செவ்வாய், 6 ஜூலை, 2021

சிறுகதை : பிராயச்சித்தம் - சியாமளா வெங்கட்ராமன் 

 பிராயச்சித்தம்

- சியாமளா வெங்கட்ராமன்  -

சந்தியா கோயிலில் முருகனை தரிசனம் பண்ணிவிட்டு பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தாள்.  

திடீரென்று  யாரோ அவள் கண்களை மூடினார்கள்.  சந்தியா "யாரது கோவிலில் கண்களின் மீது மூடி விளையாடுவது?" எனக்  கோபமாக கேட்டாள்.

கண்களிலிருந்து கையை எடுத்துவிட்டு முன்னால் வந்தவளைப் பார்த்ததும் கோபம் இன்னும் அதிகமாயிற்று  

"யார் நீ என் கண்ணை பொத்துவதற்கு?" என கேட்க... 

"என்னை தெரியவில்லையா?  நான்தான்உன்  ரேகா" என அவள் கூற......

"எனக்கு உன்னை தெரியாது" என சந்தியா கூறினாள்.  "கோவிலில் பொய் சொல்லாதே" என்று ரேகா கூற, சந்தியா விடுவிடுவென்று நடந்து கோவிலுக்கு வெளியே வந்து நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வேகமாகப் போய்விட்டாள்.

ரேகா கொஞ்ச நேரம் ஸ்தம்பித்து நின்று விட்டாள். கோவிலை விட்டு கிளம்பி தன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.  வாசல் கதவை சாத்தி விட்டு படுக்கையில் போய் விழுந்து விக்கி விக்கி அழுதாள்.

சந்தியாவும் ரேகாவும் சிறு வயது முதல் இணை பிரியா தோழிகள். இருவரும் ஒரே காலேஜில் சேர்ந்து கடைசி வருடம் பிஎஸ்சி படித்து கொண்டிருந்தார்கள்.  திடீரென்று ரேகா காலேஜ்க்கு வரவில்லை.

தங்கள்தோழிகளிடம் அதைப் பற்றி கேட்க, ஒருவருக்கும் தெரியவில்லை. சந்தியாவிற்கு அவள் புதிதாக மாறிய வீட்டின் முகவரியும் தெரியவில்லை.

எனவே என்ன செய்வது என்று புரியவில்லை.  சிறிது நாட்கள் கழித்து அரசல்புரசலாக அவளுக்கு திருமணமாகி விட்டது என சிலர் பேசிக் கொண்டார்கள். தன்னிடம் கூட சொல்லாமல் திருமணம் ஆகிவிட்டது என்று வருத்தப்பட்டாள்.  

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஆபீஸ் பியூன் வந்து பிரின்ஸ்பால் கூப்பிடுவதாக வந்து கூறினார். 

சந்தியா பிரின்ஸ்பல் ரூமுக்கு சென்றாள். அங்கு ரேகாவின் அப்பாவும் இன்னொருவரும் உட்கார்ந்திருந்தார்கள். பிரின்ஸ்பால் ரேகாவை பற்றி சந்தியாவிடம் கேட்டார். 

"ரேகா ஏன் காலேஜுக்கு வரவில்லை?  அவள் எங்கு இருக்கிறாள்>" என்பது போன்று பல கேள்விகள் கேட்டார். 

எல்லாவற்றிற்கும் சந்தியா தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாள்.

'அவளைப்பற்றி ஏதாவது தெரியவேண்டும் என்றால் அவள் புத்தகங்கள் அலமாரி முதலியவற்றை சென்று தேடுங்கள். ஏதாவது தடயம் கிடைக்குமெ'ன்று கூறி விட்டு வகுப்பிற்கு சென்றாள்.

வந்தவர்களும் சென்றுவிட்டார்கள். சில நாட்கள் கழித்து அவள் வீட்டிற்கு போலீஸ் கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டர் கூப்பிடுவதாக அவளையும் அவள் அப்பாவையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இதை வினோதமாகப் பார்த்தார்கள். 

