வியாழன், 23 ஜூன், 2022

யாரைச் சொல்லி என்ன பயன்..

 பயமாய் இருக்கிறது...   இந்த சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே போவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.

சில சமயம் நாம் நடக்கவேண்டும் என்று நினைப்பதைவிட நடந்துவிடுமோ என்று பயப்படும் விஷயம் நடந்து விடும்.  ஒருவேளை அது கட்டாயம் நடக்கப்போகிறது என்பதால்தான் நமக்கு அந்த பயமே கூட  வருகிறதோ என்னவோ..   என் இரண்டாவது மகன் பிறக்கும் சமயம்,  அந்நாளில் நள்ளிரவில் வண்டி தேடுவது சிரமம் என்று பிரசவ வலி நள்ளிரவில் மட்டும் வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.   நள்ளிரவில்தான் வந்ததது!

எல்லா ஊர்களிலும் நெரிசல் இப்படிதான் இருக்கும் என்றாலும் நான் சென்னையில் இருப்பதாலும், தினசரி அந்த நெரிசலில் நசுங்குவதாலும் சென்னை பற்றி எழுதத் தோன்றுகிறது.

அதுவும் மாலையில் ஐந்தரை முதல் ஏழு மணி வரை நெ...ரி.......ச........ல்...  காலையும்தான்.  இடையில் கொஞ்ச நேரம் நெரிசல் குறைவாய் இருக்குமே தவிர இல்லாமல் இருக்காது!

ஆம்புலன்ஸ் வண்டியின் சைரன் கேட்டாலே எங்கள் ஆட்டோக்காரர் உட்பட எல்லோரும் சட்டென ஒதுங்கி வழி விடுவார்கள்.  நம்மைப்போன்ற ஒரு ஜீவன்தான் உள்ளே உயிருக்குப் போராடுகிறது,  நாளை நமக்கும் வரலாம் இந்நிலை என்கிற எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும்.

நேற்றைய ஒரு ஆம்புலன்ஸ் நிகழ்வைக் கண்டபோது நமக்கு இந்நிலை வரக்கூடாது என்று வேண்டத் தோன்றியது. வந்தாலும் இதுபோன்ற பயங்கர நெரிசல் நேரத்தில் வரக்கூடாது.  செல்வதற்கே இடமில்லாத சாலை.  முன்னேற முடியாமல் வாகனக்கூட்டம்.  அடைத்துக் கொண்டு நிற்கும் நெரிசலில் நிற்கும் வண்டிகள் எங்கு ஒதுங்குவார்கள்?  இடம்?

ஆனால் இடமிருந்தும் மனமில்லாத பேர்வழிகளும்  உண்டு போலும்.  அந்த ஆம்புலன்ஸையே ஓவர்டேக் செய்யும் பைக்கர்கள்.  அதன் பின்னாலேயே போனால் நமக்கும் சீக்கிரம் செல்ல வழி கிடைக்கும் என்று விரையும் வாகன ஓட்டிகள்.  சிக்னலில் நிற்கும் போக்குவரத்துக்கு காவலருக்கு இந்த சைரன் ஒலி கேட்காமலா இருக்கும்?  முன்னமே அந்தப் பாதையை சீர் செய்ய வேண்டாமா?  அப்படிச் செய்யவில்லை என்பதோடு,  போக்குவரத்தை அந்த இடத்தில் நிறுத்தி வைத்து எதிர் சைடுக்கு வழிகாட்டி போகவிட்டுக் கொண்டிருந்த இரு காவலர்களை என்ன சொல்வது?  சில நிமிடங்களுக்குப் பின் இந்தப் பக்கம் போக வழிகாட்டுகிறார்.  நேற்று நான் ரொம்பவே நொந்துபோன காட்சி அது.

மனதில் ஒரு வெள்ளைக்கோட்டு மருத்துவர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி.."ஸாரி..   ஒரு இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் கொண்டு வந்திருந்தால் கூட காப்பாற்றி இருக்கலாம்" என்று சொல்லும் சினிமாக் காட்சி நினைவுக்கு வந்தது.

இரண்டு மூன்று நாட்களாய் மழை.  சாலைகளை பார்க்க வேண்டுமே...   'ஏற்கெனவே துர்க்குணி, அதிலும் கர்ப்பிணி' என்பார்கள்!  அதுபோல் சாலைகள் நெரிசல் ஏற்கெனவே லட்சணம்.  அதில் மெட்ரோ பணிகள் வேறு..  இதில் மழை.  ஒரு மழைக்குத் தாங்காத சாலைகள் போடுவோரை என்ன சொல்வது?  இத்தனை காலம் யார் யாரோ ஆட்சி செய்கிறார்கள்.  ஆனால் சாலைகளில் தேங்கும் மழை நீர் உடனடியாக வடியும் வசதியை இவர்களால் செய்ய முடியவில்லை. நெரிசல் இலலாத போக்குவரத்தை இவர்களால் தரமுடியவில்லை.  வேலைக்குச், கல்லூரி, பள்ளிகளுக்குச் சென்று திரும்பும் ஜனங்கள் நிம்மதியாய் நேரத்துக்கு வீடு சேரும் வசதியைக் கூட செய்ய முடியாத அரசாங்கங்கள்..


