சனி, 4 ஜூன், 2022

மகள் பெற்றோருக்கு ஆற்றும் உதவி.. மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)

 அப்பா அம்மா மேல் பிரியம், மதிப்பு.. =================================================================================================

மதுரை: மதுரை காஸ்ட் அக்கவுண்டண்ட் குமாரராஜன் 72 வயதில் நிதிமேலாண்மையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த இவர், இந்தியன் வங்கியில் தலைமை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கம்பெனி செக்ரட்டரி ஷிப், காஸ்ட் அக்கவுண்டண்ட் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். தற்போது இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்டண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை கிளையில் துணைத் தலைவராக உள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலையில் பி.எச்டி., பகுதிநேர படிப்பில் 'பொதுத்துறை வங்கிகளில் நிதிமேலாண்மை' என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இத்தனை வயதில் டாக்டர் பட்டம் பெற்றது குறித்து அவர் கூறியதாவது:

பி.எஸ்சி., கணிதம் படித்த நான், தேர்வு எழுதி இந்தியன் வங்கியில் பணியாற்றினேன். அனுபவ அடிப்படையில் பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலையில் காஸ்ட் அக்கவுண்ட் தொடர்பாக பயிற்சி அளித்தேன். அப்போது அவர்கள் 'ஏன் நீங்கள் பி.எச்டி., ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளக் கூடாது' என்றனர்.

வயது என்பது வெறும் எண்தானே என நம்பியதால், படித்தால் என்ன என்று தோன்றியது. காஸ்ட் அக்கவுண்டண்ட் அனுபவம், தேர்வு எழுதியதை முதுகலை படிப்புக்கு சமமாக கருதி ஆய்வுப் படிப்புக்கு அனுமதித்தனர். இதற்கு சிலர் ஊக்குவித்தாலும், இந்த வயதில் என்ன பிரயோஜனம் எனக் கேட்டவர்களும் உண்டு. ஐந்தே ஆண்டுகளில் 'டாக்டர்' பட்டமும் பெற்றதால் மகிழ்ச்சியே என்றார்.

=====================================================================================================================

திருப்பூர் : திருப்பூரில், ஒரு நிமிடம், 13 வினாடிகளில் இடுப்பில் வளையத்தை, 137 முறை சுற்றியபடியே, 101 விலங்குகளின் பெயரை சொல்லிய, 6 வயது சிறுமி, ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த ராம் கிருபாகர் (எல்.ஐ.சி., முகவர்) - -காயத்ரி தம்பதியின் முதல் மகள் நேஹா. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். பயிற்சி மூலம்,ஒரு நிமிடம், 13 வினாடிகளில், 137 முறை இடுப்பில் வளையத்தில் சுற்றி அசத்தினார்.கூடவே, 101 விலங்குகளின் பெயரையும் தெரிவித்துள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்த ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு (கிராண்ட் மாஸ்டர்) பெற்றோர் அனுப்பி வைத்தனர்.இதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் அனுப்பியுள்ளது. வரும் ஆண்டு வெளியிடப்பட்டும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் சிறுமியின் பெயர் இடம்பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

=============================================================================================

=========================================================================================================

நான் படிச்ச கதை

ஜெயகுமார் சந்திரசேகர் 

**************


 அவஸ்தைகள்-இந்திரா பார்த்தசாரதி 


ஆசிரியர் அறிமுகம். 

ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி. கும்பகோணத்தில் 10-7-1930 இல் பிறந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர். வைணவ சித்தாந்தத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பாரதி மணியின் உற்ற நண்பர். சாஹித்திய அகாடமி விருது பெற்றவர். 

காணும் மனிதர்களையும் காட்சிகளையும் மையமாகக் கொண்டு எழுத்தாளர்கள் சிறுகதை புனைவர். ஆனால் அவற்றையே  ஒரு நாடகம் போல் கண் முன்னே நிறுத்துவது இவருடைய சிறப்பம்சம். இவருடைய நாடகங்கள் மழை, பசி என்பன பிரபலமானவை.  உச்சிவெயில்என்ற கதைமறு பக்கம்என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு சிறப்பாக வெற்றி பெற்றது. 

இன்று நாம் காணப்போகும் அவஸ்தைகள் ஒரு ஓரங்க நாடகம் போன்றது. கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை. கதை நாம் முன்பே வாசித்த அறிஞர் அண்ணாவின் கொக்கரக்கோ கதையைப் போன்றதுதான். வரிசையாகப் பொய் சொன்னாலும் அவை பொருந்துமாறு நடிக்கவும், பேசவும் திறமை உள்ள ஒருவரின் ரயில் பயணம் பற்றியது. 

கதை மாந்தர்கள் : நால்வர் மட்டுமே. ஆசிரியர், அவர் மனைவி, ரவி சங்கர் மிஸ்ரா என்று அறிமுகப் படுத்திக்கொள்ளும் டில்லி வாழ் பெரிய (உருவத்திலும்) மனிதர், அமெரிக்கா செல்ல இருக்கும்  ஒரு இளைஞன். 

கதைக்களம் :  சி இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கம்பார்ட்மெண்ட். 

முதல் காட்சி : ஆசிரியரும் அவர் மனைவியும் ஒரு பெர்த்தில் அமர்ந்திருக்கின்றனர். எதிர் பெர்த்தில் 55 வயது மதிக்கக்கூடிய ஒரு வசீகரமான வடக்கு இந்தியப் பிரமுகர் காலை நீட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார். பிரமுகரின் முகத்தில் கர்வம் பொங்கி வழிகிறது. வேலையாட்கள் இருவர் பழக்கூடைகளை சீட்டுக்கு அடியில் வைத்து விட்டுக் கை கட்டி நிற்கின்றனர். 

இன்னொரு ஸீட்டில் உட்கார வேண்டியவன் - இளைஞன், இருபத்திரெண்டு வயதிருக்கலாம் - ஒரு சூட்கேஸ், பை, சகிதமாக வந்து அவரருகில் நின்றான்.

'ப்ளீஸ் கெட் அப், வான்ட் டு ஸிட்டெளன்' என்றான் அவ்விளைஞன், குரலில் சற்று கண்டிப்புத் தோன்ற.

'வேறு இடம் பார்த்துக் கொள். நான் கண்டக்டரிடம் சொல்லுகிறேன்' என்றார் அவர் ஹிந்தியில்.

'ஓகே. நானே சொல்லுகிறேன். நீங்கள் யாராயிருந்தாலும் சரி, என் ஸீட்டை உங்களால் ஆக்ரமிக்க முடியாது. …’' என்றான் அந்த இளைஞன் ஹிந்தியில்.

இப்படியாக சம்பாஷணைகளால் கதை நகர்கிறது. பிரமுகர் சொல்வதில் எது பொய் எது உண்மை என்று பிரிக்க முடியவில்லை.

அவர்சொல்வதெல்லாம் உண்மைஎனச் சொல்வது.

1.      அவர் ஒரு ரயில்வே போர்டு மெம்பெர் (பொய்)

2.      என் பெயர் ரவி சங்கர் மிஸ்ரா (உண்மையாக இருக்கலாம்).

3.      இது நான் எழுதிய கவிதை புத்தகம். (உண்மை/பொய் எது சரி?)

4.      பல்கலைக்கழக  டாக்டர் பட்டம் மற்றும் தொழில் முறை டாக்டர் (ஏதோ ஒன்று பொய் )

5.      நான் பெரிய ஜோதிடன். டில்லியில் நான் பிரபலம். (உண்மை/பொய் உங்கள் ஊகத்திற்கு ஏற்ப )

6.      மொரார்ஜியும், இந்திரா காந்தியும், என்னிடம் ஜோதிடம் பார்த்தனர்.

7.      9 என்ற எண்ணுக்கு மகிமை அதிகம் அதனால்தான் நான் 9 மோதிரங்கள் போட்டிருக்கிறேன். 

8.      நவரத்தின மோதிரம் அணியுங்கள்.

9.      ஆஸ்த்மா தொந்தரவு நீங்க, நீங்கள் நவக்கிரக பூஜை செய்யுங்கள்.

இவ்வாறு கதை அளப்பவர் இரவில் மூச்சுத் திணறி அவஸ்தைப் படுகிறார். அப்போது இளைஞன் கேலி செய்வதைப்  பொருட் படுத்தாமல் ஆசிரியரின் மனைவி தன்னிடம் இருந்த ஆஸ்த்மா மருந்தைக் கொடுக்கிறாள்.

கஷ்டப்படறவாளுக்கு உதவி செய்யணும். கிண்டல் செய்யக் கூடாது. ஆஸ்துமான்னா என்னன்னு கஷ்டப்படறவாளுக்குத் தெரியும்.” என்றாள் என் மனைவி.

ஐயாம் ஸாரி மாமிஎன்றான் மோகன்.

இவ்வாறு கதை முடிகிறது. கதை முழுவதும் வசனங்களில் நகர்வதால் கதைச் சுருக்கம் என்பது சரியாக அமையவில்லை. ஆகவே பொருத்தருள வேண்டுகிறேன்

கதையின் சுட்டி

 அவஸ்தைகள்-இந்திரா பார்த்தசாரதி

ஏகாந்தன் ஐயா இக்கதையை பற்றி எழுதியிருக்கிறார். சுட்டி 

இந்திரா பார்த்தசாரதி – aekaanthan ஏகாந்தன்

21 கருத்துகள்:

 1. இந்த வயதிலும் முயற்சி செய்த குமாரராஜன் ஐயா அவர்களை வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள். தொற்றுப் பரவுவதாக ஒரு பக்கம் சொன்னாலும் இன்னொரு பக்கம் மக்கள் எந்தவிதமான பாதுகாப்புக்களும் இல்லாமல் சுற்றுகின்றனர். :( பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 4. அனைத்து நல்ல செய்திகளுக்கும் சாதனை படைத்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்திரா பார்த்தசாரதியின் இந்த நாடகம் படிச்ச நினைவு.பின்னர் வரேன்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  இவ்வார பாஸிடிவ் செய்திகள் அருமை.
  தன் பெற்றோர்களுக்கென ஒரு வீடு அமைத்துக் கொடுத்த அந்த மகளை வாழ்த்துவோம்.

  படிப்பிற்கும், பட்டங்கள் வாங்கவும் வயது தடையில்லை என்று நிரூபித்த மதுரை அண்ணாநகரை சேர்ந்த திரு குமாரசாமி அவர்களை வாழ்த்தி வணங்குவோம்.

  இளவயதில் சாதனை படைத்திருக்கும் சிறுமி நேஹா விற்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இந்த வார நான் படித்த கதை பகுதியும் நன்றாக உள்ளது.

  எழுத்தாளர் அறிமுகத்தில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களைப் பற்றி எப்போதும் போல் சிறப்பாக அறிமுகப்படுத்திய சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  அவர் தந்த இரு சுட்டிகளுக்கும் சென்று படித்தேன். அதில் ஒரு சுட்டியில் கதையையும் பதிந்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களைப். பற்றி சிறப்பாக விமர்சித்திருக்கும் சகோதரர் ஏகாந்தன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

  சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்திருந்த கதைப்பகுதிக்கும் சென்று கதையை படித்தேன். தலைப்புக்கு ஏற்ற கதையின் முடிவு சிறப்பானதாக உள்ளது. "தலை வலியும், திருகு வலியும் தனக்கு வந்தால்தான் அதன் அருமை புரியும்" என்ற பழமொழியின்படி கதை முடிகிறது. நல்ல அருமையான எழுத்து. நல்லதொரு கதையை அறிமுகப்படுத்திய சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பகிர்வுக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம். வித்தியாசமான பாசிட்டிவ் செய்திகள். இந்திரா பார்த்தசாரதியின் கதையை படித்தது போல இருக்கிறது. முழுமையாக நினைவுக்கு வரவில்லை. இன்னும் சற்று விளக்கமாக கூறியிருக்கலாமோ? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் தட்டி, அந்தக் கதையை முழுவதுமாகப் படிக்கலாம். நான் இப்போதுதான் படித்தேன்.

   நீக்கு
 8. சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் கற்பதற்கு வயதுதடையல்ல என பி.எச்.டி பட்டம் பெற்றவருக்கு சிறப்பான பாராட்டுகள்..
  சுவாரசியமான கதை.

  பதிலளிநீக்கு
 9. பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே நல்ல செய்திகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 10. இ பா அவர்களின் இந்தக் கதையை வாசித்திருக்கிறேன்.

  வெட்டி ஜம்பம், ஜபதர்சு ஆட்கள். சிலருக்கு இப்படிப் பீற்றிக் கொள்வதில் பெருமை.

  ஏகாந்தன் அண்ணாவின் பதிவிலும் கருத்து கொடுத்திருந்தேன். அஅண்ணா வேறு ஒரு கதை, 'ஒரு கப் காப்பி' கதை வாசித்திருக்கிறீர்களா என்று கேட்டிருந்தார். அந்தக் கதையும் வாசித்திருக்கிறேன்.

  இபா அவர்களின் கதைகள் சிறு நிகழ்வைச் சொல்லிச் செல்லும் விதம் யதார்த்தமாக இருக்கும். அதனோடு பின்னிப் பிணையப்படும் நிகழ்வுகள் உரையாடல்கள் எல்லாமே ஒன்றச் செய்யும்.

  ஜெ கே அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 11. அருமையான பாசிடிவ் செய்திகள்.
  ஜெ கே சாரின் கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.
  படித்த நினைவு இருக்கிறது. சுட்டியில் போய் வாசிக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 12. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் சில கதைகள் படித்தது உண்டு.

  பதிலளிநீக்கு
 13. இந்திரா பார்த்த்சாரதியின் கதையை ஜெயக்குமார் சந்திரசேகரன் அழகாகச் சுருக்கித் தந்திருக்கிறார். சபாஷ்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!