புதன், 5 ஜனவரி, 2022

உங்கள் புத்தாண்டு தீர்மானங்கள் என்னென்ன ?

 

சென்ற வாரம் எங்களை யாருமே கேள்விகள் கேட்கவில்லை. 

அதனால -- 

நாங்க கேட்டுடறோம் ! வாசகர்கள் பதில் சொல்லுங்க ! 

= == = = =

1) உங்கள் புத்தாண்டு தீர்மானங்கள் என்னென்ன ?

2) சென்ற ஆண்டு தொடக்கத்தில் எடுத்த தீர்மானங்கள் யாவும் நிறைவேற்றப் பட்டனவா? 

3) டைரி விலை கொடுத்து வாங்கியது உண்டா - அல்லது ஓ சி டைரி மட்டும்தானா? 

4) வருட முதல் நாளில் - இதை நிச்சயம் செய்வேன் / செய்யமாட்டேன் என்று நீங்கள் எதையாவது பின்பற்றுவது உண்டா? 

5) இந்த 2022 ஆம் ஆண்டில் உங்களிடமிருந்து எங்கள் Blog க்கு எதை எதிர்பார்க்கலாம் : -

a ) திங்க - பதிவுகள் 

b ) செவ்வாய் சிறுகதை 

c ) புதன் கிழமைக்கு கேள்விகள் 

d) சனிக்கிழமை : நான் படிச்ச கதை 

e ) ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துரை 

f ) மௌனப் புன்னகை. 

= = = = = =

  மேற்கண்ட கேள்விகளுக்கு 

& அளித்துள்ள பதில்கள் :

& 1 ) மொபைல் போனில் ஆடுகின்ற பொழுதுபோக்கு சீட்டாட்டங்களை வெகுவாக குறைப்பது. முன்பு ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரம் அந்த வகை பொழுதுபோக்கு இருந்தது. இந்த வருடம் இதுவரை அந்த வகையில் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் இருந்து வருகிறேன். வாரத்தில் ஏதேனும் ஒருநாள் மட்டும் ஒருமணி நேரம் விளையாடலாம் என்று நினைத்துள்ளேன். பார்ப்போம். 

& 2) சென்ற ஆண்டு தொடக்கத்தில் என்னென்ன தீர்மானங்கள் எடுத்தேன் என்று இப்போது சரியாக ஞாபகம் வரவில்லை. புத்தகங்கள் படிப்பதை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. கடந்த இரண்டு வாரங்கள் சில புத்தகங்கள் படித்தேன். முயற்சியைத் தொடரவேண்டும். 

& 3)  டைரி விலை கொடுத்து வாங்கியது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்புதான். அப்புறம் ஓசி மட்டுமே!! 

& 4) வருட முதல் நாளில் யாருக்காவது ஏதாவது பரிசு அளித்து அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைத்து, அதை செய்தும் வருகிறேன். கட்டுப்பாடுகள் இல்லாத காலத்தில் கோவிலுக்கு சென்று உலக மக்கள் யாவரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். 

& 5)  b and e  

= = = =

# பதில்கள் :

# 1) புத்தாண்டு தீர்மானங்கள் ஒன்று பகவத் கீதை படித்து முடிக்க வேண்டும். கோபமாக அல்லது அதிகமாக விமர்சனம் செய்து பேசுவதை தவிர்க்க வேண்டும்

# 2) சென்ற ஆண்டும் இதே தீர்மானங்கள் தான் அனேகமாக பாதி அல்லது முக்கால் அளவு நிறைவேறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்

# 3)  டைரி விலை கொடுத்து வாங்கியது உண்டு. ஆனால் ஒரு நாள் கூட அதிலும் டைரிக் குறிப்பாக எதுவும் எழுதியது இல்லை.

# 4)  வருட முதல்நாள் செண்டிமெண்ட் எனக்குக் கிடையாது.

= = = =

$ பதில்கள் : 

$ 1)  kg எடை அதிகரிக்க வேண்டும்.

$ 2  6- ல 5.

$ 3. டைரி விலை கொடுத்து வாங்குவதா?

$ 4. உண்டு 

$ 5  f 

= = = = =

இந்த வருடத்தின் ஐந்தாவது நாளில் காலை ஐந்து மணிக்கு வெளியாகின்ற இந்தப் பதிவில், ஐந்து கேள்விகள் வைத்துள்ளோம். 

அடுத்த வாரம் உங்களுக்கு ஒரு ஜோஷியம் சொல்லப் போகிறோம் - அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான் : 660 க்குள் ஒரு மூன்று இலக்க எண் (001 to 660) அப்புறம் இருபதுக்குள் ஓர் எண் (01 to 20) கருத்துரையாக பதியுங்கள். உங்களுக்கான ஜோதிடம் அடுத்த வாரம் நம் ஆஸ்தான ஜோதிடர் சொல்லுவார். 

= = = =   

ப பா க எ :

1) 

2) 


3) 

= = = = =

107 கருத்துகள்:

  1. காலை வணக்கம் எல்லோருக்கும்.