பஸ்ஸின் பின்னால் எழுதி இருக்கும் வார்த்தைகளைக் கவனியுங்கள்.  முதல் வரி வடிகட்டின பொய்.  இந்த வண்டிக்காரர் தாண்டிச் செல்ல நினைத்த ஆம்புலன்சுக்குக்கூட வழி தரவில்லை.  அந்த முயற்சியே இல்லை.  எங்களால் அந்த பஸ்ஸை முந்திச் செல்லவே முடியவில்லை.  வேகம்...  வேகம்...


இரண்டாவது வரி 'கவனம்' என்று யாருக்குச் சொல்கிறார்கள்?  நமக்குதான்!  "கல்லூரி வாகனம், மாணவ, மாணவியர்கள் இறங்குவார்கள், கவனமாகச் செல்லுங்கள், பாவம் குழந்தைகள்" என்ற அர்த்தத்துக்குத்தானே மனம் செல்கிறது?  இப்போதைய நிலைமையில் இதன் அர்த்தம் "கவனம்..  குறைந்த சம்பளத்தில் வயது குறைந்த ஓட்டுனர்களை வேலைக்கு வைத்திருக்கிறோம்.  அவர் காதில் ஹெட்ஃபோன் மாட்டி பாட்டு கேட்டபடியே ஓட்டிக் கொண்டிருப்பார்.  நீங்கள்தான் கவனமாகச் செல்லவேண்டும்!"  

நமக்கு வெகு அருகே பின்னால் வந்து "பாய்ங்" என்று பெரிய ஹார்னை அலறவிடுவார் பாருங்கள்..  இருசக்கர ஓட்டிகள் தடுமாறித்தான் போனார்கள்.  எங்கள் ஆட்டோவே ஒரு நொடி தடுமாறியது.

இன்னின்ன வண்டிக்கு இன்னின்ன அளவில் ஒலிக்கும் ஹார்ன்தான் வைக்கவேண்டும் என்று கட்டுப்பாடு கிடையாதா?  இந்த பஸ் உட்பட சில வண்டிகள் - சிறிய வண்டிகள் கூட - மின் ரயில் வண்டி ஹார்ன் போல அருகில் வந்து அலறவிடுவது அடிக்கடி காணமுடிகிறது.

இருபது நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை தினசரி குறைந்தது ஒன்றரை மணிநேரத்தில் கடந்து கொண்டிருக்கிறேன்.

எங்கள் வீடு இருக்கும் இடத்துக்குச் செல்லும் உட்புறச் சாலைகள் படுமோசமாக, கன்றாவியாகத்தான் இருக்கிறது, நான் இங்கு வந்த இரண்டரை வருடங்களாக..   வார்ட் தேர்தல் வரட்டும், மாநகராட்சி தேர்தல் முடியட்டும் என்றார்கள். எல்லாம் எப்பவோ முடிந்து விட்டது.  அவற்றை செப்பனிட இதுவரை ஒரு சிறு முயற்சி கூட எடுக்கவில்லை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள்.  யாராவது புகார் செய்தால் அவர்கள் மேல் விரோதம் பாராட்டுவதில் மட்டும் குறைவில்லை.

"யாரைச் சொல்லி என்ன பயன்..  என் வழக்கு தீரவில்லை!"

==========================================================================================================

யுகே யுகே சம்பவாமி 

கல்கியைக் காணோம் 
அதர்மம் எங்கெல்லாம் என்றெல்லாம் 
தலை தூக்குகிறதோ 
அன்றெல்லாம் அங்கெல்லாம் 
நான் தோன்றி 
அதர்மத்தை அழிப்பேன் 
என்று சொன்ன 
கல்கியைக் காணோம்.

ஆகாய மாளிகையில் 
அலேக்காய்த் தூக்கி 
மேகப் புகையால் 
சுற்றிக் கவர் செய்து 
நடப்பதை அவரும் அறியாமல் 
அவர் அங்கிருப்பதை 
யாரும் அறியாமல்  

யாராவது கடத்தி 
மறைத்து வைத்திருக்கிறார்களா?
அல்லது 
அவர் சொன்னதை அவரே 
மறந்து விட்டாரா?

ஆண்டவனுக்கும் உண்டு போலும் 
செலக்டிவ் அம்னீஷியா 

அளவுகள் எல்லாமே மாறிவிட்ட 
இந்நாளில் 
அதிகமாகி வரும் அதர்மத்தின் 
அளவு அதன் 
முழுக்கொள்ளளவை இன்னும் 
எட்டவில்லை என்று 
எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ 

கனமழைக் காலங்களில் மட்டும் 
காவிரியைத் திறந்து 
கணக்கு காட்டும் அண்டை மாநிலம் போல 
யுகங்களின் முடிவில் 
ஊழியில் ஆழி அழியும் நேரம் 
வந்து, நடந்ததை 
தன் கணக்கில் ஏற்றி விடுவாரோ 

==========================================================================================================

 தென்றல் தளத்திலிருந்து (ஆசிரியர் அரவிந்த் நீலகண்டன்)...
===============================================================================================================

ரசிக்க வைத்த பகிர்வுகள்...
=========================================================================================================
==========================================================================================================


இலக்கியம் முடிஞ்சுது..  கவிதை முடிஞ்சுது..  மற்றவையும் ஓவர்.  ஜோக்ஸ் போட்டா இந்த வியாழனை முடிச்சிடலாம்!

