வெள்ளி, 3 ஜூன், 2022

வெள்ளி வீடியோ : ஒரு பாதையில் இங்கு சங்கமம்

 இன்றைய தனிப்பாடல் நேயர் விருப்பமாகவும், என் விருப்பமாகவுமே அமைகிறது.  சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைத்துப் பாடி இருக்கும் இந்தப் பாடலின் ஆசிரியர் உளுந்தூர்பேட்டை ஷண்முகம்.

நேயர் விருப்பமாகக் கேட்டிருந்தவர் துரை செல்வராஜூ ஸார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பற்றி பாடப்படும் இந்தப் பாடலின் வசீகரம் ஒரு உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் நமக்குள் விதைக்கும்.

கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான்
வள்ளல் வருகிறான்
அன்பு வள்ளல் வருகிறான்..
நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ - அவன்
நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ?
தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன்
பாரத போர் நடத்திவைத்த யுக்தி அதிசயம்
அது முக்தி ரகசியம்..

அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்.
அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைக்கிறான்..
சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே
சொல்லச் சொல்ல ஐயன் தோற்றம் வானில் நீண்டதே
விஸ்வரூபம் தோன்றுதே..

பார்த்தனுக்குப் பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்
பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான்
காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச் சக்கரம் - அவன்
கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்
நான்கு வேத சாஸ்திரம்..



***********************

நாகரஹேவு ங்கிற கன்னடப்படம் 1972 ல் வெளிவந்தது.  அந்தப் படமே டி ஆர் சுப்பாராவ் என்கிற எழுத்தாளர் எழுதிய மூன்று நாவல்களை அடிபப்டியாக வைத்து எடுக்கப்பட்டதுதானாம்.  

வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்துக்கு (மறுபடி கதாநாயகன் வாய்ப்பு!  கன்னடத்தில் நடித்த சுபாவே ஜோடியாய் தமிழிலும் நடிக்க, மஞ்சுளா, மேஜர், தேங்காய் என்று அனைவரும் நடிக்க 1974 ல் வெளியானது ராஜநாகம் படம்.  தலைப்பு கதையில் ஸ்ரீகாந்தின் குணத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது.

இதன் ஒலிச்சித்திரத்தை ரேடியோவில் கேட்டிருக்கிறேன்!  படம் பார்த்ததில்லை.   இந்தப் படத்தின் பிரபல பாடலான தேவன் வேதமும் பாடலை இன்று பகிர்கிறேன்.

வாலியின் பாடலுக்கு வி குமார் இசை.  எஸ் பி பாலசுப்ரமணியம்- சுசீலா குரலில் அமைந்த பாடல்.

தேவன் யேசுவின் வேதம்  வேதம்..வேதம்..வேதம்..வேதம்..

கன்ணன் சொல்லிய கீதை.. கீதை...கீதை....கீதை

தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்

தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்

ஒரு பாதையில் இங்கு சங்கமம்..
ஒரு பாதையில் இங்கு சங்கமம்..

மாதாவின் வாழ்த்துக்கள் மணியோசை சொல்லட்டும்
காதல் வாழ்கவென்று

கண்ணன் எங்கே ராதை அங்கே 
குழலோசை வாழ்த்தும் உண்டு

நீவேறு நான் வேறு அன்று 
நீயின்றி நானில்லை இன்று

ஒரு பாதையில் இங்கு சங்கமம்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்

நெஞ்சோடும் நினவோடும் இல்லாமல் நின்றாடும்
சிலுவை நீயன்றோ
வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம்
கண்ணோடு கண்ணீரும் உண்டு

தட்டுங்கள் கேளுங்கள் உண்டு
தர்மங்கள் எங்கேயும் உண்டு

ஒரு பாதையில் இங்கு சங்கமம்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்

47 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம்..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. இந்தப் பாடலை விரும்பிக் கேட்டிருந்தேன் சென்ற வாரம்..

    இப்போது கூட பெருமாள் கோயில் திருக்குட முழுக்கினைத் தரிசிப்பதற்கு சென்று கொண்டிருக்கின்றேன்..

    ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், பதிவிலேயே சொல்லி இருக்கிறேன்.   உங்கள் கோயில் உலாக்கள் சிறக்கட்டும்.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை. இன்று தலைப்பிலேயே திரைப்பட பாடலை கண்டுணர்ந்து விட்டேன்.
    முதலில் பகிர்ந்த தனிப்பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். சீர்காழி அவர்களின் கம்பீரமான குரலில் பக்தியின் பெருவெள்ளமாய் இனிமையான பாடல்.

    இரண்டாவது நானும் படம் பார்த்த நினைவில்லை. பாடல் சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். நீங்கள் சொல்வது போல் சிலோன் ஒலிபரப்பும் ஒலி சித்திரத்தில் இந்த சினிமா கதையை கேட்ட நினைவு வருகிறது. அப்போதெல்லாம் ஞாயறன்று ரேடியோவுக்கு முன்பாக கதை கேட்க எங்கள் வீட்டில் நாங்களும் பக்கத்து வீட்டிலிருப்பவர்களுமாக சுற்றி அமர்ந்து கொள்வோம். ஒரு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பொழுது போவதே தெரியாது. இனிமையான அந்த நாட்களை நினைவுக்கு கொண்டு தந்ததற்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்று தலைப்பிலேயே திரைப்பட பாடலை கண்டுணர்ந்து விட்டேன்.//

      வழக்கமாக சாத்தியமில்லையா!    சென்னை வானொலியிலும் ஒலிச்சித்திரம் போட்டதாக நினைவு. 

      நீக்கு
    2. /வழக்கமாக சாத்தியமில்லையா!/
      இது அடிக்கடி கேட்டு ரசித்த பாடல் என்பதினால் வரிகள் பார்த்தவுடன் பாடலின் முதல் வரி நினைவுக்கு வந்து விட்டது. இதைப்போல் நீங்கள் பகிர்ந்ததில் சில பாடல்களும் வரிகளை தலைப்பில் பார்த்தவுடன் நினைவுக்கு வந்திருக்கிறது.

      ஆம் சென்னை வானொலியிலும் ஒலிசித்திரம் வந்திருக்கிறது. ஆனால் அதை அவ்வளவாக கேட்டதில்லை என நினைக்கிறேன். நன்றி.

      நீக்கு
  6. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்க,.
    ஆரோக்யம் நிறை வாழ்வு நமக்கு இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. சீர்காழியின் குரலில் கண்ணன் வரும் இன்னோரு
    பக்திப்பாடல்.
    தேரின் மேல் பார்த்த சாரதி பவனி வரும்
    கம்பீரமும் உற்சாகமும் பாடலில் துள்ளி வரும்.

    கீதாசாரியார்யனின் குதிரைகளும், ரதமும்,
    அசுரர்களை ஒழித்து அன்பர்களைக் காக்கும்
    நாராயணன் அருளே இந்தப் பாடல்.

    கேட்கும் நேரம் கவலைகள் தீரும்.

    பதிலளிநீக்கு
  8. ''அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்.
    அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைக்கிறான்..
    .

    அற்புதமான வரிகள். மிக மிக நன்றி. ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. ராஜ நாகம் படம் டி டியில் வந்திருக்கிறது.
    ஏதோ பழி தீர்க்கும் படம் என்று நினைவு.

    ஈஸ்டர், க்றிஸ்மஸ் நாட்களின் போது
    அடிக்கடி ஒலிபரப்பாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தொலைக்காட்சியிலும் பார்த்ததில்லை.  எப்போதோ ஒலிச்சித்திரம் கேட்டதோடு சரி.