    புத்தாண்டு தீர்மானங்கள் என்று எதுவும் எடுக்கும் வழக்கம் இல்லை. அவ்வப்போது நடப்பதில் இருந்து கற்பது முடிந்த அளவு செயல்படுத்துவது என்பதுதான். தீர்மானம் எடுத்து நிறைவேற்ற முடியாமல் மனம் கஷ்டப்படும். அவ்வப்போது நடப்பதை வைத்து பக்குவப்படுத்திக்க முயற்சி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தீர்மானம் எடுத்து நிறைவேற்ற முடியாமல் மனம் கஷ்டப்படும். அவ்வப்போது நடப்பதை வைத்து பக்குவப்படுத்திக்க முயற்சி.// வித்தியாசமான சிந்தனை.
      ஆனால் எடுத்த தீர்மானங்கள் மனதின் வாரத்தில் இருந்து வந்தால் நல்லதுதானே!

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. 2. இதற்குப் பதில் 1 வதுதான்..

    3. நெவர்

    4. இல்லை. இதற்கும் முதல் பதில்தான். செய்ய வேண்டும் என்று நினைபப்தை வருட முதல் நாள் வரை எதற்கு காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. 5. ஹிஹிஹிஹி...முடிந்தால் மனம் ஒத்துழைத்தால்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. மேலே சொன்ன பதிலுக்கு கூடவே ஒரு கருத்து போட்டு அழித்து விட்டு வேறு கருத்து போட்டேன் அது வந்தது ஆனால் காணவில்லை இப்போது!!!

      5. ஹிஹிஹிஹி...முடிந்தால் மனம் ஒத்துழைத்தால்!!//

      இது கதைகள், சனி - படித்த கதை, திங்க பதிவுக்கான பதில்.

      கருத்துகள் வழக்கம் போலதான். வலைக்கு நான் லீவு போடாம்ல் இருந்தால், ப்ளாகர் படுத்தாமல் இருந்தால்!!!!

      கீதா

      நீக்கு
    3. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  5. முதல் படம் - குழந்தைகள் அழகோ அழகு...முதல் ஜோடி வெவ்வேறு குழந்தைகள் போல...வேறு கலர் பேக்? அடையாளத்திற்கு....அடுத்த ஜோடி இரட்டை போல! ஆனால் எதற்கு குழந்தைகளைப் பொருள் பொன்று இப்படித் தொங்க விட்டிருக்காங்க? ஃபோட்டோ ஷூட்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் இரு ஜோடிக் குழந்தைகளும் தொங்குவது (இப்படிச் செய்வதில் எனக்கு மனம் ஒப்பாது இருந்தாலும்... கை இடையில் அது ஓகே

      ஆனால் இரண்டாவது கழுத்தில்...இது நல்லதில்லை என்பது என் எண்ணம்

      கீதா

      நீக்கு
    2. தொங்கவிடுவது மனம் ஒப்பவில்லை - என்றாலும் முதல் ஜோடி கைகள் அடியில் ஆனால் கீழே உள்ளவை கழுத்தில் - இது நல்லதில்லையே

      கீதா

      நீக்கு
    3. குழந்தைகளின் விஷமங்களை சமாளிக்க யாரோ கண்டு பிடித்த hanger போலிருக்கு !!

      நீக்கு
  6. 2. வது படம் - லவ்லி! சூப்பர்.

    3. வது நல்லதில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  7. என்ன இது ஒரு கருத்து போடும் போது ஏற்கனவே போட்ட இன்னொரு கருத்துகாணாமல் போகிறது!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா கருத்துகளும் இருக்கிறதே...  எதுவும் காணாமல் போனமாதிரி தெரியவில்லையே!

      நீக்கு
    2. காணாமல் போன கருத்தை மீண்டும் போட்டுவிட்டால் போச்சு!!

      நீக்கு
    3. ஸ்ரீராம் அது அப்புறம் வருகிறது. முதலில் காணாமல் போகுது...

      ஆமாம் கௌ அண்ணா மீண்டும் போட்டுக் கொண்டிருக்கிறேன்..

      கீதா

      நீக்கு
  8. 2 வது படத்துக்கு ஏற்கனவே கருத்து போட்டு இங்கு பார்த்ட்தேன் ஆனால் அதற்கு முன் போட்ட கருத்து வந்தும் மீண்டும் காணாமல் போய்விட்டது. அதை மீண்டும் போட்டு வந்து பார்த்தால் 2 வது படத்துக்குப் போட்ட கருத்தை காணவில்லை...என்னாச்சு ப்ளாகருக்கு!!??

    பானுக்காவும் கருத்து போகவில்லை என்று சொல்லிட்டுருந்தாங்க. வேறு யாருக்கேனும் பிரச்சனை இருக்கா...

    ரோபோ செக்கிங்க் வேற செய்யுது அப்படியும் போட்ட கருத்து காணாமல் போகிறதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா! ஜாலிலோ ஜிம்கானா. டோலிலோ கும்கானா! :))))))

      நீக்கு
    2. ஹாஹாஹா கீதாக்கா வாங்க யாருக்கெல்லாம் கருத்து போகலையோ நாம எல்லாரும் சேர்ந்தே கும்மி அடிக்கலாம்!!!

      கீதா

      நீக்கு
    3. கருத்துரைகள் எல்லாம் எங்களுக்குத் தெரிகிறதே!!

      நீக்கு
    4. ப்ளாகருக்கு ஒன்றும் ஆகவில்லை. இந்த grammarly ஏதாவது இடக்கு மடக்கு செய்யும். வேறு எங்காவது டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.

