புதன், 15 ஜூன், 2022

இரவு நல்ல தூக்கத்துக்கு என்ன செய்யணும்?

 

நெல்லைத்தமிழன்: 

1. சொந்த வாகனம் வைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் (டூவீலர் அல்லது கார்). அதன் உபயோகம், அதற்கான செலவைவிட அதிகமா? 

# பொதுப் போக்குவரவு நெரிசலாகவும் நேரவிரயமாகவும் இருப்பதால். சொந்த வாகனம் செளகரியம்தான். ஓலா போதாதா என்றால் காலதாமதம் அழுக்கு வண்டி மைனஸ். வசதி இருந்தால் நான்கு சக்கரம் மேல்.

2. இரவு நல்ல தூக்கத்துக்கு என்ன செய்யணும்?  

# என் / எங்கள் கேள்வியும் அதே. நண்பர்கள் பதில் சொல்லலாம்.

3. காரணமே இல்லாமல், தங்கள் அனுபவமும் இல்லாமல், ஒரு சமூக மக்களை வெறுக்கும் காரணம் என்னவாயிருக்கும்? 

# தம் தோல்விகளுக்கு பெரும்பாலோர் ஒப்புக்கொள்ளும் ஏதோ ஒன்றன் மேல் பழிபோடுவது மனித இயல்பு.

4. எதனால் நம் மனது ஒரு கட்சியை மட்டும் ஆதரிக்கிறது, மெதுவாக கண்ணை மூடிக்கொண்டு அந்தக் கட்சி என்ன செய்தாலும் சப்போர்ட் பண்ணும் மன நிலைக்குச் சென்றுவிடுகிறது?

# " அதைவிட இது பரவாயில்லை " எனும் எண்ணம் நம் மனதில் வலுப்பெற்றிருப்பதுதான் காரணம். 

ஆனால் காரணம் பற்றிய அறிவு பிரச்சனைக்குத் தீர்வு ஆகாது.

5. இப்போதெல்லாம் ப்ரெஷர் டேப்ளட் வெறும் கால்ஷியம் போலத் தோன்றுகிறது. டேப்ளட் போலியா என்பதை எவ்வாறு அறிவது?

#  தெரிந்த நல்ல கம்பனி பார்த்து வாங்குவது தவிர வேறு வழி தெரியில்லை. செலவு பரவாயில்லை என்றால் சரி பார்க்க வசதி இருக்கிறது என்று நினைக்கிறேன். வேறு எளிய வழி கால்ஷியமா என்று பார்க்க இருக்கக் கூடும்.

$ If one is getting treated for hi bp or hypertension it cannot be calcium but a calcium n / p channel blocker or a twin or all calcium channel blocker . My twin channel blocker tastes bitter

வெற்றிலை பாக்குடன் சிவக்கிறது என்றால் calcium. + மாத்திரையை நீரில் கரைத்து, அதில் மஞ்சள் பொடி கலந்தால் கால்சியம் என்றால் நீர் சிவக்கும். அதை வைத்து அந்த மாத்திரை கம்பெனிக்கு மங்கள ஆரத்தி எடுத்து விடலாம். 

6. உலகமே சுயநலமாகிவிட்டது என்று எல்லோரும் நினைக்கிறோம். நம்மில் எத்தனை பேர் நமக்குச் சோறிடும் அம்மா, மனைவிக்கு எல்லாம் இருந்ததா? சாப்பிட்டார்களா என்று பார்க்கிறோம்? உறுதிப்படுத்திக்கொள்கிறோம்?

#  சுய நலம் என்பது மிகவும் பொதுவான சொல்.  அநேகமாக எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சுயநலமிகள்தாம். இதைவிட பொது நல ஆர்வர்கள் இருக்கிறார்களா என்று கேட்பது பொருத்தமாக இருக்கும்.

7. ஏன் 3 seater sofaனு இருக்கு. ஏன் 4 seaterலாம் இல்லை? ஏதேனும் லாஜிகல் காரணம் உண்டா?

