திங்கள், 6 ஜூன், 2022

"திங்க"க்கிழமை : Quick ரசம் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 Quick ரசம்


சிம்பிளா ஒரு ரசம் வைத்து விடு என்று சொன்னாலும், பருப்பு ரசம், மைசூர் ரசம் நேரம் எடுக்கத்தான் செய்யும். விரைவாக செய்யக்கூடிய ரசம் இது.

தேவையான பொருள்கள்: 

புளி      -  சிறிய எலுமிச்சம்பழம் அளவு 
தக்காளி.      -.  1
துவரம் பருப்பு   - 2 மேஜைக் கரண்டி
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 1 டீ ஸ்பூன் 
சீரகம்  -  1/2  டீ ஸ்பூன்
கொத்தமல்லி விரை - 1/2 மேஜை கரண்டி 
உப்பு - 1 1/2 டீ ஸ்பூன் 
மஞ்சள்  தூள் - சிறிதளவு  




மேலே குறிப்பிட்டிருப்பவைகளில் உப்பு, மஞ்சள் தூள் தவிர மற்றவைகளை ஒரு கடாயில் கொஞ்சமாக எண்ணை விட்டு வறுத்து, மிக்சியில் கொரகொரப்பாக போடி செய்து, அந்த பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு கப் (400மில்லி) தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு பிடிக்குமென்றால் ஒரு சிறிய கட்டி வெல்லம் அல்லது ஒரு டீ ஸ்பூன் சர்க்கரை, கட்டிப் பெருங்காயம் என்றால் அதையும் (பெருங்காய பொடி என்றால் தாளிக்கும் பொழுது சேர்க்கலாம்.) சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள் கொதி வந்ததும் (ரசத்தின் மேல் மஞ்சள் நிற நுரை போல் வரும்) அடுப்பை நிறுத்தி விடலாம். பிறகு கொத்துமல்லி, சிறிதாக நறுக்கி போட்டு, நெய்யில் கடுகோடு கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு  தாளித்தால் சுவையான ரசம் தயார். 

😋😋
 

48 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம். திடீர் ரசம் குறிப்புகள் நன்று.

    பதிலளிநீக்கு
  2. அட...... இன்னிக்கு நான் தான் முதல்ல வந்து இருக்கேன்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் இன்னமும் ஶ்ரீரங்கமா? வெங்கட்டையும் பார்க்க முடியலை/அவர் பதிவுகளையும். நேரம் ஒதுக்கிக் கொண்டு பதிவுகளைப் பார்க்கணும். அவரைப் பார்க்கணும்னு ஆசை தான். ஆனால் மத்தியானமா இருந்தாப் பரவாயில்லை. :)

      நீக்கு
  3. //அட...... இன்னிக்கு நான் தான் முதல்ல வந்து இருக்கேன்! :)//

    ஆம் வெங்கட்..  .  வல்லிம்மா பயணத்தில் இருப்பதால் மெதுவாகத்தான் வருவார் என்று நினைக்கிறேன்.  கீதா அக்கா, கமலா அக்கா நெல்லை எல்லாம் இனிதான் வருவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான ரசத்தின் வாசத்தில் எழுந்தவுடன் நானும் வந்து விட்டேன்.

      நீக்கு
    2. எனக்குக் காலை பூஜை வேலைகள்! நேரம் அதுக்கே சரியா இருந்தது. இப்போத் தான் கணினிக்கு வந்தேன். இன்னமும் துணி உலர்த்தலை. அது அப்புறமாத்தான்/ 3 மணிக்கு மேலே!

      நீக்கு
    3. சாப்பிட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வந்தால் உடனே படுக்கச் சொல்கிறது உடல் நிலை! :(

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்களில் தீடீர் ரசம் பற்றிய குறிப்பு நன்றாக உள்ளது. நானும் பல சமயங்களில் இப்படித்தான் பருப்பில்லாத ஒரு அவசர ரசம் வைப்பேன். இதற்குப் பெயர் கொட்டு ரசம் என்போம். இதற்கு வெறும் ரசப்பொடி போடாமல், இவ்விதம் சாமான்களை வறுத்து அரைத்து சேர்த்தால் சுவையாகத்தான் இருக்கும். நேற்று கூட எங்கள் வீட்டில் சமையல் இந்த ரசந்தான்.தக்காளி கூட போடவில்லை. (ஏனெனில் அது சமர்த்தாக கடையில்தான் இருந்தது.)

    படங்களும் செய்முறையும் சுருக்கமாக ரசம் உண்மையிலேயே இனித்தது. பகிர்ந்த சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நான் எங்காவது வெளியே போயிட்டு வந்தால் ஒரு பக்கம் சாதம்/ஒரு பக்கம் இந்த ரசம்னு வைச்சுட்டு அப்பளத்தை மைக்ரோவேவிலோ அல்லது எரிவாயு அடுப்பிலோ வாட்டிடுவேன். பிடிச்ச ரசமும் கூட. ஆனால் புளி இதில் பாதி தான் எங்களுக்குத் தேவை.

