வெள்ளி, 8 அக்டோபர், 2021

வெள்ளி வீடியோ : தென் பொதிகையில் நின்றுலவிடும் தென்றல் போல வந்தவன் செந்தமிழினில் சிந்திசைக்க சந்தம் கொண்டு தந்தவன்

 தென்றல்...   கோபப் புயலாய் வீசுவதும் காற்று.  மென்மைத் தென்றலாய்த் தழுவுவதும் காற்று.  புயலை ரசிப்பதில்லை.  தென்றலை மிக விரும்புவோம்.

கண்ணதாசன் நடத்திய பத்திரிகையின் பெயர் 'தென்றல்'.  இது தெரியாமலேயே நானும், சிறுவயதில் நான் நடத்திய கையெழுத்துப் பத்திரிகைக்கு 'தென்றல்' என்று பெயர் வைத்திருந்தேன்.  காரணம் என் அண்ணன் 'வசந்தம்' என்று ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதால்.

இன்றைய பாடல்களில் தென்றல் முதல் வார்த்தை!  தென்றலில் மிதந்து வரும் எஸ்பிபியின் தேனிசைப் பாட்டுக்கள்!  தென்றலாய் வரும் பாடல். தென்றலுக்கு என்றும் வயது பதினாறுதானே!  எப்போதும் ரசிக்கலாம்!

'தென்றலே தென்றலே நீ எனை தேடிவா' (படம் : சாவி) என்கிற பாடலும் 'தென்றலோ தீயோ தீண்டியது யாரோ' (ராகங்கள் மாறுவதில்லை) என்கிற பாடல்களும் கூட SPB லிஸ்ட்டில் உண்டு!  (சிவப்பு நிற பாடல் வரிகளை 'சுட்டி'னால் அந்தப் பாடல்களைக் கேட்கலாம்!)

படம் வெளிவந்த ஆண்டு 1993.  
எந்தப் படம்?  புதிய தென்றல்.  
யார் நடித்தது?  ராதிகா, சரத்பாபு, ரமேஷ் அர்விந்த், சிவரஞ்சனி...  
பிரபாகர் என்பவர் இயக்கம்.   பாடல்களை வைரமுத்துவும் கண்மணி சுப்புவும் எழுத,  ரவி தேவேந்திரன் இசை. 

இந்தப் பாடல் எஸ்  பி பாலசுப்ரமணியமும்  சித்ராவும் பாடிய பாடல்.  என் விருப்பத்தில் பல்லவி சுமார்.  சரணங்கள் ரசிக்கும்படி இருக்கும்.  வைரமுத்து (என்றுதான் நினைக்கிறேன்)  பாடல்.

தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க 
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க 
நீ மண்ணில் வந்த. அந்த நேரங்கள் வாழ்க 
நீ என்னைக் கண்ட. அந்த காலங்கள் வாழ்க 
உந்தன் பூம்பாதம் போகின்ற பொன் வீதி வாழ்க  

நட்சத்திர மண்டலத்தில் நமக்கொரு மண்டபமா 
உன் பெயரில் எழுதி வைக்கிறேன் 
உன் அழகை தொழுது வைக்கிறேன்
நட்சத்திர மண்டலமா நமக்கது தேவையில்லை 
மண்ணுலகை எழுதி வைக்கிறேன் மடியில் விருந்து வைக்கிறேன்  
இலையிட்ட விருந்.திலே
ஆறு சுவைதான்  
இளமையின் விருந்திலே.
நூறு சுவைதான்  
இதில் காமம் பாதி காதல் பாதி கவிஞன் நமக்குச் சொன்னது தான்  

தென்றலுக்கு மேடை தந்த தேவராஜன் வாழ்க 
இந்த தேவதையை வாழ்த்த வந்த சின்ன கண்ணன் வாழ்க 

பறவைகள் பறந்து செல்ல.. பள்ளம் மேடு வானில் இல்லை 
நீயும் நானும் பறவை ஜாதியே.. நிம்மதிக்கு தடைகள் இல்லையே..  
சொல்லுக்குள்ளே இருக்கும் பொருள் சொல்லை விட்டுப் பிரிவதில்.லை 
சோகம் இனி வருவதில்லை சூரியனில் இரவு இல்லையே
கன்னியெந்தன் பேரிலே
கவியரங்கம்
காதல் பற்றி பாடினால்.. 
தமிழ் வணங்கும்  
அந்தக் காமன் சாலை எங்கும் நாளை காதல் ரதங்கள் சுற்றி வரும்..  

