கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு
கதை
தலைகுளத்தூர் பட்டதிரி.
மொழியாக்கம்
ஜெயக்குமார் சந்திரசேகரன்
பாகம் 4.
[தலைகுளத்தூர் பட்டதிரி 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரபல ஜோசியர். இவரது இல்லம் பிரிட்டிஷ் மலையாளத்தில் இருந்தது (மலபார்). ஜாதகக்கணிப்பு, ஜோசியம், பிரச்சனை ஜோசியம் இவற்றில் விற்பன்னர். சோழி உருட்டி பிரச்னை பார்ப்பது இவரது சிறப்பு.]
முன்கதைச் சுருக்கம்.
பாகம் 1. : குருகுல வாசம். ஜோசிய திறமை வெளிப்படுதல்.
பாகம் 2. : மகன் மரித்தல்-ஜோசியத்தின் மேல் வெறுப்பு-வெறுப்பு
நீங்குதல்-கள்ளன் காக்கையை கண்டுபிடித்தல்-வெட்டி
முறிச்ச கோட்டை கதை.
பாகம் 3. : தன்னுடைய ஜாதகம் கணித்து ஜாதி பங்கம் உண்டாகும்
என அறிதல் - தரித்திர பிராமணனுக்கு
தரித்திரம்
போக்கும் வழி சொல்லுதல்.
சிறு விளக்கம்.
கணியன் அல்லது கணியார் என்பவர் தாழ்ந்த ஜாதியினர் (ஓபிசி).
இவர் ஜாதகம் குறித்தல், மருத்துவம் போன்ற தொழில்கள் செய்தவர். பணிக்கர் என்ற ஜாதி பெயரிலும்
இவர் அறியப்படுவர்.
இனி
ஊருக்குத் திரும்பி வந்த பிராமணன், விஷ்ணு தூதர்கள்
பட்டதிரியை சபித்ததையும் அதனால் அவருக்குக் கெடுதல் உண்டாகும் என்பதையும் சொன்னார்.
ஜாதகப்பலன் அனுபவிக்காமல் இருக்கமுடியாது என்பது நிச்சயம்
என்றாலும் தப்பிக்க முடியுமா என்று பார்க்கலாம் என்று பட்டதிரி தீர்மானித்தார். வீடு
விட்டு பாழூர் என்ற ஊருக்கு வந்து வசிக்கத் துடங்கினார்.
அத பதனம் (கேடு) சம்பவிக்கும் நாள் அன்று காலையில்
எழுந்து நித்ய கர்மங்களை முடித்துக் கொண்டு ஆகாரம் உண்டு, சில சினேகிதர்களோடு பாழூர்
ஆற்றில் படகில் அன்றைய தினத்தை கழிக்கலாம் என்று தீர்மானித்தார். பகல் முழுதும் கழிந்தது.
நல்ல பவுர்ணமி நிலவும் வந்தது. குளிர்ந்த காற்று.
ஆனால் திடீரென்று மழைமேகங்கள் வானத்தை மூடின. எங்கும்
இருட்டு. கரும் இருட்டு. ஒருவரை ஒருவர் காண முடியவில்லை. பெரு மழையில் படகில் நீர்
நிரம்பிக் கொண்டே இருந்தது. படகு மூழ்கும் அபாயம். ஒரு விதம் படகை கரை சேர்த்தனர். கரையில் இறங்கிய அனைவரும் மழையில் நனைந்து இருட்டில்
ஓரோர் திக்கில் ஓடிச் சென்றனர்.
பட்டதிரியுடன் கூட இருந்தவர்கள் எல்லாம் பிரிந்து போனதால்
பட்டதிரி தனியர் ஆனார். மின்னல் வெளிச்சத்தில் அடுத்துள்ள ஒரு வீட்டினைக் கண்டார்.
அவ்வீட்டை அடைந்து வேஷ்டி துண்டு ஆகியவற்றை நன்றாகப் பிழிந்து உடுத்திக்கொண்டு திண்ணையில்
இருந்தார். அத்திண்ணையில் ஒரு கயிற்றுக் கட்டிலும்,
பாயும் தலையணையும் இருந்தன. பட்டதிரிக்கு அசதியாலும்,
அதீத குளிரினாலும் நல்ல உறக்கம் வந்தது. ஆகையால் அந்தக் கட்டிலில் பாயை விரித்துக்
கிடந்து உறங்கி விட்டார்.
அந்த வீட்டின்
சொந்தக்காரன் ஒரு குடிகாரன். அன்று சாயந்திரம் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வெளியே
போனவன் வீடு திரும்பவில்லை. கட்டில், பாய் முதலியவை அவனுடையதே.