ஸ்டேஷனில் ரேகாவைப் பற்றி விசாரித்தார்கள். எப்போதும் போல் ரேகாவை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாள். 'ரேகாவின் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் சந்தியாவை அரெஸ்ட் செய்ய வேண்டிய நிர்பந்தம் வரும் என்றும், அதனால் இந்த ஊரைவிட்டு போகக் கூடாது' என்று கூறி கையெழுத்து வாங்கிய பின் அனுப்பினார்கள்.

அன்று முதல் சந்தியாவின் அப்பா தினமும் பேப்பரில் இறந்த பெண்களைப்பற்றி செய்தி வந்தால் பார்ப்பதும் பயப்படுவதுமாக இருந்தவர், திடீரென்று ஒரு நாள் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்.  

இந்த செய்தி அவள் குடும்பத்தை நிலைகுலைய வைத்தது. அவர்கள் இந்த வீட்டைக் காலி செய்துகொண்டு வேறு பகுதிக்கு சென்றார்கள். சந்தியா 
பி எஸ்சி முடித்ததும் பி எட் சேர்ந்தாள். தன் கணவன் இறந்த துக்கமும்  தன் பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானமும் தாங்காமல் அவள் அம்மாவும் நோய்வாய்ப்பட்டு சில மாதங்களில் இறந்துவிட்டாள்.  சந்தியா மனமொடிந்து தனிமரமாக நின்றாள். 

அதே ஊரில் உள்ள ஹை ஸ்கூலில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தாள். வேலைக்குப் போய் வருவதும் கோவிலுக்குப் போய் வருவதும் என நடைப்பிணமாக இருந்துவந்தாள். அப்படி கோவிலுக்குப் போய் இருக்கும்போது ரேகாவை பார்க்க நேர்ந்தது. வீட்டிற்கு வந்ததும் கதவை சாத்திவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கினாள். 

ரேகாவை கோவிலில் பார்த்த அடுத்த வாரம் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது தன் பெயரைச் சொல்லி பக்கத்து வீட்டில் விசாரிப்பது காதில் விழுந்தது. யார் என்று ஜன்னல் வழியே பார்த்தால் ரேகாவும் அவள் அப்பாவும் நிற்பது தெரிந்தது.  

"நீங்கள் யார் ஏன் என்னை விடாது தொந்தரவு செய்கிறீர்கள்? என் அப்பா அம்மாவை கொன்றது போதாதா என்னையும் கொல்ல வந்திருக்கிறீர்களா?"  என்று கோபத்துடன் கேட்டாள்.  "தயவுசெய்து கிளம்புங்கள். எனக்கு பள்ளிக்கு நேரம் ஆகிறது நான் போகவேண்டும்" என்று கையெடுத்து வேண்டினாள்.

ரேகாவும் அவள் அப்பாவும் 'எங்களை மன்னித்துவிடு' என்று கைகூப்பி கேட்டார்கள் .ரேகா உடனே சந்தியாவின் கையைப் பிடித்துக்கொண்டு 'ஆனால் நடந்தவற்றை கூறுகிறேன் கேள்' என கூறத்  தொடங்கினாள்