       Jayakumar

      நீக்கு
    5. ஜெகே அண்ணா ப்ளாக் கமென்ட்ஸ் னு ஒரு வேர்ட் டாக்குமெண்டே வைச்சிருக்கேன். அதில் அடித்துவிட்டு காப்பி பேஸ்ட் செய்துதான் போடுகிறேன்.

      கீதா

      நீக்கு
  9. 2 வது படம் - லவ்லி!!!

    3 வது படம் - அப்படிச் செய்வது நல்லதில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இவ் வருடத்திலிருந்து கோபப்படுவதை நிறுத்துவதாக... இல்லையேல் குறைத்துக் கொள்வதாக திட்டம்...

    இறைவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அதிகரிக்கும் தொற்றுக் குறைந்து ஊரடங்கு இல்லாமல் மக்கள் பாதுகாப்புடன் வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும்

    தொற்றில்லா வாழ்வு பெற்று இனிதே வாழ இறைவன் அருள வேண்டும்..

    பதிலளிநீக்கு
  13. ஏன் ஒருத்தருமே கேள்வி கேட்கலை?
    படங்கள்!
    1. குழந்தைகளா அல்லது பொம்மைகளா அவை! இப்படித் தொங்கவிட்டவர்களைத் தொங்க விட வேண்டும். :(

    2. குஞ்சுகளுக்குத் தாய் போல் உணவூட்டும் குழந்தை.

    3. இது ஆபத்தான விளையாட்டு. எனக்குத் தெரிந்து ஒரு சின்னக் குழந்தை கை தவறிக் கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறது. அதுவும் சொந்த அப்பாவின் கைகளாலேயே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைகளுக்கு நன்றி. 3 எவ்வளவோ படித்திருந்தாலும் சில சமயங்களில் சில மனிதர்கள் மடையர்களே!!

      நீக்கு
  14. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு புத்தாண்டும் தேதி//வருடம் மாறுவதைத் தவிர்த்து மற்றபடி வழக்கமான தினமே.

    தீர்மானங்கள் என எதுவும் வைச்சுக்கறதில்லை. கணினியில் இன்னிக்காவது 2 மணி நேரம் தொடர்ந்து உட்காரணும்னு நினைப்பதையே பல சமயங்கள் நிறைவேற்ற முடிவதில்லை. எல்லாம் அவன் செயல்னு விடுவதைத் தவிரத் தீர்மானங்கள் எடுத்து அதை நிறைவேற்ற முடியாமல் தவிப்பதில்லை. எதையும் தாங்கும் மனோ பலம் தவிர்த்து வேறே எதுவும் எதிர்பார்ப்பதும் இல்லை.
    டைரி, காலண்டர் எல்லாம் அடிச்சுப் பிடிச்சு வாங்கினதில்லை. முன்னெல்லாம் டைரி நிறையக் கிடைத்து வந்தது. லக்ஷ்மி சுந்தரம் ஃபைனான்ஸில் வாடிக்கையாளர்களுக்கு டைரி கூரியரில் அனுப்பி வந்தார்கள். அதே போல் சுந்தரம் ஃபைனான்சிலும் காலன்டர் வீடு தேடி வந்து விடும். இங்கே ஶ்ரீரங்கம் வந்ததிலிருந்து வந்து கொண்டிருக்கும் தினசரிக் காலண்டர்களை என்ன செய்வதுனு புரியலை. அரசமரப் பிரதக்ஷிணத்துக்கு வைச்சுக்கலாமானு யோசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு புத்தாண்டும் தேதி//வருடம் மாறுவதைத் தவிர்த்து மற்றபடி வழக்கமான தினமே.// என்பதோடு அடுத்து வந்த முதல் பாரா கருத்து..எல்லாம்

      ஹைஃபைவ் கீதாக்கா

      கீதா

      நீக்கு
    2. // ஶ்ரீரங்கம் வந்ததிலிருந்து வந்து கொண்டிருக்கும் தினசரிக் காலண்டர்களை என்ன செய்வதுனு புரியலை. அரசமரப் பிரதக்ஷிணத்துக்கு வைச்சுக்கலாமானு யோசனை.// கடைசி வாக்கியத்தை விவரிக்கவும்.

      நீக்கு
    3. பாருங்க இங்க கீதாக்காவுக்குப் போட்டு வெளியிட்ட கருத்தைக் காணவில்லை இப்போது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இத்தனைக்கும் ரோபோ செக் செய்து படம் கொடுத்து செக் செய்து அனுமதி கொடுத்து வெளியிட்டது....

      //என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு புத்தாண்டும் தேதி//வருடம் மாறுவதைத் தவிர்த்து மற்றபடி வழக்கமான தினமே.//

      ஹைஃபைவ் கீதாக்கா மீ டூ. அதுக்கு அடுத்து கொடுத்த கருத்து முதல் பாரா ..ஹைஃபைவ்!!!