சிறிது நேரம் கழிந்தது. மழையும் நின்றது. நிலவும் தெரிந்தது. வீட்டில் இருந்து கதவைத் திறந்து ஒரு பெண்மணி வெளியில் வந்தாள்.
கட்டிலில் ஒருவர் கிடப்பதைப்
பார்த்து அது தன் புருஷன் என்று எண்ணி அவளும் கட்டிலில் படுத்தாள். நனைந்து குளிரில்
வெடவெடத்து உறக்கத்தில் இருந்த பட்டதிரிக்கு உறக்கம் முழுதும் தெளியவில்லை. பாதி உறக்கத்தில்
இருந்தவர் ஸ்திரீ சூடு கிடைத்த போது மதியிழந்தார்.
அந்த ஸ்திரீயை கூடினார். “பிராயஸ்ஸமாபன விபத்திகாலே தியோபி பும்ஸாம் மலினா பவந்தி”
.
சுகானுபவங்கள் தீர்ந்தவுடன் பட்டதிரிக்கு தெளிந்த உணர்வு
வந்தது. நட்சத்திரம் பார்த்து நேரம் அறிந்தார். அந்தப் பெண்ணிடம் “நீ யார், என்ன குலத்தவள்?”
என்று கேட்டார். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கும் ஆள் மாறிப்போனது தெரிந்தது. பயம்
கலந்த நாணத்துடன் “அடியேன் கணியாட்டி, தெரியாமல் செய்த இந்தக் குற்றத்தை திருமேனி மன்னிக்க
வேண்டும்” என்று சொன்னாள்.
இதைக் கேட்ட பட்டதிரி முழு உணர்வுடன் “போகட்டும். நீ
ஒன்றும் பயப்பட வேண்டாம். கவலைப்படாதே. நீ இப்போது என்னில் இருந்து கர்ப்பம் தரித்திருக்கிறாய்.
பிறக்கும் புத்திரன் நல்ல யோக்கியனாய் உனக்கும் குடும்பத்திற்கும் செல்வங்களைத் தேடித்
தருவான். நீங்கள் நன்றாக வாழ்வீர்கள். இதோ சூரியோதயம் அடுக்கிறது. நான் இனியும் இங்கே
இருப்பது சரியல்ல. தெய்வ கட்டளை இருக்குமானால் ஒரு நாள் நான் திரும்பி இங்கு வருவேன்.
“ என்று கூறி அகன்றார்.
பத்து மாதம் கழிந்தது. பட்டதிரியின் மூலம் கர்ப்பம்
தரித்த கணியாட்டி ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றாள். முறைபோல அப்பாலகனுக்கு வித்யாப்பியாசம்
செய்யப்பட்டது. அவனுடைய புத்தி சாமர்த்தியத்தினால் பாலகன் ஒரு பண்டிதனும், நல்ல ஜோதிஷக்காரனுமாய்
வளர்ந்தான். ஜாதகம் எழுதுதல், நிமித்த ஜோதிடம்,
பிரஸ்ன ஜோதிடம் இவற்றில் அவன் பட்டதிரிக்குச்
சமமாய் புகழ் பெற்றான்.
கணியாட்டியை விட்டுப் போன பட்டதிரி, காசி முதலாய சேத்திரங்களைத்
தரிசித்துப் பாண்டிய ராஜ்யத்தில் வந்து சேர்ந்தார். அங்கே ஒரு சூத்ர ஸ்த்ரீயை விவாகம்
செய்து அவள் மூலம் ஒரு புத்திரனையும் பெற்றார். அப்புத்திரன் பெயர் “உள்ளமடையான்” என்றும்
கூறுவர். அல்ல இது சரியில்லை, “உள்ளமடையான்” அவருடைய சிஷ்யன். பட்டதிரி வேறு விவாகம்
ஒன்றும் கழிக்கவில்லை. இது கட்டுக்கதையே என்றும் கூறுவர். என்றாலும் உள்ளமடையான் ஒரு
பிரசித்தி பெற்ற ஜோசியர் என்பது சரியே.
சிறிது நாள் கழிந்து பட்டதிரி, காசிவாசி வேஷத்தில் ஊர் திரும்பினார்.
>> இன்னும் வரும்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎன்றும் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன்
அருள வேண்டும்.
அவ்வாறே வேண்டுவோம்.
நீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க, வாழ்க!
நீக்கு//கணியன் அல்லது கணியார் என்பவர் தாழ்ந்த ஜாதியினர்//
பதிலளிநீக்குஇனிமையான, அழகிய பெயர் ஆனால் தாழ்ந்த ஜாதியாம்.
என்ன கொடுமை சரவணன் ?
