செவ்வாய், 7 ஜூன், 2022

சிறுகதை : உதிரிப்பூ - துரை செல்வராஜூ

 உதிரிப் பூ

துரை செல்வராஜூ

************
" பூசாரி.. ஏ.. பூசாரி... எதுக்கு வாட்டமா இருக்கே?.. "

முன் மண்டபத்தின் தூண் ஓரமாக தலை குனிந்தவாறு அமர்ந்திருந்த பூசாரியார் நிமிர்ந்து பார்த்தார்..

கோயில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கும் ஆத்தாளின் ஆதங்கமான விசாரிப்பு..

ஆத்தாளின் அந்தக் கேள்வியிலும் நியாயம் இருக்கின்றது..

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான் காரை வீட்டுக் காரர்கள் பேத்தியைத் தூக்கிக் கொண்டு சொந்த பந்தம் சூழ வந்து மாரியாத்தாளுக்கும் பேச்சியம்மனுக்கும் வீரனுக்கும் புது வஸ்திரம் எடுத்து வைத்ததோடு பொங்கல் பூசை என்று கொண்டாடி விட்டு பூசாரி கையில் புது வேட்டி துண்டும் தாம்பூலத்தில் நூறு ரூவா பணமும் வச்சுக் கொடுத்துட்டுப் போனார்கள்..

அவங்க வந்து விட்டுப் போனதில் ஆத்தாளுக்கும் நல்ல ஏவாரம்..

காரை வீட்டுக் காரங்க பொண்ணுக்கு மாங்கலியம் ஆகி வருசம் ஆகறதுக்கு இன்னும் ஒரு மாசம் பாக்கியிருக்கு.. இவ்வளவு சீக்கிரமா பாட்டி ஆனதுல அவங்களுக்கு ரொம்பவும் சந்தோசம் - எந்தக் கொறையும் இல்லாம வம்சம் விளங்கி இருக்குது!.. ன்னு..

இருக்காதா பின்னே!..

காலாகாலத்துல வயிறு வாய்க்கலை.. ன்னா - தொளைச்சு எடுத்துவாளுங்களே சம்பந்தி வீட்ல..  

அந்தக் காலத்துல  இவங்க காரை வீட்டு மாப்பிள்ளைக்கு வாக்கப்பட்டு வந்து  - நாலு வருசம் கழிச்சுத் தான் வயிறு திறந்திச்சு..

அதுக்குள்ளாற -  " பாளையத்தான் மகளக் கொண்டாந்து கட்டி வைக்கப் போறேன்.. ன்னு!.."  - மாமியார் கிழவி ஆடுன ஆட்டம் இருக்கே...

அடடா... அந்த அம்மனுக்கே பொறுக்காது... கண்ணீரும் கம்பலையும் சொல்லி முடியாது..

அந்த மாதிரி எல்லாம் இல்லாம தன்னோட பொண்ணு சட்டுபுட்டுன்னு வாயும் வயிறுமா ஆகி நல்லபடியா புள்ளயும் பெத்துக் கொடுத்ததுல ஏகத்துக்கும் நிம்மதி...

பதினாறாம் நாள் பேர் வச்சி  கூடத்துல  தொட்டில் கட்டி புள்ளைய போட்டதும் அன்னைக்கு ராத்திரி - அரிசி அடை , உப்பு கொழுக்கட்டை அவிச்சு வெள்ளைப் பொங்கல் வச்சி வகை வகையா அசைவம் ஆக்கி பேச்சியம்மா, காடேறியம்மா இவங்களுக்கு சாம்பிராணி போட்டு புள்ளைக்கு மை பொட்டு வைப்பாங்க..

அதுக்கப்புறம் இங்கே  கோயிலுக்கு வந்து மாரியம்மனுக்கும் பேச்சியம்மனுக்கும் வீரனுக்கும் அர்ச்சனை செஞ்சுட்டு அம்பாள் காலடியில புள்ளையப் போட்டு எடுத்துட்டா பெரிய சந்தோசம்..

