சனி, 16 ஏப்ரல், 2022

விரும்பிச் செய்யும் தொழில்... & நான் படிச்ச கதை

 

வாட்ஸப்பில் வந்ததை அப்படியே இங்கு...

This morning, on my way to work, I was stranded by an Uber auto driver in the middle of the highway.

 I must have had a worried expression on my face, which made an old man driving a rickshaw stop and ask me where I wanted to go.

Skeptical at first, I told him I needed to get to my office at the other end of town and that I was already late. 

He said, "Please come in, ma'am. You can pay what you want" in impeccable English.
Taken aback by such kind behaviour, I said ok and what followed was a very enriching 45 minutes.

Of course, as a researcher, I couldn't contain my curiosity and asked him how he spoke such good English.


 To which, he replied that he was an English lecturer and that he has done his MA and M Ed!

He predicted my next question and asked me himself, "So you're going to ask me why I am driving an auto, right?"

I said, "Absolutely, please tell me."

He said that he is 74 years old now and that he has been driving a rickshaw for 14 years.

Previously, he used to work as an English lecturer at a college in Mumbai, because he did not get any jobs in Karnataka.

 Fed up, he moved to Mumbai to look for a job and got one in a reputed Powai college where he worked for the next 20 years. 

At 60, he retired and returned to Karnataka.

"Teachers do not get paid well. The maximum you can earn is Rs 10,000-15,000, and since it was a private institution, I don't have pension. 

By driving a rickshaw, I get at least Rs 700-1500 a day, which is enough for me and my girlfriend", he laughed.

When I laughed too, he said, "She is my wife but I call her my girlfriend because you must always treat them as equal.

 The minute you say wife, husbands think she is a slave who must serve. But my wife is in no way inferior to me, in fact she is superior to me sometimes.

 She is 72 and takes care of the house while I work for 9-10 hours a day. We live in a 1 BHK in Kadugodi, where my son helps pay the rent of Rs 12,000, but beyond that, we are not dependent on our children. 

They live their life and we live ours happily. Now I am the Raja of my road. I can take my auto out any time I want and work when I want."

Not one complaint about life.  Not one regret.

So much to learn from these hidden heroes.  My morning was made.

-- Shared by Nikita Iyer on LinkedIn

==============================================================================================



=================================================================================================================================================================================================================================

நான் படிச்ச கதை - 

ஜீவி 

===============================

Every human has a good story and every famous writer 
        has written something outstanding. It is the reader's mindset 
          and circumstances which decide if something is good or great.

                                                                                         ---- KGY Raman

அது 1957-ம் ஆண்டு.

ஆனந்த விகடன் நடத்திய அதன் வெள்ளிவிழா போட்டியில் இரு முதல் பரிசுகளை தன் சிறுகதைக்காகவும், சரித்திர நாவலுக்காகவும் பெற்றவரைத் தமிழ் எழுத்துலகமும், பத்திரிகை படிக்கும் வாசகர் வட்டமும் வியப்புடன் நிமிர்ந்து பார்த்தது.

பரிசு பெற்ற சிறுகதையின் பெயர் 'நரிக்குறத்தி'.  வெளியூர்களில் நாடோடிகளாகச் சுற்றித் திரியும் அந்தச் சமூக ஆண்களும் பெண்களும் பாசிமணி, ஊசி, மணிமாலை விற்கத் தனித்தனியாக ஊருக்குள் சென்றாலும் சூரியன் மலை வாயில் விழும் மாலை நேரத்திற்குள் பெண்கள் தங்கள் இருப்பிடம் வந்து விட வேண்டும். இது அந்தச் சமூகக் கட்டுப்பாடு. பாடிகோடியும் ஆடிகோடாவும் தம்பதிகள். பாசிமணி மாலை ஏந்தி விற்கச் சென்ற புது மணப்பெண் பாடிகோடி, ஆற்றில் திடீர் வெள்ளம் பிரவாகமாய் பொங்கி எழ அக்கரையில் மாட்டிக் கொண்டு இக்கரை வர முடியாமல் தவிக்க நொப்பும் நுரையுமாக சுழித்து ஓடுகின்ற ஆற்றில் கரையின் இரு மருங்கிலும் இருவரும் அலமந்து ஓடித்தேடி, இரவு முச்சூடும் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கிற விதமாய்,"ஆடிகோடா... பாடிகோடி..." என்று ஒருவர் பெயரை மற்றவர் கூப்பிட்டுக் கூப்பிட்டு ஓலமிட்டது, ஆண்டுகள் பல ஓடிப்போயினும் இப்பொழுதும் சிந்தையில் ஒலிக்கிறது... கொஞ்சம் கொஞ்சமாக, இரவு அந்தப் பகுதியைத் தன் இருட்டில் விழுங்கத் தொடங்க, பின்னிரவும் நெருங்க..... நெருங்க....

'நரிக்குறத்தி'  சோக முடிவைக் கண்ட  ஜெகசிற்பியனின் பேசப்பட்ட கதை.