"நான் உன்னிடம் கூட என் காதலைப் பற்றிக் கூறவில்லை.  நானும் அஸ்வினும் ஒருவரை ஒருவர் மனமார காதலித்தோம். எங்கள் இரு வீட்டிலும் ஜாதி பிரச்சனையால் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் நாங்கள் இருவரும் பெங்களூர் சென்று திருமணம் செய்து கொண்டோம். அங்கு அஸ்வின் நல்ல வேலையில் அமர்ந்தார். அங்கேயே நாங்கள் செட்டிலாகிவிட்டோம்.  குழந்தையும் பிறந்தது.  அப்போதுதான் எங்களுக்கு நாங்கள் செய்த தவறு தெரிந்தது.  வருங்காலத்தில் எங்கள் குழந்தையும் எங்களைப்போல் திருமணம் செய்து கொண்டால் எங்கள் மனம் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்து உடன் புறப்பட்டு அஸ்வின் வீட்டிற்கு சென்று அவருடைய அம்மா அப்பாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டோம்.  அவர்கள் தங்கள் பேத்தியை பார்த்ததும் எங்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார்கள். அவர்களே என் பெற்றோரிடம் அழைத்துச் சென்று மன்னிப்புக் கேட்க வைத்தார்கள்.  அவர்களும் எங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள். அப்போதுதான்  என் தகப்பனார் என்னால் உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் என் தந்தையால் ஏற்பட்ட துன்பத்தை கூறினார். பழைய வீட்டிற்கு சென்றேன். அங்குள்ளவர்களிடம் உன்னைப்பற்றி விசாரித்து இந்த அட்ரஸ் வாங்கிக் கொண்டோம். உன்னிடம் மன்னிப்பு கேட்க வந்தோம். எங்களை மன்னித்தேன் என்று ஒரு வார்த்தை சொல். அது போதும் சாந்தி அடைய  எங்களுக்கு" என்று கூறி கண்ணீர் விட்டு அழுதாள் ரேகா!!

"உன் மனம் சாந்தி அடையும்.  ஆனால் அப்பா அம்மாவை இழந்து தனிமரமாக நிற்கும் என் மனம் எப்படி சாந்தி அடையும் ? "        என்று சந்தியா கேட்டாள். அதற்குத்தானே நாங்கள் வந்திருக்கிறோம். எங்கள் அண்ணனுக்கு உன்னைப்  பெண் கேட்டு!!  எனகூற.... 

"என்ன கூறுகிறீர்கள்?"  என்று சந்தியா கேட்டா ள். 

"நாங்கள் உனக்கு செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக என் அண்ணனுக்கு உன்னை மணம் முடித்து என் அண்ணியாக ஏற்றுக்கொள்வது என்று! என் அண்ணனும் இதற்கு சம்மதித்து விட்டான் இன்று மாலை என் அண்ணனுடன் வந்து உன்னை முறைப்படி நிச்சயம் செய்கிறோம் உனக்கு இதில் சம்மதம் தானே?" என்று கேட்க மௌனமாக சந்தியா நின்றாள். 

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று கூறி சந்தியாவை சந்தோஷத்துடன் ரேகா கட்டிக்கொண்டாள். ரேகாவின் அப்பா "என் மருமகளே..  இந்த சம்மதமே நான் செய்த பாவ செயலுக்கு பிராயச்சித்தம்" எனக் கூறி சந்தியாவைப் பார்த்துப் புன்னகைத்தார்.

= = = = 

55 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    கதைகளில்தான் இந்த மாதிரி நிகழ்வுகளும் முடிவும் சாத்தியம்

    பதிலளிநீக்கு
  2. இதுதான் சாக்கு என்று அழகிய பெண்கள் படங்களைத் தேர்ந்தெடுத்த கேஜிஜி சாருக்கு பாராட்டு. இதில் யார் ரேகா, யார் சந்தியா என்று போட்டி வைக்கும் உத்தேசமிருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பெண்களும் ஒரே மாதிரி இருக்கிறார்களோ?

      நீக்கு
    2. இடது பக்கம் கைகளை நீட்டி ஆர்வத்துடன் கேள்வி கேட்பவர் ரேகா; மௌனமாகப் பார்ப்பவர் சந்தியா.

      நீக்கு
  3. சுபமான முடிவு ஏற்றுக் கொள்ளக்கூடிய நிகழ்வுகள்.

    இக்கதையில் மற்றொரு பாடம் கிடைக்கிறது கல்லூரியில் படிக்கும் பெண்கள் பிற பெண்களிடம் நெருக்கமான நட்பை வளர்ப்பது விபரீத சிக்கலில் கொண்டு வந்து சேர்க்கிறது.

    பிற பெண்களிடம் பழகாமலும் வாழமுடியாது.