முத்தண்ணாவின் முன்ஜாக்கிரதை!


ஜோக்காகப் போட்டது..   இப்போது எல்லார் வீட்டிலும் நடைமுறையில்!

மிக்சியில் அடிச்சு சாப்பிடுய்யா....

அதற்கு கூட இப்போதெல்லாம் I T Wing வச்சு செய்துடுவாங்க!

வா முனிம்மா...   வா முனிம்மா...

பொழுதுபோக்கு!

======================================================================================================

அடுத்த வியாழனுக்கு இன்னும் ஒரு வாரம் காத்திருக்கணும்!


86 கருத்துகள்:

 1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
  செய்யாமை செய்யாமை நன்று..

  பதிலளிநீக்கு
 2. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
  செய்யாமை செய்யாமை நன்று..

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்..

  வாழ்க வையகம்
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 4. இந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டது மக்கள்தானே... இரண்டு திராவிட கட்சிகளிடமும் எத்தனை முறைதான் ஏமாறுவது ?

  இன்னும் மக்கள் கஷ்டப்படுவார்கள் நானும்தான்...

  வெளி நாட்டில் ஆம்புலன்ஸ் போவதற்கு தனி லைன் அதில் மக்கள் போவதில்லை.

  உலகம் சுற்றும் மோடிக்கு இதெல்லாம் தெரியாதா ?

  கே.ஊ.கி.நாட்டாமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்நாட்டுப் போக்குவரத்துச் சிக்கலுக்கு மோடியைக் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி.  நல்லவேளை ஐ நா சபையைக் கொண்டு வரவில்லை!!  முதல் வரி ஓகே!

   நீக்கு
  2. எல்லா நாடுகளிலும் அப்படிக் கிடையாது. ஆம்புலன்ஸ் சென்றால் வழிவிட்டே ஆகணும், சிக்னலைப் பற்றிக் கவலைப்படாமல் செல்லும். அதைத் தொடர்ந்து எந்த வண்டியும் செல்லமுடியாது.

   இங்கு ஆம்புலன்ஸ் வரும்போது, அப்பாடா.. நல்லது.. அதன் பின்னாலேயே விரைந்து சென்றுவிடலாம் என்று செல்வோரையும், ஹெல்மெட் சட்டத்தை மதிக்காதவரையும், மக்கள் நடை பாதையிலும் இரு சக்கர வாகனங்களில் பயணித்து வேகமாகச் செல்ல முயல்பவர்களையும் ;இது ஏராளம். மக்கள் நடந்து செல்லவே முடியாது) கண்ட இடத்தில் இராணுவத்தை வைத்துச் சுட்டுக் கொன்றாலொழிய தடை செய்ய இயலாது. இதற்கு பிரதமரைக் குறை சொல்லுவதைவிட அந்த மனிதப் புழுக்களைப் பிறக்கவைத்த ஆண்டவனைக் குறை சொல்லுவது சரியாக இருக்கும்.

   நீக்கு
  3. தமிழ் நாட்டு போக்குவரத்துக்கு மோடியை இழுக்கவில்லை இந்தியா முழுவதுக்குமான மாற்றத்தை மோடிதான் செய்ய வேண்டும்.

   அமெரிக்க அதிபர் குஜராத் வந்தபோது சேரி மக்களை மறைத்து நெடுஞ்சுவர் அமைக்க சொன்னது பிரதமரா ? குஜராத் முதல்வரா ?

   நீக்கு
  4. திரு.நெ.த.அவர்களின் கருத்து உண்மை.

   நீக்கு
  5. போக்குவரத்து நெரிசல் தாங்காமல் சட்டென ஏற முடிந்த இடங்களில் பிளாட்பாரத்தில் ஏறி, ஒட்டி தாண்டிச் செல்லும் இரு சக்கர வனங்களை நான் நித்தம் காண்கிறேன்.  ஊபர் பைக்கில் வரும்போது அப்படி என்னையும் அழைத்து வந்திருக்கிறார்கள்!

   நீக்கு
  6. அடுத்தவாரம் முதலமைச்சர் தேவகோட்டை வருகிறார் என்று சொன்னால் ஸ்டாலினா அந்த ஊர் ரோடை கருப்புத் தார் அடித்து மேக்கப் போடுங்கள் என்று சொல்கிறார்? துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள்தானே. அதைச்சாக்கிட்டு பெரிய பில் போடுவதும் அவர்கள்தானே.