சரித்திர நாவலுக்கான முதற்பரிசைத் தட்டிச் சென்ற 'திருச்சிற்றம்பலம்' நாவல், ஓவியர் கோபுலுவின் படங்களுடன் அற்புதமாக ஆனந்த விகடனில் வெளிவந்து படிப்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.    தில்லை நடராஜர் ஆலயத்தை விரிவு படுத்திப் பெரிதாகக் கட்ட விரும்பிய அநபாய குலோத்துங்க சோழன், கோயிலில் இருந்த கோவிந்த ராஜப் பெருமாளை அகற்றி கடலில் அமிழ்த்த முயல, அரச குலப் போட்டிப் பங்காளிகள் அந்த நிகழ்ச்சியை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சி பீடத்தைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சியாய் சைவ வைணவ விவாதங்கள் கிளப்பப்படுகிற பின்னணியில் பக்தியும் காதலும் பின்னிப் பிணைந்த நாவல்.  ஏழிசை வல்லபி, காடவராயர், பரிவாதினி, காளத்தி தேவன் போன்ற மறக்க முடியாத பாத்திரப் படைப்புகள்.  இதெல்லாம் என் நினைவிலிருந்து எழுதுகிறேன் என்றால் இந்த வார பதிப்பிற்காக நான் விவரிக்க விழைந்தது, போன வாரம் யதேச்சையான கண்ணில் பட்டு ஒரே வாசிப்பில் வாசித்து முடித்த ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'.


நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் மூன்றாம் நந்திவர்மன் தான் இந்த வரலாற்று நாவலின் நாயகன். அரியணையைக் கைப்பற்ற நடக்கும் பங்காளிகள் சண்டையில் தமிழ் மொழி மீது கொண்டிருந்த காதலால் தன் பேரில் கலம்பகம் பாடினால் இறந்து படுவோம் என்று தெரிதிருந்தும் கலம்பகத் தமிழ்க் காப்பியத்தை அரங்கேற்றிப் பார்க்க தன் உயிரையும் பணயமாகத் தரச் சித்தமாகிறான்.

தொண்ணூறு பாடல்கள் கொண்ட கலம்பகத்தின் ஒவ்வொரு பாடல் அரங்கேறும் போதும் நந்திவர்மன் ஒரு பந்தலில் அமர்ந்து அதைக் கேட்க வேண்டும்.  ஒவ்வொரு பாடலும் பாடி முடியும் பொழுது மன்னன் அமர்ந்திருந்த பந்தல் பற்றி எரியும். உடனே மன்னன் அடுத்த பந்தலில் அமர அது பற்றி எரிய அதற்கடுத்த பந்தல் என்று செல்லும் தொடர் வரிசையில் எண்பத்தொன்பதாவது பந்தலுக்கு அடுத்த தொண்ணூறாவது பந்தலில் சிதை அடுக்கப் பட்டிருக்கும்.. சிதையில் மன்னன் படுத்ததும் இறுதிப் பாடல் பாடப்பட அந்தப் பந்தல் எரிய சிதையில் படுத்திருக்கும் மன்னவன் மடிவான் என்பது ஏற்பாடு.  

நந்திவர்மனைக் கொல்லும் முயற்சியில் தோல்வியுற்ற அவனது முதல் மூன்று சகோதரர்களும் பந்தல் கட்டுகிறவர்கள் போன்று மாறுவேடமணிந்து பந்தல்களைக் கொளுத்தி நந்திவர்மனை மாய்க்கத் திட்டமிடுகின்றனர். நாலாவது சகோதரன் காடவனோ கலம்பகம் இயற்றுகிறான்.  ஆயினும் கடைசி கட்டத்தில் அவன் மனம் மாறி சூதை நந்தியிடமே சொல்லி அறம் பாட மாட்டேன் என்று மறுக்கிறான்.

ஆனால் நந்திவர்மனுக்கோ தன் பெயரில் உருவான கலம்பகக் காப்பியத்தை அரங்கேற்றிப் பார்க்க ஆசை. அந்த ஆசைக்கு தன் உயிரையும் அர்ப்பணிக்கச் சித்தமாகிறான்.  

இதற்கிடையில் பாண்டிய அரசன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் தன் பழைய  பகையைத் தீர்த்துக் கொள்ள இந்தச் சூழ்நிலையில் தயாராகிறான். அவன் தங்கை வாருணிதேவியும் இதற்கு கூட்டாகச் செயல்படுகிறாள்.  இருப்பினும் வாருணி தேவி நந்திவர்மன் மேல் கொண்ட காதல் தீயில் கருகி கடைசி தொண்ணூறாவது பாடல் பாடப்பட பந்தல் பற்றி எரியும் பொழுது அவளும் தீயில் பாய்கிறாள்.

வானுறு மதியை அடைந்தது உன் வதனம்
    மறிகடல் புகுந்தது உன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்தது உன் வீரம்
   கற்பகம் அடைந்தது உன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
   செந்தழல் புக்கது உன் தேகம்
நானும் என் கவியும் எவ்விடம் புகுவேம்
  நந்தியே நந்தயா பரனே

-- என்னும் நந்திக்கலம்பகப் பாடல் நந்திவர்மன் கீர்த்தி பற்றியும் அவன் தேகம் செந்தழல் அடைந்தது பற்றியும் சொல்கிறது. யார் பாடியது என்று யாத்தவர் பெயர் தெரியாத நந்திக் கலம்பகம் தகுந்த யூகத்தையும் கற்பனையையும் கிளறி இந்த நாவலை நடத்திச் செல்வதற்கு ஜெகசிற்பியனுக்கு வழிகாட்டியிருக்கலாம்.