$  மரத்துண்டுகள் நீளம் அதிகமானால் விலையும் அதிகம் எடையும் அதிகம். நகர்த்தி வைத்து சுத்தம் செய்வது முதல், கார்பெட்டில் குழி விழுவது வரை சங்கடங்கள் பல.

# நாலு பேர் சோபாவுக்கு ஆறு கால்கள்   தேவைப்படும். வீட்டின் அளவு மிகப் பெரிதாக இருக்கவேண்டும் . எனவே விற்பனை அதிகம் இராது .  சாதாரணமாக 3 பேர் சோபாவில் மூன்று பேர் அமர்வது  அபூர்வம்.

= = = = =  

சென்ற வாரம் புதன் பதிவில் நாங்கள் வெளியிட்டிருந்த படங்களில் முதல் படத்தத்திற்கு, மின்நிலா வாசகர்  எம் கோபாலன் எழுதியிருந்த கருத்துரை : 

எங்கள் கேள்விகள் : 

1) காபி டீ சாப்பிடாமல்  / ஒரு வார்த்தை பேசாமல் / நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது உங்களுக்கு சாத்தியமா ? இருந்தது உண்டா

2) உங்கள் மனதில் அடிக்கடி ஒலிக்கும் பாடல் எது ?

3) உங்களிடம் ஒரு நாவல் எழுத வேண்டிய அளவு அனுபவங்கள் இருப்பதாக சொல்ல முடியுமா ?

4) " பப்ளிக்குல தூக்குல போடணும் " என்று நீங்கள் நினைக்கும் நபர் இருந்தால் அவரை சூசகமாக அடையாளம் காட்டுங்கள் .

5) தற்போது அளவுக்கு மீறி புகழப் படுவதாக அல்லது இகழப் படுவதாக ஒருவரைப் பற்றி  நீங்கள் நினைப்பது உண்டா ?

= = = = 

கீழே உள்ள இரண்டு படங்களுக்குள் பல வித்தியாசங்கள் உள்ளன. 

பார்த்துக் கண்டுபிடிங்க ! கண்டு பிடித்ததை கருத்துரையில் எழுதுங்க!

A ) 

B)  


= = = = =  

71 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.

    மதியம் கொஞ்சம் கூட தலை சாய்க்காமல் இருந்தால், இரவு பத்து மணிக்கு மேல் படுத்தாலும் தூக்கம் ஒரு நாலைந்து மணி நேரமாவது வருகிறது. மற்றபடி இரவு தூக்கம் "ஒன்பது மணிக்கு படுத்ததுதான் தெரியும் ஐந்து ஆறுக்குத்தான் எழுவேன்" என்பவர்கள் கொடுப்பினை செய்தவர்கள்.

    மின்நிலா வாசகர் எழுதிய கருத்துரை நன்றாக உள்ளது.

    இரு படங்களில் இப்போதைக்கு நான் கண்டு பிடித்த வித்தியாசம்.

    1.குழந்தையின் காதில் சிகப்புத் தோடு.
    2.குழந்தையை அணைத்துக் கொண்டு படுத்திருக்கும் அப்பாவின் கை விரல் மோதிரம்.

    பகிர்வினுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. யாரையுமே காணவில்லை. எல்லோருமே நல்ல தூக்கத்தில் இருக்கிறார்கள் போலும். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எழுந்தாச்சா, காலை என்ன சமையல் செய்வது?, வெளில நடைப் பயிற்சிக்குப் போகலாமா என்றெல்லாம் யோசிக்காமல் ஆறு வித்தியாசங்கள் என்னவாக இருக்கும் என படுத்திருக்கும் குழந்தைப் படத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதனால் இருக்குமோ?

      நீக்கு
    2. // யாரையுமே காணவில்லை. எல்லோருமே நல்ல தூக்கத்தில் இருக்கிறார்கள் போலும். :))))// க ஹ - இவர்களை கொஞ்சம் கவனிங்க - உங்க கமெண்ட் , எண் பதில் எல்லாவற்றையும் ignore செய்துள்ளார்!

