புதன், 27 ஏப்ரல், 2022

இட்லி மாவுக்கும் தோசை மாவுக்கும் என்ன வித்தியாசம்?

 

துரை செல்வராஜு : 

எம்ஜார் படத்தில் பாட்டு ஒன்றிலேயே வரும் - " நாலும் தெரிஞ்சவர் யார்.. யார்?.. " - என்று..

இந்த நாலும் என்பது எவை?.. எவை?.. தமிழ்நாட்டில் தமிழ் அல்லாத வேறு வழியில் படித்தவர்களுக்கு இவற்றைத் தெரிந்து வைத்திருப்பதற்கோ பின்பற்றுவதற்கோ வாய்ப்புகள் கிடைத்திருக்குமா?..

 # மனித வாழ்வில் தேட வேண்டிய "பு ருஷார்த்தங்கள்" நான்கு.  தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் அல்லது அறம் பொருள் இன்பம் வீடு.

இது இந்து மதத்துக்குப் பொது தர்மம். மொழிகள் கடந்து அறியப்பட்டுள்ள வாழ்வு நெறி.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஃபேஸ் புக்கில் அவ்வப்பொழுது coolers challenge, black challenge என்றெல்லாம் வருகிறது. ஆனால் அவற்றில் பெண்கள்தான் பெரும்பான்மையாக பங்கேற்கிறார்கள், ஆண்கள் ஏன் பங்கேற்பதில்லை?

# பதிவு செய்து இணையதளத்தில் போடுகிறவர்கள் பெண்களை வைத்து அதிகம் படம் எடுக்கிறார்கள். இவ்வளவுதான் விஷயம் ..பெண்கள் பங்கேற்கும் படமாக இருந்தால் பார்வையாளர்கள் அதிகம் கவரப்படுகிறார்கள் என்பது இதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கலாம்.

ஜெயகுமார் சந்திரசேகரன்: 

இட்லி மாவுக்கும் தோசை மாவுக்கும் என்ன வித்தியாசம். இட்லி மாவில் பேப்பர் ரோஸ்ட் வீட்டில் ஏன் போட முடிவதில்லை? 

# இட்லி மாவுக்கு உளுத்தம் பருப்பு சற்றே அதிகம் போட வேண்டும். தோசை மாவுக்கு அரைப்பதைக் காட்டிலும் இட்லி மாவுக்கு கொஞ்சம் அதிகமாக அரைக்க வேண்டும் முக்கியமாக உளுந்து  அரைக்கும்போது மிகவும் அதிகமாக அரைப்பார்கள். 

பேப்பர் ரோஸ்ட் வீட்டில் போட முடியாததன் காரணம் அதற்குத் தேவையான வலுவான அடுப்பும் பொருத்தமான தோசைக் கல்லும் நம்மிடம் இல்லை என்பதே.

சாம்பார் எத்தனை வகை உண்டு? (அவரைக்காய் சாம்பார், முருங்கைக்காய் சாம்பார் என்பது போல் இல்லாமல் வேறுவகை)

# சாம்பாரில் , வெல்லக் கட்டி போட்ட மைசூர் கர்நாடக சாம்பார், துவரம்பருப்பு போட்ட தமிழ்நாடு ,  பயத்தம்பருப்பு போட்ட வித்தியாசமான சாம்பார் இவ்வளவு தான் நான் அறிவேன். 

* வெங்காயம் தக்காளி போட்ட சாம்பார், வெறும் காய் மட்டும் போட்ட சாம்பார், தேங்காய் வறுத்து அரைத்து விட்ட சாம்பார், வறுக்காமலேயே அரைத்த்து விட்ட சாம்பார், தேங்காயுடன் மல்லி, வர மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து விட்ட சாம்பார், பயத்தம் பருப்பு போட்ட சாம்பார், அதில். தேங்காய் பமி சீரகம அரைத்து விட்ட பொரிச்ச குழம்பு, து ப போட்ட சாம்பார் சீரகமும், வெந்தயப் பொடியும் சேர்த்த சாம்பார், அரைத்து விட்ட பிட்லே வகையறாக்கள். (பாகற்காய் பிட்லே பெஸ்ட்.  கத்தரிக்காய் பிட்லேயும் செய்வார்கள்), கோஸ், உருளை போட்ட கூட்டுக்குழம்பு, நிறைய வகைக் காய்கள் சேர்த்துச் செய்யும் கதம்ப சாம்பார்..

பருப்புப் போட்டு செய்யும் குழம்பு எல்லாம் சாம்பார்தான்.  அப்புறம் அதில் வெரைட்டி காட்டுவது நம் கற்பனையைப் பொறுத்தது.