தென்றலுக்கு மேடை தந்த தேவ ராஜன் வாழ்க 
இந்த தேவதையை வாழ்த்த வந்த சின்ன கண்ணன் வாழ்க 
பூவோடு வந்த இந்த பொன் மாறன் வாழ்க 
நீ வாழும் மண்ணில் அட நான் கூட வாழ்க 
நம் பொன் வீதி போகின்ற பூந்தென்றல் வாழ்க




பாரு பாரு பட்டணம் பாரு...   நாமெல்லாம் நகைச்சுவை நடிகராக அறிந்திருக்கும் மனோபாலா இயக்கத்தில் 1986 ல் வந்த படம்.  ஆரம்பத்தில் அவர் இயக்குனர்தானே!  முந்தைய படமும் சரி, இந்தப் படமும் சரி நான் பார்க்கவில்லை.  ஏன் அடுத்த பாடல் இடம்பெற்ற படம் கூடப் பார்க்கவில்லை.  ஆனால் இந்தப் பாடல்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்!

மோகன், ரஞ்சனி நடித்துள்ள இந்தப் படத்தில் வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் கங்கை அமரன் பாடல்களை எழுத இளையராஜா இசை.  அசோக்குமார் ஒளிப்பதிவு, கலைஞானம் கதை, திரைக்கதை, வசனம்!

இதில் யார் தூரிகை செய்த ஓவியம் என்கிற பாடலும் கேட்பேன்.

இப்போது பகிரும் பாடல் 'தென்றல் வரும் என்னை அணைக்கும்...  

ஆரம்ப ஹம்மிங்கும் சரி,  ஒவ்வொரு வரியும் முடிந்ததும் வரும் ம்ம்ம்ம்  தொடர்ச்சியும் சரி, இளையராஜா கைவண்ணம் தெரியும்.  பொதுவாக பாடல் முழுவதுமே எஸ் பி பி குரலில் ஒரு பரவசம் தெரியும்.

லலலலா லலா லலலா 

தென்றல் வரும்  ம்ம்ம்ம்  என்னை அணைக்கும்  
ஆ ஆஹ ஹாஹா  
என் வாசல் எங்கும் பூ மழை என் வாழ்க்கை என்றும் வளர் பிறை 
தென்றல் வரும்  ம்ம்ம்ம்  

நேற்று நான் உன்னை நினைத்தேன் நினைத்தே இடை நான் இளைத்தேன் தோகை ஞாபகம் எனக்கும் தினமும் இரவில் பிறக்கும்  
ஆடை சுமந்து அழகு நடக்கும்  ஆசை பிறந்து அருகில் அழைக்கும்  
நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம் 

மாட மாளிகை அமைப்பேன் மலரால் படுக்கை விரிப்பேன்  
கூட நான் வரத் துடித்தேன் கதவை மெதுவாய் திறப்பேன்  
காலம் கனிந்தால் கனவு பலிக்கும்  காவல் கடந்தால் நாணம் தடுக்கும்  
பக்கம் இழுக்கும் வாலிப வேகம் 



மூன்றாவது தென்றல் அச்சாணி படத்திலிருந்து..

மத்தியமாவதி ராகத்தில் அமைந்திருக்கும் பாடல்.  மற்ற இரண்டுபாடல்களும் என்ன ராகம் என்று சொல்லவில்லையே என்று பார்க்காதீர்கள்.  அதுபற்றி அங்கு யாரும் பிரஸ்தாபிக்கவில்லை!

மத்தியமாவதியில் இளையராஜா நிறைய பாடல்கள் போட்டிருக்கிறார்.  'பூங்கொடியே கைவீசு', 'துள்ளித்துள்ளி நீ பாடம்மா',  இன்னும் யோசித்தால் வேறு சில ஆடல்களும் நினைவுக்கு வரும்.  உன்னால் முடியும் தம்பி படத்தின் 'என்ன சமையலோ' பாடலின் கடைசி வரிகளான 'இலையைப் போடடி பெண்ணே வரிகள் மத்தியமாவதி ராகம்!