      கீதா

      நீக்கு
    4. உங்க கருத்து வந்திருக்கு தி/கீதா.
      அரசமரப் பிரதக்ஷிணம் தெரியாதா கௌதமன் சார்! திங்கட்கிழமை/சோமவாரமும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் அதிகாலைக்கருக்கலில்/சிலர் விடிஞ்சதும் போறாங்க. ஏதேனும் ஒரு பிள்ளையார் கோயிலில் அரசும்/வேம்பும் சேர்ந்து இருத்தல் நல்லது. அல்லது அரசமரம் மட்டும் இருந்தாலும் பரவாயில்லை. 108 பிரதக்ஷிணம் செய்து ஒவ்வொரு பிரதக்ஷிணத்திற்கும் ஒவ்வொரு பொருளை தானமாகப் போடுவார்கள். பழங்கள், ஏலக்காய், மஞ்சள், குங்குமப் பொருட்கள்
      அடங்கிய பைகள், கருகமணி, பிச்சோலை, வளையல்கள், தேங்காய்கள், எனப் பூஜைக்கு உதவும் பொருட்கள், விசிறி,சிலர் தாமிரப் பாத்திரங்கள் பூஜைக்கு ஏற்றாற்போல் என எதானும் போடுவர்கள். அதைத் தவிரவும் கோயிலில் வந்திருக்கும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கில் வைத்தும் கொடுப்பார்கள். பிரதக்ஷிணத்திற்கு நூற்றெட்டு எனக் கணக்கே தவிர்த்து மற்றபடி நிறைய வாங்கி வைத்துக் கொண்டு அன்று முழுவதும் கொடுப்பார்கள்.

      நீக்கு
    5. மதுரையில் ஒவ்வொரு மல்லிகைப்பூக் காலத்திலும் வீட்டுக்கு வீடு லக்ஷம் மல்லிகை கொடுப்பார்கள். அக்கம்பக்கம் இருக்கும் பெண்கள் தவிர்த்துத் தெருவில் சென்று கொண்டிருக்கும் பெண்களைக் கூட உள்ளே அழைத்துக் கை நிறைய மல்லிகை அரும்புகளைக் கொடுத்து அனுப்புவார்கள். அதே போல் பச்சை மஞ்சள் காய்ச்சதும் அதைப் புழுக்கிக் காயவைத்து குண்டு மஞ்சள் கிழங்காக ஆனதும் அவற்றை மூட்டை மூட்டையாக வாங்கி லக்ஷம் மஞ்சள் கொடுப்பார்கள். ஒரு சிலர் அப்படியே அள்ளி முந்தானையில் கொட்டுவார்கள். சிலர் ஒரு பை/அல்லது மஞ்சள் பெட்டியில் 108 மஞ்சள் கிழங்கு, ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, பழம், ரவிக்கைத்துணி வைத்தும் கொடுப்பார்கள். லக்ஷம் மஞ்சள் கொடுத்து முடிந்ததும் அவரவர் சௌகரியப்படி ஒன்பதிலிருந்து பனிரண்டு சுமங்கலிகள் வரை அழைத்துச் சாப்பாடு போட்டுப் புடைவை வைத்தும் கொடுப்பார்கள். எனக்கும் ஆசைதான் லக்ஷம்மஞ்சள் கொடுக்க. ஆனால் ஆசை இருக்கு தாசில் பண்ண! கதை தான் நம்ம கதை! :)))))) ஆனால் நிறைய லக்ஷம் மல்லிகை வாங்கி இருக்கேன். எனக்குத் தெரிந்து இது மதுரை தவிர்த்து மற்ற ஊர்களில் அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால் லக்ஷம் மஞ்சள் நிறைய ஊர்களில் கொடுக்கும் வழக்கம் இருக்கு. அம்பத்தூரிலேயே பல முறை லக்ஷம் மஞ்சள் வாங்கி இருக்கேன்.

      நீக்கு
    6. தினசரிக் காலண்டர்களை என்ன செய்வதுனு புரியலை. அரசமரப் பிரதக்ஷிணத்துக்கு வைச்சுக்கலாமானு யோசனை.// ஹாஹா! இதற்கு யாருமே சிரிக்கவில்லையே, ஜோக் முடியவில்லையோ? என்று நினைத்தேன். அப்படித்தான் என்று புரிந்தது. நம் போக்கிற்கு நாம் விளக்கம் சொல்ல நேர்வது கஷ்டம்தான்:((

      நீக்கு
    7. *ஜோக்கிற்கு என்று படிக்கவும்.

      நீக்கு
    8. விவரமான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. வருட முதல்நாள் எல்லா நாட்களையும் போலத் தான்.
    எங்கள் ப்ளாகிற்கு இதை அனுப்புவேன் என உறுதிபட என்னால் சொல்ல முடியாது. சொல்லிவிட்டால் அதை நிறைவேற்றியே தீரணும். ஆகவே என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன். கருத்துரைகள் நிச்சயம் இருக்கும்/பதிவுகளைத் தொடர்ந்து பார்க்க முடிந்தால்.

    பதிலளிநீக்கு
  16. போயிட்டு முடிஞ்சால் மத்தியானமா வரேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, மீண்டும் வருக !

      நீக்கு
    2. ஓஓ, இந்த நம்பர் சொல்லணுமா? எல்லோரும் சொல்லி இருக்காங்களே, என்னடாப்பானு பார்த்தேன். 660க்குள்ளாக 300 20க்குள்ளாகப் பதினைந்து. எனக்கு எண்கள் சமமாக இருந்தாலே பிடிக்கும். :)))) பின்னம் பிடிக்காது வெற்றிலை, பாக்கில் வைப்பது தவிர்த்து. அப்போக் கட்டாயமாய் பின்னத்தில் இருக்கணும் என்பார்கள். உறவு தொடரணும் என்பதற்காக. அதுவும் எங்க பக்கத்தில் தான் இந்தப் பழக்கம். தஞ்சாவூர்ப் பக்கம் அந்த ஒண்ணே கால் ரூபாய் அல்லது ஒரு ரூபாய் வைக்கவே மாட்டாங்க. 10 ரூ, 20 ரூ, 50 ரூ எனக் கொடுப்பார்கள். சபரிமலை செல்லும்போது ஐயப்பன்மார் அம்மாவை நமஸ்காரம் செய்து வெற்றிலை, பாக்கில் ஒண்ணேகால் ரூபாய் வைச்சுக் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். அது ஒரு ஐதிகம்.

