திங்கள், 13 ஜூன், 2022

வெந்தய தோசை - சியாமளா வெங்கட்ராமன் ரெஸிபி

 

வெந்தய தோசை உடலுக்கு மிகவும் நல்லது. 

மிகவும் ருசியானது; செய்வதும் எளிது. 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் சர்க்கரை குறைய வாய்ப்பு உண்டு. 

தேவையான பொருட்கள் : 

1) புழுங்கல் அரிசி....1 கப்
2) உளுந்து......…...1 கைப்பிடி
3) வெந்தயம்.........1 டேபிள் ஸ்பூன்
4) எ ண்ணெய்.... தேவையான அளவு
5) உப்பு தேவையான அளவு

செய்முறை : 

அரிசி உளுந்து வெந்தயம் இவைகளை நன்றாகக் கழுவி, தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  பிறகு அவைகளை ஒன்றாகப் போட்டு மைய அரைக்க வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி,  தேவையான உப்புப் போட்டு, நன்றாக கலக்கி வைக்க வேண்டும். 

அடுத்த நாள் அதை தோசை வார்க்க மிகவும் ருசியாக இருக்கும். அரைத்த அன்றே செய்தாலும் ருசியாக இருக்கும். 

சைட் டிஷ் ஆக சாம்பார் / சட்னி / இட்லி மிளகாய் பொடி ஆகியவை நன்றாக இருக்கும்.
= = = =

28 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய திங்களில் அருமையான செய்முறையில் அமைந்த வெந்தய தோசை பகிர்வு. சகோதரிக்கு வாழ்த்துகள். அடிக்கடி இதை செய்து சுவைத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 4. வெந்தய தோசை படங்கள், செய்முறை சொல்லிய விதம் எல்லாம் அருமை.
  வெந்தய தோசைக்கு தக்காளி சட்னியும் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. சுருக்கமாக சொல்லிய விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். தொற்றுப் பரவிக் கொண்டிருக்கும் செய்திகள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. அனைவரும் கவனமாக இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 7. வெந்தய தோசை செய்முறை இப்படியும் பண்ணலாம். உளுந்தே சேர்க்காமலும் பண்ணலாம். உளுந்து சேர்த்தாலும் வெந்தயம் இன்னமும் கொஞ்சம் கூடப் போடுவோம். வெந்தயத்தைத் தனியாக நனைச்சு அதை முதலில் அரைத்துக் கொள்ளுவோம். பொங்கப் பொங்க வந்ததும் அரிசி+உளுந்தை அல்லது அரிசியைச் சேர்ப்போம். உளுந்து சேர்க்கலைனா வெந்தயம் ஒரு கைப்பிடியாவது தேவைப்படும். இந்த தோசையை 2,3 விதங்களில் பண்ணலாம். அதில் இதுவும் ஒரு விதம். எனக்கு வெந்தய தோசைக்கு வெங்காயச் சட்னி தான் பிடிக்கும். எனக்கு மட்டும் தனியாக அரைச்சுக் கொண்டால் உண்டு. :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெந்தயத் தோசைக்கு, புளிமிளகாய் நல்ல காம்பினேஷன்... என்னவோ கீசா மேடத்துக்கு அது மட்டும் நினைவுக்கு வருவதில்லை.

   நீக்கு
  2. என்னோட ருசிக்குப் புளி மிளகாய், புளி இஞ்சி எல்லாம் அன்றே அரைத்து அப்போதே வார்க்கும் கல் தோசை எனப்படும் புளியா தோசைக்குத் தான் ஏற்றது. வெந்தய தோசைக்கு மாவு புளிக்கணும். புளித்த மாவில் வார்க்கும் தோசைகளுக்குக் காரமான தக்காளி./வெங்காயச் சட்னிகள் எனக்குப் பிடிக்கும்.

   நீக்கு
 8. பச்சரிசியில் வெந்தய தோசை பண்ணினால் அதோடு கூட அவலும் சேர்ப்பார்கள். உளுந்தும் சேர்த்தால் நாலுக்கு ஒண்ணு என்னும் அளவில் உளுந்து போட்டுவிட்டு அரைக்கிண்ணம் வெந்தயம், ஒரு கிண்ணம் அவல் ஊற வைச்சு அரைக்கையில் சேர்க்கலாம். தோசை வார்த்தால் மேலே ஓட்டை போட்டுக்கொண்டு வரும். ஓரங்கள் முறுகலாகவும் நடுவில் மெத்தென்றும் வரும். கொஞ்சம் கனமாகவே வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த ஊர்ல செட் தோசை (3 இருக்கும்) நீங்க எழுதியிருப்பதுபோலவே தருவார்கள். பார்சல் கொண்டுவந்தால் சாப்பிடச் சகிக்காது. அங்க சாப்பிட்டால் நல்லா இருக்கும். ஆனா பாருங்க, தொட்டுக்க சட்னிலாம் எனக்குப் பிடிக்காது.