மூணு சாமிகளும் கூடி நின்னு புள்ளயப் பாதுகாத்து கரையேத்துவாங்க!.. ன்னு அசைக்க முடியாத நம்பிக்கை..

கோயிலுக்குப் பின்னால இலுப்ப மரத்துக் கீழ  வச்சு அசைவம் சமைச்சு பேச்சியம்மனுக்கு பூசை போட்டுக்கிட்டு இருந்த சம்பிரதாயம் எல்லாம் ஒரு அடிதடி, கைகலப்பு ரத்தக் களறியால நின்னு போச்சு.. பஞ்சாயத்து கூடி முடிவு ஆனது -  கறி விருந்து எல்லாம்  அவங்க அவங்க வீட்டுல வச்சுக்குங்க.. சாராயம் குடிச்சுட்டு ஒரு பயலும் இந்தப் பக்கம் வரக் கூடாது.. ன்னு..

பேச்சியம்மனும் சிரிச்சுக்கிட்டா..

கிளித்தோப்பு மகமாயி இந்த வட்டாரத்துல பிரசித்தம்..
கோயிலச் சுத்தி ஆறேழு இலுப்பை மரங்க.. அதுல  நூத்துக் கணக்கான கிளிப் புள்ளங்க நிரந்தர வாசம்..
அதனால தான் கிளித் தோப்பு.. ன்னு பேரு..

கோயில் கூட ரொம்ப காலத்துக்கு சாதாரண ஓட்டு வீடாகத் தான் இருந்தது.. எழுவது வருசத்துக்கு முன்னால இந்த ஊர்ல இருந்து மலேசியாவுக்குப் போயி - தங்கம் வைரம் கார் பங்களா.. ன்னு விருத்தியான குடும்பம் திரும்பி வந்து நல்ல விஸ்தாரமா எடுத்துக் கட்டி  கும்பாபிசேகம் செஞ்சு கொடுத்துட்டுப் போனாங்க.. ரெண்டு வருசம் ஆகுது..

மூலஸ்தானத்துல மாரியம்மன் சிலா ரூபம்.. அம்மனுக்கு அருகிலேயே பாலகணபதி.. முன் மண்டபத்துல வடக்கு பார்த்த மாதிரி அஞ்சடி உசரத்துக்கு பேச்சியம்மன்.... சுண்ணாம்பு அரைச்சு செஞ்ச அலங்கார ரூபம் .. எதிர்த் திசையில வீரன், சங்கிலியான், காடேறியம்மன்.. சங்கிலியானுக்கும் காடேறியம்மனுக்கும் ரூபம் கிடையாது.. சூலம் அரிவாள் படிமானம் தான்.. ஊர் நம்பி இருக்கிறது இவங்களத் தான்...

" என்ன பூசாரி... ஒன்னும் பேசாம இருக்கே!.. "

" நானே நொந்து போய் இருக்கேன்.. நீ வேற ஏன் ஆத்தா!.. "

பூசாரியாரின் குரல் உடைந்திருந்தது..

" ஊர்ப் பிள்ளைகள் எல்லாம் மஞ்சள் குங்குமம் தாங்கியதோடு மடிப் பிள்ளையும் ஏந்தி வந்து வெளக்கேத்தி வைச்சுட்டு போறப்ப  நாலு வருசமா வாடி வதங்கிக் கெடக்கிறாளே எம் மக.. அவள மட்டும் இந்த ஆக்கினைக்கு ஆளாக்கி வச்சிருக்கியே!.. " - ன்னு ஆதங்கம் அம்பாளிடம்..

தனக்கு இன்னும் பேரப்பிள்ளை வாய்க்கவில்லையே என்ற வேதனை அவருக்கு..

உள்ளங்கையில் வெற்றிலை சீவலுடன் துளி சுண்ணாம்பை வைத்துக் கசக்கி அப்படியே அதை வாயில் போட்டுக் கொண்ட ஆத்தா கொண்டையை அவிழ்த்து உதறி விட்டு மறுபடியும் முடிச்சுட்டுக் கொண்டார்கள்..

