வெள்ளி, 21 ஜனவரி, 2022

வெள்ளி வீடியோ : நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை

 இன்று இரண்டு பி. சுசீலா பாடல்கள்.  இரண்டும் பெண் பார்க்கப்படும்போது பாடப்படுபவை.  இரண்டும் எம் எஸ் விஸ்வநாதன்.  இரண்டும் சிவாஜி கணேசன் படம்! 

முதலில் மூன்று தெய்வங்கள்.

1968 ல் மராத்தியில் எடுக்கப்பட்ட ஒரு வாயில் நுழையாத பெயர் கொண்ட படத்தைத் தழுவி (ஆமி ஜாத்தோ அமுச்யா கவா)  தமிழில் தாதா மிராசி இயக்கத்தில் சித்ராலயா கோபு வசனம் எழுத,  டுக்கப்பட்ட வண்ணப்படம் மூன்று தெய்வங்கள்.  கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  இது பின்னர் இந்தியிலும் தீன் சோர் என்ற பெயரில் எடுக்கப்பட்டதாம்.  இதே தாதா மிராசி இயக்கம்.  வினோத் மெஹ்ரா நடிப்பில்.

நல்ல பாடல்களைக் கொண்டிருந்தும், நல்ல காட்சி அமைப்புகள் இருந்தும் படம் எதிர்பாராத அளவு போகாததற்கு காரணமாக சித்ராலயா கோபு மனதில் தோன்றியது "இது சிவாஜியின் தரத்துக்கு ஒத்துவராத படம்"

சிவாஜி, முத்துராமன், நாகேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை தஞ்சாவூர் ராஜேந்திரா டூரிங் டாக்கீஸில் ரசித்துப் பார்த்த நினைவு இருக்கிறது.

சிறையிலிருந்து தப்பித்து வரும் மூன்று கைதிகள் ஒரு வீட்டுக்குள் நுழைந்து திருட முயற்சிக்கையில் படிப்படியாக அந்தக் குடும்பத்துடன் ஒன்றி நல்லவர்களாக மாறும்  படம்.

கீதா ரெங்கனுக்கு மண்டையை உடைத்துக் கொள்ளும் வேலை இல்லை!  இந்தப் பாடல் தர்பாரி கானடா ராகமாம்.  பாடல் ஆரம்பிக்கும்போதே திரையில் விவரம் வந்து விடுகிறது.

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

மையிட்ட கண்ணோடு மான் விளையாட 
மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி 
தேவர்கள் யாவரும் திருமண
மேடை தேவர்கள் யாவரும் திருமண மேடை 
அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி

திருமால் பிரம்மா சிவன் என்னும் மூவர் 
காவலில் நின்றிருந்தாளோ தேவி 
காவலில் நின்றிருந்தாளோ தேவி 
வைதேகி காத்திருந்தாளோ

பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் 
பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ
அங்கே

பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில் 
பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில் 
மங்கையை வாழ்த்த வந்தாரோ அங்கே 
சீருடன் வந்து சீதனம் தந்து 
சீருடன் வந்து சீதனம் தந்து 
சீதையை வாழ வைத்தாரோ தேவி 
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ



இரண்டாவது பாடல் இடம்பெற்ற படம் ரோஜாவின் ராஜா.  1976 ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் சிவாஜியை கல்லூரி மாணவனாக பார்ப்பதைத் தாங்கி கொள்ள முடியாத ரசிக மகாஜனம் படத்தை தோல்விப்படமாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.  சரியாக ஓடியதா என்று தெரியவில்லை.  நானும் படம் தஞ்சையில் பார்த்தேன்.    கே விஜயன் இயக்கத்தில், சிவாஜி, ஏ வி எம் ராஜன், சோ, வாணிஸ்ரீ நடித்த இந்தப் படத்துக்கான பாடல்களை கவிஞர் புரட்சிதாசன் எழுத, எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருக்கிறார்.

பணக்கார நண்பன் ஏ வி எம் ராஜன் தயவில் படிக்கும் ஏழை சிவாஜி, பணக்கார வாணிஸ்ரீயை காதலிப்பதை அவர் தந்தை மேஜர் எதிர்த்து, பணக்கார ஏ வி எம் ராஜனுக்கு மணமுடிக்க எண்ணுகிறார்.  ஏ வி எம் ராஜன் தன் தாய், நண்பன் சிவாஜியுடன் பெண் பார்க்க வருகிறார்.  வாணிஸ்ரீக்கும் சிவாஜிக்கும் அதிர்ச்சி.  வாணிஸ்ரீ பாடலிலேயே கவிஞர் புரட்சிதாசன் தயவுடன் பி சுசீலா குரலில் இனிய பாடல் மூலமாக (என்ன ராகம்?) தன் மனதை வெளிப்படுத்தி சோகமாகிறார்.

