வெள்ளி, 10 ஜூன், 2022

வெள்ளி வீடியோ : மடி மீது தலை வைத்து மயங்கப் போகிறேன் விழியோடு இமை வைத்து உறங்கப் போகிறேன்

 இன்றைய தனிப்பாடல் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய 'தணிகை வாழும் முருகா' எனும் பாடல்.

எஸ் பி பி பாடி அதிகம் பக்தி பாடல்கள் கேட்டதில்லை என்றாலும் நிறைய பாடி இருக்கிறார். என் லிஸ்ட்டில் நானும் நினைவு வைத்திருக்கும் பாடல்கள் சிலபல உண்டு.

அதில் இந்தப் பாடலும் உண்டு. காத்து காத்து அருள்வாய், பாடிப்பாடி மகிழ்ந்தேன், எதிர்பார்த்து பார்த்து இருப்பேன் என்று ஈற்றடி இரண்டிரண்டு முறை வருவது கேட்க இனிமை.

தணிகை வாழும் முருகா...
உன்னை காண காண வருவேன்...
என்னை காத்து காத்து அருள்வாய்

ஆறுபடை உனது, ஏறுமயில் அழகு,
தேடாத மனம் என்ன மனமோ...
வேல்கொண்டு விளையாடும் முருகா...
வேதாந்த கலைஞான தலைவா...
திருநீரில் தவழ்ந்தாடும் பாலா,
உன்னை பாடி பாடி மகிழ்ந்தேன்

ஆறுமுகம் அழகு, அறுபழம் முருகு,
சொல்லாத நாளென்ன நாளோ...
தேனோடு தினைமாவும் தரவா...
தமிழாலே கனிபாகும் தரவா...
குமரா உன் அருள்தேடி வரவா,
எதிர்பார்த்து பார்த்து இருப்பேன்


====================================

மணிவண்ணன் இயக்கத்தில் கார்த்திக் ரம்யா கிருஷ்ணன் நடித்து 1989 ல் வெளியான படம் 'காதல் ஓய்வதில்லை'.

அலைகள் ஓய்வதில்லை வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக்கை வைத்து அதே போல பெயர் வரும்படி இந்தப் படம் எடுத்திருக்கலாம். படத்தின் கதி என்ன என்று தெரியவில்லை.

ஆனால்,

இதன் பாடல்கள் கேட்கக் கூடியதாய் இருந்தன. அதில் குறிப்பாக இன்று பகிரும் 'ராஜமோகினி' பாடல் சூப்பர்ஹிட் பாடல். பாடலாசிரியர் வாலியாய் இருக்கலாம் என்று நினைத்தால் ராஜ என்கிற வார்த்தை வைரமுத்து உபயோகிப்பபதாயிற்றே என்று எண்ணத் தோன்றும்.

படம் பற்றிய விவரங்கள் இணையத்தில் கிடைக்கவில்லை. அதே சமயம் படத்தின் டைட்டில் கார்டில் பாடலாசிரியர் பெயர் இடம்பெறவில்லை. என்ன கோபமோ, என்ன காரணமோ!

இசை இளையராஜா.

உங்களிடம் நல்ல ஸ்பீக்கர் இருக்கிறதா? பாடல் தொடங்கும் முன்னரே ஸ்பீக்கரை சரியான அளவில் வைத்துக் காத்திருங்கள். ஆரம்ப இசை முதலே ரசிக்க வேண்டிய பாடல் இது. ஆரம்ப இசை முடிந்ததும் எஸ் பி பி ஆரம்பிக்கும் ஜாலத்தைக் கேளுங்கள். இரண்டாவது முறை ராஜமோகினி சொல்லும்போது வளையும் ரா வை கவனியுங்கள். சரணங்களில் அவர் குரலை, குழைவை கேளுங்கள். "உறங்காமல் இருந்தாலும் கனவு காண்கிறேன்" என்னும்போது குரலை கவனியுங்கள். "மடி மீது தலை வைத்து மயங்கப்போகிறேன்" என்று அறிவிக்கும்போது ரசியுங்கள்.

ராஜ மோகினி சுக ராக தேவி நீ
ராஜ மோகினி சுக ராக தேவி நீ
மதுத் தேன் குடங்கள் இடை மேல் சுமந்து போகும்
ராஜ மோகினி சுக ராக தேவி நீ  

காதல் என்றும் ஓய்வதில்லை கவிதை சொன்னது  
காதல் கண்ணில் தூக்கம் இல்லை கவிஞர் சொன்னது  
இரு கண்ணில் உன் பேரை எழுதிப் பார்க்கிறேன்  
உறங்காமல் இருந்தாலும் கனவு காண்கிறேன்  
எந்த நாளும் எந்தன் ஜீவன்  
எந்த நாளும் எந்தன் ஜீவன்  
நீயே  

ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே
இதயம் துடிக்கும் இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே  

நாணம் கொண்டு போகும் பெண்மை என்னை மீறிப் போகுமா  
வேகமாக போகும் மேகம் வானம் தாண்டிப் போகுமா  
மடி மீது தலை வைத்து மயங்கப் போகிறேன்  
விழியோடு இமை வைத்து உறங்கப் போகிறேன்  
உன்னை அள்ளி கொண்ட பின்பு  
என்னை அள்ளி தந்த பின்பு  
பிரிவேது

31 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய தனிப்பாடல் இனிமை. எஸ் பி.பியின் குரலினிமையில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். இரண்டாவது கேட்டதில்லை. அல்லது கேட்ட நினைவில்லை படம் பற்றிய விபரங்கள் அருமை. பதிவில் வாலி என்பது எழுத்துப்பிழையால் தவறாக வந்துள்ளது. இந்தப் பாடலையும் கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்துப்பிழையை சரிசெய்து விட்டேன்.  நன்றி.  இரண்டாவது பாடலை கட்டாயம் கேளுங்கள்!