புளி இல்லாமல் செய்யும் குழம்புகள் எவை?

# புளி இல்லாமல் மோர்க் குழம்பு இளநீர்க் குழம்பு இரண்டும் செய்யலாம் முன்னது உணவு. பின்னது மருந்து.

(கீதா சாம்பசிவம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளை எங்களுக்கு அனுப்பி விட்டீர்கள்!) 

நெல்லைத்தமிழன் : 

1. பெட்ரோல் விலை அதிகம்னு ஒப்பாரி வைப்பவர்கள் ஏன் மாநில அரசு வரியைக் குறைக்கணும்னு மூச்சு விட மாட்டேங்கறாங்க? 

$ கேளுங்கள் கொடுக்கப்படும்  என்று சொல்ல ஏசுவா ஆட்சி செய்கிறார்?

# பெரும்பாலும் ஊடகங்களில் இந்த மாதிரி பொதுப் பிரச்னை குறித்துப் பேசி உலவ விடுபவர்கள் ஒரு கட்சிக்கு தீவிர ஆதரவாளர்களாகவும் எதிரான இன்னொரு கட்சிக்கு ஆவேச எதிர்ப்பாளர்களாகவும் இருப்பதுதான் இதற்குக்  காரணம். 

& போன வாரம் கருத்துகள் பகுதியில் சொன்னதை இந்த வாரம் உங்களுக்காக ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டிரண்டு படங்களாக போட்டு சரி செய்துவிடுகிறேன். 

உங்கள் கேள்விக்கு இந்த படங்களில் பதில் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்! 

                              

அதானே - ஏன்?                                  அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்குறீங்க ! 

2. டாஸ்மாக் ஏன் விலை உயர்ந்தது என்று தேசத்தைப் பற்றி கவலைப்படறவங்க கேட்பதே இல்லை? 

$ டாஸ்மாக் இன்னும் விலை உயார்ந்தால் நல்லது நடக்கலாம். 

# ஏன்  சாராய வியாபாரத்தை நிறுத்தக் கூடாது என்று (அதே காரணங்களுக்காக) கேட்பவர்கள் இருக்கிறார்களே, பார்க்கவில்லையா ?  "நாமாவது ஆட்சியைப் பிடிப்பதாவது " என்று எண்ணுபவர்கள் மட்டுமே சாராய வியாபாரத்தை தீவிரமாக எதிர்ப்பதைக் காணலாம். இவர்களே கூட ஆட்சிக்கு வந்தால் சாராயக் கடைகளை மூடாததற்கு காரணங்கள்  கைவசம் ரெடியாக வைத்திருப்பார்கள். 

 

யோசிக்க வேண்டிய விடயம்            தண்ணியிலேயே மூழ்கி இருப்பவர்கள் 
                                                                         இது பற்றி கேட்பார்களா? 

3. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததேன்னு கண்ணீர் வடிப்பவர்கள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல போகாம காரில் போகும் மர்மம் என்ன? 

$ போகுமிடமெல்லாம் அவர்கள் வருவாரில்லை, நேரத்திலும் வருவதில்லை.

# பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, தாம் காரில் பயணிப்பவர்கள் சொல்வது, "வசதிக்குறைவான ஏழை வயிற்றில் அடிக்காதே" என்ற பொருளில் சொன்னேன் என்பது. 

                
காரில் போகாமல் இப்படி .. ..            நடந்து சென்றால் டிராஃபிக் ஜாம் ஏற்படும் ! 

4, மக்கள் கஷ்டம் பற்றி நினைக்கும் வியாபாரிகள் ஏன் 5 சதம் லாபம் மட்டும் வச்சி விற்பதில்லை?

$ நீங்கள் வியாபாரி வேஷம் போட்டு நடித்தால் கூட லாபம் வருமா என்பது சந்தேகம். (வியாபாரியும் மக்களில் ஒருவர் இல்லையோ.?) 

# வியாபாரிகள் மக்கள் கஷ்டம் பற்றி நினைக்கிறார்கள் என்பது ஒரு பிரமை.  அவர்கள் அது பற்றி எப்போது கவலைப் படுகிறார்கள் என்றால் , " இப்படி மக்கள் கஷ்டப் பட்டால் நம் வியாபாரம் படுத்துப் போகுமே" என்பது மட்டுமே.

                   

முதல் படத்தை விட  - - - -             இரண்டாவது படத்தில் 5 % உடை குறைத்தாச்சு 

5 கோடி செலவழிச்சு மருத்துவரா ஆகி யாருக்கு என்ன பிரயோசனம்?