ஜனகனின் மகளை மணமகளாக 
ராமன் நினைத்திருந்தான்-அவள் 
சுயம்வரம் காண மன்னவர் சிலரும் 
மிதிலைக்கு வந்திருந்தார்.  

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து 
ஜானகி பார்த்திருந்தாள்- அவள் 
மைவிழி சிவக்க மலரடி கொதிக்க 
ராமனை தேடி நின்றாள். 
ஆசை ஒருபுறம் நாணம் மறுபுறம் 
கவலை ஒருபுறம் - அவள் நிலைமை திரிபுரம்…
கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே
அவள் கூந்தலில் சூடிய மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை – அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை.! 
முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம் 
சீதை தனியிடம் – 
அவள் சிந்தை  அவனிடம்
மன்னவர் பலரும் சுயம்வரம் காண 
மண்டபம் வந்துவிட்டார்-  
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் 
ஜானகி கலங்கிவிட்டாள்
ஜானகி கலங்கிவிட்டாள்

70 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைந்திடட்டும்.

    பதிலளிநீக்கு
  2. //வசனம் எழுத டுக்கப்பட்ட //

    //ஒரு வீட்டுக்குள் நுழைந்து திருட முஅயற்சிக்கையில் //

    பாடல் வரிகள் நன்று..... பாடலை கேட்டு இருக்கிறேன். பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திருத்தி விட்டேன்.


      பாடல் வரிகள் - புரட்சிதாசன் வரிகளும் நன்றாகவே இருக்கும்.

      நீக்கு
  3. இரண்டு பாடல்களையும் கேட்டு/காட்சிகளை பார்த்து ரசித்தேன். தொடரட்டும் கானமழை.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நோயில்லா வாழ்வும், சந்தோஷங்களும் நம்மைத் தொடர வேண்டும்.
    இறைவன் நம்மைக் காப்பான்.

    பதிலளிநீக்கு
  5. மூன்று தெய்வங்கள் படம் எங்களுக்கெல்லாம்
    மிகப் பிடித்தது.
    எல்லோருமே நன்றாக நடித்திருப்பார்கள்.
    மேக் அப் இல்லாமல் சிவாஜி, நாகேஷ், முத்துராமன்
    எல்லோரையும் பார்க்கும் போது
    நன்றாக இயற்கையாக இருந்தது.

    சந்த்ரகலா இந்தப் படத்தில் பதவிசாக உட்கார்ந்து
    பாடுவதே அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், மேக்கப் இல்லாமல் நடித்திருப்பார்கள். பாடல்களும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. ''இரண்டாவது பாடல் இடம்பெற்ற படம் ரோஜாவின் ராஜா. 1976 ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் சிவாஜியை கல்லூரி மாணவனாக பார்ப்பதைத் தாங்கி கொள்ள முடியாத ரசிக மகாஜனம் படத்தை தோல்விப்படமாக்கியிருக்கும்'' ரோஜாவின் ராஜா மிக அருமையான படம். சிவாஜியை என்னவாகக் காட்டினாலும்
    அவர் அதைச் சிறப்பித்திருப்பார்.
    மாணவனாகக் காட்டி இருக்க வேண்டாம்.:) கொஞ்சம் போர்தான்.
    ஜனகனின் மகளை''
    இந்தப் பாடல் மிகப் பிரபலம் அப்போது.

    பாடல் வரிகளும் உணர்ச்சி தெறிக்க
    வடிக்கப் பட்டிருக்கும்.
    சுசீலா அம்மாவின் குரலுக்கு ஈடு ஏது.?

    ஒரு கதையையே சொல்லி விடுகிறார் இந்தப்
    பாடலில்.
    மிகச் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்த ஸ்ரீராமுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா...  சிவாஜி, ஏ வி எம் ராஜன், ஸ்ரீகாந்த், சோ ஆகியோரை கல்லூரி மாணவர்களாகப் பார்க்க முடியவில்லை!!  ஆனாலும் பாடல் இனிய பாடல்.  இதே படத்தில் 'அலங்காரம் கலையாத' என்கிற டூயட் பாடலும் நன்றாய் இருக்கும்.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம். இரண்டுமே அருமையான பாடல்கள்.
    சிவாஜி, ஏ.வி.எம்.ராஜனா...? ஓ....வ...ர்... ஆக்டிங் கிங் ஆச்சே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா... வணக்கம்.  ஏவி எம் ராஜனை...  வேண்டாம்..  சொல்லாமல் விட்டு விடுகிறேன்!

