வியாழன், 30 ஜூன், 2022

உழைப்பில் உண்டாகும் வாய்ப்பினிலே...

 ​படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் படிப்பு முடித்ததும் முன்னூறு ரூபாயில் ஒரு வேலை வாங்கி விட்டால் பெரிய விஷயமாய் இருந்தது ஒரு காலம்.

அப்படி நினைத்து நினைத்து எனக்கு 325 ரூபாயில்தான் முதல் சம்பளம் கிடைத்தது!  ஆனால் கிடைத்த காலத்தில் அது போதுமானதல்ல!  எண்ணம்போல வாழ்வு!

பத்தாம் வகுப்பு அல்லது பதினோராம் வகுப்பு படிக்கும்போது டைப்ரைட்டிங் க்ளாஸ் போகவேண்டும்.  பள்ளிப் படிப்பு முடிந்த உடனேயே ஒரு தரம் எம்பிளாய்மென்ட் எக்சேஞ்சில் பதிவு செய்து வைக்கவேண்டும்.  கல்லூரிப் படிப்பு முடித்ததும் மறுபடி அங்கு சென்று அப்டேட் செய்யவேண்டும்.

கல்லூரிப் படிப்பு முடிந்த உடன் சர்வீஸ் கமிஷன் பரீட்சைகள் மேல் கவனம் வைக்க வேண்டும்.  அதற்கான புத்தகங்கள், வகுக்குகள்..  சிலபேர் CA, ICWA என்று படித்து முன்னேறுவார்கள்.  இன்ஜினியரிங் படிப்பு என்பது பைத்தியமாகாத காலம்.  கல்லூரிகளில் பி காம் படிப்புக்கு மவுசு.

டைப்பிங்கில் தமிழ், ஆங்கிலம் இரண்டும் உயர்நிலை பாஸ் ஆகவேண்டும். (ஆனேன்)  சிலபேர் ஹிந்தி கற்றுக் கொள்வார்கள். (மத்யமா பாஸ் செய்து பிரவேஷிகா வரை வந்தேன்!)  சிலபேர் ஃபிரென்ச், ஜப்பான்  போன்ற மொழிகள் கற்றுக் கொள்வார்கள்.  சர்வீஸ் கமிஷனில் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன், அதிலேயே ஒன்று முதல் நான்கு வரை க்ரூப்கள்..   (எழுதி இருக்கிறேன்!)  க்ரூப் நான்குக்கு பள்ளி இறுதி வகுப்பே போதும்!  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், ரயில்வே சர்வீஸ் கமிஷன் அப்புறம் வங்கித்  தேர்வுகள்..  இதற்கெல்லாம் ஒரு பேச்சிலர் டிகிரி வேண்டும்.

சர்வீஸ் கமிஷன் எழுதி அரசு வேலைக்கு வந்து முன்னேறியவர்கள்தான் அப்போது அதிகம்.

தனியார் கம்பெனிகளில் வேலை வாங்க நினைப்போர் அப்போது குறைவு.  அரைக் காசானாலும் அரசாங்க காசு.  பென்ஷன் வசதிகள்...   

வேலை கிடைக்கவில்லை வேலை கிடைக்கவில்லை என்று எங்கும் குரலெழும், படங்கள் எடுப்பார்கள்.  கட்டுரைகள் எழுதுவார்கள்.

இன்றைய கால கட்டத்தில் வேலை கிடைக்கவில்லை என்று குரல் எழுப்ப முடியாது என்று நினைக்கிறேன்.  வேலை நமக்குக் கிடைப்பது இல்லை, வேலையை நாம் கையில் எடுக்கும் காலம் இது.  பிழைக்க எத்தனை வழிகள்..

இன்று யாரும் எந்த வகையிலாவது சம்பாதிக்காமல் இருக்கவே முடியாது - படித்திருந்தாலும், இல்லாவிட்டாலும்.

அன்று போக்குவரத்துக்கு பஸ், ரயில், விமானம் என்று மட்டுமே.  ஆட்டோ வெகு குறைவு.  சைக்கிள் ரிக்ஷாக்கள் அதிகம் இருந்தன.   

இப்போது ஆட்டோக்கள் என்ன, ஊபர் ஓலா, ரேபிடோ, உங்கள் நண்பன் என்று எத்தனை வகை ஆட்டோக்கள்..  மஞ்சள் நிற டேக்சி ஒன்று மட்டுமே இருந்த காலம்போய் எத்தனை வகை வண்டிகள்..

அண்ணாச்சி கடைகள் மாறி சூப்பர் மார்க்கெட் ஆகி, அவை மால்களாகி நிற்கின்றன.  ஒரு தியேட்டர் இருக்கும் இடத்தில் நான்கைந்து தியேட்டர்கள், சுற்றிலும் நம் காசைக் குறி வைத்துபறிக்க  ஏகப்பட்ட பெரிய கடைகள்..

நேற்று பெரம்பூர் சென்றபோது வழியில் மார்க்கெட்டை ஒட்டி சிலபேர் ஒரு அரிவாள் மட்டும் வைத்துக் கொண்டு வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.  எதிரே ஒரு கல், ஒரு சாக்குத்துணி..  என்ன என்றால் இறைச்சி அல்லது மீன்  வாங்கி வருபவர்கள் அதை இவர்களிடம் கொடுத்து சுத்தம் செய்து வாங்கிச் செல்வார்களாம்.  கிலோவுக்கு  முப்பது ரூபாயாம்.  இருந்த கூட்டத்தைப் பார்க்கும்போது தினசரி அவர்களால் ஒரு கௌரவமான வருமானத்தைப் பார்க்க முடியும் என்று தோன்றியது.  .

வண்டி ஓட்டத் தெரிந்தால் ஓலா, ஊபரில் சேர்ந்தோ சேராமலோ ஆட்டோ, கார் என்று ஓட்ட ஆரம்பித்து விடலாம்.  ஏன், இரு சக்கர வாகனம் இருந்தால் கூட போதும்...   மக்களை இங்குமங்கும் கொண்டு சேர்க்கலாம்.  ஷேர் ஆட்டோ பிசினஸ் தனி. 

எஞ்சினியரிங் படிப்பு முதல் ஏகப்பட்ட புதிய வகைப் படிப்புகள் வந்து விட்டன.  அதைப் படித்து கடை விரிக்கலாம்!  பெண்கள் கல்யா ணப் பெண்களுக்கு அலங்காரம் செய்யும் வேலை செய்யலாம். அதற்கும் ஒரு கோர்ஸ் இருக்கிறது.   கல்யாண கான்டராக்ட்டுகள் எடுத்து A to Z எல்லாவற்றுக்கும் கட்டணம் வாங்கலாம்.  போட்டோ சுட, கல்யாண போட்டோ எடுப்பபது என்பது தனி பிசினஸ்.