# ஐந்து கோடி செலவு செய்து படித்த மருத்துவர் நிச்சயம் குறுகிய காலத்தில் ஐந்து கோடியை வட்டியுடன் மீட்டெடுக்க முழுமூச்சுடன் உழைப்பார் என்பது நிச்சயம்.

                   









இருங்க இப்போதான் படிக்கிறேன்.   அப்புறம் வைத்தியம் பார்க்க வருவேன். 

= = = = = = =

 படம் பார்த்து கருத்து எழுதுங்க :

1)

   

2)  


 




 

3) 

110 கருத்துகள்:

  1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. //தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்..//

    இதைத் தான் சொல்வீர்கள் என்பது தெரியும்..ஆனால் நான் எதிர்பார்த்தது வேறு.. நீதி நெறிகளைப் பயில்வதே மாபெரும் தவறு என்று ஆகி விட்ட இன்றைய கல்வி முறையில் - தமிழ் எழுத்துக்கள், மாதங்கள், பருவ காலங்களின் பெயர்கள், ஐவகை நிலங்கள் என்பதை எல்லாம் ஆழமாகப் பயில இயலாத இன்றைய கல்வி முறையில் -

    அறம் பொருள் இன்பம் வீடு என்பதைப் பற்றியா வறட்டு ஆங்கிலத்தில் சொல்லித் தரப் போகின்றார்கள்?.. அவற்றைப் பற்றியா இன்றைய மாணவர்கள் அறிந்திருக்கப் போகின்றார்கள்?...

    - என்ற ஆதங்கத்தில் அன்று சொல்லப்பட்ட கருத்து கேள்வியாகக் கொள்ளப்பட்டு விட்டது..

    தங்களது கருத்தினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய மாணவர்களின் ஆர்வம் இதில் இருக்கிறது என்பது தமிழகமே அறிந்த செய்தி.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார் எந்தக் காலத்தில் இருக்கிறாரோ... ஆசிரியர்களுக்கே இவை எதுவுமே தெரியாதே... கல்வியை வழிநடத்துபவர்களுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லையே. நீதியாம், போதனையாம், தமிழாம்....

      நீக்கு
    3. ஒரு பாடலில் வருகிற "நாலும் " தெரிவது யாவை என்பதுதானே கேள்வி.

      நீக்கு
  4. காலை வணக்கம் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. ஜெயகுமார் சார் கேட்ட கேள்விகள், இன்று ஒருத்தருக்கு நிறைய வேலை வத்துவிடும். அவர் இன்றைய பகுதியை தி பதிவாக்காமல் ஓயமாட்டார். அப்புறம் ஜீவி சார் வந்து, பதிவை ஒட்டி கருத்துச் சொல்லுங்கள்... கதையடிக்காதீர்கள் என்று அதட்டப் போகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா...   புரிகிறது.  ஒரு அம்பில் இரண்டு இலக்கு!

      நீக்கு
    2. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

      நீக்கு
    3. அது சரி, எனக்கு முன்னாடியே சாம்பாருக்கு விதம் விதமான வகைகளைப் பற்றிப் பதில் சொன்னவருக்கு என்ன சொல்லப் போறீங்க? நான் வரவே போறதில்லை இனிமேலே! :( குழுமத்திலும் கலகலவெனப் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. இங்கேயும் பேசக் கூடாதுன்னா? அப்புறமா இது என்ன கட்டுப்பாடான பள்ளியா? நான் இங்கே மாணவியா? எங்க பள்ளியில் எந்தப் பாடம் எடுத்தாலும் அதில் உலக விஷயங்கள் எல்லாம் இடம் பெறும். அதனால் தான் எங்கள் பொது அறிவு விரிந்தது எனலாம். பாடத்தைப் பற்றி மட்டும் மாணவ/மாணவியருக்குப் போதித்தால் கொஞ்ச நேரத்தில் அலுப்புத் தட்டும். சரி, இதுவே அதிகம். வரேன்.

      நீக்கு
    4. :)))) கோவிச்சுக்காதீங்க ! ஏதோ எங்களுக்குத் தெரிந்த சமையல் சமாச்சாரங்களை சொல்லியிருக்கிறோம்!