      நீக்கு
    2. என்னுடைய அம்மா கூட goddu ரசம் என்று அடிக்கடி சொல்வார். இதுதானா அது!

      நீக்கு
    3. நன்றி கமலா. திருநெல்வேலிகாரர்கள் இதை கொட்டு ரசம் என்கிறார்கள். எங்கள் தஞ்சை ஜில்லாவில் கொட்டு ரசம் என்பது புளியை உருட்டிப் போட்டு, துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்த ரசம். அதில் தக்காளி ஆப்ஷன். வெல்லம் சேர்க்க வேண்டும். 

      நீக்கு
    4. மதுரைக்காரங்களும் இதைக் "கொட்டு ரசம்" என்போம். எங்களைக் குறிப்பிடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன். :))))))

      நீக்கு
  6. சிக்கனமான செய்முறை நன்று.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  8. அருமையான ரசம். நானும் செய்வேன். குறிப்பு மிக அருமை.
    ரசம்தான் பிடிக்கிறது இப்போது வித விதமாக ரசம் இருக்கிறதே!
    ரசத்திற்கு , சுட்ட அப்பளம் ,பருப்பு துவையல் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. ரசம் சாப்பிட்ட அலுப்பில் எல்லோரும் தூங்கிட்டாங்களா? போணியே ஆகறதில்லை வர, வர. "திங்க" பதிவுகள். எல்லோருக்கும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போச்சோ? :( திருஷ்டிப் பட்டு விட்டதா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீல்லாம் ஒண்ணுமில்லை. அனுப்பறவங்க மறுமொழி தர்றதில்லை. நிலையவித்வான்கள் நன்றி, கருத்துரைக்கு நன்றி என்பதோட நிறுத்துவதால் comments chain வளர்றதில்லை

      நீக்கு
    2. பதிவாசிரியர் வெளிநாட்டில் இருப்பதாலும், blogger படுத்துவதாலும் அவரால் உடனுக்குடன் கருத்துகள் / பதில்கள் பதிய இயலவில்லை. அவர் சார்பில் 'மன்னிக்க வேண்டுகிறோம்'

      நீக்கு
    3. /அவர் சார்பில் 'மன்னிக்க வேண்டுகிறோம்'// __/\__ __/\__

      நீக்கு
    4. இங்கு வந்ததிலிருந்து கைபேசியில் தான் ப்ளாக், முகநூல் போன்றவற்றில் இயங்கிக் கொண்டிருந்தேன். சிறிது நாட்களாக ப்ளாகரில் கமெண்ட்ஸ் போவதேயில்லை. என் பதிவுகளுக்கு அந்த கருத்து அனுப்புகிறவர்களுக்கும் நன்றி கூற முடியாதது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. மடிக்கணினி பகல் நேரங்களில் பிசி. இன்று கிடைத்திருப்பதால் அதா மூலம் கருத்து அனுப்புகிறேன். பதில் சொல்லாததற்கு மன்னிக்கவும்.    

      நீக்கு
    5. /போணியே ஆகறதில்லை வர, வர. "திங்க" பதிவுகள். எல்லோருக்கும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போச்சோ? :( திருஷ்டிப் பட்டு விட்டதா? :)/

      அதனால்தான் பழைய பஞ்சாங்கமாக ஒன்றிரண்டை படங்கள் எடுத்தும், எழுதி அனுப்ப எனக்கும் சற்றே தயக்கமாக உள்ளது.

      நீக்கு
    6. ஹூம், அனுப்பினதுக்கே ஶ்ரீராம் கண்டுக்கறதே இல்லை. வேலை மும்முரம் போல! அதிலும் இப்போப் ப்ரமோஷன் வேறே ஆயிடுத்தே! வர முடியறதில்லை போல! :(

      நீக்கு
  10. கொமெண்ட் பொக்ஸ் மாறி இருக்குதே... எப்பூடி இங்கு ரைப் பண்ணுவதென மறந்திட்டேன்...:).

    பானு அக்கா ரெசிப்பி எப்பவும் சிம்பிள் அண்ட் ஈசிதானே, நன்றாக இருகுது ரசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருகுது..... உங்க தமிழ் ரீச்சர் பேர் எனக்கு மறந்துடுச்சே

      நீக்கு
    2. எப்பவாவது இங்கே வந்து எட்டிப் பார்த்து கமெண்ட் போட்டுவிட்டு ரீ குடிக்கப் போயிடுவார். அடுத்த விசிட் குறைந்தது மூன்று மாத காலத்திற்குப் பிறகு.