வரலாற்று நாவல்களில் தீர்மானமான தடம் பதித்தவர் ஜெகசிற்பியன். 
ந.வ. காதலிக்குத் தொடர்ச்சியாக 'மாறம் பாவை', இமயத்தில் கொடி பதித்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை கதைத் தலைவனாய் கொண்ட 'நாயகி நற்சோணை', ஆனந்த விகடனில் 'ஆலவாய் அழகன்', 'மகரயாழ் மங்கை', 'பத்தினிக் கோட்டம்' என்று நினைவுக்கு வரக்கூடியதாய் நிறைய எழுதியிருக்கிறார்.

கடந்த கால சரித்திரப் பின்னணி கொண்டு சரித்திர நாவல்களைப் படைத்தவர்,  நாட்டு நடப்புகளை நிலைக்களனாய் கொண்டு மிகச் சிறந்த சமூக நாவல்களயும் படைக்கத் தவறவில்லை.

நில உடைமை சமூகப் பிரதிநிதிகளின் பேராசைகளையும் கூலி விவசாயிகளின் அல்லாடல்களையும் நெஞ்சம் கனக்கச் சொல்லும் 'மண்ணின் குரல்',  கல்கியில் தொடராக வந்த 'சொர்க்கத்தின் நிழல்',  'கிளிஞ்சல் கோபுரம்', பதிமூன்று இந்திய மொழிகளில் நேஷனல் புக் டிரஸ்ட்டால் மொழிமாற்றம் செய்யப்பட்ட 'ஜீவகீதம்', புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்து காதம்பரி இதழில் முதல் பரிசு பெற்ற குறுநாவல் 'கொம்புத்தேன்', அன்றாடங்காச்சிகளின் அவல வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் 'காணக்கிடைக்காத தங்கம்' மறக்கவே முடியாத 'இனிய நெஞ்சம்' ஆகியவை அவரது ஆத்மார்த்த நாவல்கள்.

அக்னி வீணை, பொய்க்கால் குதிரை, ஞானக்கன்று, ஒரு நாளும் முப்பது வருடங்களும், இன்ப அரும்பு, காகித நட்சத்திரம், கடிகாரச்சித்தர்,
மதுர பாவம், நிழலின் கற்பு, பாரத புத்திரன், அஜநயனம் -- அவரது சிறுகதைத் தொகுப்பு தலைப்புகளின் ஒரு உலா.

நாடக உலகையும் மறந்து விடாமல், அவர் படைத்திட்ட 'சதுரங்க சாணக்கியன்' என்ற நீண்ட நாடகத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.  மகாகவி பாஸனின் மாணவியான கெளதமி என்னும் நாட்டிய மங்கை சாணக்கியரைக் காதலிப்பதும், அது தெரியாத சந்திர குப்தன் கெளதமியைக் காதலிப்பதும் இந்த நாடகத்தின் முடிச்சு.  அரசியல் சதுரங்க விளையாட்டில் இது பற்றி ஏதும் அறியாத சாணக்கியன்,  சந்திர குப்தனின் மறுப்பையும் மறுத்து செலூகஸ் நிகேடாரின் அருமைப் புதல்வி டயோபாண்டிஸை அரசியல் காரணங்களுக்காக சந்திர குப்தனுக்கு திருமணம் செய்விக்கிறான்.  எல்லா சிக்கல்களும் கொண்ட சாதுர்யமாக எழுதப்பட்ட இந்த நாடகம் ஜெகசிற்பியனின் எழுத்தாற்றலை பறைசாற்றும்.

காந்தீயத்திலும்,  சர்வோதைய சிந்தனைகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த ஜெகசிற்பியனுக்கு வாழ்ந்த ஏழ்மை நிலையிலேயே
அவரது 53 -வது வயதில் வாழ்க்கை முடிந்து போயிற்று.  எழுதிக் குவித்த ஜெகசிற்பியனின் நினைவுச் சுவடு கூட இன்றைய தமிழ் எழுத்துலகில் இல்லாமல் இருப்பதின் ஆழ்ந்த வேதனையில் தான், படித்த அவரது புத்தகம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தது அவரைப் பற்றியே சொல்வதாயிற்று.

ஜெகசிற்பியனின் அத்தனை நூல்களும் சென்னை தி.நகர் வானதி பதிப்பகத்தில் கிடைக்கும்.

63 கருத்துகள்:

  1. ஜீவி ஐயாவிற்கு பதிவுகள் எழுதவேண்டும்  என்ற ஆசை, ஆவல், தூண்டுதல் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. 

    நான் படிச்ச கதை என்பதை விட நான் படிச்ச கதைகள் என்ற தலைப்பு மிகவும் பொருந்தும். 