தாலாட்டு….. பிள்ளை உண்டு தாலாட்டு 
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு 
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு 

பாராட்டு….. அன்னை என்னை பாராட்டு 
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன் 
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்

நான் படைத்த தேன் மழலை நலமுடன் வளர்ந்து வர வேண்டும் 
வான் படைத்த முழு நிலவாய் வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்  
மான் படைத்த மைவிழியே இன்னொரு பிள்ளை பெறவேண்டும் 
ஒன்றா ரெண்டா பிள்ளை என்றால் இன்பம் கொள்ளை  
மெய் சிலிர்த்திட மகன் படிப்பது மழலை என்ற மந்திரம் 
யாழிசையிலும் ஏழிசையிலும் இல்லை இந்த மோகனம் 

வாழ்க்கையிலே வழக்குகளை என் மகன் நாளை தீர்த்து வைப்பான் 
வருத்தமுறும் மானிடர்க்கு மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்  
நாம் வளர்த்த கனவுகளை நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்  
கண்ணன் வண்ணம் கண்டு துள்ளும் உள்ளம் ரெண்டு…  
தென் பொதிகையில் நின்றுலவிடும் தென்றல் போல வந்தவன் 
செந்தமிழினில் சிந்திசைக்க சந்தம் கொண்டு தந்தவன் 

76 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பு ஶ்ரீராம், இனிய காலை வணக்கம். அனைவரும் என்றும நல் வளத்தோடு இருக்க இறைவன் அருள வேண்டும்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

தென்றல் வீசும் வாரம். அருமையான பாடல்கள். படங்கள் பாரத்ததில்லை.பாடல்கள் கேட்டிருக்கிறேன்.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்க எங்கெங்கும்..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..

ஜீவி சொன்னது…

தென்றல் என்பது கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த வார்த்தை.

அவர் நடத்திய பத்திரிகையின் பெயரும் தென்றல் தான்.

ஜீவி சொன்னது…

'தென்றல் வந்து என்னைத் தொடும்
சத்தமின்றி. ........ இடும்'

பாடல் இல்லையா இந்தத் தடவை?

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க வல்லிம்மா... வணக்கம்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றிம்மா.. மனதை வருடும் பாடல்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க துரை செல்வராஜூ சார்.. வணக்கம்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம் ஜீவி ஸார்..   பதிவிலேயே சொல்லி இருக்கிறேனே...

ஸ்ரீராம். சொன்னது…

​தெரிவில் இருக்கிறது! அதுவும் வேறு சில பாடல்களும் அடுத்த சந்தர்ப்பத்தில்!

வல்லிசிம்ஹன் சொன்னது…

நான் படைத்த தேன் மழலை நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
வான் படைத்த முழு நிலவாய் வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும் //////////


எத்தனை இனிமையான பாடல்.
பாலு சாரும் சுசீலா மாவும் எப்படித்தான்
இப்படி இழைந்து பாடினார்களோ.

இசையும் கவிதையும் ,காட்சியும் அமிர்தம்.

வெகு நாட்களுக்குப் பிறகு கேட்கிறேன்.
நன்றி மா ஸ்ரீராம்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி அம்மா. எனக்கும் அந்தப் பாடலின் வரிகள் யாவும் மிகவும் பிடிக்கும்.

நெல்லைத்தமிழன் சொன்னது…

மூன்று பாடல்களும் சட்னு பிடிபடலை. மனசு, தென்றல் வந்து தீண்டும்போது என்ன.. அந்தப் பாடலிலேயே இருந்தது

நெல்லைத்தமிழன் சொன்னது…

தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாய், தென்றல் வந்து என்னைத் தொடும், ஒரு தென்றல் புயலாக வரும் வேளை, போன்றவையும் மனதில் தோன்றுகின்றன

Bhanumathy Venkateswaran சொன்னது…

அனைவருக்கும் காலை வணக்கம்.

ஜீவி சொன்னது…

உங்களைப் போன்ற கவிஞர்களின் கற்பனையைக் கிளப்பத் தானே,
......... இது7 கண்டுக்காமல் போனால் எப்படி?

ஜீவி சொன்னது…

காலை வேளை. அதுவும் நவராத்திரி காலை வேளை. மேலோட்டமாக பாடல்களை மட்டும் பார்த்தேன். பின்னால் வருகிறேன்.