    நல்லகதை ஆசிரியருக்கு வாழ்த்துகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை நல் வாழ்த்துகள்.
    எல்லோரும் என்றும் நல் வாழ்வு பெற்று தொற்று
    நீங்கி இறைவன் அருளோடு வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரின் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கவும், அமைதியான நல்வாழ்க்கைக்கும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. //அன்று முதல் ரேகாவின் அப்பா தினமும் பேப்பரில் இறந்த பெண்களைப்பற்றி செய்தி வந்தால் பார்ப்பதும் பயப்படுவதுமாக இருந்தவர், திடீரென்று ஒரு நாள் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். // இறந்தது "ரேகாவின் அப்பா" என நினைத்தால் அடுத்த பத்தியிலேயே சந்தியாவின் அம்மாவும் இறப்பதைப் பார்த்ததும் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. மேலே தவறாகச் சொல்லி இருக்கலாமோ? சந்தியாவின் அப்பா என்பது "ரேகாவின் அப்பா" என வந்திருக்குப் போல! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தியாவின் அப்பா என்றுதான் இருந்திருக்கவேண்டும். கதாசிரியர் செய்த தவறை சரிசெய்துவிட்டேன். நன்றி.

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை நல் வாழ்த்துகள்.
    எல்லோரும் என்றும் நல் வாழ்வு பெற்று தொற்று
    நீங்கி இறைவன் அருளோடு வாழ வேண்டும்.பதிவிட்ட ஸ்ரீராமுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இருவர் காதல் இன்னும் மற்றவர்களைப் பாதிப்பதை
    அழகாகச் சொல்லி இருக்கிறார்.
    மன்னிப்பு கேட்டது இல்லாமல்
    வாழ்வையும் மீட்டுக் கொடுக்கிறார்கள்.

    நல்ல முடிவுகள் கொண்ட கதைக்கு நன்றி.
    ஆசிரியருக்கும் ,அழகான படங்களைக் கொடுக்கும் கௌதமன் ஜி க்கும் வாழ்த்துகளூம்
    பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  9. ஒரு விதத்தில் இது ஓர் படிப்பினை என்றாலும் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் சந்தியாவின் அப்பாவுக்குக் கவலையும் கலக்கமும் வந்திருப்பது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. அவர் தங்கள் நிலையைப் புரிய வைத்து மனோதைரியத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் விதியை மாற்றவல்லவர் யார்? சந்தியா ரேகாவின் அண்ணனை மணக்கச் சம்மதித்தது கொஞ்சம் உறுத்தலாகவும் இருக்கு. சுபமான முடிவு என்னும் விதத்தில் யோசித்தால் சரியே! ஆனால் தன் வாழ்க்கையையேத் தனிமையாக்கிய ஒருவரின் குடும்பத்திலேயே போய் வாழ்க்கைப்படப் பெரிய மனசு வேண்டும். சந்தியாவுக்கு அத்தகைய மனசு வாய்த்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். வேறென்ன மாதிரி முடிக்கலாம் என்று நானும் யோசிக்கிறேன்!!!

      நீக்கு
    2. இந்த அழகான பெண், திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தாளாம். ஒருவேளை அட்டு ஃபிகரா இருந்திருந்தால் அண்ணனுக்கு கட்டி வைத்திருப்பார்களா?

      அது இருக்கட்டும்.. இவளின் வாழ்க்கை தனிமையானதுக்கு ரேகாவின் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்? முன்பின் தெரியாமல் நட்பு வலையில் விழுந்தது சந்தியாவின் தவறு. படிச்சோமா வீட்டுக்கு வந்தோமா என்றில்லாமல், நட்பு வளர்த்ததால்தான் போலீஸ் இவளை விசாரித்தது. சந்தியாதான் அவள் பெற்றோர்களின் மரணத்துக்குக் காரணம்... இதுல பெரிய மனசு என்ன வேண்டிக்கிடக்கு?