      நீக்கு
    3. கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கான ஜோதிடம் அடுத்த வாரம்.

      நீக்கு
  17. பதில்கள்.
    1, தீர்மானங்கள் எடுத்துக் கொள்வதில்லை:)
    2 இல்லை.
    3,டயரி விலை கொடுத்து வாங்கியது லாண்ட் மார்க் இருந்த காலம். 45
    வருடங்களுக்கு முன்னால் என்று நினைவு. பிறகு தம்பிகளும் கணவரும்
    கொடுப்பது. ஹோ& கோ டெய்லி டயரி இருந்தது.

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. வருட முதல் நாள், மாத முதல் நாள், 1ம் தேதி என எனக்கு நானே சிலவற்றைச் செய்வேன் (காலையில் சீக்கிரம் எழுந்துகொள்வது, தவறாமல் நடைப்பயிற்சி, சுதர்ஷன்க்ரியா என்பது போன்று. இன்று இதைச் செய்தால் மாதம் முழுதும், வருடம் முழுதும் தவறாது என்பது போன்ற நம்பிக்கை.

    பதிலளிநீக்கு
  20. 4, நல்லது பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுவேன்.
    பின் பற்றுவேன்.

    பதிலளிநீக்கு
  21. குழந்தைகளைத் தூக்கிப் போட்டு விளையாடுவது, முட்டாள்களின் செயல்.

    பதிலளிநீக்கு
  22. முதல் படம்,மூன்றாவது படம் சுவைக்கவில்லை.
    எங்க ஒண்ணு விட்ட சித்தப்பா என்னை அப்படி சுற்றி
    நான் விழுந்த நினைவு:) வயது 4.

    இரண்டாவது படம் இனிமை.

    பதிலளிநீக்கு
  23. 660க்குள் ஒரு எண் 227
    20க்குள் ஒரு எண் 14

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல தேர்வு. உங்களுக்கான ஜோதிடம் அடுத்த புதன் பதிவில்.

      நீக்கு
  24. முடிந்தவரை கருத்து,பின்னூட்டம் இடுவதை செய்கிறேன்.
    கதைகளை சுருக்க மாக எழுத முடியவில்லை. க்ரிஸ்ப்
    ஆக இல்லாவிட்டால் அதில் பிரயோஜனம் என்ன என்று என்னையே

    கேட்டுக் கொள்வேன்.:)
    அடிப்படையில் எழுதும் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது.
    கோவிட் சைட் எஃபெக்ட் ?

    பதிலளிநீக்கு
  25. வருடத்தின் முதல் நாள் என்பதோடு சரி... எந்த வருடமும் எவ்வித தீர்மானமும் எடுத்ததில்லை... (இ)எதுவும் கடந்து போகும்...!

    ஆனாலும் வலைப்பூ பொறுத்தவரை, எழுத்துகளால் கட்டமைக்கப்பட்ட திருக்குறள் பதிவுகளை எழுத வேண்டும் என்று ஓர் 'எண்'ணம்... ம் பார்ப்போம்...

    அப்புறம் அனைத்திற்கும் நகை...!

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    வருட முதல் நாளிலிருந்து தீர்மானங்கள் என உறுதியாக எதுவும் எடுத்துக் கொண்டதில்லை. அப்படியே எப்போதோ இள வயதில் சில வருடங்களில் எடுத்துக் கொள்ள தீர்மானித்தாலும். அவை பிப்ரவரி, மார்சிலேயே உடனிருக்க மறுத்து நழுவி சென்றதுண்டு. பிறகு நம் கையில் எதுவுமில்லை (சில ரேகைகளையும், பத்து விரல்களையும் தவிர) என்ற பக்குவங்கள் வந்த பின் எல்லா நாட்களும் ஒன்றாகி விட்டன.

    டைரி தினசரி எழுதும் பழக்கம் இல்லை. (எங்கள் அப்பாவிடம் கடைசி வரை அந்தப் பழக்கம் இருந்தது கண்டு வியந்திருக்கிறேன்.) அதனால் டைரிகள் என எதுவும் வாங்கியதில்லை. ஏதாவது முக்கிய நாட்கள், உறவுகளின் முகவரிகள் என சில டைரியை பயன்படுத்தி வைத்துக் கொண்டுள்ளோம். மீதி வரும் ஓசி டைரிகளை குழந்தைகள் சிறு வயதில் எழுத பயன்படுத்திக் கொள்வார்கள்.