   இந்தியா போன்ற பல்வேறு சமூகங்கள் வாழும் நாட்டில் எதையும் சரி செய்வது சுலபமல்ல. 1967க்குப் பிறகு இந்த மாற்றம் தமிழகத்தில் வந்திருக்கிறது என்று ஓரிரண்டைச் சொல்லுங்கள்...

   நீக்கு
  7. நரசிம்மராவ் ஆட்சியில் 60 சதவீதம் வளைந்து நெளிந்த சாலைகள் நேராக்கப்பட்டன...

   அவர் செய்த உருப்படியான காரியமிது இதில் விபத்துகள் குறைந்து இருப்பது உண்மை.

   நீக்கு
  8. எங்கே? தமிழ்நாட்டிலா? நாங்க அப்போ குஜராத் ஜாம் நகரில் இருந்தோம். ஆதலால் நரசிம்மராவ் நேரிடையாகத் தலையிட்டுத் தமிழ்நாட்டுச் சாலைகளைச் செப்பனிட்டது தெரியவே தெரியாமல் போய்விட்டது! :(

   நீக்கு
  9. எனக்குத் தெரிஞ்சுத் தஞ்சை/கும்பகோணம் சாலை சுமார் பனிரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பராமரிப்பு/விரிவாக்கத்துக்குக் காத்திருக்கு. இன்னமும் மனசு வைப்பவர்கள் யாரும் இல்லை. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தே இந்தச் சாலை இப்படித் தான். அதுக்கெல்லாம் ஏன் அவரைச் சொல்றதே இல்லை? ஏனெனில் அவரால் அதெல்லாம் முடியாது என்பது தெளிவாகத் தெரியும். மோதி தான் கொஞ்சமானும் செய்கிறார் என்பதால் அவரைச் சொல்கிறோம்.

   நீக்கு
  10. பொதுவாக மக்கள் தாங்கள் விரும்புவதை நம்புவார்கள்.  விரும்பாததை நம்ப மாட்டார்கள்.

   நீக்கு
  11. ஓ...   இந்த வரிசையில் இருக்கிறது...   பார்த்து விட்டேன் கீதா அக்கா.  யார் அந்தப் பெயரிலா?!

   நீக்கு
 5. போக்குவரத்து பற்றி கூறும் போது சுஜாதா "நகரம்" என்ற சிறுகதையில் விவரிப்பது நினைவில் வந்தது. மதுரை ஒரு ""Brownian motion" இல் இயங்கிக் கொண்டிருந்தது."  என்பார். சுட்டி https://azhiyasudargal.blogspot.com/2011/03/blog-post_20.html . 

  யுகே யுகே சம்பவாமியில்  உள்ள கல்கி தானே தற்போது ஆட்சி செய்கிறார்!  (மத்தியில்). கல்கி என்ற பெயரை மாற்றி பாருங்கள். முற்றிலும் பொருந்தும். 

  திண்டுக்கல்லாருக்கு குறள் பற்றிய பேட்டி மகிழ்ச்சி தரும்.
   
  அங்கப்பிரதக்ஷிணம் படத்தை விட தேனம்மையின் கமெண்ட் பிரமாதம். 

  கடைசி ஜோக் நடப்பது தான். கட்சியில்லாத சு சா வுடன் சிலரும் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். 

  இந்த வாரம் கதம்பம் அவசரம் அவசரமாக தயார் செய்யப்பட்டது போல் உள்ளது.  

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சட்டென உங்களுக்கு அது நினைவுக்கு வந்தது ஆச்சர்யம்.  அபார நினைவாற்றல் உங்களுக்கு.  ஆனால் இதனோடான சம்பந்தம் சரியில்லை!

   கல்கி ஆட்சி...  ஊ..ஹூம்...

   //இந்த வாரம் கதம்பம் அவசரம் அவசரமாக தயார் செய்யப்பட்டது போல் உள்ளது.  //

   ஆச்சர்யம்!  எதை வைத்து சொல்கிறீர்கள்?

   நீக்கு
  2. கவிதைக்கு வழக்கமாக உங்களிடமிருந்து ஒரு எசப்பாட்டு வரும். அதை இன்று காணோமே!

   நீக்கு
  3. //ஆச்சர்யம்!  எதை வைத்து சொல்கிறீர்கள்?//

   //இலக்கியம் முடிஞ்சுது..  கவிதை முடிஞ்சுது..  மற்றவையும் ஓவர்.  ஜோக்ஸ் போட்டா இந்த வியாழனை முடிச்சிடலாம்!//
   //அடுத்த வியாழனுக்கு இன்னும் ஒரு வாரம் காத்திருக்கணும்!//

   Jayakumar

   நீக்கு
  4. ஆ...    இதை வைத்து ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்களா?  ஆனால் அது உண்மைதான் JC ஸார்..    நேற்றிரவு ஒன்பது மணிக்குமேல் தூங்குவதற்குமுன் அவசரமாக தயாரித்த பதிவுதான் இது!  அதுதான் வியந்து போனேன்!