      நீக்கு
  9. மூன்று தெய்வங்கள் படம் அந்தக் காலத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட படம்..

    திருப்பதி சென்று
    திரும்பி வந்தால் -

    தாயெனும் செல்வங்கள்
    தாலாட்ட தீபம் -

    என்று அழகான பாடல்கள் அந்தப் படத்தில்!..

    பதிலளிநீக்கு
  10. ரோசாவின் ராசா...

    நடிகர் திலகத்தின் ரசிகர்களே ஒத்துக் கொள்ளவில்லை..

    ஆனாலும் அதில் சாம்ராட் அசோகன் நாடகம் அனைவரையும் கவர்ந்தது..

    இப்போது குழாயடியில்
    ரோ.. ரா.. படத்தைப் பார்த்தால் சாம்ராட் அசோகன் நாடகம் நீக்கப்பட்டிருக்கின்ற்து..

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. புர்ச்சி தாசனோ, குர்ச்சி தாசனோ - அன்றைய பாட்டுப் புத்தகத்தில் கண்ணதாசன் என்றே நினைவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் சந்தேகம் வந்து, படத்தையே ஓட்டிப்பார்த்து புரட்சிதாசன் என்று உறுதிப்படுத்திக் கொண்டுதான் எழுதினேன்.

      நீக்கு
  13. காலை வணக்கம் எல்லோருக்கும்.

    //கீதா ரெங்கனுக்கு மண்டையை உடைத்துக் கொள்ளும் வேலை இல்லை! இந்தப் பாடல் தர்பாரி கானடா ராகமாம். //

    ஹாஹாஹாஹாஹா...

    ஸ்ரீராம் இந்தப் பாட்டு வரிகளைப் பார்த்ததுமே என்ன பாடல் என்று தெரிந்துவிட்டது!!!!

    இரண்டாவது பாடல் டக்கென்று மனதில் வரவில்லை. கேட்டுவிட்டுச் சொல்கிறேன். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது போன வாரம் ?? முதல் பாட்டுக்கு நீங்க ராகம் கேட்டிருந்தது அது அன்று ஒரு முறைதான் கேட்டேன் மீண்டும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் ஸ்ரீராம். சங்கத்தழிழ்னு வருமே அந்தப்பாடல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.. போன வாரமும் இந்த வாரமும் இரண்டாவது பாடல் ராகம் ட்யூ..

      நீக்கு
    2. ஸ்ரீராம் போன வாரப் பாட்டு அந்த ஆரம்ப புல்லாங்குழல் ஆரோஹணம் அவரோஹணம் வாசிப்பதிலிருந்து செஞ்சுருட்டி இடையில் புன்னகவராளி...

      அப்புறம் தோட்டத்தில் - செஞ்சுருட்டில கிராமியப்பாடல் அமைக்க நல்லாருக்கும்..

      இது என் சிற்றறிவுக்கு எட்டியது.

      கீதா

      நீக்கு
    3. கூடவே காம்போதியோன்னும் தோணுது...தெரியலை ரொம்ப கரெக்ட்டா ஆனால் இந்த இரண்டில்தான். இப்பல்லாம் பாட்டு எல்லாம் வெகுதூரமாகி வருகிறது. ராகம் எதுவும் டக்கென்று மனதில் வருவதில்லை. ஈசியானவை கூட

      கீதா

      நீக்கு
    4. இரண்டாவது பாட்டையா சொல்கிறீர்கள்? நான் கேட்பது, உரண்டாவது, இளையராஜா இசைப் பாடலை!

      நீக்கு
    5. ஆனா அந்த ஃப்ளூட்ல வாசிக்கும் ஆரோகணம் அவரோகணம் வைத்துச் சொன்னேன் செஞ்சுருட்டி என்று ஆரம்பிக்கும் ஸ்வரத்தில் ஒரு ஸ்வரம் வாசித்து நிறுத்தி அப்புறம் ஸ வில் தொடங்கி வாசிப்பதால்..

      இன்றைய ஜனகனின் மகளை பாடலும் அதே ராகம் பேஸ் என்றுதான் பாடிப் பார்க்கும் போது தோன்றுகிறது, ஸ்ரீராம். உங்கள் குடும்பத்தில் விற்பன்னர்கள் உண்டே ஸ்ரீராம்...சும்மா கேட்டுப் பாருங்க...எனக்கும் நான் சொன்னது சரியான்னு தெரிஞ்சுக்கலாமே!!