    ஜெகசிற்பியன் படைப்புகளை நான் வாசித்ததில்லை.கல்கி, சாண்டில்யன் போன்ற சரித்திர நாவல் ஆசிரியர்களைத் தவிர ஜெகசிற்பியன், விக்ரமன் போன்ற ஆசிரியர்களின் படைப்புகள் பற்றி எனக்குத் தெரியாது. அந்தக்காலத்தில் வார  பத்திரிகைகள் வாயிலாகவே என்னுடைய  வாசிப்பு இருந்தது. திருவனந்தபுரம் வந்த பின்பு அதுவும் குறுகி மத்திய நூலகத்தில் கிடைக்கும் புத்தகங்கள் வாயிலாக வாசிப்பு தொடர்ந்தது. ஜெகசிற்பியனை அறிமுகம் செய்ததிற்கு நன்றி. 

    சாதாரணமாக தமிழ் எழுத்தாளர்கள் ஒரே துறையில் தான் சிறப்பாக   எழுதுவார்கள். சிறுகதை, குறுநாவல், நாவல், என்று இப்படி. இவர் நாடகம் உட்பட எல்லாத்  துறைகளிலும் எழுதியிருக்கிறார் என்பது செய்தி. கவிதைகளும் படைத்திருக்கிறாரா? 

    //ஆழ்ந்த வேதனையில் தான், படித்த அவரது புத்தகம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தது அவரைப் பற்றியே சொல்வதாயிற்று./

    எழுத்து ஒன்று மட்டுமே தொழில் என்றிருந்த பல எழுத்தாளர்களும் வறுமையில் வாடினார்கள் என்பது நியதி, பாரதி உட்பட. 

    ஆசிரியர் அறிமுகம் என்றாலும் கதைச் சுருக்கங்கள் சேர்த்து இருப்பது சிறப்பம்சம். 

    இன்றைய "படிச்ச கதை "வித்தியாசமாக இருக்கிறது. நன்றி 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் ஸார்..   ஜெகசிற்பியன் நானும் வாசித்ததில்லை.  இவரின் பத்தினிக்கோட்டம் என்னிடம் இருக்கிறியாது என்று ஞாபகம்.  ஆனாலும் வாசித்ததில்லை. 

      ஜெசி கவிதைகள் எழுதி இருந்தால் ஜீவி ஸார் அவற்றைப் பற்றியும் கட்டாயம் சொல்லியிருப்பார்.

      நீக்கு
    2. தமிழ் எழுத்தாளர்கள் பல துறைகளிலும் சிறப்பாக எழுதி இருக்கிறார்கள். உதாரணமாகக் கல்கி அவர்கள் சங்கீத விமரிசனம், அரசியல் விமரிசனம், சரித்திர நாவல்கள்/சமூக நாவல்கள்/கவிதைகள்/ஹாஸ்யக் கட்டுரைகள் என எழுதித் தள்ளி இருக்கார். அதே போல் தேவனும். ஒன்றிரண்டு சிறு/குறும் கதைகளில் சரித்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறார் என்றாலும் எடுபடவில்லை.

      நீக்கு
    3. ஜெகசிற்பியன் புத்தகங்கள் தமிழ் தேசியம் வலைத்தளத்தில் இலவசமாகத் தரவிறக்கும்படியான அமைப்பு இருந்தது. இப்போதெல்லாம் முடியலை.

      நீக்கு
    4. ஆம் கீதாக்கா தமிழ் தேசியம் தளத்தில் இப்போது பல கதைகள் கிடைப்பதில்லை. எடுத்துவிட்டார்கள். பெயர்கள் இருந்தாலும் சுட்டினால் இல்லை என்று வருகிறது.

      கீதா

      நீக்கு
    5. அரு. ராமநாதனின் பிரேமா பிரசுரம்
      சிந்தனையாளர் வரிசை என்றொரு தொகுப்பு வெளியிட்டிருக்கிறது. டார்வின், ரூஸோ என்று வரிசையாக கிட்டத்தட்ட 20 தொகுப்புகள். அவற்றில் இவரின் பங்களிப்பும் உண்டு.

      ஆசிரியர் அறிமுகம், கதைச் சுருக்கம் என்றெல்லாம் இல்லை, ஜெஸி சார் இந்தப் பகுதிக்கு வழக்கமாக ஆற்றோட்டமாய் நான் எழுதும் முறையே இது தான். எழுத்தாளன் நடை.

      இது வரை எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்று எனக்கே தெரியாது. ஸ்ரீராம் தான் சொல்ல வேண்டும்.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. ஜெகசிற்பியன் கதை நான் இதுவரை படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம். பிறகு வருகிறேன்.

    இன்றைய பகுதிகள் நன்று... ஆட்டோ ஓட்டுநர்... ஆச்சர்யம்... நம்ப முடியாததும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அதனால்தான் பகிர்ந்தேன்.  உங்கள் ஊரில்!
      மெதுவாய் வாங்க...  ஆனால் வாங்க!!!

      நீக்கு
    2. @நெல்லை ஊரை விட்டுக் கிளம்பியாச்சா? "பெண்"களூர் மழை எப்படி இருக்கு?

      நீக்கு
    3. பெங்களூரில் மாலை இரவு வேளையில் இரு நாட்களாக மழை பெய்தது. கீதாக்கா. எங்கள் பகுதியில் தண்ணீர் தேங்குவதில்லை.