ஜீவி சொன்னது…

வெள்ளிக்கிழமை வேறே. !!!!

கோமதி அரசு சொன்னது…

அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இப்போதாவது கருத்து வருகிறதா என்று பார்க்கிறேன். நேற்று இரவிலிருந்து பிரச்சனை. எங்கள் தளத்தில் மட்டும் கருத்து பதிகிறது மற்ற தளங்களில் பதிய மாட்டேன் என்கிறது..

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹப்பா வந்துவிட்டது!!!!!!!!

கீதா

கோமதி அரசு சொன்னது…

மூன்று பாடல்களும் இனிமை.
அடிக்கடி கேட்ட பாடல் இல்லை.அதனால் நினைவில் இல்லை.


பாடல்களுக்கு நீங்கள் கொடுத்த விவரங்களும் தெரிந்து கொண்டேன். நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பெயரைக் கேட்கும்போதே வருடும் நினைவு..தென்றல்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதல் பாடல் கேட்டதில்லை ஸ்ரீராம். படமும் இப்பதான் தெரிகிறது.

எஸ்பிபி சரணம் நன்றாக இருக்கிறது.

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தென்றல் என்றதும் எனக்கு உட்னஏ நினைவுக்கு வருவது

தென்றல் வந்து தீண்டும் போது, தென்றல் வந்து என்னைத் தொடும்...டக்குனு வருவது இவை

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இரண்டாவது பாடலும் கேட்டதில்லை ஸ்ரீராம்

முதல் இரு பாடல்களின் ராகங்களையும் இன்னும் கேட்டுவிட்டு சொல்ல முயற்சிக்கிறேன் ஸ்ரீராம். ..இப்ப டக்குனு கண்டு பிடிக்க முடிவதில்லை. அதையும் இந்த கொரோனா கொண்டு போய்விட்டதோ ஹாஹாஹா

கீதா

KILLERGEE Devakottai சொன்னது…

மூன்றும் சூப்பர் பாடல் ஜி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையானப் பாடல்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மூன்றாவது பாடல் மிகவும் பிடித்த பாடல் ஸ்ரீராம் நிறைய கேட்டிருக்கிறேன். படமும் இந்தக் காட்சியும் கூட இப்பதான் பார்க்கிறேன். பாடல் என்ன இனிமை.!!

ஆம் மத்தியமாவதி.

ஆகாயப் பந்தலிலே பாட்டும் மத்தியமாவது, ஆகாய கங்கை (இளையராஜா இசை) அதுவும் மத்தியமாவதிதான்..நீங்கள் சொல்லியிருப்பதும்

கீதா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல்கள்...

துரை செல்வராஜூ சொன்னது…

தென்றல் - தெற்கிலிருந்து தவழ்வதால்..
வாடை - வடக்கிலிருந்து வருவதால்..
கொண்டல் - கிழக்கேயிருந்து கிசுகிசுப்பதால்..
மேலை - மேற்கிலிருந்து வருடுவதால்...

தமிழே.. தமிழே!..

ஜீவி சொன்னது…

உங்கள் சிறு வயது கையெழுத்துப் பத்திரிகையின் உள்ளடக்கத்தை எபியில் கொண்டு வர முயன்றிருக்கிறீர்களா? இது வரை இல்லையென்றால் இப்பொழுது கூட முயற்சிக்கலாம். வசந்தத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

துரை செல்வராஜூ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
துரை செல்வராஜூ சொன்னது…

வாடைக் காற்றம்மா
வாடைக் காற்றம்மா..
வாலிப மனசை நாளுக்கு
நாளாய் வாட்டுவ தென்னம்மா..
- இரத்தத் திலகம் படப் பாடல் L.R. ஈஸ்வரி அவர்களின் குரலில்..
இளையராஜா அவர்களது இசையில் -

பூ. வாடைக் காற்று
வந்து ஆடை தீண்டுது..

என்றும்

வாடை வாட்டுது ஒரு
போர்வை கேக்குது..

என்றும் மேலும் சில/ பல இனிமைகள்...

இந்தக் கவிஞர்கள் கிழக்கையும் மேற்கையும் ஏன் கை விட்டார்கள்?..