" நாலஞ்சு வருசத்துக்கு முன்னால.. ஞாவுகம் இருக்கா பூசாரி!.. காத்தமுத்து மவளை வெரட்டி விட்டியே!.. "

சாட்டையடி விழுந்த மாதிரி இருந்தது பூசாரியாருக்கு..
நினைவுகள் பின்னோக்கி ஓடின..

அன்றைக்கு சாயங்காலம் நாலரை மணிக்கு நடை திறந்து வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பூசாரியார் -  எதிரில் வந்து நின்ற சிறுமியை ஏறிட்டு நோக்கினார்..

கிழிந்த சட்டை .. அழுக்கான பாவாடை...

கையில் வெள்ளைத் துணி முடிச்சு ஒன்று..


" என்னா வேணும்?.. "

குரலில் அதிகாரம்..

 ' கையில் என்ன அது முடிச்சு?.. ' - என்று கண்கள் கேட்டன..

" முல்ல அரும்பு.. ங்க..  சாமிக்கு.. "

" உதிரிப் பூவா?.. "

" ஆமாங்க.. " -  ஏழைச் சிறுமியின் குரலில் நடுக்கம்...

" உதிரிப் பூவ அள்ளிப் போட்டுட்டு காலைல யாரு கூட்டி அள்றதாம்?.. "

" இல்லீங்க.. இந்த அரும்பு முடிச்ச அப்படியே பேச்சியாயி மடியில வச்சிடணும்.. அவ்வளவுதான்.. "

" மடியில வச்சா?.. "

" மடியில வச்சா.. அரும்பு மலர்ற மாதிரி பேச்சியாயி மனசு குளுந்து எங்க  அக்கா வயித்து வலி சரியாப் போகுமாம்.. "

" இப்படியெல்லாம் யாரு கிளப்பி விட்டது?.. "  பூசாரியார் குரலில் ஏளனம்..

" அந்த வாத்தியார் அண்ணன் சொன்னாங்களாம்.. "

" அவங்க சொன்னாங்க.. இவங்க சொன்னாங்க.. ன்னு வந்துடறது வேற வேலை இல்லாம!.. போ.. போ!.. " - சீறி விழுந்தார் பூசாரியார்..

" உங்களுக்கு கஷ்டமில்லாம நானே வச்சிட்டுப் போயிடறேன்!. "  - சிறுமியின் குரல் தழுதழுத்தது..

" என்னது நீயா?.. '  - கோபம் மூண்டெழ அவரது கண்கள் எதையோ தேடின..

அச்சத்துடன் அந்தச் சிறுமி அங்கிருந்து நகர்ந்த வேளையில் பூ விற்கும் ஆத்தாவின் குரல்..

" நில்லு புள்ளே... அதை எங்கிட்ட கொடு.. நான் வைக்கிறேன்.. "

" ஏ.. ஆத்தா.. ஆடு பகை.. குட்டி உறவா?.. "  சத்தம் பலமாக இருந்தது..

அந்தச் சிறுமி அங்கிருந்து போய் விட்டாள்..

அன்று ஆணவத்தின் உச்சியில் ஆடிக் கொண்டிருந்த பூசாரியார் இன்று காலம் அடித்த அடியின் வலி தாள முடியாமல் அழுது கொண்டிருந்தார்..

" ஆத்தா!.. என்ன மன்னிச்சுடும்மா!.. " கருவறையை நோக்கி ஓடினார்..

" பூசாரி!.. நான் அன்னைக்கே அந்த  அரும்பை எல்லாம் சரமாத் தொடுத்து பேச்சியாயிக்கு போட்டுட்டேன்!.. உதிரிப் பூவா போட்டாத்தான் உனக்குக் கஷ்டமாச்சே.. இப்போ காத்தமுத்து மவளும் கையில ஒன்னு.. கருவுல ஒன்னு.. ன்னு  சந்தோசமா இருக்கா!.. "

பூக்கார ஆத்தாவின் குரல் தெளிவாக இருந்தது..

