆர் படம் பாடல் என்பதும், அந்த படத்தில் எம்.ஜி.ஆர். இறந்து விடுவார் என்பதும் புதிய செய்திகள்.
பதிலளிநீக்குநான் இது 'போலீஸ்காரன் மகள்' படத்தில்
இடம் பெற்ற பாடல் என்று நினைத்தேன்
எனக்கும் எம்ஜிஆர் படம்னு தெரியாது தான். ஆனால் போலீஸ்காரன் மகள் என நினைக்கலை. ஏனெனில் போலீஸ்காரன் மகள் மதுரை சிந்தாமணி திரையரங்கில் பார்த்திருக்கோம். படம் பார்த்துட்டு நான் அழுதேன் என்று அம்மா/அண்ணா எல்லோரும் கேலி செய்வார்கள்.
நீக்குமுன்பு பேசும்படம் படத்தில் அப்போது வெளிவந்த படங்களின் அஃதை காட்சி காட்சியாய் பிரசுரித்திருப்பார்கள். அப்போது படித்திருக்கிறேன் பாசம் பற்றி.
நீக்குஎன்னுடைய விருப்ப பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்கு..தினமும் எழுந்ததும் முதல்வேலையாக எங்கள் பிளாக் படிப்பது அவர் வழக்கம். //
பதிலளிநீக்குபிரச்சார பீரங்கி அதிர்கிறதே..
அட உண்மையைச் சொல்ல விடமாட்டேங்கறீங்களே... (க ப தங்கவேலு மாதிரி படிக்கவும்!)
நீக்கு..கையில் எதுவும் இல்லை என்றே..
பதிலளிநீக்குகண்ணில் உள்ளதைக் கொடுத்துவிட்டேன்..//
ஆண்களின் உலகம் சின்னாபின்னமாகிக் கிடப்பதன் காரணத்தை ஒரே வரியில் விளக்கிய மாகவிஞன்.
அதே சாரே...
நீக்குமூன்றும் அருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD
நீக்குஇன்றைய பதிவில் சொல்லி இருக்கும் விஷயங்கள் சிறப்பு. பாடல்கள் கேட்டு ரசித்த பாடல்களே.
பதிலளிநீக்குதொடரட்டும் பதிவுகள்.
தொடரலாம். நன்றி வெங்கட்.
நீக்குஅனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்! தொற்று முழுதும் நீங்கி மக்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!
பதிலளிநீக்குமலர்ச்சியான வரவேற்பு வானம்பாடி.. வாங்க...
நீக்கு"ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி" எனக்கு மிகவும் பிடித்த பாடல். "எங்கள் வீட்டில் எல்லா நாளும்" பாடலும் பிடிக்கும். நல்ல பாடல்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குநாங்களும் நன்றி.
நீக்குமூன்று பாடல்களுமே சிறப்பு
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் மூன்றுமே அருமை..
பதிலளிநீக்குஇனிமை.. பிடித்தமானவை..
ஜல்.. ஜல்.. - நினைவில் நிற்கும் பாடல். Janaki was a quiet performer in those days...
பதிலளிநீக்குபாடல்கள் கேட்டிருக்கிறேன். 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை '... பிடித்தமான பாடல்.
பதிலளிநீக்கு