செவ்வாய், 28 செப்டம்பர், 2021

சிறுகதை : டாக்கா ஸாரி :: காமாட்சி மகாலிங்கம்

 

டாக்காஸாரி

காமாட்சி மகாலிங்கம்

என்ன வாய்ண்டு வந்திருக்கேன் பாரு.   என்னாதுபுடவையா  அந்த ஊரிலே நான் கட்டிக்கொள்ளும் மாதிரியா?

என்ன அப்படிச் சொல்லி விட்டாய். எந்த ஊர் பாக்கி இருந்தது.  நீ கட்டாத புடவை எது. பேப்பரைப் பிரித்தால் அழகுப் புடவைகள். அழகிய வேலைப் பாடு.

இளம் நீலம். அழகிய பார்டர்.  உடல் பூரவும் வேலைப்பாடுகள் .டாக்கா  ஸாரி.இன்னொன்று  அழகிய வெண்ணிறம்.அதிக வேலைப்பாடுகள்.


நிறைய விலை இருக்குமேப்பா
.   அதைபற்றி.யெல்லாம்   உனக்கென்ன                          உனக்கொன்று.   அந்த ஒயிட்லே பூப்  போட்டது என்னுடைய சினேகிதிக்கு. நல்ல வேளை.  பிடித்திருக்கா பாரு. அதையும் நாளைக்கே அவ்விடம்   அனுப்பிவிட முடியும். டாக்கா        போகிறேன் என்றவுடன் ஞாபகப் படுத்தியவள். மறுநாள்

சொல்லி வைத்தாற் போல காலையில் ஸவிதா வந்திருந்தாள். அம்மா இவளும் அந்த சண்டிகர் கான்பரன்ஸுக்கு வந்திருந்தாள்.   நேராகப் போபால் போய் விட்டாள்.  இப்போதுஏதோ காரியமாக டெல்லி வந்திருக்கிராள். என்னையும்  பார்த்துவிட்டுப் போகலாம் என்று  வந்திருக்கிறாள்.

ஓ அந்த மெடிகல் காலேஜ்ஸ்டூடன்ஸ் இல்லையா?

 ஆமாம்.அவளை இரவு டின்னருக்குக்  கூப்பிட்டிருந்தாய். மஸால்தோசை பண்ணினேன். அவாளுக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் என்றாய். இவளுக்கென்ன பிடிக்கும்.

இவாளுக்கெல்லாம் ரவை உப்புமா பேரில் என்ன மோஹமோ. அது கொஞ்சம் பண்ணிடு.. நம்ம சாப்பாடே போதும்.

ஆன்டி கௌதம் என்ன சொல்கிரார். எனக்குப் புரியவில்லை உங்கள் பாஷை. நான் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்வேன். ஜஸ்ட் உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று வந்தேன். வேலை முடிந்து விட்டது.  போகும் வழியில் வந்தேன்.

பரவாயில்லை சாப்பிடும் நேரம்தானே. ஏதோ எனக்குத் தெரிந்த ஹிந்தியில் பேசினேன். உப்புமா என்ன பிரமாதம். எனக்கும் விருப்பமானதைச் சமைத்துக் கொடுப்பதிலொரு ஆனந்தம்.

பேசிக்கொண்டே   சாந்தினி  கட்டாயமாக  உங்களைப் பார்த்து வரச் சொன்னாள் . என்றாள்.  நான் அந்தப்பெண் வந்தபோது ஜாஸ்தி பேசக்கூடயில்லையே. ரொம்ப ஒல்லியானபொண்ணு.  டாக்டருக்குப் படிக்கிறேன்  என்கிராய். பார்த்தால் பல்லுதான் தெரியரது. சாப்பிடரிங்களாயில்லையா? என்னத்தை வைத்தியம் செய்யப்போரிங்க நீங்க என்று கேட்டேன்.

ஆமாம்,ஆமாம் ஆன்டி ரொம்ப நல்ல பொண்ணு அவ ஆன்டி. நாங்களெல்லாம் ஒரு க்ரூப். ஒண்ணா படித்துக்கொண்டு இருக்கிறோம்.  நான் இங்கு வந்ததுக்கு ஸந்தோஷப் படுவாள். இப்படி அவள் பேச்சாகவே பேச்சுகள்.

போகும்போது புடவையைக்கொடுத்தான். அவள் சிரித்துக் கொண்டே வாங்கி வைத்துக் கொண்டாள்.

மனதில் ஏதோ பொரி தட்டியமாதிரி இருந்தது. அரசல் புரசலா சாந்தினி மேலே இவனுக்கு கண்ணா? இல்லே அவளுக்குக் கண்ணா, ஸந்தேகம் நாளடைவில் இருந்துகொண்டே  இருந்தது.  இப்படி நிறைய சிநேகிதர்கள் வருவது போவது வழக்கமாக இருந்தது.