*** 

67 கருத்துகள்:

  1. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது..

    குறள் இனிது..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    இன்று எனது படைப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அழகு செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. மனதை நெகிழ வைத்தது கதை.

    பலரும் இப்படித்தான் ஆட்டம் போட்டு பின்னர் அடங்குகின்றனர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  5. இளமையில் ஆட்டம். அனுபவம் வந்து அதனை நினைத்து வருந்தச் செய்கிறது.
    நல்ல கதையமைப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை/மதியம் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் தொற்றுப் பரவாமல் அந்த மாரியம்மனே காப்பாற்றட்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  7. இன்னைக்கு இந்தப் பதிவுக்கு வரதா இல்லை. ஆனால் அந்த மாரியம்மன் வரவழைச்சிருக்கா. கோயிலின் வர்ணனை எங்க ஊர்க்கோயிலை (பரவாக்கரை மாரியம்மன் கோயில்) நினைவூட்டுகிறது. அங்கேயும் இப்படித் தான் பேச்சியம்மன் நின்று கொண்டிருப்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  8. அர்த்தமுள்ள கதை. கோயிலில் அம்மனை வழிபட்டு பக்தர்களுக்கு உதவி செய்யும் பூசாரிகள் வேறுபாடு காட்டக் கூடாது என்பதை மறைமுகமாகச் சொல்லி இருக்கார் தம்பி துரை. ஆனால் அந்தச் சமயம் யாருக்கு இதெல்லாம் புரிகிறது! என்றாலும் தவறை உணர்ந்து விட்டதால் மாரியம்மனின் அருள் விரைவில் கிட்டும். அழகாய்ப் படம் வரைந்திருக்கும் திரு கௌதமன் சாருக்கும் வாழ்த்துகள்/பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. இதைக் கதை என்றே சொல்லவேண்டாம். இது போன்ற நிகழ்ச்சிகள் பல ஊர்களில் நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். பூசாரிகளின் அகம்பாவத்தால் அவர்களின் குடும்பங்கள் வம்சம் இல்லாமல் அழிவதும், மனதைத் திருத்திக்கொண்டவர்களின் வாழ்வு மலர்வதும் கதையல்ல, நாம் இந்து மதத்தின் நிரந்தரமான உண்மை. துரை செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அருமையான கதை. மனதை நெகிழ வைத்தது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற ரீதியின்படி செய்த தவறு மனதை வருத்தும் போது தெய்வத்தின் பாத நிழல்தான் அதற்கு விமோசனம். அன்னை நீண்ட நாட்கள் சோதிக்காமல் அந்த பூசாரியின் குறை தீர்ப்பாள். கதையானாலும், படிக்கும் போது அனேக இடங்களின் உண்மை நிகழ்வாக தோன்றுவதால் அந்த பூசாரிக்காக நானும் மனமுருகி அன்னையை பிரார்த்தித்து கொள்கிறேன். நல்ல கதையை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. உளம் நொந்திருக்கும் இவ்வேளையில் இந்தக் கதை வெளியாகி இருப்பது ஆறுதலாக இருக்கின்றது...

    சித்திரச் செல்வரின் ஓவியம் புதிய பரிணாமம்.. கழுகுப் பார்வையில் அருமை.. தண்ணீர் தெளிக்கப்பட்ட இடம் தனியாகத் தெரிவது சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
    2. கோவில் வாசல் என்பதையும், (கோலமிடப்பட்ட வாசல் படிகள்) அழுக்குப் பாவாடை என்பதை உணர்த்த - உயர்த்திப் பிடித்திருக்கும் போது உள்பக்கம் மட்டும் அழுக்கு இல்லாமல் தெரியும்படியும் வரைந்திருக்கிறேன் என்பதை தன்னடக்கத்துடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் !!