   நீக்கு
 6. கோவில்களில், காலை பத்து மணி ஆகிவிட்டால் நுழைவதோ இல்லை வெவ்வேறு சன்னிதிகளுக்குச் செல்வதோ மிக்க் கடினமாக இருக்கிறது. கருங்கல் தரையில் கால் வைக்க முடிவதில்லை. பெண் ரொம்பவே கஷ்டப்பட்டாள். இது கும்பகோணம் கோயில்களில் என் அனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  அந்தப் பக்க கோவில்கள் எல்லாவே அப்படிதான் இருக்கின்றன.

   நீக்கு
 7. கடைசி ஜோக் பிரமாதம். தேர்தல் காலங்களில், பெறப்போகும் ஒன்று இரண்டு சீட்டுகளுக்காக, அதிலும் பிச்சை போடும் கட்சிச் சின்னத்திலேயே நிற்கப்போகும் கட்சிகள், எங்கள் தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியது, பேச்சுவார்த்தை சுமுகம் எனப் பேட்டி கொடுக்கும் கெத்தே பெரிய நகைச்சுவைதானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலவச டெலிபோன் கனெக்ஷன் மற்றும் வேறு சில வசதிகள் கிடைப்பதால் கண்டபடி தேர்தலில் நிற்கிறார்கள்.  ஆனால் இங்கு போட்டிருக்கும் மதன் ஜோக் வேற லெவல்!!!

   நீக்கு
 8. கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் - பகுதி, புதிய தகவல் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. ஆம்புலன்ஸ்களைத் துரத்திக் கொண்டு செல்லும் நாய்களை சுட்டுத் தள்ளி விடவேண்டும்.. இல்லையேல் தூக்கிப் போட்டு மிதித்து கால் கைகளை உடைத்து விட வேண்டும்..

  அதிக ஜனநாயகம் இந்த நாட்டுக்குத் தேவையே இல்லை..

  அதுசரி..ஷவர்மா இழப்புகளைப் பற்றி யாரும் பேசுவதில்லையே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்புலன்ஸ்களை துரத்திச் செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.  2000 ரூபாய் ஸ்பாட் பைன்.  ஆனால் சட்டென பிடிக்கவோ, நிரூபிக்கவோ முடியாது என்பதாலோ என்னவோ அதை செய்வதில்லை.

   நீக்கு
 10. ஹெல்மெட் கட்டாயம் என்ற பின்னர் தான் சங்கிலி அறுப்புகள் அதிகம் ஆகி இருக்கின்றது.. ஆகவே இதனை நடைமுறைப் படுத்தியவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுபோன்ற விஷயங்களில் நல்லவையும் இருக்கிறது அல்லவையும் இருக்கிறது!  அன்று சிக்னலில் ஒரு நடைவாசி ஹெல்மெட்டுடன் நின்றிருந்ததை பார்த்தேன்.  எதற்கு பாதுகாப்போ!  சட்டென படமெடுக்க முடியாமல் போனது.  இல்லாவிட்டால் இதை எல்லாம் சட்டென கேமிராவில் பிடித்து விடுவேன்!

   நீக்கு
 11. இந்த வாரக் கதம்பம் மக்கள் பிரச்னையைக் கைக்கொண்டு சிறப்பாக உள்ளது..

  வெகு நாட்களுக்குப் பிறகு நிறைவான பதிவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... மாறுபட்ட கோணத்தில் ஒரு கருத்து. நன்றி.

   நீக்கு
 12. // மிக்ஸியில போட்டு அடிச்சி சாப்பிடுய்யா!..//

  நல்லவேளை..

  தொட்டியில போட்டு தண்ணீரை ஊத்தி ஊற வச்சிக் குடிக்கச் சொல்லலை!..

  பதிலளிநீக்கு
 13. இதென்ன... கீழாம்பூர், திருக்குறளைப் பற்றிப் பேச, பிறன் மனை நோக்காப் பேராண்மை, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல் போன்ற அடிப்படைத் தகுதிகள் வேண்டும்னு சொல்லிட்டாரே... ஐயையோ... குறளைப் பற்றிப் பேச ஐந்து சதவிகித தமிழர்கள்தான் தகுதி பெற்றவர்களா(அதுவே அதிகம்... ஒரு இரண்டு சதவிகித மக்கள் இருப்பார்களா... சினிமா கதாநாயகிகள் படம் பார்க்காமல், டாஸ்மாக் ஒதுங்காமல், புலாலுண்ணாமல்...

  பதிலளிநீக்கு
 14. சென்னை போக்குவரத்து சில வருடங்களுக்கு முன்பே நாங்கள் பார்த்து திகைத்ததுண்டு இப்பொழுது இன்னும் சிரமமாக இருக்கும். .

  கவிதை, ஜோக்ஸ், போட்டோஸ்,என இன்றைய பதிவு கலக்கல்.

  அடுத்த வியாழன் வரை காத்திருக்கும் படமும் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 15. 20 வருடம் முன்பே 20 வருடங்களாக இருந்த சென்னையின் நிலவரம், அப்போதே பயமாக இருந்தது... இப்போது படுபயங்கரமாக இருக்கிறது... அவ்வப்போது போகும்போது மாற்றங்களை கண்டு வியப்பும் அடைவேன்...! பதிவில் சொன்ன நிகழ்வே ஒருவித அச்சத்தை தருகிறது... அதனால் கவிதை வரிகளிலும் ஒருவித வெறுப்பு தெரிகிறது...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். போக்குவரத்து நெரிசல் வெறுப்பேற்றும் விதமாகத்தான் இருக்கிறது.