      கீதா

      நீக்கு
    6. இரண்டாவது பாட்டையா சொல்கிறீர்கள்? நான் கேட்பது, உரண்டாவது, இளையராஜா இசைப் பாடலை!//

      கடலில் அலைகள் பொங்கும் பாட்டா ஸ்ரீராம்? அதை அன்றே சொல்லியிருந்தேனே

      அழகான தேஷ்!!!

      கீதா

      நீக்கு
    7. ஓ புரிந்துவிட்டது சங்கத் தமிழ் கவியே பாட்டுதானே

      ராகமாலிகா அதுவும் சொல்லியிருந்த நினைவு ஸ்ரீராம்...அன்றே..

      தொடக்கம் ஆபேரி/பீம்ப்ளாஸி, அடுத்து பாகேஸ்‌ரீ, அப்புறம் சுமனேஸ ரஞ்சனி என்ன ஒரு ட்ரான்ஸிஷன் அப்படியே நைஸாக... என்று

      கீதா

      நீக்கு
    8. சுமனேஸ ரஞ்சனி (சந்திர்கௌன்ஸ்)

      ஹிந்துஸ்தானி ஒட்டு...

      கீதா

      நீக்கு
  14. கவியரசர் - சாதாரண திரைப் பாடல்களுக்குள் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கொண்டு வந்து நிறுத்திய காலம் அது..

    இடையில் புர்ச்சி எங்கேருந்து வந்ததோ தெரியவில்லை..

    பின்னாளில் மெல்லிசை மன்னரின் சில பாடல்களை இளையராசா ஹிட்ஸ் என்று போட்ட மாதிரி கூட இருக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, படத்திலேயே அனைத்துப் பாடல்களும் புரட்சிதாசன் என்றே வருகிறது.

      நீக்கு
    2. என்னமோ..
      தலையை வலிக்கின்றது..

      நீக்கு
  15. குழாயடியில் ஏகப்பட்ட திரைக் காணொளிகள் அவரவர் சௌகரியத்துக்கு வெட்டி ஒட்டி நாசம் செய்யப்பட்டு சேர்க்கப் பட்டிருக்கின்றன..

    பக்தப் பிரகலாதன் திரைப் படத்தில் நவீன களவாணிகளின் கைவண்ணம்.

    எங்கேயடா ஹரி.. என்று கேட்டபடி ஹிரண்யன் தூணை உடைக்கும் போது தூணின் உள்ளிருந்து ஒளிப் புள்ளிகள் மின்னலிட்டு பார்ப்பவர்களைக் கலவரப்படுத்தும்..

    சில விநாடிகளான அதை நீக்கியிருக்கின்றார்கள்.

    அதேபோல் ஹிரண்யனின் வயிற்றை நரசிம்மர் கிழிக்கும் காட்சியையும் நீக்கியாயிற்று..

    அது புராணங்களிலும் பிரபந்தத்திலும் திருப்புகழிலும் சொல்லப்பட்டதாயிற்றே!..

    அதில் இவர்களுக்கு என்ன கஷ்டம் என்று தெரியவில்லை..

    ஒருவேளை ஹிரண்யனின் சித்தப்பா மகன்களாக இருக்குமோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையெல்லாம் யார், ஏன் நீக்குகிறார்கள், மாற்றுகிறார்கள்? எப்படியும் ஒரிஜினல் ஒழுங்காகத்தானே இருக்கும்?!

      நீக்கு
  16. திருவிளையாடல் படத்தில் இடம் பெற்றிருக்கும் ருத்ர தாண்டவத்தின் இசைக் கோர்வையை நீக்கி விட்டு ஏதோ ஒரு மட்ட ரகத்தை இணைத்துள்ள கொடுமையை என்ம சொல்வது?..

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் இரண்டுமே அடிக்கடி கேட்டு ரசித்த அருமையான பாடல்கள். பி. சுசிலா அவர்களின் இனிமையான குரல் வளம்.. இவை மறக்கக் கூடிய பாடல்களா?

    அப்போது நல்ல பிரபலமடைந்துள்ள முதல் பாடல் பள்ளியில் படிக்கும் போது மியூசிக் கிளாசில்,மியூசிக் டீச்சரின் வறுப்புறுத்தலில், பாடி கைத்தட்டல் வாங்கிய நினைவு வந்தது. அந்தப்பாட்டு எப்போது கேட்டாலும், அந்த பள்ளி பருவத்தின் நினைவுகள் வரும்.