சமைக்கத்தெரிந்தால் சட்டென ஒரு சிறு கடை தொடங்கி கையில் பார்சல் மட்டும் கொடுத்து கூட அனுப்பலாம்.  அதை ஸ்விக்கி, ஜோமாட்டோ வில் இணைக்கலாம்.  அட, வண்டி ஓட்டத் தெரிந்த ஆண்களும் பெண்களும் ஸ்விக்கி, ஜோமோட்டோவில் சேர்ந்து இங்குமங்கும் பறக்கிறார்கள், கமிஷன் பார்க்கிறார்கள்.   கூடவே ஓலா ஊபரிலும் இணைந்திருக்கிறார்கள்.  தினமும் கணிசமான, கௌரவமான வருமானம் பார்க்கிறார்கள்.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வண்டி ஓட்டுனர்கள் வேலைக்குச் செல்லும்போதும், வீட்டுக்குத் திரும்பும்போதும் திசை போட்டுக்கொண்டு ஓலா ஊபரில் இணைந்து யாரையாவது ஏற்றிச் சென்று பெட்ரோல் செலவு இல்லாமல் பார்ப்பதோடு அதிகப்படி வருமானமும் பார்க்கிறார்கள்.

எங்கள் ஏரியா பூக்காரர் இங்குள்ள வீடுகளில் பேசி, தினமும் 20 அல்லது 30 ரூபாய்க்கு பூ கொண்டு வந்து வீட்டில் கொடுத்து விடுகிறார்.  மாதமானதும் மொத்தமாக வாங்கி கொள்வார்.  அவரே காய்கறி, மற்றும் தரை, டாய்லெட் போன்றவை சுத்தம் செய்யும் பொருட்களும் தரத்தொடங்கி இருக்கிறார்.  இங்குள்ள நிறைய வீடுகளுக்கு தினசரி காலை பூ கொடுத்து விட்டுதான் வேலைக்குச் செல்கிறார். வேலை தனி, இது தனி.

இருந்த இடத்தில் இருந்து வீடு வாடகைக்கு, விற்க என்று இடம் காட்டுவதில் சத்தமில்லாமல் கமிஷன் அன்றும், இன்றும், என்றும் பார்க்கலாம்.  இப்போது கொஞ்சம் அதிகம்!

எனக்கு பேப்பர் போடும் ஏஜென்டிடம் சமீபத்தில் பேசியபோதுதான் அவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார் என்று தெரிந்தது!  அவர் மனைவியும் ஆசிரியர்.  சுற்றி இருப்பவர்களுக்கு தையல் வேலை செய்து கொடுப்பாராம்.  

ஐ டி துறையில் வேலை பார்த்த ஒரு தம்பதி..  தற்போது இருவரும் வேலையை விட்டு விட்டு ஒரு கடை திறந்திருக்கிறார்கள்.  காய்கறி விற்கத் தொடங்கினார்கள்.  இன்று மெல்ல மெல்ல மளிகை, பால், தயிர் என்று விரிவு படுத்திக்க கொண்டிருக்கிறார்கள்.  கடை வாசலில் பேல்பூரி கடை வைக்கிறார்கள்.

70 வயது மாமி ஒருவர் ஊறுகாய், பொடிகள், வடாம், வத்தல் என்று சகலமும் தயார் செய்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆர்டர் கொடுத்தால் வீட்டில் கொண்டு வந்து கொடுத்துச் செல்கிறார்.

வயது வித்தியாசமின்றி - ஒரு B E படித்த இளைஞர் உட்பட - கல்யாண, ஆயுஷ்ஹோம விசேஷ  மற்றும் திவச சமையலுக்கு வருகிறார்கள்.  அவர்கள் கேட்கும் தொகை சமயங்களில் தலை சுற்ற வைக்கும்!  பரிமாற என்றால்  தனிக்காசு!  கூப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்!

'அர்பன் ஆப்'பில் இணைந்து விட்டால் உங்களுக்கு எந்த வேலை தெரியுமோ அந்த வேலைக்கு,  நீங்களாக அவர்களைத் தேடித் செல்லாமல் அவர்கள் உங்களை அழைக்கிறார்கள்.  அட, வீட்டிலேயே முடி வெட்டிக்கொள்ளக்கூட இதில் வசதி இருக்கிறது.  கொஞ்சம் வாடிக்கையாளர்களை பிடித்ததும், அவர்களை இவர்கள் தனியாக தங்கள் அலைபேசி நம்பர் கொடுத்து வாடிக்கையாக்கிக் கொள்கிறார்கள்.  அர்பனுக்கும்  'தனி' க்கும் 50 அல்லது 75 ரூபாய் குறைவு! 

எலெக்ட்ரிக் பில் கட்டுவதிலிருந்து எது வேண்டுமானாலும் உங்கள் வாசலுக்கு கொண்டு வந்து கட்டணம் வாங்கிக் கொள்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து விட்டார்கள்.  அப்பா அம்மாவைத் தவிர அனைத்தும் ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம்.  உங்கள் பழைய பொருட்களையும் அலையாமல்,  OLX போன்றவை மூலம் தள்ளி விட்டு விடலாம்.  

இங்கு நான் சொல்லியிருக்கும் வேலைவாய்ப்புகள் குறைவு.  சொல்லாததும்,  நானே அறியாததும் இன்னும் நிறைய..  இல்லையா?

 இதில் சில வழிகள் அந்தக் காலத்திலும் இருந்தன என்றாலும், இந்தக் காலத்தில் உழைக்கத் துணிந்தவர்களுக்கு கொட்டிக் கிடக்கிறது வேலைவாய்ப்பு...  அதுவும் சுய வேலைவாய்ப்பு..  இல்லையா?

இதோ..    IT படித்து வேளையில் இருக்கும் எங்கள் பக்கத்து வீட்டு இளைஞர் 'இந்த வேலை தாற்காலிகம்தான்..   பிசினஸ் செய்யப்போறேன்..    சிக்கன் ஃபார்ம் வைக்கப்போறேன்' என்கிறார்.

========================================================================================================

விக்கல்களும், விவரங்களும்...