    நிறைய எழுத வேண்டுமென தினமும் நினைத்துக் கொண்டேதான் எழுந்திருக்கிறேன். ஆனால்,பதிவுகளை படித்து கருத்துகள் இடுவதற்கும், என்றோ ஒரு நாள் பதிவென்ற ஒன்றை நான் என் தளத்தில் வெளியிடுவதற்கும் "அவன்" உதவி செய்தால்தான் உண்டு. அதன்படி எ.பிக்கும் நிறைய எழுத வேண்டுமென்ற என் ஆசைக்கும் "அவனால்"இயன்ற ஒத்துழைப்பை கண்டிப்பாக தருவான் என நம்புகிறேன்.

    இரண்டாவது படத்தில் குழந்தையின் செயல் கண்டு மனது சந்தோஷமடைவதை தவிர்த்து மற்ற குழந்தைகள் படங்கள் வருத்தத்தை உண்டாக்குகிறது. சிறு குழந்தைகளுக்கு குடலேற்றம் வந்து விடும் என்பதற்காக சிறு குழந்தையை தலைக்கு மேல் தூக்கியே கொஞ்ச கூடாது என்பார்கள். அவர்களை தூக்கிப் போட்டு பிடிப்பது மூர்க்கமான செயல்.இப்படிபட்ட மூர்கர்களை யார் கண்டிப்பது? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி. // நம் கையில் எதுவுமில்லை (சில ரேகைகளையும், பத்து விரல்களையும் தவிர) என்ற பக்குவங்கள் வந்த பின் எல்லா நாட்களும் ஒன்றாகி விட்டன.// ரசித்தேன்.

      நீக்கு
  27. 1) உங்கள் புத்தாண்டு தீர்மானங்கள் என்னென்ன ?

    புத்தாண்டு என்று ஒன்றும் இல்லை. என்றும் அன்றைய மெனு என்ன என்று ஆலோசிப்பதே காலை வேலை. 

    2) சென்ற ஆண்டு தொடக்கத்தில் எடுத்த தீர்மானங்கள் யாவும் நிறைவேற்றப் பட்டனவா? 

    தீர்மானங்கள் ஒன்றும் எடுக்கவில்லை. அந்த வயது கடந்தாகிவிட்டது. உங்களை திருப்பி கேட்கிறேன். நீங்கள் தீர்மானம் எடுக்க உங்கள் பாஸ் உங்களுக்கு சம்மதம் தந்தார்களா? 

    3) டைரி விலை கொடுத்து வாங்கியது உண்டா - அல்லது ஓ சி டைரி மட்டும்தானா? 

    வேலை கிடைத்து கொஞ்சம் நாட்கள் எழுதியது உண்டு. தற்போது இல்லை.  முதல் வேலை purchase டிபார்ட்மென்ட் என்றதனால் நிறைய கிடைக்கும். அதை விட்டு மாறியபோது ஒன்றும் கிடைக்கவில்லை (ஓசியில் ). 

    4) வருட முதல் நாளில் - இதை நிச்சயம் செய்வேன் / செய்யமாட்டேன் என்று நீங்கள் எதையாவது பின்பற்றுவது உண்டா?

     எத்தனையோ வருடங்கள் புத்தான்டு தீர்மானம் என்ற வகையில் புகை பிடிப்பதை விடுவேன் என்று தீர்மானம் செய்தது உண்டு. 41 வருடங்களுக்குப்பின் ஒரு நாள் (வருட பிறப்பு இல்லை) திடீரன நிறுத்தினேன். 

    5) இந்த 2022 ஆம் ஆண்டில் உங்களிடமிருந்து எங்கள் Blog க்கு எதை எதிர்பார்க்கலாம் : நான் ஏ பிக்கு எழுதி அனுப்புவது இல்லை.  தினமும் பார்ப்பது உண்டு. 

    //சென்ற வாரம் எங்களை யாருமே கேள்விகள் கேட்கவில்லை. //

    என்னது உங்க வீட்டிலே பாஸ் எல்லாம் என்னதான் செய்கிறார்கள்?
     
    பிடியுங்கள் சில அபத்தமான கேள்விகள். 

    1. கத்தரிக்காய் விலை எப்போது குறையும

    2. மார்க்கட்டில் புதிய காய் வகை ஏதாவது வாங்கி அதை எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தது உண்டா? (உ-ம் Artichoke Belgian sprouts காச்ச கிழங்கு)?

    3. பழுக்காத காய்கள் சில கூறவும் (உ-ம் முருங்கைக்காய்)?

    4. bake செய்து சாப்பிடக்கூடிய காய்கள் எவை?


    5. சைவ கொத்து ப்ரோட்டா சாப்பிட்டிருக்கிறீர்களா? எப்படி செய்வது? 

    6. ஆவிகள் சத்தம் போடாது. கண்ணுக்கு தெரியாது. கண்ணுக்கு தெரியும் சத்தம் போடும் ஆவி எது? 

    7. மிதி அடி என்ற இரு வினைச்  சொற்கள் சேர்ந்து மிதியடி என்ற பெயர்ச்சொல்லாகியது. இது போன்று சில உதாரணங்கள் கூறவும்.

    600க்குள் ஒரு எண்  238 20க்குள் ஒரு எண் 17

    எல்லா படத்துக்கும் ஒரே கருத்துரை. குழந்தைகள் பொம்மைகள் ஆனால் பொம்மைகள் என்னவாகும்? (babies என்று குஞ்சுலு  போல் சொல்லக்கூடாது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான, விரிவான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி. உங்களுக்கான ஜோதிடம் அடுத்த புதன் கிழமையில். நன்றி.