 என்ன ஏது என்று நானும் கேட்கவில்லை. அவனாகவும் எதுவும் சொல்லவில்லை. அடிக்கடி ப்ரெண்ட்ஸ்  ஸர்கிளில் இருந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்ததில் போபாலிலிருந்தும் வருவது தெரியும்.  வாசலில் உள்ள தபால்ப் பெட்டியிலிருந்து நான்தானே எடுத்து வருகிறேன்.  எங்கள் வீட்டில் போன் வசதிஇல்லை.அவ்வளவு சுலபமாக போன்கள் நிறுவமுடியாது அப்போது. அப்ளை செய்திருந்தோம்.

ஸம்பாதித்து. ஸொந்தக்காலில் நிற்கும் பிள்ளைகள்  நாம் ஸந்தேகம் அது,இது என்று சொன்னால் அவர்களும் நம்மை மதிக்க மாட்டார்கள். இப்படி சிலமாதங்கள் கழிந்தது.

அன்று ஞாயிறு காலை. அம்மா உனக்குத் தலைவலி வரப்போகிறதென்று சொன்னான். அதற்கென்ன ஒரு பெயின் கில்லர் சாப்பிட்டால்ப் போகிறது. காபி தலைவலியெல்லாம் எனக்கு வராது.விசாரமில்லை. என்ன விஷயம் சொல்லு. எனக்கு காப்பி வழக்கமில்லை

உன்னை விசாரிக்க, என்னைப்பற்றி கேட்க, நம் குடும்பத்தைப் பார்க்கத் தெரிந்தவா வருகிரார்கள்..

வரட்டுமே. யூத் அவார்ட் வாங்கியவன்,ஸமூக சேவகன். நினைத்ததை சாதிப்பவன் எனக்குத் தோன்றியதைச் சொல்லி விட்டுப் போகிறேன். அவ்வளவதானே! யார் அவா? 

நானும் அவர்களைப் பார்த்த்தில்லை.  பெரிய நாட்டுப்பெண் சிரித்தபடியே அம்மா நான் சொல்கிறேன்.  எனக்கும் இப்போதுதான் கௌதம் சொன்னான்.

பிள்ளை நழுவி விட்டான்.

வரவா சாந்தினியின் மாமா. தாத்தா. ஓ பொரிதட்டியது நிஜம்போல இருக்கு.  மருமகள் அவளுக்குத் தெரிந்ததைச் சொன்னாள். ரகஸியம்  ஒன்றும்இல்லே பார்க்கலாம் என்றுதான் நாங்களும் சொல்லலே

 இந்த நாளில்  இந்த விஷயங்களில் எவ்வளவு ஒற்றுமை என்று நினைத்துக் கொண்டேன். யார் வந்தால் என்ன நம்முடைய  உபசாரங்கள் மாமூலாகச் செய்யப் போகிறோம் என்றேன்.இப்படி மனம் விட்டுப் பேச்சு மருமகளிடம். அதே சிந்தனை. சாப்பாடெல்லாம் ஆயிற்று.

முன்பிருந்த வாடகை வீட்டில் கூட இருந்த தெரிந்தவள் வந்து விட்டாள். யாரோ வருகிரார்கள் இந்த ஸமயத்தில் சற்று வம்பிற்கு அலையும் குணம் கொண்டவள், வந்தால் இரவு சாப்பாட்டையும் இங்கே முடிக்கும் சுபாவம் உள்ளவள் இவளை எப்படி ஸமாளிப்பது ? பெரிய பிரச்சினை.

நல்லவேளை நாங்கள் எல்லோரும் வெளியில் போவதாக இருந்தோம்.    அப்படி,இப்படி என்று சொல்லி ஒரு டீயையும், கொரிப்பதற்கு கையில் கட்டிக் கொடுத்தும் அனுப்புவோமா என்ற எண்ணம் தோன்றி விட்டது.  நல்ல வேளை.   என்ன ஸமாசாரம் என்று நமக்கே தெரியாதபோது ஊர்வம்பில் மாட்டிக் கொள்ளமுடியுமா ? மெள்ள அனுப்பி ஆயிற்று. அப்பாடீ! 

சொல்லி வைத்தது போல வாசலில் காரிலிருந்து நாலுபேர் ஒரு நாஸுக்கான பெண்மணியும் இறங்குகிரார்கள்..   வயதானமுதியவர்.

 வாங்கோ வாங்கோ. ஹிந்தியில்தான்.

நீங்கள் தமிழிலேகூட பேசலாம். கூடவந்த பெண்மணி தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.  

போட்டோ பார்த்திருப்பார்கள்போல ஹலோ என்று கைகுலுக்கல்.  நீங்கள் தாத்தா என்று தெரியும் மற்றபடி விஷயங்கள்  நானும் கேட்கவில்லை.