தொடர் விக்கல் பயம் வேண்டாம்!
தொடர் விக்கல் குறித்து கூறும், இரைப்பை மற்றும் குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர், பி.பாசுமணி: 'விக் விக்' என சத்தம் வருவதால் தான், அதற்கு, 'விக்கல்' எனப் பெயர் வந்தது. ஆங்கிலத்தில், 'ஹிக்கப்' என்பர். பெரும்பாலும் விக்கல், சில நிமிடங்களில் சரியாகி விடும்; சிலருக்கு சில மணி நேரம் கூட நீடிக்கும். 48 மணி நேரத்திற்கு மேல் நீடிப்பதை, 'தொடர் விக்கல்' என்றும், ஒரு மாதத்திற்கு நீடிப்பதை, 'தீராத விக்கல்' என்றும் கூறுகிறோம். விக்கலுக்கு காரணம் கண்டுபிடிப்பது கஷ்டம்.
அதிகமாக சாப்பிடுவது, சிரிப்பது, ஆல்கஹால் எடுத்துக் கொள்வது என, தலை முதல் கால் வரையுள்ள விஷயங்களால், எந்தக் காரணத்தாலும் விக்கல் வரலாம். உதாரணத்திற்கு, காதுக்குள் இருக்கும் சவ்வின் மீது, அழுக்கு அல்லது முடி உரசினாலும் கூட விக்கல் வரலாம்.
முக்கியமாக, 'டையப்ரம்' அதாவது, உதரவிதானத்தின் இடது பக்கம் துடிப்பதைத் தான், 'விக்கல்' என்கிறோம். சில நேரங்களில் நெஞ்சுவலி, வியர்வையோடு சேர்த்து மாரடைப்பில் கூட விக்கல் வரும். குறிப்பாக, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், புகை பிடிப்போருக்கு நெஞ்சுவலி, வியர்வையோடு விக்கலும் சேர்ந்து வந்தால், அது, 'ஹார்ட் அட்டாக்' ஆக இருக்கலாம்.
அதிக எடை உடையவர்கள், அதிக மசாலா உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் அடிக்கடி, தொடர் விக்கல் வரும். நிமோனியாவால் கூட விக்கல் வரும். ஆனால், பெண்களை பொறுத்தவரை பயப்படத் தேவையில்லை. ஏனெனில், தீராத விக்கல், 85 சதவீதம், ஆண்களுக்குத் தான் அதிகம் வரும்.
விக்கலை நிறுத்த, மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை சாப்பிடலாம்; சர்க்கரையை விழுங்கலாம்; யாரையாவது பயமுறுத்தச் சொல்லலாம்; வயிற்றை அழுத்தலாம். இப்படி விக்கலுக்கான கை வைத்தியங்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. இதெல்லாம், 'வேகஸ்' என்னும் நரம்பின் டோனை மாற்றுவதற்கான முயற்சிகள்.
இவற்றைச் செய்தும் நிற்கவில்லை என்றால் மருத்துவரை அணுகி, அவர் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரை சாப்பிடலாமே ஒழிய, நீங்களே எந்த மாத்திரையையும் சாப்பிடக் கூடாது; குறிப்பாக, துாக்க மாத்திரையை சாப்பிடவே கூடாது. இதனால், துாக்கம் தான் வருமே தவிர, விக்கல் நிற்காது.
விக்கலால் பெரும்பாலும் சோர்வு உண்டாகும், சாப்பிட முடியாது. எல்லாவற்றையும் விட மன உளைச்சலுக்கு ஆளாவோம். எனக்குத் தெரிந்து, 48 மணி நேரம் கடந்து, விக்கலால் அவதிப்பட்டு சரியானவர்களும் இருக்கின்றனர்.
ஆனால், அந்த இடைவெளியில் அவர்கள் மிகவும் பயந்து போய்விடுவர். மற்றபடி, இது வேறெந்த பிரச்னையையும் வரவழைக்காது. அதனால், நான்கு நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தால் கூட பயப்படத் தேவைஇல்லை.
தினமலர் 19/6/2017​ (ஹிஹிஹி)
=================================================================================================

​ "அனந்தா நான்தான் உயிரோடு இருப்பதற்கு இல்லை. இப் பிறவிக்கான அவனுடைய வினை கணக்குத் தீர்ந்து விட்டது. "

இந்தத் தீர்மானமான சொற்கள் ஒரு நாள் காலையில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்த பொழுது என் உள்ளுணர்வில் எழுந்தன. சந்நியாசம் வாங்கிக் கொண்ட சில நாட்களுக்குள் என் அண்ணன் அனந்தாவின் விருந்தாளியாக என் பிறந்த ஊரான கோரக்கருக்கு நான் சென்றிருந்தேன். திடீரென்று ஏற்பட்ட ஒரு நோய் அவனை படுக்கையில் தள்ளியது. நான் பிரியமுடன் அவனுக்கு பணிவிடை செய்தேன்.

தீவிரமாக உள் மனதில் தோன்றிய இந்தப் பிரகடனம் என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. எதுவும் செய்ய முடியாமல் என் கண் முன்னாலேயே என் சகோதரன் அகற்றப் படுவதை பார்க்க மட்டுமே நான் கோரக்பூரில் அதிக நாள் இருப்பது என்னால் தாங்க முடியாது என்று உணர்ந்தேன். என் உறவினர்கள் என் நிலையை புரிந்து கொள்ளாது தொடுத்த கண்டனத்திற்கு மத்தியில் நான் உடனே கிடைத்த முதல் கப்பலில் இந்தியாவை விட்டு கிளம்பினேன். அது பர்மா, சீனா கடல்வழியாக ஜப்பானை சென்றடைந்தது. நான் கோபேயில் இறங்கி சில நாட்கள் அங்கு தங்கினேன். என் மனம் மிக பாரமாய் இருந்ததினால் நான் எங்கும் சுற்றிப் பார்க்கச் செல்லவில்லை.

இந்தியாவிற்கு திரும்பும்பொழுது கப்பல் ஷாங்காயை அடைந்தது. அங்கு கப்பல் மருத்துவர் டாக்டர் மிஸ்ரா வினோதமான பொருட்கள் நிறைந்த கடைகளுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு நான் ஸ்ரீ யுக்தேஸ்வரருக்கும், என் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அனேக பரிசுப் பொருட்களை வாங்கினேன். அனந்தாவிற்கு நான் மூங்கிலில் செதுக்கப்பட்ட பெரிய பொருள் ஒன்றை பரிசாக வாங்கினேன். அந்த சீன கடைக்காரர் அதை என்னிடம் கொடுத்த அதே சமயம் "இதை இறந்துவிட்ட என் அன்பான அண்ணனுக்காக வாங்கியிருக்கிறேன்!" என்று அழுது கொண்டே கீழே கீழே விழுந்து விட்டேன்.

அவனுடைய ஆத்மா அப்போதுதான் அண்டவெளியில் விடுவிக்கப்பட்டது என்பது எனக்குத் தெளிவாக புறப்பட்டுவிட்டது. அந்த ஞாபகார்த்த பொருள் அபசகுனமாக கீழே விழுந்ததில் கூர்மையாக விரிசல் கண்டது. தேம்பல்களுக்கிடையே நான் அந்த மூங்கில் மேல் "இப்போது மறைந்து விட்ட என் பிரியா அனந்தாவுக்கு" என்று எழுதினேன்.