      நீக்கு
    5. கீசா மேடம் இன்னும் நிறைய புளி, புளி இல்லாத குழம்பு வகைகளை எழுதுவார்னு பாத்தா ப்ரெஷர் டேப்ளட் சாப்பிட பறந்தவர் போல ஆயிட்டாரே

      நீக்கு
    6. வீட்டில் கழிவறையில் வேலை நடக்கிறது. முன்ஹாலில் உட்கார்ந்து கொண்டு கணினியில் வேலை செய்ய முடியலை. இன்னொரு அறைக்குச் சென்றால் இணையம் அவ்வளவு தூரம் வருவது கஷ்டம். விட்டு விட்டுத் தான் வரும்.ஆகவே 2,3 நாட்கள் கொஞ்சம் கஷ்டம் தான் வருவதற்கு.

      நீக்கு
    7. நெல்லை, என்னோட பாரம்பரியச் சமையல் பகுதி 2 இலவசத் தரவிறக்கலுக்குக் கொடுத்திருக்கு. அங்கே போய்ப் பாருங்க, புளி இல்லாத குழம்பு வகைகள் இருக்கும். :))))) அப்புறமா நான் இட்லிக்குனு தனியா, தோசைக்குனு தனியா அரைப்பதில்லை. இதை எப்போவோ ஓரிரண்டு முறை சொல்லி இருக்கேன். அரிசி, உளுந்து நனைப்பதில் சரியான விகிதம் வரும்படி பார்த்துக்கணும். அரைச்சு வைச்சுட்டு வேணும்னால் அன்னிக்கே தோசை, மறுநாள் இட்லி என வார்க்கலாம். இட்லி எல்லாம் குஷ்பூ இட்லி எனச் சொல்வார்களே அப்படி வரும். தோசைகள் எல்லாமும் பேப்பர் ரோஸ்ட் போலத் தான் மெலிதாக வரும்.

      நீக்கு
  6. பாவம் தமன்னா.. இந்த அளவுக்குக் கஷ்டப்படுத்தியிருக்க வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  7. தமன்னாவின் ஒரே ஒரு படம் மட்டும், எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன், என்று வருந்துவதைப் போல அமைந்துவிட்டது. பார்க்கும் நமக்கு வயதாகிவிட்டது புரியாமல், நடிகைகளுக்கு வயதாகிவிட்டது மட்டும் நம் கண்ணை உறுத்துவதன் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  இப்போது டி ஆர் ராஜகுமாரி படத்தையும், தவமணி படத்தையும் போட்டால் ரசிக்க முடியுமா என்ன!

      நீக்கு
    2. அடுத்த புதனுக்கான கேள்வியா?

      நீக்கு
  8. பதில்கள்
    1. விடுங்கள்... ரசித்து விட்டுப் போகட்டும்!

      நீக்கு
    2. ஆ !! இப்படி தாக்குகிறாரே !! நெ த பாவம்!!

      நீக்கு
    3. பாருங்க இந்த து செ சார் சொல்றதை... 36 வயதாகிவிட்டால் அந்தப் பெண்ணை கிழவர்கள்தாம் ரசிப்பாங்களாம். அதைக்கூட மன்னிக்கலாம். 18 வயது புகைப்படங்களையும் கிழவர்கள்தாம் ரசிக்கணுமா? அப்போ இளவட்டங்கள் யாரை ரசிப்பது? லதா மஞ்சுளாவையா?

      நீக்கு
  9. எல்லாவற்றிலும் கட்சிக் கண்ணோட்டம், வெறுப்புணர்வு மனதில் இருப்பதால், ஏதோ மக்களுக்காக்க் கவலைப்படுபவர்கள் போல நடிப்பவர்களைப் பற்றிக் குறிப்பிட்ட பதில் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் பிழைப்பு நடக்க வேண்டுமே...  "உனக்கோ பொழுது போகணும்...  எனக்கோ பிழைப்பைப் பார்க்கணும்? என்கிற இளையராஜா குரல் மனதில் ஓடுகிறது!

      நீக்கு
  10. படங்கள்... சின்ன வயசுல குளிக்கப் போனது, இவ்வளவு வருடங்கள் கழித்து கிணற்றிலிருந்து மீண்டு வந்து, ஆட்டோவிலேறி வீட்டுக்குப் போகணும்னு தோணின பெண்ணுக்கு, கடைசியில் வாளித் தண்ணீரில் ப்ப்ளிக்கில் குளிக்கவேண்டிய நிலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... நல்ல (தொடர்) கற்பனை!

      நீக்கு
    2. அட! மூன்று படங்களையும் இணைத்து கருத்து !! சூப்பர் நெ த !!