   நீக்கு
  2. இங்கேயும் செட் தோசை உண்டு. நான் எழுபதுகளிலேயே ஆழ்வார்ப்பேட்டையில் அண்ணா இருந்தப்போ ஆழ்வார்ப்பேட்டை டர்னிங்கில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டிருக்கேன். செட் தோசை எனில் குருமா தான் கொடுப்பாங்க. சட்னி எல்லாம் கொடுத்துப் பார்த்தது இல்லை. இப்போவும் குருமா அல்லது வடகறி கொடுப்பதாகக் கேள்விப் பட்டேன். செட் தோசை எனக்குப் பிடிக்காது. மாமாவுக்கும்.

   நீக்கு
  3. இந்த ஊரில் பிடிக்காத்து பூரிக்குத் தரும் சாகு தான் குருமா போல இருக்கும் நான் பால்லியா எனப்படும் மசால் வாங்கிக்கொள்வேன். சாம்பார்னா நம்ம ஊர் சாம்பார்தான்.

   நீக்கு
 9. யாரானும் வந்து என்னடா இது! இவங்க சும்மாவே இருக்க மாட்டாங்களானு கேட்கும் முன்னர் ஓடிடறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா இருக்கறதுனாலத்தானே இங்க கருத்து போட்டிருக்கீங்க. இல்லைனா பதிவைப் படித்த உடன், வெந்தயத் தோசைக்கு ஊறவைத்துவிட்டுத்தானே இங்க வந்மிருப்பீங்க. இன்று நான் கரண்டி பிடிக்கறேன். பையனுக்கு உணவு தயார் செய்யணும். பிறகு வருகிறேன்.

   நீக்கு
 10. இந்த வாரத்திலிருந்து நானும் ஏதாவது எழுதி அனுப்பிடறேன். ஏதேனும் நாளில் வெளியிடும்படியாக.

  பதிலளிநீக்கு

 11. அம்மா இருந்தப்ப பண்ணி தருவாங்க..... எல்லா தோசையும் ஞாபகத்தில் இருக்கு ஆனால் இந்த தோசை மட்டும் எப்படி மறந்து போனது என்பது புரியவில்லை. 27 வருடங்களுக்கு முன்னால் சாப்பிட்டது அதற்கு பின் இன்றுதான் கேள்வி படுகின்றேன் பதிவிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 12. பேப்பர் தோசை செய்வதற்கு வெந்தயம் தேவை... சர்க்கரை கட்டுப்படலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேப்பர் தோசை பண்ண வெந்தயம் ஒரு தேக்கரண்டி போதும். இந்த தோசைக்கு ஒரு கைப்பிடி வெந்தயம் கூடச் சரியாக இருக்கும். சாதாரணமாக தோசைக்கு அரைக்கையில்/இட்லிக்கு அரைக்கையில் உளுந்தோடு சேர்த்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போடுவது உண்டு. சிலர் பொன்னிறம் வருவதற்காக இதோடு ஒரு தேக்கரண்டி துவரம்பருப்பும் சேர்ப்பார்கள். தோசைக்கு நிறம் கொடுக்கும். வடை போன்றவற்றிற்கு நிறம் கொடுக்கக் கூடத் து.பருப்புக் கொஞ்சம் சேர்த்தால் போதும்.

   நீக்கு
  2. கட்டாயம் துவரம் பருப்பும் கொஞ்சம் வெந்தயம் அதிகமாகச் சேர்த்து கொட கொட என்று அரைத்து மறுநாள் ஊத்தப்பம் மாதிரி நிறைய எண்ணெய் விட்டு செய்தால் அதுவும் ருசியோ ருசியோ ருசி பத்திய தோசை என்றும் சொல்லலாம் அன்புடன்

   நீக்கு
  3. ஆமாம் அம்மா. து.பருப்புச் சேர்த்த வெந்தய தோசை இங்கே போணி ஆகலை! :)))) ஓரிரு முறை மாறுதலுக்குப் பண்ணினேன். பின்னர் தொடரலை. :)

   நீக்கு
 13. நானும் வெந்தய தோசைக்கு ஒரு கை வெந்தயம் போட்டு,உளுந்தை குறைவாக போடுவேன். கீதா அக்கா சொன்னது போல ஓட்டை போட்டுக் கொண்டு மெத்து மெத்தென்று நன்றாக இருக்கும். தொட்டுக்கொள்ள தக்காளி,வெங்காயம் சட்னி நன்றாக இருக்கும். 

  பதிலளிநீக்கு
 14. கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி இதுபோல் தங்கள் தங்கள் கருத்துக்களை எழுதினால் என் பதிவுகளை எழுதுவதற்கு ஆர்வம் ஏற்படும் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்களை எழுதும் எல்லோருக்கும் ஒரு வெந்தைய தோசை அனுப்பிவைப்பீர்களா?

   நீக்கு
 15. வெந்தயத் தோசை நனறாக உள்ளது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!