என்னுடன் துணையாக வந்த டாக்டர் என்னை ஒரு ஏளனமான புன்முறுவலுடன் நோக்கினார்.

"உன் கண்ணீரை வீணாக்காதே. அவன் நிச்சயமாக இறந்து விட்டான் என்று தெரிவதற்கு முன்னால் அழுவானேன்?" என்று குறிப்பிட்டார்.

எங்கள் கப்பல் கல்கத்தாவை சென்றடைந்த போது மறுபடியும் டாக்டர் மிஸ்ரா என்னுடன் வந்தார். என் கடைசி தம்பி விஷ்ணு என்னை வரவேற்க துறைமுகத்தில் காத்திருந்தான்.

அவன் எதுவும் கூறுவதற்கு முன்னாலேயே "அனந்தா உயிரை விட்டு விட்டான் என்பது எனக்கு தெரியும். எப்பொழுது இறந்தான் என்பது எனக்கும், இந்த டாக்டருக்கும் தயவுசெய்து சொல்" என்றேன்.

விஷ்ணு தேதியை குறிப்பிட்டான். நான் ஷாங்காயில் ஞாபகார்த்த பொருட்கள் வாங்கிய அதே நாள் தான்!

"இங்கே பார்..." டாக்டர் மிஸ்ரா ஆச்சரியத்துடன் கூவினார்.

"இந்த விஷயம் எங்காவது பரவி விடப்போகிறது. பேராசிரியர்கள் உள்மனங்களின் உரையாடல்" என்ற தலைப்பில் மருத்துவப் படிப்பில் இன்னும் ஒரு வருடம் சேர்த்து விடுவார்கள். ஏற்கனவே அது மிக நீண்டு இருக்கிறது" என்றார்....

- ஒரு யோகியின் சுய சரிதையிலிருந்து-
==============================================================================================

என்ன ஒரு கண்டுபிடிப்பு...!


======================================================================================================

'வானம் வெளித்த பின்னும்' என்கிற பெயரில் ஒரு வலைத்தளம். குழந்தை நிலா ஹேமா அதன் உரிமையாளர். பேஸ்புக்கிலும் அவரைக் காணோம். வலைத்தளத்திலும் அவர் தந்தை மறைவுக்குப்பின் அவர் வருவதில்லை. அழகிய கவிதைகள் எழுதுவதில் மன்னி / விற்பன்னி அவர். ஸ்விஸ்ஸில் இருந்தார். அவரின் பழைய கவிதைகளிலிருந்து சில இன்று உங்கள் பார்வைக்கு..

எங்கிருக்கிறீர்கள் ஹேமா?

ஒரு கோடு !
அதில் ஒரு வளைவு !
அதற்குள் ஒரு புள்ளி நீ !
இதற்குள் நான் எங்கே !


என் மௌனங்களைத்
தேக்கி வைத்திருந்தேன்.
அத்தனையும் உடைத்தெறிகிறது
உன் பெயர்.
யாரோ உன்னை அழைக்க
நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !

தடுமாறும் மனதின்
தகறாறு நீ.
எங்கே என் காதலைப்
பார்த்து விடுவாயோ
பயத்திலே மறைக்கிறேன் என் கண்களை !

==================================================================================================

கதையோ, நிஜமோ...   இப்படி ஏதாவது கிளப்பி விட்டு விடுவார்கள்.  சென்று பார்க்க மிக ஆவலாக இருக்கும்.  எங்கே?  அமிஞ்சிக்கரை தாண்ட முடியவில்லை!  வானமேறி வைகுண்டம் போவதெப்போ...



===========================================================================================================


பேஸ்புக்கில் பகிர்ந்ததுதான்....

சில ஓல்ட் ஜோக்ஸ் :
ஆசிரியர் : "குமார் இங்க வா... வந்து 'வர்ல்ட் மேப்'ல அமெரிக்காவைக் காட்டு..."
குமார் அமெரிக்காவை கைவைத்துக் காட்டுகிறான்.
ஆசிரியர் : "வெரி குட்! ரூபா... அமெரிக்காவைக் கண்டு பிடித்தது யார்?"
ரூபா : "குமார் ஸார்!"
ஆசிரியர் : "#$&***&#$
ஆசிரியர் : "ராஜா.... ஆஸ்திரேலியா எங்கே இருக்கு... காட்டு"
ராஜா : "தெரியவில்லை ஸார்!"
ஆசிரியர் : "கழுதை... பெஞ்சு மேல ஏறி நில்லு!"
ராஜா : "ஏறி நின்னுப் பார்த்தா தெரியுமா ஸார்?"
ஆசிரியர் : "தீபக்! இந்தியாவைக் காட்டு"
தீபக் : "நோ.... இந்தியாவை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன் ஸார்!"

==================================================================================================

அப்பாடி..  ஒரு வழியா முடிஞ்சுது...  அடுத்த வியாழன்தானே மறுபடி...  பொழைச்சேன்!


104 கருத்துகள்:

  1. உண்மைதான். வேலை வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அது வெற்றி பெறுவது நம் உழைப்பிலும், எதை எதை சந்தைப்படுத்தலாம் என்று புரிந்துகொள்வதிலும் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. கவிதை நன்றாக இருக்கிறது. கார்வண்ண வானில் மின்னல் தீற்றுகள் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமா ஒரு திறமையான கவிதாயினி.

      நீக்கு
    2. //விர்ப்பன்னி// திருத்துங்க ஶ்ரீராம். ஹேமா விர்ப்பன்னி இல்லை. விற்பன்னி. அர்த்தமே மாறிப் போச்சே! :(

      நீக்கு
  3. ஒரு யோகியின் சுய சரிதை... முதன் முதலில் படித்து ஆச்சர்யப்பட்ட இத்தகைய வரிசைப் புத்தகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வைத்திருக்கும் இதே போன்றதொரு இன்னொரு புத்தகத்தை வாசிக்க ஆசை.

      நீக்கு
    2. அது போல மூன்று புத்தகங்கள். அதில் ஒன்று கீசா மேடத்திடம். எப்போது வருதோ அப்போது உங்களுக்குத் தருகிறேன். மிக அருமையான புத்தகம்(ங்கள்)

      நீக்கு
    3. என்னஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆது? என்னிடமா? புத்தக்மா? நெல்லை கொடுத்தாரா? எப்போ? எங்கே? என்னிக்கு? :))))

      நீக்கு
    4. மத்த ரெண்டையும் எப்போ அனுப்பப் போறீங்க நெல்லை?

      நீக்கு
    5. படிக்கும்போதே தெரிந்து விட்டது. யோகியின் சுயசரிதை என்பது.