      நீக்கு
    3. ஹா ஹா. சரிதான்.. நேற்று வணக்கம் மட்டும் சொல்லி விட்டு காலை வேலைகளின் காரணமாக கதையை முற்பகலுக்கு அப்புறமாக படித்து கருத்துரைகளை தரலாம் என்று போய் விட்டேன். நான் கதை படித்திருப்பதாக நினைத்துக் கொண்டு, சகோதரர் நெ. தமிழர் அளித்த பதில் கருத்துக்காக, (இன்று சகோதரர் குறிப்பிட்ட இவ்வளவு வேலைகளுக்கும் நடுவே) பதிவை கடைசி வரை கண்ணும் கருத்துமாக "கவனித்து" படித்து முதல் ஆளாக ஏதோ என்னால் இயன்ற வரை கமெண்ட் தந்துள்ளேன்.

      கௌதமன் சகோதரரே இன்னமும் இவரை எப்படி கவனிப்பது? ஹா.ஹா.ஹா

      நீக்கு
  4. கேள்வி பதிலைப் படித்தேன்.

    இந்தத் தடவை பதில்கள் சிறப்பாக வந்துள்ளனவா? 5,6 கேள்விகளுக்கு பதில் சரியானதாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்மில் எத்தனை பேர் நமக்குச் சோறிடும் அம்மா, மனைவிக்கு எல்லாம் இருந்ததா? சாப்பிட்டார்களா என்று பார்க்கிறோம்? உறுதிப்படுத்திக்கொள்கிறோம்?// இதுதான் கேள்வி. ஏன் வாசகர்களிடம் இதனைக் கேட்டிருக்கலாமே

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்றில்லாத இந்தியாவை வரவேற்போம். அதற்காகப் பாடுபடுவோம் எனப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  6. மின் நிலா வாசகர் கோபாலன் எழுதியது ஏற்கெனவே படிச்சாப்போல் இருக்கு. வித்தியாசங்களை மத்தியானமாத்தான் கண்டு பிடிக்க முடியும். அதுக்குள்ளே எல்லோரும் சொல்லி இருப்பாங்க. இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்நிலா வாட்ஸ் அப் குழுவில் படிச்சீங்க - அதுக்குள்ள மறந்துட்டீங்க! இது மற்ற வாசகர்களுக்காக!

      நீக்கு
    2. ஹிஹிஹி, ஆமா இல்ல! :)))) மறந்துட்டேன்.

      நீக்கு
    3. ஓ.... மின் நிலா வாட்சப் குழுவில்தான் ஒளிந்து கொண்டிருக்கிறதா ? அதுதான் நானும் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லையே என நினைத்தேன்.

      நேற்று இங்கு காலை பெரிய நிலா வானில் பிரகாசமாக தென்பட்டது. அந்த அழகை ரசித்தபடி புகைப்படமெடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்த போது மேற்கில் டாட்டா காட்டியபடி விரைந்து விட்டது. அதற்கென்ன.. இன்று காலை வானில் வரும் பெளர்ணமி நிலவை முழுதாகவே எடுக்கலாமென்றால், நேற்று மாலையிலிருந்தே மப்பு மந்தாரத்துடன் வந்த மழை வானத்துக்குள் மறைந்தபடி நேற்று மாலையிருந்தே வெளியில் வரவில்லை. எதற்கும் நேரம் என்ற ஒன்றும் அமைய வேண்டும் இல்லையா?