   நீக்கு
 16. திருக்குறள் பேட்டி சிறப்பு... அதிலும் 7 என முடிவு செய்தது... தொடர்பு கொள்ளும் நண்பர்கள் அனைவரிடமும் திருக்குறள் பற்றிய கோப்புக்களை கேட்பது வழக்கம்... அவர்களும் அனுப்பி உள்ளார்கள்... எனது தேடல் அதில் இல்லை... அது கணக்கியல்... 7 எப்படியெல்லாம் கட்டமைக்கப்பட்டுள்ளது எனும் 1) எழுத்துக்கள் கணக்கியல்... 2) சொற்கள் கணக்கியல்...

  பதிலளிநீக்கு
 17. சென்னைப் போக்குவரத்தைப் பற்றிப் படிக்கையில் முகநூலில் கோவை சிநேகிதி ஷோபா ராமகிருஷ்ணன் எழுதி இருந்தது நினைவில் வந்தது. அவர் "பெண்"களூரில் மதியம் இரண்டரை மணி ரயிலைப் பிடிக்கக் காலை பத்துக்கே வீட்டை விட்டுக் கிளம்பி விட்டதாகச் சொன்னார். எனில் போக்குவரத்து நெரிசல் குறித்துச் சொல்லவே வேண்டாம். நாங்களும் 2013 ஆம் ஆண்டில் ஒரு கல்யாணத்துக்குப் போனப்போத் திரும்பி வருகையில் ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். மாலை ஐந்தரைக்கு "பெண்"களூர் கன்டோன்மென்டில் ரயில் கிளம்பும். நாங்க மதியம் இரண்டு மணிக்கே தங்கி இருந்த இடத்தை விட்டுக் கிளம்பி சுமார் நாலரை அளவில் ரயில் நிலையம் வந்தோம். நல்ல வேளையாக எந்த நடைமேடை என்பது தெரிந்து அங்கே போகக் கிடைத்த ஒரு மணி நேரம் போதுமானதாக இருந்தது. இப்போ இன்னும் 10 வருஷங்கள் ஆகிவிட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  பெங்களூரிலும் பயங்கர நெரிசல் இருக்கும் என்று கேள்விபப்ட்டிருக்கிறேன்.  ஆனாலும் என்னைப்பொறுத்து சென்னைதான் கஷ்டம்.  ஏனென்றால் நான் அங்குதானே இருக்கிறேன்!

   நீக்கு
  2. ஓலா உபயோகித்து எவ்வளவு நேரமாகும் என்று பார்த்துக்கொண்டுவிடலாம். இருந்தாலும் எப்போதும் அரை மணி முன்னால் சேர்ந்துவிடும்படி கிளம்புவதுதான் நல்லது, அது பெங்களூராக இருந்தாலும் சென்னையாக இருந்தாலும்

   நீக்கு
  3. முதலில் சொன்ன நேரத்தில் அவ்வப்போது மாடிஃபிகேஷன்ஸ் செய்கிறது ஓலா, ஊபர் ஆகியவை!  காசும் மாறுகிறது!

   நீக்கு
 18. குட்டிப் பயல் கண்களில் கண்ணீர்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டுமே....!!!!

   நீக்கு
 19. //ஸ்டாலினா அந்த ஊர் ரோடை கருப்புத் தார் அடித்து மேக்கப் போடுங்கள் என்று சொல்கிறார்?// அவரை எல்லாம் சொல்ல முடியுமா? சொல்லுவாங்களா? அதுக்கும் சேர்த்து மோதி தானே வாங்கிக் கட்டிக்கணும்! இந்திய ஒன்றியம்,ஒன்றியம்னு சொல்லியே தன்னை அடுத்த பிரதமர் பதவிக்குத் தயார் படுத்திக்கறாரே! சும்மாவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது யார் சொல்லி இருக்கா?  நான் பார்க்கவில்லையே...

   நீக்கு
  2. "பெயரில்லா" சொல்லி இருப்பது. அதன் கீழே தான் இதை பதிலாய்க் கொடுத்தால் ஒரே பிரச்னை! அதான் தனியாக் கொடுத்தேன். :(

   நீக்கு
  3. இதைப் பார்த்தாகவே நினைவில்லை.  மறுபடி ஆராய்கிறேன்.

   நீக்கு
 20. இந்த ப்ளாகர் மேலே உள்ள கருத்தை வெளியிடச் சுமார் 20 நிமிஷங்கள் எடுத்துக் கொண்டது. அதுக்குக் கூடத் தெரியுது பாருங்க! :))))))

  பதிலளிநீக்கு
 21. ஸ்ரீராம் விட்ட இரு வியாழன் பதிவுகள் மற்ற பதிவுகளையும் வாசித்துவிடுகிறேன் விரைவில். வேலை நெரிக்கிறது!!