      நீக்கு
  11. இந்த மத்த்திற்கு ஆதரவாப் பேசிட்டு, அவங்க கோச்சிக்கப் போறாங்களே என்று இன்னொரு மத்த்தை உயர்த்திப்பிடித்மு, அப்புறம் அதற்கடுத்த இன்னொரு மத மக்களைச் சமாதானப்படுத்தி.... என அரசியல்வாதிகள் நடந்துகொள்வதைப்போல, அனுஷ், பாவனா பழைய படங்களின் மழையை அடுத்த வாரங்களில் எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  12. பாஹுபலி படத்தைப் போட்டால் ஆசிரியர்களுள் ஒருவர், எங்காள்? என்று சண்டைக்கு வந்துவிடுவார் என்ற பயமா?

    பதிலளிநீக்கு
  13. @ ஸ்ரீராம்..

    //ஆதங்கம்தான். வேறன்ன!..//

    அது தான்.. அதே தான்..

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம். அனைவரின் நல்வாழ்வுக்கும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    படம் பா. கருத்து.. இந்தப்பதிவில்தான் எத்தனை அழகான தமன்னா படங்கள். நான் சிறிய வயதிலிருந்தே மூலிகைகள் கலந்த இந்த கிணற்றில் தினமும் குளித்தாவது எப்படியும் அவரைப் போல் அழகாகி விட வேண்டுமென குளித்தும், இப்போது வளர்ந்த பருவத்தில் அவரைப்போல் ஆகி விட்டேனா? என கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாது வரும் ஆட்டோ முதல் அனைவரிடமும் வழிமறித்து கேட்டும், முகம் மட்டும் இன்னமும் மாறவில்லையாம்..... . என்ன செய்வது? இப்போது மறுபடியும் தினமும் முகத்துக்கான குளியல்...

    சகோதரர் நெல்லைத் தமிழர் அளித்த கருத்தைப் பார்த்ததும் ஏதோ எனக்குள்ளும் தோன்றிய தொடரான சிறிய கற்பனை. (பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்த மாதிரி என உ. த கொள்ளலாம்.) ஆனால் அவருடைய கற்பனை அழகாக இருந்தது. அவருக்கு என் பாராட்டுக்களும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. @ கீதாக்கா

    // குழுமத்திலும் கலகலவெனப் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. இங்கேயும் பேசக் கூடாதுன்னா?..//

    வீட்டுக்குள்ளே குழந்தைகள் ஓடியாடினால் வீட்டு திண்ணையில் முக்கிய ஆலோசனையில் இருக்கும் பெரியவர்களுக்கு சற்று இடைஞ்சலாக இருக்கும் தானே!..

    பதிலளிநீக்கு
  18. குழந்தை ஒன்று ஓடி வந்து,
    தாத்தா... நான் தண்ணி குடிச்சேன்!.. என்று சொல்வது எதற்காக..

    தான் சொல்வதைக் கேட்க தாத்தா இருக்கின்றாரே.. என்றதொரு நம்பிக்கை விழுது அல்லவா அது!..

    பதிலளிநீக்கு
  19. படைப்பாளியின் படைப்பினை ஒட்டி கருத்திடலாமே!... என்பது நல்லது தான்...

    செவ்வாய்க் கிழமைகளில் இந்தப் பக்கம் வராமல் தவிர்ப்பதை விட நெல்லுக்குள்ளே அரிசி இருக்கு என்று சொல்லி விட்டுப் போவது மேல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு பதிவுகளில் யார் எந்தக் கருத்தைப் பதிந்தாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. முக்கியமாக, புதன் வியாழனில் அரட்டை அரங்கம்தான். எல்லோரும் வாங்க, கருத்து சொல்லுங்க, தாராளமாக அரட்டை அடிப்போம்!!

      நீக்கு
    2. பெரும்பாலும் கதைப் பகுதியில், படைப்பை ஒட்டி கருத்துக்கள் அவ்வளவாக இடம் பெற இயலாது. கதை நன்று. நல்ல முடிவு, நல்ல வசனம் என்பதைத் தாண்டி, இவன் ஏன் அவளை மணக்க விரும்பவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுப்ப முடியாது. கதாசிரியருக்கு இவனை அவளோட சேர்க்க விருப்பம் இல்லை, அதனால் அப்படி எழுதியிருப்பார். அமானுஷ்யக் கதை, ஜோதிடம் சம்பந்தமான கதை என்றால் கருத்துக்கள் சொந்த அனுபவத்தோடு விலகிச்செல்லும். இதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். மோர்க்குழம்பு பதிவு போட்டால், அதில் எத்தனை பின்னூட்டம் எழுதுவது? யோசித்துப் பாருங்கள்.