      நீக்கு
    3. Perspective-ல் இன்னும் சற்று கவனம் செலுத்தினால் ஒவியம் மேலும் மெருகேறும். ஒவியத்தை குறை காணுவதாக நினைக்க வேண்டாம். இது ஒரு ஆலோசனை மட்டுமே.

      நீக்கு
    4. ஏற்றுக் கொண்ட உங்களுக்கும் என் நன்றி.

      நீக்கு
    5. ஏற்றுக் கொண்ட உங்களுக்கும் என் நன்றி.

      நீக்கு
    6. பெயரும் சொன்னீர்கள் என்றால் சந்தோஷமாக தெரிந்துகொள்வேன்.

      நீக்கு
    7. உங்கள் பெயரைக் குறிப்பிட்டால் இன்னும் சந்தோஷம்

      நீக்கு
    8. ஜேகே சாரோ? ஏனெனில் படங்கள் பற்றியும் ஓவியங்கள் பற்றியும் அவர் சொல்லும் கருத்தைப் போலவே இங்கேயும் வந்திருக்கு.

      நீக்கு
    9. எனக்கும் அதே சந்தேகம்!

      நீக்கு
    10. தம்பி துரைக்கு இன்னமும் வலக்கைப் பிரச்னை தொடர்கிறதா? இன்றைய பதிவில் அவரைக் காணோமே! விரைவில் குணம் அடையப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    11. வலக்கையில் பிரச்னை இன்னும் தொடர்கின்றது அக்கா..

      தங்கள் அன்பின் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. படிற்றொழுக்கம் வெளிப்பட்டு திருந்தியது அருமை...

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  16. கதை மிக அருமை

    //காலாகாலத்துல வயிறு வாய்க்கலை.. ன்னா - தொளைச்சு எடுத்துவாளுங்களே சம்பந்தி வீட்ல.. //
    சம்பந்தி வீட்டில் மட்டுமா? சுற்றி இருக்கும் மக்கள், உறவுகள், நட்புகள் என்று எத்தனை பேர் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

    //உதிரிப் பூவ அள்ளிப் போட்டுட்டு காலைல யாரு கூட்டி அள்றதாம்?.. "//
    இப்படியும் சிலர் இருக்கிறார்கள்.

    //இல்லீங்க.. இந்த அரும்பு முடிச்ச அப்படியே பேச்சியாயி மடியில வச்சிடணும்.. அவ்வளவுதான்.. "//

    அந்த குழந்தை சொன்னது போல செய்து இருக்கலாம்.

    ஆத்தா சொன்னபின் தன் தவறை உணர்ந்து மகமாயிகிட்ட சொல்லி விட்டாள் தாய் மன இறங்கி அவர் மகளின் வாழ்வை மலர வைப்பாள்.

    கதை அருமை. வாழ்த்துக்கள்.

    //உளம் நொந்திருக்கும் இவ்வேளையில் இந்தக் கதை வெளியாகி இருப்பது ஆறுதலாக இருக்கின்றது...//
    நொந்த உள்ளத்துக்கு ஆறுதல் தருவாள் பேச்சியாயி.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. கதைக்கு சார் வரைந்த ஓவியம் அருமை.

    பதிலளிநீக்கு
  18. கிராமத்தை அப்படியே அழகாக பேச்சுவார்த்தை மாறாமல் கண் எதிரே கொண்டு வந்திட்டார் துரை அண்ணன். பல இடங்களில் பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் இயல்புமுறையை அழகாக வடிச்சிட்டார். இந்தக் காலத்துப் பிள்ளைகள் , குழந்தை இப்போ வேண்டாம் என்றெல்லோ தள்ளிப்போடுகிறார்கள்.

    நாம் என்ன செய்கிறோமோ.. அதுவே நமக்குத் திரும்பி வரும் எனும் மோறல் புரியுது, ஆனா நான் யோசிப்பது, நம் தலைவிதி எப்படி அமையப்போகிறதோ.. அதற்கேற்றபடி தான் நம் செயல்கள் பேச்சுக்களை ஆண்டவன் மாற்றி அமைக்கிறார் தனக்கேற்றபடி.