      ஆனால் பவர் கட் இரு நாட்களாக. மாலையில் மழை பெய்யத் தொடங்கும் போது மின்னலும் இருப்பதால் பவர் உடனே போய்விடும். முந்தாநாள் மாலை போன பவர் நேற்றுகாலை 9 மணிக்குப் பிறகுதான் வந்தது. அது போல் நேற்று இரவும் பவர் போயிற்று ஆனால் நள்ளிரவு மேல் வந்துவிட்டது.

      கீதா

      நீக்கு
    4. பெங்களூரில் இரு நாட்கள் இரவு மழை. இன்னும் ஒரு நாள் இந்த வாரத்தில் பெய்யும். நான் மழையை ரசிப்பவன்.

      மதியம் வெயில் (10:30-4 மணி) இருக்கிறது.

      நான் இருப்பது பெரிய வளாகம். கரன்ட் போனாலும் சில விநாடிகளில் வந்துவிடும். யூபிஎஸ் ரிப்பேர் என்பதால் வைஃபை போய்விடிவது ஒன்றுதான் பிரச்சனை. அதை ருப்பேர் செய்துவிட்டால் பிரச்சனையில்லை.

      மகள் அவ்வப்போது ஏசி போட்டுக்கொண்டு விடுகிறாள். அதுவும் எனக்குப் பிரச்சனைதான். ஹா ஹா

      நீக்கு
  5. ஆட்டோ ஓட்டும் ஆங்கிலப் பேராசிரியர் வித்தியாசமானவர்தான்.

    செல்ஃபோன் திருடனை துரத்திப் பிடித்த மாணவிகளின் துணிச்சல் பாராட்டிற்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கப்பெண்கள் பற்றி தினசரிகளில் படிச்சேன். ஆட்டோ ஓட்டும் ஆங்கிலப் பேராசிரியரைப் போலவே இங்கே ஶ்ரீரங்கத்தில் ஒரு மாத்வ மாமா ஆட்டோ ஓட்டுகிறார்.

      நீக்கு
  6. ஜெகசிற்பியனை பற்றிய ஜீ.வி.சார் நினைவு கூர்ந்திருப்பது நெகிழ்சியூட்டுகிறது. படிக்கவும் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இளம் வயதில் என் எழுத்து முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவாய் இருந்தவர் அரு. ராமநாதன் அவர்கள்.
      அவரது 'காதல்' பத்திரிகையில் ஜெசியும் நானும் தொடர்ந்து எழுதியிருக்கிறோம் என்பது எனக்கான பெருமை.

      சமூகக் கதைகளில் ஏழைப்பங்காளனாய் யதார்த்த உலகை ஜெசி தன் எழுத்தில் கொண்டு வந்தது அற்புதம். இந்த விதத்தில் ஜெயகாந்தனை விட சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்று தாராளமாய்ச் சொல்லலாம்.

      நீக்கு
  7. ஆனந்த விகடன், கல்கி அதிகம் படித்து வந்த காரணத்தால் ஜெகசிற்பியனின் அநேகமான சரித்திர/சமூக நாவல்களை வாசித்திருக்கிறேன். அவர் பிறப்பால் கிறித்துவர் எனினும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் நிகழ்வுகளை வர்ணித்திருப்பார். அதிலும் திருச்சிற்றம்பலம் நாவலில் கடைசியில் "சேக்கிழார்" அவர்களால் எழுதப்பட்டப் "பெரிய புராணம்" அரங்கேற்ற நிகழ்வு வர்ணனையும் அபாரமாய் இருக்கும். அமுதசுரபியிலும் இவருடைய நாவல்கள் வந்திருக்கின்றன என நினைக்கிறேன். பிடித்த சரித்திர எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி..

      'அப்பாடி.. எபி குழுமத்தில் ஒருத்தராவது ஜெகசிற்பியனின் எழுத்தைப் படித்தவர் இருக்கிறரே' என்று காலையில் உங்கள் பதிலைப் படித்ததும் மனசுக்கு இதமாக இருந்தது.

      இன்னும் ஓரிரண்டு பேர் என் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இனிமேல் தான் வருவார்கள் போலிருக்கு.

      நீக்கு
    2. அநேகமாக ரேவதியும் படிச்சிருக்கார் என்றே சொன்னார். இன்னும் பலரும் படிச்சிருக்கலாம். கதை நினைவில் இருந்து ஆசிரியர் பெயர் தெரியாமல் இருக்கலாம்.

      நீக்கு
  8. அனைத்துச் செய்திகள்/விமரிசனக் கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
  9. ஆட்டோ ஓட்டுப்வர் வியப்புதான் என்றாலும் வாவ் போட வைக்கிறார். அவர் சொல்லியிருப்பது பல ஆசிரியர்களுக்கும் நடப்பது. ஒருசிலர் நன்றாக வந்துவிடுகிறார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் படிப்பு சார்ந்த தொழில் நன்றாக அமைவது சிரமமாகத்தான் இருக்கிறது. இவர் வித்தியாசமான மனிதர்!

    எங்கள் வீட்டருகில் எம் எஸ் ஸி பாட்டனி படித்து எம் எட் ம் முடித்த இளைஞர் ஆசிரியர் தொழிலுக்காக அலைந்து, (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்) ஆசிரியர் பணிக்கு வழக்கமாகக் கேட்கப்படும் லஞ்சமும் கொடுத்து ஏமாந்து, பணி கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது பழக்கடை வைத்திருக்கிறார்.