      நீக்கு
    6. அது போல மூன்று புத்தகங்களோ?  சரிதான்.  ஒன்றின் தொடர்ச்சியாய் மற்றொன்றா?

      நீக்கு
    7. //என்னிடமா? புத்தக்மா? நெல்லை கொடுத்தாரா? எப்போ? எங்கே? என்னிக்கு? //

      // மத்த ரெண்டையும் எப்போ அனுப்பப் போறீங்க நெல்லை?.. //

      முரண் கீதா அக்கா!! :))


      நீக்கு
    8. இரண்டுமே நெல்லையிடம் வம்புக்குத் தானே!

      நீக்கு
    9. ஹிஹிஹி... அக்கா தம்பி சண்டையில் நான் வேற..!!

      நீக்கு
  4. விக்கலின் சிக்கல் அறிந்தேன். அடுத்து தும்மலின் தொல்லை வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு காலத்தில் எனக்கு இப்படித் தான் விக்கல் வந்து கொண்டிருந்தது.ஆயுர்வேத மருத்துவத்தில் (ஜாம்நகரில் இருந்தோம் அப்போ) சரியாச்சு.

      நீக்கு
    2. எனக்கு என்ன செய்தாலும் என்னை விட்டுப் போகாதது இருமல்!  'ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்' என்று பாடுமளவு இடையில் இக்கருமல் வந்து விடுகிறது!

      நீக்கு
  5. நகைச்சுவை அரதப்பழசு... ரசிக்கலமுடியவில்லை

    பதிலளிநீக்கு
  6. வாய்ப்புகள் எங்கெங்கும் இருக்கத்தான் செய்கின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்வதில்தான் திறமை இருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. வேலை வாய்ப்புகள் பற்றிய விளக்கக் கட்டுரை அருமை. இத்தனை வேலைகள் செய்கின்றனர்/செய்ய முடியும் என்பதே இப்போத் தான் தெரிந்து கொண்டேன். சமையல் வேலையில் நல்ல காசு கிடைக்கும் என்பது என்னமோ சரியானது. நான்கு பேருக்குச் சமைத்தால் அதைக் குறைந்தது ஆறுபேருக்காவது கொடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. கவிதை ஓகே. தலை முடியைப் பாதுகாக்க இப்படிக் கூட வழி இருக்கா?

    பதிலளிநீக்கு
  9. கிளியோபாட்ரா பற்றித்தான் எத்தனை செய்திகள்!

    பதிலளிநீக்கு
  10. இன்றைக்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. விரல்கள் பத்தும் மூலதனம் -என்று தாராபாரதி சொன்னது உண்மையாகி வருகிறது.

    பதிலளிநீக்கு
  11. பத்தாம் வகுப்பு அல்லது பதினோராம் வகுப்பு படிக்கும்போது டைப்ரைட்டிங் க்ளாஸ் போகவேண்டும். பள்ளிப் படிப்பு முடிந்த உடனேயே ஒரு தரம் எம்பிளாய்மென்ட் எக்சேஞ்சில் பதிவு செய்து வைக்கவேண்டும். கல்லூரிப் படிப்பு முடித்ததும் மறுபடி அங்கு சென்று அப்டேட் செய்யவேண்டும்.

    கல்லூரிப் படிப்பு முடிந்த உடன் சர்வீஸ் கமிஷன் பரீட்சைகள் மேல் கவனம் வைக்க வேண்டும். அதற்கான புத்தகங்கள், //

    அதே அதே ஸ்ரீராம்...பழைய நினைவுகள். டைப்ரைட்டிங்க் ஹையர் பாஸ் செய்து, எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சில் அதையும் சேர்த்து.....நினைவுகளைக் கிளப்பி விட்டுவிட்டீர்கள். சில நினைவுகளை நான் மீண்டும் நினைக்கக் கூடாது என்று அழிக்க நினைத்து அடியில் இருக்கும் ஹாஹாஹா...எனவே சில்லு சில்லாய் அதில் சேர்த்துக் கொண்டேன் எழுதுவதற்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைக்கக் கூடாது என்று நினைக்குமளவுக்கு என்ன சம்பவம்?

      நீக்கு
  12. அதன் பின் தொடரும் பகுதியும் அதே அதே எனக்கும் என்று சொல்லி அதை எழுதுகிறேன்...(ஹப்பா ஒரு மேட்டர் கிடைத்ததே....மேட்டர் என்னவோ நிறைய இருக்குபாதி பாதி எழுதி....முடித்து வெளியிடத்தான் ஹிஹிஹி)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அனுபவமாக சொல்ல வரவில்லை.  பொது அனுபவமாக சொல்லவந்தேன்.  ஏனெனில் சொல்ல வந்த விஷயம் வேலை வாய்ப்பு!

      நீக்கு
  13. இன்றைய கால கட்டத்தில் வேலை கிடைக்கவில்லை என்று குரல் எழுப்ப முடியாது என்று நினைக்கிறேன். வேலை நமக்குக் கிடைப்பது இல்லை, வேலையை நாம் கையில் எடுக்கும் காலம் இது. பிழைக்க எத்தனை வழிகள்..//

    உண்மை ஸ்ரீராம். ஆனால் அப்படி முயற்சி செய்யாமல், அப்படியே ஏதேனும் வேலையில் இருந்தாலும் படித்த படிப்பிற்கு சம்பளம் இல்லை என்று...பழியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது போடுவதும் இப்போது வரை இருக்கிறது. அவர்கள் நன்கு ஊன்றிப் படிக்கவோ, இல்லை உழைக்கவோ தயாராக இல்லாமல், இருந்தால் எப்படி சம்பளம் கிடைக்கும்? வேலைய்ல் சேர்ந்ததுமே பைக், கார் வீடு என்று வாங்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். தங்களின் முன்னேற்றம் தங்களின் கல்வி, உழைப்பு இதில்தான் இருக்கு என்று புரிந்துகொள்ளாமல்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்த படிப்புக்கு வேலை என்றே சொல்பவர்கள் மாப்பிள்ளை / பெண் கேட்டகரியிலும் இருக்கிறார்கள்!!

      நீக்கு
  14. மற்றொன்று கௌரவம் பார்க்காமல் வேலை செய்யவும் தெரிய வேண்டும்....எல்லோரும் இஞ்சினியர்கள் ஆக வேண்டும் என்று சேர்ந்து அதையும் உருப்படியாகப் பண்ணாமல் அப்புறம் புலம்புவதும்...

    பிழைக்கத் தெரிந்தவர்கள் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திப் பிழைத்துக் கொள்கிறார்கள்தான். நீங்கள் சொல்லியிருப்பது போல் கௌரவமான வாழ்க்கை வாழ முடியும்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ஆச்சர்யம். நானும் 325 ரூபாய் (gross salary) யில் தான் என் உத்தியோக வாழ்க்கையை 1970இல்  தொடங்கினேன். 