பெரியபபிள்ளைசொல்லவே   இவன் எங்களின்  மகன் ஆர்மியில்  கர்னல். அது மற்றொருமகன். பிஸினஸ் செய்கிறான் .அவர் அறிமுகம் செய்கிரார்

இது எங்களின் தெரிந்த குடும்பத்துப் பெண்மணி. தமிழ் தாய்பாஷை. பேச உதவியாக இருக்கும் என்று அழைத்து வந்தோம்.பரஸ்பரம் இவ்விட அறிமுகங்களும்.

என் பேத்திக்கும்,கௌதமுக்கும் நல்ல அறிமுகம் இருப்பதால், அவர்களும் விரும்புவதால்  உங்கள் விருப்பத்தை அறிய வந்தோம்.  

என் மாப்பிள்ளைக்கு தன் குலத்தை விட்டு  வேறு மாதிரி செய்ய அவர்கள் குடும்பத்துப் பெரியவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவரும் எதிர்ப்பு. விருப்பத்துக்கு மாறாக பெண்ணை வற்புறுத்த என் மகளுக்கு இஷ்டமில்லை.எல்லோரும் படித்தவர்கள்தான்.  என்னசெய்வது. பெண்ணின் சார்பில் உங்கள் யாவரையும் பார்த்துப்போக நாங்கள் வந்தோம்.

முதலில் மனிதர்களைப் பார்க்காமல் என்ன முடிவு செய்ய முடியும் அதான் விஷயம்..ஓபனாகப்  பேசிவிட்டார்.தாத்தா. எனக்குத்தான் தெரியவில்லை.  பஜ்ஜி வீட்டில்  போட்டேன்.கடையில் வாங்கிய ஸ்வீட், மிக்சர் காஃபி முடிந்தது. ரஸித்துச் சாப்பிட்டார்.

கூட வந்த பெண்மணி அவள் விவாகம் கதை காதல் இதைப்ற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

எங்கள்  பெண்ணிற்காக, நாங்கள் முன்னிருந்து  விவாகம் முடிப்போம்.  தாத்தா விடை பெற்றார்.. இடையே எல்லாம்தான். ஊர்விவகார அலசல்கள்.

தலைவலி  புரிந்ததா?  

என்ன இவ்வளவு தூரம் வந்த பிறகுதான் எனக்குத் தெரிகிறதா? சொல்லாமல் இருக்க முடியவில்லை.

உனக்குத் தெரிந்து அதுவேறு கவலை வேண்டுமா? நடக்கும்போது பார்க்கலாம். எனக்கு நம்பிக்கை இல்லை. அதான் நான் சொல்லவில்லை. இது பெரிய பிள்ளை.

இன்னிக்கு வந்தவர்கள் சும்மா பார்க்க வந்தவர்கள். அவர்களுக்கு பவர் ஒன்றுமில்லை.. நீ விசாரப்படாதே!

அது எதுவானாலும்ஸரி. நான் என்ன எல்லாம் விட்டவளா.  அவர்களுக்கு பழக்கம்,வழக்கம்,பாஷை, எல்லாமே வேறு. என் விசாரம் ஆரம்பமாகிவிட்டது.

இது முதல்கட்டம்தான். நடக்கும்போது  பார்த்துக்கலாம். அவர்களுக்கும்  அபிலாஷை  இருக்குமே. இவனும் பிடிவாதமாக இருக்கிரான். அந்தப் பெண்ணிற்கும் விருப்பம் இருக்கிறது. நாம் முட்டுக்கட்டை போடவேண்டாம்.நல்லபடி நடக்கட்டும். எனக்குத் தெரிந்த விஷயம்தான். நான்தான் சொல்லவில்லை.

மேலே எதுவும் பேசவிடாமல் பெரியவன்ஸப்போர்ட் பண்ணிவிட்டான். சிலமாதங்கள் எதுவும் மாறுதலில்லை.

வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து, பெண்ணைப்பார்க்க பெரியவர்களை வரச்சொல்லியும் ஏற்பாடுகள் செய்து, பெண்ணிற்குச் சொல்லியிருக்கிரார்கள். பெண் எம்பிபிஎஸ்பாஸ் செய்து வேலையிலும் அமர்ந்தாயிற்று.

 இது எல்லாம் பின்னால் தெரிந்த விவரங்கள்

கடிதம் மூலமாகத்தான்.  போன் மூலம்  இருவரும் பேசுவார்கள் . பெண்ணுக்கு அம்மா மூலம்  விவரம் தெரிந்தபோது  நான் விருப்பமில்லாமல் எதுவும் செய்ய மாட்டேன். எதிர்ப்பை பலமாக தெரிவித்திருப்பாள்  மேலும் என்ன வாக்குவாதங்களோ?  விவரம் தெரியாது.