    இது பற்றி நிறைய சொல்ல முடியும். வேலை வாய்ப்பு, கல்வி, தகுதி என்று..

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சிங்கப் பெண்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுவோம்! தடகள வீராங்கனையர் எனபதையும் நிரூபித்துவிட்டனர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. நாளிதழ் செய்திகளை முன்னரே படித்தேன். பகிர்ந்து முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. கேஜிவொய் அவர்கள் சொல்லியிருக்கும் பொன்மொழி சூப்பர். டிட்டோ. //It is the reader's mindset and circumstances which decide if something is good or great.//

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. ஒருத்தராவது கண்டுபிடித்துச் சொன்னீர்களே!

      இது எபி வாட்ஸாப் க்ரூப்பில் KGY சொன்ன பொன்மொழி.

      அதை இங்கு பொருத்தமாக நான் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவருக்கே தெரியாது!! :))

      நீக்கு
    2. //Every human has a good story and every famous writer
      has written something outstanding. It is the reader's mindset
      and circumstances which decide if something is good or great.

      ---- KGY Raman//

      ஆரம்பத்திலேயே இது வந்து விடுகிறது. இதற்குப் பின்னரே விமரிசனக் கட்டுரை வருது.

      நீக்கு
  13. ஜெசி பற்றி ஜீ வி அண்ணா சொல்லத் தொடங்கி அவரது எழுத்து பற்றிச் சொல்லியிருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    ஜெகசிற்பியன் பெயர் எல்லாம் அறிமுகம் உண்டு ஆனால் அவர் எழுதிய புத்தகங்கள் வாசித்ததில்லை. சமீபகாலமாகத்தானே வாசிப்பே!!! சமீபத்தில் எனக்கு நினைவுக்கு வரவும் இணையத்தில் தேடினேன். அதில் ஒன்று கிடைத்தது. இறக்கி வைத்துக் கொண்டேன்.

    https://tamilbookspdf.com/books/aalavaay-azhagan-by-jegashirpiyan/ ஆலவாய் அழகன்.

    கீழே உள்ள சுட்டியில் பல எழுத்தாளர்களின் பல புத்தகங்கள் இருக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் (குறிப்பாகக் கணினியில் வாசிக்க) இங்கும் சென்று பார்க்கலாம்.

    https://www.ebookmela.co.in/downloads/openreadingroom

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தச் சுட்டியில் பலமுறை முயன்றும் எரர் 404 என்றே வருதே? நீங்க எப்படித் தரவிறக்கினீங்க? ஒரத்தநாடு கார்த்திக் மூலமோ/தமிழ் தேசியம் மூலமோகூடத் தரவிறக்க இயலவில்லை. இது சில குறிப்பிட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு. அநேகமாக ராயல்டி காரணமாக இருக்கலாம்.

      நீக்கு
    2. https://tamilbookspdf.com/books/aalavaay-azhagan-by-jegashirpiyan/ ஆலவாய் அழகன்.

      அக்கா இதில் இந்தப் புத்தகம் மட்டும் இருக்கிறது தரவிறக்கம் செய்துவிடலாம்.

      இரண்டாவதில் ஆன்லைனில் வாசிக்கலாம், அக்கா. நிறைய உள்ளன. ஆங்கிலப் புத்தகங்களும் இருக்கின்றன. அந்தச் சுட்டியில் கீழெ வரும் கட்டத்தில் ஓபன்ரீடிங்க் ரூம் என்றும் பிடிஎஃப் என்றும் தமிழ் என்றும் மூன்று இருக்கும் நீலக்கலரில் சுட்டும் படி. இதில் ஓபன் ரீடிங்க் இல் தமிழ்க் கதைப்புத்தகங்கள், பிடிஃப் ல் ஆங்கிலப் புத்தகங்கள், தமிழ் என்பதில் பக்தி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. டவுன்லோட் என்றாலும் பிடிஃப் ஆன்லைனில் டவுன்லோட் ஆகி ஆன்லைனில் வாசிக்க முடிகிறது கீதாக்கா.

      கீதா

      நீக்கு
    3. டவுன்லோடும் செய்ய முடியும் கீதாக்கா. டவுன்லோட் என்பதை அழுத்தியதும் ஒரு பக்கம் திறந்து 4,3, என்று எண்ணிக்கை குறைந்து உங்கள் டவுன்லோட் ரெடி என்று சொல்லி அதன் அடியில் டவுன்லோட் னு இருக்கும் அதை அழுத்தினால் பிடிஎஃப் ஓப்பன் ஆகும் ஆன்லைனிலும் வாசிக்கலாம், தரவிறக்கமும் செய்யலாம்

      கீதா

      நீக்கு
    4. நிறையத் தான் வாசிப்பு சேவை செய்கிறீர்கள் சகோதரி.

      நீக்கு
    5. இதை எல்லாம் முன்னரே முயன்று பார்த்திருக்கேன். தி/கீதா இப்போதெல்லாம் இணையங்களில் சில குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இலவசமாய்க் கிடைப்பதில்லை. எல்கே கின்டிலில் இலவசமாய்ப் படிக்கலாம் என்கிறார். நான் கின்டில் அன்லிமிடெட் வைத்திருந்தாலும் என்னால் முடியலை. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு/நேரில் தான் பார்க்கணும் என்றார் வெங்கட். தமிழ் தேசியத்தின் மூலம் நிறையவே தரவிறக்கி வைத்திருக்கேன். அநேகமாகப் படிக்கவும் படித்துவிட்டேன்.