      நீக்கு
  20. செவ்வாய்க் கிழமைகளில் எனது கதைகள் இங்கே வெளியாகும் போது சிலரது அன்பான கருத்துக்களைக் காணவே முடியாது.. அதற்கான வருத்தம் இன்னும் உள்ளது.. சொல்ல வேண்டும்.. சொல்ல வேண்டும்.. என்று மனதில் இருந்தது - இந்த ஆதங்கம் தான்..

    பதிலளிநீக்கு
  21. மரம் பழுத்தால் .. ஔவையார் பாட்டு தெரியும்!.. அப்புறம் எதற்கு வருத்தம் என்று தான் புரியவில்லை.. செவ்வாய்க் கிழமை வரமுடியாவிட்டால் புதன் கிழமையாவது ஒன்றைச் சொல்லலாம்.. அதுவும் கிடையாது என்றால்!?..

    எழுதியது நன்றாக இருந்தால் எல்லாரும் வரப் போகின்றார்கள்!.. ( என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தமே வேண்டாம் - நீங்கள் எழுதும் கதைகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் எப்பொழுதும் உண்டு. முதல் ரசிகன் நான்தான் - படம் போடும்போது கதையில் மிகவும் ஆழ்ந்து ஒன்றி படம் வரைவேன்.

      நீக்கு
    2. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி கௌதம்..

      நீக்கு
    3. துரை செல்வராஜு சார்.. நாளானாலும் கதையைப் படித்துவிடுவேன். பிறகு யார் பின்னூட்டம் பார்ப்பார்கள் என நினைத்து எழுதுவதிவ்லை

      நீக்கு
  22. //# பதிவு செய்து இணையதளத்தில் போடுகிறவர்கள் பெண்களை வைத்து அதிகம் படம் எடுக்கிறார்கள். இவ்வளவுதான் விஷயம் ..பெண்கள் பங்கேற்கும் படமாக இருந்தால் பார்வையாளர்கள் அதிகம் கவரப்படுகிறார்கள் என்பது இதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கலாம்.//

    பதிலுக்கு ஏற்ற கவர்ச்சி படங்கள் திகட்டுகிறது. வந்துட்டேன் . படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி, குளியல் உடம்புக்கு ஏற்ற குளிர்ச்சி. 

    நல்ல வேளை பேப்பர் ரோஸ்டுக்கு மாவில் கொஞ்சம் பேப்பர் போட்டு அரைப்பார்கள் என்று சொல்லாமல் விட்டீர்கள். ஹா ஹா. 

    இத்தனை வகை சாம்பாரை வைத்துக்கொண்டு திங்கள் கிழமை பதிவை சாம்பார் கிழமை பதிவாக்கி விடலாம். ஒவ்வொரு திங்கட் கிழமை ஒவ்வொரு சாம்பார் செய்யும் முறை விளக்கியால் சுமார் 4 மாதப் பதிவுகளை ஒப்பேற்றிவிடலாம். சரிதானே? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் - ஆனால் சாம்பார் பிரியர்கள் மட்டுமே படிப்பார்கள்!

      நீக்கு
  23. பெட்ரோல் விலை குறைக்க இரண்டு அரசுகளும் வரிகளை நீக்க வேண்டும் என்பது எனது கருத்து.

    பதிலளிநீக்கு
  24. படங்களைப் போட்டு சமாளித்து... ம்... சிரமம் தான்...

    பதிலளிநீக்கு
  25. வெங்காயம், பூண்டு விலை அதிகம்...

    மன்னிக்கவும்... அதையெல்லாம் நான் சாப்பிடுவதில்லை...

    Hotel-ல் விலை அதிகம்...

    "ஆத்துல" சமைங்க...

    இந்த Gas விலை...

    விறகு அடுப்பு இல்லையா...?

    பெட்ரோல் விலை அதிகம்...

    நடந்து போங்க...

    மாமி பதில் போல பலதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிந்தியா "வல்லரசு" நோக்கி விரைவாக...

      நீக்கு
    2. நிச்சயமாய் வல்லரசு ஆயிடும். ஏனெனில் முதலமைச்சரின் பேரப்பிள்ளைகள் ஹிந்தியும், சம்ஸ்கிருதமும் கற்பிக்கும் "சிஷ்யா" பள்ளியில் அல்லவோ படிக்கின்றனர்! சிஷ்யா பள்ளியின் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பேரப்பிள்ளைகளை அடிக்கடி பார்க்க முடியவில்லை என மனம் வருந்தினாரே! பத்திரிகைச் செய்திகளாகக் கூட வந்திருந்தது. இவங்கல்லாம் தானே வருங்காலத்தில் ஆளப் போகின்றார்கள்! :)))))))

      நீக்கு
  26. மருத்துவர் பற்றிய பதில் அருமை... உண்மை...