கொஞ்சம் முற்போக்குவாதி யாராவது குடும்பங்களில் இருப்பார்கள் அல்லவா.  பெண்ணின் அத்தை புருஷன் அவரும் அந்த வீட்டின் மாப்பிள்ளைதானே. அவரின் யோசனையில்

நாமும் போய்ப் பிள்ளையைப்பற்றி  விசாரிப்போம். ஏதாவது மனதிற்குப் பிடிக்காத காரணம் சொல்லி நிராகரிப்போம். வேறு வழியில்லை.பெண்ணின் மனதை மாற்ற என்று அவர்களின் வழியில் யோசித்து செயல்பட்டார்கள்.நேர்முகமாகவும்,தெரிந்தவர்களைக்கொண்டும் விசாரித்து ஒரு முடிவிற்கு வந்தார்கள் போலும்.

எங்களில் மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து பெண் கேட்க வேண்டும். என்ற அளவிற்கு இறங்கி வந்தார்கள் என்றால் பாருங்கள். நீங்கள் வாருங்கள் என்ற அளவிற்குப் பேசி  ஒரு முடிவிற்கு வந்த மாதிரித் தோன்றியது. இதெல்லாம் பின்னால் தெரிந்து கொண்ட ஸமாசாரங்கள்தான்.

இரண்டு வீட்டவர்களும் வீண் வீம்பு செய்தால் எதுவும்  உருப்படாது  பெண்கள் எதிரிடையாகத்  துணிவு கொள்வதைவிட ஸரி என்று நாம் கேட்டுவிட்டால்ப் போகிறது.அவர்கள் எதுவும் நமக்கு சௌகரியம் செய்ய வேண்டாம். போகலாம் பெரிய பிள்ளையின்  முடிவு. கட்டுப்பட்டே ஆக வேண்டும். நீயும் உடன் வருகிறாய்

மாமாக்கள் ஸ்டேஷன் வந்திருந்தனர்.  அக்கா வீட்டில் அவர்கள் வீட்டு உறவுகள் வருகிரார்கள்.வரவேற்க சாந்தினியும் டாக்கா ஸாரியில்.

நாங்கள் சாயங்காலம் வருகிறோம்  என்றோம். அதற்குள்  நம் வீட்டில்  அவர்கள் எப்படி பெண் கேட்டு வரலாம் என்ற அளவில் பேச்சுகள் நடந்திருக்கிறது.  நாங்கள் ஸரி என்று சொல்ல மாட்டோம்.

அவர்கள் வரவில்லை.நாம்தான் கூப்பிட்டுள்ளோம் என்ற அளவில் வாக்கு வாதங்கள் நடந்துள்ளது.

பெரிய பிள்ளையும் நானும் போய்ச் சேர்ந்தோம்.

.யார்,யார் அவர்கள் என்ற அறிமுகம்  ஆயிற்று .உலக விவகாரங்கள்.

எப்படியோ போனோம். உபசாரங்கள் எல்லாம் நடந்தது. யாவர் முகத்திலும்  சோகக்களை.

எங்களுக்கு இப்படி எல்லாம் வழக்கமில்லை. எங்களுக்கும்

வழக்கம் எதுவும் இல்லை நாமும் வேண்டுமென்றே எதுவும்  செய்யவில்லை. நாம் வேண்டாமென்றால்  அவர்களாகவே ஏதாவது முடிவு எடுப்பார்கள். அது எந்த விதம் நமக்குத் தெரியாது. அந்தக் கசந்த உறவைக் கொண்டாட நாம் தயாராக இருப்போம்.  அதில் எவ்வளவு விபரீதங்களோ? நம்முடையக் கட்டுப்பாட்டில் இந்த நாளில் எவரும் இல்லை.  பின் விளைவுகள் எதுவும் வேண்டாம் என்ற வகையில்தான் உங்கள் வழக்கத்திற்காக நாங்கள் வந்தோம். நாம் நம்  வயிற்றுப் பசங்களுடன் பின்னால் உறவு  வைக்காமல் இருக்க முடியாது. இது எங்கள் முடிவு என்று தெளிவாகச் சொல்லி விட்டோம்.

நாங்கள் முடிவு எடுத்துத் தெரிவிக்கிறோம் . நாம் என்ன முடிவெடுப்பது இந்தக்காலத்தில்   என்று எண்ணிக்கொண்டே விடை பெற்றோம்.

அவர்கள் வீட்டு அத்தையின் புருஷர்தான் பிறகு சில நாட்கள் கழித்து பெரிய பிள்ளையின்  அலுவலக எண்ணிற்கு பேச ஆரம்பித்தார். அவர் பின்நாளில் ஒரு ஜைன ஸன்யாசி.