      நீக்கு
  10. நல்ல இசை, மத நல்லிணக்கம் தோற்றுவிக்கும்
    பாடல் வரிகள் , பிஜிஎம்மில் ஒலிக்கும் குழல்+ சர்ச்சின் மணி ஓசையும்
    அழகாக இணைந்து ஒலிக்கும்
    பாடல்.
    ''தட்டுங்கள் கேளுங்கள் என்றும்,
    தர்மமும் நீதியும் எங்கும் உண்டு
    சேர்ந்தொலிக்கும் நம்பிக்கைக் குரல்கள்.
    அழகான பாடல்.
    நன்றி வெகு நாட்களுக்குப் பிறகு கேட்பது
    மிக மகிழ்ச்சி மா.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ரொம்ப ரசித்துக் கேட்கும் பாடல்களில் ஒன்று. நன்றி அம்மா.

      நீக்கு
  11. சிறப்பான பாடல்கள். முன்னரும் கேட்டது உண்டு.

    பதிலளிநீக்கு
  12. அட! ராஜ நாகம் படத்தில் வரும் இந்த பாடலை விரும்பி கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். கேட்காமலேயே கிடைத்து விட்டது.
    இந்த படத்தில் மஞ்சுளா வெகு அழகாய் இருப்பார். கே.ஜி.ஜி சாரின் ஃபேவரிட் இல்லையா?

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
  13. முதல் பாடல் பலமுறை கேட்டு இருக்கிறேன், இரண்டாவது பாடல் கேட்டதாக ஞாபகம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது ரொம்பப் பிரபலமான பாடல்களில் ஒன்று இது ஜி.

      நீக்கு
  14. முதல்பாடல் கோவில்களில் பலதடவை ஒலித்திருக்கிறது பக்தி நிறைந்தது.
    இரண்டாவது பாடலும் ரேடியோவில் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  16. இரண்டு பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்.
    கேட்டேன். அடிக்கடி வானொலியில் வைக்கும் பாடல்கள் இரண்டும்.
    கேட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் அடிக்கடி கேட்கும் பாடல். எங்கள் வீட்டில் இந்த பாடல் கேஸட் இருக்கிறது. அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். இரண்டாவது பாடலுக்கு ஒரு மலரும் நினைவு இருக்கிறது.
    திருவெண்காடில் இருக்கும் போது கோவையிலிருந்து வந்த உறவினரை மாயவரம் போய் அழைத்து வரவேண்டும், காலைதான் பஸ் . அதுவரை இரண்டாவது காட்சியாக இந்த படம் பார்த்து விட்டு உறவினர்களை காலை 4.30 பஸ்ஸில் சார் அழைத்து வந்து இருக்கிறார்கள். இந்த நிகழச்சியை அடிக்கடி சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அந்தப் பாடல் டி எம் எஸ் பாடியது.  அப்போது அது இன்னும் பிரபலம்.

      நீக்கு
    2. ஆம். அப்போதெல்லாம் இரண்டாம் ஆட்டம் என்று பத்து மணிக்கு மேல் தொடங்கி இரவு ஒன்று இரண்டு வரை படம் ஓடும்!

      நீக்கு
  18. மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் என்ற பாடல் இருக்கும் அதைபற்றியும் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அந்தப் பாடல் டி எம் எஸ் பாடியது.  அப்போது அது இன்னும் பிரபலம்.

      நீக்கு
  19. இரு பாடல்களுமே கேட்டு ரசித்தவை, ஸ்ரீராம்.

    பல வருடங்களுக்குப் பிறகு இன்று உங்களின் தயவில் கேட்டு ரசித்தேன். இருவரின் குரலும் செம

    எஸ்பிபி யின் குரல் !!!! தனித்தன்மை.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி, இரு பாடல்களும் கேட்டு ரசித்தவை. குறிப்பாக இரண்டாவது பாடல் நீங்கள் சொல்லியிருப்பது போல் மிகவும் பிரபலமான பாடல். ஒலிச்சித்திரமும் கேட்டதுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. இரண்டாவது பாடலை கேட்டிருக்கிறேன் . அதன் வீடியோவை இப்போதுதான் பார்க்கிறேன். குரலாகக் கேட்கையில் இப்படி ஒரு காட்சி மனதில் வந்ததில்லை!

    குரலே இன்பம். இசையே இன்பம்.

    பதிலளிநீக்கு
  22. பாடல்களும்/படமும் பார்த்துக் கேட்ட நினைவு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!