    பதிலளிநீக்கு
  27. நாளையும் பல படங்கள் உண்டு நினைக்கிறேன்...!

    பதிலளிநீக்கு
  28. காலை வணக்கம். கேள்வி பதில்கள் நன்று. நெல்லைத் தமிழனுக்காக போட்ட படங்களா, இல்லை நீங்களும் ரசிகர் என்பதால் போட்ட படங்களா? இது அடுத்த புதனுக்கான கேள்வி அல்ல! :)

    பதிலளிநீக்கு
  29. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  30. கேள்வி, பதில்களும் நன்றாக இருக்கிறது.
    கிணற்றில் எட்டி பார்க்கும் குழந்தை பயமாக இருக்கிறது பார்க்க.
    மழையில் நனைந்த படி ஆட்டோவை நிற்க சொல்லும் பெண் அம்மாவிடம் கண்டிப்பாய் திட்டு வாங்குவார்.
    "மழை தண்ணீரில் குளிப்பது சுகம்" என்று தன் முகம் மறைத்து குளிக்கும் பெண் சொல்கிறாள்.

    தமன்னாவின் படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை, குறிப்பாக சாம்பார் குழம்பு வகைகள் என்று சொல்லியிருக்கும் ஆசிரியர் - ஸ்ரீராம்ஜி என்று நினைக்கிறேன் - சமையல் கலைஞர்! சமையலையும் கவிதையாக்கிவிடுவார்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  32. இரண்டாவது படம் ஏதாவது நடிகை ஷூட்டிங்கோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. நெல்லையின் காட்டில் மழை! கௌ அண்ணா இது நியாயமா! நான் ஏதோ ஒரு கருத்தில் நெல்லையைக் கூல் செய்ய தமனா படம் போட்டுடுவாங்கன்னு சொல்லப் போக...எபியே இன்று கூல்!

    ஆமாம் பங்களூரும் வெயிலில் குளிக்கிறது!

    ஸ்ரீராம் காக ஒரு அனுஷ் படமாவது போட்டிருக்கலாம்...ஹூம் பாவம் அவரே தான் போட்டுக்கணும் போல வியாழன் பதிவில்!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  34. நெல்லைக்குப் பிடிக்காத ஒரு தமனாக்கா படம் இடையில்திருஷ்டிப் பொட்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தமனாக்கா படம் இடையில்திருஷ்டிப் பொட்டு!// :))) நீங்க சொல்றீங்களேன்னு இப்போ நெல்லை ஒவ்வொரு படமாக தமன்னா இடையில் எங்கே திருஷ்டிப் பொட்டு இருக்குன்னு zoom செய்து பார்க்கப்போகிறார் !

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!

      கீதா

      நீக்கு
  35. தமனாக்கா நல்லா போஸ் கொடுக்கறாங்க என்னாது தமனாக்கா வைத்தியம் பார்க்க வருவாங்களா!!! இப்படி போஸ் கொடுத்தா???!!! மயங்கி விழுபவர்களுக்கா!! மத்த டாக்டர்களுக்கு நல்ல வரும்படிதான்!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  36. படங்கள் - கிராமத்துல இருந்தவரைக்கும் எப்படி எல்லாம் இருந்தேன்..ஒண்ணுமே இல்லாமக் கூட தைரியமா.கிணத்துல குதிச்சு விளையாடி......சிட்டிக்குப் படிக்க வந்து அர்த்தராத்திரில கிழவன் குடைபிடிச்சு துள்ளினது போல அரை ஆடை போட்டு கண்ணு மண்ணு தெரியாம சுத்தி கடைசில ஊருக்கே வந்து அவனுக்கு தலைமுழுக்குப் போடும்படியா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! இன்று எல்லோருமே படங்களை இணைத்து கமெண்ட் போடுகிறீர்களே ! சிறப்பு!

      நீக்கு
  37. முதல் படம் - இளம் கன்று பயமறியாது!

    இரண்டாம் படம் - துள்ளித் திரிந்த காலம்...துள்ளித் திரிந்த பெண்ணொன்று..