    இக்கதையில் பூசாரி ம்அகளுக்கு குழந்தை கிடைக்க தாமதமாகலாம் என தெரிஞ்சே, அப்போ பூசாரியை அப்படி மிடுக்காக நடக்கப் பண்ணியிருப்பார் ஆண்டவர்..:).. எல்லாம் கடவுளின் விளையாட்டுத்தானே தவிர நம் கையில் என்ன இருக்கு ஹா ஹா ஹா..

    கே ஜிஜி வரைந்த படம் சூப்பர், ஆனா கையில பந்திருப்பதுபோல தெரியுதே:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகாக ஒரு mug. அதில் பாதியளவு நீர்........ பூனைக்கு இரவில் கண் தெரியாதா இல்லை பகலிலா? புரியலையே

      நீக்கு
    2. //நெல்லைத் தமிழன்7 ஜூன், 2022 அன்று பிற்பகல் 4:20
      அழகாக ஒரு mug. அதில் பாதியளவு நீர்....///
      ஆவ்வ்வ்வ்வ் இதைத் தட்டிக் கேய்க்க இங்கின ஆருமே இல்லையாஆஆஅ:)).. எனக்கு சுவீட்16 என்றதால என் கண்ணுக்கு அதில இருக்கும் சுவீட்ட்டூஊ பாப்பாவும் கையில இருப்பது பூ மூட்டை இல்லை பந்துபோல தெரிகிறது என்றேன்:)).. நெ.தமிழனுக்கு அதிலிருக்கும் தாத்தாதான் கண்ணில தெரிகிறார்:))....ஹா ஹா ஹா சொந்தச் செலவிலயே யூனியம் வைக்கினம் சிலர்:))....எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:))

      நீக்கு
    3. // கே ஜிஜி வரைந்த படம் சூப்பர், ஆனா கையில பந்திருப்பதுபோல தெரியுதே:).// நன்றி.
      கையில் வைத்திருப்பது : " .. .. கையில் வெள்ளைத் துணி முடிச்சு ஒன்று.." - இதைத்தான் வரைந்துள்ளேன். ரக்பி பந்து மட்டும்தான் கோழிமுட்டை வடிவில் இருக்கும் !!

      நீக்கு
    4. அதிரடியாக வந்து இறங்கி இருக்கும் அதிராவுக்கு நல்வரவு. வாழ்த்துகள். என்னை எல்லாம் நினைவில் வைச்சிருக்காங்களானு தெரியலை. ஏஞ்சல் என் பதிவில் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துட்டுப் போறார். இன்னிக்கு இவர் வந்திருப்பதால் அவர் விடுமுறை எடுத்துட்டாரோ?

      நீக்கு
    5. அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி அதிரா..

      நீக்கு
  19. நெகிழ்ச்சியான கதை. கிராமத்து சூழலும் அம்மன்மேல் மக்கள் கொண்ட நம்பிக்கையும் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

    தவறு இழைத்த பூசாரியின் நெஞ்சு குறுகுறுக்கிறது. அவரின் வேண்டுதலும் நிறைவேறட்டும்.

    கதைக்கேற்ப படமும் அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. உடனுக்குடன் வருவதற்கு இயலவில்லை.. தயவு செய்து இன்றைக்கு கருத்துரைத்த அனைவரும் பொறுத்தருளவும்..

    அனைவருக்கும் நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  21. அருமையான கதை! கடந்த இரு வாரங்கள் நாங்கள் குழந்தைகளுடன் முக்திநாத் யாத்திரை சென்று வந்தோம். அனைத்து தெய்வங்களின் தரிசனமும் கிடைக்கப்பெற்றோம்! இன்று தங்களின் இக்கதை படித்து மனம் நெகிழ்ந்தது. தெய்வம் நின்று கொல்லும். நாம் செய்த தவறுக்கு மனம் வருந்தி திருந்தினால், தெய்வத்தின் கருணைக்கு எல்லை இல்லை!

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!