    மூன்று தெய்வங்கள் படம் தொ. கா.யில் பார்த்திருக்கிறேன். ரோ. ரா பார்த்த நினைவில்லை. நீங்கள் இந்த இரு படங்களுமே தியேட்டரில் சென்று பார்த்திருக்கிறீகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே, பாடி பரிசு வாங்கி இருக்கிற்றீர்களா? பாராட்டுகள். இப்போ கூட பாடி அனுப்புங்களேன். வெள்ளியில் இணைக்கலாம்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. அப்போதும் பாடி பரிசெல்லாம் வாங்கவில்லை. வெறும் கைத் தட்டல்தான் கிடைத்தது. . இப்போது பாடினால் வீடு தேடி வந்து அடியே கிடைக்கும்.:)))) உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
    3. ஸ்ரீராம் பிடிச்சுபோடுங்க...எபி க்கு ஒரு சுசீலா கிடைச்சாச்சுன்னு. ஒரு வேளை நீங்கள் பகிரும் சுசீலா பாடல்கள் யுட்யூப் தகராறு பண்ணிச்சுனா இந்த சுசீலாவின் குரலைப் போட்டுவிடலாம்!!!

      கீதா

      நீக்கு
    4. எங்கே? சிக்க மாட்டேன்றாங்களே...!!!

      நீக்கு
    5. ஆகா.. கீதா சகோதரி. இன்றைய பதிவில் சகோதரர் நெல்லைத்தமிழரை இதுவரை காணவில்லை.அந்த குறையை தீர்க்க இன்று என்னை கலாய்த்தலா..? ஹா ஹா ஹா.

      ஸ்ரீராம் சகோதரரே அவருக்குப் பதிலாக நான்தான் வசமாக உண்மையை கூறி சிக்கிக் கொண்டிருக்கிறேனே....! இன்னும் சிக்கவில்லை என்கிறீர்களே...ஹா.ஹா.ஹா.

      நீக்கு
  18. 70களை தாண்டமாட்டேன் என்கிறீர்களே?
    என் பேத்திக்கு பிடித்த, 'என்னை அறிந்தால்' படத்தில் வரும் 'உனக்கென்ன வேணும் சொல்லு..' பாடலை போட முடியுமா?
    என் விருப்பம் 'காற்று வெளியிடை' படத்திலிருந்து 'அழகியே marry me marry me" பாடல் போட முடியுமா?

    பதிலளிநீக்கு
  19. "வசந்தத்தில் ஓர் நாள்" பாடலை சமீப காலமாக தினமும் கேட்கிறேன்

    காரணம் எமது பாணியில் உல்டாவாக எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. பாடல்கள் அருமை! கேட்ட பாடல்கள் தான்.மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி நல்ல பாடல்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. இரண்டு பாடல்களுமே மிகவும் பிரபலமான பாடல்களாக இருந்திருக்கின்றன.கேட்டிருக்கின்றேன். மூன்று தெய்வங்கள் படமும் பார்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. இரண்டாவது பாடல் கேட்டதில்லை, மூன்று தெய்வங்கள் படம் அயனாவரம் சயானி தியேட்டரில் பார்த்துச் சிரித்தோம். அப்படி ஒண்ணும் தோல்விப் படமெல்லாம் இல்லை. ஓரளவு ஓடியது என்றே எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா... இப்போதும் சயானி தியேட்டர் இருக்கோ?

      நீக்கு
    2. தெரியாதே! சென்னை/அதிலும் அம்பத்தூர் இப்போ முற்றிலும் புதிது. :)

      நீக்கு
  23. இரண்டு பாடல்களுமே கேட்டிருக்கிறேன். ரசித்தவை. நீங்கள் பகிரும் பாடல்கள் எல்லாமே நம் காலத்துப் பாடல்கள். மிகவும் ரசித்த ரசிக்கும் பாடல்கள். நன்றி ஸ்ரீராம்ஜி.

    இரு படங்களுமே பார்த்த நினைவு இருக்கிறது.

    இப்போதைய பாடல்கள் மனதில் அவ்வளவாகப் பதிவதில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய பாடல்கள் மனதில் அவ்வளவாகப் பதிவதில்லை.// நம் ரசனை ஏதோ ஒரு இடத்தில் நின்று விடுகிறது, அல்லது தாண்டி விடுகிறோம். அதைத்தான் தலைமுறை இடைவெளி என்கிறார்கள்.

      நீக்கு
    2. பானு அக்கா.. புதிய பாடல்களில் எனக்கும் சில பாடல்கள் பிடிக்கும். அனைத்தும் அல்ல. இப்போது வரும் பாடல்கள் பெரும்பாலும் வெறும் சத்தங்கள்.

      நீக்கு
  24. இரண்டு பாடல்களும் மிக அருமையான பாடல்கள்
    கேட்டேன், நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!