சில நாட்களிலேயே எங்களுக்கும் போன் கிடைத்து விட்டது. எப்படி எங்குசெய்வதுஎன்ற முறையில் பேச ஸௌகரியமாக  இருந்தது.

நாம் அவர்கள் செய்வதை எதிர்பார்க்கிறோமா பின்னால் ஸரிவர கவனிப்போமா அல்லது கைவிட்டு விடுவோமா என்ற அளவில் அவர்களது ஸந்தேகம் இருந்துள்ளது என்றெல்லாம் காதில் விழுந்தது. அந்த வீட்டில் வாழ்க்கைப்பட நினைத்தால் கட்டும் புடவையும் வாங்கிக் கொடுத்துஅனுப்பமாட்டோம் என்று ஒரு வயதான  பாட்டிக்கிழவி கோபித்து இருக்கிராள்.

எங்கள் வீட்டு வழக்கம் நாங்களே எல்லாம் செய்து கொள்கிரோம்.  ஒன்றுமே நீங்கள் செய்ய வேண்டாம்.  உங்கள் ஸௌகரியம் குறிப்பிட்டால் போதும்.

இந்த பதில் அவளம்மாவிற்கு  மிகவும் உறைத்தது.எது கொடுத்தாலும் இப்போது எதுவும் செய்யாதே, பிறகு பார்த்துக் கொள்ளலாம்.ஒவ்வொருவரும் அன்று சொன்னார்களே அவர்கள் பெண்களுக்கு எப்படி ஆசை ஆசையாகச் செய்கிரார்கள் என்று இப்போதும் அம்மாவின் புலம்பல்.

ஆர்மி பிள்ளையின் வீட்டில் அவர்கள் தங்குவதாகவும்  ஒரு இருபது பேர்வரைக்கும் வருவதாகவும் முடிவு தெரிவித்தனர்.  அவர்கள்  உறவினர்  நண்பர்களுக்காக வரவேற்பு போபாலிலும் என்று தீர்மானம்..

குருவாயூரப்பன் கோவில்.  வசதியான விவாகம் செய்ய இடம். புக் செய்தாகி விட்டது.   ஆடம்பரமில்லாத ஏற்பாடுகள். அவர்கள் தங்கியுள்ள இடத்திற்கு நாங்கள்ஒரு ஸ்டீல் டப்பா நிறைய லட்டுகளையும்,பெண்ணிற்கு அவசியமான சில அணிகலன்கள்,வரும்போது கட்டிக்கொள்ள புடவை என யாவையும்  கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு நம் முறையில் நமஸ்காரம் எப்படிச் செய்வது என்பதையும் பெரிய நாட்டுப்பெண்ணை செய்து காட்டச் சொல்லி   அதையும் கற்றுக் கொடுத்து வந்தோம். அன்றும் அவள் கட்டிக்கொண்டு இருந்தது  அந்த பூப்போட்ட டாக்கா ஸாரி. பச்சைக்கொடி விருப்பம்.

தமிழ் வருஷப்பிரப்பு அவ்வருஷம் ஏப்ரல் பதின்மூன்று.. பதிநாலு விஷுக்கனி.  கல்யாணம் அன்றுதான். அவர்கள் காலையில் வந்தாயிற்று.

ஆரத்தி சுற்றி பெண்,அவர்கள்வீட்டவர்கள் யாவரையும் வரவேற்கிறோம்.  இனிப்புபுக் கொடுத்து   காலையுணவு. கங்கணம் கட்டி முறைப்படி விவாக சடங்குகள். முக்கியமான  ஒரு ஐம்பது அறுபது விருந்தாளிகள். மேளதாளங்கள் எதுவும் கிடையாது. , 


மாலை மாற்றி ஊஞ்ஜலாடி திருமங்கல்ய தாரணம்
. கையூட்டம் பெற குருவாயூரப்பன் ஸன்னிதி.   வடக்கத்திய பூரி ஸப்ஜி,நம்சாப்பாடு. எல்லாம் விமரிசையாக .சாயங்காலமே வீட்டிற்கு வந்தாகிவிட்டது.


பின்பொருநாள் அவர்கள் பெரிய இடமெடுத்து சாப்பாடு ஸ்டைல்  எல்லாம் ஸ்டால் கணக்கில் வைத்துக் கொண்டாடினார்கள்.

இருபத்தைந்தாவது திருமண நாள் கொண்டாட்டம் ஏப்ரல் பதிநான்காம் தேதி.   மாமியார் மெச்சின மருமகள்.யாவரும் ஆசீர்வதியுங்கள். கோவிட் நேரம். ஒரு ஜெயின் பிராம்மண கல்யாணம்.மானஸீகமாக.  உங்கள் யாவரின் வருகைக்கும் நன்றி.தாம்பூலமும் இனிப்பும் பெற்றுக் கொள்ளுங்கள்.