      நீக்கு
  7. நெல்லை மட்டும் கேள்விகள் கேட்டிருக்கார் போல! எனக்கும் கேள்விகள் இருந்தாலும் என்னமோ தெரியலை புதன்கிழமை அன்று அவற்றைக் கேட்க முடியாமல் போகிறது. ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதன் கிழமை கேள்விகளை புதன்கிழமைதான் கேட்கணும்னு கீசா மேடத்துக்கு யார் சொன்னது? எப்போ? இஃகி இஃகி

      நீக்கு
  8. ஐந்தாவது கேள்விக்குப் பதிலே தேவை இல்லை. இந்த அளவுக்கு யாரும் வெறுத்ததே இல்லை என்னும்படிக்கு நம் பிரதமர் இருக்காரே! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது 200 ரூபாய்க்குச் செய்யும் கைம்மாறோ?

      நீக்கு
    2. ஏன் 200 ரூபாயை மட்டும் சொல்லணும்? எல்லா எதிர்க்கட்சிகளும் தானே அப்படி இருக்காங்க?

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  9. சின்ன வயசில் எல்லாம் காஃபி/தேநீர் குடிச்சதே இல்லை. கல்யாணம் ஆகி இரண்டாவது குழந்தையும் பிறந்த பின்னரே காலையில் காஃபிப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். தவிர்க்க முடியாமல் தான். மற்றபடி பேசாமல் இருப்பதும் கஷ்டமெல்லாம் இல்லை. குழந்தைகள் இருந்தால் வசதி. முன்னெல்லாம் தொண்ணூறுகளில் சாய்பாபாவுக்கு வியாழக்கிழமைகளில் விரதம் இருக்கையில் பேச மாட்டேன்/ஒரே வேளை தான் உணவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் இருந்தால் வசதி என்றது பிறர் யாரேனும் வீட்டுக்கு வந்தால் அவங்களோடு பேசவும், விஷயங்களைத் தெரிஞ்சுக்கவும், தொலைபேசியை எடுக்கவும்.

      நீக்கு
    2. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    3. முன்பு அதே போல் வியாழகிழமைகளில் (திருமங்கலத்தில் இருக்கும் போது) ராகவேந்திரர் அருளைப் பெற நானும் ஒரு வருடத்திற்கு மேலாக மெளன விரதம் இருந்திருக்கிறேன். அப்போதுதான் என் உறுதியை குலைக்கவென்றே வீட்டில் முக்கிய ஆலோசனைகளை பற்றி கருத்து கேட்பார்கள். நிறைய பேச வைக்க முயற்சிப்பார்கள். அதுபோல் உறவுகள் அன்று பார்த்துதான் ஃபோன் கால் போட்டு பேச வருவார்கள். அது என்ன சோதனையோ என நினைத்துக் கொள்வேன்.:)

      நீக்கு
    4. கமலா ஹரிஹரன் மேடம்... எந்த உறுதிமொழி எடுத்துக்கிட்டாலும் உடனே அதற்குச் சோதனை வந்துவிடும். நான், நாளையிலிருந்து இனிப்பு சாப்பிடமாட்டேன் என்று நினைக்கும்போதே, அப்போ சாப்பிட வாங்கிவைத்திருந்த கடலைமிட்டாய், ஜாங்கிரி..இதை என்ன செய்வது என்று யோசித்து, சரி..இதைக் காலி பண்ணிவிட்டு அப்புறம் யோசித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுப்பேன். எனக்கு மௌனவிரதம் இருப்பது ரொம்ப சுலபம். நான் பெரும்பாலும் aloof. தனிமை விரும்பி.

      நீக்கு
    5. எனக்கென்னமோ அப்படி எல்லாம் உறுதி மொழி, சபதம்னு எடுக்கத் தோன்றுவதே இல்லை. ஏன்னு தெரியலை. புத்தாண்டுத் தீர்மானங்கள்னு கூட எடுத்துப்பாங்க. அதுவும் கிடையாது. என் மனசில் இது வேண்டாம்னு தோணினால் வேண்டாம் தான். அப்புறமா திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன். பல சமயங்களிலும் வீட்டில் சாப்பிட நொறுக்குத் தீனி வகை வகையாக இருக்கும். கிட்டேவே போனதில்லை. மனது என்னமோ வேண்டாம்னு சொல்லிடும்.