    மூன்றாவது படம் - வாழ்வே மாயமா, வெறுங்கனவா கடும் புயலா நடந்தவை எல்லாம் வேஷங்களா

    கீதா

    பதிலளிநீக்கு
  38. ஹையோ எல்லா தளத்திலும் one line answer - ஒரு மார்க் என்பது போல ஒரு கோடு கருத்துப் பெட்டி வருகிறது ஆனால் நல்ல காலம் 5 மார்க், 10 மார்க், 15 மார்க்கிற்கு எழுத அனுமதிக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      ஆமாம். இப்போது எல்லா தளங்களிலும் வந்து விட்டது. இங்கு உடனே வெளியிடுகிறது. சில இடங்களில் போய் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. இப்போதுதான் சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்கள் தளத்தில் ஒரு கருத்து அளித்தேன். நான் கருத்து அளித்ததையே அது தெரிவிக்கவில்லை. என்னவாயிற்றோ ? நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. அடடா உங்கள் கருத்துரை வரவில்லையே ஜி.

      நீக்கு
    3. தில்லி வெங்கட் தளத்தில், பெரும்பாலும் இரண்டாவது கமெண்ட் எழுத முடிவதில்லை (அது போவதில்லை). முதல் கமெண்டே, 'உங்கள் கருத்து வந்து சேர்ந்தது' என்ற மெசேஜே வராமல், அமைதியாக இருந்துவிடும். சில மணி நேரங்கள் கழித்து திரும்பப் பார்த்தால்தான் கருத்து போயிருக்கா இல்லையான்னு தெரியும். இது எதனால் என்றும் தெரியலை.

      நீக்கு
    4. எனது தளத்தில் Comment Moderation இருக்கிறது நெல்லைத் தமிழன். உங்கள் கருத்துரை எனது மின்னஞ்சலுக்கு வந்து விடும். அதனை நான் அனுமதித்த பிறகே அது தளத்தில் வெளியாகும். இரண்டு அல்ல எத்தனை கருத்துரை அளித்தாலும் எனது மின்னஞ்சலிலும், Blogger Comments பக்கத்திலும் வந்து விடும். அதனால் எத்தனை கருத்துகளை வேண்டுமானாலும் எனது பக்கத்தில் நீங்கள் எழுதலாம்!

      நீக்கு
  39. @ திண்டுக்கல் தனபாலன்
    // முப்பாலில் இல்லை வீடு.. //

    முப்பாலுக்குள் இருக்கிறது வீடு..

    @ கௌதம்
    // ஆம்.. //

    இருவினையும் சேரா!.. (0005)- என்றாலே பிறப்பற்ற நிலை.. வீடுபேறு தானே!..

    இறைவனடி!.. (0010) - என்றால் வீடுபேறு இல்லையா!?..

    வாழ்நாள் வழியடைக்குங் கல்!.. (0038) பிறவிகளின் வழி அடைபட்டுப் போனால் அது வீடு பேறு தானே!..

    நல் விருந்து வானத்தவர்க்கு!.. (0086) - என்றால் எங்கே?.. கூவாத்தங்கரையிலயா!?..

    மற்றீண்டு வாரா நெறி!.. (0356)
    இதுவும் வீடுபேறு இல்லை என்றால் -
    இதெல்லாம் இடைச் செருகல் ஆக இருக்கும்.. இருக்கும் இருக்கும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போல்லாம் பாப்புலர் கருத்து (தமிழகத்தின் அரசியல், ஊடகங்கள் மத்தியில்), திருக்குறள், ஏசு வந்து தாமஸ் வள்ளுவன் என்பவரிடம் சொல்லி எழுதப்பட்டது என்று பேசுவதுதான். தொல்.திருமா அவர்களும், ஈசன் என்று தமிழகத்தில் வழிபடப்படுவது, கோவில்கள் எல்லாமே ஜீசஸ் தான் என்று சொல்லிவிட்டார்.

      கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை, கற்பு, மனைவி என்று பல சப்ஜெக்டுகள் இருக்கிறதே என்பதை இந்த குறள் அறிவுஜீவிகள் மறந்துவிடுவார்கள். இன்பத்துப்பாலில் எழுதப்பட்டிருக்கும் பெரும்பான்மையான குறள்கள், நம் பாரத தேசத்து, தமிழகத்து பெண்களின் நெறி என்பதையே இவர்கள் மறந்துவிடுவார்கள். எங்காவது 'பசலை', 'ஊடல்' என்று பலவற்றை வேறு எந்த நாகரீகத்திலாவது கேள்விப்பட்டிருப்பார்களா? இதில்வேறு, சமண சமயம் என்று நாக்கூசாமல் எழுத நாலு பேர் இருக்காங்க.

      நீக்கு
  40. அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  41. சாம்பார் பற்றி நன்றாகவே சொல்லிபுள்ளார்கள்.
    தமனாவின் வரவுக்கும் குறைவில்லை ;) ரசனை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!