= = = = =

மேற்கண்ட கதை, சித்திரை சிறப்பிதழுக்காக திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்கள் அனுப்பிய கதை. படங்களும் அவர் அனுப்பியவை. 

= = = = = 

36 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் இன்றும் வரும் நாட்களும் ஆனந்தம் ஆரோக்கியம்
    பெற்று இனிதாக வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. காமாட்சி அம்மாவின் நிஜக் கதை.
    அருமை. மிக அருமை. திருமணம் செய்து சில்வர் ஜூபிலி
    கொண்டாடும் மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள். என்றும்

    ஆனந்தமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. காமாட்சி அம்மா எப்போதும் சரளமாக சொல்வார். நினைவுகளை பகிரும் விதம் அருமையாக இருக்கும்.
    உண்மை கதை அருமை.

    //இருபத்தைந்தாவது திருமண நாள் கொண்டாட்டம் ஏப்ரல் பதிநான்காம் தேதி.//
    மாமியார் மெச்சிய மருமகள், மகன் வாழ்க பல்லாண்டு. ஆசீர்வாதங்கள்.

    அம்மா இப்போது எப்படி இருக்கிறார்கள்?

    நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்களுக்கு முன் அவர் கணவர் மறைந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  எனவே அவர் பதிலளிக்க வருவாரா என்று தெரியாது.  நலமாயிருக்கிறார் என்று நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம். தெரியும். அதனாலென்ன பரவாயில்லை ஸ்ரீராம். அம்மா மன அமைதியோடு ஆரோக்கியமாக இருந்தாலே போதும். அவர் வயதிற்கு அவர் எழுதுவதே மிகவும் சந்தோஷமாக முன் உதாரணமாக இருக்கிறார்...நம் எல்லோருக்கும். காமாட்சி அம்மா எல்லோருக்கும் நல்ல உதாரணம். அவரது பரந்த மனப்பான்மை ஆட்டிட்யூட் எல்லாமே. நாம் பிரார்த்திப்போம் அவருக்கு...

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      அருமையான கதை. சகோதரி காமாட்சி அம்மா அவர்கள் அழகாக எழுதியுள்ளார். காலையில் படிக்க இயலவில்லை. மதியத்திற்கு மேல்தான் படித்தேன். அனுபவ வார்த்தை நடைகள் நன்றாக உள்ளது.அவரைப் பற்றிய செய்தி இப்போதுதான் அறிந்து வருத்தமடைந்தேன். அவருக்கு மனதிடத்தை இறைவன் அருள வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். அனைவரும் வளமுடன் இருக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. //நம்முடையக் கட்டுப்பாட்டில் இந்த நாளில் எவரும் இல்லை. பின் விளைவுகள் எதுவும் வேண்டாம் என்ற வகையில்தான் உங்கள் வழக்கத்திற்காக நாங்கள் வந்தோம். நாம் நம் வயிற்றுப் பசங்களுடன் பின்னால் உறவு வைக்காமல் இருக்க முடியாது. இது எங்கள் முடிவு என்று தெளிவாகச் சொல்லி விட்டோம்.//

    தெளிவான முடிவு.

    பதிலளிநீக்கு
  7. வழக்கம் எதுவும் இல்லை நாமும் வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை. நாம் வேண்டாமென்றால் அவர்களாகவே ஏதாவது முடிவு எடுப்பார்கள். அது எந்த விதம் நமக்குத் தெரியாது. அந்தக் கசந்த உறவைக் கொண்டாட நாம் தயாராக இருப்போம். அதில் எவ்வளவு விபரீதங்களோ? நம்முடையக் கட்டுப்பாட்டில் இந்த நாளில் எவரும் இல்லை. பின் விளைவுகள் எதுவும் வேண்டாம் என்ற வகையில்தான் உங்கள் வழக்கத்திற்காக நாங்கள் வந்தோம். நாம் நம் வயிற்றுப் பசங்களுடன் பின்னால் உறவு வைக்காமல் இருக்க முடியாது. இது எங்கள் முடிவு என்று தெளிவாகச் சொல்லி விட்டோம்."

    இதுதான் கதையின் சுபமான ஆரம்பத்துக்குக் காரணம்.
    எத்தனை விவேகமான நினைப்பு. குழந்தைகள் சந்தோஷமே நம் ஆனந்தம் இல்லையா.
    வெகு சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள் .காமாட்சி அம்மாவின் குடும்பத்தார்.

    பதிலளிநீக்கு
  8. திருமணப்படங்கள் மிக அருமை.
    இரண்டு வழிப்படியும் செய்திருக்கிறார்கள்.
    வண்ணத்தில் மணமகன் மணமகள் அழகு.