அது அந்தக் காலம்.
நீக்குதற்போதும் அது obc பட்டியலில் உள் ஒதுக்கீடுடன் உள்ளது. கணியன் பூங்குன்றனார் என்ற சங்க புலவரை "யாதும் ஊரே யாவரும் கேளிர்" நினைவு வருகிறதா?
நீக்குநானும் அதையே சொல்ல நினைத்தேன். "தாழ்ந்த" ஜாதியில் பிறந்தவர் சொன்னதோ "யாதும் ஊரே யாவரும் கேளிர்". என்ன முரண் பாருங்கள்!
நீக்குஜாதி என்பது அந்தக் காலத்தில் இருந்ததாக என்னால் நம்ப முடியவில்லை. தொழில் முறையான குல வகுப்பை ஜாதி என்று பின்னாளில் திரித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன். சங்க இலக்கியங்களில் சாதி என்று ஒரு புத்தகம் பார்த்தேன் சமீப புத்தக விழாவில். ஒரு மண்ணும் இல்லை புத்தகத்தில் - சும்மாவேனும் நூறு பக்கம் எப்படியோ எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.
- அப்பாதுரை
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅப்பாதுரையின் கருத்து நூற்றுக்கு நூறு சரி. வர்ணம் வேறே. ஜாதி வேறே! ஜாதியெல்லாம் கடந்த 200/300 வருடங்களின் உருவாக்கியது தான். வர்ணாசிரமம் பற்றி நன்கு ஆழ்ந்து படித்தால் உரியும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குGood morninng everybody!
பதிலளிநீக்குகுட் மார்னிங் பெயரில்லா
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை நன்றாக பயணித்து கொண்டிருக்கிறது. அவர் மாறுதலாக என்ன முயற்சித்தும் பட்டதிரியின் ஜாதகத்தில் உள்ளபடி நடந்து முடிவது இறைவன் (விதி) சித்தம். அப்போதைய பரிகாரங்கள் என்பது நம் மனசந்தோஷத்திற்கு மட்டுந்தான் போலும்... மனித வாழ்வில் நடப்பதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்.?
மாற்று மொழி கதையை அப்படியே அதன் உருக்குலையாமல் தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதென்பது கடினமான செயல். அந்த கடினத்தை ஒரு பொருட்டாக நினையாமல், அதை சிறப்பாக நிறைவேற்றி எழுதி வரும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவர் எழுதி இங்கு பகிரும் இந்த கதைக்கும் நன்றி.
சென்ற பாகத்தில் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்த வார ஓவியத்தை கதைக்குப் பொருத்தமாக வரைந்து தந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி அம்மா.
நீக்குநன்றி.
நீக்குபடம் சிறப்பாக உள்ளது. ரொம்பவே மெனக்கெட்டு வரைந்துள்ளீர்கள். நன்றி. உதவியாளர் வந்தாச்சா?
பதிலளிநீக்குநன்றி. ஆம் வந்துவிட்டார்.
நீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குகதை தொடர்கிறேன்..... படத்துக்கு கண்ணைக் கவரும் நல்ல வண்ணங்கள் தருகிறார்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகதைக்கு அழகாக ஓவியம்.. கௌதமன் அவர்களது திதமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்..
பதிலளிநீக்குநன்றி, நன்றி!
நீக்கு// திதமைக்கு//
நீக்குதிறமைக்கு என்று கொள்ளவும்..
கொண்டோம்.
நீக்குபாவம் அந்த கணியாட்டி..
பதிலளிநீக்குமனசாட்சி எப்படியெல்லாம் வதைத்ததோ..
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குவணக்கம் , வாழ்க வளமுடன் !
நீக்குபட்டதிரி ஊர் திரும்பிய பின் நிலமை என்ன என்பதி தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
பதிலளிநீக்குகதைக்கு பொருத்தமாய் சார் ஓவியம் வரைந்து இருக்கிறார்.
நன்றி.
நீக்குகௌ அண்ணா ரொம்பப் பொருத்தமாகப் படம் வரைந்திருக்கீங்க! நல்லா வந்திருக்கு.
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குபட்டதிரி, கணியாட்டி - கேள்விகளுக்கு இடமில்லை! முதலிலேயே ஜெகே அண்ணா கதையைப் பற்றிய முன்னுரையில் சொல்லிவிட்டதால். கணியாட்டியின் கணவர் என்னானார்? அவருக்கு இது தெரியவந்ததா? சங்குண்ணி அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையோ.