      நீக்கு
    6. வியக்க வைக்கும் வைராக்கியம் !

      நீக்கு
  10. கண்ணன் வந்தான், மாயக் கண்ணன் வந்தான்! இந்தப் பாடல் முன்னெல்லாம் மன வேதனைகளில் இருக்கும் சமயமெல்லாம் எங்கிருந்தோ கேட்டுவிடும். மனமும் ஆறுதல் அடையும். இப்போவும் இந்தப் பாடல் தான்முதல்லே! மற்றவை பின்னர்.
    நாவலா? பொன்னியின் செல்வனைப் போலப் பல பாகங்கள் எழுதலாம். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கண்ணன் வந்தான், மாயக் கண்ணன் வந்தான்! // ராமு படத்தில் இடம்பெற்ற பாடலா?

      நீக்கு
  11. சொந்த வண்டி பல விஷயங்களில் சௌகரியம் தான். ஆனால் காராக இருந்தால் தினமும் இல்லாட்டியும் வாரம் 2 முறையாவது வெளியே எடுக்கணும். பல சமயங்களில் உறவினர்களை அழைத்து வர விமான நிலையம்/ரயில் நிலையம்/பேருந்து நிலையம்னு போக வேண்டி இருக்கும். அவங்க எங்காவது போகும்போது வண்டியைக் கேட்பார்கள். பெட்ரோல் நாங்க போட்டுக்கறோம் என்பார்கள். டிரைவரையும் நாங்க வைச்சுக்கறோம் என்பவர்களும் உண்டு. இல்லைனா நாம் சாரதியாக மாற வேண்டி இருக்கும். முடியலைனா கோபம் கொள்ளும் உறவுகள் உண்டு. இந்த எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாலேயே/இருந்ததாலேயே நான் ஆரம்பத்திலேயே கார் வாங்குவதை முழு மனதுடன் எதிர்த்தேன். ஆனால் இரு சக்கர வண்டிகள் இருந்தன. சைகிள்கள் தவிர்த்துப் பையரின் பெரிய வண்டி, நம்மவரின் ஸ்கூட்டர், டிவிஎஸ் சாம்ப் என இருந்தன. பின்னால் சமாளிக்க முடியாமல் ஸ்கூட்டரையும் பெரிய வண்டியையும் கொடுத்துட்டோம். சைகிள்களைச் சென்னையிலிருந்து கிளம்பும்போது கொடுத்துவிட்டு வந்தோம்.

    பதிலளிநீக்கு
  12. ராத்திரி நல்ல தூக்கத்துக்கு மனதில் எந்தவிதமான சிந்தனைகளும் இல்லாமல் துடைச்சு வைச்சுட்டுப் படுத்துக்கணும். ஏதானும் மனதுக்கு வேதனை தரும் நிகழ்வுகள் நடந்தால் அதை முற்றிலும் மறக்கணும். ஆனால் இதெல்லாம் என்னால் முடியாத ஒன்று. என்றாலும் மனம் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுடன் இருந்தால் சீக்கிரம் தூங்காட்டியும் கொஞ்சமானும் தூங்கலாம். இதற்குப் பல ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்து சொல்லி இருக்காங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவு உணவுக்குப் பிறகு ஏழு கிலோ மீட்டர்கள் நடந்தால் நல்ல தூக்கம் வரும் !!

      நீக்கு
    2. வீட்டுக்குள் நடப்பதே பெரிசுனு ஆயிடுத்து! :(

      நீக்கு
    3. //இரவு உணவுக்குப் பிறகு ஏழு கிலோ மீட்டர்கள் நடந்தால் நல்ல தூக்கம் வரும் !!// - அப்புறம் எப்படி திரும்ப வீட்டுக்கு வருவது?

      நீக்கு
    4. இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெயை உள்ளங்காலில் நன்றாகத் தேய்த்துவிட்டுப் படுத்துக்கொள்ளணும். இன்னொரு முக்கிய விஷயம், தூங்குவதற்கு (தே.எண்ணெய் வைத்தியத்துக்கு) அரை மணி நேரத்திற்கு முன்பாகவே டிவி வாட்சப் பிஸினெஸை நிறுத்திவிடணும்.