      நீக்கு
    2. Artichoke Belgian sprouts //

      ஜெகே அண்ணா அது ப்ருஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்ஸ்? இல்லையா? (Brussels sprouts) செய்ததுண்டே...கோயம்புத்தூரில் பழமுதிர் நிலையத்தில் கிடைக்கும். குட்டி கோஸ் நு அவங்க சொல்லுவாங்க. அங்கிருக்கும் வரை செய்ததுண்டு. சென்னையில் எப்போதேனும். விலை கூடுதலாக இருக்கும். இங்கும் சந்தையில் சில சமையம் கிடைத்ததுண்டு. அப்போது அதன் பின் இல்லை.

      காச்ச கிழங்கு இதோ இங்கு ஒரு கேரளத்துக் கடை இருக்கு அங்கு கிடைக்கிறது. பெரிய குண்டு சேம்பு போல ஒரு வெரைட்டி செய்ததுண்டு. இதுவும் ஜெருசலேம் ஆர்ட்டிசோக் போல இருக்கும் ஆனால் நான் வாங்கியது பக்கா கேரளத்து பெரிய் சேம்பு. என்ன விலைதான் கூடுதல் கிலோ 90 என்றார்கள்!!

      பச்சை கலர்ல இருக்குமே பூ போல...அதுவும் செய்ததுண்டு ஆனால் விலை கூடுதல் என்பதால் எப்போதேனும். சென்னையில் இருந்த போது. வயலட் கலரிலும் கூடக் கிடைத்தது. இங்கு வந்து இன்னும் செய்யவில்லை. அப்போது படம் எடுத்ததும் இல்லை.

      கீதா

      நீக்கு
    3. ஆமாம். பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியத்தில் தான் இருக்கிறது.

      நீக்கு
    4. பிரஸ்சல்ஸ் பெல்ஜியம் தலைநகரம்...அது தெரியும் அதனால்தான் நேட்டிவ் காய் இதற்கு பிரஸ்ஸல்ஸ் என்ற பெயர் வந்தது தெரியும்.

      பெல்ஜியன் ஸ்ப்ரௌட்ஸ் என்றதும் அது தோன்றவில்லை டக்கென்று!!!

      கீதா

      நீக்கு
    5. 6. ஆவிகள் சத்தம் போடாது. கண்ணுக்கு தெரியாது. கண்ணுக்கு தெரியும் சத்தம் போடும் ஆவி எது? STEAM:) NEERAAVI.

      நீக்கு
  28. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  29. @ ஜெயகுமார் சந்திரசேகரன்..

    //புத்தாண்டு என்று ஒன்றும் இல்லை..//

    பிடித்திருக்கின்றது.. மிகவும் பிடித்திருக்கின்றது..

    விடியும் பொழுது ஒவ்வொன்றும் புத்தாண்டு தான்..

    பதிலளிநீக்கு
  30. நான் வந்து படிக்கிற நாளாப் பார்த்து கேள்விகளை எங்களை நோக்கிக் கேட்டுவைத்திருக்கிறீர்கள்! அதுவும் ஐந்து. அது என்னோட பிறந்த நம்பர் வேற! சரி, சொல்லப் பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா. எங்க வீட்டிலே கணவர் ,மகள் 5, பெரியவன் 4,, நானும் ,சின்ன மகனும் ஒன்பது!!!!!! அவன் மனைவியும் 27. பெரிய மருமகளும் 4/
      . மருமகன் 5:)

      நீக்கு
  31. வணக்கம்.

    எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை! :) கேள்விகளும் பதில்களும் நீங்களே! நல்லது.

    பதிலளிநீக்கு
  32. இப்பொழுது எடுத்த தீர்மானம் அல்ல முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவது.

    5) மெளனப் புன்னகைதான் .சொல்லித்தான் தெரியவேண்டுமா :)

    பதிலளிநீக்கு
  33. கல்லூரி காலத்தில் இரண்டு முறை காபி குடிக்க கூடாது, சினிமா பார்க்க கூடாது என்று தீர்மானங்கள் எடுத்தேன்.
    அப்போது எங்கள் வீட்டில் டீ போடும் பழக்கம் கிடையாது. பாலைக் குடி என்றாள் அம்மா. காலை வேளையில் பாலா..? சீ! மீண்டும் காபிக்கே திரும்பி விட்டேன்.
    அப்போதெல்லாம் வருடத்திற்கு ரெண்டு சினிமா பார்த்தால் அதிகம். மஸ்கட்டில் வசித்து பொழுது வீடியோ கேஸட்டில் சினிமா பார்ப்பதுதான் மேஜர் பொழுது போக்கு. தவிர சினிமா பார்ப்பது ஒரு அனுபவம்.அதை ஏன் விட வேண்டும்? அதற்குப் பிறகு நோ new year resolutions.

    பதிலளிநீக்கு
  34. 2. எதுவும் தீர்மானிக்காத பொழுது இந்த கேள்வி பொருளியல் திறந்து.

    3. டைரிகள் காசு கொடுத்து வாங்கியதில்லை. ஓசியில் நிறைய வரும். அதில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை தெரிந்தவர்களுக்கு கொடுத்து விடுவேன்.