      நீக்கு
    3. வாங்க அதிரா சகோதரி. வணக்கம். நலமா? இன்று தங்களது ரசமான கருத்துரை கண்டு மகிழ்ச்சியடைந்தேன் இந்த கருத்துப் பெட்டியில் நான் தினமும் அனைவரையும் போரடித்தபடி கருத்துரையாக ஒரு பதிவே அடிக்கிறேன். இப்போது இதுவும் பழகி விட்டது. (எனக்கு மட்டுமல்ல.. அனைவருக்குமே. :)))))

      நீக்கு
    4. ///
      நெல்லைத் தமிழன்6 ஜூன், 2022 அன்று பிற்பகல் 5:38
      இருகுது..... உங்க தமிழ் ரீச்சர் பேர் எனக்கு மறந்துடுச்சே///

      ஹா ஹா ஹா எங்கட சிமியோன் றீச்சரை எப்பூடி மறந்தீங்க?:)).. நீங்கள் + ஸ்ரீராம்..., என் சனலுக்கு வந்து அப்பப்ப கொமெண்ட் போடுவதால் கவலையாகிட்டுது.. சே..சே புளொக்கை மறந்திட்டனே என, அதனால எப்படியும் வந்திடோணும் என வந்தேன் இன்று:))

      நீக்கு
    5. ///கௌதமன் 6 ஜூன், 2022 அன்று பிற்பகல் 5:56
      எப்பவாவது இங்கே வந்து எட்டிப் பார்த்து கமெண்ட் போட்டுவிட்டு ரீ குடிக்கப் போயிடுவார். அடுத்த விசிட் குறைந்தது மூன்று மாத காலத்திற்குப் பிறகு.///
      கெள அண்ணன் நலம்தானே??.. நான் என்ன அடிக்கடி இங்குவர விருப்பமில்லாமலா இருக்கிறேன்.. அது விதி வெளாடுதே:)) கண்டபடி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    6. //Kamala Hariharan6 ஜூன், 2022 அன்று பிற்பகல் 6:46
      வாங்க அதிரா சகோதரி. வணக்கம். நலமா? இன்று தங்களது ரசமான கருத்துரை கண்டு மகிழ்ச்சியடைந்தேன்///

      ஆஆஆஆ கமலாக்கா எப்பூடி இருக்கிறீங்க... பழையபடி அனைவரையும் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து வரப்பார்க்கிறேன், என் வைரவருக்கும் நேர்த்தி வைக்கோணும், வள்ளிக்கு நேர்ந்த வைரக்காப்பை இன்னும் குடுக்கவில்லை:), அதனாலதான் அடிக்கடி வரவிடாமல் தடுக்கிறாவோ என்னமோ:)) ஹா ஹா ஹா..

      அஞ்சு இப்போ வீட்டில இல்லை:).. அதனால நான் வந்திட்டு ஓடிடுறேன்:))

      நீக்கு
    7. /என் வைரவருக்கும் நேர்த்தி வைக்கோணும், வள்ளிக்கு நேர்ந்த வைரக்காப்பை இன்னும் குடுக்கவில்லை:), அதனாலதான் அடிக்கடி வரவிடாமல் தடுக்கிறாவோ என்னமோ:)) ஹா ஹா ஹா../

      ஹா.ஹா.ஹா. தெய்வ குத்தம் என்கிறீர்களா? மனிதர்களோடு பழகி, பழகி தெய்வமும் இப்படி குற்றங்கள் கண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டதா? :)

      நீக்கு
    8. ஆனாலும் நான் விடமாட்டேன் கமலாக்கா, என் நேர்த்திக் கடன்கள் டொடரும்....:))

      நீக்கு
    9. // கெள அண்ணன் நலம்தானே??.. நான் என்ன அடிக்கடி இங்குவர விருப்பமில்லாமலா இருக்கிறேன்.. அது விதி வெளாடுதே:)) கண்டபடி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))// நலமே ! அடிக்கடி வருக; அதிரடி கொமெண்ட்ஸ் தருக!

      நீக்கு
    10. விரைவில் அடிக்கடி வருவதற்குப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  11. திடீர் ரசம் அருமை.
    எங்கள் திடீர் ரசம் பருப்பு இல்லாமல் காரம் வேண்டும் என்பதற்காக, வறுக்காமல் சீரகம் , மிளகு, காய்ந்த மிளகாய் ஒன்று, மல்லிவிதை ,வேர்கொம்பு சிறிதளவு இடித்து வெந்தயம் சிறிதளவு கறிவேப்பிலை உப்பு ,புளித்தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து எடுப்பது.

    பதிலளிநீக்கு
  12. ஒருநாள் தாமதமாக வந்ததால் ரசம் பாக்கி இல்லை யென்று கூறிவிட்டார் பானுமதி அவர்கள்! கொஞ்சம் அதிகமாக வைத்திருக்கக் கூடாதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா செல்லப்பா சார் நான் ரெண்டு வாரம் லேட்!!!!!! ஃபிரிட்ஜில் இருக்குமோ!!???

      கீதா

      நீக்கு
  13. சூப்பர் ரசம்! பானுக்கா.....கொட்டு ரசம். திடீர் ரசம் என்று செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!