  இப்ப இந்தப் பதிவு....

  போக்குவரத்து நெரிசல் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு ஸ்ரீராம் அதுவும் ஆம்புலன்ஸ் போவதற்கு வழி இல்லாமல் ஹூம் என்ன மக்களோ என்ன ஆட்சியோ, என்ன போலீஸோ...என்ன விழிப்புணர்வோ? ஒவ்வொரு வீட்டிலும் ஆளுக்கொரு வண்டி இருந்தால் இப்படித்தான்...

  அதே போல குண்டும் குழியும் மெட்ரோ பணிகளும் நோண்டலும் ...என்ன சொன்னாலும் யார் காதிலும் விழப் போவதில்லை நாம் அங்கலாய்த்துக் கொள்வதைத் தவிர ...

  பெங்களூரும் இதற்குக் குறைந்தது இல்லை ஸ்ரீராம். நாங்கள் எங்கள் பகுதியை விட்டு எங்கும் செல்வதில்லை மட்டுமல்ல வண்டியில் செல்லும் அளவிற்கு இப்போது எதுவும் இல்லை என்பதால் தப்பிக்கிறோம் அல்லாமல் தினமும் சென்று வருபவர்களுக்கு ரொம்பவே கடினம்தான் இங்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா..  நேரம் கிடைக்கும்போது படியுங்கள்.  இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் இந்நிலைதான் போல...

   நீக்கு
  2. //வேலை நெரிக்கிறது!!// - எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சை. மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா பார்க்கும்போது, சாப்பாட்டை ருசிச்சு, மார்க் போடறதுக்குக் காசு கொடுக்கறாங்களே என்று நடுவர்களைப் பார்க்கும்போது தோன்றும்.... என்ன சொல்லவர்றேன்னு தெரியுதா கீதா ரங்கன்(க்கா)

   நீக்கு
  3. ////வேலை நெரிக்கிறது!!////

   கண்ணு கரிக்கிறது!

   நீக்கு
 22. நீங்கள் இருக்கும் பகுதியில் போரூர் ஜங்க்ஷன் பற்றிச் சொல்லவே வேண்டாம். நொந்துவிடுவோம்...அங்கிருந்த வரை அனுபவம் உண்டு..உங்களுக்குத் தினமுமே....ஆண்டவா!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயம்பேடு சாலை, மவுண்ட்ரோடு, ஜி எஸ் டி ரோட் எதுவுமே சுகமில்லை கீதா.

   நீக்கு
 23. எங்கள் வீடு இருக்கும் இடத்துக்குச் செல்லும் உட்புறச் சாலைகள் படுமோசமாக, கன்றாவியாகத்தான் இருக்கிறது, //

  நான் வந்த போதே நினைத்துக் கொண்டேன். நான் சாலையிலிருந்து நடந்து வந்ததால் தெரிந்தது...

  கீதா

  பதிலளிநீக்கு
 24. கவிதையின் பல வரிகளையும் மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம். என் மன எண்ணங்கள் பிரதிபலிப்பு!

  அட போங்கப்பா கல்கியாவது வருவதாவது...பிஞ்சுக் குழந்தையை பலாத்காரம் செய்யும் போதும் சுட்டுக் கொல்லும் போதும் வராதவரா வரப் போகிறார்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைச் சொல்லுங்க..   இப்பல்லாம் இல்லாம அப்புறம் அவதாரமெடுத்து வேஸ்ட்!

   நீக்கு
 25. கீழாம்பூர் எஸ் சங்கரசுப்பிரமணியன் தகவல்கள் பேட்டி அனைத்தும் நல்ல தகவல்கள்.

  வண்டியின் பின் நாற்காலி - ஹாஹாஹா நல்ல ஐடியா!!! நான் நினைக்கிறேன் அவர் அந்த நாற்காலியை எதற்கோ எங்கோ எடுத்துச் செல்கிறார் கையில் வைத்துக் கொண்டு செல்ல முடியாது அதனால் இப்படியோ என்று...

  அடுத்த படம் க்ளாசிக்!!! இப்படி ஆங்கிளில் ரசித்து எடுக்கலாம்! ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 26. கோயில் பிராகாரம் அழகான படம் சூப்பர் க்ளிக்! கிணறும் இருப்பது கூடுதல் அழகு.. சுத்தமாக இருக்கிறது

  கீதா

  பதிலளிநீக்கு
 27. ஜோக்ஸ் அனைத்தும் ரசித்தேன் அதிலும் அந்த வெள்ளம் வரவழைப்பது...ஹாஹா ஆனால் நிதர்சனம்..

  சிலிண்டர் இப்போது பல வீடுகளிலும் இப்படித்தானே நீங்கள் சொல்லியிருப்பது போல...

  குட்டிப் பயல் சோகமா அடுத்த வாரம்னு!! அது சரி ! அடுத்த வாரம் வியாழன் பதிவு எழுத வேண்டுமே கண்ணைக் கட்டுதே என்றோ?