      நீக்கு
    3. பள்ளி, கல்லூரி நாட்களில் உங்களுக்கு நெருங்கிய நட்பே இருந்திருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது நெ.த. எனக்கெல்லாம் வீட்டிற்கே வந்து என்னோடு சாப்பிடும் அளவுக்குத் தோழிகள் இருந்திருக்கின்றனர். அதே போல் அண்ணாவின் சிநேகிதர் ஒருத்தர் பள்ளி நாட்களிலும் பின்னர் அண்ணா வேலையில் சேர்ந்தப்புறமும் 2,3 சிநேகிதர்கள் குடும்பத்துடன் வீடு வரை வருவார்கள். என் தம்பியின் ஒரு சிநேகிதர் எங்க வீட்டிலேயே வளர்ந்தார். இத்தனைக்கு அவர்கள் உங்களைப் போல் வைணவர்கள். கூடப் பிறந்த அக்காக்கள் உண்டு. ஒருஅக்கா மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். மற்ற இருவர் வேறேதோ படிக்கக் கடைசி அக்கா என்னுடைய வகுப்புத் தோழி. இந்த நண்பர் இன்றளவும் தம்பிக்கு சிநேகிதத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். குடும்ப நட்பு! எங்கள் நட்பில் சிலரும் புக்ககத்தினருக்கும், பிறந்தகத்தினருக்கும் பழக்கம் ஆகி வீட்டின் எல்லா விசேஷங்களுக்கும் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வோம்.

      நீக்கு
    4. என்ன ஒரு விஷயம் என்றால் சந்தியா உண்மையாகப் பழகிய அளவுக்கு ரேகா அவளிடம் பழகவில்லை. தன் அந்தரங்கங்களைப் பற்றிச் சொல்லவில்லை. சொல்லி இருந்தா சந்தியா ஒருவேளை தன் பெற்றோரிடமேயோ அல்லது ரேகாவின் பெற்றோரிடமோ மறைமுகமாகத் தெரிவித்திருக்கலாம். (புத்திசாலிப் பெண்ணாக இருந்திருந்தால்) நவராத்திரி கொலுவுக்குக் கூடத் தோழிகளின் அம்மா, அண்ணாவின்/தம்பியின் சிநேகிதர்களின் அம்மா எனக் கூப்பிடுவார்கள். கல்யாணங்கள், சமாராதனை போன்ற விசேஷங்களுக்கும் கூப்பிட்டிருக்காங்க. என்னுடைய ஒரு தோழி, மங்கை என்பவரை எங்க வீட்டு சமாராதனையின் போது அலமேலு மங்காப் பொண்டுகளுக்கு எங்க அப்பா அழைக்கச் சொல்லி அவர் வந்திருந்தார். அவங்களும் வைணவர்களே!

      நீக்கு
    5. இணைபிரியாத் தோழிகள் எனில் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் எல்லா விஷயங்களையும் பரிமாற்றம் செய்யும் வழக்கம் இல்லையோ? சந்தியாவுக்குத் தோழியின் திருமணம் அதிர்ச்சி அளித்தது எனில் ரேகா சந்தியாவிடம் உண்மையை மறைத்திருக்கிறாள். இதை ரேகாவின் பெற்றோரிடமே சந்தியா சொல்லி இருக்கலாம். தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களில் நான் நுழைவதில்லை எனச் சொல்லி இருக்கலாம்.

      நீக்கு
    6. //உண்மை தான். வேறென்ன மாதிரி முடிக்கலாம் என்று நானும் யோசிக்கிறேன்!!!// திருமணத்தை மறுத்திருக்க வேண்டும் என்று தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அதோடு சந்தியாவுக்கு அப்பா,அம்மா இல்லைனு ஆனதும் வேறு உறவினர்களும் இல்லை என்பதையும் தனி வாழ்வு வாழ்கிறாள் என்பதையும் ஏற்க யோசிக்க வேண்டி இருக்கு.