      நீக்கு
  3. வாலியை வாளியாக்கிவிட்டீர்கள், அவர் கவிதையால் மொண்டு நம்மைக் குளிப்பாட்டினார் என்ற அர்த்தத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி சரி செய்து விட்டேன். அடுத்த இரண்டு பிழைகளையும் கூட கவனித்து செய்து செய்து விட்டேன்!

      நீக்கு
  4. இரண்டும் கேட்ட பாடலே...

    இரண்டாவது பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும் ஆனால் இப்பாடல் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை.

    சில டப்பா பாடல்கள் எப்படி பிரபலமாகிறது என்று நினைப்பேன் உதாரனமாக...

    ஒய் திஸ் கொலவெறி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட்றா அவளை வெட்றா அவளை பாடலை விட்டு விட்டீர்களே ஜி!  கடுப்பேற்றும் பாடல்கள் வரிசை அது!

      நீக்கு
    2. கேட்க வேண்டாமென்றுதான் நினைக்கிறேன்
      ஆனால் திருமண நிகழ்வுகளில், கோயில் திருவிழாக்களில் அவைதான் காதுகளில் நுழைகிறது என்ன செய்வது ஜி

      நீக்கு
    3. அது நம் பெரும்பான்மை மக்களின் மனப்போக்கு, விருப்பம்!

      நீக்கு
  5. முதல் பாடல் நிறைய முறை கேட்டு ரசித்து மனதில் நிற்பது. பாடலைப் படித்ததும் ஏனோ தெரியவில்லை பி சுசீலாதான் மனதில் அமர்ந்தார். இரண்டாவது பாடலைப் பிறகு கேட்டுப்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மன மகிழ்வும் மேலோங்கித் தொற்று அறவே நீங்கிடப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா அக்கா. வாங்க. பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. இரண்டு பாடல்களையும் இப்போதே முதல் முதலாகக் கேட்டு ரசித்தேன். இனிமையான பாடல். எஸ்பிபியின் குரலில் நிறைய பக்திப் பாடல்கள் கேட்டிருக்கேன். என்றாலும் தமிழில் இப்போத் தான்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் ,வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  9. முதல் பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன் பிடித்த பாடல்.
    அடுத்த பாடல் கேட்டது இல்லை.
    இப்போதுதான் முதன் முதலாக கேட்கிறேன். இனிமையான பாடல்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இரண்டாவது பாடலை ரசித்தேன். முதன் முதலாகக் கேட்கிறேன். எழுதியது வாலியா? மதுத் தேன் .. என்று வழிந்திருப்பதைப் பார்க்கையில் இது முத்துவைரமாக இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதியவர் யார் என்று எங்குமே குறிப்பிடவில்லை - படத்தின் டைட்டில் கார்டில் உட்பட! வாலி அல்லது வைரமுத்து!

      நீக்கு
  11. "பாடும் நிலா தானா...?" என்று சந்தேகம் வருகிறது... எங்குமே... அதாவது எந்த சொல்லின் உச்சரிப்பிலும் அவரின் சாயல் இல்லை பாருங்கள்... அப்புறம்...

    ஆறுமுகம் அழகு... அருட்பழம் அழகு...

    இப்படி அல்லவா கேட்கிறது...?!

    தமிழாலே கனிப்பாவும் தரவா...

    இது சந்தேகமா இருக்கு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, எனக்கு சரியாகத்தான் கேட்கிறது!  இது அவரின் ஆரம்ப கால பக்திப் பாடல்களில் ஒன்று.  பக்திப் பாடல்களில் அவர் அனாவசிய ஜாலங்களை புகுத்தியதில்லை என்று நினைக்கிறேன்.  

      நீக்கு
  12. இரணடாவது பாடலில் பாடும் நிலா செய்ததை விட, அதை வர்ணிக்கும் விதத்தை# மிகவும் ரசித்தேன்...

    # வர்ணிக்கும் விதம் :-

    வளைவு
    குழைவு
    நமக்கே தோன்றும் கனவு...!
    மடி மீது தலை வைத்து காணும் மயக்கம்...!

    பதிலளிநீக்கு
  13. அருமை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இணையத்திற்குள் வந்துள்ளேன் நண்பரே. இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு
  14. இரண்டு பாடல்களும் இனிமை கேட்டிருக்கிறேன். முதலாவது பாடல் பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
  15. குவைத் ஜி அவர்களை காணவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலக்கைப் பிரச்னை! :( பதிவில் சொல்லி இருக்கார். விரைவில் குணமாகப் பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. அன்பின் ஜி,

      ஜூன் ஆறாம் தேதி பதிவில்சொல்லியிருக்கின்றேன்.. ஓரளவுக்கு நலமாக இருக்கின்றேன்.. நன்றி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!