      நீக்கு
    6. அதோடு ஜெகசிற்பியனின் "ஆலவாய் அழகன்" எங்கே தரவிறக்கினாலும் 49 பக்கங்களுக்கு மேல் வருவதே இல்லை.

      நீக்கு
  14. இவ்வளவு காலத்துக்குப் பிறகு திரு. ஜெகசிற்பியன் அவர்களது நந்தி வர்மன் காதலி..

    மாமரத்தின் கிளையில் சாய்ந்து கொண்டே படித்து மகிழ்ந்த நாட்கள் இனி வரப்போவதே இல்லை..

    சனிக்கிழமை குறித்து இப்போது தான் மனம் சங்கடம் இன்றி இருக்கின்றது..

    வாழ்க தமிழ்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமரத்திலா?.. நினைக்கும் பொழுதே சிவப்பு எறும்புகள் ஊர்வது படப்பிடிப்பாய் மனசில் படிகிறதே, தம்பீ..

      //சனிக்கிழமை.. இருக்கின்றது. //

      அபுரி

      நீக்கு
  15. பாசிட்டிவ் செய்திகள் நல்ல விஷயங்கள்.

    ஆட்டோ ஓட்டும் ஆங்கிலப் பேராசிரியர் குறித்து வாசித்த போது நானும் ஒரு ஆங்கில ஆசிரியர் என்பதால் வேலை கிடைக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று புரிந்துகொள்ள முடிகிறது. எப்படியோ பாலக்காட்டில் ஒரு பள்ளியில் எனது 32 வது வயதில் அரசு சார்ந்த தனியார்ப்பள்ளியில் வேலை கிடைத்து (அதற்கும் பணம் கட்டித்தான் வேலை வாங்கினேன் என்பது வேறு விஷயம்) ஓய்வு பெற்று தற்போது எங்கள் ஊரிலேயே வீட்டருகில் இருக்கும் தனியார்க்கல்லூரியில் (இக்கல்லூரி/பள்ளிகள் நிறுவனர் பற்றித்தான் சமீபத்தில் பதிவில் எழுதியிருந்தேன்) உதவிப்பேராசிரியராகப் பணி புரிகிறேன் என்றாலும் பெரிய சம்பளம் எதுவும் இல்லை.

    எனவே இவர் சொல்லியிருப்பது புரிகிறது. எப்படியோ தன் ஜீவிதத்திற்கு வித்தியாசமாக ஒரு பணியைத் தேர்ந்தெடுத்து உழைப்பது நல்ல விஷயம். பாராட்ட வேண்டிய ஒன்று. படித்த, வேலை பார்த்து தன் பின் ஆட்டோ ஓட்டும் பணியை யாரும் எளிதில் செய்யமாட்டார்கள்.

    சிங்கப் பெண்கள் ஓட்டப்பந்தய வீராங்கனைகள் அது உதவியிருக்கிறது. கள்ளனை ஓடிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்கள். பாராட்டுகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதன் கேள்வி... தனியார் நிறுவனங்களில் 20,000 சம்பளம், ஆனால் முழுமையான வேலை, அரசு பள்ளிகளில் லட்சத்தில் சம்பளம், வேலையோ கமிட்மென்டோ இல்லை என்ற நிலைமை எதனால்? இதேபோல தனியார் வல்கி, அரசு வங்கி...என அரசு மூக்கை நுழைத்து அள்ளிக் கொடுத்து, பென்ஷனும் கொடுப்பதால் என்ன பயன்?

      நீக்கு
    2. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் இரண்டு இலக்கங்களிலேயே இருந்தது. கடைசியில் பணி ஓய்வின் போது மூன்றிலக்கத்தை எட்டி இருக்கலாம். திராவிட அரசுகளில் கருணாநிதி முதலமைச்சராக ஆன உடனே செய்த முதல்வேலை/அல்லது முக்கியமான வேலை அரசுப்பள்ளி/அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் சம்பளத்தை உயர்த்தியது தான். என் அப்பா கடைசி வரை 2500 ரூ பென்ஷனுக்கே சிரமப்பட்டார். ஆனால் அப்பாவோடு வேலை பார்த்துப் பணி ஓய்வு பெற்ற இன்னொருவர் இப்போது 20,000/-வரை ஓய்வூதியம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசு வேலை நிரந்தரம் என்றாலும் சம்பளம் குறைவு என்பதால் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவது இதன் காரணமாகக் கூட இருக்கலாம் என அரசியல்வாதிகள் நினைத்ததே. அதே போல் காவல் துறையிலும் கௌரவம் இருந்த அளவுக்குச் சம்பளம் இருந்ததில்லை. அந்தக் காலத்தில் திரு சோ அவர்கள் தன் பத்திரிகையில் அரசு ஆசிரியர்கள்/காவல்துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து வந்தார். ஆனாலும் இப்போது லஞ்ச லாவண்யம் தலை விரித்து ஆடத்தான் செய்கிறது. எதுவும் மாறவில்லை. குறைந்த சம்பளத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் இப்போது இல்லவும் இல்லை.