    பதிலளிநீக்கு
  9. என்று சொல்லி ஒரு டீயையும், கொரிப்பதற்கு கையில் கட்டிக் கொடுத்தும் அனுப்புவோமா என்ற எண்ணம் தோன்றி விட்டது. நல்ல வேளை. என்ன ஸமாசாரம் என்று நமக்கே தெரியாதபோது ஊர்வம்பில் மாட்டிக் கொள்ளமுடியுமா ? மெள்ள அனுப்பி ஆயிற்று. அப்பாடீ!"''''''''


    இதுவும் எல்லா வீட்டிலும் நடப்பதுதான். வம்புக்கு என்று வரும்
    அக்கம் பக்கம்.:)
    நன்றாகச் சமாளித்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. அன்பின் காமாட்சி அம்மாவிடமிருந்து பதில் எதிர்பார்க்க முடியாது .
    பரவாயில்லை. மன அமைதியோடு இருக்கட்டும்.
    எத்தனை அருமையான சரள எழுத்து.
    கௌதம் ,சாந்தினி கலயாண வைபோகமே என்று பாடிவிடலாம்.

    அவர் புடவை வாங்கி வந்த அழகு, பாட்டி சட்டென்று தெரிந்து கொண்ட அருமை.
    எல்லாமே சுகம்.

    பதிலளிநீக்கு
  11. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    அட! நம்ம காமாட்சி அம்மாவின் கதை. சூப்பர்...அம்மா எழுதுவது மனதிற்கு மிக மிக சந்தோஷம்.

    யதார்த்த உரையாடல்கள். வாசிக்கும் போதே உண்மைக் கதை என்று தெரிந்தாலும் சொன்ன விதம் மிக அருமை. பல வரிகள் ரசித்தேன். அம்மா பதிவு எழுதுவதே வித்தியாசமாக சுவாரசியமாக இருக்கும். அதுவும் பல வகைக் கலாச்சாரங்கள் நிறைந்த குடும்பம்.

    ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  13. இரண்டு வீட்டவர்களும் வீண் வீம்பு செய்தால் எதுவும் உருப்படாது பெண்கள் எதிரிடையாகத் துணிவு கொள்வதைவிட ஸரி என்று நாம் கேட்டுவிட்டால்ப் போகிறது.அவர்கள் எதுவும் நமக்கு சௌகரியம் செய்ய வேண்டாம். போகலாம் பெரிய பிள்ளையின் முடிவு.//

    வழக்கம் எதுவும் இல்லை நாமும் வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை. நாம் வேண்டாமென்றால் அவர்களாகவே ஏதாவது முடிவு எடுப்பார்கள். அது எந்த விதம் நமக்குத் தெரியாது. அந்தக் கசந்த உறவைக் கொண்டாட நாம் தயாராக இருப்போம். அதில் எவ்வளவு விபரீதங்களோ? நம்முடையக் கட்டுப்பாட்டில் இந்த நாளில் எவரும் இல்லை. பின் விளைவுகள் எதுவும் வேண்டாம் என்ற வகையில்தான் உங்கள் வழக்கத்திற்காக நாங்கள் வந்தோம். நாம் நம் வயிற்றுப் பசங்களுடன் பின்னால் உறவு வைக்காமல் இருக்க முடியாது. இது எங்கள் முடிவு என்று தெளிவாகச் சொல்லி விட்டோம்//

    ரொம்ப ரொம்ப ரசித்தேன். இதுதான் இந்தத் தெளிவுதான் மிக மிக அவசியம். அருமை!!!

    25 வது மணநாள்....மாமியார் மெச்சிய மருமகள்! சூப்பர். வாழ்த்துகள்! இப்படியே மகிழ்வோடு இருக்க வேண்டும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. தலைப்பைப் பார்த்ததும் நான் முதல் முதல் கட்டிக்கொண்ட டாக்கா மஸ்லின் புடைவை நினைவில் வந்தது. மடித்து வைத்து விடலாம். சின்னப் பொட்டலம் மாதிரி இருக்கும். காமாட்சி அம்மாவும் அந்த மாதிரி ஒரு புடைவை தான் கட்டிக் கொண்டிருப்பாங்க என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. வெள்ளி விழாக் கொண்டாடிய/கொண்டாடும் தம்பதியருக்கு வாழ்த்துகள். இதைப் பற்றிப் படித்ததும் என் நாத்தனார் பேத்தி ஜெயின் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டது நினைவில் வந்தது. 2015 ஆம் ஆண்டு ஒடிஷாவில் திருமணம் நடந்தது இருவீட்டார் சம்மதத்துடன். ஆனால் முழுக்க முழுக்க ஜெயின் சம்பிரதாயப்படி நடந்தது என நினைக்கிறேன். பிள்ளை ஜெயின் என்பதால் பிள்ளை வீட்டுச் சம்பிரதாயம்.