      நீக்கு
    7. //எனக்கெல்லாம் வீட்டிற்கே வந்து என்னோடு சாப்பிடும் அளவுக்குத் தோழிகள் இருந்திருக்கின்றனர். // - எனக்கு அப்படிப்பட்ட தோழிகள் இல்லவே இல்லை. நான் உறவினர்களைத் தவிர, ஓரிரண்டு பெண்களிடம் பேசியிருந்தாலே அதிகம் (PG முடிக்கும் வரை)

      நீக்கு
    8. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரோ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! தோழர்களே இல்லையா? என் அண்ணா/தம்பிக்குச் சிநேகிதர்கள் இருந்தார்கள் என்றும் சொல்லி இருக்கேன். அதைப் பார்க்கலை? ஆனால் நீங்க தான் ஒழுங்கா முழுசாப் படிக்கிற வழக்கம் இல்லையே! :))))))

      நீக்கு
  10. பெண்கள் இருவரும் அழகில் போட்டி போடுகிறார்கள். கேஜிஜி சாருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. மாற்றி மாற்றி கருத்துகள் வந்துவிட்டன.
    கதைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  14. கௌதம் ஜி அவர்கள் இணைத்துள்ள இரு மலர்களின் படம் அழகாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  15. கதை நன்றாக இருக்கிறது.
    தோழிகள் படமும் நன்றாக இருக்கிறது.

    //அன்று முதல் ரேகாவின் அப்பா தினமும் பேப்பரில் இறந்த பெண்களைப்பற்றி செய்தி வந்தால் பார்ப்பதும் பயப்படுவதுமாக இருந்தவர், திடீரென்று ஒரு நாள் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். //

    சந்தியாவின் அப்பா பேப்பரை பார்ப்பதாக வந்து இருக்க வேண்டும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. திருத்தம் செய்துவிட்டேன்.

      நீக்கு
    2. நன்றி.
      பிராயசித்தம் என்ற கதையை படித்து விமர்சனம் எழுதிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி இது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கும். கதையில் திருத்தம் செய்த கௌதமன் சாருக்கும் நன்றி

      நீக்கு
  16. ம்ம்ம்... கதையும் கதையின் முடிவுக்கான மாற்றுக் கருத்துகளும் சிறப்பு.

    கதாசிரியருக்கும் வாசகர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  17. நெல்லைத் தமிழன் சொல்வது போல அட்டு ஃபிகராக இருந்தால்! ஹாஹா...

    பிராயச்சித்தம் என்று சொன்னாலும், பெரிய மனதுடன், சூழ்நிலையால் தீங்கிழைத்தவர் வீட்டுக்கே மருமகளாகச் செல்ல ஒப்புக்கொள்வது கதையில் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நச்" வெங்கட் சொல்லி இருப்பது தான் என் கருத்தும். உண்மையில் அவங்க மேலே கோபம் இருக்கையில் இப்படிக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பது கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தெரிகிறது. சந்தியாவுக்குப் பெரிய மனசு என ஏற்றுக்க வேண்டியது தான்.

      நீக்கு
  18. பாவம் சியாமளா வெங்கட்ராமன், இங்கே ஒரு கதையைப் பிரிச்சு மேய்வதைப் பார்த்துட்டு வெறுத்துப் போயிடப் போறார். நல்ல முயற்சி சியாமளா வெங்கட்ராமன், "சஹானா"விலும் உங்கள் ஆக்கங்களைப் படிக்கிறேன். வாழ்த்துகள். விமரிசனங்களை மேம்போக்காக எடுத்துக்குங்க.

    பதிலளிநீக்கு
  19. காதலித்து வீட்டிற்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு தோழியாக இருப்பது சங்கடம்தான். அவ்வளவு துயரங்களை அனுபவித்த பெண் அதற்கு காரணமான தோழியின் சகோதரனை(என்னதான் அவனுக்கும், சந்தியாவின் துயரதிற்கும் நேரடி சம்பந்தம் இல்லை என்ராலும்) மணந்து கொள்ள சம்மதிக்கிறாள் என்பது சற்று நெருடலாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. புகைபடம் [போல் தெளிவான படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படம்தான் - வெவ்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு படங்களை, கொஞ்சம் ஜிகினா ஒட்டி இணைத்தேன். நன்றி. முதலில் வரைந்துள்ள கோவில் மட்டும்தான் என்னுடைய முழுப் படைப்பு.

      நீக்கு
    2. கோவில் ஓவியம் நன்றாக இருக்கிறது.

      நீக்கு
  21. அழகான கதை. சுபமாக முடிந்த கதை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!