    வேலை வாய்ப்பு பற்றி நீங்கள் எழுதியது எல்லாம் நகர பொருளாதாரத்திற்கு பொருந்தும். ஆனால் இந்தியாவில் 80 % மக்கள் கிராமத்தில் வசிக்கிறார்கள். கிராம பொருளாதாரம் சிறிது. ஆகவே service sector என்பதும் சிறிது. ஓலாவும் உபரும் பேப்பர் போடுதலும் எல்லாம் அங்கெ சரியாகாது. உற்பத்தி துறை என்பது கைத்தொழிலாக இருந்தது மறைந்து எல்லாம் முதலாளிகள் கையில். தச்சு, கொல்லர் வேலைகள் கூட தற்போது இயந்திர மயமாகிவிட்டன. அதே போலத்தான் நாற்று நடுதல், அறுவடை செய்தல் போன்றவையும். அரசு சமூக பாதுகாப்பு செய்யாமல்  அவரவர் வேலை தேடிக்கொள்ள வேண்டும் என்று மட்டும் இருந்தால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கும் தான். தமிழ் நாட்டில் சமூகப் பாதுகாப்பு அதிகம். அதனால் தான் பொருளாதாரம் முன்னேற்றம் என்றும் கூற  முடிகிறது. 

    பாட்டுக்கு பாட்டு 
    "கோடு" புள்ளி இல்லை
    "வளைவு" புள்ளி இல்லை 
    "நீ" புள்ளி இல்லை 
    "நான்" புள்ளி உண்டு 
    நான் ஒரு புள்ளி!

    கண்ணை மூடினால் 
    உலகம் இருண்டு விடும் 
    காதலும்? 
    இல்லை 
    காதல் நாணமாய் மாறியது

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே 325 என்பது ஆச்சர்யம்தான்!  ங்கற பொருளாதாரம், கிராம பொருளாதாரம் யோசிக்காமல் போனேன்.  பாட்டுக்குப் பாட்டு...  ம்ம்ம்...   ஓகே!

      நீக்கு
  16. // கல்லூரிப் படிப்பு முடித்ததும் மறுபடி அங்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும்..//

    71/72 களில் அப்டேட் என்ற வார்த்தை எல்லாம் பேச்சு வழக்கில் கிடையாது..

    Renewal தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்டு...    கரெக்டு!  அங்கு காத்திருக்கும் கூட்டம்...

      நீக்கு
  17. சிறப்பான பதிவு..

    பழைய / புதிய நினைவலைகளுக்குள் மூழ்கிப் போனேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  நன்றி.  என்னுடைய முதல் வேலை வாய்ப்புப் பதிவு தஞ்சையில்தான்!  சிவப்பான ஒரு அதிகாரி நிறைய உதவினார்.

      நீக்கு
  18. நகைச்சுவை என்ற பேரில் அது
    இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் சுற்றும்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி..   மறந்து போயிருப்பீர்கள் என்று நினைத்தேன்!

      நீக்கு
  19. அதை ஏற்கெனவே எங்கோ பார்த்திருக்கின்றேன்.. அதற்காக ஒருநாளும் சிரித்ததில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன், பார்த்திருப்பீர்கள். அப்போது படிக்காதவர்கள் யாராவது ரசித்திருப்பார்கள் இல்லையா?

      நீக்கு
  20. சுய தொழில் செய்வதில் குறிப்பாக சாப்பாடு அல்லது வற்றல், வடாம், கொறிப்பதற்கான கார வகை, இனிப்புகள் போன்றவை செய்து விற்பதில் கண்டிப்பாகச் சாமர்த்தியம் வேண்டும்.

    இல்லை என்றால் கொடுத்தும் விலை அதிகம் என்றுசொல்லி கட்டுப்படியாகமல் போவதுமுண்டு.

    எனவே எல்லாமே சாமர்த்தியம் ப்ளஸ் அதிர்ஷ்டம் என்பதில் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இரண்டாவது, நகரத்தில் தான் இவை எல்லாம் என்றும் தோன்றுகிறது. இன்னும் நாகர்கோவில் எங்கள் கிராமம் போன்ற ஊர்களில் சிறு தொழில்களும் நலிவடைந்து விட்டன. சாப்பாடு கூடச்செல்லுபடியாகவில்லை. ஒரு ஆச்சி சொன்னது...

    அண்ணாச்சி கடைகள்தான். என்னதான் அங்கும் போத்தீஸ், மால்கள் வந்தாலும் கோட்டார் அண்ணாச்சிக் கடைகள் இருக்கின்றனதான் முன்ன போல இல்லை மக்கா என்று சொன்னவர், ஹோல்சேல் மற்றும் ரியல் எஸ்டேட் தான் ட்ரென்ட் என்றார். எழுதி வைத்திருக்கிறேன் எங்கள் ஊர் பற்றிச் சொல்லும் பதிவு.... சமீபத்திய அனுபவம்.
    கடைகள் ஒரு பக்கம் பெருகி யாவாரம்....மறுபக்கம் மக்கள் ஏதோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் ஊரில் கண்டது. பிழைக்க வேண்டும் என்றால் நகரங்களுக்கூ வர வேண்டும் ஆனால் அவர்கள் நகரத்திற்கு வந்தால் இது கூடக் கட்டுப்படியாகாது இது போதும் என்று கிராமத்தை விட்டு நகரவில்லை. இது இரு பக்கம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அந்தப் பக்கத்துக்கான பார்வை வேறுதான்.

      நீக்கு
  22. எங்கள் ஊர்ப்பக்கம் இன்னும் ஊபர் ஓலா எதுவும் வரவில்லை. திருவனந்தபுரத்திலும் கூட இல்லை என்றே தோன்றுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  23. விக்கல் தகவல்கள் நன்று.

    அடுத்து கதையில் - ஆரம்பத்தில் அனந்தா என்று விளித்துச் சொல்வதாக வருகிறது ....ஆனால், //என் அண்ணன் அனந்தாவின் விருந்தாளியாக //..

    கதை சொல்லி அனந்தாவா இல்லை அண்ணன் அனந்தாவா? குழப்பமா ருக்கே...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. "இந்த விஷயம் எங்காவது பரவி விடப்போகிறது. பேராசிரியர்கள் உள்மனங்களின் உரையாடல்" என்ற தலைப்பில் மருத்துவப் படிப்பில் இன்னும் ஒரு வருடம் சேர்த்து விடுவார்கள். ஏற்கனவே அது மிக நீண்டு இருக்கிறது" என்றார்....//

    !!!!!!!!! ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  25. தலை முடியில் பூட்டு - சிம்பாலிக்கா?

    ஹாஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  26. கவிதைகள் அருமை..ஹேமா அவர்களுக்கு வாழ்த்துகள்

    கிளியோபட்ரா செய்தி உண்மையாக இருக்கலாமே.

    ஜோக் ரசித்தேன் ஏற்கனவே வாசித்துமிருக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமாவை வலையில் பார்த்து பல வருடங்கள் ஆகின்றன.  திறமையான கவிதாயினி.  பேஸ்புக்கிலும் காணோம்.

      நீக்கு
  27. கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம் -
    கண்டவர் உண்டோ சொல் என் தோழா...


    கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து -
    காண்பதில் தான் இன்பம் என் தோழா...


    இரப்போர்க்கு ஈதலிலும், இரந்துண்டு வாழ்வதிலும் -
    இன்பம் உண்டாவதில்லை என் தோழா...


    அரிய கைத் தொழில் செய்து, அனைவரும் பகிர்ந்துண்டு -
    அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா...


    உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் -
    உண்டாவதெங்கே சொல் என் தோழா...


    உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் -
    உண்டாகும் என்றே சொல் என் தோழா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவறல் தலைமை:-

      ஏழைகளின் சிறுசேமிப்பு வங்கியான அஞ்சலக சேவைக்கான GST வரிவிலக்கு ரத்து...

      நீக்கு
    2. கவிதை அருமை. வியாழன் கவிதைக் கிழமை ஆகலாம்.
      Jayakumar

      நீக்கு
    3. ஹா.. ஹா.. ஹா... ஜெயக்குமார் சார்!


      நன்றி DD.

      நீக்கு
  28. ஹேமா அவர்களின் இருண்டு இருக்கும் வலைப்பூவில், மின்னும் கவி வரிகளை மறக்க முடியாதது...

    பதிலளிநீக்கு
  29. உண்மைதான் முன்பைவிட இப்பொழுது வேலைகள் பெறுகிதான் விட்டது ஜி.

    ஹேமாவின் கவிதைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம் வேலைகள் பெருகிவிட்டது மற்றொரு உதாரணம் வீட்டிலிருந்து சாப்பாடு செய்து விற்பது என்பதை விட முதலீடு இல்லாமல், இப்போது சமையல் செய்து தருவதற்கு ஆட்கள் அதிகம் தேவையாக இருக்கிறது. பெரும்பாலும் இருவரும் வேலைக்குச் செல்வதால் அலல்து வீட்டில் பெண்கள் வீட்டில் இருந்தாலும் குழந்தைகள் கவனிப்பு, சமையலில் ஆர்வமின்மை அல்ல்து காலையில் எழுந்து பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புதல் என்று சமையலுக்கு ஒரு ஆள், வீட்டு வேலைக்கு ஒரு ஆள்.

    சமையலுக்கு ஒரு நேரம் சமைக்க 8 - 9 ஆயிரம். அதுவும் சொல்லும் மெனு மட்டும் தான் அதிகப்படியாக நபர்கள் வந்தால் கொஞ்சம் கூடுதல் டிஃபன் ஏதாவது செய்யச் சொன்னால் நோ அல்லது ரேட். ஞாயிறு கண்டிப்பாக விடுமுறை. பின்னே அவங்களுக்கும் ரெஸ்ட் வேண்டாமா? தனக்கென்ற நேரம் வேண்டுமே...

    சிலர் காய் நறுக்க மாட்டார்கள். வீட்டு வேலை செய்யும் நபர் நறுக்கி வைத்துவிடுவார்...இவர்களின் வேலை ஏத்தி இறக்குவது மட்டுமே. ஒரே வீட்டில் மூன்று வேளையும் என்றால் 25 ஆயிரம் மினிமம்

    ஒரு நேரம் சமையல் அல்லது டிஃபன் என்றால் குடியிருப்பு வளாகத்திலேயே ஒவ்வொருவரின் நேரம் பொருத்து அதை சமாளித்து 4 வீடுகள் பிடித்துவிடுகிறார்கள். அதன் பின் சிலருக்கு மாலை வேண்டும் என்றால் அது தனி...எனவே ஒரு நாளைக்கு 5 வீடுகள்

    ஒரு வீட்டில் ஒரு வேளை வீட்டு வேலை செய்ய - துணி உலர்த்தி பெருக்கி துடைத்து பாத்திரம் தேய்த்து எல்லாம் செய்ய 5-6 ஆயிரம்

    இரு வேளை , துணி எடுத்து வந்து மடித்து வைத்து செடி இருந்தால் அதற்குத் தண்ணீர் விட்டு என்றால் 10 ஆயிரம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வளாகத்தில், மாதம் தரை பெருக்கி துடைக்க ஒரு வீட்டிற்கு 3000 ரூ. 9 மணிக்கு வந்து 6 மணி வரைல, 5-6 வீட்டில் வேலை பார்த்துவிடுவார்கள். இதில் துணி வாஷிங் மெஷினில் போட்டு காயப்போட 2000 ரூ, பாத்திரம் அலம்ப 2000 ரூ என்று வேறு ஆப்ஷன்ஸ்.

      ஒரு வீட்டில் ஒருத்தன், சப்பாத்தி சப்ஜி செய்துகொடுக்கிறான். அதனை 4 வீடுகள் பகிர்ந்துகொள்கின்றன. ஒரு வேளை உணவு செய்ய 200 ரூ என்றெல்லாம் ரேட் இருக்கிறது.

      நீக்கு
    2. ஆம், இதில் சமையல் வேலை, வீட்டு வேலையை நான் சொல்லாமல் விட்டிருக்கிறேன். குறிப்பாக பெண்கள் வேலை.

      நீக்கு
    3. சப்பாத்தி சப்ஜி மட்டும் செய்து சிம்பிளாக சம்பாதிக்கிறார் போல..

      நீக்கு
  31. எங்க வளாகத்துக்கே on call serviceனு ப்ளம்பர், எலெக்ட்ரிகல், கார்ப்பெண்டர் வேலையை யாரேனும் ஆரம்பித்தால் நல்லாவே கல்லா கட்டலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி, அங்கே 'அர்பன்  ஆப்' லாம் கிடையாதா?

      நீக்கு
    2. இங்கே ஒரு பையர் இஞ்சினிரிங் முடிச்சுட்டு (சிவில்) இந்த மாதிரி ஒரு சேவை மையம் ஆரம்பிச்சுச் செய்துட்டு இருந்தார். குறைந்த கட்டணம். நிறைந்த சேவை. எங்களுக்கு ரொம்ப வசதியா இருந்தது. பின்னாடி பெரிய வேலை கிடைச்சுடுத்துப் போல! நிறுத்திட்டார். ஆனால் அவரிடம் வேலை செய்த ஆட்களே இப்போவும் எங்களுக்கு ஏசியைப் பராமரிக்க வருகின்றனர்.