      நீக்கு
    3. தனியார் பள்ளிகளில் பெரிய பள்ளிகளில் எல்லாம் சம்பளம் அதிகமாகவே கொடுக்கிறார்கள். பத்மா சேஷாத்ரி. டிஏவி, செட்டிநாடு வித்யாஷ்ரம், சிஷ்யா, இன்னும் சில பெயர் மறந்து போன தனியார் பள்ளிகளில் சம்பளம் அதிகம். நெல்லை சொல்லுவது மாடிக்கட்டிடங்களிலும் வீடுகளிலும் நடத்தி வரும் தனியார் பள்ளிகள். அங்கே தான் அவங்க ஆவணத்தில் காட்டும் சம்பளத்தை ஆசிரியருக்குக் கொடுப்பதில்லை என்பார்கள்.

      நீக்கு
    4. ஆசிரியர்களை இப்போது அவர்களுக்கு சம்பந்தமில்லாத பல வேலைகளிலும் ஈடுபடுத்தி பிழிந்தெடுக்கிறது அரசு.  இதுபற்றி கரந்தை ஜெயக்குமார் போன்ற நண்பர்கள் சொல்லலாம்.  சரியாக வேலை செய்யாதவர்களோ, தாவானவர்களோ எல்லாத்துறைகளிலும் இருப்பார்கள் - தனியார் துறை உட்பட.  

      நீக்கு
  16. ஜெகச்சிற்பியன் பற்றி ஜீவி சாரின் கட்டுரையும், புத்தகங்களை பற்றியதும் அருமை. நந்திவர்மன் காதலி எப்போதோ - தொடராக எதில் என்று தெரியவில்லை - வந்த போது வாசித்த நினைவு ஆனால் முழுவதும் வாசித்ததில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ராணி பத்திரிகையின் மாத வெளியீடான ராணி முத்து இதழில் நந்திவர்மன் காதலி முழு நாவலாக வெளிவந்தது.

      நீக்கு
    2. அடடே... மறந்து போனேன்.. சமீபத்தில் நந்திவர்மன் காதலி படித்தேன்!

      நீக்கு
  17. ஜெகசிற்பியன் அவர்களின் சிறப்பை அறிந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் வாசித்தும் பாருங்கள்.
      ஏழ்மையிலும் கொள்கைப் பிடிப்போடு இருந்த நல்ல எழுத்தாளர்.

      நீக்கு
  18. ஜீவி சாரின் நான் படித்த கதை, நன்றாக எழுதியிருக்கிறார்.

    எனக்கு, கதையை விட, எழுத்தாளரைப் பற்றி எழுதியிருந்த பகுதிதான் அதிகமாகப் பிடித்திருந்தது. என் கலெக்‌ஷனுல் அவர் புத்தகம் இருக்கா என இன்று தேட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையும் நம் எழுத்தில் அனுபவித்து நாம் எழுதினால் தான் அந்த அழகு வந்து சேரும்.

      ஜெயக்குமார் சாரிடம் சுட்டி கொடுக்க வேண்டாம் என்று சொல்வது அதற்காகத் தான்.

      நீக்கு
  19. // வானுறு மதியை அடைந்தது உன் வதனம்.. //

    அப்போது இந்தப் பாடல் மனப் பாடம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும். திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் ஸ்கூலில் படித்த பொழுது (1955) ஏழாவது வகுப்பு சிறப்புத் தமிழ் பாடத்தில் வாசித்தது.

      நீக்கு
  20. அந்தப் பெரியவர் மனதை நெகிழ்த்துகின்றார்...

    என்ன செய்வது எல்லாம் காலத்தின் கோலம்..

    பதிலளிநீக்கு
  21. இன்றைய செய்திகள் அனைத்தும் சிறப்பு. படித்த கதை குறித்த தகவல்கள்..... படித்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. ஜெகசிற்பியன் வாசித்ததில்லை. ஜீவி ஐயாவின் அறிமுகம் வாசிக்கத் தோன்றும் விதமாக இருந்தது. வாசிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெகசிற்பியனின் சமூக நாவல் ஏதாவது ஒன்று என் பரிந்துரை வெங்கட். அவர் எழுத்து பற்றிய முழுச் சித்திரம் உங்களுக்குக் கிடைத்து விடும்.

      நீக்கு
  23. ஜெக சிற்பியன் கதைகளில்
    திருச்சிற்றம்பலம் பளிச் என்று நினைவில். கோபுலுவின் சித்திரங்களில்
    வெகுவாக ரசித்த தொடர்.

    பிறகு வார இதழ்கள் கிடைக்காத சோகம்.
    பரிவாதினி, ஏழிசை வல்லபி மறக்க முடியாது.
    அனைவருக்கும் இனிய இரவுக்கான வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  24. நீங்கள் சொல்வது சரி, சகோதரி.

    எனக்கும் திருச்சிற்றம்பலம் என்றாலே கோபுலுவும் கூட நினைவுக்கு வந்து விட்டார். ஆலவாய் அழகனிலும் கோபுலு சாரின் கைவண்ணம் ஒசத்தி தான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!