வெள்ளி, 22 ஜூலை, 2022

வெள்ளி வீடியோ : காக்க வச்சு கன்னி வந்தா காதலுண்டா கேட்டு சொல்லு...

 இந்த வாரம் கமலா அக்காவின் நேயர் விருப்பப் பாடல் தனிப்பாடலாய் மலர்கிறது. 

இந்தப் பாடலில் உள்ளம் உருகாதார் யார்?  சோனியா காந்தி ஒருமுறை ராஜீவ் நினைவிடத்திற்கு வந்த ஒரு சமயம் இந்தப் பாடலைக் கேட்டு உருகியதாக யாரோ சொல்லக் கேட்டதாய், அல்லது படித்த நினைவு.


மரகதம்மா எழுதிய பாடலுக்கு இசையமைத்துக் குரல் கொடுத்திருக்கிறார் டி ம் எஸ்.

உள்ளம் உருகுதய்யா  
உள்ளம் உருகுதய்யா முருகா 
உன்னடி காண்கையிலே  
உள்ளம் உருகுதய்யா முருகா 
உன்னடி காண்கையிலே  
அள்ளி அணைதிடவே  அள்ளி அணைதிடவே  
அள்ளி அணைதிடவே, எனக்குள் ஆசை பெருகுதப்பா 
முருகா  உள்ளம் உருகுதய்யா……  

பாடிப் பரவசமாய்  உனையே பார்த்திடத் தோணுதய்யா  
பாடிப் பரவசமாய்  உனையே பார்த்திடத் தோணுதய்யா  
பாடிப் பரவசமாய்  உனையே பார்த்திடத் தோணுதய்யா  
ஆடும் மயிலேரி  ஆடும் மயிலேரி  ஆடும் மயிலேரி முருகா, 
ஓடி வருவாயப்பா….  

பாசம் அகன்றதய்யா, 
பந்த பாசம் அகன்றதய்யா 
உந்தன்மேல் 
நேசம் வளர்ந்ததய்யா 
ஈசன் திருமகனே  ஈசன் திருமகனே  
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா….  

ஆறு திருமுகமும் அருளை வாரி வழங்குதய்யா  
ஆறு திருமுகமும்…. (உன்) அருளை வாரி வழங்குதய்யா 
வீரமிகு தோளும், வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா….  

கண்கண்ட தெய்வமய்யா… கண்கண்ட தெய்வமய்யா  நீயிந்தக் கலியுக வரதனய்யா…  
கண்கண்ட தெய்வமய்யா  நீயிந்தக் கலியுக வரதனய்யா… 
பாவியென்றிகழாமல்… பாவியென்றிகழாமல் 
எனக்குன் பதமலர் தருவாயப்பா….


============================================================================================================

எஸ் பி பாலசுப்ரமணியம் பாடி இருந்தாலும் அவர் குரல் பாடலில் வருவது கம்மிதான்.  இசைதான் அதிகம்.  இசை எம் எஸ் விஸ்வநாதன்.

இளையராஜா உள்நுழைந்து புயலடித்துக் கொண்டிருந்தபோது .நடுவில்  மங்கள வாத்தியம் போன்ற படங்களில் சறுக்கினாலும், நினைத்தாலே இனிக்கும் படத்தில் அப்படியே அனைத்துப் பாடல்களையும் அள்ளினார் எம் எஸ் வி.  படத்தின் போஸ்டர்களில் 'இது ஒரு தேனிசை மழை' என்று போட்டிருப்பார்கள்.  சத்தியம்!

முன்னர் இதில் இரண்டு பாடல்களை பகிர்ந்திருந்தாலும் இன்று ஒரு எதிர்பாராத பாடல்.  சிறு பாடல்.

What a waiting What a waiting 
Lovely birds tell my darling
You are watching you are watching
Love is but a game of waiting

காத்திருந்தேன் காத்திருந்தேன் 
காதல் மனம் நோகும் வரை 
பார்த்திருந்தாய் பார்த்திருந்தேன் 
பச்சைக்கிளி சாட்சி சொல்லு 
நாத்து நட்டுக் காத்திருந்தா 
நெல்லு கூட விளைஞ்சிருக்கும் 
காக்க வச்சு கன்னி வந்தா 
காதலுண்டா கேட்டு சொல்லு...


38 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க வையகம்
    வாழ்க.வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவின் முதல் பாடல் பக்தி இசைப் பாடல்களில் முத்திரைப் பாடலாகும்..

    உள்ளத்தை உருக்கும் இந்தப் பாடலை இன்று பதிவில் வைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் ஆடி முதல் வெள்ளி வாழ்த்துக்கள்.

    இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை.

    முதல் பாடலில் உள்ளம் உருகாதவர் யார.? "உள்ளம் உருகுதய்யா முருகா" என்று டி. .எம். எஸ் அவர்கள் ஆரம்பித்ததுமே மனது உருக ஆரம்பித்து விடும். இந்தப்பாடலை நான் எவ்வளவு தடவை வேண்டுமானாலும், புதிதாக கேட்பது போல் கேட்பேன். அவ்வளவு அருமையான நல்ல பாடல். என் விருப்பப் பாடலாக இதை தாங்கள் இன்று பகிர்ந்திருப்பதற்கு என் பணிவான நன்றி. 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பணிவான நன்றி.//

      அக்கா.. தயவு செய்து இந்த அரசாங்கக் கடிதம் போல பணிவு என்று போடுவதை நிறுத்துங்கள். எதற்கு பணிவு? உரிமை இல்லையா? நன்றி ஸ்ரீராம் என்று ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் உரிமையுடன்.

      நீக்கு
  5. நினைத்தாலே இனிக்கும் - திரைப் படத்தின் பாடல்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன.. மெல்லிசை மன்னர் அவர்களின் அசாத்தியத் திறமைக்கு இந்தப் பாடலும் ஒரு உதாரணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அத்தனைப் பாடல்களையும் இன்றளவும் ரசிக்கலாம்.

      நீக்கு
  6. முதல் பாடலை விரும்பி தேர்வு செய்து கொடுத்த் ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு முருகனடியார்கள் சார்பாக நன்றி.. நன்றி..

    அவர்தம் மனக்குறை நீங்கும் வண்ணம்

    முன் நின்று ஆடுக
    நீல மயிலே!..
    வளர் நிலவென்று
    நலம் வளர வந்தாடுக வண்ண மயிலே!..

    பதிலளிநீக்கு
  7. நல்ல நல்ல பாடல்களாகப் பார்த்து தான் போடுகிறீர்கள். நமக்கு தான் நேரம் இருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  9. முதல் பாடல் மிகவும் பிடித்த பாடல்.கேட்டு மகிழ்ந்தேன்.
    கமலா ஹரிஹரனுக்கு நன்றி. பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.
    அடிக்கடி கேட்கும் பாடல்.
    அடுத்த பாடலும் நன்றாக இருக்கிறது, பறவைகளை கண்டதும் மகிழ்ச்சியாகி விட்டது. அதற்கும் உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பறவைகளை கண்டதும் மகிழ்ச்சியாகி விட்டது. //

      ஆஹா..  அப்படி ஒன்று இருக்கிறதோ...    நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  10. இரண்டும் பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி. நம் மனதில் என்றும் இருக்கும் பாடல்களில் இரண்டு!

      நீக்கு
  11. பானுமதி வெங்கடேஸ்வரன்22 ஜூலை, 2022 அன்று AM 7:46

    அனைவருக்கும் வணக்கம். 'உள்ளம் உருகுதய்யா..' நிறைய கேட்டிருக்கிறேன். இப்போது இங்கே வேறு ஏதோ பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது. முடிந்ததும் கேட்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. நினைத்தாலே இனிக்கும் படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும். இருந்தாலும் குமுதத்தில் 'தேனிசை மழை என்று போட்டிருக்கிறார்கள், ஒரு குடை கொண்டு போயிருக்கலாமோ என்று தோன்றுகிறது. தேன் பஞ்சம்' என்று எழுதியிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேன் பஞ்சம் என்று யாராவது வயோதிக விமர்சகர் எழுதியிருக்கக் கூடும்

      நீக்கு
    2. ரசனை இல்லாதவராய் இருந்திருக்க வேண்டும்.  அல்லது அவர் காதில் ஏதோ குறை!

      நீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  14. உள்ளம் உருகுதைய்யா பாடல் இளம் வயது ஞாபகங்களை திரும்பவும் ஞாபகப்படுத்தி விட்டது. அப்போதெல்லாம் வீதி முனைகளில் இருக்கும் திடல்களில் நிற்காமல் இத்தனை நாட்கள் என்று கணக்கு வைத்துக்கொண்டு இரவும் பகலும் சைக்கிள் ஓட்டுவார்கள். விடியற்காலைப்பொழுதில் முதலில் ஒலிபரப்புவது ' சீர்காழியின் ' விநாயகனே வினை தீர்ப்பவனே' பாடல். அடுத்தது இந்தப்பாடல் தான். அதனால் இந்தப்பாடலும் டி.எம்.செளந்திரராஜனின் குரலின் இனிமையும் மனதில் அப்படியே பதிந்து போய் விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அந்த சைக்கிள் விடிய விடிய மூன்று நாட்கள் தொடர்ந்து ஓட்டும் நிகழ்வு அப்போது ரொம்பப் பிரபலம்.  நானும் பார்த்திருக்கிறேன்.  நீங்கள் சொல்லும் சீர்காழி பாடல் வெளியூர் செல்லும் பஸ்களில் அதிகாலை ஒலிக்கும்.

      நீக்கு
  15. காங்கோவின் தலைநகரில் புதிதாகக் கட்டப்பட்ட இந்து கோயிலில் சனிக்கிழமை காலைகளில் சில தமிழர்கள் கூடி சந்தித்தோம். கொண்டுவந்திருந்த சாதங்களை நைவேத்யம் செய்து ப்ரசாதம் ஆக்கி, அங்கேயே அமர்ந்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவோம். ஆளுக்கொரு/இரு பாடல் என, சிலர் அப்போது வாயசைத்துவைக்கச் சொன்னார்கள்.வினாயகனே வினை தீர்ப்பவனே என ஒரு காலையில் ஆரம்பித்து முன்னேறி, முருகனில் வந்து நின்றேன்! முதல் பாடலை அப்படித்தான் நான் ஒரு காலையில் ஆரம்பித்ததில், அடிக்கடி பாட நேர்ந்தது. மேலும் சில முருகன் பாடல்கள்.. இரண்டு வருஷ சனிக்கிழமைக் காலைப்பொழுதுகள் இவ்வாறு கழிந்தன அங்கே. அது நினைவில் இங்கே!

    ஓரிரு வருடங்கள் கழிந்தன இப்படி அங்கே..

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. அப்போ ஓரிரு வருடங்கள் இல்லையா?

      நீக்கு
    2. இரண்டு வருஷங்கள் என மேலே எழுதியிருக்கிறேனே..

      நீக்கு
  17. ஆடி வெள்ளி நாளில் முருகனை நினைத்து உருகிப் பாடும்பாடல் மிகவும் அருமை.
    அடுத்த பாடலும் நன்று.

    பதிலளிநீக்கு
  18. ஆண்டவன் பிச்சை அவர்களின் பாடலைக் கேட்டு உள்ளம் உருகாதோர் உண்டோ? டிஎம் எஸ்ஸின் முருகன் குறித்த பக்திப்பாடல்கள் அனைத்துமே மனதை உருக வைக்கும். அவர் கொடுத்த கலை நிகழ்ச்சியின்போது நேயர் விருப்பம் பெரும்பாலும் முருகன் பக்திப்பாடல்களாகவும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!" பாடலாகவும் இருந்தன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!