      நீக்கு
    3. ஆமாம், அப்படி சில இடங்கள் சென்னையிலும் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
    நீங்கள் சொல்லும் வேலைகளின் பட்டியல் உண்மைதான். சிறப்பாக தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்.

    அந்த காலத்தில் "குலத் தொழில் கல்லாமல் வரும்" என்பதற்கேற்ப அந்தந்த தொழிலாளிகளின் சந்ததியினர் மட்டுமே அந்தந்த வேலைகளை கற்றோ, கல்லாமலோ செய்து வந்தார்கள். இப்போது எல்லா தொழில்களும் எல்லோரும் கற்று விட்டார்கள். அப்படி கற்கவும் நிறைய வாய்ப்புக்கள் பெருகி விட்டன. அதனால் வேலைகளுக்கு பஞ்சமில்லை. மக்களுக்கு பணத்தின் பயன்பாடு, தேவைகள் என பெருகி விட்டதால், படித்திருந்தாலும், அந்தப் படிப்புக்கு ஏற்ற வேலைதான் கிடைக்க வேண்டுமென அந்தக்காலம் போல் காத்திருக்காமல், தெரியாத வேலைகளையும் தெரிந்து கொண்டு அதில் முன்னேறு கிறார்கள். நல்ல பகிர்வு.

    ஹேமா அவர்களின் கவிதைகள் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  33. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  34. "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்பார்கள். உழைக்க விருப்பம் இருந்தால் வேலை வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
    அவர் அவர்களுக்கு தெரிந்த கைவேலையை செய்து ஆண், பெண் பிழைத்து கொள்ளலாம். முன்பை விட இப்போது வசதி வாய்ப்புகள் அதிகம். விளம்பரம், பேச்சுத்திறமை செய்யும் தொழிலில் நேர்மை,கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் உயர்ந்து விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  அவரவர் எந்த வேலையாயிருந்தாலும் சரி என்று கையிலெடுக்கத் தயாராய் இருக்கவேண்டும்.

      நீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    மற்ற செய்திகளாக விக்கலைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். எனக்கும் ஒரு தடவை பொறை ஏறி, விக்கல் வந்து நீண்ட நேரம் அவஸ்தை பட்டு விட்டேன். என்ன முயற்சித்தும் நிற்கவே யில்லை. அதை மறக்கவே முடியாது.

    யோகியின் சுயசரிதை நன்றாக உள்ளது. நம் அசட்டு எண்ணங்கள் எங்கே பலிதமாகி விடுமோ என்ற பயத்துடன் சிந்தனைகள் வந்தாலும், நம்மையும் மீறி ஏதாவது இந்த மாதிரி அசட்டு எண்ணங்கள் மனதுள் வந்து விடுகின்றன.

    "மனதையடக்க வழியொன்றும் அறிகிலேன். முருகா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கனவே.. . சிக்கென பற்றினேன் செப்பீடுவீர் உபதேசம்" என்று கந்தகுருவை எப்போதும் துதிக்கும் மனதையும் "அவன்" திருவடியை மட்டுமே நினைக்கும் திறனையும் இறைவன் அருள வேண்டும்.

    கடலுக்கடியில் இருக்கும் கலையாத அரண்மனை ஆச்சரிய மூட்டுகிறது. அதற்கு நீங்கள் தந்த கமெண்ட்ஸ் உண்மை. நாம் இதையெல்லாம் எப்போது கண்ணால் பார்ப்பது.?

    இயற்கையான தலைமுடி உதிராமல் இருக்க எத்தனையோ மருத்துவங்கள் வந்து விட்டன. முடி கொட்டுவதற்கும் அலை பாயும் மனதின் எண்ணங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இந்தப் பூட்டும் ஒரு ஸ்டைலாக இருக்கிறதென அனைவரும் பின்பற்ற துவங்கி விடுவார்கள்.

    ஜோக்குகள் அனைத்தும் சிரிக்கும்படி இருக்கின்றன.

    இந்த வாரம் விடை பெறும் பையனின், சிரிப்பில் நிறைந்த அழகு முகத்தில் ஒரு நிம்மதியும் தெரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தையும் ரசித்து கமெண்ட்டியதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  36. இரண்டு பின்னூட்டங்கள் போட்டேன் இப்போது இல்லையே!

    பதிலளிநீக்கு
  37. ஹேமாவின் கவிதை அருமை.
    தினமலர் செய்தி விக்கலை பற்றி அறிந்து கொண்டேன், யோகியிம் சுயசரிதை பகிர்வு உள்ளுணர்வுகள் சில பலிக்கும் என்று சொல்லுவது உண்மை.
    தினமலர் வாரமலர் பகிர்வு வியப்புதான் (கடலுக்கு அடியில் வைத்த பொருட்கள் வைத்த படியே இருப்பது )

    கதம்பம் நன்றாக இருக்கிறது.
    சிரிப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  38. இக்காலம் வேலை வாய்ப்புகள் அதிகம்தான்.

    ஹேமா சிறந்த கவிதாயினி முன்பு நானும் சென்று படிப்பதுண்டு.


    பதிலளிநீக்கு
  39. //கொஞ்சம் வாடிக்கையாளர்களை பிடித்ததும், அவர்களை இவர்கள் தனியாக தங்கள் அலைபேசி நம்பர் கொடுத்து வாடிக்கையாக்கிக் கொள்கிறார்கள்.

    நம்ம புத்தி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இப்படி தனித்தனி குழுக்களாக மெம்பர்ஸ் பிடித்து வட்டம் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

      நீக்கு
  40. வானம் வெளித்த பின்னும் கூட்டாஞ்சோறு இரண்டிலும் எழுதினார் ஹேமா. அந்த தளங்கள் பக்கம் போய் வருடக்கணக்கிலாகிறது.

    பதிலளிநீக்கு
  41. அந்த வகையில் எங்கள் பிலாக் வழி தனி வழி. தொடர்ந்து எழுதி வரும் உங்கள் முனைப்பும் ஈடுபாடும் அசர வைக்கின்றன. (அடுத்த வியாழன் தான் என்று சலிப்பது போல் நடித்தாலும்)

    பதிலளிநீக்கு
  42. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. வேலை வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது. அது குறித்த உங்களது எண்ணங்கள் சிறப்பு.

    கவிதை நன்று. பல வலைஞர்கள் இப்போது எழுதுவதே இல்லை என்பது வேதனையான உண்மை. அந்தப் பட்டியலில் எனது பெயரும் சேர்ந்து விடலாம் விரைவில்...... :(

    தலைமுடியில் பூட்டு - :(

    பதிவின் அனைத்து பகுதிகளையும் ரசித்தேன். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!