பதிலளிநீக்குகீதா
ஐதீக மாலை என்பதே கதையின் பெயராக இருப்பதால் பட்டதரியின் கணிப்புகள் தன் ஜாதகக் கணிப்பு உட்பட நடந்ததாகவே கதையில் சொல்லப்படுகிறது என்பது தெரிகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
மூலத்தில் பல சங்கதிகளும் அப்படியே அந்தரத்தில் தான் உள்ளன. முதலில் பட்டதிரியின் பெயரே சொல்லப்படவில்லை. பட்டதிரியின் அந்தர்ஜனம் பற்றியோ, கணியாட்டியின் கணவர் மற்றும் அவர் மூலம் பெற்ற குழந்தைகள் பற்றியோ விவரம் ஏதுமில்லை. இந்தக் கதையின் ஐதீகம் பாழூர் படிப்புரை பிரஸ்னம் பொய்யாகாது என்ற நம்பிக்கையை வலுவூட்டதான்.
பதிலளிநீக்குவிளக்க உரைக்கு நன்றி.
நீக்குசுவாரசியமான கதை.
பதிலளிநீக்கு-அப்பாதுரை
ப ஆ சா நன்றி!
நீக்குஇந்தப் பகுதியும் படித்தேன். தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகதை மிக நன்றாகச் செல்கிறது. நடையும் அபாரம். பிறமொழிக் கதையை தமிழில் சொல்கிற மாதிரி இல்லாமல் அசல் எழுத்துப் போலவே இருப்பது தனிச் சிறப்பு. வாழ்த்துக்கள். இவ்வளவு நன்றாக எழுதுபவராகிய நீங்கள் அச்சு ஊடகத்துக்கு எழுதி அனுப்பலாம் என்று மீண்டும் சொல்கிறேன்.
பதிலளிநீக்குபதிவாசிரியர் கவனிப்பாராகுக
நீக்குஅருமையாய் வந்திருக்கு இந்த வாரமும். பட்டதிரிக்குக் கேடு சம்பவிக்கும் நாள் எனப் போட்டுவிட்டுப் பின்னர் கணியாட்டி மூலம் நல்லதொரு சத்புத்திரனல்லவோ கிடைத்திருக்கார்? இது எப்படிக் கேடாகும். ஆனால் பட்டத்திரிக்குக் கணியாட்டிக்குத் தன் மூலம் குழந்தை பிறக்கப் போவது முன் கூட்டியே தெரிந்திருக்கிறது. எனில் இப்படி நடக்கும் என்பதையும் அறிந்திருப்பார் அல்லவா?
பதிலளிநீக்குபட்டத்திரியும்/கணியாட்டியும் படம் அழகாக வரைந்திருக்கும் கௌதமன் சாருக்குப் பாராட்டுகள். பொதுவாக அந்தக் காலங்களில் பெண்களுக்கு நல்ல புத்திரன் பிறக்க வேண்டும் என்பதற்காக பிராமணர்களுக்கு நான்கு வர்ணப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். இங்கேயும் பட்டதிரிக்கு அப்படியே நடந்திருக்கோ?
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமலையாளத்தில் எப்படியோ தமிழில் "கணியர்கள்" எதிர்காலத்தைக் கணித்துச் சொல்வதாலேயே அந்தப் பெயர் பெற்றதாகச் சொல்லுவார்கள். இங்கே பட்டதிரியின் ஜோதிஷ அறிவும் சேர்ந்து கணியாட்டியின் பிள்ளை பெரும் பிரபலம் அடைந்திருப்பான் போல. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கேன். ஜேகே சாருக்குள் இத்தனை திறமை ஒளிந்திருப்பது இப்போத் தான் வெளி வருகிறது.
பதிலளிநீக்குவசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்!!!
நீக்குஆம்.
நீக்குஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!
நீக்குகொஞ்சம் யோசனையுடனேயே இந்தப் பதிவுக்கு வந்தேன். நல்லவேளையாக ஒண்ணும் இல்லை.
பதிலளிநீக்குநாங்கள் பிழைத்தோம்!
நீக்கு//.“பிராயஸ்ஸமாபன விபத்திகாலே தியோபி பும்ஸாம் மலினா பவந்தி” . //
பதிலளிநீக்குஇதற்கு அர்த்தம் இதுவரை யாரும் சொல்லவில்லை. சொன்னால் தெரிந்து கொள்ளலாம்
இளங்காலையில் கீழ்க்குலத்தில் இழிவான கர்ப்பம் உண்டாகும்
நீக்குவிளக்கம் அளித்ததற்கு நன்றி.
நீக்குமிக நன்றாகச் செல்கிறது. ரப்பர் மாதிரி தொடரும் போடுவது கடுப்படிக்கிறது. புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. ஜெ குமார் சார்.. பாராட்டுகள்
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு