புதன், 29 ஜூன், 2022

சாய் பல்லவி ஏன் தற்போது அதிகம் பேசப்படுகிறார்?

 

கமலா ஹரிஹரன் : 

வருடந்தோறும் ஒழுங்காக பண்டிகைகள் தவறாது நடைபெற்று உற்சாகமாக இருக்கும் சமயம் திடீரென ஓரிரு முறைகள் துரதிர்ஷ்டவசமான சந்தர்ப்பங்களினால் தடைப்பட்டு போகும் போது ஏற்படும் வருத்தங்கள் ( "தாக்கம்") காரணமாக  மனது எதையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து விடுமா?

# மனது எல்லாவற்றையும் சரி சமமாக ஏற்கும் நிலை யாருக்கு வரும் ? எப்போது வரும் ?  பக்குவம் என்பது முயற்சியின் பயனாகத் தோன்றும் ஒன்றா ? இவை யாவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.  ஆனால் பண்டிகைகள்  (குடும்பத்தில் ஒருவர் மரணம் காரணமாக) நின்று போவதால் "வருத்தம்" ஏற்படுவது சரியா என்பதை அல்லவா முதலில் பார்க்க வேண்டும் ? புத்தாடை விருந்து முதலிய பண்டிகை ஆடம்பரங்கள் 'துக்கத்தில்' இருப்பவருக்கு இயல்பு இல்லை என்பதால் உண்டான வழக்கம் இது. செலவு தவிர்க்கும் சிக்கனம் ஆகவும் இருக்கலாம்.  ஒரு விதியாக வைத்தால்தான் இல்லாதவர் சுமை குறையும் என்பதால் கூட இருக்கலாம்.  எனவே இதனால் திருப்தி இருக்கலாமே தவிர, வருத்தம் இருக்கக்கூடாது.  இதனால் பக்குவம் உண்டாவது அபூர்வம் என்றே நினைக்கிறேன்.

கீதா சாம்பசிவம் : 

1) இந்த மதம், கடவுள் என்னும் கோட்பாடுகள் எப்போ ஆரம்பித்தன? பிரிவினைகள் எப்போ ஏற்பட்டன? 

# இந்து மதம் என்று ஒரு மதம் வந்ததே இல்லை என்கிறார்கள்.  சனாதன அல்லது வைதிக மதம் என்றுதான் இப்போது இந்து என்று பெயரிடப்பட்ட கோட்பாடு அழைக்கப் பட்டது என்று சொல்லப் படுகிறது. ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு முற்பட்ட ஒன்றன் தோற்றத்தை எப்போது என்று குறிப்பிட்டுச் சொல்வது சாத்தியம் அல்ல.  மதம் கடவுள் கோட்பாடுக்கும் பிற்பட்டது என்பதால் இதற்கு சரியான பதில் சொல்ல இயலாது. 5000 வருஷங்களுக்கு முன்பு என்று தோராயமாகச் சொல்லலாம்.

2) எழுத்து முதல் முதல் உலகில் எப்போ ஆரம்பித்தது? எந்த எழுத்து முதலில் பயன்படுத்தப் பட்டது? யார் மூலம் எழுத்துப் பரவ ஆரம்பித்தது? எப்படிப் புரிந்து கொண்டார்கள்?

# மேலே சொன்ன விடை இதற்கும் பொருந்தும்.  கிடைத்தவற்றில் மிகப் பழமையான எழுத்து (கல்வெட்டில்) என்று பார்த்தால் சுமார் 8000 ஆண்டுகள் என்கிறார்கள். இதுவும் ஒரு குத்து மதிப்பு தான்.  எழுத்து பேச்சின் வடிவம். எனவே பேச்சின் மூலமாக பரவத்  தொடங்கியது என ஊகிக்கலாம். யார் மூலம் என்பதற்கெல்லாம் பதில் கிடைக்காது, அதாவது கண்டு பிடிப்பது சாத்தியம் அல்ல. எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்றால், ஒலியோடு இனைத்துச் சொல்லிக் கொடுத்ததால் புரிந்து கொண்டிருப்பார்கள்.

3) கொஞ்ச நாட்களாக/மாதங்களாக இந்த "சாய் பல்லவி" பெயரை அடிக்கடி கேள்விப் படுகிறேன். இவர் நடிச்சுப் பிரபலம் ஆன படம் எது?

# எனக்குத் தெரியாது.

& சாய் பல்லவி செந்தாமரை என்னும் பெயர் கொண்ட நடிகை, 1992 ஆம் ஆண்டு பிறந்தவர். கோத்தகிரியில் பிறந்து கோவையில் வளர்ந்த படகர் இனத்தவர். ஜியார்ஜியா மாநிலத்தில் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றவர். கஸ்தூரி மான் (2005) தாம் தூம் (2008) போன்ற தமிழ்ப் படங்களில் பெயர் இல்லாத சிறிய வேடங்களில் நடித்தார். 2014 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு 2015 ஆம் ஆண்டு வெளியான 'பிரேமம்' மலையாளப் படத்தில் முக்கிய வேடத்தில் (மலர்) நடித்தார். 2016 ல் மேலும் ஒரு மலையாளப் படத்தில் நடித்தார். 2017 ல் இரண்டு தெலுங்குப் படங்கள். 2018 ல் மூன்று தெலுங்குப் படங்கள், 2 தமிழ்ப் படங்கள் (மாரி  2, என் ஜி கே ) 

'என்னடா நமக்கு வயசு 30 ஆயிடுச்சே - இன்னும் கீதா சாம்பசிவம் வரைக்கும் நாம் பிரபலமாகவில்லையே - என்ன செய்யலாம் ?' என்று யோசித்தார். வழி கண்டுபிடித்தார். அது ஜோதிகா வழி. 

மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான காஷ்மீர் files படத்தைப் பற்றிக் கூறும்போது The Kashmiri Files showed how Kashmiri Pandits were killed at the time. If you are taking the issue as a religious conflict, recently a Muslim driver, who was transporting cows, was beaten up and forced to chant ‘Jai Shri Ram.’ So where’s the difference between these two incidents? We have to be good human beings. If we are good ones, we won’t hurt others. To answer your question, justice won’t be there either on the side of the right or the left, if you are not a good human being. I’m very neutral.” என்று கூறியிருந்தார் 

அதாவது, "நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தவள். இடதுசாரி, வலதுசாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், யார் சரி, யார் தவறு என்று சொல்ல முடியாது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் காஷ்மீரி பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை காட்டுகிறது. சமீபத்தில், முஸ்லிம் என சந்தேகப்பட்டு, பசுவை கொண்டு சென்ற நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த நபரைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பினர். காஷ்மீரில் நடந்ததற்கும் சமீபத்தில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம்?" என்று பேட்டியில் கூறியிருந்தார்.

அது போதாதா ஊடக பெருமக்களுக்கு! சாய் பல்லவி பா ஜ க அரசை எதிர்த்துக் கூறிய கருத்து என்று தண்டோரா போட்டுவிட்டனர். விஷயம் விபரீதம் ஆகிவிட்டது என்று தெரிந்தவுடன், சாய் வெளியிட்ட விளக்கம் ஊடகங்களில் அவ்வளவாக வெளிவரவில்லை 

'நாம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் பிறரை காயப்படுத்த மாட்டோம். உங்கள் கேள்விக்கு பதிலளிக்க, நீங்கள் ஒரு நல்ல மனிதராக இல்லாவிட்டால், வலது பக்கத்திலும் அல்லது இடது பக்கத்திலும் கூட நியாயம் இருக்காது. நான் மிகவும் நடுநிலையாக இருப்பவள்' என்று பேசியதாக சாய் பல்லவி கூறுகிறார்.

'வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அது தவறு என்று நினைப்பவள் நான். அதுவும் எந்த மதத்தின் பெயரால் வன்முறை நடந்தாலும் அது பாவம். இதைத்தான் நான் தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், கும்பல் கொலையை நியாயப்படுத்தி பலரும் ஆன்லைனில் கருத்துக்களை பகிர்ந்ததை பார்த்து மிகவும் பாதிக்கப்பட்டேன். நம்மில் எவருக்கும் மற்றவர்களின் உயிரை பறிக்கும் உரிமை இல்லை என கருதுபவள் நான் . ஒரு மருத்துவ பட்டதாரி என்ற முறையில் எல்லா உயிர்களும் சமம், எல்லா உயிர்களும் முக்கியம்" என்று பேசினார்.

மேலும், "ஒரு குழந்தை பிறந்து தன் அடையாளத்தைக் கண்டு பயப்படும் நாள் இனி வராது என்று நம்புகிறேன். நாம் அதை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். எனது பதினான்கு வருட பள்ளி வாழ்க்கையில், தினமும் இந்தியர்கள் அனைவரும் என் சகோதர, சகோதரிகள். என் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். என் நாட்டின் பழம்பெருமைக்காகவும், பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன் என பிரார்த்தனை செய்து வந்தது என் மூளையில் ஆழமாக பதிந்து விட்டது. கலாசாரம், ஜாதி, மதம் அடிப்படையில் சக மாணவர்களை நாம் பிரித்துப் பார்த்தில்லை. எனவே, எப்போது நான் பேசினாலும் அந்த கருத்துக்கள், நடுநிலைத்தன்மையுடனேயே வெளிவரும். ஆனால், நான் பேசியது முற்றிலும் மாறுபட்ட வகையில் வெளிப்படுத்தப்பட்டதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்" என்று சாய் பல்லவி தெரிவித்தார்.

அதுவும், முக்கிய பிரபலங்கள், இணையதளங்கள் கூட, பழைய பேட்டியில் நான் பேசிய குறிப்பிட்ட பகுதியை அதன் முழு காணொளியையும் பார்க்காமல் உண்மைத்தன்மையை அறியாமல் தகவல் பகிர்ந்தார்கள். என்னுடன் இந்த நேரத்தில் உறுதுணையாக நின்றவர்களுக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியது தவறுதானோ என்றும் முரண்பட்டதாகவும் உணர்ந்து வந்தேன். ஆனால், நான் தனியாக இல்லை என்று உணரும் வகையில், எனக்காக பலரும் நின்று ஆதரவாக பேசியதற்காக நன்றி. எல்லோருக்கும் மகிழ்ச்சி, அமைதி, அன்பு நிறையட்டும் என்று விரும்புகிறேன் என்று பேசி சமீபத்திய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சாய் பல்லவி முற்பட்டிருக்கிறார்.

மொழிகளுக்குள்ளே உயர்வு, தாழ்வு எனத் தோன்றியது எப்போது?

# மொழிகளுக்குள்ளே உயர்வு தாழ்வு என்பது, ஒரு மொழி பேசும் மக்கள் வேறொரு மொழி புழங்கும் பகுதிக்கு குடியேறியவுடன் ஆரம்பம் ஆகி இருக்கும். 

இந்தியா முழுவதும் பேசிய மொழி வடமொழியாக இருந்ததாலேயே ஆதி சங்கரரும், ஶ்ரீராமானுஜரும் இந்தியா முழுவதும் விஜயம் செய்து தங்கள் கொள்கைகளைப் பரப்ப முடிந்தது. அப்படி இருக்கையில் இப்போதைய சம்ஸ்கிருத வெறுப்புக்குக் காரணம் என்ன?

எப்போதில் இருந்து சமஸ்கிருதம் அந்நிய/வட மொழி ஆனது?

உண்மையில் வடமொழி என்பதன் அர்த்தமே வேறே. ஆனால் இங்கே வடக்கே இருந்து வந்த மொழி என்னும் அர்த்தத்திலேயே பார்ப்பது ஏன்?

# சங்கரர், ராமானுஜர் ஆகியோர் காலத்தில் வடமொழி பேசப்பட்டு வந்ததா அல்லது புரிந்து கொள்ளப்  பட்டதா என்று நமக்கு நிச்சயமாகத் தெரியாது. வடமொழிப் பரிச்சயம் உள்ள மக்கள் மற்றவர்களை ஓரம் கட்டி முன்னேற்றம் கண்டது மொழிப பகைக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். அது அவர்கள் தவறு இல்லை என்றாலும் செல்வாக்கு / வசதி ஆகியவற்றில் அவர்கள் முன்னிலை வகித்தது ஏற்படுத்திய இயல்பான நிகழ்ச்சியாகவும் இருக்கலாம். வடமொழி தெரியாத மக்கள் புலம்ப ஆரம்பித்ததும் வெறுப்பு தோன்றியிருக்கும்.  சமஸ்கிருதத்துக்கு தமிழ்ப்பெயர் வைக்கும்போது திசையாகுபெயர் இயல்பாக வந்து விட்டது.

 மொழி/எழுத்து ஆகியவற்றில் இது தமிழ், இது ஆங்கிலம், இது சம்ஸ்கிருதம் என்னும் வேறுபாடுகளை முதலில் ஏற்படுத்தியவர் யார்?

# மொழி ஓசை வேறுபாடாக இருக்கும்போது, யாரோ ஒருவர் வந்து வேறுபாடுகளை முதலில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை அல்லவா ?

மேல் நாட்டு மொழிகளின் அடிப்படை சம்ஸ்கிருதம் தான் எனச் சொல்லுவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

# உடன்பாடு இல்லை.  எதோ ஓரிரு சொற்களை ஒப்பிட்டு இந்தமாதிரி முடிவுக்கு வர இயலாது.  அப்படிப் பார்த்தால், நமக்கே ஆயிரம் வடமொழிச் சொற்கள் தெரியும்.  ஆனால் ஒரு ரஷிய வார்த்தைக்குக்  கூட பொருள் தெரியாதே. 

ரஷிய மொழியில்/திபேத்திய மொழியில் அதிகம் சம்ஸ்கிருதம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அது சரியா?

# தெரியவில்லை.

நெல்லைத்தமிழன் : 

மாணவர் சிறந்த மதிப்பெண் எடுத்தாலோ இல்லை ரேங்க் வாங்கினாலோ, அவர் படித்த பள்ளி, சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் க்ரெடிட் எடுத்துக்கொள்வதைப்போல, தமிழில் 50,000 மாணவர்கள் ஃபெயில் என்பதற்கும், 'மெத்தப் படித்த தமிழாசிரியர்கள்' வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

# எந்தப் பள்ளியிலேனும்  பெரும் அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற வில்லை என்றால் ஆசிரியர்களுக்கு அது அவமானம்தான்.  

"பாஸ் ஆனவர்களுக்குக் கூட நாங்கள்தானே கற்பித்தோம் என்று அவர்கள் கேட்கலாம்.  என்ன காரணமோ தெரியவில்லை ஏழை மாணவர் பலருக்கும் படிப்பில் கவனம் அற்றுப் போய் விட்டது.  வருத்தமான விஷயம் தான். இலவச விநியோகம் நிறுத்தப் பட்டால் நிலைமை மாறும் என்று தோன்றுகிறது.

புகையே விடாத இரயிலையும் புகையிரதம் என்று தமிழில் சொல்வது ஏற்புடையதா?

# தொடர் வண்டி அல்லது தொடரி என்று இப்போது மாற்றிச் சொல்கிறார்கள் .

= = = =

எங்கள் கேள்விகள் : 

1) இளம் வயதில் கிணற்று நீர், ஆற்று நீர், தேத்தாங்கொட்டை போட்டுத்  தெளிய வைத்த நீர் எல்லாம் குடித்து வளர்ந்தோம். இப்போது ?

2) ஒருவர் தன் வாழ்நாளில் சமூகத்திற்கு என்று ஏதேனும் செய்வதானால் என்ன செய்வது சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?  நீங்கள் அதைச் செய்கிறீர்களா ?

3) நோயற்ற வாழ்வுக்கு சிறந்த பழக்கம் என்று எதைச் சொல்வீர்கள் அதை நீங்கள் தொடர்ந்து செய்வது உண்டா ?

4) குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும் விளையாட்டு நேரத்துக்கு ஏதுவாகவும் இருக்க வேண்டுமென்றால் நல்ல ஒரு  அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் குடியிருப்பது சிறந்தது என்ற எண்ணம் நிலவுகிறது .  இதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா ?

5) சீனா சட்டிக்கும் வானலிக்கும் என்ன வேறுபாடு? வாணலியில் விளிம்பில் இருக்கும் கருப்புப் படிவங்களை தேய்க்காமல் விட்டுவிடுவது ஏன் ?

= = = = =

சென்ற வாரம் வெளியிட்டிருந்த இரண்டு படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் : 

வித்தியாச படங்களை வாசகர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று நினைக்கிறேன். வித்தியாசமாக எதையாவது செய்யவேண்டும் என்பதால் இரண்டு வாரங்களாக அதை வெளியிட்டேன். ஒரு வாசகர் சென்ற வாரம் அந்தப் படங்கள் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார் - ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை. 

ஆதலால், இந்த வாரம் படம் பார்த்துக் கருத்து எழுதுங்க மீண்டும் வந்துவிட்டது. படங்களைப் பார்த்து, அவைகளைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது என்று எழுதுங்கள். 

1) 
( இந்தப் படத்திற்கு 'முன்னோர்கள், மூதாதையர்' போன்ற வழக்கமான கருத்துகளை ஒதுக்கிவிட்டு வேறு ஏதாவது புதிதாக எழுதுங்க. ) 

2) 

3) 

= = = =  

115 கருத்துகள்:

 1. இன்றைய கேள்வி பதில்கள் எல்லாமே சிறப்பாக இருந்தது ஜி

  மொழிகள் உருவாகி 8000 ஆண்டுகள் ஆனது என்பது மிகவும் குறைந்த கணக்காக தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். தொற்று நீங்கி மக்கள் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 3. ரேவதி சௌக்கியம் தானே? நேற்றோ முந்தாநாளோ குழுமத்தில் பார்த்த நினைவு. இங்கேயோ வரவே இல்லை. சென்னை வந்து சேர்ந்தாச்சா? எல்லாம் நலம் தானே?

  பதிலளிநீக்கு
 4. முதல் படம்... எதுவுமே அளவுக்கு மிகுதியாக்க்கிடைத்தால் ஆர்வம் போய்விடும். அழகான அதிகமான வாழைப்பழங்கள் கொட்டிக்கிடக்கும்போது, வானரங்கள் ஆர்வம் காட்டவில்லை பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. சைக்கிள் வித்தையை ஆச்சர்ய சந்தோஷத்துடன் பார்க்கும் இவள், சைக்கிளோடு நிலை தடுமாறி அவன் விழுந்தால் எந்த மாதிரி ரியாக்‌ஷன் கொடுப்பாள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :))) அதானே! (' நான் அப்பவே சொன்னேன் கேட்டியா - இப்படி உத்தவ் போல உதார் காட்டாதே என்று !' - என்று சொல்லுவாரோ!)

   நீக்கு
 6. http://sivamgss.blogspot.com/2011/01/blog-post_31.html

  http://sivamgss.blogspot.com/2014/01/blog-post_31.html // சீனாச்சட்டி/இரும்புச் சட்டி ஆகியவற்றுக்கான பதில். ஆனால் இதிலே இரும்புச் சட்டி இருக்காது. தேடித்தான் கொடுக்கணும். ஆனால் முந்தாநாளையத் திங்கற பதிவிலே சேப்பங்கிழங்கு ரோஸ்ட் இரும்புச் சட்டியில் தான் பண்ணி இருப்பேன்.

  பதிலளிநீக்கு
 7. பஹ்ரைனில் கடல் திலத்தை (அங்கு கடல் ஏரி மாதிரி இருக்கும். சில இடங்களில் நிறைய தூரம் நடந்து செல்லலாம். அலை இருக்காது. Back waterம் அதிகம்) reclaim செய்து அதில் கட்டிடம் கட்டி, ரோடு போட்டு நாட்டின் பகுதியாக ஆக்கிவிடுவதால், சாலைகளில் சீகல் எனப்படும் ஏராளமான கடல் பறவைகள் தென்படும் (முன்னொரு காலத்தில் .. அதாவது 20-40 வருடங்களில் கடலாக இருந்த இடம்). ஆனால் இந்தக் கொக்கு ஏன் தரையில் மீனைத் தேடுகிறது?

  பதிலளிநீக்கு
 8. என்னைப் பொறுத்தவரை நானே பாத்திரங்கள் தேய்த்தவரைக்கும் இரும்புச் சட்டி/சீனாச்சட்டி/தோசைக்கல்லில் ஓரங்களில் கறுப்புப் படியாவண்ணம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாலைந்து வருஷங்களாக வேலை செய்ய ஆளை நியமிச்சப்புறமா அவங்க எப்படியோ கறுப்புக் கயிறு கட்டி விட்டுட்டாங்க. கூடிய வரை ஓரங்களை நான் திரும்பத் தேய்ச்சுடுவேன். என்றாலும் இரும்புச் சட்டியிலும்/தோசைக்கல்லிலும் ஓரங்களில் அரை அங்குலம் அளவுக்குக் கருப்புப் படர்ந்தே காணப்படுகிறது. மனசைக் கொஞ்சம் உறுத்தத் தான் செய்கிறது. அதிலும் இரும்புச் சட்டியில் அடியிலும் கொஞ்சம் படர்ந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவங்க சொல்லாம விட்டது... அப்போதெல்லாம் சமைத்தவர் வேறு. விளிம்புகளில் கரி பிடிக்காமல் நன்றாகச் சமைப்பார். இப்போது சமைப்பவர் கவனம் சரியில்லாத்தால் விளிம்பெல்லாம் கரியாகுது... என்பதாக இருக்குமோ?

   நீக்கு
  2. ஓ ! அப்படியும் இருக்கலாம்!

   நீக்கு
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்க வீட்டில் வேலை செய்யும் பெண் எந்தப் பாத்திரத்தின் அடிப்பாகத்தையும் தேய்க்கவே மாட்டார். உள்ளே மட்டும் குழப்பிட்டு அலம்பி வைச்சுடுவார். தினம் தினம் எனக்கு இது ஒரு வேலை. குக்கர்,காப்பர் பாட்டம் பாத்திரங்கள், வெண்கலப்பானை, உருளி எல்லாவற்றையும் எலுமிச்சை மூடி போட்டுத் திரும்பத் தேய்த்துக் கவிழ்ப்பேன். :( காப்பர் பாட்டம் பாத்திரங்கள் அடியில் கறுப்பாக ஆகிவிடும். எலுமிச்சை மூடியைத் தடவினால் தான் பார்க்கிறாப்போல் இருக்கு! :( என்ன செய்ய முடியும்?

   நீக்கு
  4. காப்பர் பாட்டம் பாத்திரங்களுக்கு Pitambari பொடி உபயோகிக்கலாம்.

   நீக்கு
  5. சென்னையில் இருந்தப்போ எல்லாம் எல்லோரும் சொன்னாங்களேனு பீதாம்பரி தான் பாக்கெட் பாக்கெட்டாக வாங்கினோம். ம்ஹூம்! ஒண்ணும் பலனில்லை. சரி! அங்கே தண்ணீர் சரியில்லைனு இங்கே வந்தும் பார்த்தால் சுத்தம்! வெளுக்கவே இல்லை. வாங்கறதே இல்லை இப்போ. விம் திரவம் போட்டுத் தேய்த்தாலே நல்லா இருக்கு. கூடுதல் பளபளப்புக்கு வேணா எலுமிச்சை மூடி சேர்க்கலாம்.

   நீக்கு
 9. https://engalblog.blogspot.com/2014/01/235.html இங்கேயும் விபரமாப் பார்த்துக்குங்க சீனாச்சட்டி/இரும்புச் சட்டி விபரங்கள்/புனர் பாகம் எல்லாமும் வந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 10. சாய் பல்லவி!...

  அனுஷ்கா , தமன்னா ?..

  அதான் வியாழக்கிழமை இருக்குது..ல்ல!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேஜிஜி சாரிடம் கோபம் வேண்டாம். தமன்னா, பாவனா என்று அவளையும் சேர்த்துவிடுங்கள்.

   நீக்கு
  2. :))) கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 11. ​ஆற்று நீர் கிணற்று நீர் தான் ​RO முறையில் சுத்தம் செய்யப்பட்டு பிளாஸ்டிக் கேன்களில் விநியோகிக்கப்படுகின்றன. திருவனந்தபுரத்தில் குழாய் தண்ணீர் சுத்தமானதாகவும் சுவையாகவும் இருக்கும் என்பதால் RO நீர் அதிகம் விற்பனையாவதில்லை. குழாய் நீர் ஆனாலும் கொஞ்சம் ஜீரகம்/பதிமுகம்/வெட்டிவேர் போன்று ஏதாவது போட்டு கொதிக்க வைத்து குடிப்பது வழக்கம்.

  வாழும் முறை ஐயன் சொன்னபடி
  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
  தெய்வத்துள் வைக்கப் படும்.
  வாழ்வது என்றால் எப்படி என்று கேள்வி எழுகிறது. வாழும் முறை ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும். எப்படி வாழக்கூடாது என்பதுவே பொதுவானது. அதற்குத்தான் மதம் மற்றும் சட்டங்கள் உள்ளன. மற்றவர்களின் வாழ்வில் இடை படாதபடி வாழ்ந்தாலே போதும்.

  நோயற்ற வாழ்வு என்பது யாருக்கும் இல்லை. நோய் இரு வகைப்படும். ஒரு கிருமி போன்ற தொற்றுக்களால் வருவது. இரண்டு வயதாவதின் காரணமாக உடலின் சில இடங்களில் மாறுதல் தோன்றுவது. இரணடாவதைச் சரிப்படுத்த முடியாது. வேணும் என்றால் தாக்கத்தைக் குறைக்கலாம். உதாரணமாக கால்களை மாற்றி வைக்க முடியுமா?

  நான்காவது கேள்விக்கு பதில்: இல்லை. நாம் எல்லோரும் அபார்ட்மென்டிலா வளர்ந்தோம்?

  ஐந்தாவது கேள்விக்கு பதில் இல்லை. சீன சட்டி வோக் என்று மட்டும் தெரியும்.

  படம் 1. விக்கிற விலையில் இத்தனை பழங்கள். என்னமோ இருக்குது. பார்த்து எடுப்போம்.

  படம் 2. no கமெண்ட்ஸ்.

  படம் 3. காதலி யைக் கண்டால் சைகிளும் ஹெலிகாப்டர் ஆகும்.

  ஆறு வித்யாசங்கள் கண்டுபிடிக்க படங்கள் ஒரே திரையில் அடுத்து அடுத்து காணவேண்டும். காரணம் நுணுக்கமான வித்யாசங்கள். தற்போது இடும் படங்கள் வித்யாசம் கண்டுபிடிக்க முன்பும் பின்பும் போக வேண்டி இருக்கிறது. மேலும் நம் வாசகர்கள் fonts போலும் பெரிதாக இருந்தாலே வாசிப்பவர்கள். அவர்களுக்கு நுணுக்கமான வித்யாசங்கள் கண்டுபிடிப்பது என்பது அரிசியில் கல்லை பொறுக்குவது போல் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளக்கமான கருத்துரைக்கும், ஆலோசனைக்கும் நன்றி.

   நீக்கு
  2. வார்ப்பிரும்பில் செய்த சட்டி சீனாச் சட்டி என்பார்கள்.

   நீக்கு
  3. வார்ப்பிரும்பில் செய்த சட்டி சீனாச் சட்டி என்பார்கள்.

   நீக்கு
 12. கீதா அக்கா இந்த மதம் (this religion) என்று கேட்டிருக்கிறார். நீங்கள் இந்து மதம் என்று பதில் சொல்லியிருக்கிறீர்களே?

  பானுமதி வெங்கடேஸ்வரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். நானும் கவனித்தேன். பதில் அளித்தவர் இந்த மதம் என்பதை இந்து மதம் என்று வைத்து பதில் சொல்லியிருந்தாலும் அது பொருந்துவதாகத்தான் இருக்கிறது.

   நீக்கு
 13. 1. இப்போது ஃபில்டரில் வடி கட்டிய நீர்

  2. படிப்பு, அழகு, அந்தஸ்து போன்ற வேற்றுமைகள் பாராட்டாமல் இருப்பது, சக மனிதர்களின் உணர்வுகளை மதிப்பது சமூகத்திற்கு செய்யும் சேவை.

  3. உணவு, உடற்பயிற்சி இரண்டும் அவசியம். ஐஸ் க்ரீம், ஃபாரஸ்ட் புட் போன்றவைகளை எப்போதாவதுதான் சாப்பிடுகிறேன்.
  உடற்பயிற்சி..ஹிஹி

  பானுமதி வெங்கடேஸ்வரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Fast foodஐ மரங்களடர்ந்த இடத்தில் வைத்துச் சாப்பிட்டால் அது ஃபாரஸ்ட் food ஆகிவிடுமா?

   நீக்கு
  2. :)))) கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 14. 4. ஒப்புக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது.

  5. என் வீட்டு வாணலி, தோசைக்கல் போன்றவை பளிச்சென்று இருக்கும். நாம் மெனக்கெட வேண்டும்.

  பானுமதி வெங்கடேஸ்வரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்றையும் பண்ணாமல் வைத்தாலும் பளிச் என்றுதான் என் வீட்டில் இருக்கிறது. அதற்கு எதற்கு மெனெக்கிடவேண்டும்? (அது சரி...மெனெக்கிட- எந்த மொழி இது?)

   நீக்கு
  2. அதே கேள்வி - மெனஸ்காயிக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ!

   நீக்கு
  3. @நெல்லை! ஒண்ணுமே பண்ணாதபோது எப்படிக் கறை படியும்? சமையலறை சுத்தமாக இருக்கணும்னால் சமைக்காமல் இருக்கணும். என்பது புது மொழி! :)))))

   நீக்கு
  4. மெனக்கெட்டு. வெழுமூண என்பதெல்லாம் ஒரு காலத்தில் நாம் புழங்கிய வார்த்தைகள் தாம். இன்னும் ஒரு பெரிய பட்டியலே வைச்சிருக்கேன்.

   நீக்கு
 15. படங்களில் முதலாவதை சாய்சில் விட்டு விட்டேன்.

  2. தேடி நிலம் சோறு தின்று

  3. சைக்கிளில் ஏறி நடைபாதையில் பாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பார்வையிலே..

  பானுமதி வெங்கடேஸ்வரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Space விட்டிருந்தால் கருத்து சரியா இருந்திருக்கும். காதல்பெண் கள்கடைக்கண் பார்வையிலே

   நீக்கு
  2. கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 16. நல்ல கேள்விகள்... பதில்களில் பல உருட்டுகள்...

  பதிலளிநீக்கு
 17. எங்கள் வீட்டில் கிணற்று நீர் என்றாலும் கொதிக்க வைத்து ஆறிய நீர்தான் சிறுவயதிலிருந்தே அப்பாவுக்கு நான் பிறந்த நேரம் டைபாய்டு வந்தது அதன் பின் இந்தப் பழக்கம் வந்திருக்கலாம்.

  கல்விச் செல்வதுதான் உதவுகிறோம்..

  சுத்தமாக தயாரிக்கப்படும் உணவு குடிநீர் கைகழுவுதல் ரொயிலெட் பாவனை கடைபிடிப்போம்.

  இருவரும் வேலைக்கு செல்பவர்கள் உதவவில்லை என்றால் அப்பாட்மண்ட் நன்று. உதவி இருக்கும் இடத்து சிறிய வீடாக இருந்தாலும் விளையாட வெளியில் இடம்இருந்தால் போதும் .

  சீனசட்டி நான் உபயோகிப்பது இல்லை. வாணலியில் ஸ்டெயின்ஸ் உபயோகிப்பேன் விளிம்பில் அழுக்கு இருக்காது.

  1)தினம்தோறும் வாழைப் பழம்? வேறுஏதாவத கொடுங்கள்.
  2) நிழலில் தேடுவது கோடை வெப்பத்துக்கு ஆகா!
  3) அழகிய பெண் அருகில் இருந்தால் சைக்கிள் தானே பறக்கும்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

  இன்றைய கேள்வி பதில்கள் மற்றைய பகுதிகள் அனைத்தும் அருமை. என் கேள்விக்கான விரிவான தங்கள் பதிலின் சாரத்தையும் உணர்ந்து கொண்டேன் . மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைக்கு இவருக்கு என்னாச்சு? தந்தியடிப்பதுபோல பின்னூட்டம். அடுப்பில் பால் காய்ச்சிக்கொண்டிருந்தாரா?

   நீக்கு
  2. :)))) கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  3. ஹா ஹா ஹா. அட... ஆனால் கரெக்டாக எப்படி கண்டு பிடித்தீர்கள். . காலை காப்பிக்கு பாலை கொஞ்சமாக காய்ச்சியது போக இப்போது மறுபடியும் காய்ச்சும் அவசரத்தில் சிறு கருத்தை (மிகவும் ஆச்சரியமாக உள்ளதா?) பதிவு செய்து விட்டு போய் விட்டேன்.

   அந்த காலத்தில் ஒரு கடிதம் என்றால் விலாவாரியாக மனதில் பதியும் வண்ணம் எழுதுவதில் உள்ள ஒரு ஆனந்தத்தை கடிதம் போட்டவர்களும், கடிதத்தை பெறுகிறவர்களும் உணர்வது வழக்கம். (இப்போது கடிதங்கள் எழுதும் காலம் அந்தமாதிரி இல்லாமல் குறைந்து விட்டது ) ஆனால் அப்போது இந்த தந்தி வாசகங்கள் (ஆபத்து, அவசரம், உடனடியாக)
   மனதில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்துவதுதான். அதனால்தான் அந்த காலத்தில் கூடியவரை ஒரு தொலை தூரத்திலிருக்கும் ஒரு மனிதரின் இறப்புக்கு மட்டுமே இந்த தந்தி முறைபை மக்கள். பயன்படுத்தி வந்தார்கள்.

   இந்த (தந்தி) முறையை முதலில் நடைமுறைக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தியது யார்?

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. தந்தி முறையை அறிமுகப்படுத்தியது ஹனுமான். கண்டேன் சீதையை

   நீக்கு
  5. // இந்த (தந்தி) முறையை முதலில் நடைமுறைக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தியது யார்?// மின்நிலா 109 ஆவது வார இதழ், பின் அட்டை விவரங்களில் காணவும்.

   நீக்கு
  6. மின்நிலா 109 - உங்கள் ஜி மெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளோம்

   நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

   தகவல்களுக்கு நன்றி. . மின் நிலாவை அனுப்பிதற்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக விபரங்களை படிக்கிறேன்

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  8. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

   தங்களின் கணிப்பும் சரிதான்.. "கண்டேன்" என்ற ஒற்றை வரியில் ராமபிரானின் மனச்சஞ்சலத்தைப் போக்கியவர் நம் சொல்லின் வேந்தர். மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி.

   "இன்று என் பதிவாக" கவனிக்க தவறி விட்டீர்களா? இல்லை பழையதை படிக்க மனதில் தடையா? எதுவானாலும் தங்கள் கருத்துரை நல்லதே.. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  9. காலையில் புதிய பதிவு வந்துவிட்டது என்பதைப் பார்த்தேன். உங்கள் பதிவை பொறுமையாகப் படிக்கணும் (ஹி ஹி... நீளமாக இருக்கும்). அதனால் பிறகு படித்துக் கருத்திடுவோம்னு இருந்துவிட்டேன்.

   நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

   /உங்கள் பதிவை பொறுமையாகப் படிக்கணும் (ஹி ஹி... நீளமாக இருக்கும்). அதனால் பிறகு படித்துக் கருத்திடுவோம்னு இருந்துவிட்டேன்./

   ஹா.ஹா.ஹா
   பொறுமையாக படித்து தந்த கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 19. சின்ன வயசில் இருந்து கல்யாணம் ஆகி ராஜஸ்தான் போகும் வரையிலும் கிணற்று நீர் தான். மதுரையில் இருந்தப்போக் குழாய்த் தண்ணீர் வந்தாலும், நாங்க குடியிருந்த வீட்டில் கனெக்‌ஷன் இருந்தாலும் விட்டு விட்டுத் தான் வரும். பிடிச்சு வைச்சுக்கணும். கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருக்கும். கல்யாணம் ஆகி அம்பத்தூர் வந்ததும் கிணற்று நீர் மட்டுமே. அதுவும் வெகு ஆழத்தில் இருக்கும். பெரிய கிணறு. இரண்டாகத் தடுத்து மேலே சுவற்றுக்கட்டை போட்டு இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் ராட்டினங்கள் மாட்டப்பட்டிருக்கும். இரண்டு பக்கம் குடி இருக்கிறவங்களும் ஒரே சமயம் தண்ணீர் எடுத்துக்கறாப்போல் கிணற்றின் ஆழம், அகலம் எல்லாம் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 20. சமூகத்துக்குனு பொதுவாகச் செய்யவில்லை. செய்ததும் இல்லை. ஆனால் நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பல விதங்களில் உதவி செய்கிறோம். இது தொடருமாறு கடவுள் அனுகிரஹம் தேவை. அது இருந்தாலே போதும்.

  பதிலளிநீக்கு
 21. உணவுக்கட்டுப்பாடும், நேரத்துக்கு உணவை எடுத்துக்கிறதும் தான் சிறந்த பழக்கம். சமைக்கும்போது சமைப்பவர்களின் மனோநிலையைப் பொறுத்தும் இருக்கிறது நமக்கு உணவு சாப்பிட்டால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்குப் பல சமயம் அதுவே காரணம் ஆகலாம். என் அம்மா ஸ்லோகம் சொல்லிக் கொண்டே தான் சமைப்பார். என்னைப் பொறுத்தவரை மனதில் சமையல் சரியா வரணும் என்னும் ஒரே நினைப்போடு தான் சமைக்கிறேன். வேறே எண்ணங்கள் இருக்காது.

  பதிலளிநீக்கு
 22. குடியிருப்பு வளாகங்கள் எல்லாமுமா பெரிதாக இருக்கின்றன. இப்போது சட்டதிட்டங்கள் வந்தவுடன் கீழே கார் பார்க்கிங்னு மட்டும் வைக்கிறாங்க. சுமார் 20 வருஷங்கள் முன் வரை கட்டிய குடியிருப்பு வளாகங்களில் எல்லாம் ஒவ்வொரு வீட்டு வாசலும் அடுத்த வீட்டு வாசலை ஒட்டியே இருக்கும். ஒரு அரை அடி பெரிதாகக் கோலம் போட முடியாது. பொதுவான காலி இடம் என்றே இருக்காது. சுற்றி ஐந்தடி விட்டிருந்தால் பெரிய விஷயம். ஆகவே குழந்தைகள் தெருவில் தான் விளையாடணும். அல்லது மாநகராட்சி பராமரிப்பில் இருக்கும் பொதுவான விளையாட்டு மைதானங்களுக்குப் போகணும்.

  பதிலளிநீக்கு
 23. குழந்தைகள் விளையாடவென அம்பேரிக்காவில் பொதுவான பார்க், அங்கே விளையாட்டு சாதனங்கள் நீச்சல் குளம் என்றிருந்தாலும் எல்லோராலும் அங்கே தினம் போக முடியாது. எதுக்கெடுத்தாலும் காரை எடுத்துக் கொண்டு தான் குழந்தைகளைக் கூட்டிச் செல்ல முடியும். ஆகவே பெரும்பாலான அம்பேரிக்கக் குழந்தைகள் வீட்டிலேயே தங்களுக்குள் விளையாடிக்கொள்வார்கள். எங்க பெரிய பேத்தியில் இருந்து இப்போக் குஞ்சுலு வரை அப்படித் தான். நடுவில் நாங்களும் கொஞ்சம் சேர்ந்துப்போம். என்றாலும் எப்போதும் இயலாது. அங்கெல்லாம் குழந்தைகள் "ஸ்லீப் ஓவர்" எனத் தங்கள் வகுப்புத் தோழி/தோழன் வீட்டுக்குச் சென்று வார இறுதி நாட்களில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களுமோ இருந்துவிட்டு வருவார்கள். நம் வீட்டுக்கும் அவங்க குழந்தைகள் அதே மாதிரி வரும். ஆனால் இப்போதெல்லாம் அதுவும் வெகுவாகக் குறைந்திருப்பதாகச் சொல்கின்றனர்.

  பதிலளிநீக்கு
 24. தேத்தாங்கொட்டை, பூந்திக்கொட்டை எல்லாம் எனக்குக்கல்யாணம் ஆகி வந்து தான் தெரியும். பார்த்ததே இல்லை அது வரை.

  பதிலளிநீக்கு
 25. இத்தனை வாழைப்பழங்களைப் பார்க்கவே என்னவோ மாதிரி இருக்கிறது. அதுங்க மட்டும் எப்படிச் சாப்பிடும். சந்தேகம் வந்திருக்கும்.
  வாடி இருக்கும் கொக்கு தேடுவது எதை?
  அந்தப் பையர் அந்தப் பெண்ணின் மேல் சைகிளை விட்டுடுவாரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பெண் சாமர்த்தியமாக இருந்தால், 'I don't love you' என்பதை அப்புறம் சாவகாசமாக (அட இதுவும் எந்த மொழி?) சொல்லும். இப்போதே சொன்னால் நீங்கள் சொன்னதுதான் நடக்கும்.

   நீக்கு
 26. மாணவர் சிறந்த மதிப்பெண் எடுத்தாலோ இல்லை ரேங்க் வாங்கினாலோ, அவர் படித்த பள்ளி, சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் க்ரெடிட் எடுத்துக்கொள்வதைப்போல, தமிழில் 50,000 மாணவர்கள் ஃபெயில் என்பதற்கும், 'மெத்தப் படித்த தமிழாசிரியர்கள்' வெட்கித் தலைகுனிய வேண்டாமா?//

  கண்டிப்பாக...

  வெற்றி பெற்றால் தங்கள் பெயரை முன்னில் போட்டுக் கொள்ளும் பள்ளிகள்....ஆனால் தோல்வி அடைந்தால் அது மாணவர்களின் குற்றம்.!!!!!..

  என்னதான் பள்ளிகள் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தாலும் மாணவர்களின் உழைப்பில்தான் இருக்கிறது..இது நிறைய சொல்லலாம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 27. //அது சரி.. மெனெக்கிட - எந்த மொழி இது?..//

  அன்பின் நெல்லை.. இதற்கான விளக்கத்தை நாளை எனது தளத்தில் காணலாம்..

  பதிலளிநீக்கு
 28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 29. இன்றே சொல்லி இருக்கலாம்.. நாளைக்கு என்றால்!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் மெனக்கிட்டுத்தான் சொல்லணும் போலிருக்கு!

   நீக்கு
 30. கேள்விகள் - 1 - அதேதான். கிணற்று நீர், சுனை நீர் என்று குடித்து வளர்ந்தோம். நெல்லிக் கட்டை கூடக் கிணற்றில் போட்டதுண்டு.

  இப்போது காய்ச்சிக் குடித்தல் அல்லது இங்கு தண்ணீர் சுத்தமாக்கித் தரும் ஆர் ஓ முனைகள் இருப்பதால் அங்கு சென்று எடுத்து வருகிறோம். அருகில்தான். 20 லிட்டர் ஐந்து ரூபாய். பெட்டிகளை இழுத்துச் செல்லும் வண்டி இருக்கிறது வீட்டில் அதில் வைத்து எடுத்து வந்துவிடுவோம்.
  திருவனந்தபுரத்திற்குப் பிறகு எங்கு சென்றாலும் இந்த நிலைதான். அங்கிருந்தவரை தண்ணீரைக் காய்ச்சியதும் இல்லை. சுத்தமான நீர் வரும். இப்போதும் வருகிறது தங்கை வீட்டில் எல்லாம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 31. 3. நேரத்திற்கு உணவு உண்டு, அளவாக ஆரோக்கியமாக உண்டு, இரவு சீக்கிரம் படுத்து அதிகாலை எழுவது நல்ல பழக்கம் என்று பழகியதால் இதுவரை அதையேதான் பின்பற்றி வருகிறேன் கூடியவரை.

  கல்யாணங்களுக்குச் செல்லும் போது நேரம் பார்க்க முடியாது, தவிர்க்க முடியாததால் கூடியவரை 7.30 க்குள் மிகவும் தவிர்க்க முடியாது போனால் 8 மணிக்கு ஆனால் மிக மிகக் குறைவாக... இரவு உணவை உண்டு விடுவேன். இல்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவேன், வந்துவிடுவேன். அதுவும் இந்த முதல் நாள் வரவேற்பு அன்று போடும் சாப்பாடு எல்லாம் தவிர்க்கிறேன். தயிர்சாதம் இருந்தால் அது மட்டும் ஒரு சிறிய கப்பில் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.
  அது போன்று பெரும்பாலும் மாலை நான்கு மணிக்குத் தரப்படும் டிஃபனை தவிர்த்துவிடுகிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அன்று போடும் சாப்பாடு எல்லாம் தவிர்க்கிறேன். தயிர்சாதம் இருந்தால் அது மட்டும் ஒரு சிறிய கப்பில் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். அது போன்று பெரும்பாலும் மாலை நான்கு மணிக்குத் தரப்படும் டிஃபனை தவிர்த்துவிடுகிறேன்.// - கையில் கிச்சனை வைத்திருப்பவர்கள் தங்கள் இஷ்டப்படி இருந்துவிடலாம். என்னை மாதிரி அப்பாவிகள் என்ன செய்வது?

   இன்னொன்று....திருமணங்களில்... எல்லாவற்றிர்க்கும் காசை கேட்டரர் கறந்திருப்பார். நீங்கள் சாப்பிடாததன் மூலம் திருமணம் நடத்துபவருக்கு மேலும் நஷ்டத்தையும் கேடரருக்கு ஏகப்பட்ட லாபத்தையும் அள்ளி வழங்குகிறீர்கள். ஹா ஹா

   நீக்கு
  2. ஹாஹாஹா என் வயிற்றிற்கு ஏதாச்சும் ஆச்சுனா அப்புறம் மருத்துவருக்கு யார் கொடுப்பாங்களாம்!!

   கீதா

   நீக்கு
 32. 4. டிட்டோ செய்கிறேன். ஏற்கிறேன். இப்போதைய சூழலில் அடுக்குமாடிதான் நல்லது குழந்தைகள் விளையாட...

  கீதா

  பதிலளிநீக்கு
 33. இப்போதும் சீனா சட்டி(cast iron) பயன்படுத்துகிறேன் - இரும்பு சட்டியும் பயன்படுத்துகிறேன். சீனா சட்டி இயற்கையான நான் ஸ்டிக். ரோஸ்ட், முறுவல் எல்லாம் செய்ய மிக மிக நல்ல சட்டி. என்னுடையது மிகவும் பழையது. நல்ல கனமாகவும் இருக்கும். ஆப்பம் செய்வதற்கும் இது வைத்திருக்கிறேன். All black beauties!!! தோசைக்கல்லும் அதே போன்றுதான். ...ஓரத்தில் பிடிப்பவற்றை அவ்வப்போது நீக்குவது வழக்கம்.

  அதில் வதக்க முடியாதவற்றை மட்டும் கல்கத்தா சட்டியி வதக்குவது வழக்கம். இருந்தாலும் சில சமயம் இப்போதெல்லாம் தோள் வலி வருவதால் கொஞ்சம் மெனக்கிடல் குறைந்திருக்கிறது

  கேரளா வெண்கல உருளி, பித்தளை பானை எல்லாம் கனமானவை, இப்போதும் பயன்படுத்தலில் இருக்கின்றன.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சட்டி(cast iron)// வார்ப்பு இரும்பு....

   கௌ அண்னா நான் போன வாரம் வித்தியாசங்கள் எல்லாம் சொல்லியிருந்தேன்.....

   கீதா

   நீக்கு
  2. //வித்தியாச படங்களை வாசகர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று நினைக்கிறேன்.//
   ஆர்வம் உண்டு.

   அன்று யாரும் பார்த்து கருத்து சொல்லவில்லை
   வேறு படம் போட்டு இருந்தால் ஆர்வமாக பார்த்து கருத்து சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தேன். அதனால் "வேறு படம் கிடைக்கவில்லையா "என்று கேட்டேன். வேறு காரணம் இல்லை.
   தவறு என்றால் மன்னிக்கவும்.

   நீக்கு
  3. கருத்துரைகளுக்கு நன்றி. விளக்கம் கொடுத்தாதற்கும் நன்றி.

   நீக்கு
 34. //https://engalblog.blogspot.com/2022/06/blog-post_27.html// முந்தாநாள் பதிவில் சேப்பங்கிழங்கு வறுபடுவது இரும்புச் சட்டியில். இது என் அப்பா காலத்துச் சட்டி. இதே மாதிரிச் சட்டி புதிதாக வாங்க ஆசைப்பட்ட எனக்கு இதைக் கொடுத்தார்கள் அப்பாவும்/அம்மாவும். என்னிடம் வந்தே 40 வருடங்கள் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 35. கேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
  முதல் படம் :- மரபணு மாற்றப்பட்ட பழம் இதில் சத்து இல்லை சாப்பிட வேண்டாம் என்று பெரிய குரங்கார் சொல்கிறதோ தன் குழந்தைகளிடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா கோமதிக்கா ஹைஃபைவ்!!! நானும் இதே கருத்தில்தான் சொல்லியிருக்கிறேன்

   கீதா

   நீக்கு
  2. வித்தியாசமான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 36. மண்ணில் சத்தான உணவு கிடைத்து விட்டது கொக்கிற்கு.(மண்புழு)
  அடே அப்பா! இவ்வளவு உயரம் பறப்பாயா?

  பதிலளிநீக்கு
 37. இரண்டாவது படத்துக்குக் கருத்து போட்டு போகவில்லை...இப்போது போகிறதா என்று பார்க்கிறேன்.

  Crested Ibis - அந்தப் பறவை.

  கீதா

  பதிலளிநீக்கு
 38. முதல் படம் குழந்தைகளுக்கும் தெரிந்திருக்கு இந்த வாழைப்பழம் பயோடெக் என்று அதனால் சோதித்துப் பார்க்கின்றன போலும் என்னடா மனுஷன் இம்பூட்டு போட்டிருக்கிறானே அதிசயமா அப்ப இது வேலைக்காகததா இருக்கும்னு !!!

  கீதா

  பதிலளிநீக்கு
 39. சுவாரசியமான கேள்வி பதில்.
  - அப்பாதுரை

  பதிலளிநீக்கு
 40. இந்த வாரத்தில் கேள்வி பதில்கள் தத்துவார்த்த ரீதியில்..... சில கேள்விகளும் அதற்கான பதில்களும் நன்று....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!