      நீக்கு
    5. / //இரவு உணவுக்குப் பிறகு ஏழு கிலோ மீட்டர்கள் நடந்தால் நல்ல தூக்கம் வரும் !!// - அப்புறம் எப்படி திரும்ப வீட்டுக்கு வருவது?/
      மூன்றரை கிலோ மீட்டர் தூரம் போய் திரும்ப மூன்றரை கிலோ மீட்டர் வந்தால் போதும்.

      நீக்கு
  13. முகநூல் சிநேகிதி திருமதி ஷோபா ராமகிருஷ்ணன் அவர்கள் என்னை ஜாதிக்காய்ப் பொடியைப் பாலில் கலந்து சாப்பிட்டுவிட்டுப் படுக்கச் சொன்னார் சில ஆண்டுகள் முன்னால். ஆனால் நாம் தான் உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆச்சே! அப்படியும் உறங்காது! :( ஆகவே படுக்கப் போகும் முன்னர் ஜபம் மாதிரி இன்னிக்குத் தூங்கிடணும், சிந்தனைகள் வரக்கூடாது என்றே சொல்லிக் கொண்டிருப்பேன்.எப்படியும் பதினோரு மணிக்கு மேலாவது தூக்கம் வராதா? சில/பல சமயங்கள் மனது எல்லாவற்றையும் மீறிக்கொண்டு தறி கெட்டு ஆடும். அப்போதெல்லாம் அதன் இஷ்டத்துக்கு விட்டு விடுவேன். மறுநாள் இரவு படுத்ததும் தூக்கம் வந்துடும். இப்படியே பல ஆண்டுகளாக ஓடிட்டு இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கம் வரவில்லையே என்று கவலைப் படாமல், ' கிடக்கட்டும் கழுதை - அது வரும்போது வரட்டும் ' என்று விட்டுவிட்டோம் என்றால் அது பயந்துகொண்டு வந்துவிடும்!

      நீக்கு
    2. அதுவும் பார்த்தாச்சு. நம்பர் எண்ணச் சொன்னால் அதுபாட்டுக்குப் போகுது ஆயிரத்தையும் தாண்டி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  14. ஒரு தேக்கரண்டிக் கசகசாவைப் பாலில் ஊற வைச்சுட்டு அதை நன்கு அரைத்துப்பாலில் கலந்து சாப்பிட்டாலும் தூக்கம் வரும் என்கிறார்கள். உண்மை தான். ஆனால் அது என்ன இருந்தாலும் ஓபியம் தூக்கம் தானே! சப்பாத்திக் குருமாவில் போடக் கூடக் கொஞ்சம் யோசனையுடன் தான் அரைத்தேக்கரண்டி சேர்ப்பேன். ஜாதிக்காய் அப்படி இல்லை. அதைப் புழுக்கி (இட்லித்தட்டில் வைப்பார்கள்) வைத்துக் கொண்டால் பிறந்த குழந்தைகளுக்கு அதைச் சந்தனக்கல்லில் நீர் விட்டு உரசி ஒரு சொட்டு! அதிகம் கூடாது. ஒரே ஒரு சொட்டு நாக்கில் தடவினால் குழந்தை வயிற்றுத் தொந்திரவு இல்லாமல் தூங்கும் என்பார்கள். என் அம்மா என் குழந்தைகளுக்கு வயிற்று வலி என்றால் இந்த மருந்தோ அல்லது வசம்பைச் சுட்டு விளக்கெண்ணெயோடு சேர்த்துக் குழைத்துத் தொப்புளில் தடவியோ குழந்தையை ஆறுதல் செய்வார்கள். இரண்டிலும் நல்ல பலன் இருப்பதை/இருந்ததைக் கண்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  15. வரேன், இந்த முழ நீள பதில்களுக்கு ஆன நேரத்தைக் கொஞ்சம் செலவிட்டு வித்தியாசங்களைக் கண்டு பிடிச்சிருக்கலாமேனு யாரோ கூவுவது கேட்டுது. அதெல்லாம் மனம் பதியணும் இல்லையோ? இப்போ அதில் மனம் பதியலை! :(

    பதிலளிநீக்கு
  16. மனத்துக்கண் மாசிலன் ஆகி விட்டால் தூக்கமும் சுகமாகும்...