ஆனாலும், எங்காவது பாடி வைத்திருப்பார்கள்... எனக்குத் தான் தெரியவில்லை..

துரை செல்வராஜூ சொன்னது…

கொண்டல் எனில் மேகங்கள் என்று பொருளுண்டு.. நீருண்ட் மேகங்களைத் தள்ளிக் கொண்டு வந்து தமிழகத்தின் கிழக்குக் கரைகளை - வட கிழக்குப் பருவ மழை என்று தழைக்க வைப்பதால் கீழைக் காற்றை கொண்டல் என்பதுவும் உண்டு..

துரை செல்வராஜூ சொன்னது…

இருந்தாலும் -

ஜன்னல காற்று, அடுப்பங்கரைக் காற்று, தோட்டத்துக் காற்று, குளத்தங்கரைக் காற்று, ஏரிக்கரைப் பூங்காற்று -

என்று எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து வருவோம்!..

Geetha Sambasivam சொன்னது…

தென்றல் அருமையாக அனைவரையும் வருடிச் சென்றிருக்கிறது. பாடல்களோ/படமோ பார்க்கலை/கேட்கலை. ஹிஹிஹி, நானெல்லாம் இந்தக் குழுவில் இருக்கவே லாயக்கில்லை! :)))))) எல்லாரும் இசை கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர்த்து வேறே ஏதும் செய்ய மாட்டீங்க போல! எனக்கெல்லாம் எப்போவானும்! :(

ஜீவி சொன்னது…

'தென்றலுக்கு மேடை தந்த
தேவராஜன் வாழ்க!'

-- பாடலை எழுதியது வைரமுத்துவாக இருக்கும் என்று எப்படி கணித்தீர்கள்?

'காதல் பாதி. காமம் பாதி
கவிஞன் சொன்னது தான்'

-- என்று இன்னொரு கவிஞன் சொன்னதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மிகுந்தவர் (!) என்பதினாலா?

ஜீவி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஏகாந்தன் ! சொன்னது…

முதல் பாடலின் லிரிக்ஸ்பற்றி கமெண்ட் அடிக்க நினைத்தேன். விட்டுவிடுகிறேன்! இது சங்கீத தினம். கேட்டு மகிழ்வோம்.
முதல் பாடலில் மிக இளமையான எஸ்பிபி, சித்ரா குரல்கள், பாடலை அருவியென அழைத்துச்செல்பவை. இசையும் இனிதே.

வல்லிசிம்ஹன் சொன்னது…

தென்றல் வரும் ,மோஹன், ரஞ்சனி பாடலில் பாலு சார்
மிக லயித்துப் பாடிய இனிமை. நல்ல உற்சாகம் தெரிகிறது.

லவ்லி ட்யூன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

தென்றலிலே மிதந்து வந்த தேவதை பாடலும் ,இசையும், பாலு சார்
குரலும் கவருகிறது. மாலை நேரத்துக்கு உகந்த பாடல்.

ஷிவ ரஞ்சனி, மோஹினி இவர்கள் இருவரையும் குழப்பிக் கொள்வேன்.:)

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கண்ணதாசன் நடத்திய பத்திரிகையின் பெயர் 'தென்றல்'. இது தெரியாமலேயே நானும், சிறுவயதில் நான் நடத்திய கையெழுத்துப் பத்திரிகைக்கு 'தென்றல்' என்று பெயர் வைத்திருந்தேன். காரணம் என் அண்ணன் 'வசந்தம்' என்று ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதால்.//

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கையெழுத்துப் பத்திரிகை என்றால் பல மேட்டர் எழுத வேண்டியிருக்குமே இல்லையா? நார்மல் பத்திரிகை போன்று லே அவுட் எல்லாம் கொடுத்துச் செய்வீர்களா? ஜோக், கட்டுரை, கதை என்று எல்லாம்? பிரமிப்பாக இருக்கிறது. ஸ்ரீராம்ஜி உங்களுக்கு நல்ல அனுபவம்.

முதல் இரு பாடல்களும் கேட்ட நினைவில்லை. இப்போதுதான் கேட்டேன். நன்றாக இருக்கிறது. அவ்வளவு பிரபலம் இல்லையோ?