  கீதா

  பதிலளிநீக்கு
 28. காலையில் அலுவலகம் செல்லும் போது பார்க்கும் காட்சிகள், மற்றும் ஆம்புலன்ஸ் செய்தி மனதை வருத்தப்பட வைக்கிறது. எந்த ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலும் நல்லபடியாக மருத்துவமனை சென்று நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன்.

  //ஸாரி.. ஒரு இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் கொண்டு வந்திருந்தால் கூட காப்பாற்றி இருக்கலாம்//

  உண்மை. சரியான நேரத்தில் மருத்துவமனை சென்றால் காப்பாற்றி இருக்கலாம் என் அண்ணனை.

  நிறைய பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனுக்கு நேர்ந்த சாலை விபத்து , வழியில் செல்லும் வாகனங்கள் நிறுத்தி நிறுத்தாமல் போன காரணத்தால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல அந்த ஊர் மக்கள் சாலை மறியல் செய்து போராடி மருத்துவமனைக்கு ஒரு பஸ்ஸில் கொண்டு சென்றும் பயனில்லை. காலதாமதம் ஆகி விட்டது. அப்போது இப்போது போல ஆம்புலன்ஸ் வசதி இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அண்ணனுக்கு நேர்ந்த கொடுமை மிகுந்த வருத்தத்தை அளிக்கக் கூடியது.  விதியை தவிர யாரை என்ன சொல்லி மனதை தேற்றிக் கொள்ள முடியும்?  கடந்து எள்ளும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலிகள் மனதில் ஒரு பதட்டத்தை உருவாக்கும்.

   நீக்கு
 29. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்று வலைத்தளம் வர தாமதம். மன்னிக்கவும்.

  போக்குவரத்து நெரிசல் குறித்தும், இன்றைய மக்களின் அவசர, அஜாக்கிரதை குறித்தும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். இதை என்று மக்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களோ என்ற கவலையும், பயமும் பதிவை படிக்கையில் மிகவும் வருகிறது. ஆம்புலன்ஸ் நிகழ்ச்சி மனதில் வேதனையை தருகிறது. என்ன சொல்ல...?

  /கனமழைக் காலங்களில் மட்டும்
  காவிரியைத் திறந்து
  கணக்கு காட்டும் அண்டை மாநிலம் போல
  யுகங்களின் முடிவில்
  ஊழியில் ஆழி அழியும் நேரம்
  வந்து, நடந்ததை
  தன் கணக்கில் ஏற்றி விடுவாரோ /

  கல்கி பகவானும் எப்போது வந்து தன் கணக்கை சரிபார்ப்பார் என்ற கவிதை அருமை.

  அக்னி நட்சத்திரம் வேளையில் அங்கப்பிரதட்சணம் நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. கண்டிப்பாக நம் வேதனை பொறுக்காமல் இங்கு கல்கி வந்தாலும் வந்து விடுவார் என நினைக்கிறேன்.

  ஜோக்குகள் அனைத்தும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  இன்று கண்ணீருடன் விடை பெறும் சிறுவனை அடுத்த வாரம் சிரிக்க வைத்து விடுங்கள். மனது தாங்க முடியவில்லை. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணீருக்கு காரணம் இந்த வியாழன் பதிவு முடிந்து விட்டதே என்பதாக காட்ட நினைத்தேன்!!!    விரிவான கருத்துக்கு நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 30. //கனமழைக் காலங்களில் மட்டும்
  காவிரியைத் திறந்து
  கணக்கு காட்டும் அண்டை மாநிலம் போல//
  இந்தக் கதை இப்போது செல்லாது. மாதங்கள் வாரியாக எவ்வளவு டி.எம்.சி அனுப்பவேண்டும் என்ற கணக்கு உண்டு. மழை பெய்தால் வெள்ளத்தையெல்லாம் அனுப்பிவிட்டு கணக்கு காண்பிக்க முடியாது. By the by, இங்க அடுக்குமாடிக் குடியிருப்புகள் (ஒவ்வொண்ணும் 20-30-35 தளங்கள்) வரும் வேகத்தைப் பார்த்தால், மாதா மாதம் டி.எம்.சி கணக்குக்குப் பதிலாக இன்னும் பத்து வருடங்களில், லிட்டர் கணக்குத்தான் தமிழகத்துக்கு வரும் என்று தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா இடங்களிலுமே இந்நிலைதான் நெல்லை.  சென்னையின் அடுக்கு மாடிக் கட்டிடங்களை பார்க்கும்போது எனக்கும் அப்படித் தோன்றும்.

   நீக்கு
 31. போக்குவரத்து நெரிசல், மக்கள் மனப்பான்மை பற்றிய அலசல், ஆதங்கம் மிகச் சரி.

  கவிதை நன்று. விடை கிடைக்காத வினாக்கள்.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 32. ஆம்புலன்ஸையே ஓவர்டேக் செய்யும் பைக்கர்கள். அதன் பின்னாலேயே போனால் நமக்கும் சீக்கிரம் செல்ல வழி கிடைக்கும் என்று விரையும் வாகன ஓட்டிகள்.

  வேதனை வேதனை

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!