    பதிலளிநீக்கு
  17. எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சுயநலமிகள்தாம்.
    உண்மைதான் ஜி

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    அந்த கால குமுதம் ஆறு வித்தியாசங்களை புத்தகம் கையில் கிடைத்ததும் நாம் முதலில் கண்டுபிடிக்கவில்லையெனில், ஏதோ அன்றைக்குள் தலையே வெடித்துவிடும் போல் தோன்றும். இன்றும் அதே பழைய நினைவுகள் ஏனோ மனதில். .

    அந்த படங்கள் வித்தியாசத்தில் இப்போது பார்த்ததில் மூன்றாவது வித்தியாசமாக அலமாரியில் கைப்பிடி ஒன்றை ஒரு படத்தில் காணவில்லை. (நெ. தமிழர் கவனிக்க... ஹா ஹா ஹா.) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. இன்று பேரன் புத்தகத்தில் ஆறு வித்தியாசம் கண்டுபிடி செய்த சிறிது நேரத்தில் இங்கு வந்தால் :)
    டிராயர் கைப்பிடி, தோடு, மோதிரம்.

    பதிலளிநீக்கு
  20. நல்ல தூக்கத்துக்கு:

    ‘யாதேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ‘ படுக்குமுன் சொல்லலாம்.

    சவாசனம் செய்யலாம். ‘காயஸ்தைர்யம்’ (பெயர் சரியாக நினைவில்லை). ஸவாஸனம் போன்றே இருக்கும். இதை செய்யலாம். இன்னொன்று கழுத்து, தலை பயிற்சி. 15 கவுண்ட். அருமையாக தூக்கம் வரும்.

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
  21. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    எனக்கு கீதா ரெங்கன் நல்ல தூக்கம் வர வேண்டுமென்றால் மிதமான சூடான பாலில் தேன் கலந்து குடிக்க வேண்டும் என்றார். பலன் இருக்கிறது.

    பல வித்தியாசங்கள் படத்தில் கை மோதிரமும், கதவு கைபிடியும் தெரிகிறது எனக்கு.

    பதிலளிநீக்கு
  22. எல்லோரிடமும் நாவல் எழுதும் அளவு விஷயம் இருக்கும்.ஆனால் அதை எப்படி ஆரம்பித்து எப்படி முடிப்பது என்று வழி தெரிந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  23. பல ஆண்டுகள் மெளன விரதம் இருந்தவள், உணவு எடுக்காமல் விரதம் இருந்து இருக்கிறேன், ஆனால் பால் குடித்து கொள்வேன். உணவு, திரவ உணவு எதுவும் இல்லாமல் நாள் முழுக்க விரதம் இருப்பவர்கள் உண்டு. உமிழ்நீரை கூட விழுங்க மாட்டார்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதுர்மாஸ்யம், மஹாலயம் மற்றும் நவராத்திரியின் போது குஜராத் முழுவதும் விரதம் தான். அதிலும் உமிழ்நீரைக் கூட விழுங்காமல் தான் விரதம் இருப்பார்கள். மஹாராஷ்ட்ரா, குஜராத்தில் சின்னக் குழந்தை கூட விரதம் என்று சொல்லிக் கொண்டு விரதம் இருப்பார்கள். நம் பிரதமர் மோதி கூட நவராத்திரியில் விரதம் இருப்பார். வெளிநாடு சென்றாலும் எலுமிச்சை ரசம் தவிர வேறே அருந்த மாட்டார்.

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!