    4. புத்தாண்டு அன்று அடி பட்டுக் கொள்வது, காயம் பட்டுக் கொள்வது போன்றவைகளை தவிர்க்க நினைத்து எச்சரிக்கையாக இருப்பேன். ஒரு வருடம் புத்தாண்டு துவக்கத்தில் காய் நறுக்கும் பொழுது கை விரலையும் சேர்த்து நறுக்கிக் கொண்டு கட்டு போட்டுக்கொண்டேன். அந்த வருடம் எங்கள் வீட்டில் ஏகப்பட்ட மருத்துவ செலவு. அதனால் பயம்.

    5. ம்..ம்..ம்..ம்.. நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும் என்பதுதான் என் வாழ்வியல் முறையாக இருப்பதால் நோ கமெண்ட்ஸ்.

    பதிலளிநீக்கு
  35. முதல் படம் குழந்தைகளா? பொம்மைகளா?

    2. சமைத்து குழந்தை

    3. ரொம்ப ஆபத்து.

    பதிலளிநீக்கு
  36. 420 & 15
    நல்ல வாக்கு சொல்லு ஜக்கம்மா!

    பதிலளிநீக்கு
  37. 1) உங்கள் புத்தாண்டு தீர்மானங்கள் என்னென்ன ?

    இந்த வருடம் கண் முன் கண்ட சில பல இழப்புகளால் , மனதில் எப்பொழுதும் இருக்கும் அமைதி போய் , கொஞ்சம் கோபங்களும் , சுய பச்சாதாபங்களும் நிரம்பி உள்ளன ...அவற்றை எல்லாம் விடுத்து பழைய படி அனைவரையும் அன்பு செய்யும் மனம் வேண்டும் ...

    2) சென்ற ஆண்டு தொடக்கத்தில் எடுத்த தீர்மானங்கள் யாவும் நிறைவேற்றப் பட்டனவா?


    சில பல நிறைவேறி உள்ளன ..

    3) டைரி விலை கொடுத்து வாங்கியது உண்டா - அல்லது ஓ சி டைரி மட்டும்தானா?

    அன்பால் மற்றவர்கள் தருபவை மட்டுமே ...

    4) வருட முதல் நாளில் - இதை நிச்சயம் செய்வேன் / செய்யமாட்டேன் என்று நீங்கள் எதையாவது பின்பற்றுவது உண்டா?

    அப்படி ஏதும் இல்லை ..

    5) இந்த 2022 ஆம் ஆண்டில் உங்களிடமிருந்து எங்கள் Blog க்கு எதை எதிர்பார்க்கலாம் : -

    a ) திங்க - பதிவுகள் ..

    b ) செவ்வாய் சிறுகதை

    c ) புதன் கிழமைக்கு கேள்விகள்

    e 0..............

    e ) ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துரை

    f ) மௌனப் புன்னகை. ..


    .

    500

    10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி. உங்களுக்கான ஜோதிடம் அடுத்த புதன் பதிவில்.

      நீக்கு
  38. Difficult to respond on Cricket days! Hence the delay..

    1) & 2) : காலத்தைப் பார்த்து ப்ரமிப்பவன் நான். காலண்டரைப் பார்த்தல்ல! இருந்தாலும், அழகான அபூர்வமான காலண்டர் கிடைத்தால் ரசிப்பதுண்டு.

    3) டெல்லியில் இருக்கையில், கனாட்ப்ளேஸ் கடைகளில் டைரிகளை அலசி, தேர்ந்தெடுத்து வாங்கி, ஆசையாக சிலநாள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அவ்வப்போது எழுதுவதுண்டு. India Today, Outlook பத்திரிக்கைகள் அழகான பாக்கெட் சைஸ், புக் சைஸ் டைரிகள், எக்ஸிக்யூட்டிவ் டைர்கள் வெளியிட்டன. பேப்பரின் விளிம்புகளில் தங்கம் மினுமினுக்கும் டைரிகள்! சின்ன சைஸ் டைரிகள் மனதை ஈர்க்கும். என் தம்பி தன் ஜப்பானியக் கம்பெனியின் அழகான டைரிகளைத் தருவான். இது சிலவருடங்களுக்கு முன்வரை. பெங்களூர் வந்ததிலிருந்து டைரி தேடி வாங்கும் பழக்கம் குறைந்துவிட்டது.

    4) வருட முதல் நாளில் பால்கனியில், வீட்டு வாசலில் சீரியல் வண்ணவிளக்குகள் சரியாகத் தொங்கி எரிகின்றனவா என்று பார்ப்பேன். இரவு முழுவதும் ஒரு வாரத்துக்காவது வண்ணங்களைக் காட்டுவேன்! மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.

    5) எபி-க்கு 2022-ல் உங்களிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம் என்பது சற்றே திகைக்கவைக்கும் கேள்வி! எதையாவது எழுதி அனுப்பலாம், வெறுமனே கருத்துக்களை வாசித்துப் பொழுதுபோக்கலாம், எடக்குமிடக்காகக் கருத்து சொல்லலாம் .. இப்படி சாத்தியக்கூறுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. (அழகான காலண்டரில் யாருடைய படம் இருக்கும் - எனக்கு மட்டும் சொல்லுங்க!)

      நீக்கு
    2. உனக்கு மட்டும், உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்.. என பி சுசீலா சத்தமாகப் பாடியிருக்கலாம். நான் பாடமாட்டேன்.. ஏன்னா அது ரகஸ்யம்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!