    பதிலளிநீக்கு
  16. இயல்பான நடை. உண்மையான சம்பவங்கள். நடந்ததை நடந்தபடியே நேரில் பேசுகிறாப்போல் சொல்லி இருக்கார் அம்மா. அனைத்தும் படிக்கப் படிக்க மனதுக்கு நிறைவு. அவர் மனம் தேறி விரைவில் மீண்டு வரப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  17. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  18. காமாட்சி அம்மாவின் கதையா ! மிக இயல்பாக இருக்கும். ‘சீதை ராமனை மன்னித்தாள்’ தொடரில் அவர் எழுதியிருந்த தரமான கதை நினைவில்..

    கட்டுரை ஒன்று எழுதுவதில் தற்போது பிஸி.. மெல்ல வந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. இன்று வீட்டில் ச்ராத்தம். இரவு வந்து எழுதுகிறேன்.

    கதையைப் (நிகழ்வைப்) படித்துவிட்டேன். நானே காமாட்சி அம்மாவிடம் கேட்கணும்னு நினைத்திருந்தேன்.

    எல்லோரும் நன்றாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  20. ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவம் தெரிகிறது. வெள்ளி விழாக் கொண்டாடும் தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. இயல்பான நடையில் சொல்லியுள்ளார்.

    வெள்ளி விழா கொண்டாடும் தம்பதிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. மிகவும் இயல்பான நடை. //நம்முடையக் கட்டுப்பாட்டில் இந்த நாளில் எவரும் இல்லை.  பின் விளைவுகள் எதுவும் வேண்டாம் என்ற வகையில்தான் உங்கள் வழக்கத்திற்காக நாங்கள் வந்தோம். நாம் நம் வயிற்றுப் பசங்களுடன் பின்னால் உறவு  வைக்காமல் இருக்க முடியாது.// அருமையான, யதார்த்தமான முதிர்ச்சியான வரிகள்! காமாட்சி அம்மா அவர்களுக்கு மன திடத்தையும், சாந்தியையும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. யதார்த்தமும், அனுபவமும் வெளிப்படும் அழகாக அருமையாக எழுதப்பட்ட கதை.

    //இருபத்தைந்தாவது திருமண நாள் கொண்டாட்டம் ஏப்ரல் பதிநான்காம் தேதி. மாமியார் மெச்சின மருமகள்.யாவரும் ஆசீர்வதியுங்கள். //

    தாமதமான வாழ்த்துகள்! பிரார்த்தனைகள்!
    //உங்கள் யாவரின் வருகைக்கும் நன்றி.தாம்பூலமும் இனிப்பும் பெற்றுக் கொள்ளுங்கள்.//

    தாம்பூலமும் இனிப்பும் அனுபவமான முதிர்ச்சியான வரிகளில் விரவிக் கிடைக்கிறதே. பெற்றுக் கொண்டோம். உண்மைக் கதை என்பதும் அறிந்தேன். புகைப்படத்திலும் அவர்கள்தானோ?

    காமாட்சி அம்மாவைக் காணவில்லையே என்று நினைத்திருந்த போது தகவல்கள் எல்லாம் அறிந்தேன். அம்மா அவர்கள் மன ஆறுதலுடன் இருக்கவும் பிரார்த்தனைகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. // யாவரின் வருகைக்கும் நன்றி.தாம்பூலமும் இனிப்பும் பெற்றுக் கொள்ளுங்கள்.. //

    மகிழ்ச்சி.. மகிழ்ச்சி... தாம்பூலமும் இனிப்பும் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி...

    அழகாக அருமையாக எழுதி இருக்கின்றார்கள்..

    வாழ்க வளமுடன்..
    வாழ்க வையகம்...

    பதிலளிநீக்கு
  25. எல்லோருக்கும் ஆசிகள் நன்றியும் கூட என்னை பொட்டலம் கட்டிய மாதிரி இவ்விடம் ஜெனிவா அழைத்து வந்துவிட்டார்கள் உங்கள் யாவரின் பின்னூட்டமும் நெஞ்சை நெகிழ வைக்கிறது மிகவும் நன்றி வேறு என்ன சொல்வது மரியாதை நிமித்தம் இந்த இரண்டு வரி அனுப்பியிருக்கிறேன் அன்புடன்

    பதிலளிநீக்கு
  26. ஆசிரியர் கௌதம் சார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிக்க நன்றி அன்புடன்

    பதிலளிநீக்கு
  27. வாசித்தாயிற்று. ஆணும் பெண்ணும் அன்போடு சேர்ந்திருந்தால் எல்லாம் சரியே. தாம்பூலம், ஸ்வீட்டிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  28. காமாட்சி அம்மா எழுதிய கதை.... இயல்பான நடையில் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!