மூன்றாவது பாடல் அருமையான பாடல். நிறையக் கேட்டிருக்கிறேன். அச்சாணி படமும் பார்த்த நினைவிருக்கிறது.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஸ்ரீராம் முதல் பாடல் சுத்ததன்யாசி ஒட்டி வருகிறது என்று என் கணிப்பு.

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

வெள்ளிக்கிழமை பூஜையா?

ஸ்ரீராம். சொன்னது…

சில பாடல்கள் எனக்குப் பிடிக்காது! எனக்குப் பிடித்த பாடல்களை மட்டும் பகிர்கிறேன்!

ஸ்ரீராம். சொன்னது…

ஹா..  ஹா..  ஹா...   ஆனால் அது என் தெரிவில் இல்லை!

ஸ்ரீராம். சொன்னது…

முதல் பாடல் ரசனை.  இரண்டாம் பாடல் வரிசையில் இருக்கிறது, மூன்றாம்  பாடல் எனக்குப் பிடிக்காது!  

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம்.. வாங்க...

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம் கோமதி அக்கா.. வாங்க...

ஸ்ரீராம். சொன்னது…

கருத்து என்று எதுவும் வரவில்லை!

ஸ்ரீராம். சொன்னது…

:>))

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி கோமதி அக்கா.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி முனைவர் ஸார்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம். நன்றி கீதா.

ஸ்ரீராம். சொன்னது…

:>))

ஸ்ரீராம். சொன்னது…

​நன்றி ஜி.. இன்னும் இரண்டு பாடல்கள் கூட கொடுத்திருக்கிறேன்!

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி நண்பரே.

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம். முன்னரும் சொல்லி இருக்கிறீர்கள் கீதா.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி DD.

ஸ்ரீராம். சொன்னது…

ஓ...   அறிந்துகொண்டேன் துரை செல்வராஜூ ஸார்..

ஸ்ரீராம். சொன்னது…

அது சிறுபிள்ளை முயற்சி ஜீவி ஸார்.  நூலகத்தில் போட்டு விடுவேன்.  ஆனாலும் பெரியவர்களும் பெருந்தன்மையாகப் பாராட்டினார்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

பனிப் பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா என்று கூட ஒரு யேசுதாஸ் பாடல் உண்டு.

ஸ்ரீராம். சொன்னது…

காற்றாகவே மாறி விட்டீர்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

அதெல்லாம் ஒன்றுமில்லை அக்கா.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை.

ஸ்ரீராம். சொன்னது…

​நானெங்கே கணித்தேன்? அங்கு போட்டிருந்தது!


:))

ஸ்ரீராம். சொன்னது…

சும்மா என்ன சொல்ல நினைத்தீர்கள் என்று சொல்லுங்கள் ஏகாந்தன் சார்..   ஒரு எண்ணப் பகிர்வுதானே...

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம் அம்மா.

ஸ்ரீராம். சொன்னது…

​இருவருக்கும் பூனைக்கண்கள் என்பதாலா?!!!

ஸ்ரீராம். சொன்னது…

பிரமிக்கும் அளவெல்லாம் ஒன்றுமில்லை துளஸிஜி..   சிறுபிள்ளை முயற்சிகள்.  அட்டைப்படம் ஒன்று.  உள்ளே கதை ஒன்று, கட்டுரை ஒன்று,  ஜோக்ஸ் என்கிற பெயரில் சில பிளேடுகள், வாசகர் கடிதம்!

ஸ்ரீராம். சொன்னது…

ஓ.. அப்படியா? நன்றி கீதா.

ஜீவி சொன்னது…

அபுரி. அப்போ சப்தம் இன்றி முத்தமிடும் பாடல் உங்கள் பிடித்த லிஸ்டில் இல்லையா?

சரியா போச்சு. :))

ஸ்ரீராம். சொன்னது…

நீங்கள் என்ன பாட்டு சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் வரிகள் போல மை டியர் மார்த்தாண்டன் படத்தில் ஒரு பாடல் உண்டு!

ஜீவி சொன்னது…

பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீர் தூவி ஓய்வெடு
தூரல் போடும் இன்னேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்..

ஆஹா.. என்ன அனுபவிப்பு!!!;

மாதேவி சொன்னது…

பாடல்கள் கேட்டதில்லை. இப்பொழுதுதான் கேட்டேன். இனிமையான பாடல்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி மாதேவி.